மாற்றம் ஒன்றே என்றும் மாறாதது!

by கிரி on April 14, 2010

வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருந்தால் சுவாராசியமே இருக்காது! ஏதாவது ஒரு மாற்றத்துடன் இருந்தால் தான் சுவாராசியமாகப் போகும். மாற்றங்களை அதிகம் விரும்புவன் நான், அதிலும் இணையத்தை அதிகம் நேசிக்கிறேன்.

இணையத்தில் எனக்கு முன்பிருந்தே அதிக ஆர்வம், ஏதாவது புதிதாக செய்து பார்க்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. நம்முடைய கருத்துக்களை எங்கேயாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்த போது தான் எனக்கு கிடைத்த அறிமுகம் 2006 ம் ஆண்டு Yahoo! 360*. இதில் என்னுடைய கருத்துக்களை படங்களுடன் போட்டு தெரிவித்து வந்தேன், ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றிக்கொண்டு இருந்தேன். எளிதாக இருக்கும் Blogger மற்றும் WordPress போன்ற தளங்கள் பற்றி தெரியவில்லை உடன் தமிழில் எழுதுவது என்பது பற்றியும் தெரியவில்லை.

Blogger first blog 300x187 மாற்றம் ஒன்றே என்றும் மாறாதது!பிறகு ஒரு நாள் இணையத்தில் சுற்றிக்கொண்டு இருந்த போது தான் Blogger தளத்தையும் தமிழில் எழுதுவது, தமிழ்மணம் போன்ற திரட்டிகளை பற்றியும் தெரிய வந்தது. Blogger தளத்தில் 2006 ம் ஆண்டே இணைந்து இருந்தாலும் எழுத ஆரம்பித்தது 2008 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தான். அதன் பிறகு ஒரு வருடம் கழித்து Blogpspot.com subdomain ல் இருந்து custom Domain www.giriblog.com க்கிற்கு மாறினேன். அப்போது இருந்தே தனியாக hosting செய்ய வேண்டும் என்பது என்னுடைய ஆசை. ஆனால் அதில் உள்ள நடைமுறை சிக்கல்களால் அதை ஒத்தி போட்டு வந்தேன்.

தற்போது அனைத்தும் முடிந்து தனியாக தளம் தொடங்கி விட்டேன், இதற்காக மாதம் பணம் கட்ட வேண்டும். எனவே இதை உங்களுக்கு நான் பரிந்துரைக்கவில்லை (ஆர்வம் மற்றும் தேவை இருந்தால் தவிர). Blogger தளத்திலேயே உங்களால் அனைத்தும் செய்ய முடியும் என்பதால் இது அவசியம் இல்லாத ஒன்று தான், ஆனால் எனக்கு இருக்கும் ஆர்வம் காரணமாகவும் நீண்ட நாள் ஆசை என்பதாலும் இதை செய்துள்ளேன். தமிழ் வலைப்பதிவர்களில் இதைப்போல self hosting செய்பவர்கள் மிகக்குறைவு நான் பார்த்ததும் இல்லை அப்படி செய்து இருந்தால் அவர்கள் செய்தி தளங்களாக இருப்பார்கள். இந்த மாற்றத்திற்கு உதவியவர்கள் http://bloggertowp.org.

பதிவு எழுதுவதை நான் குறைத்துக் கொண்டாலும் எழுதுவதை என்றும் நிறுத்தப்போவதில்லை அதனாலே தைரியமாக இதை செய்தேன். இந்த தளத்தில் தமிழ்மணம் திரட்டி கருவிப்பட்டை இணைப்பது கொஞ்சம் சிரமம், இதை நிறுவ கொஞ்சம் காலம் எடுக்கும், அதே போல தமிழிஷ் ஓட்டு பட்டையும் இதில் இணைக்க வாய்ப்பில்லை, பின்னாளில் சரி செய்யப்படலாம். இதன் காரணமாக தமிழ்மணம் மூலமாக மறுமொழி திரட்ட முடியாது இது மட்டுமே எனக்கு சிரமம். தமிழ்மணத்தில் ஓட்டு என்றுமே எனக்கு வந்ததில்லை என்பதால் அதைப் பெரிய விசயமாக கருதவில்லை icon wink மாற்றம் ஒன்றே என்றும் மாறாதது! எந்தக்குழுவிலும் இல்லாமல் இருப்பதன் சிரமம் இது.

புதிது என்பதால் கொஞ்ச நாளைக்கு இதில் எனக்கு சிரமங்கள் இருக்கலாம் ஆனால் போகப்போக பிரச்சனைகள் சரி செய்யப்படும் என்றும் நம்புகிறேன். எனவே இந்தத்தளத்தை பயன்படுத்துவதில் உங்களுக்கு சிரமம் இருந்தால் கொஞ்ச நாள் பொறுத்துக்கொள்ளும் படி கேட்டுக்கொள்கிறேன், என்ன பிரச்சனை என்பதையும் தெரிவிக்கவும். இதில் பல புதிய வசதிகள் அதிகம் உள்ளது, இதை நீங்கள் தளத்தை பயன்படுத்தும் போது உணர்வீர்கள். இது WordPress தளம் என்பதால் உங்களுக்கு பின்னூட்டம் (comment) இட கூகிள் ஐடி தேவையில்லை, இதை நண்பர்கள் பலர் என்னிடம் குறையாக கூறியதுண்டு. இனி எவரும் பின்னூட்டம் இடலாம். இது ஒரு வகையில் நல்லதாக இருந்தாலும் சில குடைச்சல்களையும் கொண்டு வரும் icon wink மாற்றம் ஒன்றே என்றும் மாறாதது!

Blogger தளம் blogspot ல் இருந்து custom Domain க்கு மாறினாலும் அது blogspot ஆகவே கருதுகிறது அதனால் அப்போது Google Friend Connect ல் இணைந்த 262 பின்தொடர்பவர்களையும் (ரகசியமாக பின்தொடர்பவர்களும் சேர்த்து) இந்த புதிய தளத்திற்கு மாற்ற முடியவில்லை, முடிந்த வரை முயற்சி செய்கிறேன் இல்லை என்றால் புதிதாக முதலில் இருந்து தான் தொடங்க முடியும், மன்னிக்க icon sad மாற்றம் ஒன்றே என்றும் மாறாதது!

இதுவரை எனக்கு பின்னூட்டம் அளித்து உற்சாகம் ஊட்டியவர்களுக்கும், ரீடர், மின்னஞ்சலில் பின்தொடர்பவர்களுக்கும் இந்த சந்தர்பத்தில் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன், குறிப்பாக என்னுடைய கருத்துக்களை தெரிவிக்க உதவிய Blogger தளத்திற்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

No related posts.

{ 28 comments… read them below or add one }

பிரவின்குமார் April 14, 2010 at 1:24 PM

என்னைப்போன்ற வாசகர்களின் வேண்டுகோளை ஏற்று நீங்கள் மாறியமைக்கு மிக்க நன்றி நண்பரே..! இனிமேல் தங்கள் வலைப்பதிவில் கட்டாயம் என்னால் எளிதாக கருத்துகள் கூற இயலும். என்னைப்போன்று பல நண்பர்கள் இதனால் பயனடைவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

Reply

ராமலக்ஷ்மி April 14, 2010 at 1:24 PM

//வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருந்தால் சுவாராசியமே இருக்காது! ஏதாவது ஒரு மாற்றத்துடன் இருந்தால் தான் சுவாராசியமாகப் போகும். //

அதற்காகவே ஏற்படுத்திக் கொண்ட இந்த மாற்றத்தைப் பற்றிய பகிர்வும் சுவாரஸ்யம்:)! நன்றி சொல்லும் போது Blogger தளத்தையும் குறிப்பிட்டிருப்பது நன்று.

//எழுதுவதை என்றும் நிறுத்தப்போவதில்லை //

தொடருங்கள். வாழ்த்துக்கள்!

Reply

Vino April 14, 2010 at 1:32 PM

நல்ல மாற்றம் கிரி… வேர்ட்பிரஸ் நிறைய வசதிகள் கொண்ட open source என்பதால் ஆரம்பத்தில் சற்று சிரமமாக இருந்தாலும், போகப் போக வேறு hosting போகவே உங்களுக்குத் தோன்றாது.

கமெண்ட் எழுதவும் இதுதான் வசதியாக உள்ளது.

வாழ்த்துக்கள்.. Carry on!

Reply

r.v.saravanan April 14, 2010 at 1:43 PM

மாற்றம் ஒன்றே என்றும் மாறாதது

நாங்கள் உங்கள் வாசகர்கள் என்பது என்றும் மாறாதது

புதிய மாற்றத்திற்கு வாழ்த்துக்கள் கிரி

Reply

jkr April 14, 2010 at 1:51 PM

சக வலைபதிவர்களுக்கும் இணையதள வாசகர்கள் அனைவருக்கும் எமது இணையதளம் சார்பாக இனிய புது வருட வாழ்த்துக்கள் MULLAIMUKAAM.BLOGSPOT.COM

Reply

நட்புடன் ஜமால் April 14, 2010 at 2:09 PM

புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்!

நிறைய சொல்லி கொடுக்குறீங்க நன்றியும் கிரி.

Reply

முகிலன் April 14, 2010 at 7:59 PM

புது முயற்சிக்கு வாழ்த்துகள்..

இது புதுத் தளமாக இருப்பினும், Blogs I follow வில் லிங்க் வருகிறது.

Reply

shirdi.saidasan April 14, 2010 at 8:46 PM

What additional benefits you get by changing to selfhosted you can tell for others to know and follow.
Congratulations for fulfilling your desire.

Reply

வானம்பாடிகள் April 14, 2010 at 9:05 PM

வாழ்த்துகள் கிரி

Reply

NIZAMUDEEN April 14, 2010 at 11:08 PM

இந்த மாற்றம் ஏமாற்றமல்ல.
நிச்சயம் ஏற்றம்தான்.
வாழ்த்துக்கள்.

Reply

Srinivasan April 15, 2010 at 7:43 AM

தொடருங்கள். வாழ்த்துக்கள்!

Reply

Logan April 15, 2010 at 9:43 AM

Congrats

Reply

☼ வெயிலான் April 15, 2010 at 11:58 AM

புதிய தளம் நன்றாயிருக்கிறது கிரி! வாழ்த்துக்கள்.

Reply

மோனி April 15, 2010 at 1:03 PM

வாழ்த்துகள் கிரி…

Reply

♠¤ புதுவை சிவா♠ ¤ April 15, 2010 at 2:25 PM

கிரி உங்கள் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்

“பதிவு எழுதுவதை நான் குறைத்துக் கொண்டாலும் எழுதுவதை என்றும் நிறுத்தப்போவதில்லை”

முடிந்த வரை ஆட்டத்தை விரைவில் தொடங்கவும்

Reply

Mohan April 15, 2010 at 2:27 PM

வணக்கம் கிரியாரே!

Reply

சிரவணன் April 15, 2010 at 2:28 PM

நான் தொடர்ந்து வாசிக்க விரும்பும் நல்ல வலைப்பதிவுகளில் கிரி Blog-ம் ஒன்று. இப்போது என்னால் உங்கள் பதிவுக்கு எளிதாக கமென்ட் இட முடிந்திருக்கிறது. புது முயற்சிக்கு வாழ்த்துகள். தொடர்ந்து சிறப்பாக எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.

Reply

ANaND April 15, 2010 at 6:24 PM

எப்போதும் எதாவது செஞ்சிகிட்டே இருக்கீங்க

Reply

ரோஸ்விக் April 15, 2010 at 7:31 PM

வாழ்த்துகள் கிரி. :-)

Reply

ஷங்கர் April 15, 2010 at 7:52 PM

கிரி ,

காலதாமத வாழ்த்துக்கள் ,கலக்குங்க :) ..
முன்னாடி இருந்த தளம் ஓபன் பண்ண உடனே திறக்கும் ..இது ரொம்ப தாமதம் ஆகிறதே ..,என் சிஸ்டம் problema ?????

Reply

லியோ April 19, 2010 at 5:04 PM

கிரி,
உங்க ப்ளாக் சூப்பர்

Reply

Arun April 20, 2010 at 11:01 AM

Romba naal aachu oru arasiyal pathivu thala.. plz!!!

Reply

Shankar April 20, 2010 at 12:49 PM

adutha pathivu eppothu ??

Reply

கிரி April 20, 2010 at 5:19 PM

பின்னூட்டம் இட்ட நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி. தளத்தில் பதிவுகளை மற்றும் பின்னூட்டங்களை இம்போர்ட் செய்வதில் பிரச்சனை உள்ளதால் என்னால் பதில் அளிக்க முடியவில்லை. இந்தப்பிரச்சனைகள் சரி ஆனதும் வருகிறேன். உங்கள் அன்பிற்கு நன்றி.

Reply

vijay April 21, 2010 at 1:25 AM

வாழ்த்துகள் கிரி…

Reply

சரவணகுமரன் April 21, 2010 at 8:24 AM

கிரி,

ரீடரில் பதிவுகள் திரும்ப திரும்ப வந்து குவிந்துக்கொண்டே இருக்கிறது… ஏன்?

Reply

கிரி April 21, 2010 at 10:46 AM

சரவணகுமரன் அது பதிவுகள் பின்னூட்டங்கள் சரியாக இம்போர்ட் ஆகாததால் அதை சரி செய்ய ரெஸ்டோர் செய்யும் போது அவ்வாறு நேரிடுகிறது. பிரச்சனை சரி செய்யப்பட்டது என்று நினைக்கிறேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்.

Reply

சரவணகுமரன் April 21, 2010 at 10:06 PM

சிரமமெல்லாம் இல்லை… சொல்லி வைப்போம் என்று சொன்னேன்…

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed