இணையம் பற்றிய செய்திகள் [06-04-2010]

Twitter

ட்விட்டர் தற்போது இணையத்தைக் கலக்கி வரும் ஒரு சமூகத் தளம். ஒரு வருடம் முன்பு வரை கூட இது பற்றி அதிகம் தெரியாதவர்களாகத்தான் நம்மில் பலர் இருந்தனர்.

ஆனால், இன்று ட்விட்டர் இல்லை என்றால் கை உடைந்ததைப் போலப் பலர் ஆகி விடுமளவிற்கு அதற்கு அடிமையாகி விட்டனர்.

இணைய ஜாம்பவானான கூகிள் இதை வாங்க வேண்டும் என்று பலர் விரும்புகிறார்கள், அந்த அளவிற்குக் குறுகிய காலத்தில் பிரபலமாகி விட்டது. தற்போது இதன் முகப்புப் பக்கத்தை மாற்றி அமைத்துள்ளது.

தற்போது பிரபல ட்வீட்டுகள், வணிகத்துக்காக இதைப் பயன்படுத்துபவர்களுக்கு ஆலோசனை பகுதி என்று பல புதிய மாற்றங்களை முகப்புப் பக்கத்தில் செய்துள்ளது.

Google Chat

கூகிள் பல புதிய வசதிகளை அடிக்கடி அறிமுகப்படுத்தி வருகிறது. உரையாடியில் (Chat) ஏற்கனவே இதன் வீடியோ மற்றும் பேச்சு உரையாடல் (Voice chat) மிகவும் பிரபலமாக உள்ளது.

தொலைபேசியில் பேசுவதை விட இதில் மிகத்தெளிவாக இருக்கும், தற்போது ஃபைல்களை அனுப்பும் வசதியை தந்துள்ளது.

இதன் மூலம் படங்கள் ஃபைல்கள் போன்றவற்றை எளிதாக அனுப்பலாம். இந்த வசதி இல்லாமல் இருந்தது பலருக்குச் சிரமமாக இருந்தது, தற்போது இந்த வசதி அனைவரிடமும் பலத்த வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இதற்காக நீங்கள் எந்த மென்பொருளையும் தனியாக நிறுவ வேண்டிய அவசியமில்லை. படம் நன்றி கூகிள்.

Apple

ஆப்பிள் நிறுவனம் தனது iPod மற்றும் ஆப்பிள் கணிப்பொறியில் கலக்கி வருவது அனைவருக்கும் தெரிந்ததே! இதன் iPod மற்றும் அது சம்பந்தப்பட்ட அனைத்தையும் பயன்படுத்த iTunes என்ற மென்பொருள் தேவை.

இது இல்லாமல் நீங்கள் பாடலோ படமோ எதையும் பயன்படுத்த முடியாது. சில நேரங்களில் இது மிகவும் கடியாக இருந்தாலும் இந்த மென்பொருள் கொடுக்கும் வசதிகள் அளவில்லாதது. இது தற்போது தனது புதிய வெளியீடான iTunes 9.1 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

iPod போன்றவற்றைப் பயன்படுத்துபவர்கள் இதை அப்டேட் செய்துகொள்ளுங்கள். இதில் குறிப்பிடத்தக்க புதிய மாற்றம் எது என்றால் நீங்கள் உங்கள் கணிப்பொறியில் உங்கள் iPod ஐ இணைத்தவுடன் இது sync செய்ய ஆரம்பித்து விடும்.

Episodic

கூகிள் சமீபத்தில் www.episodic.com என்ற வீடியோ தளத்தைக் கையகப்படுத்தியுள்ளது.

கூகிள் YouTube வீடியோ தளத்தைக் கையகப்படுத்தியது அதன் கையகப்படுத்தலில் மிகச்சிறப்பான ஒரு டீல், தற்போது அதன் வீச்சு என்னவென்பதை நாம் அறிவோம்.

இணையத்தில் வீடியோ விற்கு இருக்கும் சிறப்பான எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்தத் தளத்தையும் வாங்கியுள்ளது.

Yahoo! + facebook

யாஹூ, கூகிள் மற்றும் மற்ற மின்னஞ்சல்களின் போட்டியை சமாளிக்க அவ்வப்போது தற்போது சில மாற்றங்களைச் செய்து வருகிறது. கடந்த மாதம் யாஹூ facebook ல் உள்ள நண்பர்களை மின்னஞ்சல்களை இம்போர்ட் செய்ய அனுமதித்து இருந்தது.

தற்போது அறிமுகப்படுத்தி இருக்கும் வசதியானது… நீங்கள் யாஹூ வில் இருந்தபடியே உங்கள் facebook ஸ்டேட்டஸ் மெசேஜ் ஐ அனுப்பவும் அதோடு உங்கள் facebook நண்பர்கள் யாராவது உங்களுக்கு மின்னஞ்சல் செய்தால் அவர்களது ஃப்ரோபைல் படம் தெரியும்படியும் அமைக்கப்பட்டுள்ளது.

யாஹூ வும் இதைப்போல மாற்றங்கள் செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது.

Google Buzz

Google Buzz தற்போது பலரை கவர்ந்துள்ளது, சிலருக்குக் கடுப்பை வரவழைத்துள்ளது. கூகிள் வழக்கம் போலத் தனது குறைகளைச் சரி செய்வதிலும் புதிய வசதிகளைத் தருவதிலும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது (தற்போது comments collapse ஐ சரி செய்துள்ளது).

இதன் மீது கூறப்பட்ட மிகப்பெரிய குற்றச்சாட்டான பயனாளர்களின் விருப்பம் இல்லாமல் அவர்கள் பற்றிய செய்திகளை மற்றவர்கள் பார்க்க முடியும் என்பதைத் தற்போது சரிபடுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

விரைவில் இது பற்றிய அறிவிப்பு வரும். இதை நீங்கள் Buzz க்ளிக் செய்தால் உங்கள் அனுமதி வேண்டி நிற்கும் விரைவில்.

உங்களைப் பற்றி Buzz ல் தேட வேண்டும் என்றால் அதற்காக ஜிமெயில் உள்ளே சென்று தேட வேண்டும் என்ற அவசியமில்லை.

http://buzzzy.com/ சென்று உங்கள் பெயரை தேடலில் குறிப்பிட்டால் போதும் உங்கள் பெயர் மற்றும் அதே பெயரில் உள்ள மற்றவர்கள் Buzz செய்திகள் அனைத்தையும் பார்க்கலாம்.

Google + Adobe Flash

Adobe Flash ன் பயன்பாடு எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும். Flash மென்பொருள் இல்லாமல் நம்மால் இணையத்தில் இருப்பது என்பது இயலாத ஒன்று, இருக்கலாம் என்றால் பல குடைச்சல்களை எதிர் கொள்ள வேண்டும்.

பெரும்பாலான தளங்கள் வீடியோ விற்கு முக்கியத் தேவையாக Flash ஐ தான் வைத்துள்ளன அதை விட முக்கியமாக இணைய விளையாட்டுகளுக்கு இது அவசியம் தேவை.

நாமே இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து இருக்கும் போது இணைய ராஜா கூகிள் உணராமல் இருக்குமா! 🙂 .

எனவே, தான் தற்போது Adobe உடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. கூகிள் க்ரோம் தற்போது பட்டய கிளப்பி வருகிறது, வேகமாக முன்னேறி வருகிறது தற்போது இதில் Adobe Flash ஐ க்ரோம் உடன் இணைத்து க்ரோம் பயனாளர்களுக்கு இன்னும் கலக்கலான வசதியை தர கூகிள் திட்டமிட்டுள்ளது.

இனி நீங்கள் க்ரோம் நிறுவினாலே உடன் Adobe Flash ம் இணைந்து வந்து விடும், Adobe Flash தனியாக நிறுவ வேண்டிய அவசியம் இல்லை.

Adobe Flash ல் புதிதாக அப்டேட் வந்தால் க்ரோம் உலவியே தானியங்கியாக (Auto) அப்டேட் செய்து விடும் நீங்கள் இதற்காக எந்த முயற்சியும் எடுக்க வேண்டியதில்லை. தற்போது இந்த வசதி Developer version ல் மட்டுமே வந்துள்ளது. விரைவில் அனைவருக்கும் இந்த வசதி கிடைக்கும்.

YouTube

இணையத்தில் தவிர்க்க முடியாத ஒரு விஷயம் இருக்கும் என்றால் அதில் குறிப்பிடத்தக்க இடம் YouTube க்கு நிச்சயம் உண்டு.

கூகிள் இதைக் கையகப்படுத்தியதில் இருந்து இதைச் சிறப்பாகக் கையாண்டு வருகிறது.

இதன் மூலம் விளம்பரத்தில் பெருமளவு சம்பாதித்துக்கொண்டுள்ளது, உலகம் முழுவதும் பல மில்லியன் மக்கள் இதைப் பயன்படுத்தி வருகின்றனர்.

எந்த ஒரு சூடான செய்தி என்றாலும் உடனே இதில் பயனாளர்களால் ஏற்றப்படும்.

இதில் இல்லாத தகவல்களே இல்லை எனலாம். சமீபத்தில் IPL போட்டிகளைக் கூகிள் தனது YouTube தளத்தில் வெளியிட்டு பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கூகிள் என்றாலே அது மாற்றம் தான் அதற்கேற்ப தற்போது தன் வடிவமைப்பிலும் தரத்திலும் சில மாற்றங்களைச் செய்துள்ளது, சரியாகக் கவனித்தவர்கள் உணர்ந்து இருப்பார்கள்.

அனுமதி (Copy Right) இல்லாத வீடியோ க்களை ஏற்றுவது தொடர்ந்தால் அந்த YouTube ஐடியை முடக்கி விடுகிறார்கள். இது முன்பே இருந்தாலும் தற்போது இதைக் கண்டறிவதில் தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

முன்பெல்லாம் ஒரு வீடியோ ஃபைல் ஏற்றப்பட்ட பிறகு அது பப்ளிஷ் ஆக நீண்ட நேரம் எடுக்கும் தற்போது நேரம் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.

வீடியோ சப்க்ரைப் செய்யவும் வீடியோ பற்றிய தகவலை படிக்கவும் (முன்பு இது வலது பக்கம் மேலே இருந்தது தற்போது வீடியோ அடியிலேயே கொடுக்கப்பட்டுள்ளது) வசதி ஏற்படுத்தியுள்ளது.

முன்பு ஓட்டு போட 5 நட்சத்திரங்கள் இருந்தது தற்போது இது விரல் போன்று (Thump Style) அமைக்கப்பட்டுள்ளது (இது facebook ல் இருந்து சுட்டதாக ஒரு குற்றச்சாட்டுண்டு). இது பழைய முறையை விட ஓட்டளிக்க எளிதாக உள்ளது.

நானும் YouTube ல் வீடியோக்களை ஏற்றி வருகிறேன். என் ஐடிக்கு என்றைக்குச் சங்கு ஊத போகிறார்கள் என்று தெரியவில்லை 😉 .

{ 7 comments… add one }
 • ராமலக்ஷ்மி April 6, 2010, 12:27 PM

  தெரிந்த தகவல்களுக்கும் தெரியாத விஷயங்கள் என்னன்ன உள்ளன என்பதை அறிய உதவியது இப்பதிவு. நன்றி கிரி.

 • Arun April 8, 2010, 4:05 AM

  nandri giri!!

 • எப்பூடி..... April 7, 2010, 11:06 PM

  buzzy.com நல்லசெய்தி, புதிய செய்தி
  Google Chat நமளுக்கு அதை காணோமே 🙁
  iphoneOS4 8th of April வருதுபோல
  அருமையான தொகுப்பு

 • கிரி April 8, 2010, 9:02 AM

  ராமலக்ஷ்மி எப்பூடி அருண் சதா வருகைக்கு நன்றி

  //Google Chat நமளுக்கு அதை காணோமே :-(//

  இந்த வசதி அனைவருக்கும் இன்னும் கொடுப்படவில்லை. படிப்படியாக கொடுத்து வருகிறார்கள். விரைவில் உங்களுக்கும் கிடைக்கும்.

 • Sadhasivam April 8, 2010, 8:38 AM

  இணையம் பற்றிய தகவல்கள் நன்றாக உள்ளன. ஆனால் இத்தனையும் சும்மா பார்த்துட்டு வந்தாலே அரை நாள் போய்டுமே. ஹ்ம்ம், என்னதே சொல்ல.

  இதுலே சூப்பர் வசதி youtube இன் ipl டெலிகாஸ்ட். என்ன 2.30 GST தான் இடிக்குது.

 • DONKEY DOLLARS April 10, 2010, 6:53 PM
 • ஜெய்வாபாய் ஈசுவரன் April 27, 2010, 9:45 PM

  புதியதாக பிளாக்கரில் நுழைந்த எனக்கு,மிகவும் உபயோகமாக இருந்தது.

Leave a Comment