Apple
உலகம் முழுவதும் குறிப்பாக மேலை நாடுகளில் தற்போதைய பரபரப்பு ஆப்பிள் தொலைபேசி iPod, iPod Touch போன்ற சாதனங்கள் தான். தனது தயாரிப்பை ஒவ்வொரு முறை வெளியிடும் போதும் அதை வாங்க பொது மக்களிடையே அடிதடியே நடக்கிறது. ஆப்பிள் நிறுவனமும் பல்வேறு வகையான விளம்பரங்கள் மூலம் அதன் மீதான ஆர்வத்தை அதிகரித்து வருகிறது. சமீபமாக ஒரு சிறு குழந்தையும் ஒரு வயதான பெண்மணியும் இதை பயன்படுத்துவதைப்போல வெளியிட்ட விளம்பரங்கள் பலரை வெகுவாக கவர்ந்து விட்டது. தற்போது ஜப்பானில் அசைக்க முடியாமல் இருந்த Smart Phone ஐ ஆப்பிள் விற்பனை தாண்டி விட்டது.
facebook நிறுவனம் facebook Lite என்ற வசதியை Low Band Width உள்ளவர்களுக்காக அறிமுகப்படுத்தியது. இது பலரிடையே வரவேற்பை பெற்றது அதிக ஒப்பனைகள் இல்லாமல் மிக எளிமையாக இருந்ததும் ஒரு காரணம். தற்போது facebook இந்த வசதியை நீக்குவதாக அறிவித்து அதை செயல்படுத்தியும் விட்டது. இணைய ஜாம்பவானான கூகிளையே என்ன சங்கதி என்று facebook கேட்டுக்கொண்டுள்ளது, இந்தியாவில் அல்ல அமெரிக்காவில். கூகிள் ஐ விட அதிகம் பயன்படுத்தும் ஒரு தளமாக facebook மாறி விட்டது. இது எப்படி இருக்கு!
வல்லவனுக்கு வல்லவன் வையகத்துள் உண்டு.
Sony Floppy Disk
ஒரு காலத்தில் சக்கை போடு போட்ட, கணிப்பொறி வல்லுனர்களுடன் பிரிக்க முடியாமல் இருந்த Floppy Disk தற்போது கால மாற்றத்தில் அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் பொருளாக பார்க்கப்படுகிறது. இதைப்பயன்படுத்துவர்கள் வெகுவாக குறைந்து விட்டனர். இதன் தேவை குறைந்ததால் Sony நிறுவனம் இதன் தயாரிப்பை நிறுத்தப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது. நான் முதன் முதலில் வேலைக்கு சேர்ந்த போது இந்த Floppy Disk இல்லாமல் எந்த வேலையும் செய்ய முடியாது, அந்த அளவிற்கு இதன் பயன்பாடு இருந்தது தற்போது CD, DVD, USB என்று பல புதிய வசதிகள் வந்து விட்டதாலும் இதன் வாழ்க்கை ரொம்ப குறைவான காலம் என்பதாலும் எளிதில் பாதிப்படைந்து விடும் என்பதாலும் இதன் பயன்பாடு குறைந்ததில் எந்த ஆச்சர்யமும் இல்லை.
கூகிள் செய்தி இல்லாத ஒரு இணைய பதிவை இடுவது என்பது இயலாத காரியம். அந்த அளவிற்கு ஏதாவது ஒன்றை அறிமுகப்படுத்துவது மேம்படுத்துவது என்று ஏதாவது செய்துகொண்டே இருக்கிறது. எனக்கு கூகிள் ஐ பாராட்டி எழுதி சலித்து விட்டது
கூகிள் அதிகாரபூர்வமாக Google Buzz post sharing Button மற்றும் Follow button ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்குண்டான நிரலை (script) நீங்கள் இங்கே சென்று மிக எளிதாக உருவாக்கிக்கொள்ளலாம்.
Docs.com
எதிர்காலத்தில் இணையம் தான் வாழ்க்கை என்றாகி விட்டது, அந்த அளவிற்கு அதன் முக்கியத்துவம் அதிகரித்து விட்டது. இதனை நன்கு உணர்ந்த கூகிள் தன்னுடைய Chrome OS ஐ இணையத்தை அடிப்படையாக வைத்து தயாரித்து வருகிறது. இந்த வருட (2010) கடைசியில் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தவும் போகிறது. இதனுடைய Online Google Docs பலரால் விரும்பப்படுகிறது மற்றும் பயன்படுத்தப்படுகிறது. Google Chrome OS ன் முக்கிய நோக்கமே அனைத்து தகவல்களும் இணையத்தில் என்பதாகும். நீங்கள் உலகத்தின் எந்த இடத்திற்கு சென்றாலும் உங்கள் தகவல்களை கோப்புகளை பயன்படுத்த முடியும் என்பதே இதன் சிறப்பு. சிறு தகவல் Google OS ஐ பயன்படுத்த இணையம் அவசியம்.
இதை நன்கு உணர்ந்த மைக்ரோசாப்ட் இதற்கு போட்டியாக ஆரம்பித்துள்ளது தான் Docs.com. இங்கு நமது கோப்புகளை Online லையே பார்க்கலாம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். facebook நிறுவனத்துடன் இணைந்து இந்த சேவையை தருகிறது. கூகிள் போல மைக்ரோசாப்ட் ம் இதற்கான பயன்பாட்டை உடனே தந்து விடாமல் கொஞ்சம் கொஞ்சமாக அழைப்பிதல் மூலம் தருகிறது. எனவே இதன் மூலம் இயல்பாகவே இதன் மீதான ஆர்வத்தை அதிகரிக்க வைக்கிறது, காக்க வைத்து கொடுத்தால் தான் அதற்கு மதிப்பு எதிர்பார்ப்பு இருக்கும் என்று கருதி இதைப்போல செய்கிறது. நீங்களும் இங்கே சென்று உங்களுக்கான அழைப்பிதழுக்கு பதிவு செய்து கொள்ளலாம் விருப்பமிருந்தால்.
Apple Vs Adobe
பிரபல நிறுவனங்களான Adobe மற்றும் Apple சண்டைப் போட்டு பிரிந்து விட்டன. இனி Adobe Flash ஐ தனது iPhone ல் பயன்படுத்தப் போவதில்லை என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்து விட்டது. இதற்கு ஆப்பிள் கூறும் காரணங்கள் பாதுகாப்பின்மை, பல குறைபாடுகள் மற்றும் அதிகளவில் சக்தியை எடுத்துக்கொள்வது போன்றவை. இந்த இரண்டு நிறுவனங்களும் மறுபடியும் இணைய வேண்டும் என்பது இதைப்பயன்படுத்தும் ரசிகர்களது விருப்பம். இதற்கு காலம் தான் பதில் கூற வேண்டும்.
Gmail attachements Drag and Drop
மின்னஞ்சலில் பட்டைய கிளப்பிக்கொண்டு இருக்கும் ஜிமெயிலின் அடுத்த வசதி இது. இனி நீங்கள் படத்தில் உள்ளது போல உங்கள் ஃபைல் மற்றும் படங்களை எளிதாக Drag and Drop செய்து இணைக்கலாம். பழைய முறையும் அப்படியே உள்ளது உங்களுக்கு எது எளிதாக உள்ளதோ அந்த முறையில் நீங்கள் உங்கள் இணைப்பை மேற்க்கொள்ளலாம். படம் நன்றி கூகிள்.
Youtube
YouTube பற்றி கூறுவது சூரியனுக்கே டார்ச் அடிப்பது போல
இணையத்தை பயன்படுத்துபவர்களில் YouTube பற்றி தெரியாமல் இருப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். தற்போது தினமும் ஒரு பில்லியன் மக்கள் பயன்படுத்தும் இந்ததளம் துவங்கப்பட்டது ஏப்ரல் 23, 2005 அன்று இந்த வீடியோ உடன், இது வரை 25 லட்சம் பேர் இதை பார்த்துள்ளனர்
அதன் பிறகு 2005 அக்டோபர் மாதம் அதிகாரபூர்வமாக துவங்கப்பட்டது. இதன் பிறகு 2006 ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்ததளத்தை கூகிள் கையகப்படுத்தியது. தற்போது கூகிள் ன் மார்க்கெட் தந்திரத்தால் பணம் கொழிக்கும் ஒரு தளமாக உள்ளது. YouTube இல்லாத இணையத்தை நினைத்து பார்க்கவே முடியாது என்ற நிலையில் இதன் பயன்பாடு நிறைந்துள்ளது. உலகளவில் Band Width ஐ அதிகம் சாப்பிடும் ஒரு தளமாகவும் அதிகளவில் பயனாளர்களால் பயன்படுத்தப்படும் தளமாகவும் சரவெடியாக கலக்கி வருகிறது.
YouTube ல் உள்ள காணொளிகளை தரவிறக்கம் (Download) செய்ய எளிதான இலவசமான மென்பொருள் YouTube Downloader. உங்களுக்கு பிடித்த காணொளியை தரவிறக்கம் செய்ய வேண்டும் என்றால் அந்த காணொளியின் முகவரியை காப்பி செய்து இந்த மென்பொருள் முகவரி இடத்தில் பேஸ்ட் செய்து ஓகே கொடுத்தால் போதுமானது. இதை நீங்கள் உங்களுக்கு பிடித்த ஃபார்மட்டில் (AVI,WMV,MP3, MP4, 3GP) தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கே செல்லவும். என்னுடைய YouTube காணொளிகளை சப்ஸ்க்ரைப் செய்ய இங்கே செல்லவும்.
Related posts:
{ 18 comments… read them below or add one }
சுவாரசியமாக எழுதுகிறீர்கள். நன்றி.
ஓட்டு போட பட்டன் இல்லையே! தமிலிஷில் போய் url கொடுத்து தேடினேன். வரவில்லை. இன்னும் சேர்க்கவில்லையா?
யூத்புல் விகடனுக்கு உங்கள் பதிவை அனுப்புகிறீர்களா? இதை அனுப்பவும்.
//menporul.co.cc Said
சுவாரசியமாக எழுதுகிறீர்கள்.//
நன்றி ஷிர்டி சாய்தாசன்
//ஓட்டு போட பட்டன் இல்லையே! தமிலிஷில் போய் url கொடுத்து தேடினேன். வரவில்லை. இன்னும் சேர்க்கவில்லையா?//
தற்போது தான் சேர்த்தேன். இது வோர்ட் பிரஸ் என்பதால் தமிழிஷ் ஒட்டு பட்டனை நிறுவ முடியவில்லை. பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்.
//யூத்புல் விகடனுக்கு உங்கள் பதிவை அனுப்புகிறீர்களா? இதை அனுப்பவும்.//
இது வரை அனுப்பியதில்லை. அவர்களே சிறந்த பதிவாக இருந்தால் அவ்வப்போது வெளியிடுகிறார்கள்.
//அவர்களே சிறந்த பதிவாக இருந்தால் அவ்வப்போது வெளியிடுகிறார்கள்.//
அப்படியே இருந்தாலும் நம் பக்க கடமையை செய்துவிடலாமே!
மடிக்கணினியில் பிளாப்பி இல்லாமல் போனபோதே அதற்கு சங்கு ஊதி முன்னறிவிப்பு செய்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.
நிறைய தகவல்கள் கிரி. என்னைப்போன்ற Technologically challenged பேர்வழிகளுக்கு நிச்சயம் பயனுள்ள இடுகை. இது போலவும் தொடருங்கள்.
அனுஜன்யா
நண்பரே.! தங்கள் இணையம் பற்றிய செய்திகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாகவும் சுவாரஸ்யமாகவும் உள்ளது. நீங்கள் படம் போட்டு தொகுத்து கூறும் விதம் மிக அருமை. பாராட்டுகள் நண்பரே..! தொடர்ந்து தங்களது செய்திகளையும் படைப்புகளையும் எதிர்பார்த்து தங்களது வாசகன் பிரவின்குமார்.
நிறைய தகவல்கள்
சின்ன சின்னதா எளிதாக முழுசா விளங்குவதாக உள்ளது.
நன்றி கிரி.
Giri,
Nice post. I would like to share some of my thoughts/developments regarding Apple and Adobe Flash.
Today’s TOI reports that Apple’s market-cap ($ 241.5 Bn.) has crossed that of Microsoft’s ($ 239.5 Bn.) in US bourses last week, and thus Apple has become BIGGER than Microsoft in terms of market capitalisation and is presently No.2 behind Exxon Mobil, a petroleum company.
//பிரபல நிறுவனங்களான Adobe மற்றும் Apple சண்டைப் போட்டு பிரிந்து விட்டன.//
They were never a same company to part now. However, even today, Apple & Adobe are working together for Apple’s Mac Desktop OS X operating system. It is only in mobile devices that Apple wants to keep-off as far as possible from Adobe’s flash – for the reasons mentioned by you plus Adobe’s technological backwardness.
//இந்த இரண்டு நிறுவனங்களும் மறுபடியும் இணைய வேண்டும் என்பது இதைப்பயன்படுத்தும் ரசிகர்களது விருப்பம்.//
Sorry to disappoint you, it is not going to materialise in any of Apple’s mobile devices any time soon.
//இதற்கு காலம் தான் பதில் கூற வேண்டும்.//
I think your words have reached Apple’s CEO Steve Jobs. Here is his open letter issued to the public today titled “Thoughts on Flash”, wherein he has clearly mentioned the reasons why Adobe’s Flash is not the right thing for mobile devices & there are many open web standards available for developers in the mobile-era. It is an interesting & rare piece from Jobs; request you to please read it fully.
http://www.appleinsider.com/articles/10/04/29/apples_steve_jobs_publishes_public_thoughts_on_flash_letter.html
Arun
Excellent Post !!!!
தகவலுக்கு நன்றி
தகவல்கள் அருமை கிரி.
ஆனால் எப்போது முதல் தலைமுறை “ஆப்பிள் தயாரிப்புகளை” வாங்காமல் இருப்பது நல்லது
அதில் பல குறைகள் மற்றும் வசதிகள் குறைவாகவே இருக்கும் காரணம் அப்போது அவர்கள் அளவு மற்றும் எடையை மட்டுமே கணக்கில் கொண்டு தயாரிப்பதால், அதை தொடர்ந்து வரும் இரண்டாவது வெர்சன் அந்த குறைகளை தீர்க்கும் அதனால் விலை கூடும்
தகவல்களுக்கு நன்றி கிரி
நான் மதுரை,பழனி சென்றிருந்ததால் என்னால் உடனே கமெண்ட்
போட முடியவில்லை
வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
http://www.thalaivan.com
//menporul.co.cc April 29, 2010 at 9:07 AM
அப்படியே இருந்தாலும் நம் பக்க கடமையை செய்துவிடலாமே!//
நான் தொழில்நுட்ப பதிவுகள் மட்டுமே எழுதுவதில்லை. சில நேரங்களில் விகடனையே விமர்சிக்க வேண்டி வரலாம். விமர்சனமும் செய்து விட்டு அவர்களை இணைப்பையும் தாருங்கள் என்று கூறுவது நியாயமில்லை என்பதால், நான் அனுப்புவதில்லை. ஆனால் அவர்கள் விமர்சனம் பற்றி கருதாமல் சிறப்பான இடுகை என்றால் இணைப்பு கொடுத்துக்கொண்டு தான் உள்ளார்கள். அதற்க்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
=======================================================
//வடுவூர் குமார் April 29, 2010 at 9:22 AM
மடிக்கணினியில் பிளாப்பி இல்லாமல் போனபோதே அதற்கு சங்கு ஊதி முன்னறிவிப்பு செய்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.//
தற்போது டெக்ஸ்டாப் ல் கூட இல்லை.
======================================================
//அனுஜன்யா April 29, 2010 at 10:27 AM
நிறைய தகவல்கள் கிரி. என்னைப்போன்ற Technologically challenged பேர்வழிகளுக்கு நிச்சயம் பயனுள்ள இடுகை. இது போலவும் தொடருங்கள்.//
நன்றி அனுஜன்யா. நான் அனைத்து வகை பதிவுகளையும் எழுதிக்கொண்டுள்ளேன்.
======================================================
பிரவீன் குமார், ஜமால், ஷங்கர், சரவணன், லோகன் தலைவன் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி
சரவணன் விருப்பப்பட்டு பின்னூட்டம் இடுங்கள். பின்னூட்டம் எதுவும் கட்டாயம் இல்லை.
======================================================
//Arunachalam M April 29, 2010 at 8:15 PM
Giri,
Today’s TOI reports that Apple’s market-cap ($ 241.5 Bn.) has crossed that of Microsoft’s ($ 239.5 Bn.) in US bourses last week, and thus Apple has become BIGGER than Microsoft in terms of market capitalisation and is presently No.2 behind Exxon Mobil, a petroleum company.//
நானும் படித்தேன் அருண். இன்னும் கொஞ்ச நாள் சென்றால் தெளிவாகத்தெரிந்து விடும்.
//It is only in mobile devices that Apple wants to keep-off as far as possible from Adobe’s flash – for the reasons mentioned by you plus Adobe’s technological backwardness.//
இனி ஃப்ளாஷ்க்கு எதிர்காலம் இல்லை html5 தான் இனி என்று கூறி ஆப்பிள் அடோபை டென்ஷன் செய்து வருகிறது
அதற்க்கு மற்றவர்களிடையே ஆதரவும் காணப்படுகிறது. அடோப் தற்போது தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கூகிள் தற்போது அடோப் க்கு ஆதரவாக உள்ளது. அதனுடன் இணைந்தது க்ரோம் உடன் செயலாற்றப்போகிறது. பார்ப்போம் என்ன ஆகிறது என்று
//he has clearly mentioned the reasons why Adobe’s Flash is not the right thing for mobile devices//
இவரோட குற்றச்சாட்டு பேட்டரிய அதிகம் சாப்பிடுது பாதுகாப்பின்மை என்பதாகும். ஒருவருடம் சென்றால் பயனாளர்கள் என்ன கூறுகிறார்கள் என்பது புரிந்து விடும்.
=======================================================
//சிங்கக்குட்டி April 30, 2010 at 10:24 AM
முதல் தலைமுறை “ஆப்பிள் தயாரிப்புகளை” வாங்காமல் இருப்பது நல்லது அதில் பல குறைகள் மற்றும் வசதிகள் குறைவாகவே இருக்கும் காரணம் அப்போது அவர்கள் அளவு மற்றும் எடையை மட்டுமே கணக்கில் கொண்டு தயாரிப்பதால், அதை தொடர்ந்து வரும் இரண்டாவது வெர்சன் அந்த குறைகளை தீர்க்கும் அதனால் விலை கூடும் //
உண்மை தான் சிங்கக்குட்டி. பெரும்பாலும் அனைவரும் புதிய தயாரிப்புகளையே வாங்க ஆர்வம் காட்டுவார்கள். பிரச்சனை இருக்கும் என்று தெரிந்தாலும் அதன் மீதுள்ள ஆர்வம் காரணமாக வாங்கிக்கொண்டு தான் உள்ளார்கள். தற்போது வெளியிட்ட புதிய தயாரிப்பு கூட விற்பனையில் மாபெரும் சாதனை படைத்தது.
“சரவணன் விருப்பப்பட்டு பின்னூட்டம் இடுங்கள். பின்னூட்டம் எதுவும் கட்டாயம் இல்லை.”
கிரி நான் எனக்கு தெரியாத விஷயமென்றாலும் நோட் செய்து கொள்கிறேன்
எனக்கு தேவைப்படும் போது உபயோகமாகத்தான்
அந்த வகையில் இணையம் பற்றிய செய்திகளுக்கு விருப்பபட்டு தான் பின்னூட்டம் இட்டிருந்தேன்
One more new feature of Gmail is, if we are sending a mail with text “find the attachment” (I don’t know the list of words) without attaching the file, Gmail gives an alert like
“Did you mean to attach files?
You wrote “find the attached” in your message, but there are no files attached. Send anyway?”