இணையம் பற்றிய செய்திகள் [1-4-2010]

by கிரி on April 1, 2010

ணையம் என்பது முன்பு நமக்கெல்லாம் அந்நிய சாதனமாக இருந்தது. தற்போது காலமாற்றத்தில் இணையம் இல்லாமல் இருக்கவே முடியாது என்கிற அளவிற்கு மாறி விட்டது. அதன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது அதே போல அதைப் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நாளும் புதிய புதிய செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. இவ்வாறு வரும் செய்திகளில் நமக்கு தினப்பயன்பாட்டில் உதவும் செய்திகளை உங்களுக்கு தொகுத்து தரலாம் என்று இருக்கிறேன்.
தற்போது இணையத்தில் கூகிள் தான் முன்னணியில் இருக்கிறது. தினமும் பல பல புதிய மாற்றங்களை செய்து தன்னை புதுப்பித்துக்கொண்டே உள்ளது. கூகிள்க்கு உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். திறமையான கூகிள் பற்றிய செய்திகளுடன் எனது “இணையம் பற்றிய செய்திகள்” இடுகையை துவங்குகிறேன்.
கூகிள் மின்னஞ்சல் பாதுகாப்பு 
Google+warning+1 இணையம் பற்றிய செய்திகள் [1 4 2010]
Google+warning+2 இணையம் பற்றிய செய்திகள் [1 4 2010]
கூகிள் தனது மின்னஞ்சலுக்கு எவ்வளவு பாதுகாப்பு கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுக்க நினைக்கிறது அதை அவ்வப்போது செயல்படுத்தியும் வருகிறது. தற்போது அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய வசதி என்னவென்றால்… நமது மின்னஞ்சலை வேறு வேறு நாட்டிலிருந்து யாராவது பயன்படுத்தினால் தற்போது இந்த நாட்டில் இருந்து இதை பயன்படுத்தி உள்ளார்கள் என்று கூறும் (இந்த வசதி ஏற்கனவே facebook ல் உள்ளது). நாம் எங்கும் செல்லவில்லை இடம் மாறவில்லை என்றால் யாரோ நம் மின்னஞ்சலை ஹேக் செய்கிறார்கள் என்று புரிந்து உடனடியாக நமது கடவுச்சொல்லை மாற்றி விடலாம், ஒருவேளை நீங்கள் வேறு நாட்டிற்கு சென்று இருந்தால் இந்த அறிவிப்பை ஒதுக்கி விடலாம். எளிதாக புரிந்து கொள்ள இணைக்கப்பட்டுள்ள படங்களைப் பார்க்கவும் (படங்கள் நன்றி கூகிள்).
Picnik 
Picnik இணையம் பற்றிய செய்திகள் [1 4 2010]
கூகிள் பல நிறுவனங்களை கையகப்படுத்தி வருவது உங்கள் அனைவருக்கும் தெரிந்தது. அதில் தற்போது வாங்கி இருக்கும் நிறுவனம் தான் http://www.picnik.com . இதன் பயன்பாடு என்னவென்றால் நமது படங்களை ஆன்லைனிலேயே எடிட் செய்யலாம். இதை யாஹூ வின் Flickr தளம் தான் பயன்படுத்திக்கொண்டு இருந்தது தற்போது கூகிள் வாங்கி விட்டது. கூகிள் Picasa பிரபலம் என்றாலும் அதன் மூலம் எடிட் செய்ய முடியாது எனவே அதை சரி செய்ய இந்த நிறுவனத்தை வாங்கி உள்ளது.
மின்னஞ்சலில் கூடுதல் வசதி 
Google+Fast இணையம் பற்றிய செய்திகள் [1 4 2010]
நீங்கள் ஒரு மின்னஞ்சல் தட்டச்சு செய்யும் போது உங்களுடைய Inbox செல்ல வேண்டும் என்றால் அதாவது வேறு மின்னஞ்சலை சரி பார்க்க வேண்டும் என்றால் இதை Draft ல் போட்டு விட்டு தான் போக முடியும், ஒரே சமயத்தில் செய்ய முடியாது. இதற்கு கூகிள் தரும் புதிய வசதி தான் Fast Window. நீங்கள் புதிய மின்னஞ்சல் தட்டச்சு செய்யும் போதே உங்கள் Inbox செல்ல விரும்பினால் நீங்கள் கம்போஸ் செய்யும் ஜன்னலில் வலது பக்கம் இரு சிறு பெட்டி இருக்கும் அதை க்ளிக் செய்தால் உங்களுடைய தற்போதைய ஜன்னல் (compose window) தனியாகவும் உங்கள் மின்னஞ்சல் முகப்பு பக்கம் அதாவது Inbox பகுதி முழுமையாகவும் வந்து விடும், பிறகு உங்களுக்கு தேவையான தகவல்களை அங்கே சென்று பார்த்துக்கொள்ளலாம். புரிந்து கொள்ள எளிதாக படத்தை பார்க்கவும் (படம் நன்றி கூகிள்).
Google Apps 
Google+apps இணையம் பற்றிய செய்திகள் [1 4 2010]
இது பற்றி சிலர் தெரிந்து இருக்கலாம் பலர் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. இது கூகிள் மற்ற நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் மற்றும் பல வசதிகளை செய்து தரும் ஒரு அமைப்பு. பல நிறுவனங்கள் குறிப்பாக பள்ளி நிறுவனங்கள் தங்கள் மின்னஞ்சல் சேவை உட்பட பல சேவைகளை Google Apps நிறுவனத்துடன் செய்து வருகிறது. இதற்கு கூகிள் தனியாக கட்டணம் வசூலிக்கிறது, குறைந்த வசதியுடன் இலவசமாகவும் இதைப் பயன்படுத்தலாம்.. பணம் பெற்று சேவை தருவதால் மின்னஞ்சல் உட்பட அனைத்து சேவைகளும் தங்கு தடையின்றி 100% உத்திரவாதத்துடன் (No down time) கிடைக்கும். இதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தற்போது 25 மில்லியன் ஆகி விட்டது என்று அறிவித்துள்ளது. பெரிய எண்ணிக்கை தான். இதை அனைத்து நிறுவனங்களும் பயன்படுத்த முடியாது குறிப்பாக வங்கிகள், காரணம் பாதுகாப்பு தான்…. என்ன தான் கூகிள் பாதுகாப்பு தரும் என்றாலும் தங்களை பற்றி விவரங்களை தங்கள் பயனாளர்கள் விவரங்களை வேறு நிறுவனத்திடம் ஒப்படைக்க வங்கிகள் விரும்ப மாட்டார்கள் அது சரியான முடிவும் அல்ல.
கூகிள் வரைபட (Map) விளம்பரங்கள் 
Google+map இணையம் பற்றிய செய்திகள் [1 4 2010]
விளம்பரத்தில் கூகிள் ஒரு புரட்சியே செய்து விட்டது என்று தான் கூற வேண்டும், எங்கெல்லாம் கண்களை உறுத்தாத விளம்பரம் பயன்படுத்த முடியுமோ அங்கெல்லாம் பயன்படுத்தி கொள்ளை லாபம் பார்க்கிறது. கூகிள் விளம்பரத்தால் பயனடைந்தோர் ஏராளம். கூகிள் தற்போது தான் காட்டும் வரைபடத்தில் நிறுவனங்களின் லோகோ வையும் காட்ட தீர்மானித்துள்ளது. அதாவது ஒரு இடத்தில் MC Donald கடை இருக்கிறது என்றால் அந்த இடத்தில் அவர்களுடைய லோகோவை காட்டுவது அதற்கு என்று கட்டணம் வசூலித்துக்கொள்வது. இதை தற்போது ஆஸ்திரேலியா வரைபடத்தில் செயல்படுத்த உள்ளது. ஏதாவது நிறுவனம் அல்லது வங்கியின் ATM இடம் தெரிய வேண்டும் என்றால் அவர்கள் கூகிள் இடம் இதற்கு கட்டணம் செலுத்தினால் அவர்கள் அந்த இடத்தில் இவர்கள் லோகோ வை போட்டு விடுவார்கள். வரைபடத்தை பார்ப்பவர்கள் எளிதாக தங்களுக்கு தேவையான இடத்தை கண்டுபிடிக்க முடியும். கூகிள் தண்ணியிலேயே வெண்ணை எடுப்பாங்க போல இருக்கு :-) (படம் நன்றி கூகிள்)
கூகிள் ப்ளாக்கர் Vs வோர்ட் பிரஸ் 
Blogger+Vs+Wordpress இணையம் பற்றிய செய்திகள் [1 4 2010]
எப்படி மைக்ரோசாப்ட் விண்டோசை விரும்பாமல் ஒரு சிலர் (பலர்) லினக்ஸ் விரும்புகிறார்களோ அதே போல ப்ளாக்கரை விரும்பாமல் அதன் போட்டி தளமான வோர்ட் பிரஸ் (Wordpress) ஐ பலர் விரும்புகிறார்கள். இதன் எண்ணிக்கை தற்போது அதிகமாகிக்கொண்டே செல்கிறது. வழக்கமான ப்ளாக்கர்கள் தவிர இதையே தொழிலாக வேலையாக செய்பவர்கள் (சும்மா இல்லைங்க மாதம் 5000 USD வரை அல்லது அதற்கு மேலும் சம்பாதிக்கறாங்க) வோர்ட் பிரஸ் பயன்படுத்தவே விரும்புகிறார்கள். இவர்கள் மூலம் பலர் தற்போது வோர்ட் பிரஸ் க்கு மாறி வருகிறார்கள் இருந்தாலும் இன்னும் பிளாக்கர் தான் முன்னணி வகிக்கிறது மற்றும் பயன்பாடு எளிதாக உள்ளது. நானும் வோர்ட் பிரஸ் மாறலாம் என்று இருந்தாலும் ஒரு சில குடைச்சல்களுக்காக மாறாமல் இருக்கிறேன், விரைவில் நானும் மாறலாம். வோர்ட் பிரஸ் தளங்களே ஒரு Professional லுக் தருகிறது. நீங்கள் வேலைக்கு செல்லாமல் இணையத்தின் மூலமாக சம்பாதிப்பவராக இருந்தால் நிச்சயமாக ப்ளாக்கர் தளம் இல்லாமல் வோர்ட் பிரஸ் தளம் தான் வைத்து இருப்பீர்கள். இது ஆங்கில வலைபூக்களுக்கு தான் அதிகம் பொருந்தும் காரணம் அவர்கள் தான் அதிகம் தொழில்நுட்ப தளங்கள் வைத்துள்ளார்கள் மற்றும் அதை விட முக்கிய காரணம் கூகிள் மற்றும் பல நிறுவனங்கள் ஆங்கில வலைப்பூக்களுக்கே [Blog] விளம்பரங்களை பிரச்சனை இல்லாமல் தருகின்றனர்.
கூகிள் Vs சீனா
Google+china இணையம் பற்றிய செய்திகள் [1 4 2010]
கூகிள் சீனாவில் இருந்து விரைவில் தனது மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறுகிறது. சீன கம்யுனிச அரசு கடுமையான கட்டுப்பாடுகளை கூகிள்க்கு விதித்ததால் மற்றும் பல ஹேக்கர்கள் கூகிள் தளத்தில் “விளையாடியதால்” சீனாவுடனான உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்து விட்டது. சீனாவில் கூகிள் தேடுதலை விட அவர்களுடைய சொந்த தேடுதல் தளத்தை தான் மக்கள் அதிகம் பயன்படுத்துவதால் அவர்களும் இதை பெரிய விசயமாக எடுத்துக்கொள்ள வில்லை. கூகிள் உடன் பிரபல டொமைன் நேம் வழங்கியான Godaddy.com ம் சீனாவுடன் ஏற்பட்ட பிரச்சனையில் இனிமேல் .cn( இந்தியாவிற்கு .in போல) வழங்குவதை நிறுத்திக்கொள்ள போவதாக அறிவித்து விட்டடது. சீனா தனது கொள்கைகளை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் தற்போது இல்லை என்றாலும் பின்னாளில் இதற்காக கண்டிப்பாக வருத்தப்படும். இதனால் இந்தியாவிற்கு தான் ரொம்ப லாபம்.
க்ரோம்
 இணையம் பற்றிய செய்திகள் [1 4 2010]
கூகிள் க்ரோம் உலவி (Browser) பலரும் பயன்படுத்திக்கொண்டு இருப்பீர்கள், அதன் பயன்பாடு மிகச்சிறப்பாக உள்ளது. தற்போது இது பல நீட்சிகளை (Extesnions) அறிமுகம் செய்து வருகிறது. எதை எடுப்பது எதை விடுவது என்றே தெரியாத அளவிற்கு மண்டை காய்கிறது, போதும் போதும் என்கிற அளவிற்கு வசதிகளை குவித்து தள்ளுறாங்க. இவங்க கொடுப்பது அனைத்தையும் போட்டால் இடமே பற்றாது போல! இதை ஒரு பத்தியில் கூற முடியாது என்பதால் விளக்கமாக க்ரோம் உலவி சிறப்புகளை தனி இடுகையாக தருகிறேன்.
இன்று ஜிமெயில் பிறந்தநாள்.

Subscribe to கிரி Blog by Email

feed icon16x16 இணையம் பற்றிய செய்திகள் [1 4 2010] Subscribe in a reader

Related posts:

  1. இணையம் பற்றிய செய்திகள் [6-4-2010]
  2. இணையம் பற்றிய செய்திகள் [29-04-2010]
  3. இணையம் பற்றிய செய்திகள் [15-6-2010]
  4. Google Buzz பற்றிய ஒரு பார்வை
  5. யாஹூ தனது வலைப்பதிவு சேவையான Yahoo! 360* யை மூடுகிறது

{ 16 comments… read them below or add one }

1 ராமலக்ஷ்மி April 1, 2010 at 9:27 AM

மிகத் தெளிவான பதிவு.

//மின்னஞ்சலில் கூடுதல் வசதி//

யாஹூவின் பெரிய வசதியாக இது இருந்ததாலேயே ஜிமெயில் அத்தனை வசீகரிக்கவில்லை. இப்போது வந்து விட்டதா:)?

Reply

2 Shirdi.saidasan of Menporul.co.cc April 1, 2010 at 10:43 AM

நல்ல விஷயங்கள். ஒரே பதிவில். நன்றி.

Reply

3 ரவிசாந் April 1, 2010 at 10:50 AM

அழகான தொகுப்பு. தொடர்ந்து எழுதுங்கள்.வாழ்த்துக்கள்அண்ணா .

Reply

4 r.v.saravanan kudandhai April 1, 2010 at 12:38 PM

நல்ல பதிவு நன்றி கிரி

Reply

5 ☼ வெயிலான் April 1, 2010 at 1:28 PM

தெரியாத பல தெரிந்து கொண்டேன் கிரி!
தொடரட்டும் இது போன்றவைகள்.

Reply

6 ஜோதிஜி April 1, 2010 at 3:18 PM

நிறைய பயன் உள்ள தகவல்கள் எனக்கு மட்டுமல்ல.

Reply

7 Logan April 1, 2010 at 7:04 PM

Thanks for the Information Giri

Reply

8 shankar April 2, 2010 at 9:05 PM

Good information…,giri..,Thanks

Reply

9 shankar April 2, 2010 at 9:05 PM

Good information…,giri..,Thanks

Reply

10 thalaivan April 2, 2010 at 10:34 PM

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Hello

you can register in our website http://www.thalaivan.com and post your articles

install our voting button and get more visitors

http://www.thalaivan.com/button.html

Visit our website for more information http://www.thalaivan.com

Reply

11 மணி (ஆயிரத்தில் ஒருவன்) April 2, 2010 at 11:00 PM

அருமை… கிரி.
வாழ்த்துக்கள்.நன்றி!

Reply

12 இளமுருகன் April 3, 2010 at 5:27 AM

அருமையான தகவல்கள் அடங்கிய பதிவிற்கு நன்றி.

Reply

13 snegan April 3, 2010 at 1:32 PM

அருமையான தகவல்கள் வாழ்த்துக்கள்

Reply

14 Sureshram April 3, 2010 at 1:45 PM

ithu arumaya ulathu
veldan google

Reply

15 ரோஸ்விக் April 3, 2010 at 8:17 PM

ஏப்ரல்-1 குனே அறிவை வளர்க்கிற பதிவ போட்டீங்களா கிரி :-) அனைத்தும் எனக்குப் புதிய தகவல்கள்.

தொழில்நுட்ப பதிவாளராகவும் தொடர்ந்து எழுதுகிறீர்கள். பயனுள்ளவை.

Reply

16 அஹமது இர்ஷாத் April 5, 2010 at 4:27 PM

தேவையான பதிவு தெளிவுடன்…. நன்றி கிரி..

Reply

Leave a Comment

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)

Previous post:

Next post: