அஜித் ரஜினி கமல் விஜய் டிவி “கோ”

விஜய் டிவியோட ஜோடி நம்பர் 1 சீசன் 4 ல வர எல்லோரும் கலக்கலா ஆடுறாங்க! பெரும்பாலும் எல்லோரும் சிறந்த நடன ஆட்டக்காரர்களாக இருப்பதால் இந்த முறை போட்டி கடுமையாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

இந்த முறையாவது புதுமுகங்களாக போட்டார்கள்….. இல்லை என்றால் இந்த சீரியல் நடிக நடிகர்களையே போட்டு சாகடிப்பார்கள், மொக்கைனா மொக்கை அப்படி ஒரு மொக்கை.

இந்த சீசன் துவக்கத்தில் இரண்டு பசங்க ஃப்ளோரிங் ஆட்டம் ஆடுனாங்க பாருங்க… அடி தூள்! பொண்ணுகளும் பின்னி பெடலெடுத்தாங்க. நான் தொடர்ந்து இவற்றை எல்லாம் பார்ப்பது இல்லை என்றாலும் நன்றாக இருந்தால் (இதைப்போல) பார்ப்பேன்.

இந்த சன் டிவி நடிகைகளை எல்லாம் வைத்து என்னென்னமோ போட்டி நடத்துறாங்க ஆனால் விஜய் டிவி அளவிற்கு இவர்களால் வர முடியலை, இது மட்டும் ஏன் என்று எனக்கு புரியலை. விஜய் டிவி நிகழ்ச்சியை இன்னும் ரசிக்கற மாதிரி தராங்க.

சிங்கையில் இரண்டு வாரம் முன்பு சீனப்புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது, இங்கு இதற்கு இரண்டு நாள் அரசு விடுமுறை.

நகரமே பெரும்பாலான கடைகள் பந்த் போல மூடி இருக்கும் குறிப்பாக விரைவு உணவகங்கள். வண்ண விளக்குகள், அலங்காரங்கள், கொண்டாட்டங்கள் என்று அசத்துவார்கள்.

சீனர்கள் கொண்டாட்டம் என்றாலே அது சிங்க நடனம் தான் (Lion Dance) தான், படு கலக்கலாக இருக்கும் இந்த முறை பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

இங்கே ஒரு நம்ப முடியாத ஒரு வித்யாசமான கொண்டாட்டம் உள்ளது, அது என்னவென்றால் அலுவகத்தின் உள்ளே வந்து சிங்க நடனம் ஆடுவது.

எங்கள் அலுவலகத்தில் வருடாவருடம் நடக்கும்.. கார்ப்பரேட் நிறுவனம் என்றாலே அலுவலக தளம் நீளமாக இருக்கும் ஒரே தளத்தில் 500 பேர் எல்லாம் சர்வசாதரணமா அமர்ந்து இருப்பார்கள்.

இந்த இடத்தில் அதுவும் அலுவலக நேரத்தில் சிங்க வேடம் பூண்டு மேளச்சத்ததுடன் வந்து ஆடினால் எப்படி இருக்கும்! நான் ரொம்ப ரசித்து பார்த்தேன். இதை யாரும் தொந்தரவாக நினைப்பதில்லை மாறாக அனைவரும் சந்தோசமாக கொண்டாடினார்கள்.

புதிய விசயங்களை விரும்பும் எனக்கு இவை பிடிப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இன்னும் இவர்கள் புத்தாண்டுக்கொண்டாட்டம் நிறைவு பெறவில்லை, நேற்றுக்கூட எங்கள் வீட்டு அருகில் ஆட்டம் போட்டிகள் “Lunar New Year Dinner Celebration” என்று கொண்டாடிக்கொண்டு இருந்தார்கள்.

வாழ்க்கையை கொண்டாட்டமாகவே எப்போதும் கழிக்கிறார்கள் குறிப்பாக உணவுடன் 🙂

இரண்டு வாரமா திரையுலகை அஜித் பேசிய பேச்சும் அதற்கு ரஜினி ஆதரவாக பேசியதும் அதை எதிர்த்து திரையுலகில் எழுந்த சலசலப்புமே செய்திகளை ஆக்கிரமித்து இருந்தது.

அஜித் அப்படி என்ன தவறாக பேசிட்டாருன்னு இவங்க எல்லாம் குதிச்சாங்கன்னே தெரியலை.

அஜித் செய்த ஒரே தவறு இதை பெப்சி (தொழிலார்கள்) விழாவில் பேசியது தான்.

அது கூட அவர்களை அவமானத்தபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கூறி இருக்க மாட்டார்.

நாங்கெல்லாம் மிரட்டவில்லை என்று கூறிவிட்டு கீழ்கண்ட வசனத்தை பேசி இருக்காரு V.C.குகநாதன்..

“இவர்களை எப்படி மேலே கொண்டு வந்தோமோ… அதே போல் இருக்கும் இடம் தெரியாமலும் செய்து விடுவோம். நாங்கள் பண்பாகவும் கேட்போம். பணிவாகவும் கேட்போம். வற்புறுத்தி அல்லது மிரட்டியும் கேட்போம்.

என்ன செய்துவிட முடியும் இவர்களால்? அப்படியும் கேட்காவிட்டால் அவர்களை எப்படி ஓரம் கட்ட முடியும் என்ற வழிமுறையும் எங்களுக்கு தெரியும், என்றார்?”

குகநாதன் என்ற ஒருத்தரையே இவர் ரஜினியையும் அஜித்தையும் விமர்சித்த பிறகு தான் பல பேருக்கும் தெரியும் இதுல ரஜினியையும் அஜித்தையும் இல்லாமல் செய்து விடுவாராம். ஹி ஹி சரியான காமெடி பீஸ் சார் நீங்க!

புரிஞ்சு போச்சு! வடிவேல் சிங்கமுத்து சண்டைல நைசா அவங்க இடத்தை பிடித்து விடலாம்னு தானே இப்படி ஒரு திட்டம் போட்டீங்க! நடக்காது சார் நடக்காது!

வேணும்னா உங்க பேரை பஜ்ஜி நாதன்னு மாற்றிட்டு போண்டா மணிக்கு அடுத்ததா வரிசையில நின்னு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் சாப்பிட்டுட்டு இருங்க மெதுவா வாய்ப்பு கிடைக்கும்.

கலைஞர் கிட்ட இருந்து பல்பு வாங்குனதும் இப்ப நண்பர்கள் ஆகிட்டோம்னு அறிக்கை விட்டு உங்க (காமெடி) இடத்தை உறுதி பண்ணிட்டீங்க கில்லாடி சார் நீங்க.

இப்படி எல்லாம் நடக்கும்னு தெரியாம ஜோக்குவார் தங்கம் வேற ஓவரா சீனை போட்டுட்டாரு! ஏற்கனவே வயித்துல புளியை கரைத்து இருக்கும்னு நினைக்கிறேன். ஆனா அவர் நிஜமான “ஸ்டன்ட்” மாஸ்டர் தான் 🙂 .

புரட்சி (ஆபாச அர்ச்சனை) தமிழன் சத்யராஜ் ஒண்ணும் பொங்க காணோம்…. ஒருவேளை திட்ட சரியான கெட்டவார்த்தை கிடைக்கலை என்று தேடிட்டு இருக்காரோ என்னவோ!

சத்யராஜ் அண்ணே! விஷயம் தெரியுமா! உயர்நீதி மன்றம் பத்திரிக்கையாளர்களை நடிகர்கள் ஆபாசமாக பேசியதற்கு வழக்கு தொடுக்கலாம் என்று கூறி விட்டார்கள், அடுத்து ஆப்பு வைக்க உங்களைத்தான் பத்திரிக்கையாளர்கள் குறி வைத்து இருக்கிறார்களாம் 🙂 .

அமெரிக்காவில் தனியாரும் தபால் தலைகள் வெளியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது (ஆறு ஆண்டுகளுக்கு முன்பே).

இந்தியருக்கு சொந்தமான http://www.usa-postage.com/ என்ற நிறுவனம் தற்போது இந்து கடவுள்கள் படங்களுடன் தபால் தலைகளை வெளியிட்டு வருகிறது.

இதற்கு அமெரிக்காவில் உள்ள இந்தியர்களிடையே நல்ல வரவேற்பு காணப்படுவதாக செய்திகளில் வந்துள்ளது.

இவ்வாறு அனுமதி தருவது உண்மையிலேயே பெரிய விஷயம் தான். அதில் என் விருப்ப கடவுள் முருகனை பார்த்தவுடன் ரொம்ப சந்தோசமாகிட்டேன்.

ரேணிகுண்டா படம் பார்க்கும் வாய்ப்பு தற்போது தான் கிடைத்தது, படம் என்னை ரொம்ப கவர்ந்தது. அதில் நடித்து இருந்த அனைவரும் சிறப்பாக நடித்து இருந்தார்கள்… அதிலும் வாய் பேசாத பெண்ணாக வரும் பெண் (சிறுமி!) ரொம்ப அழகு!

படத்தின் முடிவு நன்றாக இருந்தது அதாவது சினிமாத்தனமாக இல்லாமல் இயல்பாக இருந்தது. அதில் நடித்து இருந்த பசங்களும், சிறுமிகளும், பாலியல் தொழிலாளியாக வரும் பெண்ணும், வில்லன்களும் அனைவருமே இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.

ஒருவரைக்கூட குறைகூற முடியாத அளவிற்கு சிறப்பாக இருந்தது. பார்க்காதவர்கள் பாருங்கள் வன்முறை படங்கள் உங்களுக்கு பிடிக்கும் என்றால் 🙂

கமலோட திரையுலக 50 வருட விழா விஜய் டிவியில் கலக்கலாக ஓடி விஜய் டிவியின் TRP ரேட்டிங்கை தாறுமாறாக எகிற வைக்க அதை கண்ட சன் டிவி டென்ஷன் ஆகி விட்டதாம்.

இதை எப்படி நாம் தவற விட்டோம் என்று (இவங்களுக்கு தான் அடுத்தவங்க நல்லா இருந்தா பிடிக்காதே!), அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சி மக்களை கவர்ந்தது.

அதற்கு விஜய் டிவி செய்த மார்க்கெட்டிங்கும் மேடையில் அவர்கள் அடக்கி வாசித்ததும் முக்கிய காரணம்.

அதில் ரஜினி கமலை மனதார பாராட்டியதும் கமல் நடித்த காலத்தில் நாமும் நடித்தோம் என்பதே எனக்கு பெருமை என்று கூறியதும், தேவதையை வைத்து கூறிய கதையும் கமலை கண்கலங்க வைத்தது நமக்குத் தெரிந்தது.

ஒரு சிலர் ரஜினி சும்மா சீனைப் போடறாரு பாராட்டு விழா என்பதால் வழக்கம்போல புகழ்ந்து கூறி இருக்கார் என்று நினைத்து இருப்பாங்க.. ஆனால்  அது மனதில் இருந்து கூறியது தான் என்று இந்த படத்தை கமலுக்கு அனுப்பியதன் மூலம் நிரூபித்து விட்டார்.

திரையுலகில் உண்மையான நட்பு என்றால் அது ரஜினி கமல் தான் என்று மீண்டும் அழுத்தம் திருத்தமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

அயன் என்ற கலக்கலான மசாலா படத்தை கொடுத்த ஒளிப்பதிவாளர் இயக்குனர் K.V.ஆனந்த் தற்போது எடுத்து வரும் படம் “கோ” (பேரெல்லாம் வித்யாசமாத்தான் வைக்குறாரு) முதலில் சிம்பு நடிப்பதாக இருந்தது.

பிறகு சிம்பு எனக்கு K.V.ஆனந்த் கூட செட் ஆகலை!! மீ த எஸ்கேப் என்று கூறி விட்டார், அதன் பின் ஜீவாவை முடிவு செய்தார்.

படப்பிடிப்பு நடத்த சீனாவில் முடிவு செய்து அங்கே செல்ல படக்குழுவினர் அனைவருக்கும் விசா கிடைக்க, குடைச்சலாக முக்கிய நபரான ஜீவாவிற்கு கிடைக்கவில்லை.

தாமதமாக அனுமதி கேட்டதே காரணம் என்று கூறி இருக்கிறார்கள் அதனால் இப்போது ஜீவா இல்லாமலே மற்ற காட்சிகளை எடுத்து அவர் வந்தவுடன் மீதியை எடுப்பார்களாம். “கோ” னு பேர் வைத்துட்டு படம் நகரவே மாட்டேங்குது! 🙂 .

எப்படியோ படம் நல்லா வந்தால் சரி.. “கோ” லோகோ பார்த்தீங்களா! ஸ்வஸ்திக் மாதிரி இருக்குல்ல! வித்யாசமா நச்சுனு இருக்கு.

ப்ளாக் எழுத வந்து நான்கு வருடம் முடிந்து ஐந்தாவது வருடம் துவங்கி விட்டது.

நூறு பதிவு இருநூறு பதிவு வருடம் முடிவு என்று வரும் போது தனிப்பதிவு போட்டு மொக்கையை போடுவதும் வரலாறை! கூறுவதும் அவுட் ஆஃப் ஃபேஷன் ஆகி விட்டதால் சுருக்கமா முடித்துக்கிறேன் 😉 .

முதலில் (2006) யாகூ! ப்ளாக்கில் எழுதிக் கொண்டு இருந்தேன் 2006 ப்ளாக்கரில் இணைந்தாலும் இதில் எழுத ஆரம்பித்தது 2008 ல் தான் எப்படியோ நான்கு வருடம் ஓடி விட்டது.

எனக்கு இது வரை பின்னூட்டம் இட்டு உற்சாகப்படுத்தியவர்களுக்கும், ரீடர் மற்றும் மின்னஞ்சலில் தொடரும் 480 பேருக்கும், Google Friend Connect ல் தொடரும் 210 (+25 ரகசியமாக பின்தொடரும்) நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

தமிழிஷ் ல எனக்கு பதிவர்கள் போடும் ஓட்டை விட மற்றவர்கள் போடும் ஒட்டுத்தான் அதிகம். என் பதிவை பதிவர்கள் அல்லாது பதிவுலகிற்கு சம்பந்தம் இல்லாதவர்கள் ஓரளவு படிப்பதாக நினைக்கிறேன்! இந்த சமயத்தில் அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த மாதம் தேர்வு இருந்ததால் பதிவு எதுவும் எழுதவில்லை [ஒரு வாட்டி எழுதக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்கமாட்டேன் 🙂 ] ஏன் எழுதவில்லை? என்று மறக்காமல் அன்பாக விசாரித்த அருண், சரவணன் மற்றும் ஷங்கர் ஆகியோருக்கும் என் நன்றி.

{ 27 comments… add one }
 • R.Gopi March 1, 2010, 8:25 AM

  //சிங்கையில் இரண்டு வாரம் முன்பு சீனப்புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது, இங்கு இதற்கு இரண்டு நாள் அரசு விடுமுறை//

  புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக களைகட்டும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்…

  //இந்த இடத்தில் அதுவும் அலுவலக நேரத்தில் சிங்க வேடம் பூண்டு மேளச்சத்ததுடன் வந்து ஆடினால் எப்படி இருக்கும்! நான் ரொம்ப ரசித்து பார்த்தேன்.//

  ஆஹா…. வெறும் பார்வைதானா?/ அப்போ நீங்க ஆடலியா??

  //ஹி ஹி சரியான காமெடி பீஸ் சார் நீங்க!
  புரிஞ்சு போச்சு! வடிவேல் சிங்கமுத்து சண்டைல நைசா அவங்க இடத்தை பிடித்து விடலாம்னு தானே இப்படி ஒரு திட்டம் போட்டீங்க! நடக்காது சார் நடக்காது! வேணும்னா உங்க பேரை பஜ்ஜி நாதன்னு மாற்றிட்டு போண்டா மணிக்கு அடுத்ததா வரிசையில நின்னு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் சாப்பிட்டுட்டு இருங்க மெதுவா வாய்ப்பு கிடைக்கும். //

  யப்பா…. என்னாங்க குகநாதன போட்டு இந்த தாக்கு தாக்கிட்டீங்க தல ….

  //ஜோக்குவார் தங்கம் வேற ஓவரா சீனை போட்டுட்டாரு!//

  அதனால தான், இவருக்கு நான் வச்ச பேர் “டங்குவார் பித்தளை”.. எப்பூடி?

  //இந்தியருக்கு சொந்தமான http://www.usa-postage.com/ என்ற நிறுவனம் தற்போது இந்து கடவுள்கள் படங்களுடன் தபால் தலைகளை வெளியிட்டு வருகிறது//

  சூப்பர்…

  //ரேணிகுண்டா படம் பார்க்கும் வாய்ப்பு தற்போது தான் கிடைத்தது, படம் என்னை ரொம்ப கவர்ந்தது.//

  நான் திருப்பதி போற போது, ரேணிகுண்டா ஸ்டேஷன் தான் பார்த்து இருக்கேன்…

  //திரையுலகில் உண்மையான நட்பு என்றால் அது ரஜினி கமல் தான் என்று மீண்டும் அழுத்தம் திருத்தமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. //

  இதிலும் சில பேர் சர்ச்சை கிளப்ப முயன்றார்கள்… அது எப்படி ரஜினி கமலை அமிதாப், மம்மூட்டி, மோகன்லால் இவர்களை விட பெரிய ஆள் என்று சொல்லலாம் என்று!!

  //ப்ளாக் எழுத வந்து நான்கு வருடம் முடிந்து ஐந்தாவது வருடம் துவங்கி விட்டது,//

  வாழ்த்துக்கள் தலைவா… தொடர்ந்து கலக்குங்க…

  //கடந்த மாதம் தேர்வு இருந்ததால் பதிவு எதுவும் எழுதவில்லை (ஒரு வாட்டி எழுதக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்கமாட்டேன் :-D) //

  இந்த டெர்ரர் பஞ்ச் டயலாக் கேக்காம
  ஒரு மாசம் இருந்தேன்… இப்போ நீங்க ஞாபகப்படுத்திட்டீங்க…

  பஞ்ச் டயலாக் பேசறத விட்டுட்டு, பரீட்சையில பாஸ் பண்ற வழியை பாருங்க பாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…. ஹீ…ஹீ…ஹீ…ஹீ…

 • ராமலக்ஷ்மி March 1, 2010, 8:42 AM

  சீனப் புத்தாண்டு சிங்க நடனப் படம் மிக அருமை. பகிர்வுக்கு நன்றி. நான்கு வருட நிறைவுக்கு என் வாழ்த்துக்கள்!

 • வானம்பாடிகள் March 1, 2010, 11:04 AM

  ஐந்தாவது வருட துவக்கத்துக்கு பாராட்டுகள் கிரி:)

 • ஈ ரா March 1, 2010, 8:07 AM

  //சிங்கையில் இரண்டு வாரம் முன்பு சீனப்புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது, இங்கு இதற்கு இரண்டு நாள் அரசு விடுமுறை.//

  நம்ப தமிழ் புத்தாண்டு மாதிரி அதுவும் ரெண்டு நாளா இல்ல தொடர்ந்து ரெண்டு நாளா? –)

  அப்புறம்

  அஜீத் ரொம்ப பணிவாய் கலைஞருக்கு வேண்டுகோள்தான் விடுத்தார்… அதையே சகித்துக் கொள்ள முடியவில்லை யாராலும்…இதுதான் பிரச்சினை…

  அப்புறம்

  வாழ்த்துக்கள்

 • ஜோ/Joe March 1, 2010, 9:13 AM

  //குகநாதன் என்ற ஒருத்தரையே இவர் ரஜினியையும் அஜித்தையும் விமர்சித்த பிறகு தான் பல பேருக்கும் தெரியும் இதுல ரஜினியையும் அஜித்தையும் இல்லாமல் செய்து விடுவாராம்//

  கிரி,
  ஒரு தகவலுக்காக மட்டுமே .. ரஜினி நடித்த ‘மாங்குடி மைனர்’ படத்தை இயக்கியது , அஜீத் நடித்த ‘மைனர் மாப்பிள்ளை’ படத்தை இயக்கி தயாரித்ததும் இதே குகநாதன் தான்.

 • சில நட்புகள் வெளியே தெரிவதில்லை தேவையுமில்லை

 • payapulla March 1, 2010, 11:42 AM

  நீண்ட நாள் கழித்து இந்த பதிவு. நன்றாக இருந்தது கிரி. வாழ்த்துக்கள். இந்த முறை கொஞ்சம் டெர்ரரா மாறி இருக்கீங்க 🙁 -பயபுள்ள.

 • அஜித்திற்கும் உங்கள் தலைவருக்கும் உள்ள ஒரு வேற்றுமையை கவனித்தீரா? என்ன நடந்தாலும் சரி நான் சரியாக தான் சொன்னேன் என அஜித்தும் ஹி ஹி ஹி முன்பு நடந்ததற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனுமாறும் ரஜினியும் ஹீம்ம்ம்ம்ம் 🙂

  எனக்கு ஒன்று புரியவில்லை … அஜித்தை விட அதிக பவர் புல்லாவனர் ரஜினி.. ஆனால் தான் கூறிய கருத்தில் உறுதியாக நிற்பதில்லை என இதுவரை புரியவில்லை… ஆட்சியையே மாற்றி அமைக்க காரணமானவர் இன்று கழக உடன்பிறப்பானது ஏனோ !!!

 • shankar March 1, 2010, 6:48 PM

  கிரி ,
  //எனக்கு தெரிந்து அஜித் செய்த ஒரே தவறு இதை பெப்சி (தொழிலார்கள்) விழாவில் பேசியது தான். அது கூட அவர்களை அவமானத்தபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கூறி இருக்க மாட்டார்\
  தவறு கிரி ,தனக்கு விடுக்க பட்ட மிரட்டலை பகிரங்கமாக வெளிபடுத்தினார் ,அது பெப்சி விழா அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறேன் அது கருணாநிதியின் பாராட்டு விழா…,

 • shankar March 1, 2010, 7:00 PM

  கிரி ,
  நன்றியெல்லாம் தேவையில்லை ,வாரத்திற்கு ஒரு 8 பதிவாது போடுமாறு கேட்டுகொள்கிறேன் ..,

 • கிரி March 1, 2010, 7:38 PM

  // ஈ ரா said…

  நம்ப தமிழ் புத்தாண்டு மாதிரி அதுவும் ரெண்டு நாளா இல்ல தொடர்ந்து ரெண்டு நாளா? –)//

  :-)) தொடர்ந்து இரண்டு நாள் .. விவகாரமாகத்தான் கேட்கறீங்க!

  ======================================================================

  // R.Gopi said…

  ஆஹா…. வெறும் பார்வைதானா?/ அப்போ நீங்க ஆடலியா??//

  ஆஹா! ஒரு முடிவோடத்தான் இருக்கீங்க!

  //யப்பா…. என்னாங்க குகநாதன போட்டு இந்த தாக்கு தாக்கிட்டீங்க தல ….//

  சென்ற மாதம் பதிவு எழுத .. 😉

  //அதனால தான், இவருக்கு நான் வச்ச பேர் “டங்குவார் பித்தளை”.. எப்பூடி?//

  🙂 ஈயம் பித்தளைக்கு பேரிச்சம் பழம்

  //பஞ்ச் டயலாக் பேசறத விட்டுட்டு, பரீட்சையில பாஸ் பண்ற வழியை பாருங்க பாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.//

  பாஸ் பண்ணிட்டேன் 🙂

  ======================================================================

  // ராமலக்ஷ்மி said…

  சீனப் புத்தாண்டு சிங்க நடனப் படம் மிக அருமை.//

  அது நான் எடுக்கலை.. நெட் ல சுட்டது 🙂

  ======================================================================

  // ஜோ/Joe said…

  கிரி,
  ஒரு தகவலுக்காக மட்டுமே .. ரஜினி நடித்த ‘மாங்குடி மைனர்’ படத்தை இயக்கியது , அஜீத் நடித்த ‘மைனர் மாப்பிள்ளை’ படத்தை இயக்கி தயாரித்ததும் இதே குகநாதன் தான்//

  இந்த இரண்டு படமுமே ஓடலை! அந்த கடுப்புல தான் இப்படி கொந்தளிச்சாட்டாரோ! ஹி ஹி ஹி

  ======================================================================

  // நட்புடன் ஜமால் said…

  சில நட்புகள் வெளியே தெரிவதில்லை தேவையுமில்லை//

  உண்மை தான் ஜமால்.. ஆனால் ஏதாவது சும்மாவே கிளப்பிட்டு இருக்காங்களே!

  ======================================================================

  // வானம்பாடிகள் said…

  ஐந்தாவது வருட துவக்கத்துக்கு பாராட்டுகள் கிரி:)//

  நன்றி

  ======================================================================

  // payapulla said…

  இந்த முறை கொஞ்சம் டெர்ரரா மாறி இருக்கீங்க 🙁 -//

  நானும் எவ்வளவு நாள் தான் நல்லவன் மாதிரியே நடிக்கிறது :-))))

  ======================================================================

  ராஜ் வாங்க எப்படி இருக்கீங்க! புது வேலை எப்படி இருக்கு!

  அப்புறம் நீங்க ரஜினி மன்னிப்பு பற்றி கேட்டு இருந்தீர்கள் அதற்க்கு ஒரு பதிவில் பதில் கூறுகிறேன். ரஜினி போன்றவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் அனுபவிப்பவர்களுக்கே புரியும்.. அவரவர் கஷ்டம் அவரவருக்கு.

  ======================================================================

  // அண்ணாமலையான் said…

  நல்லா சுவாரஸ்யாமா இருக்கு.//

  நன்றி அண்ணாமலையான்

  ======================================================================

  // shankar said…

  தவறு கிரி ,தனக்கு விடுக்க பட்ட மிரட்டலை பகிரங்கமாக வெளிபடுத்தினார் ,அது பெப்சி விழா அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறேன் அது கருணாநிதியின் பாராட்டு விழா..//

  🙂 பெப்சி தொழிலாளர்களுக்கு இடம் கொடுத்ததற்கு கலைஞருக்கு பாராட்டு விழா! இது தான் பிரச்சனை!

  //நன்றியெல்லாம் தேவையில்லை ,வாரத்திற்கு ஒரு 8 பதிவாது போடுமாறு கேட்டுகொள்கிறேன் ..//

  இதெல்லாம் நடக்கிற காரியமா! நான் இன்னும் குறைத்து கொள்ளலாம் என்று இருக்கிறேன். எழுத நிறைய விஷயம் இருக்கு ஆனால் அளவோடு நிறுத்திக்க விரும்பறேன்.

  ======================================================================

  ஒரிஜினல் "மனிதன்" தலயோட டெர்ரர் ரசிகரா இருப்பீங்க போல இருக்கே 🙂

 • அண்ணாமலையான் March 1, 2010, 6:24 PM

  நல்லா சுவாரஸ்யாமா இருக்கு…

 • பேசாப்பொருளை பேசத்துணிந்த தலயே உனக்கு ஏது விலையே.

  அத்தனை பேடிப்பயல்கள் வாழ்த்தியபோதும் தனித்து நீ நின்றாய்
  காலத்தை வென்றாய்.

  உன்னை மறைக்க ஒத்தூதியது ஒரு மாயக்கரம்
  அதையும் மீறி தனித்து தெரிந்தது
  நீ பெற்ற சாகாவரம்.

  காத்திருக்கு உனக்கு சி.எம்.நாற்காலி
  தடுப்பது எந்த கோமாளி
  தல இல்லாமல் எவனும் இல்ல
  தல நீ தனியாள் இல்ல.

  தமிழ்நாடே தல க்கு முன்பக்கம் மற்றும் பின்பக்கமாக திரண்டிருப்பதை சம்பந்தப்பட்ட தறுதலைகள் உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை.

  • லோகநாதன். ஏ January 31, 2016, 3:49 AM

   நண்பா உமக்கு எனது வணக்கம். தயவுசெய்து உனது உல்லுனர்வை இந்த அளவுக்கு பொது தகவல்நிலையத்தில் கூறி நம் தலயோட மரியாதையை கெடுக்க வேண்டாம் என்று தங்களை பனிவுடன் கேட்டுக்கொள்கிறேன் நண்பா.

 • Manoj March 1, 2010, 8:03 PM

  giri,

  guganathan mela yen ungalukku evlo kolaveri!!!

  Regards

 • Arun March 2, 2010, 7:17 AM

  romba nalla iruku giri pathivu…. Guganathan/Thangar matter kalakkal….

 • ராமலக்ஷ்மி March 2, 2010, 9:29 AM

  //இந்த முறை பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை.//

  இந்த வரி படம் உங்களது இல்லை என முன்னமே உணர்த்தி விட்டிருந்தது. தேடிப் பிடித்து பகிர்ந்தமைக்கு நன்றி. சரிதானா:)?

 • கோவி.கண்ணன் March 2, 2010, 9:49 AM

  நாலு அண்டு ஆச்சா ?

  போனதே தெரியல.

  வாழ்த்துகள் மிஸ்டர் கிரி.

 • புதுவை தமிழன் March 2, 2010, 10:10 AM

  நம் நாட்டில் நடிகர்களை ஒரு வியாபார பொருளாக பார்கிறார்கள் இப்படி இருக்க திரு.அஜித் அவர்கள் நடிப்பு என்பது எங்கள் தொழில் மற்றபடி நாங்களும் சராசரி மனிதன் என்றும் சொன்னால் யார் ஒப்பு கொள்ளுவார்கள். இது ஒரு புறம் இருக்க திரு.அஜித்தை பந்தாடிய பெருமை மாண்பிகு தமிழ் மன்னன் திரு.கருணாநிதி அவர்களுக்கும் உண்டு என்பதே மறுக்க பட முடியாத உண்மை. அவரை சந்திக்க கோபாலபுரம் சென்ற திரு. அஜித் அவர்களை பாதுகாப்பு கரணம் என்று கூறி சாராசரியாக ௬௦௦ மீட்டர் தூரம் நடக்க வைத்தனர். அவர் திரு.கருணாநிதியை சந்தித்த வெளிய வந்த அடுத்த நொடியே திரு. கருணாநிதியின் வீட்டு வாசலில் காத்து இருந்தது திரு.அஜித்தின் வாகனம். அடுத்த சில நொடிகளில் பாசதளைவனக்கு பாராட்டு விழா என்ற ஒரு விளம்பர ஒளிபரப்பில் திரு.அஜித் அவர்களின் புகைப்படம் காட்ட பட்டது….
  ( திரு.அஜித் அவர்கள் கோபாலபுரம் செல்வதற்கு ௨ மணி நேரம் முன்பு திரு.ரஜினி அவர்கள் சந்திக்க சென்றார் அப்போது எந்த பாதுகாப்பு
  காரணமும் திரு.ரஜினி அவர்களின் வாகனத்தை தடுத்து நிறுத்தி நடக்க வைக்கவில்லை )

  இது திரு. குகநாதன் மட்டும் வஞ்சித்த விஷயம் இல்லை ஒரு சில நல்லவர்கள் இந்த விஷயத்தில் பங்கு உண்டு..

  எனது பதிவில் தவறு இருந்தால் மன்னியுங்கள்.

  நன்றி திரு.கிரி ஐயா…..

 • புதுவை தமிழன் March 2, 2010, 10:10 AM

  நம் நாட்டில் நடிகர்களை ஒரு வியாபார பொருளாக பார்கிறார்கள் இப்படி இருக்க திரு.அஜித் அவர்கள் நடிப்பு என்பது எங்கள் தொழில் மற்றபடி நாங்களும் சராசரி மனிதன் என்றும் சொன்னால் யார் ஒப்பு கொள்ளுவார்கள். இது ஒரு புறம் இருக்க திரு.அஜித்தை பந்தாடிய பெருமை மாண்பிகு தமிழ் மன்னன் திரு.கருணாநிதி அவர்களுக்கும் உண்டு என்பதே மறுக்க பட முடியாத உண்மை. அவரை சந்திக்க கோபாலபுரம் சென்ற திரு. அஜித் அவர்களை பாதுகாப்பு கரணம் என்று கூறி சாராசரியாக ௬௦௦ மீட்டர் தூரம் நடக்க வைத்தனர். அவர் திரு.கருணாநிதியை சந்தித்த வெளிய வந்த அடுத்த நொடியே திரு. கருணாநிதியின் வீட்டு வாசலில் காத்து இருந்தது திரு.அஜித்தின் வாகனம். அடுத்த சில நொடிகளில் பாசதளைவனக்கு பாராட்டு விழா என்ற ஒரு விளம்பர ஒளிபரப்பில் திரு.அஜித் அவர்களின் புகைப்படம் காட்ட பட்டது….
  ( திரு.அஜித் அவர்கள் கோபாலபுரம் செல்வதற்கு ௨ மணி நேரம் முன்பு திரு.ரஜினி அவர்கள் சந்திக்க சென்றார் அப்போது எந்த பாதுகாப்பு
  காரணமும் திரு.ரஜினி அவர்களின் வாகனத்தை தடுத்து நிறுத்தி நடக்க வைக்கவில்லை )

  இது திரு. குகநாதன் மட்டும் வஞ்சித்த விஷயம் இல்லை ஒரு சில நல்லவர்கள் இந்த விஷயத்தில் பங்கு உண்டு..

  எனது பதிவில் தவறு இருந்தால் மன்னியுங்கள்.

  நன்றி திரு.கிரி ஐயா…..

 • r.v.saravanan kudandhai March 2, 2010, 11:00 AM

  ஒரு மாசம் கழிச்சு பதிவு எழுதுறப்ப ஒரு மாச நியூஸ் முழுக்க கதம்ப
  சாதம் போல் கொடுத்துடீங்க
  கொஞ்ச நாள் கழிச்சு நண்பனை சந்திச்ச சந்தோசம் இந்த பதிவை
  படிக்கும் போது கிடைக்கிறது
  நன்றி கிரி

 • Sadhasivam March 2, 2010, 10:24 AM

  ஒரு மாசம் வராட்டியும் சேர்த்து அடிச்சுடிங்க நம்ம சச்சின் மாதிரி…

  பகிர்ந்த தகவல்கள் அனைத்தும் நன்று…

  விடுமுறைக்கு ஊருக்கு சென்று இருப்பீர்கள் என நினைத்து கொண்டேன்..

  பொங்கல், தீபாவளி சமயம் வீட்டுக்கு காசு கேட்டு வரும் கூர்க்கா போல ஆகி விட்டேன் (எப்படி நம்ம ஆளுக வீட்டை பூட்டிட்டு கிளம்பிடுவன்களோ அது மாதிரி போன மாசம் ஆகி போச்சு)

  தேர்வு நன்றாக எழுதி இருப்பிர்கள், வாழ்த்துக்கள்

 • கிரி March 2, 2010, 6:15 PM

  // Manoj said…
  giri,

  guganathan mela yen ungalukku evlo kolaveri!!!//

  :-))) டங்குவாரை விட்டுட்டீங்களே!

  ==========================================================================

  // Arun said…

  romba nalla iruku giri pathivu…. Guganathan/Thangar matter kalakkal….//

  இப்போ திருப்தியா! 🙂

  ==========================================================================

  // ராமலக்ஷ்மி said…

  இந்த வரி படம் உங்களது இல்லை என முன்னமே உணர்த்தி விட்டிருந்தது. தேடிப் பிடித்து பகிர்ந்தமைக்கு நன்றி. சரிதானா:)?//

  ஓகே டன் 🙂

  ==========================================================================

  // கோவி.கண்ணன் said…

  நாலு அண்டு ஆச்சா ?

  போனதே தெரியல.

  வாழ்த்துகள் மிஸ்டர் கிரி//

  நன்றி கோவி கண்ணன்

  ==========================================================================

  // புதுவை தமிழன் said…

  திரு.அஜித் அவர்கள் கோபாலபுரம் செல்வதற்கு ௨ மணி நேரம் முன்பு திரு.ரஜினி அவர்கள் சந்திக்க சென்றார் அப்போது எந்த பாதுகாப்பு
  காரணமும் திரு.ரஜினி அவர்களின் வாகனத்தை தடுத்து நிறுத்தி நடக்க வைக்கவில்லை //

  காரணம் ரொம்ப எளிது! ரஜினி தேவை அஜித் அவர்களுக்கு தேவையில்லை.

  //இது திரு. குகநாதன் மட்டும் வஞ்சித்த விஷயம் இல்லை ஒரு சில நல்லவர்கள் இந்த விஷயத்தில் பங்கு உண்டு.//

  அதெல்லாம் நிறைய பேரு இருக்காங்க

  //எனது பதிவில் தவறு இருந்தால் மன்னியுங்கள்//

  என்னங்க வெங்கட் நான் என்ன பாதிரியாரா மன்னிக்க..:-))) இதெல்லாம் நெம்ப ஓவர்!

  //நன்றி திரு.கிரி ஐயா//

  இதுக்கு அதே பரவாயில்லை போல இருக்கே! :-))

  ==========================================================================

  // Sadhasivam said…

  பகிர்ந்த தகவல்கள் அனைத்தும் நன்று…//

  நன்றி சதா

  //தேர்வு நன்றாக எழுதி இருப்பிர்கள், //

  பாஸ் பாஸ் 🙂

  விண்ணைத்தாண்டி வருவாயா! பார்த்தாச்சா?

  ==========================================================================

  // r.v.saravanan said…
  ஒரு மாசம் கழிச்சு பதிவு எழுதுறப்ப ஒரு மாச நியூஸ் முழுக்க கதம்ப
  சாதம் போல் கொடுத்துடீங்க
  கொஞ்ச நாள் கழிச்சு நண்பனை சந்திச்ச சந்தோசம் இந்த பதிவை
  படிக்கும் போது கிடைக்கிறது //

  சரவணன் உங்கள் அன்பிற்கு ரொம்ப நன்றி

 • காத்தவராயன் March 2, 2010, 11:26 PM

  //குகநாதன் என்ற ஒருத்தரையே இவர் ரஜினியையும் அஜித்தையும் விமர்சித்த பிறகு தான் பல பேருக்கும் தெரியும்//

  //இந்த இரண்டு படமுமே ஓடலை! அந்த கடுப்புல தான் இப்படி கொந்தளிச்சாட்டாரோ! ஹி ஹி ஹி //

  தனிக்காட்டுராஜான்னு ஒரு பெரிய ஹிட் படமும் குகநாதனிடம் இருந்துதான் வந்தது.

  அந்த காலத்துல பி&சி சென்டரை கல‌க்குன படம் (எங்க ஊரு டெண்ட் கொட்டாயில மணல குமிச்சி வச்சி அதுல உக்காந்து பாத்தபடம்), ரஜினிக்கு செமபில்டப் கொடுத்து இருப்பாரு, குகநாதன் மேல இருந்த மதிப்பெல்லாம் ஒரே நாளில் போச்சு

  குகநாதன், தங்கம் உட்பட‌ நிறையபேரு நிலத்தை அமுக்கலாமுன்னு திட்டம் போட்டு இருப்பாங்க அதுல ரஜினி மண்ணை அள்ளி போட்டதால வந்த‌ கோபமாயிருக்கும்.

 • கிரி March 8, 2010, 12:35 AM

  // காத்தவராயன் said…
  குகநாதன், தங்கம் உட்பட‌ நிறையபேரு நிலத்தை அமுக்கலாமுன்னு திட்டம் போட்டு இருப்பாங்க அதுல ரஜினி மண்ணை அள்ளி போட்டதால வந்த‌ கோபமாயிருக்கும்.//

  இப்படித்தான் நானும் கேள்விப்பட்டேன், உண்மையா என்று தெரியவில்லை.

 • goma March 12, 2010, 5:47 PM

  கோ படத்தில் ஸ்வஸ்திக் சைனா ஸ்வஸ்திக் நாம் சதுரமாய் வரைவதை அவர்கள் வட்டமாய் வரைவார்கள் போலும்…..

 • keerthivasan June 17, 2011, 5:45 PM

  கிரி அவர்களே தயவு செய்து ரஜினியின் நடிப்பு திறமை பற்றியும் கமல் உடைய நடிப்பின் குறைகளையும் நேர்மையான முறையில் எழுதுங்கள் இது ஒன்றும் கமல் ரசிகர்களை புண் படுத்தாது

Leave a Comment