ஆவலுடன் நான் எதிர்பார்க்கும் தமிழ் திரைப்படங்கள்

by கிரி on January 12, 2010

ந்திரனுக்கு பிறகு நான் அதிகம் எதிர்பார்க்கும் படமாக இருப்பது செல்வராகவன் இயக்கத்தில் வெளிவர! இருக்கும் ஆயிரத்தில் ஒருவன், பல சர்ச்சைகளை கடந்து திரும்ப ஒரு சர்ச்சையில் மாட்டி இப்பவாவது வருமா வராதா! என்று கண்ணாம்பூச்சி விளையாடிக்கொண்டு இருக்கிறது. செல்வராகவன் செய்த ரணகளத்தில் தயாரிப்பாளர் இந்நேரம் எண்ணையில போட்ட பஜ்ஜி கணக்கா பொரிஞ்சு போய் இருப்பாருன்னு நினைக்கிறேன்.
13 கோடி பட்ஜெட் முடிவு செய்து ஆரம்பிக்கப்பட்ட படம் ..சரி! அப்படி இப்படி அதிகமானால் எவ்வளோ அதிகம் ஆகி இருக்கும்? 15 கோடி 18 கோடி அட! 20 கோடி … எச்சுமி ஜென்ட்டில் மேன் மற்றும் வுமன் அதிகமில்லை 32 கோடியில கொண்டு வந்து ஒருவழியா நிறுத்தி இருக்காரு! இப்ப சொல்லுங்க தயாரிப்பாளருக்கு டென்ஷன் வருமா வராதா! அவருக்கு டென்ஷன் வருதோ இல்லையோ! பல பிரச்சனைகளால் படம் வர மாதிரி தெரியல.
படம் தொடங்கும் போது செல்வராகவனுக்கும் அவரின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா விற்கும் சண்டை வந்து யுவன் விலகி கொள்ள அவருக்கு பதிலாக G.V.பிரகாஷை நியமித்தார், அவரும் சிறப்பாகவே இசையமைத்துள்ளார், செல்வராகவன்னா சும்மாவா! படம் இப்ப வரும் அப்ப வரும் என்று நானும் என்னோட iPod Touch ல் படம் எடுத்த செல்வராகவனையும் இசையமைத்த G.V.பிரகாஷையும் விட அதிக முறை பாடல்களை கேட்டு விட்டேன் icon smile ஆவலுடன் நான் எதிர்பார்க்கும் தமிழ் திரைப்படங்கள் எல்லாம் மனப்பாடமே ஆகி விட்டது.

ட்ரைலர் அசத்தலாக உள்ளது, ஆனால் இது B மற்றும் C சென்டரில் நல்லா போகுமா! என்பது சந்தேகமா உள்ளது. படம் விற்பனை டிவி ரைட்ஸ் நல்ல விலைக்கு போய் உள்ளதாக செய்திகளில் வந்தது. யப்பா! படத்தை வெளியிடுங்கப்பா! ரொம்ப நொந்து போய் இருக்கிறேன் பட தயாரிப்பாளரை விட.

கோவா படம் சூப்பர் ஸ்டார் பொண்ணு சவுந்தர்யா தயாரிப்பில் ஒருவழியாக ஜனவரி 29 வெளிவருகிறது (வருமா!). இந்தப்படமும் சண்டை மிரட்டல் என்று சர்ச்சையில் சிக்கி இப்போது தான் மீண்டுள்ளது, தனுஷ் செல்வராகவன் கேட்டுக்கொண்டதற்க்காக பொங்கலுக்கு வெளியிடாமல் தள்ளி வெளியிடுகிறார்கள்..உண்மையா பொய்யா தெரியவில்லை!
Goa ஆவலுடன் நான் எதிர்பார்க்கும் தமிழ் திரைப்படங்கள்

வெங்கட்பிரபு சென்னை 600028 சரோஜா என்ற இரு வெற்றி படத்திற்கு பிறகு ஹேட்ரிக் அடிக்க காத்து இருக்கும் படம் கோவா, வழக்கம் போல இதில் இளமை துள்ளல் தெரிகிறது ட்ரைலரில்.. படத்தில் இருக்குமா! ஸ்நேகா டு பீஸில் நடிப்பதாக வேறு கூறி இருக்கிறார்கள்… ஹி ஹி ஹி ரைட்டு.

இதில் பாடல்கள் முதலில் கேட்க கோவா என்ற பாடல் மட்டும் நன்றாக இருந்தது தற்போது அதனுடன் ஏழேழு தலைமுறைக்கும், அடிடா! நையாண்டிய! (செம கிராமத்து குத்து) பாடல்களும் சேர்ந்து விட்டது..மூன்றும் கலக்கலா இருக்கு! முதல் பாடல் வழக்கமான யுவன் பீட், அடுத்த இரு பாடல்கள் கிராமத்து அசத்தல். இந்த இருபாடல்களை கேட்டால் யுவன்ஷங்கர் ராஜா இசை போலவே தெரியவில்லை. இளையராஜா அதிகம் உதவி செய்துள்ளார் என்றே நினைக்கிறேன், இந்தப்பாடல்கள் நம்மை அப்படியே 20 வருடம் பின்னோக்கி இளையராஜா ராஜாங்க காலத்திற்கு அழைத்து செல்கிறது…ரொம்ப ரசித்தேன்! வாலிபா வா வா இளையராஜா SPB பாடியுள்ளார்கள் இதுவும் ஹிட் ஆகும்.
சவுந்தர்யாவிற்கு திருமணம் முடிவாகியுள்ளது, படமும் திருமண வாழ்க்கையும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
என்னோட அடுத்த விருப்ப இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வரும் விண்ணைத்தாண்டி வருவாயா படம். கவுதம் மேனனும் அவரின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் சண்டை போட்டுக்கொண்ட பிறகு ஆஸ்கார் நாயகன் A.R.ரகுமான் இசையமைப்பில் வெளிவரும் படம், A.R.ரகுமான் ஆஸ்கார் நாயகனாக இசையமைத்து வெளி வரும் முதல் படம், விளம்பரங்களில் இதுவே முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. பாடல்களை இரண்டு நாளாகத்தான் கேட்கிறேன், ரொம்ப ஈர்க்கவில்லை ஹலோ மற்றும் கண்ணுக்குள் கண்ணை பாடல்களை தவிர, வழக்கம் போல கேட்டா பிடிக்காது கேட்க கேட்கத்தான் பிடிக்குமோ!
வாரணம் ஆயிரம் படத்தில் அனைத்து பாடல்களும் இனிமையோ இனிமை, இன்று வரை கேட்டுக்கொண்டு இருக்கிறேன் அலுப்பில்லாமல், ஹாரிஸ் கவுதமிடம் உன் சங்காத்தமே வேண்டாம்யா! என்று பெரிய கும்பிடு போட்டு விட்டார்.. பார்ப்போம் ரகுமான் என்ன செய்கிறார் என்று. இதில் சிம்பு வம்பு பண்ணாம வாலை சுருட்டி வைத்து நடித்து இருப்பதாக கேள்வி. அவரது பள்ளித்தோழி த்ரிஷா வேறு நாயகி, அலை படத்திலேயே “விளையாடி” இருப்பார், இதில் என்ன செய்து இருக்கிறாரோ!
VTV ஆவலுடன் நான் எதிர்பார்க்கும் தமிழ் திரைப்படங்கள்

கவுதம் மேனனை பலருக்கு பிடிக்காது ஆனால் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும், அவரது Derailed என்ற படத்தில் இருந்து சுட்ட பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தை தவிர. இவருக்கு இசையில் நல்ல ஆர்வம் என்று நினைக்கிறேன், பொதுவா இவரது படத்தில் அனைத்து பாடல்களும் அருமையாக இருக்கும். பெரும்பாலும் வெளிநாட்டிலேயே படமாக்கப்பட்ட படம் குறிப்பா அவரோட விருப்ப நாடான அமெரிக்காவிலும், அப்படி என்ன தான் அங்கே கண்டாரோ!

அடுத்து ராவண் நம்ம மணிரத்னம் படம், இந்தப்படமும் பல சிக்கல்களில் சிக்கி தவிக்கிறது. கேரளா காட்டில் படம் எடுக்க அனுமதி மறுப்பு, இடையில் மணிரத்னம் நெஞ்சுவலி, தயாரிப்பாளர் சண்டை என்று நீண்டு கொண்டே செல்கிறது. எப்போது வரும் என்று தெரியவில்லை. இதில் நம்ம விக்ரம், ப்ரியாமணி மற்றும் ஐஸ் நடித்துள்ளார்கள்.
அங்காடித்தெரு படம் வசந்தபாலன் இயக்கத்தில் முடிந்து பல காலமாக வெளிவராமல் உள்ளது, வெய்யில் என்ற சிறப்பான படத்திற்கு பிறகு வரும் படம் இவரது இயக்கத்தில். படம் வெளிவந்த பிறகு தான் அடுத்த படத்தை இயக்குவேன் என்று தீவிர முடிவில் உறுதியாக இருக்கிறார். ட்ரைலரும் கவரும் வகையில் உள்ளது, சரவணா ஸ்டோர்ஸ் போன்ற இடத்தில் நடைபெறும் கதையாக உள்ளது. வெய்யில் படம் ஏற்படுத்தி தந்த நம்பிக்கையில் ஆர்வமாக இருக்கிறேன்.
நந்தலாலா இயக்குனர் மிஸ்கின் நடித்து இயக்கி பெட்டிக்குள் தூங்கிக்கொண்டு இருக்கிறது, தயாரிப்பாளர்கள் அனுமதி கொடுக்காமல் இருப்பதால் எப்போது வரும் என்று மண்டை காய்ந்து போய் இருக்கிறார். இந்தப்படத்தை சிறப்பு காட்சியில் பார்த்து எழுத்தாளர் சாரு மாய்ந்து மாய்ந்து பாராட்டி இருந்தார், இளையராஜாவையும் ஒருவழியாக இந்த படத்தில் பாராட்டி! விட்டார். திறமையான இவரின் படமும் எப்போது வரும் என்று ஆவலாக உள்ளது.
IKMS ஆவலுடன் நான் எதிர்பார்க்கும் தமிழ் திரைப்படங்கள்

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் சிம்பு தேவன் இயக்கத்தில் லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க வரப்போகிறது. படம் கௌபாய் கதையாக அதே வடிவமைப்பில் பல வருடங்களுக்கு பிறகு வருகிறது, கடைசியாக ரஜினி நடித்த தாய் மீது சத்யம் பார்த்ததாக நினைவு. கௌபாய் இதை தமிழ் “படுத்தினால்” மாட்டுக்காரன் என்று வருகிறது, ராமராஜன் கோபித்துக்கொள்ள மாட்டாரா! icon smile ஆவலுடன் நான் எதிர்பார்க்கும் தமிழ் திரைப்படங்கள் வித்யாசமான தைரியமான முயற்சி. மக்கள் ஆதரவு கொடுப்பார்களா! நான் இம்சை அரசன் 23 ம் புலிகேசி படம் வந்த போது இந்த படம் எல்லாம் எங்கே ஓடப்போகிறது என்று நினைத்தேன். என் நினைப்பில் மண்ணை அள்ளிப்போட்டு விட்டு சிறப்பாக ஓடியது. இந்தப்படம் வெற்றியடையுமா! சிம்பு தேவனை போல நானும் ஆர்வமாக இருக்கிறேன்.

போர்க்களம் படமும் சிறு எதிர்பார்ப்பில் உள்ளது. இந்தப்படத்தின் இயக்குனர் இதன் கதையை பெரிய கதாநாயகர்களிடம் எல்லாம் கூற அவர்கள் எல்லாம்.. நீங்க அதில் இப்படி ஒரு பாட்டு அப்படி ஒரு சண்டை இப்படி ஒரு கிளுகிளுப்பு அந்த காட்சியை இப்படி மாற்றி வைங்க என்று ஏகத்துக்கும் கதையையே மாற்ற கடுப்பான இயக்குனர்.. போங்கடா! வெண்ணை வெட்டிகளா! (ஹி ஹி இது நம்ம சேர்ப்பு) என் கதை மேல எனக்கு நம்பிக்கை உண்டு.. யாருக்காகவும் எதையும் மாற்ற மாட்டேன் என்று பொல்லாதவன் பட வில்லன் கிஷோரை வைத்து எடுத்து இருக்கிறார், யுவன் இந்த படக்கதையை கேட்டு ஆர்வமாகி சிறப்பாக இசையமைத்து கொடுத்துள்ளாராம். பார்க்கலாம் எந்த அளவிற்கு இவர் நம்பிக்கையில் வெற்றி பெறுகிறார் என்று.
Angaaditheru ஆவலுடன் நான் எதிர்பார்க்கும் தமிழ் திரைப்படங்கள்

இவையில்லாமல் நாணயம் படமும் கடைசியாக பட்டியலில் உள்ளது, இதில் பிரசன்னா கதாநாயகன் சிபிராஜ் வில்லனாக நடித்துள்ளார். வங்கி கொள்ளை கதை என்று கூறப்படுகிறது..பார்ப்போம் நம்ம பாக்கெட்டில் கை வைக்காமல் இருந்தால் சரி! அப்புறம் அஜித் அசல் எதிர்பார்ப்பில் இல்லை, அவர் ஏன் கதை தேர்வில் சொதப்புகிறார் என்று தெரியவில்லை, இந்தப்படம் வெற்றி பெற்றால் சந்தோசம் அது கூட அஜித்திற்க்காக மட்டுமே!

கடைசியா படமே இன்னும் துவங்காத! பெயரும் வைக்காத!! என்னோட விருப்ப இயக்குனர் பாலாவின் விரைவில் ஆரம்பிக்க போகும் படத்திற்காக தாறுமாறா காத்திருக்கிறேன் .. கொஞ்சம் ஓவரா இருக்கோ! icon wink ஆவலுடன் நான் எதிர்பார்க்கும் தமிழ் திரைப்படங்கள்
ஹலோ! எந்திரன் படத்தை எல்லாம் தேடாதீங்க… தலைவர் படமெல்லாம் தனி இடுகையாகத்தான் வரும் icon smile ஆவலுடன் நான் எதிர்பார்க்கும் தமிழ் திரைப்படங்கள்

No related posts.

{ 33 comments… read them below or add one }

நட்புடன் ஜமால் January 12, 2010 at 8:34 AM

எப்படி கிரி எப்படி

இவ்வளவு தகவல்கள் …

ஒரு திரைத்துளி நிகழ்ச்சி பார்த்த திருப்தி

:)

Reply

நட்புடன் ஜமால் January 12, 2010 at 8:35 AM

கடைசியா படமே இன்னும் துவங்காத! பெயரும் வைக்காத!! ]

ஹா ஹா ஹா

சரி சரி …

Reply

ஹாலிவுட் பாலா January 12, 2010 at 8:56 AM

சுறா இல்லாத இந்த பட்டியலை.. இந்த கோர்ட் நிராகரிக்கிறது.

ஆர்டர்..ஆர்டர்!

Reply

முகிலன் January 12, 2010 at 9:11 AM

//ஹாலிவுட் பாலா said…
சுறா இல்லாத இந்த பட்டியலை.. இந்த கோர்ட் நிராகரிக்கிறது.

ஆர்டர்..ஆர்டர்!
//

repeatu..

கவுதமைப் பிடிக்காத ஆட்களில் நானும் ஒருவன்.

நான் எதிர்பார்க்கும் இன்னொரு படம் சசிக்குமாரின் – பெயர் தெரியவில்லை – படம்.

Reply

Arun January 12, 2010 at 9:41 AM

nalla pathivu girriii valaka padi…

"எந்திரன் படத்தை எல்லாம் தேடாதீங்க… தலைவர் படமெல்லாம் தனி இடுகையாகத்தான் வரும் :-) " – Appadina seriiiii

Reply

கலையரசன் January 12, 2010 at 11:10 AM

ஆயிரத்தில் ஒருவன், அங்காடித்தெரு, நந்தலாலா இந்த மூன்றும்தான் உங்க ஃபேவரேட்ல உருவுன என்னுடைய ஃபேவரேட் படங்கள் தலைவா!!

Reply

ரோஸ்விக் January 12, 2010 at 5:25 PM

ங்கொக்கா மக்கா…. எப்புடியா சினிமாவை பத்தி இவ்வளவு தகவல்களை வச்சிருக்கீங்க. நீங்க கோடம்பாக்கத்தையே பாக்கெட்டுல வச்சிருப்பீங்கபோலையே. கலக்குங்க கிரியாரே. :-)

நீங்கள் குறிப்பிட்டதில் சில படங்களுக்காக நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். எனக்கும் சேர்த்து டிக்கெட் புக் செய்துவிடவும். :-) )

Reply

அன்புடன்-மணிகண்டன் January 12, 2010 at 6:04 PM

தல.. போர்க்களம் யுவன் இல்ல.. ரோஹித் குல்கர்னி'ன்னு ஒரு புது பாலிவுட் மியூசிக் டைரக்டர்.. :)

Reply

V.Radhakrishnan January 12, 2010 at 6:19 PM

படங்களின் பெயர்களை குறித்துக் கொண்டேன். இப்பொழுதெல்லாம் எந்த படம் பார்ப்பது எனத் தெரியாமல் எல்லா படங்களையும் வாங்கி பார்த்துவிடுகிறேன். பார்க்கும்போதே அலுப்பும், சலிப்பும் ஏற்பட்டாலும் விடாமல் பார்த்துவிடுகிறேன்.

ஆயிரத்தில் ஒருவன் படத்துக்காக நானும் காத்துக் கொண்டிருக்கிறேன்.

Reply

RADAAN January 12, 2010 at 7:08 PM

பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்…
எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்…
http://www.radaan.tv

http://radaan.tv/Creative/DisplayCreativeCorner.aspx

Reply

’டொன்’ லீ January 12, 2010 at 7:47 PM

வாவ்…எந்திரன், ராவண்(பெயர் உறுதியா..?) இரண்டும் இந்த வருடம் வெளியாகுமா தெரியவில்லை…post production பணிகள் அதிகம் இருக்கும்..

ஆயிரத்தில் ஒருவன் எதிர்பார்ப்பை கூட்டுகின்றது…பொங்கலுக்கு வருமா தெரியவில்லை

விண்ணை தாண்டி வருவாயா பாடல்கள் நிச்சயம் ஹிட்தான்..ரகுமான் ரசிகனான படியால் எனக்கு உடனே பாடல்கள் எல்லாம் பிடித்துவிட்டனவோ தெரியவில்லை…ஹோசனா, அன்பின் அவன் 2 பாடல்களும் இளமைத்துள்ளல்…:-)))

Reply

சிங்கக்குட்டி January 12, 2010 at 8:08 PM

நல்ல படங்கள்தான் இதுவரை வந்த விளம்பரத்தின் படி!.

படம் வரட்டும் எது எப்படி என்று பார்ப்போம் :-)

இதில் கோவாவை நான் நம்பவில்லை.

அந்த கோஷ்டி "தில் சத்தா கே" (Dil Chahta Hai) படத்தை பகுதி பகுதியாக சரோஜா, கோவா என்று எடுக்கிறார்கள் என்று நினைக்கிறேன் :-)

Reply

குறை ஒன்றும் இல்லை !!! January 12, 2010 at 8:50 PM

என்னண்ணே பிலிம் நியூஸ் ஆனந்தன் மாதிறி கலக்கான தொகுப்பா இருக்கு !!!

Reply

எப்பூடி ... January 12, 2010 at 11:48 PM

நீங்கள் பாலாவின் படத்தை எதிர்பார்ப்பது போன்றே நானும் எதிர்பார்க்கிறேன் , அதேபோல் சசிக்குமாரின் பெயரிடாத படத்தையும் எதிர்பார்க்கிறேன்.

Reply

R.Gopi January 13, 2010 at 9:17 AM

கிரி….

நீங்க இவ்ளோ சினிமா ப்ரியரா?? எனக்கு ஆச்சரியமா இருக்கு….. ஒரு படம் கூட விட மாட்டீங்க போல இருக்கு….

“எந்திரன்” படத்திற்கு தனி பதிவா… சரி…சரி… கலக்குங்க ”தல”…..

உங்களுக்கும், குடும்பத்தார் மற்றும் தோழமை அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்…. என் பொங்கல் சிறப்பு பதிவை படிக்க இங்கே வருகை தாருங்கள்….

பொங்கலோ பொங்கல் http://jokkiri.blogspot.com/2010/01/blog-post.html

Reply

புலவன் புலிகேசி January 13, 2010 at 11:37 AM

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

Reply

கிரி January 13, 2010 at 11:44 AM

//நட்புடன் ஜமால் said…
ஒரு திரைத்துளி நிகழ்ச்சி பார்த்த திருப்தி//

நன்றி ஜமால் :-)

======================================================================

// ஹாலிவுட் பாலா said…

சுறா இல்லாத இந்த பட்டியலை.. இந்த கோர்ட் நிராகரிக்கிறது.//

பாலா நீங்க எதுக்கு எதிர்பார்க்கறீங்கன்னு தெரியுது! :-)

======================================================================

// முகிலன் said…

கவுதமைப் பிடிக்காத ஆட்களில் நானும் ஒருவன். //

:-)

//நான் எதிர்பார்க்கும் இன்னொரு படம் சசிக்குமாரின் – பெயர் தெரியவில்லை – படம்.//

என் எதிர்பார்ப்பிலும் உள்ளது.

======================================================================

அருண் கலையரசன் நன்றி :-)

======================================================================

// ரோஸ்விக் said…

ங்கொக்கா மக்கா…. எப்புடியா சினிமாவை பத்தி இவ்வளவு தகவல்களை வச்சிருக்கீங்க. நீங்க கோடம்பாக்கத்தையே பாக்கெட்டுல வச்சிருப்பீங்கபோலையே. //

இது மட்டும் தான் சுவாராசியமா இருக்கு படிக்க, வேற உருப்படியா படிக்க எடுத்தா தூக்கம் தான் வருது ;-)

======================================================================

// அன்புடன்-மணிகண்டன் said…

தல.. போர்க்களம் யுவன் இல்ல.. ரோஹித் குல்கர்னி'ன்னு ஒரு புது பாலிவுட் மியூசிக் டைரக்டர்.. :) //

:-) மணிகண்டன் நீங்க கூறுவது சரி தான் மறுபடியும் சரி பார்த்தேன், நான் கூறியதும் உண்மை தான் அதன் பிறகு என்ன ஆகியது என்று தெரியவில்லை இசையமைப்பாளர் மாறி விட்டார், முன்பு யுவன் தான் இருந்தார். அப்டேட் சரி இல்ல ;-)

======================================================================

ராதாகிருஷ்ணன் ஆயிரத்தில் ஒருவன் இன்னும் இரண்டு நாள்ல "கதை" தெரிந்து விடும் :-)

======================================================================

ராடான் நன்றி

======================================================================

// ’டொன்’ லீ said…

வாவ்…எந்திரன், ராவண்(பெயர் உறுதியா..?) இரண்டும் இந்த வருடம் வெளியாகுமா தெரியவில்லை…post production பணிகள் அதிகம் இருக்கும்..//

ராவண் இன்னும் உறுதி ஆக வில்லை, எந்திரன் ஜூலை வெளியீடு இது ரஜினியே இரண்டு நாள் முன்பு கூறியது..

//விண்ணை தாண்டி வருவாயா பாட�

Reply

r.v.saravanan kudandhai January 13, 2010 at 3:48 PM

கடைசியா படமே இன்னும் துவங்காத! பெயரும் வைக்காத!! என்னோட விருப்ப இயக்குனர் பாலாவின் விரைவில் ஆரம்பிக்க போகும் படத்திற்காக தாறுமாறா காத்திருக்கிறேன்

ha…ha….

Reply

r.v.saravanan kudandhai January 13, 2010 at 4:01 PM

SIDDHU+2 pakyaraj padathai vitutengaley giri
i am wait in this movie

Reply

ஆ! இதழ்கள் January 13, 2010 at 4:13 PM

வழக்கம் போல கேட்டா பிடிக்காது கேட்க கேட்கத்தான் பிடிக்குமோ!//

ஆமாம் அள்ளுது..

Reply

Sadhasivam January 14, 2010 at 8:46 AM

ஜாலி ஜாலி நம்ம விருப்பமான தலைப்பு

ஒரு சின்ன புத்தகம் போல வுள்ளது கிரி

பகிர்ந்த தகவல்கள் அனைத்தும் up to date…

அனைத்தையும் விட ஆயிரத்தில் ஒருவன் படத்தை மிகவும் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன்

விடுங்க கிரி கௌதமை கூறினாலும் அவருடைய ரசனைகளை யாரும் குறை சொல்ல முடியாது…

விண்ணைத்தாண்டி வருவாயா பாடல்கள் நானும் ரெண்டு நாளாகதான் கேட்கிறேன்..பாடல்கள் கௌதமின் முந்தைய படங்களை போல ஈர்க்கவில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து…

ஆனால் visual லில் அதை சரி செய்துவிடுவார் என நம்புகிறேன்

Reply

கிரி January 15, 2010 at 2:03 PM

// SARAVANAN said…
SIDDHU+2 pakyaraj padathai vitutengaley giri//

சரவணன் எனக்கு இந்தப்படம் ஆர்வத்தை தூண்டவில்லை

======================================================================

// ஆ! இதழ்கள் said…

வழக்கம் போல கேட்டா பிடிக்காது கேட்க கேட்கத்தான் பிடிக்குமோ!//

ஆமாம் அள்ளுது..//

:-) இப்ப ஓகே

======================================================================

// Sadhasivam said…

ஜாலி ஜாலி நம்ம விருப்பமான தலைப்பு //

ஓ! நீங்களும் என்னைப்போல சினிமா ரசிகரா!

//பகிர்ந்த தகவல்கள் அனைத்தும் up to date…//

இல்லைங்க அதிலையும் போர்க்களம் இசையமைப்பாளரை தவறாக கூறிவிட்டேன், யுவனும் சண்டை போட்டுட்டாரோ என்னவோ!

//விடுங்க கிரி கௌதமை கூறினாலும் அவருடைய ரசனைகளை யாரும் குறை சொல்ல முடியாது//

அவரோட ரசனையை தான் குறை கூறுகிறார்கள் என்று நினைக்கிறேன்

ஆனால் அவர் படம் எடுக்கும் விதம் (ஸ்டைல்) பாடலுக்கு அவர் மெனக்கெடும் விதம், திரைக்கதை என்று அனைத்தையும் ரசிப்பேன்.. இவரது அனைத்து படங்களும் ரொம்ப பிடிக்கும் pachchaikkili muththuchcharam thavira

//விண்ணைத்தாண்டி வருவாயா பாடல்கள் நானும் ரெண்டு நாளாகதான் கேட்கிறேன்..பாடல்கள் கௌதமின் முந்தைய படங்களை போல ஈர்க்கவில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து..//

ஒரு வாரம் கேட்டால் ஓகே ஆகிடும்

//visual லில் அதை சரி செய்துவிடுவார் என நம்புகிறேன்//

கண்டிப்பா இதுல கலக்கி இருப்பாரு.. சென்ற வாரணம் ஆயிரம் படமெல்லாம் அசத்தல் ரகம், இன்றும் கூட சலிக்காமல் பார்ப்பேன் கேட்பேன்

Reply

Sadhasivam January 16, 2010 at 3:03 PM

ஆமாங்க கிரி, நமக்கு என்ன விஷயம் சந்தோசமா வெச்சுகுதோ அது ரொம்ப புடிக்கும் (ஆதலால் திரைப்படம் ரொம்ப பிடிக்கும்).

போர்க்களம் matter ah விடுங்க..காக்க காக்க ல வர்ற dialogue மாதிரி..
"மிஸ் ஆனா encounter பத்தி தான் department la பேசுவாங்கன்னு"

பெரும்பாலும் தன்னை பாதித்த விசயங்களை தான் படமாக ஏடுப்பார்கள்
நீங்களே சொல்லுங்கள் புதிதாக ஏதாவது சொல்லி விடமுடியுமா..

கௌதமின் ரசனைகள் என்று நான் கூற வந்தது songs, picturaization, screen play etc…

எனவே se7en, detrailed போன்றவட்ரின் பாதிப்போ தழுவலோ இருந்தால் அது பாவம் ஆகாது என்பது மறுபடியும் என் சொந்த கருத்து..

ஆயிரத்தில் ஒருவன் எதிர்பார்ப்புக்கு தகுந்த மாதிரி இல்லை என கேள்வி..(apted from some viewers and review from indiaglitz) ஆனால் தமிழில் இது மாதிரி திரைக்கதை உருவாக்கும் தைரியம் செல்வா விட்கு மட்டுமே உண்டு

சில ஆங்கில வார்த்தைகளை தவிர்க்க முடியவில்லை…

Reply

கிரி January 16, 2010 at 8:09 PM

// Sadhasivam said…
ஆமாங்க கிரி, நமக்கு என்ன விஷயம் சந்தோசமா வெச்சுகுதோ அது ரொம்ப புடிக்கும் (ஆதலால் திரைப்படம் ரொம்ப பிடிக்கும்). //

எனக்கும் கூட! :-)

//கௌதமின் ரசனைகள் என்று நான் கூற வந்தது songs, picturaization, screen play etc…//

உண்மை தான் ..ரொம்ப ரசிச்சு எடுக்கிறாரு! எனக்கும் ரொம்ப பிடிக்கும்

//எனவே se7en, detrailed போன்றவட்ரின் பாதிப்போ தழுவலோ இருந்தால் அது பாவம் ஆகாது என்பது மறுபடியும் என் சொந்த கருத்து..//

Se7ven எப்படின்னு தெரியலை ஆனா derailed அப்படியே அட்ட காப்பி பாதிப்போ தழுவலோ இல்லை.. ரைட்ஸ் வாங்காம எப்படித்தான் இப்படி சுடுறாங்களோ! இவர் மாதிரி பல பேர் கூச்சமே இல்லாம சுடுறாங்க. அடுத்தவங்க உழைப்பை திருடுவது பாவமில்லையா!

//ஆயிரத்தில் ஒருவன் எதிர்பார்ப்புக்கு தகுந்த மாதிரி இல்லை என கேள்வி.//

நீங்க கேள்விபட்டது உண்மை தான். நான் தற்போது தான் பார்த்து விட்டு வந்தேன். இடைவேளைக்கு பிறகு அனைவரையும் குழப்பி விட்டார், பல காட்சிகள் எப்படா முடியும் என்று இருந்தது(எனக்கு) . எனக்கு பெருத்த ஏமாற்றம். முதல் பாதி கலக்கலா இருக்கு அடுத்த பாதி எதிர்மாறா இருக்கு, பல லாஜிக் ஓட்டைகள். ரீமா சென் அசத்தி இருக்கிறார்,கார்த்தி அடுத்தது. விமர்சனம் எழுத விருப்பமில்லை :-(

//தமிழில் இது மாதிரி திரைக்கதை உருவாக்கும் தைரியம் செல்வா விட்கு மட்டுமே உண்டு //

இதில் பாலாவையும் இணைத்துக்கொள்ளலாம், அவரும் நான் கடவுள் படத்தில் அதை நிரூபித்து இருந்தார். நீங்கள் (நான்) கூறுவது ஆயிரத்தில் ஒருவனில் இல்லை, அதை நீங்கள் படம் பார்க்கும் போது உணருவீர்கள். ஒருவேளை தன் மீது ஓவர் கான்பிடன்ட் வைத்து விட்டாரோ தெரியவில்லை! நான் கூறுவது பொய்யில்லை.

//சில ஆங்கில வார்த்தைகளை தவிர்க்க முடியவில்லை..//

அதனால் என்னங்க! நான் கூடத்தான் ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறேன் ஆனால் தமிழில் ;-)

Reply

காத்தவராயன் January 18, 2010 at 2:52 AM

என்ன கிரி எப்பூடி இருக்கீங்க,

ரொம்ப நாளாச்சு (கமெண்ட் போட்டு ஆனா ரெகுலரா படிக்குறது உண்டு), சிங்கைல பொங்கல் எல்லாம் எப்படி?

என்னோட எதிர்பார்ப்பும் உங்களோட எதிர்பார்ப்பும் ஏறக்குறைய ஒரே மாதிரி இருக்கு…

ஆயிரத்தில் ஒருவன் சுமார்தான் (உன்மையிலே தயாரிப்பாளர் பாவம்)

கவுதம் படத்துல கொஞ்சம் கொஞசமா மலையாளத்தினிப்பு/வாடை அதிகமாகிக்கொண்டு வருவதை கவனித்தீர்களா……விண்ணைத்தாண்டி வருவாயா டைட்டில் டிசைனை நல்ல உத்துப்பாருங்க…உங்களுக்கே புரியும். எதிர்காலத்துல கவுதம் மலையாளதிரையுலகிற்கு சென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை……

தலைவர் படம் ஜீலையில் வராது எனத்தோன்றுகிறது, 2011 ஏப்ரலில் தான் வரும் என்பது என்னோட கணிப்பு(வியாபரத்திற்கு ஏப்ரல்தான் சரி).

Reply

Sadhasivam January 18, 2010 at 10:16 AM

திரு காத்தவராயன் அவர்கள் கூறியது போல
"கவுதம் படத்துல கொஞ்சம் கொஞசமா மலையாளத்தினிப்பு/வாடை அதிகமாகிக்கொண்டு வருவதை கவனித்தீர்களா" என்பது கொஞ்சம் வருத்தமான விஷயம் தான்

ஆனால் இங்கு வாங்கும் சம்பளம் மலையாள திரை உலகில் கிடைக்காது என்ற உண்மை கௌதமிட்கு நன்கு தெரியும்..

ஆயிரத்தில் ஒருவன் இட்கு நீங்கள் விமர்சனம் எழுத விருப்பம் இல்லை என சொல்வதிலயே செல்வா அனைவரயும் ஏமாற்றி விட்டார் என புரிகிறது

Reply

கிரி January 18, 2010 at 10:29 PM

//காத்தவராயன் said…
என்ன கிரி எப்பூடி இருக்கீங்க//

ரொம்ப நல்லா இருக்கேங்க! :-) நன்றி

//ரொம்ப நாளாச்சு (கமெண்ட் போட்டு ஆனா ரெகுலரா படிக்குறது உண்டு)//

அப்படியா! நன்றி

// சிங்கைல பொங்கல் எல்லாம் எப்படி?//

இங்கேயும் கொண்டாடுனாங்க நான் தான் போகலை :-(

//ஆயிரத்தில் ஒருவன் சுமார்தான் //

அதற்க்கு காரணம் இரண்டாம் பகுதி தான்..இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம், நன்றாக வந்து இருக்கும்.

//கவுதம் படத்துல கொஞ்சம் கொஞசமா மலையாளத்தினிப்பு/வாடை அதிகமாகிக்கொண்டு வருவதை கவனித்தீர்களா//

ஆமாம் :-) அவர் மலையாளி தானே!

//கவுதம் மலையாளதிரையுலகிற்கு சென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை//

போக மாட்டாரு காரணம் அங்கே இவ்வளோ தொழில்நுட்பம் இல்லை அவர் படத்திற்கு ஆதரவும் இல்லை.

//தலைவர் படம் ஜீலையில் வராது எனத்தோன்றுகிறது, 2011 ஏப்ரலில் தான் வரும் என்பது என்னோட கணிப்பு//

ஏப்ரல் ல் வராது காரணம் Twenty-20 அந்த சமயத்தில் வரும், வசூல் பாதிக்கும்.

======================================================================

//Sadhasivam said…
ஆனால் இங்கு வாங்கும் சம்பளம் மலையாள திரை உலகில் கிடைக்காது என்ற உண்மை கௌதமிட்கு நன்கு தெரியும்..//

:-) அது மட்டுமல்லாமல் பல காரணம்

//ஆயிரத்தில் ஒருவன் இட்கு நீங்கள் விமர்சனம் எழுத விருப்பம் இல்லை என சொல்வதிலயே செல்வா அனைவரயும் ஏமாற்றி விட்டார் என புரிகிறது//

எழுதாமல் இருப்பதற்கு இரண்டு காரணம் ஒன்று பலர் ஏற்கனவே எழுதி விட்டார்கள் இரண்டு அவரின் புதிய முயற்சியில் சில குறைகளை கூற மனது வரவில்லை. கண்டிப்பாக பாருங்கள் சதா! நாமே அவரை உற்சாகப்படுத்தா விட்டால் எப்படி! அடுத்த முறை தன் தவறை சரி செய்து கொள்வார் என்று நம்புவோம்.

நம்மாளுங்க இதை ஹாலிவுட் கிராபிக்ஸ் உடன் ஒப்பிடுவது சகிக்கலை, குறைகள் உள்ளது என்பதற்காக நிறைகளை பாராட்டாமல் புறக்கணிப்பது சரியல்ல. தற்போதெல்லாம் விமர்சனங்கள

Reply

Srinivas January 19, 2010 at 2:45 PM

No..Endhiran indha year la kandippa release aaydum..
THalaivar JULY la release aagum nu sollitaaru…

Naan Enadhu Blog ai ENDHIRAN odu thuvanga pogiren:)

Reply

கிருபாநந்தினி January 19, 2010 at 7:10 PM

டிரெய்லர் நல்லா இருந்திச்சு! \\ஹலோ! எந்திரன் படத்தை எல்லாம் தேடாதீங்க… தலைவர் படமெல்லாம் தனி இடுகையாகத்தான் வரும் :-) // சூப்பர்ங்ணா! :) )

Reply

கிரி January 20, 2010 at 4:11 AM

//Srinivas said…
No..Endhiran indha year la kandippa release aaydum..//

ஹா ஹா ஹா நீங்க இந்த வருடம் அளவிற்கு போயிட்டீங்களா! :-)

//Naan Enadhu Blog ai ENDHIRAN odu thuvanga pogiren:)//

தூள் கிளப்புங்க :-) வாழ்த்துக்கள்

======================================================================

நந்தினி வருகைக்கு நன்றி

Reply

r.v.saravanan kudandhai January 25, 2010 at 2:39 PM

giri bala vin next film name

avan evan arya vishal heroes

Reply

கிரி January 26, 2010 at 6:18 AM

தகவலுக்கு நன்றி சரவணன் :-) பாலா இந்த படத்தையாவது சீக்கிரம் வெளியிடுங்க! ;-)

Reply

vignesh February 26, 2010 at 11:40 AM

கிரி,
நான் எதிர்பாக்கறது நந்தலாலா தான்.. ரெண்டு காரணம் ஒன்னு இளையராஜா, ரெண்டு மிஸ்கின்…trailor பாத்தேன் கண்டிப்பா நல்ல இருக்கும் ன்னு தோணுது…
அப்புறம் எந்திரன், அது default . எப்பவும் முதல் இடம் தான் ;)

Reply

Leave a Comment

{ 1 trackback }

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed