சவாலே சமாளி! இதை முடிக்க உங்களுக்கு ஆகும் நேரம் எவ்வளவு?

by கிரி on January 28, 2010

நான் இதுவரை எழுத ஆரம்பித்ததில் இருந்து பலவற்றை பற்றி எழுதி இருக்கிறேன் ஆனால் மூளைக்கு வேலை கொடுக்கும் சுவாராசியமான விளையாட்டு பற்றி எழுதியதில்லை icon wink சவாலே சமாளி! இதை முடிக்க உங்களுக்கு ஆகும் நேரம் எவ்வளவு? , இதில் அந்த குறையை நிறைவு செய்து கொள்கிறேன் icon smile சவாலே சமாளி! இதை முடிக்க உங்களுக்கு ஆகும் நேரம் எவ்வளவு?
நீங்கள் பார்க்க (விளையாட) போகும் இந்த விளையாட்டு ஏற்கனவே பலர் விளையாடி இருப்பீர்கள், இது தெரியாதவர்களுக்காக. இதில் உள்ள சுவாராசியம் கொஞ்ச நாள் சென்றால் இந்த விளையாட்டு மறந்து விடும், எனவே நீங்கள் ஏற்கனவே விளையாடி இருந்தாலும் உங்களுக்கான சவால் தான்… என்ன கொஞ்சம் விரைவில் கண்டு பிடித்து விடுவீர்கள்! அவ்வளவே! icon smile சவாலே சமாளி! இதை முடிக்க உங்களுக்கு ஆகும் நேரம் எவ்வளவு?

இந்த விளையாட்டு என்னவென்றால் இந்த கரையில் உள்ளவர்கள் அனைவரும் மறு கரைக்கு செல்ல வேண்டும்!


Japanese%20River%20IQ%20Game சவாலே சமாளி! இதை முடிக்க உங்களுக்கு ஆகும் நேரம் எவ்வளவு?
சரி விளையாட்டிற்கான விதிமுறையை பார்ப்போம் 
இந்த படகில் இருவர் மட்டுமே செல்ல முடியும்
அம்மா, அப்பாவின் துணை இல்லாமல் மகன்களுடன் இருக்க முடியாது (Mother can’t stay with son(s) without father presence)
அதே போல அப்பா, அம்மாவின் துணை இல்லாமல் மகள்களுடன் இருக்க முடியாது (Father can’t stay with daughter(s) without mother presence)
திருடன் (வரி போட்ட சட்டை) காவலர் உடன் அல்லது தனியாக மட்டுமே இருக்க முடியும்
அம்மா அப்பா காவலர் மட்டும் இந்த படகை ஓட்ட முடியும், குழந்தைகள், திருடன் தனியாக போக ஓட்ட முடியாது

ஆளில்லாமல் தனியாக படகை ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு வர வைக்க முடியாது

படகில் யாரையாவது ஏற்ற இறக்க வேண்டும் என்றால் அவர்களை க்ளிக்க வேண்டும்
படகை மறுகரைக்கு ஓட்ட வேண்டும் என்றால் சிகப்பு நிற குமிழை க்ளிக்க வேண்டும்

முக்கியமான விஷயம் இந்த விளையாட்டில் எந்த ஒரு ஏமாற்று வேலையும் கிடையாது, முழுமையாக உங்கள் திறமையே!

பார்க்கலாம் நீங்கள் எத்தனை நிமிடத்தில் அனைவரையும் மறு கரைக்கு கொண்டு செல்கிறீர்கள் என்று! icon wink சவாலே சமாளி! இதை முடிக்க உங்களுக்கு ஆகும் நேரம் எவ்வளவு? முதன் முதலில் நான் ஐந்து வருடம் முன்பு விளையாடினேன் (அப்போது விதிமுறைகள் எதுவும் தெரியாது, நானே விளையாடி தெரிந்து கொண்டேன்) அதன் பிறகு இப்போது தான் விளையாடினேன். முன்பு எவ்வளவு நிமிடத்தில் முடித்தேன் என்று நினைவில்லை, தற்போது 14 நிமிடத்தில் முடித்தேன்.

விளையாட இங்கே சொடுக்கவும்  (விளையாட்டை துவங்க நீல நிற வட்ட வடிவ பொத்தானை அழுத்தவும்)

கீழே உள்ளது இதற்கான விடை, தயவு செய்து உங்களால் முடியவில்லை என்றால் மட்டும் பாருங்க, முன்னரே விடையை பார்க்கக்கூடாது! (சொன்னா மட்டும் கேட்கவா போறீங்க!) விடையை பார்க்காமல் விளையாடினால் உங்களுக்கு வெற்றி அடையும் போது ரொம்ப திருப்தி கிடைக்கும், அப்புறம் உங்க இஷ்டம்.
இதற்கான விடை காணொளி

No related posts.

{ 16 comments… read them below or add one }

ராமலக்ஷ்மி January 28, 2010 at 9:23 AM

சின்ன வயதில் ஒரு விடுகதை போடுவோம். ஆடு புலி புல்லுக்கட்டு இவற்றை எப்படி படகில் ஏற்றி அந்தப் பக்கம் போய் சேர்ப்பது என. அதை நினைவுறுத்துகிறது இந்த விளையாட்டு:)!

சுவாரஸ்யமாகத்தான் தெரிகிறது. நேரம் கிடைக்கையில் ஆடிப் பார்க்கிறேன்.

Reply

மாதேவி January 28, 2010 at 10:23 AM

ராமலக்ஷ்மி said…
அதே…அதே

Reply

ஆதி மனிதன் January 28, 2010 at 11:00 AM

//எனவே நீங்கள் ஏற்கனவே விளையாடி இருந்தாலும் உங்களுக்கான சவால் தான்… என்ன கொஞ்சம் விரைவில் கண்டு பிடித்து விடுவீர்கள்! அவ்வளவே! :-) //

ஊஹூம்… முன்பே நான் விளையாடி இருந்தாலும் கூட இந்த தடவையும் கஷ்டமாக தான் இருக்கு. டைம் கிடைச்சா திரும்பவும் ட்ரை பண்றேன்.

Reply

KUMARAN January 28, 2010 at 11:04 AM

It took 5 mins for me.

Reply

henry J January 28, 2010 at 5:27 PM

Romba nalla IQ game.

Make Money Online – Visit 10 websites and earn 5.5$. Click here to see the Proof

Reply

எப்பூடி ... January 28, 2010 at 6:55 PM

எனக்கு 18 நிமிடங்கள் பிடித்தது, எப்படி செய்தேன் என்று பார்க்க மீண்டும் செய்யும் போது இரண்டு நிமிடங்கள் தேவைப்பட்டது. அருமையான விளையாட்டு.

Reply

வால்பையன் January 28, 2010 at 8:15 PM

சூப்பரு

Reply

சிங்கக்குட்டி January 28, 2010 at 8:22 PM

அட போங்க கிரி, இது மிக எளிது!…இதற்கான விடை காணொளியை அழுத்தி பார்த்தவுடன் :-)

Reply

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி January 28, 2010 at 10:55 PM

இரண்டே நிமிடம்.. முடித்து விட்டேன்.. நான் கல்லூரி காலத்தில் படித்த லாஜிகல் திங்கிங் இன்னும் நினைவில் உள்ளது. வெளிப்படுத்த உதவியதற்கு நன்றி.. காணொளியைக் காண வேண்டிய அவசியமே இல்லை..
நன்றி…

Reply

நட்புடன் ஜமால் January 29, 2010 at 6:14 AM

வீடியோ பார்க்கவில்லை.

அலுவலகத்தில் விளையாட முடியாது

அப்பாலிக்கா ட்ரை செய்துட்டு வாறேன்.

Reply

கைப்புள்ள January 29, 2010 at 4:11 PM

It took less then 5 min for me..
nice one Giri..

Reply

V.Radhakrishnan January 29, 2010 at 4:22 PM

விளையாடவில்லை, இருப்பினும் இந்த விளையாட்டு பற்றி சிறு வயதில் விளையாடியது நினைவு இருக்கிறது.

வார்த்தைகளால் விளையாடிய விளையாட்டு இன்று இணையத்தில். மகிழ்ச்சி கிரி.

Reply

கிரி January 30, 2010 at 12:08 PM

ராமலக்ஷ்மி, மாதவி, ஆதி மனிதன், குமரன், ஹென்றி, எப்பூடி, அருண், சிங்கக்குட்டி, பிரகாஷ், ஜமால், கைப்புள்ள மற்றும் இராதாகிருஷ்ணன் வருகைக்கு நன்றி..

Reply

Sadhasivam February 2, 2010 at 9:01 AM

சவாலை சமாளிச்சாச்சு ஒரு வழியா…
20 நிமிஷம் ஆச்சு
நல்ல விளையாட்டுங்க கிரி

Reply

சினிமா நிருபர் February 5, 2010 at 12:59 PM

டைம் இஸ் கோல்டு. சோ… நான் நேரா வீடியோவ பார்த்து மனப்பாடம் பண்ணிக்கிட்டு… அதுக்கு அப்புறமாதான் விளையாடவே ஆரம்பிச்சேன். 2 நிமிஷம் கூட ஆகலை. முடிச்சிட்டேன். (அழுகுனி ஆட்டம்னு சொல்லி என் திறமையை மழுங்கடிச்சிடாதீங்க கிரி… அந்த பாவம் உங்களை சும்மா விடாது). ஹா ஹா ஹி..!

Reply

அசால்ட் ஆறுமுகம் February 25, 2010 at 10:20 AM

நான் 3 நிமிடத்தில் செய்தேன். என்னுடைய பல்கலைகழகத்தில் இதனை ஒரு பாடமாக எடுத்தேன். இதே போல பல்வேறு விளையாட்டு எப்படி செய்வது என்று படித்துள்ளேன். எனவே மிகவும் இலகுவாக இருந்தது.

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed