கூகிள் மின்னஞ்சலில் கவனிக்கப்படாதவை!

by கிரி on January 26, 2010

குறுகிய காலத்தில் பல மில்லியன் மக்களை தன் பக்கம் இழுத்ததில் கூகிள்க்கு நிகர் கூகிள் தான், எளிமை, வேகம், புதுமை, பாதுகாப்பு இதுவே இதன் தாரக மந்திரம். ஏதாவது ஒன்றை கண்டு பிடித்தால் அதோடு நிறுத்திவிடாமல் மேலும் மேலும் அதில் புதிய உத்திகளை புகுத்துவது மாற்றம் செய்வது என்று அதன் ஆர்வம் சற்றும் குறையாமல் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. கூகிள் அளவிற்கு பயனாளர்களுக்கு வசதியை செய்து கொடுப்பது போல வேறு எந்த நிறுவனமும் இல்லை.
மற்ற மின்னஞ்சல் (Yahoo!, Hotmail) நிறுவனங்களில் இருந்து தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை தற்போது பலர் கூகிள் க்கு மாற்றி விட்டார்கள், என் நண்பர்கள் தற்போது 90% கூகிள் தான் (நான் இன்னும் யாஹூ வில் தான் உள்ளேன், மாற்ற இப்போதைக்கு விருப்பமில்லை). தனது மின்னஞ்சல் சேவையில் பல வசதிகளை வெளிப்படையாகவும் பல வசதிகளை வேண்டும் என்றால் பயன்படுத்திக்கொள்ளும் படியும் அமைத்துள்ளது, இதை ஆய்வுகூடமாக (Lab) கூறுகிறது. இதில் பல பயனுள்ள விஷயங்கள் உள்ளது, இதை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். பலர் இது பற்றி ஏற்கனவே தெரிந்து இருப்பீர்கள், இது தெரியாத அல்லது கவனிக்காதவர்களுக்கு!
இதை நீங்கள் கூகிள் மின்னஞ்சலில் Settings ஐ சொடுக்கினால் அதில் Labs என்று இருக்கும், அதில் சென்று உங்களுக்கு தேவையானவற்றை நீங்கள் இணைத்துக்கொள்ளுங்கள், அதில் சில முக்கியமானவை பற்றி நான் கூறுகிறேன்.
Inserting%20Images கூகிள் மின்னஞ்சலில் கவனிக்கப்படாதவை!
Inserting images: இதன் பயன் என்னவென்றால் படங்களை நமது விருப்பப்படி மின்னஞ்சல் அனுப்பும் போது அமைத்துக்கொள்ளலாம். எடுத்துக்காட்டாக பார்வர்ட் மின்னஞ்சல்களுக்கு மிகவும் பயன் தரும். படத்தை பற்றி விளக்கம் பிறகு படம், இதே போல விளக்கங்கள் கூறி படங்களை இணைக்கலாம், இல்லை என்றால் மொத்த படங்களும் இடைவெளியில்லாமல் வரிசையாக இருக்கும் அதன் விளக்கங்கள் எதற்கு என்று தெரியாமல் அணிவகுத்து இருக்கும்.

Default%20reply%20to%20all கூகிள் மின்னஞ்சலில் கவனிக்கப்படாதவை!
Default ‘Reply to all’: ஒரு சிலர் குழுவாக (தனி குழும மின்னஞ்சல் இல்லாமல்) அடிக்கடி தனது நண்பர்களுக்குள் மின்னஞ்சல் செய்பவர்களாக இருப்பார்கள், அவர்களுக்கு இதை இணைத்தால் Reply to all என்பது வலது ஓரத்தில் மேலே வந்து விடும் (வழக்கமாக இருக்கும் Reply யும் இருக்கும்) இதனால் எளிதாக அனைவருக்கும் அனுப்பலாம்.

Hide%20unread%20counts கூகிள் மின்னஞ்சலில் கவனிக்கப்படாதவை!
Hide Unread Counts: முன்பு தான் ஆடிக்கு ஒருநாள் அம்மாவாசைக்கு ஒரு நாள் மின்னஞ்சல் வரும், தற்போதெல்லாம் நண்பர்கள் மின்னஞ்சல், குழும மின்னஞ்சல், பல தளங்களில் சப்க்ரைப் செய்து இருந்தால் அந்த மின்னஞ்சல்கள் என ஏகப்பட்டது வருகிறது. இது எத்தனை வந்துள்ளது என்ற எண்ணிக்கை Inbox ல் தெரியும், இது உறுத்தலாக தெரிந்தால் இந்த எண்ணிக்கையை இதை இணைப்பதின் மூலம் மறைக்கலாம்.

Chat%20right%20side கூகிள் மின்னஞ்சலில் கவனிக்கப்படாதவை!
Right-side chat : கூகிள் உரையாடியில் (Chat) மறைந்து இருக்கும் (Invisible Mode) வசதி இல்லை, ஆனால் கூகிள் மின்னஞ்சலில் உள்ள உரையாடியில் இது உள்ளது. இதனால் பலர் இந்த வசதியை பயன்படுத்த கூகிள் மின்னஞ்சலில் உள்ள உரையாடியில் தான் இணைந்து இருப்பார்கள். இது வழக்கமாக இடது புறத்தில் இருக்கும், அதனுடன் Lable கள் இருப்பதால் ரொம்ப கீழே இருக்கும். இதை தவிர்க்க இதை இணைத்தால் உரையாடி பகுதி வலது புறத்தில் மாறி விடும்.

Pictures%20in%20Chat கூகிள் மின்னஞ்சலில் கவனிக்கப்படாதவை!
Pictures in chat: இதை இணைப்பதின் மூலம் நம்முடன் உரையாடுபவர் படம் (அவர்கள் இணைத்து இருந்தால்) நமக்கு தெரியும்
Mark%20as%20read கூகிள் மின்னஞ்சலில் கவனிக்கப்படாதவை!
Mark as Read Button: தேவையற்ற மின்னஞ்சல்கள் பல நமக்கு வரும் அல்லது அந்த மின்னஞ்சலில் என்ன இருக்கும் என்று முன்பே தெரியும் எனவே படிக்காத மின்னஞ்சல்களாக (Unread Mails) இருப்பது எரிச்சலை தரலாம் எனவே அவை அனைத்தையும் மொத்தமாக தேர்வு செய்து Mark as read பொத்தானை அழுத்துவதன் மூலம் அனைத்தும் படிக்கப்பட்ட மின்னஞ்சல்களாக (Read) மாறி விடும்.

Youtube கூகிள் மின்னஞ்சலில் கவனிக்கப்படாதவை!
YouTube previews in mail: இது நமக்கு Youtube சுட்டி (Link) மின்னஞ்சலில் வந்தால் அதன் முன்னோட்டத்தை நமக்கு மின்னஞ்சலின் கீழ் பகுதியில் சிறிய அளவில் காட்டும். நாம் சுட்டியை சொடுக்கி Youtube செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதைப்போல வசதி Picasa மற்றும் Flickr க்கு உண்டு.

Undo%20Send கூகிள் மின்னஞ்சலில் கவனிக்கப்படாதவை!
Undo Send: இது மிகவும் பயனுள்ள ஒன்று, நாம் எப்போதும் அவசரக்காரர்கள் அதனால் ஒருவருக்கு அனுப்ப வேண்டிய மின்னஞ்சலை மாற்றி தவறுதலாக மற்ற ஒருவருக்கு அனுப்பி விடுவோம்.. அப்புறம் அடடா! வடை போச்சே! என்று மண்டை காய்வோம். இதற்கு தான் கூகிள் தரும் இந்த வசதி. நாம் மின்னஞ்சல் அனுப்பிய பிறகு அதை கூகிள் அனுப்பாமல் சில நொடிகள் வைத்து இருக்கும், அதற்குள் நம் தவறை உணர்ந்து விட்டால் Undo வை அழுத்துவதன் மூலம் அதை அனுப்பாமல் தவிர்க்கலாம்.
மேற்கூறியவை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்

Subscribe to கிரி Blog by Email

feed icon16x16 கூகிள் மின்னஞ்சலில் கவனிக்கப்படாதவை! Subscribe in a reader

No related posts.

{ 23 comments… read them below or add one }

நட்புடன் ஜமால் January 26, 2010 at 8:50 AM

நல்ல பகிர்வு கிரி.

நானும் லேப் உபயோகிக்கின்றேன்.

வலப்பக்கம் சாட் பார்க்க புதுமையாக இருக்கே தவிர

உபயோகத்தில் ரொம்பவே கஷ்ட்டபடுத்திடுச்சி – இடப்பக்கமே மாறிட்டேன்.

Reply

மின்னுது மின்னல் January 26, 2010 at 9:46 AM

மறைந்து இருக்கும் (Invisible Mode) வசதி இல்லை,

///

உண்டு பாஸ்

Reply

Dinesh January 26, 2010 at 12:16 PM

அவரு சொன்னது கூகிள் டாக்ல அந்த வசதி கிடயாதுண்ணு. பதிவை சரியா படிங்க நண்பரே…

Reply

பிரவின்குமார் January 26, 2010 at 2:09 PM

சார் தெளிவான விளக்கம். மேலும் இதில் உள்ள வடிப்பான்கள், முன்அனுப்புதல் மற்றும் POP/IMAP, விடுமுறை பதிலளிப்பான்:
(உள்வரும் செய்திகளுக்கு தானியங்கு முறையில் ஒரு பதில் அனுப்பப்படும். ஒரு தொடர்பாளர் பல செய்திகளை அனுப்பும் போது , இந்த தானியங்கு முறை 4 நாட்களுக்கு ஒரு பதில் அதிகப்பட்சமாக அனுப்பும்)போன்றவை மிகவும் சிறப்பானவை. இதையும் கொஞ்சம் அடுத்த பதிவுல விளக்குங்க. பகிர்வுக்கு நன்றி.

Reply

ஜோதிஜி January 26, 2010 at 3:40 PM

நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டேன் கிரி.

Reply

shankar January 26, 2010 at 4:19 PM

நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டேன் கிரி ,மேலும் இணையத்தை கெட்ட விஷயத்தை மட்டுமே தரும் (நானும் ஒருவன் அதில் ) என்று எல்லாருமே சொன்னார்கள் ,ஆனால் புதிய புதிய பதிவர்களை படிக்கும் போது இது ஒரு மிக சிறந்த ஊடகம் என்பது தெளிவாயிற்று நன்றி

Reply

சிங்கக்குட்டி January 26, 2010 at 6:48 PM

80-களில் மைக்ரோசாப்ட் பின்பற்றியதை போல கூகிள் நாளுக்கு நாள் மக்களிடம் தங்கள் அன்றாட தேவையை கூட்டிகொண்டே செல்கிறது.

வெகு விரைவில் இதுவும் மைக்ரோசாப்ட் போல அன்றாட கணினி பயன் பாட்டிற்கு தேவையான அனைத்தும் கூகிள் மூலம் கிடைக்கும் படி வந்து விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Reply

அண்ணாமலையான் January 26, 2010 at 8:28 PM

நல்ல தகவல்கள் நண்பரே

Reply

எப்பூடி ... January 27, 2010 at 12:13 AM

உண்மையை சொல்லன்னுமேன்றால் ப்லொக்கிற்கு பின்னூட்டம் போடத்தான் முதல்முதலாக ஜிமெயில் பயன்படுத்த ஆரம்பித்தது, இப்போது எல்லாமே ஜிமெயில்தான்.

Reply

Arun January 27, 2010 at 12:46 AM

ivalavu nalla points solittu gmail ku varama irukalama?

vanga thala

Reply

Sadhasivam January 27, 2010 at 8:20 AM

தரமான தகவல்கள் google போலவே

இவ்வளவு அம்சங்கள் இருந்தும் ஆபீசியல் தொடர்புகளுக்கு yahoo திருப்திகரமாக எனக்கு இருக்கிறது..

நண்பர்களுடன் அரட்டை அடிக்க google chat நன்றாக உள்ளது

Reply

சினிமா நிருபர் January 27, 2010 at 8:41 AM

//அடடா! வடை போச்சே! என்று மண்டை காய்வோம்.//

‌யோவ் கிரி…! உமக்கே உரிய நையாண்டியுடன் கலக்கலான தகவல்களை சொல்லியிருக்கிறீரேய்யா…! நல்ல பயனுள்ள பதிவு.

Reply

Dareone January 27, 2010 at 10:33 AM

neenga mail la address maathi thaane anupuveenga.. naanga ellam resume attach pana maranthu, "I hereby attached my resume. Waiting for your acknowledgement" nu pala company ku anupi irkom la :P

Reply

மின்னுது மின்னல் January 27, 2010 at 12:29 PM

Dinesh said…

அவரு சொன்னது கூகிள் டாக்ல அந்த வசதி கிடயாதுண்ணு. பதிவை சரியா படிங்க நண்பரே…
//

ரைட்டு… :)

Reply

ரோஸ்விக் January 27, 2010 at 12:44 PM

சிலவற்றை இதுவரை உபயோகித்ததில்லை. இனி பயன்படும். நன்றிகள் கிரியாரே!

Reply

shankar January 27, 2010 at 2:01 PM

கிரி ,
தலைவர் ரஜினியை பற்றி சுரேஷ் கண்ணன் போலி ஆன்மிகவாதி என்று பதிவு போடிருக்கிறார் a அந்த இடுகை கிழே ..,

http://pitchaipathiram.blogspot.com/2010/01/blog-post_25.html

Reply

கிரி January 27, 2010 at 6:02 PM

// நட்புடன் ஜமால் said…
வலப்பக்கம் சாட் பார்க்க புதுமையாக இருக்கே தவிர

உபயோகத்தில் ரொம்பவே கஷ்ட்டபடுத்திடுச்சி – இடப்பக்கமே மாறிட்டேன்//

:-) எனக்கு வலது பக்கமே எளிதாக உள்ளது (அப்புறம் உங்க பின்னூட்டம் கூகிள் மின்னஞ்சல் போக வேகம்)

======================================================================

// Dinesh said…

அவரு சொன்னது கூகிள் டாக்ல அந்த வசதி கிடயாதுண்ணு. பதிவை சரியா படிங்க நண்பரே…//

நன்றி தினேஷ்

======================================================================

// பிரவின்குமார் said…

//இதில் உள்ள வடிப்பான்கள், முன்அனுப்புதல் மற்றும் POP/IMAP, விடுமுறை பதிலளிப்பான்:
(உள்வரும் செய்திகளுக்கு தானியங்கு முறையில் ஒரு பதில் அனுப்பப்படும். ஒரு தொடர்பாளர் பல செய்திகளை அனுப்பும் போது , இந்த தானியங்கு முறை 4 நாட்களுக்கு ஒரு பதில் அதிகப்பட்சமாக அனுப்பும்)போன்றவை மிகவும் சிறப்பானவை. இதையும் கொஞ்சம் அடுத்த பதிவுல விளக்குங்க.//

பிரவின் நீங்கள் கூறிய இந்த முறை ரொம்ப அருமையானது..இதை எப்படி யோசித்து செயல்படுத்துகிறார்கள் பாருங்கள்! இதனாலே கூகிள் அனைவரயும் எளிதாக கவர்கிறது.

பிரவின் இவை பெரும்பாலானவை அனைவருக்கும் தெரியும், அதனால் சிலவற்றை மட்டும் குறிப்பிட்டேன். அதனால் அதை விளக்க வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். இவை இல்லாமல் வேறு பற்றி வாய்ப்பு கிடைக்கும் போது கூறுகிறேன். நன்றி

======================================================================

// ஜோதிஜி said…

நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டேன் கிரி.//

நன்றி ஜோதிஜி

======================================================================

// MANI said…

இணையத்தை கெட்ட விஷயத்தை மட்டுமே தரும் (நானும் ஒருவன் அதில் ) என்று எல்லாருமே சொன்னார்கள் ,ஆனால் புதிய புதிய பதிவர்களை படிக்கும் போது இது ஒரு மிக சிறந்த ஊடகம் என்பது தெளிவாயிற்று //

மணி நல்லது கேட்டது அனைத்து இடங்களிலும் இருக்கிறது, அதனால் தவறாக நினைக்க வேண்டிய அவசியமில்லை. அப்புறம் பதிவுலகம் பற்றி உடனே எந்த முடிவிற்கும் வந்து விடாதீர்கள்.. இங்கேயும் பல நல்லது அருமையான செய்திகள் போன்றவையும் பிரச்சனைகள் அரசியல்கள் பழிவாங்குதல் என்று மோசமான பகுதியும் உண்டு. நீங்கள் உங்களுக்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்டு மற்றதை ஒதுக்கி விடுங்கள்.

//தலைவர் ரஜினியை பற்றி சுரேஷ் கண்ணன் போலி ஆன்மிகவாதி என்று பதிவு போடிருக்கிறார் //

:-) )) அவருக்கு ரஜினியை பிடிக்காது..அதுவுமில்லாமல் இதெல்லாம் சகஜம் மணி. இதுக்கே இப்படின்னா பலர் மிகக்கேவலமாகக்கூட தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துவார்கள், அதை எல்லாம் படித்தால் அப்புறம் ஒரு வழி ஆகி விடுவீர்கள் :-) அதனால் நாம நம்ம வழில போவோம் ..மற்றவர்கள் ஏதாவது சொல்லிட்டே தான் இருப்பாங்க, அதெல்லாம் கண்டுக்காதீங்க.

நீங்க புதுசு என்பதால் இதெல்லாம் உங்களுக்கு ஆச்சர்யமாக உள்ளது.. போகப்போக நீங்களே புரிந்து கொள்வீர்கள்! ;-) நான் இதில் ரொம்ப "அனுபவ" பட்டு இருக்கிறேன் :-)

======================================================================

// சிங்கக்குட்டி said…

வெகு விரைவில் இதுவும் மைக்ரோசாப்ட் போல அன்றாட கணினி பயன் பாட்டிற்கு தேவையான அனைத்தும் கூகிள் மூலம் கிடைக்கும் படி வந்து விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.//

சந்தேகமில்லாமல்! இவர்கள் மொபைல் அது இது என்று தங்களை விரிவு படுத்திக்கொண்டே செல்கிறார்கள்.

======================================================================

// அண்ணாமலையான் said…

நல்ல தகவல்கள் நண்பரே//

நன்றி அண்ணாமலையான்

======================================================================

// எப்பூடி … said…

உண்மையை சொல்லன்னுமேன்றால் ப்லொக்கிற்கு பின்னூட்டம் போடத்தான் முதல்முதலாக ஜிமெயில் பயன்படுத்த ஆரம்பித்தது, இப்போது எல்லாமே ஜிமெயில்தான்//

:-) இதுவே கூகுளின் அதிசயம்.

Reply

கிரி January 27, 2010 at 6:02 PM

// Arun said…

ivalavu nalla points solittu gmail ku varama irukalama?

vanga thala//

:-) வருவோம்..யாகூ ரொம்ப பழகி விட்டது..மாற்ற மனதில்லை..என்றாவது ஒருநாள் கூகிள் வந்து தான் ஆகணும் அப்போது பார்ப்போம்.

======================================================================

// Sadhasivam said…

இவ்வளவு அம்சங்கள் இருந்தும் ஆபீசியல் தொடர்புகளுக்கு yahoo திருப்திகரமாக எனக்கு இருக்கிறது..//

எனக்கும் இது வரை யாகூ வில் எந்த பிரச்சனையும் இல்லை!

//நண்பர்களுடன் அரட்டை அடிக்க google chat நன்றாக உள்ளது//

உண்மை தான் .. நண்பர்கள் கூறி இருக்கிறார்கள்..நான் அதிகம் பயன்படுத்துவதில்லை.

======================================================================

// சினிமா நிருபர் said…

‌யோவ் கிரி…! உமக்கே உரிய நையாண்டியுடன் கலக்கலான தகவல்களை சொல்லியிருக்கிறீரேய்யா…! நல்ல பயனுள்ள பதிவு.//

வாங்கய்யா நிருபரே! நையாண்டி கோவை குசும்போடு வருவது.. இதெல்லாம் சேர்த்து எழுதினால் தான் படிக்க கொஞ்சமாவது சுவாராசியமா இருக்கும்.. இல்லைனா இரண்டாவது பத்தி படிக்கும் போதே கொட்டாவி விட ஆரம்பித்து விடுவார்கள் :-) ))

======================================================================

// Dareone said…

neenga mail la address maathi thaane anupuveenga.. naanga ellam resume attach pana maranthu, "I hereby attached my resume. Waiting for your acknowledgement" nu pala company ku anupi irkom la :P //

ஹா ஹா ஹா ஆனா இதற்கும் கூகிளில் வழி உள்ளது.. நான் மேற்கூறியவை போலவே அட்டேச்மென்ட் அனுப்பவில்லை என்றால் நினைவு படுத்து என்பதை இணைத்து விட்டால் பிறகு நாம் ஒவ்வொரு முறை அனுப்பும் போதும் அது நமக்கு நினைவு படுத்தும். அட்டேச்மென்ட்டுடன் அதிகமாக யாரும் அனுப்புவதில்லை எனவே அதை குறிப்பிடாமல் விட்டு விட்டேன்.

அப்புறம் அவங்க நீங்க ரெசியூம் அனுப்புன ஸ்டைல் பார்த்தே முடிவு செய்து இருப்பாங்க ..அக்னாலெட்ஜ்மென்ட் அனுப்பலாமா வேண்டாமா என்று .. ஹி ஹி ஹி No Serious Pls

======================================================================

// மின்னுது மின்னல் said…

ரைட்டு… :) //

நோ ப்ராப்ளம் :-) கூகிள் டாக் என்று நான் எழுதி இருந்தால் இன்னும் சிரமம் இல்லாமல் இருந்து இருக்கும்.

======================================================================

// ரோஸ்விக் said…

சிலவற்றை இதுவரை உபயோகித்ததில்லை. இனி பயன்படும்//

தூள் கிளப்புங்க!

Reply

ராமலக்ஷ்மி January 28, 2010 at 7:50 AM

நல்ல ப்திவு.

வடை ஏன் போகுதுன்னா பெறுபவர் பெயரை டைப் செய்ய ஆரம்பிக்கையில் எல்லா பெயர்களும் நம் வசதிக்காக ஐடியுடன் தோன்றுது. அவசரத்தில் டபக் என க்ளிக் பண்ணி படக் என அனுப்பிடுறோம். அப்புறம்தான் மெயில் செண்ட் டு யாருக்குன்னு பார்த்தா….வடை போயே போயிருக்கும்:(! நான் யாஹூ உபயோகிப்பதால் வடையைத் திரும்பப் பெற முடியாதே:)! கவனமாய் இருந்துக்க வேண்டியதுதான்!

——

அடுத்த பதிவு எதைப் பற்றியதானது என்று அனுமானிக்க முடியாத படி அத்தனை விஷயங்களையும் எடுத்துக் கொண்டு அடித்து ஆடி இரட்டை சதம் சேர்த்திருக்கிறீர்கள் சத்தம் இல்லாமல். தொடர்பவர் எண்ணிக்கையைச் சொன்னேன்:)! நாட் அவுட்டாக என்றும் நின்று ஆட வாழ்த்துக்கள்!!

Reply

கிரி January 30, 2010 at 12:05 PM

// ராமலக்ஷ்மி said…
வடை ஏன் போகுதுன்னா பெறுபவர் பெயரை டைப் செய்ய ஆரம்பிக்கையில் எல்லா பெயர்களும் நம் வசதிக்காக ஐடியுடன் தோன்றுது. அவசரத்தில் டபக் என க்ளிக் பண்ணி படக் என அனுப்பிடுறோம். அப்புறம்தான் மெயில் செண்ட் டு யாருக்குன்னு பார்த்தா….வடை போயே போயிருக்கும்:(! //

:-) ))

//நான் யாஹூ உபயோகிப்பதால் வடையைத் திரும்பப் பெற முடியாதே:)! கவனமாய் இருந்துக்க வேண்டியதுதான்!//

நானும் அதே!

//இரட்டை சதம் சேர்த்திருக்கிறீர்கள் சத்தம் இல்லாமல். //

முதலில் குழம்பி விட்டேன்..நாம் தான் ஏற்கனவே 200 பதிவு போட்டு விட்டோமே என்று! :-)

//தொடர்பவர் எண்ணிக்கையைச் சொன்னேன்:)! நாட் அவுட்டாக என்றும் நின்று ஆட வாழ்த்துக்கள்!!//

நன்றி ராமலக்ஷ்மி :-)

Reply

டிவிஎஸ்50 January 31, 2010 at 12:08 AM

//நான் இன்னும் யாஹூ வில் தான் உள்ளேன், மாற்ற இப்போதைக்கு விருப்பமில்லை//

யாஹூ … அவ்வளவு சூப்பர்ராவா இருக்கு? :)

யாகூ அதிமாக பயன்படுத்தி பார்த்ததில்லை. ஆனால் ஜிமெயில் திருப்திகரமாகவே உள்ளது. கற்று கொள்ள வேண்டிய வசதிகள் நிறையவே உள்ளன. உங்கள் அறிமுகங்களுக்கு நன்றி.

கிரி! இது போன்று வாரம் ஒரு முறையாவது தொழிநுட்ப இடுகைகள் போட்டு கலக்கலாமே :)

//டெம்ப்ளேட் பாராட்டுக்களை தவிர்க்கவும்!//

ம்ம்ஹும்… பாராட்டியே ஆவேன். டெம்ப்லேட் சூப்பர்

Reply

கிரி February 1, 2010 at 7:53 PM

// டிவிஎஸ்50 said…

யாஹூ … அவ்வளவு சூப்பர்ராவா இருக்கு? :) //

கூகுளுடன் ஒப்பிடும் போது ஒன்றுமே இல்லை .. ம்ம் அப்புறம் எதுக்கு யாகூல இருக்கீங்கன்னு கேட்கறீங்களா! ஹி ஹி ஹி

//உங்கள் அறிமுகங்களுக்கு நன்றி.//

ஹலோ! இது நெம்ப ஓவரா இருக்கு.. கலைஞருக்கே அரசியலா! ரஜினிக்கே ஸ்டைலா! சன்னுக்கே விளம்பரமா! இது போதுமா! ;-)

//கிரி! இது போன்று வாரம் ஒரு முறையாவது தொழிநுட்ப இடுகைகள் போட்டு கலக்கலாமே :) //

நானெல்லாம் ஒரே மாதிரி பதிவு போடகூடாது என்பதற்காக தொழில்நுட்ப பதிவு போட்டுட்டு இருக்கிறேன் .. நீங்கெல்லாம் (நீங்க, சூர்யா கண்ணன், வேலன்) எல்லா விசயங்களையும் ஒண்ணு விடாம போட்டுட்டா அப்புறம் எங்க நானெல்லாம் எங்கே இடுகை போடுவது!

//ம்ம்ஹும்… பாராட்டியே ஆவேன். டெம்ப்லேட் சூப்பர்//

ஐயையோ இது வேற டெம்ப்ளேட்

Reply

alavudeen August 8, 2011 at 12:50 AM

usefull messages thanks

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed