அசரவைக்கும் “Avatar” – திரைவிமர்சனம்

by கிரி on December 22, 2009

பிரம்மாண்ட படங்கள் என்று என்னை வாயை பிளக்க வைத்தவர்கள் (கொசு போனா கூட தெரியாது போல) இரண்டு பேர், ஒன்று ஸ்பீல் பெர்க் இரண்டாவது தற்போதைய ஹாட் அண்ணன் பிரம்மாண்ட மன்னன் ஜேம்ஸ் கேமரூன். யோவ்! உங்களோட கற்பனை திறனக்கு அளவே இல்லையா! என்று நம்மை தலை சுத்த வைப்பவர்கள். இதில் தற்போதைய நாயகன் ஜேம்ஸ் கேமரூன் படமான “அவதார்” பற்றி பார்க்க போகிறோம்.

avatar3 அசரவைக்கும் Avatar   திரைவிமர்சனம்பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு இவரிடமே சரியான விளக்கம் தெரிந்து கொள்ள வேண்டும் போல..அந்த அளவிற்கு படமுழுக்க அசரடித்து இருக்கிறார். 12 வருட உழைப்பு மற்றும் கிட்டத்தட்ட 250 மில்லியன் டாலர் செலவில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது, நினைத்தாலே கண்ணை கட்டுகிறது. ஒருவர் தன் மீது எவ்வளோ தூரம் நம்பிக்கை வைத்து இருந்தால் இவ்வ்வ்ளோ காலம் உழைத்து இவ்வ்வ்வவளோ செலவு செய்து படம் எடுப்பார்! உண்மையில் இவர் தைரியத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை.

இவருடைய கடைசி படம் “டைட்டானிக்”, அந்தப்படம் வெளிவந்து 11 வருடம் ஆகிறது, அந்தப்படத்தின் பிரம்மாண்டமே இன்னும் கண்ணை விட்டு அகலவில்லை..இப்படி எல்லாம் கூட படம் எடுக்க முடியுமா! என்று ஆச்சர்யப்படுத்தி இருந்தார். அதை விட பல மடங்கு பிரம்மாண்டமாக இன்னொரு படம் இது என்றால் என்னவென்று சொல்வது!

இனி “அவதார்”

Avatar1 அசரவைக்கும் Avatar   திரைவிமர்சனம்வேற்று கிரகம் ஒன்றில் விலைமதிக்க முடியாத கனிமங்கள் உள்ளதை கண்டு பிடிக்கிறார்கள், அங்கு “நவி” என்ற இனத்தினர் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லாமல் அமைதியாக வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். அவர்கள் நம்மை போல இல்லாமல் மிகவும் உயரமாகவும், காதுகள் நீளமாகவும் மூக்கு வால் உடல் அமைப்பு என்று அனைத்தும் வித்யாசமாக இருக்கிறார்கள்.

இவர்கள் நவி இனத்தவரை போல ஒரு க்ளோனிங் நவியை உருவாக்கி அவர்களை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள அனுப்புகிறார்கள், இதற்கு ஜேக் என்பவர் தேர்வு செய்யப்படுகிறார். இவருடைய உடல் இங்கே இருக்கும் ஆனால் உயிர் மற்றும் எண்ணங்கள் அனைத்தும் புதிதாக இவர்களால் உருவாக்கப்பட்ட நவியிடம் இருக்கும். எப்போது வேண்டும் என்றாலும் இவர்கள் நினைத்தால் இவர்கள் உருவாக்கிய நவியை (ஜேக்கை) செயல் இழக்க செய்யலாம், அனைத்து கட்டுப்பாடுகளும் இவர்கள் வைத்து இருப்பார்கள். ஏதாவது ஒரு உடல் தான் ஏக்டிவாக இருக்க முடியும்.சுருக்கமாக நம்ம முறையில் கூறினால் “கூடு விட்டு கூடு பாய்வது” போலவாகும்.

இவ்வாறு நவியாக செல்லும் ஜேக் ஆபத்தில் மாட்டிக்கொள்ள அங்கு நவி இனப்பெண் வந்து இவரை காப்பாற்றுகிறார், பின் இவரின் தைரியத்தால் கவரப்பட்டு இவரை தங்கள் கூட்டத்திற்கு அழைத்து சென்று அறிமுகப்படுத்துகிறார். இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் ஜேக் இவர்களுடைய பழக்க வழக்கங்களை கற்றுக்கொள்ள அனுமதிக்கின்றனர்.

avatar4 அசரவைக்கும் Avatar   திரைவிமர்சனம்ஜேக் நவி இனத்தவரின் அனைத்து பழக்கங்களையும் கற்றுக்கொள்கிறார், அவர்களுள் ஒருவராகிறார். இடையே தங்கள் குழுவிற்கு இந்த இடங்களை பற்றிய தகவல்களையும் அனுப்பி வைக்கிறார். இவர் தந்த விவரங்களை வைத்து அங்கு படையெடுத்து வந்து அனைவரையும் அழிக்க முடிவு செய்கிறார்கள். அங்கு பெண்கள் குழந்தைகள் பலர் இருப்பதாலும் அவர்கள் ரொம்ப மென்மையானவர்கள் யாருக்கும் தொந்தரவு தராதவர்கள் என்பதால் இதற்கு ஜேக் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள், ஆனால் இதற்கு மேலிடம் ஒத்துக்கொள்ளாமல் முதல் கட்ட தாக்குதலில் அவர்களுடைய ஒரு பகுதியை அழித்து விடுகிறார்கள்.

இரண்டாவது கட்ட பிரம்மாண்ட தாக்குதலுக்கு தயாராகின்றனர், இதை ஏற்றுக்கொள்ளாத ஜேக் மற்றும் அவரது நண்பர்கள் தப்பி சென்று நவி இனத்தவருக்கு உதவ முடிவு செய்கின்றனர். இறுதியில் அவர்கள் (ஜேக்) அந்த இனத்தினரோடு சேர்ந்தார்களா! நவி இனத்தவர் உள்ள “பண்டோரா” காட்டை காப்பாற்றினார்களா! ஜேக் என்ன ஆனார் என்பதை நம்மை இருக்கை நுனிக்கு வரவைத்து பட்டயகிளப்பி இருக்கிறார்கள்.

படத்தின் சுவாராசியங்கள் சில

இந்த படத்தில் வரும் பெரும்பாலான காட்சிகள் சி ஜி எனப்படும் கிராபிக்ஸ் காட்சிகள். சூடம் கொளுத்தி சத்தியம் செய்தாலும் எவரும் நம்ப மாட்டார்கள் இவை அனைத்தும் கிராபிக்ஸ் என்றால், அந்த அளவிற்கு தாறுமாறாக இருக்கிறது.

avatar2 அசரவைக்கும் Avatar   திரைவிமர்சனம்இதில் வரும் போர் விமானங்கள் டிராகன்கள் மற்றும் சில மிருகங்கள் இவர்களின் கற்பனையின் உச்சம், ஏம்பா! நீங்கெல்லாம் மனுசங்க தானா! இல்ல தெய்வமா! என்று கேட்கத் தோன்றுகிறது, அந்த அளவிற்கு………… நீங்களே பார்த்து முடிவு செய்யுங்களேன். ஜேக்கும் அவரை காப்பாற்றும் நவி பெண்ணும் காதலிக்கிறார்கள் அதை மிக இயல்பாக ரசிக்கும் படி எடுத்து இருப்பது அருமை

நம்ம ஊர்ல குதிரையை அடக்குனா வீரன் என்கிற மாதிரி இங்க டிராகனை அடக்க வேண்டும்.. ஒரு பிரம்மாண்டம் வேண்டாமா! icon smile அசரவைக்கும் Avatar   திரைவிமர்சனம் இதற்காக ஜேக் முயற்சிக்கிறார் ஒரு டிராகனுடன்..அவரை பிடிக்காத அல்லது இன்னும் முழுதாக ஏற்றுக்கொள்ளாத மற்ற நவிக்கள் இவர் திணறுவதை பார்த்து கெக்கே பிக்கே என்று சிரிக்க, நம்ம ஆளு தான் ஹீரோ ஆச்சே விடுவாரா! அதை அசத்தலாக கட்டுப்படுத்தி தன் கட்டுப்பாட்டினுள் கொண்டு வருகிறார். இப்படி செய்து விட்டால் அந்த டிராகன் அவர் வீட்டு நாய்க்குட்டி மாதிரி அவர் சொன்னதெல்லாம் கேட்கும்..இது எப்படி இருக்கு! சூப்பரா! icon smile அசரவைக்கும் Avatar   திரைவிமர்சனம் இது மாதிரி ஆளுக்கொரு டிராகன் வைத்து இருப்பார்கள்.

இதில் ஒரு காண்டா மிருகம் (ஆமா! இதை மட்டும் ஏன் மிருகம் என்று கூறுகிறார்கள், காண்டா விலங்கு என்று கூறக்கூடாதா, சரி நீங்க காண்டாகிடாதீங்க! icon biggrin அசரவைக்கும் Avatar   திரைவிமர்சனம் ) மாதிரி ஒன்று (பல) இருக்கும், மவனே! அது ஓடி வந்துதுன்னு வைங்க.. அந்த இடமே ரணகளமே தான்…. கடைசி சண்டையில் இவை எல்லாவற்றையும் அடித்து நொறுக்கிட்டு ஓடி வரும் பாருங்க! நம்ம ஆளுங்க டர்ர்ர்ர் ஆகிடுவாங்க! இதில் வரும் போர் விமானங்கள் யப்பா! என்று தலை கிறுகிறுக்க வைக்கிறது, இதை பார்த்தாலே எதிரி ஆள் பயத்திலே ஒண்ணுக்கு போய்டுவான் போல!

இவர்கள் “பண்டோரா” காட்டில் உள்ள தாவரங்கள், தரை பரப்பு, கொடிகள், பூச்சிகள் எல்லாம் மின்னுபவையாக சொர்க்கலோகம் போல காட்சி தருகின்றது.

படம் ஆரம்பித்து சாதாரணமாக செல்லும் படம் இந்த “பண்டோரா” காட்டை அடைந்தவுடன் நம்மை ஒரு புதிய உலகத்திற்கே அழைத்து செல்கிறது, மிகைப்படுத்தி கூறவில்லை.

Avatar9 அசரவைக்கும் Avatar   திரைவிமர்சனம்இங்கு பெரிய பெரிய (என்றால் உங்கள் கற்பனையில் உள்ளதை விட பல பல மடங்கு பெரியது) மரங்கள், கொட்டும் நீர்வீழ்ச்சிகள், அந்தரத்தில் தொங்கும் மலைகள் என்று ஜேம்ஸ் கேமரூனின் (மற்றும் அவரது குழுவினர்) கற்பனை திறன் புகுந்து விளையாடி உள்ளது.

ஜேக் மற்றும் அவரது காதலி தங்களது டிராகானில் ஒரு பயணம் செல்வார்கள் பாருங்க! உண்மையில் நாமே அவர்களுடன் அமர்ந்து செல்வது போல இருக்கும்..மேலே இருந்து ஜிவ்வென்று கீழு தாறுமாறான வேகத்தில் செல்லும் போது நமது அடிவயிறு ஜிலீர் என்கிறது. அவர்களை வேறு ஒரு பயங்கர டிராகன் துரத்தும் போது மரங்களுக்கு இடையே புகுந்து தப்பி செல்வார்கள், அவர்களுடன் நம்முடைய உடலும் வளைகிறது.. இதைப்போல அனுபவம் எனக்கு எந்த படத்திற்கும் கிடைத்தது இல்லை.

படைகள் இவர்களது ஒரு பகுதியை குண்டு போட்டு அழிக்க, அந்த அழகான அமைதியான இடம் நாசமாவதை கண்டு பொறுக்க முடியாமல் ஜேக்கின் காதலி கண்ணீர் விட்டு கதறும் போது நம்ம மனது கனத்து விடும்.

இவர்கள் அதி பயங்கரமான விமானங்கள் துப்பாக்கிகளை கொண்டு தாக்க, இந்த அப்பாவி நவிகள் வில் மற்றும் அம்பை வைத்து தாக்குவதை பார்க்கும் போது அடப்பாவமே! என்று இருக்கும்.. ஏன்யா! இப்படி பச்ச மண்ணை போட்டு அடிக்கறீங்க! என்று இருக்கும். இதில் கருப்பு புலி மாதிரி பயங்கரமாக வழுவழு தோற்றத்துடன் ஒரு மிருகம் இருக்கும்..அவ்வ்வ்வ் முடியல!

இது 3D படம் என்று அனைவருக்கும் தெரியும்! ஒரு இடத்தில் குண்டு வீசுவார்கள் அது ஒன்று வேகமாக நம்மை நோக்கி வரும், நான் பயந்து பின்னாடி நகர்ந்து விட்டேன்.. கலக்கல், ஆனால் இதைப்போல காட்சிகள் ரொம்ப குறைவு, நான் நிறைய எதிர்பார்த்தேன்.

“அவதார்” என்ற வார்த்தை இந்தியச்சொல்

படத்துல அப்ப குறையே இல்லையா! என்று நீங்கள் கேட்பது புரிகிறது..படத்தின் கதையே அரதபழசானது தான், அதை கூறிய விதம் தான் விஷயம். நவிகள் கூட ஆங்கிலம் பேசுகிறார்கள்.. icon surprised அசரவைக்கும் Avatar   திரைவிமர்சனம் இதைப்போல குறைகள் உண்டு ஆனால் அவை யாவும் படத்தின் தொழில்நுட்பத்தின் முன்பு அடிபட்டு விடுகிறது.

என்னங்க! நீங்க இப்படி படத்தோட காட்சிகளை கூறி விட்டீர்களே! சுவாராசியம் போய்டுமே! என்று நினைக்கவே தேவையில்லை.. காரணம் நீங்கள் தற்போது கற்பனை செய்து வைத்து இருக்கும் காட்சிகளை விட பல பல மடங்கு சிறப்பாக திரையில் காணலாம். நீங்கள் எதிர்பார்த்து செல்வதற்கு பல மடங்கு மேலே தான் காட்சிகள் இருக்கும். எனவே என்ஜாய் மாடி!

இது வரை படம் பார்க்காதவர்கள் படம் பார்க்கும் எண்ணம் இல்லாதவர்கள் கண்டிப்பாய் இந்த படத்தை பார்க்கும் படி கேட்டுக்கொள்கிறேன்…படம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் இதில் உள்ள தொழில் நுட்பத்தை அவர்கள் 12 வருட உழைப்பை பார்க்கவாவது நீங்கள் இந்த படத்தை பார்க்க வேண்டும். படத்தை பிடிக்காதவர்கள் கூட இதன் தொழில்நுட்பத்தை பாராட்டாமல் இருக்கவே முடியாது.

“அவதார்” மூன்றே நாளில் 232 மில்லியன் டாலர் வசூல் ஈட்டியுள்ளது.

“அவதார்” படம் முழுவதும் “அதகளம்”

Production year: 2009

Country: USA

Runtime: 161 mins

Director: James Cameron

Music: James Horner

Cinematography: Mauro Fiore

Cast: CCH Pounder, Giovanni Ribisi, Michelle Rodriguez, Sam Worthington, Sigourney Weaver, Stephen Lang, Zoe Saldana

Subscribe to கிரி Blog by Email

Subscribe to கிரி Blog by Google Reader

No related posts.

{ 32 comments… read them below or add one }

எப்பூடி..... December 22, 2009 at 12:56 AM

இன்னும் srilanka வில ரிலீஸ் ஆகல ; பார்க்கணும் ;)

Reply

பிரபாகர் December 22, 2009 at 2:53 AM

அசத்தல் கிரி!

நேற்றுதான் கேத்தியில் பார்த்தேன். இத படிச்சிட்டு போயிருந்தா இன்னும் ரொம்ப ரசிச்சி பாத்திருப்பேன்…(கதை கொஞ்சம் புரியல… இப்போ, கிரியால எல்லாம் கிளியர்). 3D டிக்கெட் கிடைக்கல, இன்னொரு தடவ பாத்துட வேண்டியதுதான்…

பிரபாகர்.

Reply

ஹாலிவுட் பாலா December 22, 2009 at 3:44 AM

தல… 12 வருடமெல்லாம் உழைக்கலீங்க. 2006-ல்தான் ஸ்க்ரிப்டே (இரண்டாம் முறை) எழுத ஆரம்பிச்சாங்க.

கலக்குங்க! :)

——

லிங்கிற்கு நன்றி!;)

Reply

நட்புடன் ஜமால் December 22, 2009 at 4:55 AM

நல்ல விமர்சணம் கிரி

பார்க்க தூண்டுகிறது.

Reply

R.Gopi December 22, 2009 at 8:30 AM

கிரி

உங்களின் “அவதார்” திரை விமர்சனம் அதகளம்….

அது என்ன இந்த படம் தமிழ் படம் மாதிரி இவ்ளோ நீளம் – 161 நிமிடங்கள்??!!

புலி உறுமுது
நான் அடிச்சா

இது மாதிரி காவிய பாடல்கள் இல்லாததே ஒரு சாதனைதான்….

Reply

குறை ஒன்றும் இல்லை !!! December 22, 2009 at 9:03 AM

3D கண்ணாடி போட்டு பாத்தீங்களா?

அப்போ அவதார் வேட்டைக்காரனுக்கு ஆப்பா?

Reply

குறை ஒன்றும் இல்லை !!! December 22, 2009 at 9:10 AM

//இது 3D படம் என்று அனைவருக்கும் தெரியும்! ஒரு இடத்தில் குண்டு வீசுவார்கள் அது ஒன்று வேகமாக நம்மை நோக்கி வரும், நான் பயந்து பின்னாடி நகர்ந்து விட்டேன்.. கலக்கல், ஆனால் இதைப்போல காட்சிகள் ரொம்ப குறைவு, நான் நிறைய எதிர்பார்த்தேன்.//

இங்கெல்லாம் அதுக்கு தனி காசாம் அதுக்கு தான் கேட்டேன்.. உடனே ஒழுங்கா பதிவ படிங்கன்னு திட்ட கூடாது !!!

Reply

வால்பையன் December 22, 2009 at 9:44 AM

என்னை பெரிதாக ஈர்க்கவில்லை இந்த படம்!

Reply

கோவி.கண்ணன் December 22, 2009 at 9:45 AM

வெள்ளக்காரனுவ 2012,அவதார்னு நம்ம பணத்தையெல்லாம் அள்ளிக்கிட்டுப் போறானுவ

Reply

ராமலக்ஷ்மி December 22, 2009 at 11:12 AM

அருமையான விமர்சனம்.

//இதில் உள்ள தொழில் நுட்பத்தை அவர்கள் 12 வருட உழைப்பை பார்க்கவாவது நீங்கள் இந்த படத்தை பார்க்க வேண்டும்.//

சரியான பாயிண்ட்தான். பார்த்து விடுகிறோம்:)!

Reply

ராமலக்ஷ்மி December 22, 2009 at 11:13 AM

தியேட்டரில்தான்:)!

//இதன் தொழில்நுட்பத்தை பாராட்டாமல் இருக்கவே முடியாது.//

அப்போதானே இது சாத்தியமாகும்:)!

Reply

KUMARAN December 22, 2009 at 11:37 AM

Dear Giri,

Avatar Movie:
+ points:
ScreenPlay
Navi Girl Acting
Background Music(Fantastic)
Computer Graphics

- Points:
3D Effects(I watched in
IMAX3D,but the 3D effects are not even up to Indian standard).
Few logical mistakes.

Despite the negative points it's a good movie to watch.
For better 3D Effects you can watch Harry Pooter 6.

Balakumaran.

Reply

வடுவூர் குமார் December 22, 2009 at 11:37 AM

Ok selected for viewing but don't know when it will come here(Muscat).

Reply

கலையரசன் December 22, 2009 at 12:22 PM

//அவதார்" என்ற வார்த்தை இந்தியச்சொல்//

"பண்டோரா" என்ற பேரு.. "பண்டாரம்" என்ற தமிழ்சொல்லில் இருந்து வந்திருக்குமோ???
:-) )

நால்லாயிருக்கு தலைவா விமர்சனம்!!

Reply

Sriram December 22, 2009 at 12:57 PM

//ஒரு இடத்தில் குண்டு வீசுவார்கள் அது ஒன்று வேகமாக நம்மை நோக்கி வரும், நான் பயந்து பின்னாடி நகர்ந்து விட்டேன்.. //

I also did the same :)

Reply

M Arunachalam December 22, 2009 at 1:46 PM

Giri,

I too watched 'Avatar' in 3D format. Though the movie was technically brilliant, it lacks a powerful & gripping story/screen-play. Because of that the emotional connect is missing in 'Avatar', which was not the case in Cameron's previous blockbusters like Titanic or Terminator 2 – Judgment Day or Aliens 2.

Once the initial euphoria of watching it in 3D vanishes in a few minutes, there is nothing in the movie which holds one's interest. May be, Cameron, instead of spending 12 years in perfecting the "performance capture' technology which he used to film the Na'vi scenes in Avatar, should have spent at least a year in perfecting the script with interesting incidents & definitely a unique & a monster kind of a climax.

I hope he will do that when he embarks on "Avatar 2", which is a very real possibility, according to Hollywood grapevine.

Reply

அஹோரி December 22, 2009 at 1:48 PM

அந்த படத்த பாத்துட்டு வந்ததிலிருந்து ஒரே 'தலைவலி' .

என்னன்னு … கூகிள் ல விசாரிச்சா …

http://3dmoviedude.com/?p=234

இப்படி சொல்றாங்க .
எது எப்படி இருந்தாலும் , படம் அட்டகாசம்.

Reply

கிரி December 22, 2009 at 2:29 PM

// eppoodi said…
இன்னும் srilanka வில ரிலீஸ் ஆகல ; பார்க்கணும் ;) //

திரைஅரங்கில் பார்த்தால் மட்டுமே சிறப்பு :-)

======================================================================

பிரபாகர் நான் கூட 3D இல்லாம பார்க்கணும் என்று இருக்கிறேன் :-)

======================================================================

// ஹாலிவுட் பாலா said…

தல… 12 வருடமெல்லாம் உழைக்கலீங்க. 2006-ல்தான் ஸ்க்ரிப்டே (இரண்டாம் முறை) எழுத ஆரம்பிச்சாங்க.//

பாலா எனக்கு மட்டும் என்னங்க தெரியும் செய்திகளில் படித்து தான்..அவர் டைட்டானிக் முன்னாடியே இது பற்றி யோசித்து வைத்து இருந்தாராம் அப்போது இதை போல தொழில்நுட்பம் இல்லையாம்… :-)

======================================================================

ஜமால் கண்டிப்பா பாருங்க

======================================================================

கோபி வேட்டைக்காரன் மேல செம கோபத்துல இருக்கீங்க போல் ;-)

இது பெரிய படம் தான்… இதை சிறியதாக எடுக்க முடியாது அவ்வளோ விஷயங்கள்

======================================================================

// குறை ஒன்றும் இல்லை !!! said…

3D கண்ணாடி போட்டு பாத்தீங்களா? //

ஆமாம்

//அப்போ அவதார் வேட்டைக்காரனுக்கு ஆப்பா//

அது வேறு இது வேறு :-)

//இங்கெல்லாம் அதுக்கு தனி காசாம் அதுக்கு தான் கேட்டேன்.. உடனே ஒழுங்கா பதிவ படிங்கன்னு திட்ட கூடாது !!//

:-) இங்கேயும் தான் ஆனால் வார இறுதியில் மட்டும்.

======================================================================

அருண் என்னைகூட அந்த "பண்டோரா" காட்டை அடையும் வரும் பெரிதாக ஈர்க்கவில்லை.

======================================================================

// கோவி.கண்ணன் said…

வெள்ளக்காரனுவ 2012,அவதார்னு நம்ம பணத்தையெல்லாம் அள்ளிக்கிட்டுப் போறானுவ//

நம்ம ஆளுங்க மொக்கை படமா கொடுத்தால் இப்படித்தான் ஆகும் ;-)

======================================================================

ராமலக்ஷ்மி திரை அரங்கில் மட்டும் பாருங்க… அப்போது தான் அதை முழுவதும் ரசிக்க முடியும்

======================================================================

குமரன் எனக்கு பொதுவா அறிவியல் மற்றும் மாயாஜால படங்கள் பிடிக்காது. விதிவிலக்காக கேமரூன் படங்கள் மற்றும் சில படங்கள். நீங்கள

Reply

M Arunachalam December 22, 2009 at 4:40 PM

Giri,

I expected Cameron to have come up with a better & more interesting & unique kind of incidents in avatar's screenplay. For eg. I would have imagined a climax wherein the Na'vis along with the Hero, "think" of an ingenious way to trap the occupiers from earth. May be use the lack of gravity in Pandora or try to unmask the army invaders so that they are unable to breath & die or some such thing which is Unique to that planet in order to differentiate it from every other movie. The way avatar has been taken now, except the 3D experience, no scene is different from any other movie which you might have seen earlier.

Reply

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ December 22, 2009 at 8:37 PM

நண்பருக்கு வணக்கம் ,

இந்த பதிவின் தலைப்பைப் போலவே , (அசரவைக்கும் "அவதர்" – திரைவிமர்சனம் )
உங்களின் விமர்சனமும் அசத்தல் வாழ்த்துகள் .

என்றும் அன்புடன்
சங்கரின் பனித்துளி நினைவுகள்
http://wwwrasigancom.blogspot.com

Reply

butterfly Surya December 23, 2009 at 1:44 AM

Thanx for sharing..

கிறிஸ்துமஸ் அன்று தான் பார்க்க டிக்கெட் கிடைச்சிருக்கு.

Reply

Arun December 23, 2009 at 2:57 AM

Ippa than padam pathutu vanthen… Giri thaaivar soli pogama irupoma… Aana Yenaku padatha kattilum unga vimarsanam romba pudichu iruku:)

Thanks,
Arun

Reply

ஆதி மனிதன் December 23, 2009 at 10:26 AM

எங்கே படத்தின் நிறைகளை மட்டும் கூறி விமர்சனத்தை முடித்து விடுவீர்களோ என நினைத்தேன்.

அனால் ஒரு நல்ல விமர்சனத்தின் அடையாளமாக அதில் உள்ள பெரிய குறையான "அறுந்த பழசான கதை" என்பதையும் மறக்காமல் குறிப்பிட்டதற்கு பாராட்டுக்கள்.

Reply

கிரி December 23, 2009 at 11:43 AM

அருண் நீங்க கூறியது போல புதிதாக எதுவுமில்லை, இன்னும் சில புதிய உத்திகளை பயன்படுத்தி இருக்கலாம். தற்போது எல்லாவற்றை பற்றியும் படம் எடுத்து விடுகிறார்கள்..புதிதாக எடுக்க வேண்டும் என்றாலே பெரிய சிரமம் தான்.. இவர் தற்போது உள்ள தொழில்நுட்பத்தில் கொஞ்சம் மாற்றம் செய்து பிரம்மாண்டமாக எடுத்து இருக்கிறார்.

ஒரு சில படங்களில் கிராபிக்ஸ் என்பது பட்டவர்த்தனமாக தெரியும் இதில் அதற்கு வாய்ப்பே கொடுக்காமல் எடுத்து இருக்கிறார்.

======================================================================

சங்கர் சூர்யா வருகைக்கு நன்றி.

சூர்யா கிறிஸ்த்மஸ் ஐ அவதாருடன் கொண்டாடுங்கள் :-)

======================================================================

அருண் உங்களுக்கு ரொம்ப குசும்பு.. ;-)

======================================================================

ஆதி மனிதன், படத்தில் முதல் பாதி குறிப்பாக பண்டோரா காட்டை அடையும் வரை என்னை கவரவில்லை..சொல்லப்போனால் ரொம்ப போராகத்தான் இருந்தது.. அதன் பிறகு அசத்தி விட்டார்கள்.

Reply

சிங்கக்குட்டி December 26, 2009 at 11:32 AM

முதலில் ஆன்லைனில் பார்க்க நினைத்து இருந்தேன்.

உங்கள் விமர்சனத்தை பார்த்தவுடன் திரைஅரங்கில் சென்றுதான் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.

Reply

ராமலக்ஷ்மி December 26, 2009 at 7:09 PM

விகடன் Good Blog-ல் :) !

Reply

mohamedkamil December 26, 2009 at 10:46 PM

இவ்வளவு கால அவகாசம் கொடுத்தும்
சத்யம் மற்றும் INOX தான் 3டி க்கு வழி செய்து இருக்கிறார்கள். நான் தேவியில் பார்த்தேன். உண்மையிலேயே அனைவரும் பார்க்க வேண்டிய படம்

Reply

கிரி December 28, 2009 at 11:40 AM

// சிங்கக்குட்டி said…
முதலில் ஆன்லைனில் பார்க்க நினைத்து இருந்தேன்.

உங்கள் விமர்சனத்தை பார்த்தவுடன் திரைஅரங்கில் சென்றுதான் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.//

என்னது ஆன்லைனில் பார்க்க நினைத்தீர்களா! ஐயையோ! இதற்கு நீங்க பார்க்காமலே இருக்கலாம்..திரையரங்கில் மட்டுமே பார்க்க கூடிய படம் இது.

======================================================================

// ராமலக்ஷ்மி said…

விகடன் Good Blog-ல் :) !//

எப்போதும் என் வளர்ச்சியில் ஆர்வம் காட்டும் உங்களுக்கு என் நன்றிகள் ராமலக்ஷ்மி

======================================================================

// mohamedkamil said…
இவ்வளவு கால அவகாசம் கொடுத்தும்
சத்யம் மற்றும் INOX தான் 3டி க்கு வழி செய்து இருக்கிறார்கள். நான் தேவியில் பார்த்தேன். உண்மையிலேயே அனைவரும் பார்க்க வேண்டிய படம்//

தேவி தற்போது தான் மறுசீரமைப்பு செய்து இருப்பதாக கேள்வி பாத்தேன்.. நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்.

Reply

ராஜ நடராஜன் December 28, 2009 at 12:58 PM

ஆளாளுக்கு (முக்கியமா ஹாலிவுட் பாலா) படத்தை பிரிஞ்சு மேஞ்சுடறீங்க.புதன்கிழமைக்குத்தான் ஐமேக்ஸ்க்கு டிக்கட்டே கிடைச்சிருக்குது.

Reply

கிரி December 28, 2009 at 9:25 PM

கொடுத்த வைத்த ஆளுங்க நீங்க ஐமேக்ஸ் ல பார்க்கறீங்க..இங்க ஐமேக்ஸ் இல்ல :-( ( நான் இரண்டாவது முறையாக (3D இல்லாம) சென்று பார்க்க போகிறேன்.

Reply

gonzalez January 6, 2010 at 2:12 PM

i was fooled by people saaying avatar is average movie with weak story. only after seeing the movie only i came to know the truth.

MOVIE IS AWESOME. I PLANNING TO GO FOR AVATAR SECOND TIME. IN SATYAM.

OH PEOPLE DONT GET FOOLED BY PEOPLE SAYING AVATAR IS BAD MOVIE.

avataar is must watch movie despite average story. visuals, character deveoplment, is very good.

this is not just another movie go watch it

Reply

r.v.saravanan kudandhai March 3, 2010 at 5:17 PM

கிரி அவதார் படம் இன்னும் நான் பார்க்கவில்லை (பார்க்ககூடாது என்று
இல்லை டயம் இல்லாததால் பார்க்கவில்லை ) உங்கள் விமர்சனம்
படித்த படித்தேன் கண்டிப்பாக இந்த வாரம் பார்க்கிறேன்

Reply

Leave a Comment

{ 1 trackback }

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed