உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை!

by கிரி on October 29, 2009

தமிழக மக்கள் பொதுவாகவே உணர்ச்சிகரமானவர்கள் அது சந்தோசமாகட்டும் வருத்தமாகட்டும் கோபமாகட்டும் அனைவரது எண்ணங்களும் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருக்கும். இதற்க்கு எடுத்துக்காட்டாக நமது தேர்தலையே கூறலாம்.

ராஜிவ் இறந்த போது ஒட்டு மொத்தமாக ஜெ க்கு ஒட்டு போட்டார்கள். பின் அவர் அடித்த வெளிப்படையான கொள்ளையை ஆடம்பரத்தை பார்த்து நொந்துபோய் ஒட்டுமொத்தமாக தோற்கடித்தார்கள்.

பின்னர் கலைஞரை குண்டு கட்டாக தூக்கி சென்றதை பார்த்து கொந்தளித்து பாராளுமன்ற தேர்தலில் 40/40 க்கு திமுக விற்கு கொடுத்தார்கள். இதை போல ஒட்டுமொத்த மக்களும் ஒரே மாதிரி தான் சிந்திக்கிறார்கள், மாற்றி சிந்திப்பவர்கள் ஒட்டு போடுவதில்லை icon wink உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! தற்போது இது மாறி வருகிறது, ஜெ கலைஞர் அரசை மைனாரிட்டி!!! அரசு என்று கூறும் அளவிற்கு.

angry2 உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை!

பதிவுலகத்திலையும் அவ்வாறே உள்ளது, ஏதாவது எதிர்ப்பு என்றால் எல்லோரும் சேர்ந்து கும்முவது ஆதரவு என்றால் கண்மூடித்தனமாக ஆதரவு தருவது.

நானும் இதை போலவே முன்பு இருந்தேன், எந்த விசயமாக இருந்தாலும் உடனே உணர்ச்சிவசப்படுவேன், கோபப்படுவேன் ஏன் என்று பொறுமையாக யோசிப்பது கிடையாது, சுர்ர்ருனு கோபம் வரும்.. அதனால் நானும் அவசரத்தில் உடனே ஒரு சில பதிவு போட்டு இருக்கிறேன். பின் ஒரு நாள் கழித்து கோபம் தணிந்து ச்சே! தேவையில்லாம அவசரப்பட்டுட்டோமோ! என்று வருத்தப்பட்டு இருக்கிறேன்.

என்கிட்டே உள்ள ஒரு நல்ல பழக்கம் தவறுகளை தொடர்ந்து செய்வதில்லை, கிடைக்கும் அனுபவத்தில் இருந்து தவறுகளை உடனடியாக திருத்திக்கொள்வேன், அதே போல இப்படி உணர்ச்சிவசப்பட்டதால் ஏற்பட்ட தவறுகளை சரியாக இனம் கண்டு என்னை மாற்றிக்கொண்டேன் மாற்றிக்கொண்டு இருக்கிறேன்.

எப்போதுமே உணர்ச்சிவசப்படுவதால் நாம் மேலும் மேலும் தவறு தான் செய்கிறோமே தவிர நாம் அதனால் செய்யும் தவறை உணருவதில்லை, நம் எதிர்ப்பை காட்டி விட்டதாகவே நினைத்து பெருமிதம் கொள்கிறோம்.

வாழ்க்கையின் அடுத்தகட்டத்திற்கு போகவேண்டும் என்றால் முதலில் அளவிற்கு அதிகமாக உணர்ச்சிவசப்படுவதை நிறுத்த வேண்டும். எதுவும் அளவோடு புரிந்து கொண்ட உணர்வோடு இருப்பதே சரியான செயலாக இருக்கும். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்ங்கறமாதிரி ஆத்திரத்தில் இருப்பவனுக்கு தன் முன்னே இருப்பது எல்லாமே தவறாகத்தான் தோன்றும், விளக்கினாலும் மண்டையில் ஏறாது.

விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள பழகவில்லை என்றால் நாம் இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டியது தான். ஒன்று நம் தரப்பு நியாயத்தை பொறுமையாக கூற வேண்டும் அல்லது ஒதுக்கி தள்ள வேண்டும். இவை இரண்டும் இல்லாமல் புழுங்கி கொண்டு கோபப்பட்டுக்கொண்டு இருப்பதில் இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. நம் செயல் நம் மனசாட்சிக்கு நியாயமாக இருந்தால் போதும் யாரும் யாரையும் திருப்தி படுத்த (முடியாது) வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, அதற்கான அவசியமும் இல்லை.

சமூகத்தில் பல சம்பவங்கள் நடக்கிறது அவை கோபம் தரக்கூடியதாகவும் இருக்கலாம், சந்தோசம் தரக்கூடியதாகவும் இருக்கலாம். கோபம் தரக்கூடிய செய்தி என்று ஒன்று இருந்தால் அதை அனைவரும் உடனே கண்டபடி விமர்சிக்கிறோம், அதில் உள்ள உண்மை என்ன! உடனே அவ்வாறு விமர்சிக்கலாமா!! என்ற எதையும் நாம் ஆராய்வதில்லை.

angry3 உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை!

நம்முடைய முதல் எண்ணம், கிடைத்த செய்தியை வைத்து உடனே காரசாரமாக விமர்சிக்க வேண்டும், இரண்டு நாள் கழித்து பார்த்தால் வரும் செய்தி நாம் பொங்கியதற்கு சம்பந்தமே இல்லாமல் மாறி இருக்கும், இருந்தாலும் நாம் திட்டினது திட்டினது தான். இதே கொஞ்சம் அமைதி காத்து இருந்தால் நமக்கு கொஞ்சம் யோசிக்க அவகாசம் கிடைத்து இருக்கும், நியாயமான விமர்சனமாக கொடுத்து இருக்கலாம். இதனால் எனக்கு தெரிந்து கிடைக்கும் ஒரே ஆதாயம் “ஹிட்ஸ்” மட்டுமே!!. போதை மருந்தாவது அதை பயன்படுத்தவர்களை மட்டுமே பாதிக்கிறது, இந்த “ஹிட்ஸ்” போதை அடுத்தவர்களை தான் அதிகம் பாதிக்கிறது.

எடுத்துக்காட்டாக நோபல் பரிசு பெற்ற திரு வெங்கட்ராமன் அவர்கள் கொடுத்த பேட்டியை பார்த்து இந்தியர்களை அவமானப்படுத்தி விட்டார் அப்படி கூறி விட்டார் இப்படி கூறி விட்டார் என்று கொந்தளித்து அனைவரும் பதிவு இட்டார்கள். அவர் பக்கம் உள்ள நியாயத்தை யாருமே கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. அவர் செய்த தவறு, தான் கூற நினைத்ததை வெளிப்படையாக கூறியதே. இதை புரிந்து எழுதியவர்கள் ஒரு சிலரே. அதில் பொறுமையாக அனைத்து பக்கமும் விமர்சித்து நடுநிலையாக எழுதி இருந்தது திரு பாலா சார் அவர்கள் மட்டுமே!

அப்படின்னா நாம கோபத்தையே காட்டக்கூடாதா! சொரணை இல்லாம இருப்பதா!! என்னய்யா இது அரைவேக்காட்டுத்தனமா இருக்கு! என்று நினைக்கிறீர்களா? நியாயமான கேள்வி தான். கோபம் இல்லை என்றால் அப்புறம் என்ன இருக்கு! அதுவும் இந்த காலத்தில் இதெல்லாம் இல்லை என்றால் நம்மை மஞ்ச மாக்கானாக நினைத்து விடுவார்கள். அப்புறம் என்னதாங்க பண்ணுறது! கோபப்படுங்க… ஆனால் கோபம் சரியாக புரிந்து கொண்டதாக இருக்கணும். கோபத்துடன் ஒருவரை கண்டபடி திட்டி விட்டு பின் அது தவறு என்று தெரிந்து என்ன பயன்…திட்டியது திட்டியது தானே! அவருக்கு ஏற்பட்ட மனஉளைச்சல் ஏற்பட்டது ஏற்பட்டது தானே!

angry1 உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை!

நாம் செய்தது தவறு என்று தெரிந்தும் வீம்புக்கு நம்மை நியாயப்படுத்தி பேசலாம், ஆனால் உண்மை என்ன என்பதை நாம் அறிவோம், நம் மனசாட்சி அறியும். சரி தவறு செய்து விட்டோம்! ஏற்றுக்கொள்ள தன்மானம் இடம் கொடுக்கவில்லை… ம்ம்ம் என்ன பண்ணுறது! விட்டு தள்ளுங்கள், ரொம்ப நல்லவனாக இருக்க வேண்டும் என்பதில்லை அடுத்த முறை தவறை திருத்திக்கொள்ளுங்கள், அப்போதும் சரி செய்யாமல் இப்படித்தான் இருப்பேன் என்றால் இழப்பு நமக்கு தான்.

பதிவுலகத்தில் ஒவ்வொரு பதிவு எழுதும் போது ஒவ்வொரு அனுபவம் கிடைக்கிறது, அட! பின்னூட்டத்தில் கூட கிடைக்குதப்பா! பல மாற்று கருத்துக்கள் கிடைக்கிறது. நாம் இப்படி எழுதி இருக்க கூடாது மாற்றி கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் அனுபவத்தை பெறுகிறேன்…எனக்கு கிடைத்த அனுபவங்கள் அளப்பரியது. தவறுகளில் இருந்து பாடங்கள் கற்று கொள்கிறேன். அதை அவமானமாக நினைப்பதில்லை, திருந்தி அல்லது திருத்தி கொள்ள கிடைத்த சந்தர்ப்பமாகவே கருதுகிறேன்.

angry4 உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை!

கோபத்துடன், யோசிக்காமல் எடுக்கப்படும் எந்த முடிவும் விமர்சனமும் சரியாக இருக்காது, அதில் எனக்கு எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. முன்பெல்லாம் எனக்கு பிடிக்காத விசயங்களை படித்தால் கோபம் வரும் அதிகமாக உணர்ச்சிவசப்படுவேன். தற்போது அப்படியா! சரி என்ற அளவிலே எடுத்துக்கொள்ள எனது அனுபவங்கள் உதவுகின்றன. விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள பழகி (கொண்டு)இருக்கிறேன். மற்றவர்கள் கருத்தையும் மதிக்க கற்றுக்கொண்டு இருக்கிறேன். இவை அனைத்தும் பதிவு எழுத ஆரம்பித்த பிறகே கிடைத்தது.

“காதலன்” படத்துல ஒரு வசனம் வரும் கோபமோ சந்தோசமோ கொஞ்சம் பொறுமையாக இருங்க என்று…அது உண்மையில் யாருக்கு பொருந்துமோ இல்லையோ நம் பதிவுலகத்திற்கு சரியாக பொருந்தும் icon smile உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! எதா இருந்தாலும் உடனே தைய தக்கான்னு குதிக்க வேண்டியது, அப்புறம் தவறு என்று தெரிந்த பிறகு திருட்டு முழி முழிக்க வேண்டியது.

ஒரு சிலர் தாங்கள் செய்யும் தவறுகளை உடனே கண்டு பிடித்து விடுவார்கள், அடுத்த முறை நேராமல் பார்த்துக்கொள்வார்கள். ஒரு சிலருக்கு மற்றவர்கள் சுட்டிகாட்டினால் மட்டுமே தங்கள் தவறு புரியும். ஒரு சிலர் மற்றவர்கள் சுட்டி காட்டினாலும் ஏற்றுக்கொள்ளாமல் தாம் கூறுவது தான் சரி என்று கூறுவார்கள்.

மேற்கூறியதில் நான் முதல் வகை, நீங்கள் எந்த வகை என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

No related posts.

{ 20 comments… read them below or add one }

பிரபாகர் October 29, 2009 at 7:22 AM

ம்…. பக்குவப்பட்டுக்கொண்டு வருகிறீர்கள் கிரி. இந்நிலை தான் உயர்வுக்கு வழி வகுக்கும்.

பிரபாகர்.

Reply

ராமலக்ஷ்மி October 29, 2009 at 7:49 AM

அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் கிரி. உங்கள் பதிவின் மூலமாகவே பாலா அவர்களின் இடுகையை வாசிக்க வாய்த்தது. முன்னதாக எனது கருத்தும் அதுவாகவே இருந்த்படியால், வரிக்கு வரி வழிமொழியத் தோன்றியது என்பதை உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

Reply

ஈ ரா October 29, 2009 at 8:57 AM

//ஒரு சிலர் தாங்கள் செய்யும் தவறுகளை உடனே கண்டு பிடித்து விடுவார்கள், அடுத்த முறை நேராமல் பார்த்துக்கொள்வார்கள். ஒரு சிலருக்கு மற்றவர்கள் சுட்டிகாட்டினால் மட்டுமே தங்கள் தவறு புரியும். ஒரு சிலர் மற்றவர்கள் சுட்டி காட்டினாலும் ஏற்றுக்கொள்ளாமல் தாம் கூறுவது தான் சரி என்று கூறுவார்கள்.
//

//மேற்கூறியதில் நான் முதல் வகை, நீங்கள் எந்த வகை என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். //

சரிதான்…நேர்மையான சுயமதிப்பீடுதான் விடை தர முடியும்.

//கோபப்படுங்க… ஆனால் கோபம் சரியாக புரிந்து கொண்டதாக இருக்கணும். கோபத்துடன் ஒருவரை கண்டபடி திட்டி விட்டு பின் அது தவறு என்று தெரிந்து என்ன பயன்…திட்டியது திட்டியது தானே! அவருக்கு ஏற்பட்ட மனஉளைச்சல் ஏற்பட்டது ஏற்பட்டது தானே!
//

பின்ன எப்படிங்கண்ணே கோபப்படுறது..கண்டுக்காம ஒதுங்கிடலாங்கறீங்களா? அல்லது கோபத்தைக் காட்ட வேறு ஏதாவது நல்ல வழி இருந்தா சொல்லுங்களேன்.. புண்ணியமாப் போவும்..

Reply

ஈ ரா October 29, 2009 at 9:01 AM

பாலா சாரின் அந்த பதிவு அருமையாக இருந்தது….அதன் பிறகு வந்த புதிய தலைமுறையிலும், துக்ளக்கிலும் அதேமாதிரி நன்றாக கூறி இருந்தார்கள்.

Reply

குறை ஒன்றும் இல்லை !!! October 29, 2009 at 9:26 AM

என்னமோ போங்கண்ணே……

Reply

வடகரை வேலன் October 29, 2009 at 9:53 AM

// கோபத்துடன், யோசிக்காமல் எடுக்கப்படும் எந்த முடிவும் விமர்சனமும் சரியாக இருக்காது //

மொத்தக் கட்டுரையின் சாராம்சமே இதுதான். நல்ல பக்குவம் உங்களுக்கு. வாழ்த்துக்கள்.

Reply

குறை ஒன்றும் இல்லை !!! October 29, 2009 at 10:00 AM

இந்த கைப்பக்குவம், மனப்பக்குவம் மாதிறி இது பிளாக் பக்குவமோ!!!!!!!!!

Reply

குறை ஒன்றும் இல்லை !!! October 29, 2009 at 10:01 AM

லேட் நைட் பாபா இல்லே முத்து பாத்தீங்களாண்ணே?

ஆனா உங்க கருத்த யாரும் மறுக்க முடியாதுண்ணே !!!

Reply

வால்பையன் October 29, 2009 at 10:59 AM

கருத்து சொல்வதும் உணர்ச்சிவசப்படுதலில் ஒரு வகையா!?

(சும்மா கோபம் வருதான்னு டெஸ்ட் பண்ணேன்)

Reply

மானஸ்தன் October 29, 2009 at 11:26 AM

சரிங்க… அடுத்த தடவ அந்த அம்மாவுக்கே ஓட்டு போட்டுர்றேன்!!! ;)

Reply

எம்.எம்.அப்துல்லா October 29, 2009 at 11:50 AM

"உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை!"

//

எங்களுக்கு எப்படி இருக்கணும்னு எங்களுக்குத் தெரியாதா?? இதையெல்லாம் எங்களுக்கு எடுத்துச் சொல்லி திருத்த நீங்க யாரு?? நீங்க என்ன எங்களுக்கு மாமனா?மச்சானா?

சாரி கொஞ்ச‌ம் உண‌ர்ச்சி வ‌ச‌ப்ப‌ட்டுட்டேன் ஹி…ஹி..ஹி…

Reply

எம்.எம்.அப்துல்லா October 29, 2009 at 11:51 AM

ஜோக் அப்பார்ட், சரியான நேரத்தில் சரியான இடுகை அண்ணே.

Reply

மா.குருபரன் October 29, 2009 at 12:14 PM

//நம் செயல் நம் மனசாட்சிக்கு நியாயமாக இருந்தால் போதும் யாரும் யாரையும் திருப்தி படுத்த (முடியாது) வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, அதற்கான அவசியமும் இல்லை//

நிட்சயமாக உண்மை தான் நண்பரே…..இன்றைய இந்த சமுதாயம் மாற்றுக்கருத்துகளை உள்வாங்க மறுக்கிறது. ஏற்றுக்கொள்கிறோம் அல்லது இல்லை என்பதற்கப்பால் அவற்றையும் நாம் கருத்தில் எடுக்கவேண்டும். மனதில் பட்டதை உடனடியாகவே வெளிப்படுத்துவது எம்மை அடுத்தவர் மீது ஏற்படும் காழ்ப்புணர்ச்சியில் இருந்து தடுத்து எம்மை நல்ல வழியில் செல்ல வழிவகுக்கிறது என்பது என் எண்ணப்பாடாக இருக்கிறது. ஆனாலும் எமது கருத்து கோபத்தின் வெளிப்பாடாக வரும் போது அதற்கு அங்கிகாரம் குறைவாகவே உள்ளது..

மிகவும் நல்ல பதிவு நண்பரே….

Reply

வானம்பாடிகள் October 29, 2009 at 1:33 PM

தற்கொலை மாதிரி அந்த நொடி தவிர்த்தால் ஒரு உயிர் பிழைக்கும். ஆமாம் கிரி, வார்த்தையால் கொல்வதும் கொலைதான். நல்ல பயனுள்ள பதிவு. என்னைச் சுட்டியமைக்கு நன்றியும்.

Reply

ரோஸ்விக் October 29, 2009 at 6:57 PM

ஐ, ஐ நண்பரு சத்குரு கிரி ஆகிட்டாரு….(ஏய் யாருப்பா அது சத்குரு என்ன பெரிய…இவரானு கோபப்படுறது….?)

ஆபீஸ்-ல அடுத்த ஷிபிட்டுக்கு வாங்க…என் கோபத்தை காட்டுறேன்….:-)
அருமையான பதிவு. வழக்கம் போல கலக்குங்க நண்பா!

Reply

கிரி October 30, 2009 at 10:33 AM

நன்றி பிரபாகர்

=============================================================

// ராமலக்ஷ்மி said…
அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் கிரி. உங்கள் பதிவின் மூலமாகவே பாலா அவர்களின் இடுகையை வாசிக்க வாய்த்தது. //

நானும் இது பற்றி எழுத நினைத்து இருந்தேன், ஆனால் இனி இதற்கு மேல் எழுத ஒன்றும் இல்லாததால் விட்டு விட்டேன் :-)

==============================================================

// ஈ ரா said..
பின்ன எப்படிங்கண்ணே கோபப்படுறது..கண்டுக்காம ஒதுங்கிடலாங்கறீங்களா? அல்லது கோபத்தைக் காட்ட வேறு ஏதாவது நல்ல வழி இருந்தா சொல்லுங்களேன்.. புண்ணியமாப் போவும்//

என்ன ஈரா! அதைத்தான் பதிவிலேயே கூறி இருக்கிறேனே!

நான் கோபப்பட வேண்டாம் என்று எங்கும் கூறவில்லையே! நீங்கள் கோபப்பட்டு திட்டுங்கள் ஆனால் அதை சரியாக புரிந்து கொண்டு தவறு நம் மீது இல்லை என்று தெளிவாக புரிந்து கொண்டு செய்யுங்கள் என்றே கூறுகிறேன்! இரண்டு நாள் கழித்து இப்படி செய்து இருக்க கூடாது! என்று யோசித்தால் ..அப்ப தவறு தானே செய்து இருக்கிறோம். (தவறு என்பதையே உணராமல் இருந்தால் அதற்க்கு ஒன்றும் செய்ய முடியாது :-) )

உண்மையில் நாம் இப்படி கோபப்படுவது கூட நமக்கு ஆத்ம திருப்தி மட்டுமே அளிக்கும், அதனால் பெரிய பலன் முடிவில் இருக்காது என்பதே உண்மை. யோசித்து பாருங்கள்!

"அப்படின்னா நாம கோபத்தையே காட்டக்கூடாதா! சொரணை இல்லாம இருப்பதா!! என்னய்யா இது அரைவேக்காட்டுத்தனமா இருக்கு! என்று நினைக்கிறீர்களா? நியாயமான கேள்வி தான். கோபம் இல்லை என்றால் அப்புறம் என்ன இருக்கு! அதுவும் இந்த காலத்தில் இதெல்லாம் இல்லை என்றால் நம்மை மஞ்ச மாக்கானாக நினைத்து விடுவார்கள். அப்புறம் என்னதாங்க பண்ணுறது! கோபப்படுங்க… ஆனால் கோபம் சரியாக புரிந்து கொண்டதாக இருக்கணும். கோபத்துடன் ஒருவரை கண்டபடி திட்டி விட்டு பின் அது தவறு என்று தெரிந்து என்ன பயன்…திட்டியது திட்டியது தானே! அவருக்கு ஏற்பட்ட மனஉளைச்சல் ஏற்பட்டது ஏற்பட்டது தானே!"

இன்னும் சந்தேகம் உள்ளதா! :-)

=============================================================

வடகரை வேலன் கருத்திற்கு நன்றி

=============================================================

// குறை ஒன்றும் இல்லை !!! said…
இந்த கைப்பக்குவம், மனப்பக்குவம் மாதிறி இது பிளாக் பக்குவமோ!!!!!//

பிளாக் பக்குவம் கூட மன பக்குவத்தில் உள்ளடக்கியது தான்!

//லேட் நைட் பாபா இல்லே முத்து பாத்தீங்களாண்ணே? //

அப்ப ரஜினி படம் பார்த்தால் பக்குவம் வரும்னு சொல்றீங்க! நன்றி ;-) (இனி வரும் சமாளிப்பு பதில் ஏற்றுக்கொள்ளப்படாது :-D )

==============================================================

// வால்பையன் said…
கருத்து சொல்வதும் உணர்ச்சிவசப்படுதலில் ஒரு வகையா!?//

கண்டிப்பா அதில் என்ன சந்தேகம்? அப்புறம் நீங்க கருத்து என்று கூறியதும் நினைவிற்கு வந்தது..பின்னூட்டங்கள் பற்றி. அது பற்றி ஒரு பதிவு விரைவில் இடவேண்டும்.

//சும்மா கோபம் வருதான்னு டெஸ்ட் பண்ணேன்//

:-) வரும் ஆனா வராது.

=============================================================

// மானஸ்தன் said…
சரிங்க… அடுத்த தடவ அந்த அம்மாவுக்கே ஓட்டு போட்டுர்றேன்!!! ;) //

:-)

=============================================================

// எம்.எம்.அப்துல்லா said…
சாரி கொஞ்ச‌ம் உண‌ர்ச்சி வ‌ச‌ப்ப‌ட்டுட்டேன் ஹி…ஹி..ஹி…//

:-) ) நான் கூட நீங்க "அந்த" உணர்ச்சி பற்றி ஏதாவது சொல்வீர்களோ என்று நினைத்தேன் ;-)

//ஜோக் அப்பார்ட், சரியான நேரத்தில் சரியான இடுகை அண்ணே.//

நன்றி அப்துல்லா!

==============================================================

//குருபரன் said..
எமது கருத்து கோபத்தின் வெளிப்பாடாக வரும் போது அதற்கு அங்கிகாரம் குறைவாகவே உள்ளது..//

அதை நாம் எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதும் முக்கியம்.

===========================================================

பாலா சார் விக்டர் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

Reply

சிங்கக்குட்டி October 31, 2009 at 1:50 AM

கிரி திரும்ப ஒரு மெயில் அனுபிவிட்டேன் என் மொபைல் எண்ணுடன், உங்களுக்கு நேரம் கிடைத்தால் பார்ப்போம்.

நன்றி :-)

Reply

கிரி October 31, 2009 at 8:28 AM

சிங்கக்குட்டி என்ன காரணமோ தெரியவில்லை..நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் எதுவும் இதுவரை வரவில்லை. என்ன தவறு என்றும் புரியவில்லை.

உங்கள் மின்னஞ்சலை கொடுங்கள் உங்களை தொடர்பு கொள்கிறேன்.

Reply

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ November 2, 2009 at 7:16 PM

அற்புதமான படைப்புகள் வாழ்த்துக்கள் !

நண்பர்களே இதுவரை திருடப்படாதா உங்கள் குட்டி இதயங்களையும் சத்தம் இல்லாமல் திருடி செல்ல விரைவில் வருகிறது இந்த சங்கரின் அதிரடி படைப்பான கரை தொடாத கனவுகள் உண்மை சம்பவங்கள் ஒரு தொடர்கதையாக ,,,,
http://wwwrasigancom.blogspot.com/
shankarp071@gmail.com

Reply

r.v.saravanan kudandhai January 19, 2010 at 1:32 PM

கிரி அருமையான பதிவு

ஒரு சிலர் தாங்கள் செய்யும் தவறுகளை உடனே கண்டு பிடித்து விடுவார்கள், அடுத்த முறை நேராமல் பார்த்துக்கொள்வார்கள்

நானும் இந்த வகை தான்

ஏனெனில் நாம் இவ்வுலகில் அறிந்தவற்றை
விட அறிந்து கொள்ளாதவை நிறைய இருக்கிறது என்பது எனது கருத்து

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed