திரை உலகம் Vs பத்திரிக்கை உலகம்

by கிரி on October 12, 2009

Bhuvaneswari திரை உலகம் Vs பத்திரிக்கை உலகம்
புவனேஸ்வரியை கைது செய்த போது பத்தோடு பதினொன்றாக இருந்த பிரச்சனை “நான் மட்டும் இளிச்சவாயனா என்னை மட்டும் கைது செய்யறீங்க! இது போல பல நடிகைகள் இருக்காங்க அவங்க பேரையும் போடுங்க..நான் அவங்க பேரையும் சொல்லப்போறேன்” என்று புவனேஸ்வரி பேட்டி அளித்தபோது பரபரப்பு தொற்றிக்கொண்டது.
இந்நிலையில் “தினமலர்” பத்திரிக்கை தனக்கு கிடைத்த செய்தியாக! படத்துடன் நடிகைகள் படத்தை போட மொத்த திரையுலகமும் கொந்தளித்து விட்டது எப்படி ஆதாரம் இல்லாமல் இப்படி எழுதலாம் (படத்தை போடலாம்) என்று..
dinamalar திரை உலகம் Vs பத்திரிக்கை உலகம்

இதன் பிறகு நடந்த கூட்டத்தில் பேசிய நடிகைகள் மற்றும் நடிகர்கள் ஆவேசமாக பேசி தங்கள் எதிர்ப்புகளை பத்திரிக்கைகளுக்கு தெரிவித்தார்கள், பத்திரிக்கைகளால் இதுவரை கிண்டலடிக்கப்படவர்கள் எல்லாம் இதில் தங்கள் ஆத்திரத்தை கொட்டி விட்டார்கள். இதனிடையே சம்பந்தப்பட்ட பத்திரிக்கையாளர் “லெனின்” கைது செய்யப்பட்டார்.

நடிகர்கள் நடிகைகள் பேசும் போது பலர் உணர்ச்சி வேகத்தில் ஆபாசமாக கீழ்த்தரமாக பேசியதாக பத்திரிக்கையாளர்கள் கோபமடைந்து அவ்வாறு பேசியவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர். அதோடு “கலைஞர் அவர்களை நடிகை ஷகீலா போன்றவர்கள் சந்திக்க முடிகிறது! ஆனால் பத்திரிக்கையாளர்கள் சந்திக்க முடியவில்லை அதனால் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று கூறி உள்ளார்கள்.
vivek%2Bsathyaraj%2Bvijaykumar திரை உலகம் Vs பத்திரிக்கை உலகம்“தினமலர்” இவ்வாறு படத்துடன் செய்தி போட்டது மிகப்பெரிய தவறு தான், நடிகைகளை பற்றி பொதுவாக யாருக்கும் நல்ல எண்ணம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை ஒரு சிலர் விதிவிலக்காக இருக்கலாம். இது ஒருவரையொருவர் பார்க்கும் போது பேசலாம் அல்லது விவாதிக்கலாம் ஆனால் அதை எழுத்தில் கொண்டு வருவது என்பது முடியாது.
அவர்கள் உண்மையிலே பாலியல் தொழில் செய்வதாக இருந்தால் ஆதாரம் இருந்தால் செய்தியாக போடலாமே! யார் என்ன கேட்கப்போகிறார்கள் என்ன கேட்க முடியும்! புவனேஸ்வரியை ஆதாரத்துடன் பிடித்தார்கள் செய்தியாக போட்டார்கள் யார் என்ன கேட்க முடிந்தது!
பத்திரிக்கை சுதந்திரம் என்ற ஒரு வார்த்தையில் அனைத்தையும் செய்கிறார்கள் ஆனால் பத்திரிக்கை தர்மம் என்ற ஒன்றை அனைவரும் மறந்து விட்டார்கள்.
dinamani திரை உலகம் Vs பத்திரிக்கை உலகம்

பத்திரிக்கையாளர்கள் திரை நிகழ்ச்சிகளை புறக்கணிப்பது என்று முடிவு செய்து இருப்பதாக செய்திகளில் வந்தது..இதெல்லாம் நடக்கிற காரியமா! திரைச்செய்தி இல்லாம பத்திரிக்கையே நடத்த முடியாது என்பதே உண்மை குறிப்பாக தமிழ் பத்திரிக்கைகள். எனக்கு தெரிந்து குறைந்த அளவு திரைச்செய்திகளை தருவது “தினமணி” மட்டுமே மற்றும் நடிகை நடிகர்கள் பற்றிய திரை செய்திகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பது இப்பத்திரிக்கை ஒன்று தான்.

rajini திரை உலகம் Vs பத்திரிக்கை உலகம்
வெள்ளிக்கிழமை சர்குலேசன் அதிகமாக போவது எதனால்? தினமும் திரைச்செய்தி எதனால்? வாரபத்திரிக்கைகளில் திரைசெய்திகளே பெரும்பாலான பக்கங்களை ஆக்கிரமித்துள்ளது எதனால்? இவர்களை வைத்து செய்திகளை போட்டு சர்குலேசனையும் அதிகரித்துக்கொள்கிறார்கள் ஆனால் இதைப்போல பத்திரிகை சுதந்திரம் என்கிற பெயரில் மோசமாகவும் நடந்து கொள்கிறார்கள் .
ஹலோ! அப்படின்னா இவர்களை பற்றி செய்தி போடுவது என்பதால் இவர்களை பற்றி தவறாகவே எழுதக்கூடாதா! என்று கேட்பது புரிகிறது சரியான ஆதாரம் இருந்தால் தாராளமாக எழுதட்டுமே யார் என்ன கேட்கப்போகிறார்கள்.
குறைந்த பட்ச செய்தியை அடிப்படையாக வைத்து எழுத உரிமை உண்டு என்றால் அதற்காக என்ன வேண்டும் என்றாலும் எழுதலாமா!
sarathkumar திரை உலகம் Vs பத்திரிக்கை உலகம்
இதே ஒரு நடுத்தர குடும்பத்து பெண்ணை குறைந்த பட்ச ஆதாரத்தோடு செய்தி வெளியிடுகிறோம் என்று வெளியிட்டு நாளைக்கு அது இல்லை பொய் என்று தெரியவந்தால் அந்த பெண்ணின் நிலைமை…. ஒரு ஓரமாக குட்டியாக மன்னிப்பு கேட்டு விட்டால் எல்லாம் சரியாகி விடுமா!
வெளியே போகும் போது தெரிந்தவர்கள் கிண்டலடிக்க மாட்டார்களா! அவதூறு கூற மாட்டார்களா! இப்படி சொல்கிறவர்கள் எவருமே பாதிப்பு அவர்களுக்கு வரும் போது தான் அதன் வலியை உணர்ந்து கொள்ள முடியும் அது வரை என்ன வேண்டும் என்றாலும் பேசலாம் கிண்டலடிக்கலாம்.
அடியை கூட தாங்கி கொள்ளலாம் காயம் ஆனால் ஆறி விடும் ஆனால் மற்றவர்கள் கூறும் ஊசி போன்ற வார்த்தைகளை அவமானங்களை தாங்க எவராலும் முடியாது…. அதுவும் பெண் என்றால் இன்னும் கொடுமை.
திரைத்துறையினர் பேசும் போது ஆபாசமாக பேசியதாக பத்திரிகையாளர்கள் கொந்தளித்து விட்டார்கள் அதே உணர்வுகள் தான் திரைத்துறையினருக்கும் இருக்கும் என்பதை ஏன் மறந்தார்கள்? ஆதாரமில்லாமல் தங்கள் படத்தை போடும் போது அவர்கள் மனமும் இப்படித்தானே கோபப்பட்டு இருக்கும். அவர்கள் உண்மையிலே தவறு செய்து இருந்தால் ஆதாரத்துடன் செய்தி போடுங்கள். அவர்கள் பாலியல் தொழில் செய்கிறார்களா! இல்லையா! என்பது அடுத்த பிரச்சனை.
sripriya திரை உலகம் Vs பத்திரிக்கை உலகம்
திரைத்துறையினர் ஒரு சிலர் செய்த தவறு அனைத்து பத்திரிக்கையாளர்களையும் கேவலமாக திட்டி விட்டார்கள். கூட்ட ஆரம்பத்தில் ராதாரவி பார்த்து.. உணர்ச்சிவசப்படாம பேசுங்க! என்று கூறியதையும் மீறி உணர்ச்சி வேகத்தில் பேசி விட்டார்கள். பத்திரிக்கையாளர்கள் அனைவருமே இதை போல எழுதுவதில்லை, நேர்மையாக எழுதுபவர்களும் உள்ளனர்.
இதனால் இவர்களுக்கே நஷ்டம் காரணம் தற்போது பிரச்சனை அவ்வாறு பேசியவர்களையும் கைது செய்யுங்கள் என்று திரும்பி வேறு பக்கம் போய் விட்டது. இவர்கள் சரியான முறையில் பேசி இருந்தால் பிரச்சனை வேறு பக்கம் திரும்பாமல் இருந்து இருக்கும், இவர்கள் எதிர்ப்பிற்கும் வலு இருந்து இருக்கும்.
தற்போது இவர்கள் இத்தனை சம்பளம் பெற புகழ் பெற மிக முக்கிய காரணம் பத்திரிக்கைகள் தான், அவர்கள் தரும் செய்திகள் தான்.
திரையில் நடிப்பதால் மட்டும் இத்தனை ஆதரவை பெற்று விட முடியாது, அவர்கள் பற்றிய நல்ல விஷயத்தை அவர்கள் திறமையை புகழை மக்களிடையே கொண்டு செல்வதே பத்திரிக்கைகள் தான். இதை அந்த கூட்டத்தில் உணர்ந்து பேசியவர் நடிகர் “விஜயகாந்த்” மற்றும் “தாமு” மட்டுமே.
surrya திரை உலகம் Vs பத்திரிக்கை உலகம்
பத்திரிக்கைகளும் தங்கள் பொறுப்பை உணர்ந்து எழுத வேண்டும், இவர்களும் இந்த சமுதாயத்தில் ஒரு அங்கம் தான், வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல. மற்றவர்களை பற்றி எழுதும் போது தங்கள் நிலையிலும் இருந்து யோசித்து எழுத வேண்டும். இவர்களுக்கு இதை போல செய்தி போடுவது ஒரு நாள் பரபரப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்நாள் அவமானம், இது திரைத்துறையினர் மட்டுமல்ல அனைவருக்கும் பொருந்தும்.
முடிவாக திரை உலகம் இல்லாமல் பத்திரிக்கை உலகம் இல்லை, பத்திரிக்கை உலகம் இல்லாமல் திரை உலகம் இல்லை. இருவரும் முறைத்துக்கொண்டால் நஷ்டம் இருவருக்குமே தான்.
பலரும் இந்த பிரச்னையை பற்றி பத்திரிக்கைகளிலும் இணைய தளங்களிலும் படித்து இருக்கலாம், அது பற்றிய பல்வேறு கருத்துக்களை வைத்து இருக்கலாம். படித்ததற்கும் அதை திரையில் பார்ப்பதற்கும் நிறைய வித்யாசம் உள்ளது.
எனவே இந்த வீடியோவை பார்க்கவும் அப்போது நீங்கள் இந்த பிரச்சனை பற்றி பேசிய நபர்கள் பற்றி வைத்து இருந்த மதிப்பீடுகள் மாறலாம்.

வீடியோ1         வீடியோ2

திரை உலகத்தையும் பத்திரிக்கை உலகத்தையும் ஒரு பிடிபிடித்து இருக்கும் “தினமணி”யின் தலையங்கம் தரம் தாழ்கிறோமே! 

No related posts.

{ 42 comments… read them below or add one }

ஆ.ஞானசேகரன் October 12, 2009 at 9:33 AM

்ம்ம்ம்ம்ம்…..

Reply

வானம்பாடிகள் October 12, 2009 at 9:36 AM

வசதிக்கு தாழறதும் உயரத்துக்கு போவதும் அவங்க தர்மம். செய்தி போடட்டும். அது செய்தியாக இருக்கட்டும். விலைப்பட்டியல் ஏன் கிரி. இதனால் என்ன வரப்போகிறது? பத்திரிகை விமரிசனம் எப்படியோ, நடிகர்கள் பேச்சும் எப்படியோ, உங்கள் இடுகை நாகரீகமாக இருக்கிறது.

Reply

Shirdi.saidasan of Menporul.co.cc October 12, 2009 at 9:36 AM

//இதனால் இவர்களுக்கே நஷ்டம் காரணம் தற்போது பிரச்சனை அவ்வாறு பேசியவர்களையும் கைது செய்யுங்கள் என்று திரும்பி வேறு பக்கம் போய் விட்டது//

சரியான கண்ணோட்டம்.

Reply

பிரபாகர் October 12, 2009 at 9:38 AM

நடிகைகள் அவ்வளவு ஒன்றும் யோக்கியமானவர்கள் என்பது ஊரறிந்த உண்மை. ரசிகர்களால் வாழும் சில நாய்கள், நிறைய குலைக்கும்போது மனம் மிக கஷ்டப்படுகிறது. எல்லோரையும் ஒதுக்கவேண்டும் கிரி.

பிரபாகர்.

Reply

Robin October 12, 2009 at 9:39 AM

//இதே ஒரு நடுத்தர குடும்பத்து பெண்ணை குறைந்த பட்ச ஆதாரத்தோடு செய்தி வெளியிடுகிறோம் என்று வெளியிட்டு நாளைக்கு அது இல்லை பொய் என்று தெரியவந்தால் அந்த பெண்ணின் நிலைமை…. // – பொருத்தமில்லாத எடுத்துக்காட்டு. குடும்பப் பெண்ணையும் நடிகையும் ஒப்பிட்டு பேசுவது தவறு.
இதைதவிர இப்பதிவிலுள்ள அனைத்து கருத்துக்களும் சரியாகத்தான் தோன்றுகிறது.

Reply

வந்தியத்தேவன் October 12, 2009 at 9:41 AM

நல்லதொரு பதிவு கிரி. என் கேள்வி என்னவென்றால் பிரபல ஊடகங்கள் பல ஏன் இந்தச் செய்திகளை இருட்டடிப்புச் செய்கின்றன?

Reply

Sadhasivam October 12, 2009 at 10:10 AM

SaDhA

"பத்திரிக்கைகளால் இதுவரை கிண்டலடிக்கப்படவர்கள் எல்லாம் இதில் தங்கள் ஆத்திரத்தை கொட்டி விட்டார்கள்"…….
இதுதான் உண்மை கிரி…இதை ஒரு வாய்ப்பாக உபோயகபடுத்திய சில நடிகர்கள் தங்களது உண்மை பண்பினை வெளிச்சம் போட்டு நமக்கு காண்பித்தார்கள் என்பதே நாம் ஆறுதல் பட்டுக்கொள்ளும் ஒரு விசயமாகும்

Reply

ராமலக்ஷ்மி October 12, 2009 at 11:00 AM

நடுநிலையான இடுகை.

Reply

பிரபா October 12, 2009 at 11:20 AM

நடு நிலையான செய்திகள் வரவேற்கப்படும்…..
இருந்தாலும் பத்திரிகைத்துறை…. மிகவும் சிரம மானது.
தெரியாமலா சொன்னாங்க…
" இந்தியாவின் மிக விலையுயர்ந்த தற்கொலை….. என்று.

Reply

M Arunachalam October 12, 2009 at 11:44 AM

Giri,

A balanced view. However, I don't agree with your following comparison:
//இதே ஒரு நடுத்தர குடும்பத்து பெண்ணை குறைந்த பட்ச ஆதாரத்தோடு செய்தி வெளியிடுகிறோம் என்று வெளியிட்டு நாளைக்கு அது இல்லை பொய் என்று தெரியவந்தால் அந்த பெண்ணின் நிலைமை…. //

Even in this day & age, in the Indian context, you can't compare an actress with a family lady – whatever may be the circumstance.

As far as the press in TN is concerned, they neither have professional competence nor ethics to bring out the truth nor write the truth in any matter, leave alone a juicy news about actresses. They have to depend on some vested interest or other, like police or Govt. or a politician. All their talk of 'investigative journalism' are just a hog-wash. And TN press is notorious for the way they can be either bought over (with drinks or money or favours) or coerced into submission (like it happened in Emergency). The press in TN don't even have the guts to ask uncomfortable questions to a ruling CM or even an ex-CM – they are so afraid of getting the wrath of either party. So, I will be surprised only if they write something which is balanced or truthful.

Following is one of the resolutions passed by the Madras Journalists in the aftermath of the arrest of the Dinamalar's news editor. See how laughable or idiotic the resolution is and how it gives away their shenanigans.

''சினிமா தொடர்பாக இனிமேல் உள்ளது உள்ளபடியே செய்திகளைத் தர வேண்டும். யாரையும் தேவையில்லாமல் புகழ்ந்து செய்திகள் தரக் கூடாது. உண்மையை மட்டுமே எழுதுவோம், உரிய ஆதாரங்களுடன் மட்டுமே எழுதுவோம் என்று தீர்மானிக்கப்பட்டது.''

The operative word in the above para is "இனிமேல்". It gives their whole game away. These buggers simply don't have any credibility in the eyes of the public.

Reply

மங்களூர் சிவா October 12, 2009 at 11:46 AM

:) ))))))))))))

Reply

ஈ ரா October 12, 2009 at 12:04 PM

/நான் மட்டும் இளிச்சவாயனா/

(இளிச்சவாயியா)

வழக்கம் போல் நல்ல கட்டுரை…

முற்காலத்தில் பெண்கள் ஆண்களுடன் அதிகமாக இணைந்து பணி புரியாத சூழல் நிறைந்த சமூகத்தில் நடிகைகள் என்றாலே ஒரு தவறான கண்ணோட்டத்தோடு பார்க்கும் பழக்கம் இருந்து வந்தது.. அதனால் பல வதந்திகள் காது மூக்கு வைத்து காற்றை விட வேகமாக பரப்பப்பட்டன.. ஒரு வேளை இப்படி இருக்குமோ, அப்படி இருக்குமோ என்றெல்லாம் பொதுஜனத்தை கற்பனையில் மிதக்க வைத்து சப்புக் கொட்டி விற்பனையை அதிகரிக்க வைக்கும் கிசுகிசுக்களை தரமானவை என்று பெயர் எடுத்த பத்திரிகைகள் கூட பிரசுரிக்கத் தொடங்கி நான்காம் தூணான தங்களின் அஸ்திவாரத்தை தாங்களே சுரண்டத் தொடங்கி விட்டன.

தவறு செய்தவர்கள் நடிகையாக இருந்தாலும், நடிகராக இருந்தாலும் அல்லது வேறு யாராகவேனும் இருந்தாலும், ஆதாரம் இருந்தால் வெளியிடுவது பத்திரிகைகளின் புலனாய்வையும் நம்பகத்தன்மையும் பிரதிபலிக்கும்.. ஆனால் மேஜையில் உட்கார்ந்து கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டு, இஷ்டம் போல் எழுதினால், படிப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது… செய்தியில் சம்பந்தப் பட்டவர்களுக்கே அதன் வலி தெரியும்.. இந்த முறை மடியில் கனமில்லை மோதிப் பார்த்து விடலாம் என்று ஹோதாவில் இறங்கி விட்டார்கள் நடிகைகள்..

என்ன பல பேர் வழக்கம் போல் வரம்பு மீறி..வசை பாடி தங்களுக்கு கிடைத்து இருக்கவேண்டிய மரியாதையையும், அனுதாபத்தையும் தானே கெடுத்துக் கொண்டு விட்டார்கள்…

இன்றைய தேதியில், திரைத்துறையும் – பத்திரிக்கையும் அவர்கள் சம்பந்தப்பட்ட வியாபாரங்களின் இரண்டு கண்கள்.. என்ன இரண்டுக்கும் கேடராக்ட் ஆபரேஷன் பண்ண வேண்டும்…இரண்டின் வாசகர்கள் தான் அனுசரிக்கும் மனப்பான்மையை விட்டுவிட்டு துணிந்து புரையை எடுக்க வேண்டும்..

நான் இந்த பிரச்சினையில் ரஜினி பேசியதை மையமாக வைத்து ஒரு பதிவு போடலாம் என்று இருக்கிறேன்..

Reply

Arun October 12, 2009 at 12:08 PM

அந்த கூட்டத்தில் உணர்ந்து பேசியவர் நடிகர் "விஜயகாந்த்" மற்றும் "தாமு" மட்டுமே.

- yenna giri thalaivara vittuteenga.. yenna porutha varaikum thalaviar pechum decent ta than irunthuchu

Reply

Arun October 12, 2009 at 12:08 PM

அந்த கூட்டத்தில் உணர்ந்து பேசியவர் நடிகர் "விஜயகாந்த்" மற்றும் "தாமு" மட்டுமே.

- yenna giri thalaivara vittuteenga.. yenna porutha varaikum thalaviar pechum decent ta than irunthuchu

Reply

R.Gopi October 12, 2009 at 12:41 PM

கிரி

நல்ல விரிவான அலசல்…

ஆனால், பத்திரிக்கை இல்லாமல் சினிமா இல்லை… சினிமா இல்லாமல் பத்திரிக்கை இல்லை…

ஆகவே, இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து இணைந்து பணியாற்றினால், நல்ல செய்தி கிடைக்கும்…. இல்லையேல், தனக்கு பிடிக்காதவர்களை பற்றி ஏதாவது தவறாகவே செய்தி வெளியிடும் ஒரு சூழல் எழலாம்…

எல்லா நேரமும், எல்லா விஷயத்திற்காகவும், முதல்வர் வீட்டின் முன்போ, கோர்ட் படிக்கட்டு முன்போ பஞ்சாயத்திற்காக நிற்க முடியாதென்பதே உண்மை… இதை இவர்கள் இருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்….

இந்த கூட்டத்திற்கு (முக்கியமான கூட்டம் என்று சொல்லியும்!!??) வராத கமல், விஜய், அஜித் மற்ற நடிக நடிகையர் பற்றி உங்கள் கருத்து என்ன…

ரஜினி வராவிட்டால் மட்டும் தாம் தூம் என்று குதிக்கும் பெரிய (என்று தன்னை தானே நினைத்துக்கொள்ளும்) சின்ன சின்ன நடிகர்கள் வாய் திறக்காதது பற்றி!!???

Reply

கிரி October 12, 2009 at 12:56 PM

// ஆ.ஞானசேகரன் said…
்ம்ம்ம்ம்ம்…//

கேட்டுக்கிட்டீங்களா! :-)

=======================================================

// வானம்பாடிகள் said…
வசதிக்கு தாழறதும் உயரத்துக்கு போவதும் அவங்க தர்மம். செய்தி போடட்டும். அது செய்தியாக இருக்கட்டும். //

இதுவே அனைவரும் விரும்புவது சார் ..இதை அனைவரும் புரிந்து கொண்டாலே போதும். தங்கள் விருப்பு வெறுப்புகளை காட்டி எழுதுவது பத்திரிகை தர்மம் ஆகாது.

======================================================

// shirdi.saidasan@gmail.com said…
//இதனால் இவர்களுக்கே நஷ்டம் காரணம் தற்போது பிரச்சனை அவ்வாறு பேசியவர்களையும் கைது செய்யுங்கள் என்று திரும்பி வேறு பக்கம் போய் விட்டது//

சரியான கண்ணோட்டம்//

நன்றி சாய்

========================================================

// பிரபாகர் said…
நடிகைகள் அவ்வளவு ஒன்றும் யோக்கியமானவர்கள் என்பது ஊரறிந்த உண்மை. ரசிகர்களால் வாழும் சில நாய்கள், நிறைய குலைக்கும்போது மனம் மிக கஷ்டப்படுகிறது.//

பாருங்க பிரபாகர் நீங்களே உணர்ச்சிவசப்பட்டு அவர்களை திட்டுகிறீர்கள் .. நடிகர்கள் நடிகைகள் பிரபலமாக இருப்பதால் அவர்கள் யோக்கியம் இல்லை என்று நமக்கு தெரிகிறது… மற்றவர்கள் லைம் லைட்டில் இல்லாததால் அவர்கள் செய்வது பெரும் குற்றமாக நமக்கு தெரிவதில்லை.

=========================================================

// Robin said…
பொருத்தமில்லாத எடுத்துக்காட்டு. குடும்பப் பெண்ணையும் நடிகையும் ஒப்பிட்டு பேசுவது தவறு. //

ராபின் நான் இங்கு அவர்களை ஒப்பிட்டு பேசவில்லை, குடும்ப பெண்களுக்கும் இதே என்றால் பாலியல் சம்பந்தமாகத்தான் இருக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை பல விஷயங்கள் உள்ளது.

எத்தனையோ குடும்பத்தில் பெண்கள் தவறான செய்திகளால் பாதிக்கப்பட்டு அவமானப்பட்டு இருக்கிறார்கள்.

தினமும் செய்திகளில் வரும் கள்ள உறவு பற்றியது யாரை பற்றி… இந்த செய்திகளையும் படியுங்கள்

தவறு அனைத்து பக்கமும் இருக்கிறது, இது வெளிப்படையாக தெரிகிறது மற்றவை அவ்வளவாக தெரிவதில்லை,சதவீதமே மாறுபடுகிறது.

இதற்காக குடும்ப பெண்களை தவறாக ஒப்பீடு செய்தேன் என்று புரிந்து கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

நாம் ஒரு வார்த்தையை எப்படி பார்க்கிறோம் என்பதே முக்கியம் நாம் வேறாக நினைத்துக்கொண்டு, எழுதியவர்களும் பேசியவர்களும் அப்படித்தான் நினைத்து எழுதி இருப்பார்கள் என்று நாம் நினைத்துக்கொள்ள முடியாது,

இதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ளாமல் கேட்டதிற்கு நன்றி. இல்லை என்றால் இதை போல தவறாக புரிந்து கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விளக்கம் கொடுக்க வாய்ப்பு இல்லாமல் போய் இருக்கும், மிக்க நன்றி.

==========================================================

// வந்தியத்தேவன் said…
என் கேள்வி என்னவென்றால் பிரபல ஊடகங்கள் பல ஏன் இந்தச் செய்திகளை இருட்டடிப்புச் செய்கின்றன?//

தவறு அவர்கள் மீது இருப்பதால் இருக்கலாம் அல்லது தேவையில்லாமல் நாமே ஏன் பிரச்னையை கிளப்ப வேண்டும் என்று நினைத்து இருக்கலாம். அவர்களுக்கே தெரிந்து விஷயம் ஊகத்தில் நாம் கூறுவது தவறு.

=========================================================

// Sadhasivam said…
இதை ஒரு வாய்ப்பாக உபோயகபடுத்திய சில நடிகர்கள் தங்களது உண்மை பண்பினை வெளிச்சம் போட்டு நமக்கு காண்பித்தார்கள் என்பதே நாம் ஆறுதல் பட்டுக்கொள்ளும் ஒரு விசயமாகும்//

எல்லோருக்கும் உள்ளேயும் ஒரு மிருகம் ஒளிந்து கொண்டு தான் இருக்கிறது சதா..நமக்குள்ளும்.

=========================================================

//ராமலக்ஷ்மி said…
நடுநிலையான இடுகை.//

நன்றி ராமலக்ஷ்மி

=========================================================

// பிரபா said…
பத்திரிகைத்துறை…. மிகவும் சிரம மானது.//

அதில் சந்தேகமே இல்லை..அவர்கள் படும் பாடு ஏற்படும் நெருக்கடி மிரட்டல்கள் அவர்கள் மட்டுமே அறிந்த விஷயம்.

Reply

கோவி.கண்ணன் October 12, 2009 at 1:02 PM

(தமிழ்) பத்திரிகை உலகத்தின் ஆடைகள் தான் திரை உலகம். அவர்களே அடிக்கடி அவுத்து கட்டுவாங்க. காட்டுவாங்கன்னு படிச்சிடாதிங்க

Reply

கிரி October 12, 2009 at 1:35 PM

// M Arunachalam said…
I don't agree with your following comparison://

அருண் உங்கள் கேள்விக்கான பதிலை ராபின் அவர்களுக்கான பதிலிலேயே கூறி விட்டேன்.

//The press in TN don't even have the guts to ask uncomfortable questions to a ruling CM or even an ex-CM //

உண்மை தான் ஆனால் இது இந்தியா முழுக்கவே அப்படித்தான் உள்ளது என்று நினைக்கிறேன்.

//சினிமா தொடர்பாக இனிமேல் உள்ளது உள்ளபடியே செய்திகளைத் தர வேண்டும். யாரையும் தேவையில்லாமல் புகழ்ந்து செய்திகள் தரக் கூடாது. உண்மையை மட்டுமே எழுதுவோம், உரிய ஆதாரங்களுடன் மட்டுமே எழுதுவோம் என்று தீர்மானிக்கப்பட்டது.//

இதெல்லாம் நடக்க கூடிய விஷயம் இல்லை.

======================================================

// மங்களூர் சிவா said…
:) ))))))))))))//

சிரிப்பா சிரிக்குதுன்னு சொல்றீங்களா! சிவா :-)

======================================================

// ஈ ரா said…
/நான் மட்டும் இளிச்சவாயனா/

(இளிச்சவாயியா)//

இதை நானும் யோசித்தேன் மாற்றி போட்டால் சீரியஸ் பதிவு காமெடி ஆகி விடும் என்று கருதி மாற்றவில்லை.

//தவறு செய்தவர்கள் நடிகையாக இருந்தாலும், நடிகராக இருந்தாலும் அல்லது வேறு யாராகவேனும் இருந்தாலும், ஆதாரம் இருந்தால் வெளியிடுவது பத்திரிகைகளின் புலனாய்வையும் நம்பகத்தன்மையும் பிரதிபலிக்கும்.//

வழிமொழிகிறேன்

//செய்தியில் சம்பந்தப் பட்டவர்களுக்கே அதன் வலி தெரியும்.//

மறுக்க முடியாத உண்மை..

//இந்த முறை மடியில் கனமில்லை மோதிப் பார்த்து விடலாம் என்று ஹோதாவில் இறங்கி விட்டார்கள் நடிகைகள்..//

நான் அப்படி நினைக்கவில்லை..குருட்டு தைரியத்தில் பேசி விட்டார்கள் என்றே நினைக்கிறேன். அனைவருக்கும் தெரியும் யார் யார் எப்படி என்று.

//என்ன பல பேர் வழக்கம் போல் வரம்பு மீறி..வசை பாடி தங்களுக்கு கிடைத்து இருக்கவேண்டிய மரியாதையையும், அனுதாபத்தையும் தானே கெடுத்துக் கொண்டு விட்டார்கள்…//

இதுவே அவர்கள் செய்த பெரும் தவறு

//நான் இந்த பிரச்சினையில் ரஜினி பேசியதை மையமாக வைத்து ஒரு பதிவு போடலாம் என்று இருக்கிறேன்//

எழுதுங்க உங்க பார்வையை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்

Reply

கிரி October 12, 2009 at 1:35 PM

// Arun said…
yenna giri thalaivara vittuteenga.. yenna porutha varaikum thalaviar pechum decent ta than irunthuchu//

அருண் தலைவர் அசிங்கமாக எதுவும் பேசவில்லை

ஆனால் எனக்கு என்ன பயம் என்றால் யோகா ஆன்மிகம் என்று கட்டுப்பாட்டில் இருப்பவர் என்று நினைத்து இருந்தவர் இப்படி கோபமாக பேசியதை ஜீரணிக்க முடியவில்லை, இதை நான் எதிர்பார்க்கவும் இல்லை. ஒரு பக்குவமான பேச்சாக என்னால் எடுத்துக்கொள்ள முடியவில்லை.

என்ன மற்றவர்களை போல அசிங்கமாக பேசாமல் கோபமாக தன் கருத்தை கூறி விட்டார். அதுவும் அவர் பேசிய கருத்து தற்போது கடும் விமர்சனத்திற்கு ஆளாகி விட்டது. அவர் பேசியதை சரியாக புரிந்து கொண்டால் அவர் தவறாக பேசவில்லை என்பது புரியும் ஆனால் அதை எத்தனை பேர் அவ்வாறு சரியாக புரிந்து கொள்வார்கள்.

கொஞ்சம் பொறுமையாக பேசி இருந்தால் இதை தவிர்த்து இருக்கலாம் அல்லவா!

அருண் நீங்கள் என் பையனை பற்றி எழுத கேட்டு இருந்த இடுகையை அடுத்தது எழுதி விடுகிறேன் :-)

======================================================

// R.Gopi said…
எல்லா நேரமும், எல்லா விஷயத்திற்காகவும், முதல்வர் வீட்டின் முன்போ, கோர்ட் படிக்கட்டு முன்போ பஞ்சாயத்திற்காக நிற்க முடியாதென்பதே உண்மை… இதை இவர்கள் இருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்….//

மிகச்சரியாக கூறினீர்கள் கோபி.

முதல்வர் என்னவோ லோக்கல் காவல் துறை அலுவலகம் மாதிரி ஆகி விட்டது, யார் வேண்டும் என்றாலும் என்ன பிரச்சனை என்றாலும் இப்படி சந்திக்க முடியும் என்று,

முதல்வர் என்பவருக்கான மரியாதையை இவர்களே கெடுத்துக்கொள்கிறார்கள். நினைத்தவுடன் ஒரு முதல்வரை பார்க்க முடியும் என்றால் அதுவும் இதை போன்ற பிரச்சனைகளுக்கு என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அனைவரும் நெருங்கும் படி ஒரு முதல்வர் இருப்பது சரி தான் அதற்காக இதை போல அல்ப விசயங்களுக்காகவேல்லாம் தன் நேரத்தை செலவிடுவது சரியாக இல்லை.

நம் மாநிலத்தில் எத்தனையோ பிரச்சனை உள்ளது இதற்க்கு இப்படி அனைவரும் பரப்பரப்பு ஆகி முதல்வரும் அதற்க்கு முக்கியத்துவம் கொடுத்து செய்வது நன்றாக இல்லை.

என்னமோ போங்க!

//இந்த கூட்டத்திற்கு (முக்கியமான கூட்டம் என்று சொல்லியும்!!??) வராத கமல், விஜய், அஜித் மற்ற நடிக நடிகையர் பற்றி உங்கள் கருத்து என்ன.//

இதில் நான் கூற என்ன இருக்கிறது கோபி? திரை உலகமே முடிவு எடுக்க வேண்டும்.

இப்போது வந்தவர்கள் எல்லாம் கெட்டவர்கள் ஆகி விட்டார்கள் வராதவர்கள் நல்லவர்கள் ஆகி விட்டார்கள்.

அவரவர் மனசாட்சிக்கு தெரியும் ஒவ்வொருவரும் எப்படி என்று!

//ரஜினி வராவிட்டால் மட்டும் தாம் தூம் என்று குதிக்கும் பெரிய (என்று தன்னை தானே நினைத்துக்கொள்ளும்) சின்ன சின்ன நடிகர்கள் வாய் திறக்காதது பற்றி!!??//

குசேலன் சமயத்தில் "நான் எதுக்கு அந்த பிரச்சனையில் தலையிட வேண்டும்?" என்று கேட்டவர் தான் சரத் குமார்.

ஆனால் ரஜினி தன் கருத்தை யாருக்காகவும் பார்க்காமல் வெளிப்படையாக கூறுபவர் அதனாலே இதில் அதை எல்லாம் மனதில் வைத்துக்கொள்ளாமல் கலந்து கொண்டார். ஆனால் ரஜினியின் பேச்சு இன்னும் பொறுமையாக இருந்து இருக்க வேண்டும் என்பது என் கருத்து.

ரஜினி இவர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் உடனே வரவேண்டும் ஆனால் இவருக்கு ஏதாவது என்றால் யாரும் வரமாட்டார்கள்..கன்னட நபர், தமிழின துரோகி என்பார்கள்.

===================================================

// கோவி.கண்ணன் said…
(தமிழ்) பத்திரிகை உலகத்தின் ஆடைகள் தான் திரை உலகம். அவர்களே அடிக்கடி அவுத்து கட்டுவாங்க. காட்டுவாங்கன்னு படிச்சிடாதிங்க//

ஏதாவது படித்து தானே ஆக வேண்டி இருக்கிறது :-)

Reply

☀நான் ஆதவன்☀ October 12, 2009 at 1:36 PM

கிரி இதெல்லாம் இன்னும் கொஞ்ச நாள்ல சம்பந்தபட்டவங்களே மறந்திருவாங்க.

//பத்திரிகை விமரிசனம் எப்படியோ, நடிகர்கள் பேச்சும் எப்படியோ, உங்கள் இடுகை நாகரீகமாக இருக்கிறது.//

ரிப்பீட்டே :)

Reply

ஈ ரா October 12, 2009 at 1:42 PM

//''சினிமா தொடர்பாக இனிமேல் உள்ளது உள்ளபடியே செய்திகளைத் தர வேண்டும். யாரையும் தேவையில்லாமல் புகழ்ந்து செய்திகள் தரக் கூடாது. உண்மையை மட்டுமே எழுதுவோம், உரிய ஆதாரங்களுடன் மட்டுமே எழுதுவோம் என்று தீர்மானிக்கப்பட்டது.''

The operative word in the above para is "இனிமேல்". It gives their whole game away. These buggers simply don't have any credibility in the eyes of the public.//

//ரஜினி வராவிட்டால் மட்டும் தாம் தூம் என்று குதிக்கும் பெரிய (என்று தன்னை தானே நினைத்துக்கொள்ளும்) சின்ன சின்ன நடிகர்கள் வாய் திறக்காதது பற்றி!!???//

கோபி, இந்த கேள்விக்கு என்ன பதிலை சொல்ல? நீங்களே கேள்வியிலேயே பதிலைக் கொடுத்திட்டீங்களே

Reply

ஈ ரா October 12, 2009 at 1:55 PM

//அருண் தலைவர் அசிங்கமாக எதுவும் பேசவில்லை

ஆனால் எனக்கு என்ன பயம் என்றால் யோகா ஆன்மிகம் என்று கட்டுப்பாட்டில் இருப்பவர் என்று நினைத்து இருந்தவர் இப்படி கோபமாக பேசியதை ஜீரணிக்க முடியவில்லை, இதை நான் எதிர்பார்க்கவும் இல்லை. ஒரு பக்குவமான பேச்சாக என்னால் எடுத்துக்கொள்ள முடியவில்லை.

என்ன மற்றவர்களை போல அசிங்கமாக பேசாமல் கோபமாக தன் கருத்தை கூறி விட்டார். அதுவும் அவர் பேசிய கருத்து தற்போது கடும் விமர்சனத்திற்கு ஆளாகி விட்டது. அவர் பேசியதை சரியாக புரிந்து கொண்டால் அவர் தவறாக பேசவில்லை என்பது புரியும் ஆனால் அதை எத்தனை பேர் அவ்வாறு சரியாக புரிந்து கொள்வார்கள்.

கொஞ்சம் பொறுமையாக பேசி இருந்தால் இதை தவிர்த்து இருக்கலாம் அல்லவா!
//
தனக்காக கோபப்படவில்லை கிரி… இப்போதான் கொஞ்ச நாள் முன்னாள் நடிகர் சங்க மீட்டிங்கில் (அஞ்சலிதேவி, எம் என் ராஜம் பங்கேற்ற விழாவில்) உங்களுக்காக நான் எதுவும் செய்யத் தயாராக இருக்கேன் என்று சொன்னார்.. சொன்னபடியே ஒரு பிரச்சினை என்று வந்தபோது முன்னால் நின்றார்..

கோபம் பொதுவானது.. அவர் கோபம் என்னைப் பொறுத்தவரை இம்முறையும் கண்ணியமாகவே வெளிப்பட்டது.. அவர் தான் தெளிவாகச் சொல்லிவிட்டாரே, தான் சந்தோஷமாக இருந்தால் நிறைய நன்றாகப் பேசுவேன், கோபமாக இருந்தால் பேசமாட்டேன் – இன்றைக்கு பேசியே ஆக வேண்டுமென்பதால் மேடை ஏறி இருக்கிறேன் என்று..

(மேலும் எனக்கு தெரிந்து தப்பு செய்தால் தண்டனை வாங்கிக் கொடுங்கள் ஆனால் இப்படி ஆதாரம் இல்லாமல் எழுதாதீர்கள் என்று அன்றைக்கு சொன்னவரும் அவர் மட்டும்தான்)

Reply

ஈ ரா October 12, 2009 at 1:59 PM

////எழுதுங்க உங்க பார்வையை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்//

எழுதிட்டேன்.. பாருங்க..

http://padikkathavan.blogspot.com/2009/10/blog-post_11.html

Reply

M Arunachalam October 12, 2009 at 3:26 PM

//உண்மை தான் ஆனால் இது இந்தியா முழுக்கவே அப்படித்தான் உள்ளது என்று நினைக்கிறேன்.//

No way. English media, when they get a chance, don't spare anyone. In fact, they go out of their way to corner 'non-secular' BJP leaders.

When Jaya came on a Q & A session with Karan Thapar, she had to face quite a few uncomfortable questions and the programme had to end abruptly as she didn't want to continue the interview beyond a point.

On the contrary, Karunanidhi has the 'advantage' of not knowing English & has thus far escaped the English media from the North. sometime back when a Jaya TV reporter did ask him an uncomfortable question, he fell back on his கழக கலாசாரம் and retorted back: "வர்றியா? ஒண்டிக்கு ஒண்டி வர்றியா?". That is the reality.

Reply

புலவன் புலிகேசி October 12, 2009 at 5:17 PM

சரியான கண்ணோட்டம்.

Reply

ரோஸ்விக் October 12, 2009 at 6:07 PM

நல்ல பதிவு கிரி…வாழ்த்துகள்.
நம் நாட்டில் அனைவரும் அவரவர்களின் சுதந்திரங்களின் எல்லைகளை அளவே இல்லாமல் விரித்துக் கொண்டு போய்விட்டார்கள். ஆனால், அவர்களின் தர்ம மற்றும் கடமைகளின் எல்லைகளை மறந்தோ, தொலைத்தோ விட்டார்கள்.

ஆமா….நமீதாவை இந்த கூடத்துல காணோம்…இது தினமலர் நமக்கு இலவசமா போட்ட விளம்பரம்னு நினச்சுகிட்டரோ?

பத்திரிகைக்கும், திரைத்துறைக்கும் எனது கண்டனங்கள்…..

Reply

கிரி October 12, 2009 at 7:15 PM

// ☀நான் ஆதவன்☀ said…
கிரி இதெல்லாம் இன்னும் கொஞ்ச நாள்ல சம்பந்தபட்டவங்களே மறந்திருவாங்க. //

100% உண்மை, வழக்கம் போல செய்தியும் இதே போல தொடரும். இருவரும் பிரிக்க முடியாத ஒன்று.

========================================================

// ஈ ரா said…
கோபம் பொதுவானது.. அவர் கோபம் என்னைப் பொறுத்தவரை இம்முறையும் கண்ணியமாகவே வெளிப்பட்டது.. அவர் தான் தெளிவாகச் சொல்லிவிட்டாரே, தான் சந்தோஷமாக இருந்தால் நிறைய நன்றாகப் பேசுவேன், கோபமாக இருந்தால் பேசமாட்டேன் – இன்றைக்கு பேசியே ஆக வேண்டுமென்பதால் மேடை ஏறி இருக்கிறேன் என்று.. //

கோபம் என்பது பொதுவானது தான் அதை நான் மறுக்கவில்லை. அமைதியாக இருப்பவர் ரொம்ப நாகரீகமான நபர் என்று அனைவருக்கும் தெரிந்த சூர்யாவே கோபப்பட்டு வார்த்தையை விட்டு விட்டார்.

காரணம் அவரும் ஜோதிகா விசயத்தில் பத்திரிக்கைகளால் அதிக பாதிப்புக்கு உள்ளானார், அந்த கோபம் இதில் சேர்ந்து வெளிப்பட்டு விட்டது.

சூர்யா சின்ன நடிகர் இளையவர் கோபப்படலாம் ரஜினி அப்படி இல்லையே, கட்டுப்பாட்டினுள் தான் இருந்து இருக்க வேண்டும். ரஜினி கோபத்திலும் கட்டுப்பாடு இழக்காமல் அசிங்கமாக பேசாமல் இருந்தது ஒரு ஆறுதல்

கடைசியில் எதோ பேச வந்தார் நல்லவேளை நிறுத்தி விட்டார், இல்லை என்றால் இன்னும் பிரச்சனை அதிகம் ஆகி இருக்கும்.

//எனக்கு தெரிந்து தப்பு செய்தால் தண்டனை வாங்கிக் கொடுங்கள் ஆனால் இப்படி ஆதாரம் இல்லாமல் எழுதாதீர்கள் என்று அன்றைக்கு சொன்னவரும் அவர் மட்டும்தான்//

ரஜினியை தவறாக பேசுபவர்கள் இது போன்ற விஷயத்தை வசமாக "மறந்து" விடுகிறார்கள்.

//எழுதிட்டேன்.. பாருங்க..//

படித்து பின்னூட்டமும் இட்டு விட்டேன் :-)
===========================================================

// M Arunachalam said…

No way. English media, when they get a chance, don't spare anyone. //

ஏற்றுக்கொள்ளும் படி தான் உள்ளது. நம்மவர்கள் ஏதாவது ஒரு கட்சியை சார்ந்து இருப்பதும் ரொம்ப "பேசினால்" பின்னர் "கவனிக்கப்படுவோம்" என்ற பயமும் காரணம்.

//When Jaya came on a Q & A session with Karan Thapar, she had to face quite a few uncomfortable questions and the programme had to end abruptly as she didn't want to continue the interview beyond a point.//

:-) )

முதல்வன் படத்தில் போலவா! ;-)

// he fell back on his கழக கலாசாரம் and retorted back: "வர்றியா? ஒண்டிக்கு ஒண்டி வர்றியா?". That is the reality.//

ம்ம்ம் நாம் இன்னும் வளர வேண்டும்.

=========================================================

// புலவன் புலிகேசி said…
சரியான கண்ணோட்டம்.//

நன்றி புலிகேசி

=========================================================

// ரோஸ்விக் said…
நல்ல பதிவு கிரி…வாழ்த்துகள்.
நம் நாட்டில் அனைவரும் அவரவர்களின் சுதந்திரங்களின் எல்லைகளை அளவே இல்லாமல் விரித்துக் கொண்டு போய்விட்டார்கள். ஆனால், அவர்களின் தர்ம மற்றும் கடமைகளின் எல்லைகளை மறந்தோ, தொலைத்தோ விட்டார்கள்.//

வருத்தமளிக்கும் விஷயம் தான்.

//நமீதாவை இந்த கூடத்துல காணோம்…இது தினமலர் நமக்கு இலவசமா போட்ட விளம்பரம்னு நினச்சுகிட்டரோ?//

நமீதாவை மட்டுமா காணோம்! பலரை காணவில்லை. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் என்ற முறையில் நமீதா கண்டிப்பாக வந்து இருக்க வேண்டும்.

Reply

சிங்கக்குட்டி October 12, 2009 at 7:56 PM

என்ன கிரி இது?, பருத்திவீரன்ல ஊருக்குள்ள பெரியமனுஷன் யாராவது வங்கையா, என்று கத்துவது போல்…

பெரிய பதிவர்கள் யாராவது ரஜினி சொன்னதுல என்ன தப்புன்னு எழுதுகையான்னு…கேட்டுகிட்டு இருந்தா…

//அந்த கூட்டத்தில் உணர்ந்து பேசியவர் நடிகர் "விஜயகாந்த்" மற்றும் "தாமு" மட்டுமே.//

இந்த "மட்டுமே" எப்படி நியாமாகும்?

ரஜினி சொன்னதில் என்ன தப்பு?

இப்போதுதான் ஈரா-வின் பதிவில் ஒரு பினூட்டத்தை கோவத்துடன் போட்டேன்? அவர் வெளியிடுகிறாரா இல்லையா என்று தெரியவில்லை?வெளியிட்டல் பாருங்கள்.

இதைதவிர்த்து விட்டு ஒரு நாகரீகமான பதிவுக்கு நன்றி.

Reply

வால்பையன் October 12, 2009 at 8:07 PM

வீடியோவுக்கு ரொம்ப நன்றி தல!

Reply

கிரி October 12, 2009 at 8:16 PM

// சிங்கக்குட்டி said…
என்ன கிரி இது?, பருத்திவீரன்ல ஊருக்குள்ள பெரியமனுஷன் யாராவது வங்கையா, என்று கத்துவது போல்…

பெரிய பதிவர்கள் யாராவது ரஜினி சொன்னதுல என்ன தப்புன்னு எழுதுகையான்னு…கேட்டுகிட்டு இருந்தா… //

:-) ))

ஆமா எனக்கு ஒரு சந்தேகம்! பெரிய பதிவர்கள் யாரு ரஜினிக்கு ஆதரவா எழுதுவாங்கன்னு நினைக்கறீங்க? பெரிய (பிரபல)பதிவர்கள் எல்லோருமே ரஜினிக்கு எதிரானவர்கள். எப்படா ரஜினிய நொக்க வாய்ப்பு கிடைக்கும் என்று காத்துக்கொண்டு இருப்பவர்கள்.

//ரஜினி சொன்னதில் என்ன தப்பு? //

சிங்கக்குட்டி ரஜினி கூறியதில் தவறு என்று நான் எங்கும் கூறவில்லை, பேச்சில் ஒரு பொறுமை இல்லை. விஜயகாந்த் பேச்சில் அது இருந்தது..வீடியோ வை பார்த்தால் உங்களுக்கு புரியும்.

கோபம் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் பேசுவது பக்குவபட்ட ஒருவருக்கு அழகு, அதை ரஜினியிடம் நான் எதிர்பார்ப்பதில் என்ன தவறு?

மற்றபடி ஒரு சிலர் ரஜினியை எதோ விபச்சாரத்திற்கு ஆதரவாக பேசியதாக கிளப்பி விட்டு உள்ளார்கள் வழக்கம் போல. இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று..

இது குறித்தும் குசேலன் பிரச்சனை குறித்தும் ஒரு பதிவு எழுதுவேன், தற்போது அல்ல அதற்கான சரியான சூழ்நிலை அமையும் போது.

//இப்போதுதான் ஈரா-வின் பதிவில் ஒரு பினூட்டத்தை கோவத்துடன் போட்டேன்? அவர் வெளியிடுகிறாரா இல்லையா என்று தெரியவில்லை?வெளியிட்டல் பாருங்கள்.//

அப்படி என்னங்க கோபப்பட்டு இருக்கீங்க? :-) ))) பார்க்கிறேன்.

======================================================

// வால்பையன் said…
வீடியோவுக்கு ரொம்ப நன்றி தல!//

அருண் இதை பாருங்க உங்க கண்ணோட்டம் மாற வாய்ப்புண்டு.

Reply

தேவன் மாயம் October 12, 2009 at 8:16 PM

எப்படி யூடியூபில் அடல்ட் வெரிஃபிகேசன் சேர்ப்பது?

Reply

கிரி October 12, 2009 at 8:22 PM

//தேவன் மாயம் said…
எப்படி யூடியூபில் அடல்ட் வெரிஃபிகேசன் சேர்ப்பது?//

தேவா இது வரை நான் செய்தது இல்லை, ஆனால் அடல்ட் கன்டென்ட் என்பதால் இதை நீங்க சேர்த்து தான் ஆக வேண்டும்.

Reply

தேவன் மாயம் October 12, 2009 at 8:30 PM

யூடியூபில் போடாமல் வீடியோவை தள்த்தில் சேர்க்க முடியுமா?

Reply

தேவன் மாயம் October 12, 2009 at 8:33 PM

உங்கள் இடுகை தெளிவாகவுள்ளது!!!

Reply

சிங்கக்குட்டி October 12, 2009 at 8:37 PM

//கோபம் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் பேசுவது பக்குவபட்ட ஒருவருக்கு அழகு அதை ரஜினியிடம் நான் எதிர்பார்ப்பதில் என்ன தவறு?
//

வந்திருப்பது தங்கள் ஆதங்கத்தை, கோவத்தை காட்ட, ஆனாலும் குறிப்பிட்டு ரஜினி வாயில் இருந்து வர போகும் வார்த்தைக்காக காத்திருந்து, யார் யார் என்று அனைவரும் அறிவோம்.

ஒகேனக்கல் பிரச்னை போல் இதையும் வியாபாரமாக காத்திருக்கும் பத்திரிக்கை கூட்டம் ஒருபக்கம்,

வீட்டிற்க்கே போய் கையை பிடித்து அழைத்து வந்த நடிகர் சங்கம்
ஒருபக்கம்,

என்ன பேசினால் அதை எப்படி அரசியலாக்கலம் என்ற "நல்ல" கட்சிகாரர்கள் ஒருபக்கம்.

இங்கு… அவரின் முதல் வரிபோல், ரொம்ப கோவமாக இருக்கம் "இறுக்கத்தை" முகத்தில் காட்டி வார்த்தையை குறைத்து என்பது…சரி என்று படவில்லையா கிரி?.

சரி விடுங்க, அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

Reply

கிரி October 12, 2009 at 8:45 PM

// தேவன் மாயம் said…
யூடியூபில் போடாமல் வீடியோவை தள்த்தில் சேர்க்க முடியுமா?//

யூடியூபில் இல்லாமல் வேறு தளங்களில் சேர்க்கலாம், இருந்தாலும் மற்ற தளங்கள் பற்றி எனக்கு ஐடியா இல்ல, தொழில்நுட்ப பதிவர்கள் யாராவது உங்களுக்கு உதவலாம்.

ஆனால் யூடியூபில் இவ்வாறு போடுவது தவறு யாராவது புகார் செய்ய வாய்ப்பு உள்ளது. பொதுவாக இதை போல அடல்ட் படங்களை பார்க்கும் போது confirm birth கேட்கும்.

//உங்கள் இடுகை தெளிவாகவுள்ளது//

நன்றி தேவா

==========================================================

// சிங்கக்குட்டி said…
வந்திருப்பது தங்கள் ஆதங்கத்தை, கோவத்தை காட்ட, ஆனாலும் குறிப்பிட்டு ரஜினி வாயில் இருந்து வர போகும் வார்த்தைக்காக காத்திருந்து, யார் யார் என்று அனைவரும் அறிவோம்.//

அவர்கள் நினைத்தது நடந்து விட்டது

//அவரின் முதல் வரிபோல், ரொம்ப கோவமாக இருக்கம் "இறுக்கத்தை" முகத்தில் காட்டி வார்த்தையை குறைத்து என்பது…சரி என்று படவில்லையா கிரி?.//

:-) என்னங்க பண்ணுறது இதெல்லாம் பிரபலமாக இருப்பதற்கு கொடுக்கப்படும் விலைகள், தவிர்க்க முடியாததே. என்ன செய்தாலும் பிரச்சனையாக்குபவர்கள் மத்தியில் உஷாராக இருந்தே ஆக வேண்டும்.

//சரி விடுங்க, அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.//

:-)

அடுத்த பதிவு உங்களுக்கு பிடித்த பதிவாக இருக்கும் என்றும் நினைக்கிறேன்.

Reply

எம்.எம்.அப்துல்லா October 12, 2009 at 9:48 PM

அண்ணே என் அனுபவத்தில் சொல்கின்றேன்…

நடிகைகள் பத்தினிகளாய் இல்லாமல் இருக்கலாம்.ஆனால் நடிகைகளில் பாலியலைத் தொழிலாகச் செய்பவர்கள் மிகவும் குறைவு.வாய்ப்பு கிடைப்பதற்காக விரும்பிச் செல்வது பணம் பெற்றுக்கொண்டு செய்யும் பாலியல் தொழிலில் சேராது. நடிகைகள் என்றாலே அவர்கள் அனைவரும் பாலியல் தொழில் செய்பவர்கள் என்ற கருத்து மிகவும் தவறு.

Reply

குறை ஒன்றும் இல்லை !!! October 12, 2009 at 9:53 PM

//அவர்கள் உண்மையிலே பாலியல் தொழில் செய்வதாக இருந்தால் ஆதாரம் இருந்தால் செய்தியாக போடலாமே! யார் என்ன கேட்கப்போகிறார்கள் என்ன கேட்க முடியும்! புவனேஸ்வரியை ஆதாரத்துடன் பிடித்தார்கள் செய்தியாக போட்டார்கள் யார் என்ன கேட்க முடிந்தது!//

அண்ணே… ஆதாரம் இருந்தாலும் எழுத முடியாது.. ஏனென்றால் சேதாரம் அதிகம் ஆகிவிடும்!!!!

புவனேஸ்வரி மேட்டர் நம்ம தசாவதாரம் படத்தில் வருமே ஒரு தியரி அது மாதிறி!! இன்னும் புரியர மாதிறி நம்ம ஊர் பாசையில சொல்லனும்னா தென்னை மரத்தில தேள் கொட்டுனா பனை மரத்தில நெறி கட்டர மாதிறி!!!

மத்தபடி நடிகைகள் எல்லோரும் அப்படி தான் !! சினிமாவில அதுக்கு ஒரு கோட் வேர்ட் இருக்கு !! டிஸ்கசன்.. என்ன எல்லோரையும் கைது செய்ய முடியது ஏண்ணு உங்களுக்கே தெரியும்!!!

Reply

குறை ஒன்றும் இல்லை !!! October 12, 2009 at 9:56 PM

ஆனா உங்க தலைவர் சொன்ன கருத்து அப்படியே பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது( பாருங்க நான் அவர திட்டல!!!)

அஷ்டம சனி போனாலும் அவருக்கு நாக்குல நிரந்தரமா குடி இருக்கும் போல!!!

Reply

Arun October 13, 2009 at 7:25 AM

அருண் நீங்கள் என் பையனை பற்றி எழுத கேட்டு இருந்த இடுகையை அடுத்தது எழுதி விடுகிறேன்
- Nandri Giri

Reply

கிரி October 13, 2009 at 1:29 PM

//எம்.எம்.அப்துல்லா said…
நடிகைகள் பத்தினிகளாய் இல்லாமல் இருக்கலாம்.ஆனால் நடிகைகளில் பாலியலைத் தொழிலாகச் செய்பவர்கள் மிகவும் குறைவு
நடிகைகள் என்றாலே அவர்கள் அனைவரும் பாலியல் தொழில் செய்பவர்கள் என்ற கருத்து மிகவும் தவறு.//

இருக்கலாம் அப்துல்லா

முன்னுக்கு வரவேண்டும் என்றால் "அட்ஜஸ்ட்" செய்து தான் ஆக வேண்டும் என்பது திரையுலகில் எழுதப்படாத விதி, வருத்தமாகத்தான் உள்ளது.

==================================================

//குறை ஒன்றும் இல்லை !!! said…
அண்ணே… ஆதாரம் இருந்தாலும் எழுத முடியாது.. ஏனென்றால் சேதாரம் அதிகம் ஆகிவிடும்!!!!//

புவனேஸ்வரியை கைது செய்ய சென்ற போதே எதோ அரசியல்வாதி பெயரை கூறி மிரட்டினாராமே!

//ஆனா உங்க தலைவர் சொன்ன கருத்து அப்படியே பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது( பாருங்க நான் அவர திட்டல!!!) //

பிடிக்காத மருமகள் கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்பது போல ..ரஜினியை பிடிக்காத உங்களுக்கு ரஜினி என்ன கூறினாலும் பூதக்கண்ணாடி வைத்து பார்த்தால் அப்படித்தான் தெரியும்.

//அஷ்டம சனி போனாலும் அவருக்கு நாக்குல நிரந்தரமா குடி இருக்கும் போல!!!//

:-) )))

இதென்னவோ உண்மை தான்.

Reply

குறை ஒன்றும் இல்லை !!! October 13, 2009 at 11:09 PM

//பிடிக்காத மருமகள் கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்பது போல ..ரஜினியை பிடிக்காத உங்களுக்கு ரஜினி என்ன கூறினாலும் பூதக்கண்ணாடி வைத்து பார்த்தால் அப்படித்தான் தெரியும்.//

ஹா ஹா ஹா.. எண்ணன்னே பன்ன? உங்களுக்கெல்லாம் ரஜினி புதுக்காதலி போல .. என்ன பண்ணாலும் தப்பு இருக்காது…

அப்புரம் ரஜினி பேசரதெல்லாம் பூத கண்ணாடி வச்சு தான் தப்பு கண்டு பிடிக்கனும்னு இல்லேண்ணு நினைக்கிரேன்!!!

சரி சரி ஃப்ரீயா விடுங்க!!!

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed