ஈரம் & UPO – திரைவிமர்சனம்

by கிரி on September 23, 2009

சிங்கையில் தற்போது ரொம்ப வருடங்களாக மூடி இருந்த திரை அரங்கு ஒன்றை புதுப்பித்து தற்போது படங்களை திரையிட்டு வருகிறார்கள், பெரும்பாலும் இந்திய படங்கள். தொடக்கமாக நினைத்தாலே இனிக்கும் மற்றும் ஈரம். திரை அரங்கில் 100 பேர் அமர்ந்து பார்க்கலாம், 3 மிகவும் சிறிய திரை அரங்கம்.
நினைத்தாலே இனிக்கும் பார்க்க விருப்பம் இல்லை என்பதால் பலரும் ஈரம் நன்றாக இருப்பதாக கூறியதால் ஈரம் படம் சென்றேன்.
ஈரம்
eeram ஈரம் & UPO   திரைவிமர்சனம்
கதாநாயகி சிந்து மேனன் தற்கொலை செய்து இருப்பதாக படம் தொடங்குகிறது, அதை விசாரிக்க வரும் காவல் துறை அதிகாரி ஆதி (மிருகம் படம் கதாநாயகன்) சிந்து மேனன் தனது முன்னாள் காதலி என்பதால் தனிக்கவனம் எடுத்து இது தற்கொலை இல்லை கொலை என்ற கோணத்தில் விசாரிக்கிறார்.
அவர் இது பற்றி விசாரிக்கும் போதே சிந்து மேனன் பிளாட்டில் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் ஒவ்வொருவராக சாகிறார்கள். சிந்துமேனனை கொலை செய்தது யார் எதனால் பலர் சாகிறார்கள் என்பதை சுவாராசியமாக ஆவி துணையுடன் கூறி இருக்கிறார்கள்.
பொதுவாக இதை போல ஆவி சமாச்சார படங்களை கவனமுடன் எடுக்க வேண்டும் இல்லை என்றால் சீரியஸ் டைம் காமெடி டைம் ஆகி விடும். இதற்கு முன்பு வந்த யாவரும் நலமும் சரி ஈரமும் சரி அதில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். படத்தில் குறிப்பிடத்தக்க இன்னொரு விஷயம்..யாருக்கும் அதிக ஒப்பனை இல்லை, இயல்பாகவே இருக்கிறார்கள்.
சிந்து மேனன் சாவது தண்ணீரில் என்பதால் படம் முழுவதும் எங்கும் தண்ணீரே வியாபித்து உள்ளது, அதன் பிறகு நடக்கும் கொலைகளும் ஏதாவது ஒரு விதத்தில் தண்ணீருடன் தொடர்புடையதாகவே உள்ளது, படம் முழுவதும் மழை, தண்ணீர் என்று இயல்பாக அதே சமயத்தில் நம்பும்படியும் கொடுத்து இருப்பது இயக்குனரின் சாமர்த்தியம். சரண்யா மோகன் சிந்து மேனனின் தங்கையாக வருகிறார்.
eeram5 ஈரம் & UPO   திரைவிமர்சனம்
ஆதியும் சிந்து மேனனும் முதன் முதலில் சந்திக்கும் காட்சி வழக்கம் போல அமைக்கப்பட்டு இருந்தாலும் ரசிக்கும் படி இருக்கும். இருவரும் எதிர்பாராமல் சந்திக்க ஆதி அவரை பார்த்துக்கொண்டே பேருந்தில் ஏறுவார் சிந்து மேனன் கவனிக்காமல் இருப்பது போல இருந்து ஓரக்கண்ணால் பார்ப்பது அசத்தலாக இருக்கும்..பசங்க எல்லாம் இந்த கடைக்கண் பார்வையில் தான் மயங்கி விடுகிறார்கள் icon wink ஈரம் & UPO   திரைவிமர்சனம்
சிந்துமேனன் (நல்ல ஃபிகர்) அழகாக உள்ளார், ஆனால் இவரும் ஆதியும் கல்லூரி மாணவர்களாக வரும் போது பொருத்தமாக இல்லை, இருவருமே மெச்சூர்டாக இருக்கிறார்கள். ஆனால் வழக்கமான படம் போல இல்லாமல் வரம்பு மீறாமல் இவர்கள் காட்சி எடுக்கப்பட்டுள்ளது. ஒரு காட்சியில் ஆதி சிந்து மேனனின் உள்ளாடையை சரி செய்ய கூறுவார், அதற்க்கு பின் வரிசையில் இருந்த ஒரு பன்னாடை எதோ கமெண்ட் அடித்தான், எந்த நாட்டிற்கு சென்றாலும் மேன்மக்கள்! மேன்மக்களே!!
படத்தில் பாடல்கள் சொல்லிக்கொளும் படி எதுவுமில்லை. பின்னணி இசை சிறப்பாக உள்ளது, இடைவேளை வரும் போது ஒருவரை ஆவி கொல்லும் அப்போது கொடுத்த இசையில் என் உடல் சிலிர்த்து விட்டது, கலக்கல். அதே போல க்ளைமாக்ஸ் காட்சியிலும் பின்னணி இசை அருமை.
eeram2 ஈரம் & UPO   திரைவிமர்சனம்
ஆதி சரியான தேர்வு, மிருகம் படத்திலேயே பின்னி பெடலெடுத்து இருப்பார் (பார்க்காதவர்கள் பாருங்கள்..ஒரு சிலருக்கு பிடிக்காமல் போகலாம்). இதில் உடல் இளைத்து ட்ரிம்மாக நல்லா மேன்லியாக இருக்கிறார், சில பெண்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கலாம் icon wink ஈரம் & UPO   திரைவிமர்சனம்
காவல் துறை அதிகாரி வேடத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார், அலட்டி கொள்ளாமல் சிறப்பான நடிப்பு.
eeram4 ஈரம் & UPO   திரைவிமர்சனம்
சந்தேக கணவனாக வரும் நந்தா தன் பங்கை சிறப்பாக செய்து இருக்கிறார், முதலில் சாதாரணமாக தெரிபவர் போக போக அவரின் உண்மையான முகம் தெரியும் போது அதிர்ச்சி அடைய வைக்கிறார். எப்படி இருந்தவர் இப்படி மாறி விட்டாரே என்று ஆச்சர்யப்படுத்துகிறார், ஆனால் அவர் அப்படி வருவதற்கு காரணத்தை இயக்குனர் உடனே நியாயப்படுத்தாமல் தொடக்கத்தில் இருந்தே அதற்கான காரணத்தை காட்சி அமைப்பிலும் வசனத்திலும் காட்டி வருகிறார் எனவே எனக்கு ஏமாற்றமாக இல்லை..
நந்தா கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல் இதை போல வித்யாசமான கதாப்பாத்திரங்களையும் முயற்சிக்கலாம், ஆனால் அனைத்து படங்களிலும் ஒரே மாதிரியான முகபாவம் மற்றும் வசன உச்சரிப்பையே பயன்படுத்துவது அலுப்பை வரவழைக்கிறது.
eeram3 ஈரம் & UPO   திரைவிமர்சனம்
படத்தின் க்ளைமாக்ஸ் முன்பே ஆவியாக வந்து சிந்து மேனன் தனது கதையை கூறி (எப்படி கொலை செய்யப்பட்டேன்) விடுவதால் சஸ்பென்ஸ் போய் விடுகிறது, அதன் பிறகும் நம்மை ஆர்வமாக பார்க்க வைத்து இருப்பது இயக்குனரின் திறமை தான். ஒரு சில வசனங்கள் நன்றாக இருந்தது, படத்தின் சுவாராசியத்தில் அதை நினைவில் வைக்க முடியவில்லை.
படத்தின் மைய கருத்தாக செக்ஸ் வருகிறது ஆனால் அதை அருவருக்கும் வகையில் காட்டாமல் திரைக்கதையை நகர்த்தி இருப்பது நிம்மதி. படத்தில் நந்தா நண்பராக வருபவர் ஒரு காட்சியில் இன்றைய நடைமுறையில் இருப்பதை கிண்டலாக கூறுவது போல கூறுவார், ஆனால் அவர் கூறியது பெரும்பாலும் மறுக்க முடியாத உண்மை.
படத்தில் முதல் பாதி நல்ல விறுவிறுப்பு, இரண்டாம் பாதி க்ளைமாக்ஸ் தவிர மெதுவாகவே செல்கிறது, இதை இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக்கி இருக்கலாம். த்ரில்லர் படம் என்பதால் என்னால் ஒரு சில காட்சிகளை கூற முடியவில்லை சஸ்பென்ஸ் போய் விடும் என்பதால் (ஏற்கனவே பலர் விமர்சனத்தில் கூறி விட்டார்கள் என்று நினைக்கிறேன்)
நம்ம ஆளுங்க கிட்ட இருக்கிற கெட்ட பழக்கம்..மசாலா படத்துல போய் உலகப்படத்தை தேடுவது, ஆவி படத்துல போய் அநியாயத்துக்கு லாஜிக் பார்ப்பது. யப்பா! அந்தந்த படத்திற்கு அந்தந்த கண்ணோட்டத்தோட போங்க ..அதை விட்டுட்டு சரவணபவன் ல போய் சிக்கன் இல்லை என்று டென்ஷன் ஆனால் எப்படி!
ஈரம் படம் மிகச்சிறந்த த்ரில்லர் படம் என்று சொல்ல முடியவில்லை ஆனால் ஏமாற்றமளிக்காத படம் என்று கூறலாம். இன்னும் படம் பார்க்காமல் இருப்பவர்கள் கண்டிப்பா பாருங்க “ஈரம்” காயும் முன்பு.

இயக்குனர் அறிவழகன் செலவே இல்லாமல் எடுத்துள்ளார், ஷங்கருக்கு கண்டிப்பாக லாபம் தான். புதிய இயக்குனர்களை அறிமுகப்படுத்துவதோடு புதிய கதை களத்தையும் அனுமதிப்பது பாராட்டத்தக்க ஒன்று. வாழ்த்துக்கள் அறிவழகன் மற்றும் ஷங்கர்.

உன்னைப்போல் ஒருவன்
UPO ஈரம் & UPO   திரைவிமர்சனம்
படம் நல்லா இருக்கு….பார்க்காதவங்க பாருங்க.

No related posts.

{ 27 comments… read them below or add one }

வாசுகி September 23, 2009 at 9:12 AM

//நினைத்தாலே இனிக்கும் பார்க்க விருப்பம் இல்லை என்பதால் //

ஏன் ஏன் ?

Reply

☀நான் ஆதவன்☀ September 23, 2009 at 9:53 AM

//படம் நல்லா இருக்கு….பார்க்காதவங்க பாருங்க//

ஹி..ஹி கலக்கல் :)

Reply

ஜோ/Joe September 23, 2009 at 10:26 AM

//படம் நல்லா இருக்கு….பார்க்காதவங்க பாருங்க.//

:) )

என்ன கொடுமை கிரி இது ? ஒரு விமர்சனத்தைப் போடுங்க :)

Reply

ராமலக்ஷ்மி September 23, 2009 at 10:39 AM

//மசாலா படத்துல போய் உலகப்படத்தை தேடுவது, ஆவி படத்துல போய் அநியாயத்துக்கு லாஜிக் பார்ப்பது. யப்பா! அந்தந்த படத்திற்கு அந்தந்த கண்ணோட்டத்தோட போங்க ..அதை விட்டுட்டு சரவணபவன் ல போய் சிக்கன் இல்லை என்று டென்ஷன் ஆனால் எப்படி!//

ஓகே, ரைட்:)!

Reply

வால்பையன் September 23, 2009 at 10:58 AM

உபோஒ விமர்சனத்தில் ஒரு வரியில் எம்புட்டு அரசியலப்பா உங்கள் பதிவில்!

Reply

அதி பிரதாபன் September 23, 2009 at 11:18 AM

//படம் நல்லா இருக்கு….பார்க்காதவங்க பாருங்க.//

’நல்லா’ இருக்குன்னு தான சொல்றீங்க?

பாக்காதவங்க பாருங்கன்னா என்ன அர்த்தம்?

Reply

பாசகி September 23, 2009 at 11:19 AM

//படம் நல்லா இருக்கு….பார்க்காதவங்க பாருங்க.//

வெட்னஸ் டே பாக்காதவங்கதான? நான் வெட்னஸ் டே பார்த்துட்டேன் :)

Reply

fan of big R September 23, 2009 at 12:55 PM

ஈரம் பட விமர்சனம் நல்லா இருக்கு.
ஆனால் u.p.o- வை ஒரே வரியில் முடிச்சிட்டீங்க(நான் விமர்சனத்தை சொன்னேன்).

Reply

Mahesh September 23, 2009 at 1:49 PM

கிரி…. உபோஒ.. விமர்சனம் சூப்பர்.. இப்பிடி தெளிவா டீடெய்லா கவனிச்சு ஒவ்வொரு அம்சத்தைப் பத்தியும் விரிவா விமர்சனம் எழுதினது நீங்க மட்டும்தான். :) )))))))))

Reply

குறை ஒன்றும் இல்லை !!! September 23, 2009 at 3:20 PM

ரொம்ப நனைஞ்சிட்டீங்க போல!!!!

Reply

குறை ஒன்றும் இல்லை !!! September 23, 2009 at 3:20 PM

ரொம்ப நனைஞ்சிட்டீங்க போல!!!!

Reply

கிரி September 23, 2009 at 3:21 PM

// வாசுகி said…
//நினைத்தாலே இனிக்கும் பார்க்க விருப்பம் இல்லை என்பதால் //

ஏன் ஏன் ?//

:-) ப்ரியாமணிக்காக பார்க்கலாம் என்று இருந்தேன், அப்புறம் ஏனோ போக பிடிக்கலை. அப்புறமா பார்த்தாலும் அது ப்ரியாமணிக்காகாத்தான் ;-)

======================================================

வருகைக்கு நன்றி ஆதவன்..உங்க பேர்ல வர படத்திற்கு விமர்சனம் எழுதிடுவோம் ;-)

=======================================================

// ஜோ/Joe said…
என்ன கொடுமை கிரி இது ? ஒரு விமர்சனத்தைப் போடுங்க :) //

வாங்க ஜோ! விமர்சனம்! சின்னதா!! இருந்தா என்ன ..நான் சொல்ல நினைத்ததை சொல்லி விட்டேன் :-)

=======================================================

ராமலக்ஷ்மி நன்றி :-)

=======================================================

// வால்பையன் said…
உபோஒ விமர்சனத்தில் ஒரு வரியில் எம்புட்டு அரசியலப்பா உங்கள் பதிவில்!//

அருண் எந்த அரசியலும் அல்ல..அரசியலை பார்த்து நொந்து இந்த வரி அவ்வளோ தான் ;-)

=======================================================

// எவனோ ஒருவன் said…
’நல்லா’ இருக்குன்னு தான சொல்றீங்க?
பாக்காதவங்க பாருங்கன்னா என்ன அர்த்தம்?//

படம் பார்க்காதவங்க பாருங்க என்று அர்த்தம் :-)

========================================================

// பாசகி said…
வெட்னஸ் டே பாக்காதவங்கதான? நான் வெட்னஸ் டே பார்த்துட்டேன் :) //

ஆங்கிலத்தில் உன்னைப்போல் ஒருவன் என்றால் வெட்னஸ் டே வா! ;-) புதுசா இருக்கு

========================================================

// fan of big R said…
ஈரம் பட விமர்சனம் நல்லா இருக்கு.//

நன்றி R

//ஆனால் u.p.o- வை ஒரே வரியில் முடிச்சிட்டீங்க(நான் விமர்சனத்தை சொன்னேன்).//

அதை தான் பிரிச்சு மேஞ்சுட்டு இருக்காங்களே,..நான் புதிதா கூற என்ன இருக்கு :-)

==========================================================

// Mahesh said…
கிரி…. உபோஒ.. விமர்சனம் சூப்பர்.. இப்பிடி தெளிவா டீடெய்லா கவனிச்சு ஒவ்வொரு அம்சத்தைப் பத்தியும் விரிவா விமர்சனம் எழுதினது நீங்க மட்டும்தான். :) )))))))))//

ஹி ஹி ஹி நன்றி

Reply

கிரி September 23, 2009 at 3:23 PM

// குறை ஒன்றும் இல்லை !!! said…
ரொம்ப நனைஞ்சிட்டீங்க போல!!!//

:-) குளிர் வராதது தான் பாக்கி

Reply

வருண் September 23, 2009 at 7:44 PM

UPO review or recommendation, Giri?!

Yes, it is safe and sound! :) ))

Reply

சிங்கக்குட்டி September 24, 2009 at 7:45 PM

//ரொம்ப வருடங்களாக மூடி இருந்த திரை அரங்கு//

எந்த இடம் கிரி?

மேலும் அடுத்த மாதம் வேலை விசையமாக இரண்டு நாள் சிங்கை வருகிறேன்? உங்களை சந்திக்க முடியுமா?

Reply

கிரி September 25, 2009 at 12:31 PM

// வருண் said…
UPO review or recommendation, Giri?!
Yes, it is safe and sound! :) ))//

:-)

===============================================

// சிங்கக்குட்டி said…
எந்த இடம் கிரி? //

லிட்டில் இந்தியா ரெக்ஸ் சினிமாஸ்

//அடுத்த மாதம் வேலை விசையமாக இரண்டு நாள் சிங்கை வருகிறேன்? உங்களை சந்திக்க முடியுமா?//

ஹலோ! என்ன இப்படி கேட்டுட்டு இருக்கீங்க..வாங்க சந்திக்கலாம் என்று சொன்னால் வரப்போறேன். கண்டிப்பா சந்திக்கலாம்.

என்னுடைய ஃப்ரோபைலில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பிடுங்க.

சிங்கை உங்களை அன்புடன் வரவேற்கிறது :-)

Reply

Arun September 25, 2009 at 8:56 PM

giri,
Thalaivar roda babaji anupavangal vijay tv la pathu irupeenga.. mudincha yenakaga oru pathiva podunga.. unga style la athai kekanum pola iruku

thanks,
Arun

Reply

நசரேயன் September 26, 2009 at 3:16 AM

//படம் நல்லா இருக்கு….பார்க்காதவங்க பாருங்க.//

இன்னும் திருட்டு வி.சி.டி வரலை கிரி

Reply

எம்.எம்.அப்துல்லா September 26, 2009 at 9:33 AM

கிரி அண்ணே கடந்த சில ஆண்டுகளில் தமிழில் வந்த படங்களில் டெக்னிக்கலாய் ஈரம்தான் முதல் இடம்.

Reply

கிரி September 26, 2009 at 1:55 PM

//arun said…
giri,
Thalaivar roda babaji anupavangal vijay tv la pathu irupeenga.. mudincha yenakaga oru pathiva podunga.. unga style la athai kekanum pola இருக்கு//

அருண் இன்னும் சிங்கையில் ஒளிபரப்பவில்லை, அடுத்த வாரம் தான் வருகிறது, இங்கே ஒரு வாரம் தாமதமாகத்தான் வரும்.

அதிலேயே விரிவாக கூறி இருப்பார்கள் அதில் நான் புதிதாக கூற என்ன இருக்கிறது அருண் :-)

நீங்கள் இவ்வாறு கேட்டது எனக்கு மகிழ்ச்சி

====================================================

// நசரேயன் said…
//படம் நல்லா இருக்கு….பார்க்காதவங்க பாருங்க.//

இன்னும் திருட்டு வி.சி.டி வரலை கிரி//

:-) )

ஏன் இணையத்துல எல்லாம் பார்க்க மாட்டீங்களா! ஒண்ணுமே தெரியாத மாதிரி கேட்கறீங்க ;-)

==============================================================

// எம்.எம்.அப்துல்லா said…
கிரி அண்ணே கடந்த சில ஆண்டுகளில் தமிழில் வந்த படங்களில் டெக்னிக்கலாய் ஈரம்தான் முதல் இடம்.//

அப்துல்லா! உங்க நண்பர் படம் என்று ரொம்ப பாராட்டி விட்டீர்களோ! :-)

Reply

R.Gopi September 26, 2009 at 3:35 PM

கிரி…

"ஈரம்" விமர்சனம் நல்லா எழுதி இருக்கீங்க… இன்னும் இங்க ரிலீஸ் ஆகல… ஆனதும் பார்க்கிறேன்…

"உன்னை போல் ஒருவன்" விமர்சனம்னு தலைப்புல இருக்கு…. எப்போ எழுத போறீங்க…!!?? ஹீ…ஹீ…ஹீ…. (நான் பார்த்து விட்டேன்… படம் ரொம்ப ஸ்லோ… சுமார்….).

Reply

சிங்கக்குட்டி September 26, 2009 at 8:51 PM

நன்றி கிரி,

//சிங்கை உங்களை அன்புடன் வரவேற்கிறது// :-) )

அடுத்த மாதம் சந்திப்போம், கட்டாயம் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்பிவிடுகிறேன்.

Reply

Arun September 26, 2009 at 9:31 PM

"அதிலேயே விரிவாக கூறி இருப்பார்கள் அதில் நான் புதிதாக கூற என்ன இருக்கிறது"

Yenna giri ippadi sollitteenga yellarum pesalam aana silar pesina than namma manasuku pudikum antha mathiri thann unga yezhuthu yenaaku

BTW, vino (envazhi) site la ful videos summ iruku.. neenga venum na athulayumm udane pathukalam

Thanks,
Arun

Reply

கிரி September 27, 2009 at 7:52 PM

// R.Gopi said…
"ஈரம்" விமர்சனம் நல்லா எழுதி இருக்கீங்க… இன்னும் இங்க ரிலீஸ் ஆகல… ஆனதும் பார்க்கிறேன்.//

கண்டிப்பா பாருங்க :-)

//"உன்னை போல் ஒருவன்" விமர்சனம்னு தலைப்புல இருக்கு…. எப்போ எழுத போறீங்க…!!?? ஹீ…ஹீ…ஹீ…. (நான் பார்த்து விட்டேன்… படம் ரொம்ப ஸ்லோ… சுமார்….).//

இனி படத்தை பார்த்தால் நம் கண்ணோட்டமே மாறி இருக்கும்..அந்த அளவிற்கு அந்த படத்தை நொக்கி எடுத்து விட்டார்கள்… இவர்கள் கூறியது எல்லாவற்றையும் படித்து விட்டு இனி படத்தை ரசிக்கவே முடியாது… நல்லவேளை நான் முன்னாடியே பார்த்து விட்டேன் ;-)

=======================================================

// சிங்கக்குட்டி said…
அடுத்த மாதம் சந்திப்போம், கட்டாயம் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்பிவிடுகிறேன்//

ஓகே :-)

========================================================

// arun said…
"அதிலேயே விரிவாக கூறி இருப்பார்கள் அதில் நான் புதிதாக கூற என்ன இருக்கிறது"

Yenna giri ippadi sollitteenga yellarum pesalam aana silar pesina than namma manasuku pudikum antha mathiri thann unga yezhuthu yenaaku//

நன்றி அருண்.. எனக்கு என்ன எழுதுவது என்று தெரியவில்லை? :-)

//BTW, vino (envazhi) site la ful videos summ iruku.. neenga venum na athulayumm udane pathukalam//

பார்த்து விட்டேன் :-)

Reply

Arun September 28, 2009 at 4:39 AM

"எனக்கு என்ன எழுதுவது என்று தெரியவில்லை?"

Oru kalakkal aana writer ku yelutha kathu kodukanuma:).. Unga writeup pudikum nu ketten avalavu thann Giri.. mathabadi naan yethuvum force pannuren nu ninakatheenga

Thanks,
Arun

Reply

KKPSK December 3, 2009 at 10:28 AM

பாடல்கள் மிக அருமை. 2 முறையாவது கேளுங்கள். cable sankar also appreciated songs. விமர்சனம் நன்று

Reply

KKPSK December 3, 2009 at 10:30 AM

நான் பாடல்களை 50 முறையாவது கேட்டிருப்பேன் !

Reply

Leave a Comment

{ 1 trackback }

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed