இந்திய பயண மசாலா மிக்ஸ் – 1

விடுமுறையில் ஊருக்கு சென்று இருந்ததால் வலை தளம் ஆரம்பித்த பிறகு தற்போது தான் ஒரு மாதம் (இணையம்) பதிவுலகம் பக்கமே வராமல் இருந்துள்ளேன், குறிப்பாக வரக்கூடாது என்றே இருந்தேன்.

நாம் நம் தளத்தைக் கட்டுப்படுத்தலாம் தளம் நம்மைக் கட்டுப்படுத்த அனுமதிக்கக்கூடாது இதற்கு அடிமையாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்தால்.

நண்பர் பதிவர் செந்தில் நாதன் நிலை அறிந்து வருத்தமாக இருந்தது, தாமதமாகச் செய்தாலும் என்னாலான உதவி செய்து விட்டேன். இன்னும் உதவி செய்யாதவர்கள் மறந்தவர்கள் அப்புறம் செய்யலாம் என்று இருந்தவர்கள் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

உங்களது உதவி மட்டுமே தேவை என்பதால் அது சிறிய அளவில் இருந்தாலும் அளப்பரியதே. விவரங்களுக்கு இங்கே மற்றும் இங்கே செல்லவும்.

10 நாட்களில் 30 லட்சம் திரட்டுவது என்பது சாதாரண விசயமில்லை. பதிவுலகம் பற்றி எனக்குப் பல்வேறு கருத்துகள் இருந்தாலும் இவ்வளோ பெரிய தொகையைத் திரட்ட அனைவரும் உதவியாக இருந்து இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது பெருமையாக உள்ளது.

செந்தில் நாதன் உடல் நலம் குணம் அடைய இறைவனை வேண்டுகிறேன்.

விமானத்தில் வரும்போது என் பையன் அலப்பறை செய்து விட்டான் அவனை விட அங்கு இருந்த குருவிகள் (விஜய் அல்ல) இம்சை தாங்க முடியவில்லை, என் நொந்த அனுபவங்கள் ஒரு இடுகையாக வரும்.

கடந்த முறை என் அறை நண்பர்களைப் பார்க்க முடியாததால் இந்த முறை சென்னை வந்து மூன்று நாட்கள் இருந்து அவர்களுடன் நேரம் செலவழித்து விட்டே ஊருக்கு சென்றேன், பதிவுலக நண்பர்கள் ஒரு சிலருடன் பேசினேன் ஆனால் யாரையும் சந்திக்க முடியவில்லை.

சென்னையில் வெய்யில் வறுத்தெடுத்து விட்டது, மழை பெய்யாததால் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது, வெய்யில் காலத்தைப் போலவே உள்ளது. பேருந்தில் செல்பவர்களும் காத்து இருப்பவர்களும் ரொம்பப் பாவம்.

தற்போது ஒரு ருபாய் காசும் புதிய இரண்டு ருபாய் காசும் ஒரே மாதிரியாக இருப்பதால் பேருந்தில் செல்லும் போது நடத்துனர்களுடன் சண்டை போடவேண்டியதாக உள்ளது. இந்த யோசனையைக் கூறிய அதி புத்திசாலி யாருன்னு தெரியலை.

நடத்துனர்கள் பயணிகளுக்கு ஒரு ருபாய் கொடுக்க வேண்டிய இடத்தில் கூடத் தங்களிடம் ஒரு ருபாய் காசு இருந்தாலும் வேண்டும் என்றே இரண்டு ஐம்பது காசுகளைக் கொடுத்துத் தங்களிடம் போலியாக அதன் தட்டுப்பாட்டை உருவாக்குகிறார்கள்.

பிறகு பயணிகளிடம் தங்களிடம் சில்லறை (ஐம்பது பைசா) இல்லை என்று கூறி தராமலே இருந்து விடுகிறார்கள். பயணிகளும் இவர்களிடம் சண்டை போட பயந்து விட்டு விடுகிறார்கள்.

என்ன தான் சொல்லுங்க சிங்கப்பூரில் இருந்தாலும் நம்ம சென்னை ஃபிகர்களுக்கு இணை இல்லை, எத்தனை ஃபிகர்கள். அதுவும் ஸ்பென்சர் மற்றும் எத்திராஜ் பக்கம் போக வேண்டி இருந்தது..ம்ம்ம் என்னமோ போங்க நம்ம மனசு நம்ம கிட்ட இல்ல 😉 .

ஓரக்கண்ணால் பார்க்கும் பார்வை நம்ம ஊரில் மட்டுமே கிடைக்கும் ஒன்று. அதில் கிடைக்கும் குழப்பமான (பார்த்தார்களா இல்லையா என்ற) த்ரில்லிங்கே அலாதியானது தான்.

சிங்கப்பூரில் பசங்களே [நம்ம ஊர் பசங்களைச் சொல்லலை 😉 ] பொண்ணுகளைப் பார்க்க மாட்டானுக (என்ன கொடுமை சார்) அப்புறம் எங்கே பொண்ணுக பார்ப்பது.

நான் சென்னையில் 13 வருடம் இருந்துள்ளேன், மறக்க முடியாத நகரம். எனக்கு வாழ்க்கை கொடுத்த நகரம், இதைப் பற்றி ஒரு இடுகையே எழுதலாம். அப்போது இரு பெண்களுக்கு இடையே நடந்த பேருந்து சண்டையை இங்கே கூறுகிறேன். சுவாராசியமாக இருக்கும்.

அடிக்கடி சண்டை பார்ப்பேன் என்றாலும் இது கொஞ்சம் சுவாராசியம்.

வடபழனி செல்லும் 12B பேருந்து

ஏம்மா! காலை மிதிக்கறே!

பஸ் னா அப்படித் தான் இருக்கும்..வேணும்னா ஆட்டோல வா

என்ன திமிரா பேசுற! இது என்ன உங்கப்பன் வீட்டுப் பஸ் னு நினைச்சியா!

ம்..எங்கப்பன் வீட்டுப் பஸ் னா உன்னை மொதல்ல பஸ் லையே ஏத்தி இருக்க மாட்டேன்

???????!!!!!!

நான் வாயடைத்து போயிட்டேன்..எப்படி தான் உடனுக்குடன் பதிலடி தராங்களோ 🙂 .

சென்னை மெரீனா கடற்கரையை 100 !!! வது முறையாக அழகுபடுத்துகிறேன் என்று மக்களின் வரிப்பணத்தை வெட்டி செய்து கொண்டு இருந்தார்கள்

சென்னை சென்ட்ரல் முன்பு உள்ள (மெட்ரோ ரயில் சுரங்க பாதை அருகே) கடைகளை இடித்து இருந்தார்கள். கடைக்காரர்களுக்குக் கடுப்பாக இருக்கும் பொதுமக்களுக்கு ரொம்ப நிம்மதியாக இருக்கும்.

அந்தக் கடைகளால் அங்கு இருந்த போக்குவரத்து நெரிசல் சந்தேகத்திற்கு இடமில்லாமல் குறைந்துள்ளது. விரைவில் புகாரி ஹோட்டல் அருகேயும் இந்த நிலைமை வரலாம்.

ஊரில் இருந்து வந்த போது என் விருப்ப திரை அரங்கான சத்யம்ல “கந்தசாமி” பார்த்தேன். முதல் பாதி மெதுவாகச் செல்கிறது இரண்டாவது பாதி ஓகே. பதிவர்கள் வழக்கம் போலக் கிழித்து விட்டார்கள்.

ரசனை ஒருவருக்கொருவர் மாறுபடும் விமர்சனம் எழுதும் போது படம் பிடிக்கின்றதோ இல்லையோ தங்கள் சொந்த கருத்துக்களைத் திணிக்காமல் எழுதுவதே சிறப்பு.

சுசி கணேசன் ஷங்கரை போல எடுக்க நினைத்து இருக்கிறார் போல.. ஆனால், திரைக்கதையில் வேகம் இல்லை, இரண்டாம் பாதிப் பரவாயில்லை. இதைக் குழந்தைகள் படம் என்று எந்தத் தைரியத்தில் கூறினார்கள் என்று தெரியவில்லை.

ஒரு வேளை விக்ரம் சேவல் வேடம் போட்டதாலா!

விக்ரம் ஒரு சிறந்த நடிகர் இதைப் போல ஒரு படத்திற்கு அதிகக் காலம் எடுக்காமல் அதிகப் படங்களில் குறிப்பாக நல்ல கதை அம்சம் உள்ள படங்களில் நடிக்க வேண்டும்.

படத்தில் ஸ்ரேயா கிளுகிளுப்பாக! உள்ளார் ..என்னா ஆட்டம் போடுகிறார்.. அவர் ஒரு பக்கம் இருக்கிறார், அவர் இடுப்பு ஒரு பக்கம் இருக்கிறது..கடைசியில் முமைத்கான்… 😉

அவனவன் திரை அரங்கம் காத்து வாங்குதுன்னு கல்யாண மண்டபமாக மாற்றிக்கொண்டு இருக்கிறான், சத்யம் என்னடாவென்றால் புதுசு புதுசா கட்டிட்டே இருக்காங்க. ஒவ்வொரு முறை வரும் போதும் பல மாற்றங்கள்.

திரையரங்கை சிறப்பாக வைத்து இருந்தால் பொதுமக்கள் கண்டிப்பாக ஆதரவு தருவார்கள் என்பதற்கு இவர்களே உதாரணம். கந்தசாமி படம் கூட இங்குத் தான் அதிகபட்ச வசூல்.

படம் பார்க்க வருபவர்களை விடக் கடலை போட (ஹலோ! ஸ்டால்ல இருக்கிற கடலை இல்லைங்க) வருபவர்கள் நிறைய இருக்கிறார்களோ என்று எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை 😉 பல பேர் இங்கேயே குடி இருக்கிறார்களாமே உண்மையா! 🙂 .

என்னுடைய விருப்ப இடமான சவேரா Bamboo பார் ல் நேரமின்மையால் சிறிது நேரமே நண்பர்களுடன் நேரம் செலவழிக்க முடிந்தது, எனக்கு ரொம்ப வருத்தம். இங்குத் தான் ஆடியோ சத்தம் இல்லாமல் இருந்தது, தற்போது இங்கேயும் ஆரம்பித்து விட்டார்கள் 🙁 .

நண்பர்களுடன் ஹோட்டல் சென்று விட்டு நண்பன் கூறிய தகவலால் சென்னையின் பிரபலமான ஐஸ் கிரீம் கடை Milky way சென்றோம், அங்கே ஒரு தள்ளுபடி அறிவித்து இருந்தார்கள் அதாவது நம்முடன் வருபவர் அதிகபட்ச எடையில் பாதிச் சதவீதம் தள்ளுபடி.

எங்கள் குழுவில் இருக்கும் கனமான நபரை அதில் நிறுத்தினோம் கரகரவென்று சுத்தி 102 கிலோ வில் வந்து நின்றது ஆஹா! சூப்பர் னு எல்லோரும் ஒரு கட்டு கட்டிடானுக.

நாங்க சென்ற போதே இரவு 10, கடைகாரரிடம் இந்தத் தள்ளுபடி பற்றி விசாரித்துக் கொண்டு இருந்த போது உங்கள் நண்பர் எல்லாம் பெரிய விசயமே இல்லைங்க! இனிமே வருவாங்க பாருங்க!! என்றவுடன் தலை சுத்தி விட்டது.

அடப்பாவிகளா! சென்னையில் எடை குறைக்கும் நிறுவனங்கள் ஏன் தற்போது அதிகரித்துக்கொண்டு உள்ளது என்று இப்போது தான் புரிகிறது.

என்னுடைய இன்னும் சில அனுபவங்களை அடுத்த இறுதி இடுகையில் கூறுகிறேன். ஒரு மாதம் இணையம் பக்கம் வராததால் நண்பர்கள் இடுகைகளைத் தற்போது தான் படித்து வருகிறேன், பின்னூட்டம் இட முடியவில்லை எனவே, அருள் கூர்ந்து மன்னிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.

{ 28 comments… add one }
 • வானம்பாடிகள் September 1, 2009, 3:19 PM

  தில்லுகார மனுசன்யா நீரு. பையன் விமானத்தில அலப்பறை பண்ணிட்டான்னு சொன்னத யாரு படிக்கப் போறான்னு நினைச்சி ஃபிகர் பத்தி சொல்றீரு. அதும் எத்திராஜ், ஸ்பென்ஸர்.இதெல்லாம் ஓவரா தெரியல. :)).

 • ஆ.ஞானசேகரன் September 1, 2009, 3:44 PM

  ஊரில் நல்ல ஜாலியா இருந்தீங்களா… கட்டுரை நல்ல சுவராசியமாக இருக்கு கிரி பாராட்டுகள்

 • V.Radhakrishnan September 1, 2009, 4:35 PM

  இந்தியப் பயணம் மிகவும் சிறப்பாக அமைந்தது குறித்து மிகவும் மகிழ்ச்சி. செந்தில்நாதன் அவர்கள் பற்றி நினைவு கூர்ந்தமைக்கு மிக்க நன்றி.

  திரைப்படம், பெண்கள், நண்பர்கள், தொலைபேசி, சண்டை, பேருந்து, வெயில் என ஒரு வட்டம் போட்டு விட்டீர்கள். அருமை.

  தொடருங்கள் கிரி அவர்களே.

 • கார்த்திக் September 1, 2009, 12:23 PM

  வணக்கம்… எப்படி இருக்கீங்க? ஊருல நல்லா enjoy பண்ணீங்கபோல..

 • நட்புடன் ஜமால் September 1, 2009, 12:31 PM

  என்ன தான் சொல்லுங்க சிங்கப்பூர் ல இருந்தாலும் நம்ம சென்னை ஃபிகர்களுக்கு இணை இல்லை, எத்தனை ஃபிகர்கள். அதுவும் ஸ்பென்சர் மற்றும் எத்திராஜ் பக்கம் போக வேண்டி இருந்தது..ம்ம்ம் என்னமோ போங்க நம்ம மனசு நம்ம கிட்ட இல்ல 😉 ]]

  என்னமோ போங்க பாஸ்

  அந்த நாட்களுக்கு இழுத்துட்டு போறது மட்டுமில்லாம

  ஊருக்கு டிக்கெட் போடலாமான்னு யோசிக்க வைக்கிறீங்க

 • கார்த்திக் September 1, 2009, 12:33 PM

  பாரா.. நான் தான் first-ஆ.. ஹா ஹா.. சிங்கை போய் சேர்ந்துடீங்க-னு கேள்விப்பட்டேன்.. உடனே உங்க blog-க்கு வந்தேன்.

 • நட்புடன் ஜமால் September 1, 2009, 12:33 PM

  பதிவுலகம் பற்றி எனக்கு பல்வேறு கருத்துகள் இருந்தாலும் இவ்வளோ பெரிய தொகையை திரட்ட அனைவரும் உதவியாக இருந்து இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது பெருமையாக உள்ளது.]]

  ஆம்.

 • Vijay September 1, 2009, 1:23 PM

  ஹ்ம்ம்ம்.. ஃபிகர்களை பத்தி ரொம்ம்ம்ப அனுபவிச்சு எழுதியிருக்கீங்க!! வூட்டுல ப்ளாக் எல்லாம் படிக்கற வழக்கமில்லையோ! 😉

 • ’டொன்’ லீ September 1, 2009, 7:04 PM

  வாங்கோ கிரி..எப்படி பயணம் எல்லாம்…

  சிங்கையில் ஃபிகர்களே இல்லை என்று நீங்கள் சொல்லியிருப்பதற்கு நான் என் வன்மையான கண்டங்களை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்…:-))))

 • கிரி September 1, 2009, 7:40 PM

  //கார்த்திக் said…
  வணக்கம்… எப்படி இருக்கீங்க? ஊருல நல்லா enjoy பண்ணீங்கபோல/

  ரொம்ப நல்லா இருக்கேன் கார்த்திக்

  //பாரா.. நான் தான் first-ஆ.. ஹா ஹா.//

  என்னோட பதிவிற்க்கெல்லாம் பதிவிட்டவுடன் பின்னூட்டம் போட யாரும் இல்லை..(ஜமாலை தவிர) அதனால ஆச்சர்யம் ஒன்றும் இல்லை 😉

  =================================================================

  //நட்புடன் ஜமால் said…
  அந்த நாட்களுக்கு இழுத்துட்டு போறது மட்டுமில்லாம//

  ஜமால் இப்படி நீங்களே உங்களை வயசான லிஸ்ட் ல சேர்த்துட்டீங்களே! ஹி ஹி

  =================================================================

  // Vijay said…
  ஹ்ம்ம்ம்.. ஃபிகர்களை பத்தி ரொம்ம்ம்ப அனுபவிச்சு எழுதியிருக்கீங்க!! வூட்டுல ப்ளாக் எல்லாம் படிக்கற வழக்கமில்லையோ! ;)//

  தண்ணி தெளிச்சாச்சு 😉

  ===================================================================

  // ஷண்முகப்ரியன் said…
  நாம் நேரில் பார்த்துப் பேச முடியாதது வருத்தந்தான்.அடுத்த முறை பார்ப்போம்.//

  அடுத்த முறை சந்திப்போம் சார்.. நன்றி

  ====================================================================

  //வானம்பாடிகள் said…
  தில்லுகார மனுசன்யா நீரு. பையன் விமானத்தில அலப்பறை பண்ணிட்டான்னு சொன்னத யாரு படிக்கப் போறான்னு நினைச்சி ஃபிகர் பத்தி சொல்றீரு. அதும் எத்திராஜ், ஸ்பென்ஸர்.இதெல்லாம் ஓவரா தெரியல. :)).//

  வாங்க பாலா இன்னைக்கு தான் உங்க படம் பார்க்கிறேன்.. நான் கூட நீங்க வயதில் சின்னவர் என்று நினைத்தேன்..அப்பவே உங்க பதிவுகளை பார்த்து டவுட் வந்தது 🙂

  அப்புறம் ஓவரெல்லாம் இல்லைங்க ..உண்மைய சொன்னேன் 😉 நல்லவன் வேஷம் எதுக்கு 🙂

  ===========================================================

  // ஆ.ஞானசேகரன் said…
  ஊரில் நல்ல ஜாலியா இருந்தீங்களா… கட்டுரை நல்ல சுவராசியமாக இருக்கு கிரி பாராட்டுகள்//

  நன்றி ஞானசேகரன்

  ============================================================

  //ஜோசப் பால்ராஜ் said…
  எச்சூஸ்மீ,
  ஊருக்குப் போனமா, ஃபிகரப் பார்த்தோமான்னு இல்லாம அத எழுதி வேற ஏஞ்சாமி எங்க வயித்தெரிச்சல கொட்டிகிறிங்க? //

  ஹி ஹி ஹி

  //ஆமா இன்னம் என்ன உங்களுக்கு ஃபிகர் வேண்டிகிடக்கு? அடுத்தவருசம் சின்னவரு கூட வந்து டாடி, எங்க ஏரியா உள்ள வராதன்னு சொல்லுவாரு. பீ கேர்ஃபுல்//

  என்ன பண்ணுறது என்னை பார்த்தா யாருமே எனக்கு திருமணம் ஆகி விட்டது என்று சொன்னா நம்ப மாட்டேங்குறாங்க..ஒரு பையனே இருக்கான் என்றால் சந்தேக கண்ணோட பார்க்குறாங்க….விரைவில் நான் என் பையனும் சேர்ந்தே சைட் அடிக்க கிளம்பிடுவோம்னு நினைக்கிறேன் 😉

  ============================================================

  // வெ.இராதாகிருஷ்ணன் said…
  திரைப்படம், பெண்கள், நண்பர்கள், தொலைபேசி, சண்டை, பேருந்து, வெயில் என ஒரு வட்டம் போட்டு விட்டீர்கள். அருமை. //

  நன்றி இராதாகிருஷ்ணன் சார்

  =============================================================

  //குறை ஒன்றும் இல்லை !!! said…
  அவங்க ஓரக்கண்ணால பாத்தது இருக்கட்டும் அம்மிணி எப்படி பாத்தாங்க??//

  விஜய்க்கு பதில் கூறி இருக்கேன் பாருங்க 🙂

  //அப்புறம் கிளம்பும் போது சொல்லாமல் போனதற்கு கண்டனங்களை இங்கு பதிவு செய்கிறேன்!//

  கிளம்புற அவசரத்தில் மறந்து இருப்பேன்…நீங்க செய்து இருக்க கூடாதா! 😉

  ==========================================================

  //டொன்’ லீ said…
  வாங்கோ கிரி..எப்படி பயணம் எல்லாம்.//

  முக்கால் வாசி நாட்கள் என் பையன் மொட்டை அடிக்கும் நிகழ்ச்சிக்காகவே போய் விட்டது, அத்தனை நாள் மொட்டை அடித்தாங்களா! என்று பயந்துடாதீங்க 🙂 அழைப்பு மற்றும் விருந்து என்று நொக்கி எடுத்துட்டாங்க

  //சிங்கையில் ஃபிகர்களே இல்லை என்று நீங்கள் சொல்லியிருப்பதற்கு நான் என் வன்மையான கண்டங்களை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்…:-))))//

  ஃபிகர் இல்லைனா சொன்னேன்..நம்ம ஊர் ஃபிகர்ஸ் சூப்பர் னு சொன்னேன் …இங்கே ஒரு ஃபிகரும் திரும்பி கூட பார்க்காது..போர் அடிக்குது 🙂

  சிங்கை ஃபிகர்ஸ் பற்றி எழுதினா ஒரு தனி பதிவே போடணும் 😉

 • ஷண்முகப்ரியன் September 1, 2009, 2:19 PM

  உங்களுடன் நானும் சென்னையைச் சுற்றிப் பார்த்து விட்டேன்,கிரி.
  நாம் நேரில் பார்த்துப் பேச முடியாதது வருத்தந்தான்.அடுத்த முறை பார்ப்போம்.

 • ஜோசப் பால்ராஜ் September 1, 2009, 4:34 PM

  எச்சூஸ்மீ,
  ஊருக்குப் போனமா, ஃபிகரப் பார்த்தோமான்னு இல்லாம அத எழுதி வேற ஏஞ்சாமி எங்க வயித்தெரிச்சல கொட்டிகிறிங்க?

  ஆமா இன்னம் என்ன உங்களுக்கு ஃபிகர் வேண்டிகிடக்கு? அடுத்தவருசம் சின்னவரு கூட வந்து டாடி, எங்க ஏரியா உள்ள வராதன்னு சொல்லுவாரு. பீ கேர்ஃபுல்.

 • அவங்க ஓரக்கண்ணால பாத்தது இருக்கட்டும் அம்மிணி எப்படி பாத்தாங்க??
  அப்புறம் கிளம்பும் போது சொல்லாமல் போனதற்கு கண்டனங்களை இங்கு பதிவு செய்கிறேன்!!

 • Mahesh September 1, 2009, 8:18 PM

  //ஆமா இன்னம் என்ன உங்களுக்கு ஃபிகர் வேண்டிகிடக்கு? அடுத்தவருசம் சின்னவரு கூட வந்து டாடி, எங்க ஏரியா உள்ள வராதன்னு சொல்லுவாரு. பீ கேர்ஃபுல்.//

  நான் ஜோசப்பைச் சொன்னேன் !!

 • வாசுகி September 1, 2009, 8:54 PM

  ஊரில நன்றாக பொழுது போயிருக்கு என்று தெரியுது.

  //ம்ம்ம் என்னமோ போங்க நம்ம மனசு நம்ம கிட்ட இல்ல ;‍) … //
  இந்த வயதிலையுமா??

 • //கிளம்புற அவசரத்தில் மறந்து இருப்பேன்…நீங்க செய்து இருக்க கூடாதா! ;-)//

  நான் கூப்பிட்டப்போ .. மொபைல் ஸ்விட்ட் ஆஃப்.. 🙂

 • சரவணகுமரன் September 2, 2009, 5:21 AM

  வெல்கம் பேக்

  🙂

 • SUMAZLA/சுமஜ்லா September 2, 2009, 12:28 AM

  ரொம்பவும் ரசித்தேன். ஓட்டும் போட்டாச்சு! நான் ரசித்தவை!

  //நாம் நம் தளத்தை கட்டுப்படுத்தலாம் தளம் நம்மை கட்டுப்படுத்த அனுமதிக்கக்கூடாது இதற்க்கு அடிமையாக இருக்க கூடாது என்ற எண்ணத்தால்.//

  //என்ன தான் சொல்லுங்க சிங்கப்பூர் ல இருந்தாலும் நம்ம சென்னை ஃபிகர்களுக்கு இணை இல்லை, எத்தனை ஃபிகர்கள். அதுவும் ஸ்பென்சர் மற்றும் எத்திராஜ் பக்கம் போக வேண்டி இருந்தது..ம்ம்ம் என்னமோ போங்க நம்ம மனசு நம்ம கிட்ட இல்ல 😉 ஓரக்கண்ணால் பார்க்கும் பார்வை நம்ம ஊரில் மட்டுமே கிடைக்கும் ஒன்று…அதில் கிடைக்கும் குழப்பமான (பார்த்தார்களா இல்லையா என்ற) த்ரில்லிங்கே அலாதியானது தான்.//

  ஒரிஜினல் தமிழனுக்கான முத்திரை உங்களிடம் இருக்கிறது! அழகான பிகர்ஸ அவரா பார்த்தா எனக்கு பொறுக்காது, அதனால, நானே கூப்பிட்டு காட்டி விடுவேன் 🙂

  //வடபழனி செல்லும் 12B பேருந்து//

  செம்ம காட்டு!

  // அடப்பாவிகளா! சென்னையில் எடை குறைக்கும் நிறுவனங்கள் ஏன் தற்போது அதிகரித்துக்கொண்டு உள்ளது என்று இப்போது தான் புரிகிறது.//

  ஆனால், இன்னமும் இந்தியாவை ஏழை நாடு என்கிறார்களே?!

  நானும் காலேஜ் போக போறேன்!!! (ஆமா ஒவ்வொரு ப்ளாக் ப்ளாகா போய் சொல்லிட்டு வாங்கனு கமெண்ட் அடிக்கிறா என் மகள்)

 • அதி பிரதாபன் September 2, 2009, 12:41 AM

  திரும்பி வந்துட்டீங்களா அண்ணே, ரொம்ப சந்தோசம்.

  விடுமுறையிலும் பின்னூட்டம் போட்ட மாதிரி ஞாபகம் இருக்கே?

  அப்புறம் இந்த 50 பைசா, 1ரூபா மாதிரி 5 ரூபாயும் குழப்பம் பண்ணுது.

  உண்மையிலேயே சத்யம் நல்லா பராமரிக்கிறாங்க. இதைப் பார்த்து இப்போ இன்னும் சில அரங்குகளும் நல்லா கொண்டு வர்றாங்க.

 • கிரி September 2, 2009, 10:22 AM

  // Mahesh said…
  //ஆமா இன்னம் என்ன உங்களுக்கு ஃபிகர் வேண்டிகிடக்கு? அடுத்தவருசம் சின்னவரு கூட வந்து டாடி, எங்க ஏரியா உள்ள வராதன்னு சொல்லுவாரு. பீ கேர்ஃபுல்.//

  நான் ஜோசப்பைச் சொன்னேன் !!//

  ஹா ஹா ஹா

  =============================================================

  //வாசுகி said…
  ஊரில நன்றாக பொழுது போயிருக்கு என்று தெரியுது//

  வழக்கம் போல விடுமுறை பத்தலை 😉 அதுவும் குடும்பஸ்தன் ஆனா பிறகு சொந்தகாரங்க வீட்டிற்கு போவதற்கே நேரம் சரியா இருக்கு

  //இந்த வயதிலையுமா?//

  என்னை என்ன கிழபயன்னு நினைத்துட்டீங்களா! 🙂 சின்ன! பையன் மாதிரி தாங்க இருப்பேன் 😉

  =========================================================

  // குறை ஒன்றும் இல்லை !!! said…
  நான் கூப்பிட்டப்போ .. மொபைல் ஸ்விட்ட் ஆஃப்.. //

  அப்ப நீங்க இரவு 12 மணிக்கு மேல செய்து இருப்பீங்க.. 🙂

  ==========================================================

  // SUMAZLA/சுமஜ்லா said…
  ஒரிஜினல் தமிழனுக்கான முத்திரை உங்களிடம் இருக்கிறது! அழகான பிகர்ஸ அவரா பார்த்தா எனக்கு பொறுக்காது, அதனால, நானே கூப்பிட்டு காட்டி விடுவேன் :)//

  ஹி ஹி ஹி என் மனைவியும் அப்படி தான்…. இருந்தாலும் நான் அதுக்கு முன்னாடியே பார்த்துடுவேன் ..தெரியாத மாதிரி சத்தம் இல்லாம இருந்துடுவேன் 😉

  //இன்னமும் இந்தியாவை ஏழை நாடு என்கிறார்களே?!//

  நம்ம SWISS வங்கி கணக்கை கேட்டே அவனவன் அரண்டு போய் இருக்கான்..ஸ்லம் டாக் மில்லியனர் படம் பார்த்து எல்லோரும் அப்படி தான் இருப்பாங்க என்று நினைத்து இருப்பாங்களோ.. 🙂

  //நானும் காலேஜ் போக போறேன்!!!//

  ரொம்ப சந்தோசமா இருக்கீங்கன்னு நினைக்கிறேன் ..உங்க எழுத்திலேயே தெரியுது. கல்லூரி வாழ்க்கையை லேட் ஆனாலும் லேட்டஸ்ட்டாக அனுபவிக்க வாழ்த்துக்கள்.

  சுமஜ்லா நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி

  ====================================================

  //எவனோ ஒருவன் said…
  திரும்பி வந்துட்டீங்களா அண்ணே, ரொம்ப சந்தோசம்//

  நல்ல வேளை ரொம்ப சந்தோசம் னு போட்டீங்க…இல்லைனா நொந்து போய் இருப்பேன்.. 😉

  //இந்த 50 பைசா, 1ரூபா மாதிரி 5 ரூபாயும் குழப்பம் பண்ணுது.//

  என் அக்கா கூட சொன்னாங்க

  //உண்மையிலேயே சத்யம் நல்லா பராமரிக்கிறாங்க. இதைப் பார்த்து இப்போ இன்னும் சில அரங்குகளும் நல்லா கொண்டு வர்றாங்க.//

  உண்மை தான் பெஸ்கி

  ========================================================

  சரவணகுமரன் வருகைக்கு நன்றி

 • வால்பையன் September 2, 2009, 11:03 AM

  ஒரிஜினல் மசாலா மிக்ஸ்!

 • R.Gopi September 2, 2009, 1:15 PM

  வாங்க கிரி…

  பயணம் நல்லா இருந்ததா?? வீட்டுல எல்லாரும் நலமா??

  மீண்டும் உங்களின் ACTIVE PARTICIPATION பார்க்கணும்….

  இந்த தொடர்ல "கந்தசாமி ஸ்ரேயா"வ விட கவர்ச்சி தூக்கலா இருக்குன்னு எல்லாரும் சொல்றாங்களே??

  இதுக்கு எல்லாம் "மாடரேஷன்" இல்லையா??

 • கிரி September 2, 2009, 9:02 PM

  // வால்பையன் said…
  ஒரிஜினல் மசாலா மிக்ஸ்//

  நன்றி அருண் 🙂

  =========================================================

  //R.Gopi said…
  வாங்க கிரி…
  பயணம் நல்லா இருந்ததா?? வீட்டுல எல்லாரும் நலமா??//

  யாவரும் நலம்

  //இதுக்கு எல்லாம் "மாடரேஷன்" இல்லையா??//

  இந்த ஒரு வரிக்கு (வார்த்தைக்கு) மேல இரண்டு வரியா 🙂

  ===========================================================

  // THANGA MANI said…
  "இந்திய பயண மசாலா மிக்ஸ்" அப்படின்னா என்ன நண்பரே?//

  நீங்க ஆர்வமா தெரிந்து கொள்ளும் அளவிற்கு எதுவும் இல்லைங்க.

 • THANGA MANI September 2, 2009, 7:57 PM

  "இந்திய பயண மசாலா மிக்ஸ்" அப்படின்னா என்ன நண்பரே?

 • tirupur September 2, 2009, 10:17 PM

  wlecome back

 • ARASIAL September 3, 2009, 12:46 AM

  "இந்திய பயண மசாலா மிக்ஸ் – 1"

  -இதெல்லாம் 'ரெம்ப' ஓவருய்யா… தோ…இருக்கிற சிங்கப்பூர்லருந்து வந்து போனது உமக்கு 'இந்தியப் பயண'மா…?!

  விட்டா 'எங்க சிங்கப்பூருன்னு' உட்காந்துடுவீர் போல… எந்த நாட்டுக்குப் போனாலும் நீங்க கோபி பார்ட்டிதான்… மறந்துடப்படாது!

 • கிரி September 3, 2009, 9:24 AM

  // tirupur said…
  wlecome back//

  நன்றி திருப்பூர்

  =============================================================

  // ARASIAL said…
  -இதெல்லாம் 'ரெம்ப' ஓவருய்யா… தோ…இருக்கிற சிங்கப்பூர்லருந்து வந்து போனது உமக்கு 'இந்தியப் பயண'மா…?! //

  ஹி ஹி ஹி ஹி

  //விட்டா 'எங்க சிங்கப்பூருன்னு' உட்காந்துடுவீர் போல… எந்த நாட்டுக்குப் போனாலும் நீங்க கோபி பார்ட்டிதான்… மறந்துடப்படாது!//

  இங்க இங்க தான் கிரி நிக்கிறான் ..என்னோட ஃப்ரோபைல் பாருங்க..பதில் கூறி இருப்பேன் ..எப்பூபூபூபூபூபூபூடி

 • Simple_Sundar September 5, 2009, 8:23 AM

  //Giri says: நாம் நம் தளத்தை கட்டுப்படுத்தலாம் தளம் நம்மை கட்டுப்படுத்த அனுமதிக்கக்கூடாது இதற்க்கு அடிமையாக இருக்க கூடாது என்ற எண்ணத்தால்.//

  சில மாதங்களுக்கு முன்பு வரை நானும் அப்படித் தான் இருந்தேன் கிரி. ஒரு கட்டத்தில் தளத்திற்கும் இணையத்திற்கும் நான் அடிமையாகிவிட்டதை உணர்ந்து, மெல்ல அதிலிருந்து மீண்டு வந்துவிட்டேன். தற்போது என் தளத்தை (Onlysuperstar.com) நான் தான் கட்டுப்படுத்துகிறேன். அது என்னை கட்டுபடுத்தவில்லை.

  நான் மாறியதற்கு இன்னொரு முக்கிய காரணம்: அது ஏதோ என் முழு நேர தொழில் என்று சிலர் நினைத்துகொண்டதும், உங்க website office இல் எத்தனை பேர் வேலை செய்றாங்க? என்றும் சிலர் கேட்டதும் தான்… (நல்ல கேக்குராங்கயா டீடைல்லு.)

Leave a Comment