உங்கள் தளத்தை வேகமாக செயலாற்ற வைக்க வழிகள்

ம் தளம் வேகமாகச் செயல்படவேண்டும் உடனே திறக்க வேண்டும் என்று ஆசை படாதவர்கள் யாருமே இருக்க முடியாது.

உங்களின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்றால் சில தியாகங்கள்! செய்ய வேண்டும் அப்போது தான் உங்கள் தளம் வேகமாக இயங்கும் 🙂 .

நமது தளம் மெதுவாகச் செயல்பட மற்ற தளங்களே காரணம்..ஹலோ! என்னங்க இது! என்னோட தளத்தை வேகமா செயல்பட வைக்க ஐடியா கொடுப்பீங்கன்னு பார்த்தா அடுத்தவங்க தளத்தைப் பற்றிச் சொல்லிட்டு இருக்கீங்களே! என்று கோபப்படாதீங்க.

வாங்க வரிசையாகப் பார்ப்போம்

முதலில் ஒரு முக்கியமான விஷயத்தை முடிவு பண்ணிக்குங்க.. உங்க தளம் வேகமா இருக்கனுமா இல்ல அலங்காரமா இருக்கனுமா! என்று. வேகத்திற்கும் அலங்காரத்திற்கும் என்ன சம்பந்தம்! என்று டென்ஷன் ஆகாதீங்க.

அவசியமில்லாத அழகு கேட்ஜட்களை நிறுவுவதை அறவே தவிர்க்க வேண்டும். இதில் சில அழகோடு வைரசையும் சேர்த்துக் கொண்டு வந்து விடும் மற்றும் தேவையில்லாத பாப் அப் களும் தோன்றி உங்கள் தளத்துக்கு வருபவர்களை வெறுப்பேற்றும்.

உங்கள் டெம்ப்ளேட்டில் மற்ற தளங்களின் நிரழிகள் (ஸ்க்ரிப்ட்) அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் (கூகிள் அனலைஸ்டிக்ஸ், தமிழ்மணம் மற்றும் உங்களுக்குத் தேவையான திரட்டிகளின் ஒட்டுப்பட்டை நிரழிகள் தவிர).

காரணம் நம் தளத்தைத் திறக்கும் போது அந்த நிரழிகள் அதற்குண்டான வேலையைச் செய்ய அந்தச் சர்வரை தொடர்பு கொள்ள நேரம் எடுக்கும்.

இதனால் நம் தளம் திறக்க நேரமாகும், அதனால் திறக்கும் வரை நாம தலைய சொரிஞ்சுட்டு இருக்க வேண்டியது தான். எனவே முடிந்த வரை தேவையில்லாமல் உள்ள மற்ற தள நிரழிகளை நீக்கணும்.

இதுல தேவை இல்லாத நிரழி தேவையான நிரழின்னு எப்படிக் கண்டு பிடிக்கிறது என்றால் வடிவேல் சொல்ற மாதிரி நீங்க புடுங்குறது எல்லாமே தேவையில்லாதது தான் (அதுக்குன்னு உங்க தளத்து நிரழிய நோண்டிடாதீங்க 😀 ).

உங்களுக்கு மிக முக்கியமாகத் தேவைப்படுகிற கேட்ஜட் (வாசகர்கள் வருகை, ரீடர், பின் தொடருபவர்கள் போன்றவை) மட்டும் வைத்துக்கொண்டு மற்ற அனைத்தையும் நீக்கி விடுங்கள்.

உங்கள் தளங்களில் சைடு பாரில் அதிக அளவில் படங்களை வைக்கக் கூடாது

முன் பக்கத்தில் உள்ள இடுகைகளின் எண்ணிக்கையை இரண்டிற்கு மிகாமல் வைத்துக்கொள்வது நல்லது, இதுவும் வேகத்தைக் குறைக்கும்.

ஒரு சிலர் சிரிப்பான் வைத்து இருப்பார்கள், இவை எல்லாம் ஒவ்வொரு முறை உங்கள் தளத்தைத் திறக்கும் போதும் அது தொடர்பான தளத்தைத் தொடர்பு கொள்ளும் எனவே சில நொடிகள் திறக்க நேரம் எடுக்கும்

தமிழிஷ் மற்றும் புதிய திரட்டிகளின் ஒட்டுப் பட்டை கீழ் பகுதியில் வரும் ஆனால் தமிழ்மணத்தின் கருவி (ஓட்டு) பட்டை மேற்பகுதியில் வரும் இதை அடிப்பகுதியில் மாற்றி வைத்துக்கொள்ளவும்.

ஒருவேளை தமிழ்மணம் சர்வர் பிரச்சனை என்றாலும் நமது தளம் திறக்க நேரம் எடுக்காது. (இதை எப்படிச் செய்வது என்ற தொடுப்பு என்னிடம் இல்லை இருப்பவர்கள் பகிர்ந்து கொள்ளலாம்)

இதைப் போன்ற காரணங்களால் உங்கள் தளம் திறக்க யோசனை செய்து கொண்டு இருக்கும், ஒரு சிலர் தளத்தைப் பார்த்தீர்கள் என்றால் பின்னூட்ட பகுதி வர ரொம்ப நேரம் எடுக்கும், அதற்கெல்லாம் இதைப் போன்ற காரணங்களே இருக்கும்.

இதை எளிதாக அறிந்து கொள்ள ஏதாவது வழி இருக்கிறதா என்பவர்களுக்கு…உங்கள் தளத்தைத் திறக்கும் போது உலவியில் ஸ்டேட்டஸ் பாரில் எந்தத் தளத்தில் அதிக நேரம் நின்று கொண்டு இருக்கிறது என்பதைக் கவனித்து அது சம்பந்தமாக என்ன உள்ளது என்று கண்டறிந்து நீக்கி விடுங்கள்.

சுருக்கமாகச் சொல்வதென்றால் முடிந்த வரை மற்ற தளங்களின் நிரழிகளைத் தவிருங்கள்.

தளத்தை அழகு படுத்துவதற்காக அதிகளவில் கேட்ஜட்டுகளைச் சேர்க்காமல் எளிமையான டெம்ப்ளேட்டை நல்ல வண்ணத்துடன் சேர்ப்பதன் மூலம் அழகை எளிதாகக் கொண்டு வந்து விடலாம்.

{ 15 comments… add one }
 • SUREஷ் (பழனியிலிருந்து) September 7, 2009, 7:45 AM

  நன்றி நண்பரே..,

 • வானம்பாடிகள் September 7, 2009, 9:12 AM

  நன்றி கிரி.

 • சரவணகுமரன் September 7, 2009, 10:50 AM

  சுருக்கமா என் தளம் போல் வைச்சிக்கோங்க'ன்னு சொல்றீங்க… 🙂

  ஹி ஹி… ஒரு சுய தம்பட்டம்…

  இந்த மாதிரி நினைச்சி தான், நான் என்னோடத வைச்சிருக்கேன்… நீங்க அத வார்த்தைகளில் மத்தவங்களுக்கு உபயோகபடுற அழகா சொல்லியிருக்கீங்க… வாழ்த்துக்கள்…

 • V.Radhakrishnan September 7, 2009, 12:12 PM

  🙂 மிகவும் நல்லதொரு இடுகை. இதன்காரணமாகவே பல விசயங்களை தவிர்த்துவிட்டேன். மிக்க நன்றி கிரி அவர்களே.

 • வால்பையன் September 7, 2009, 2:11 PM

  //திறக்கும் வரை நாம தலைய சொரிஞ்சுட்டு இருக்க வேண்டியது தான். //

  பலருக்கு இதனால் தான் டாப்பு காலியா இருக்கா!?

  🙂

  பயனுள்ள பதிவு தல!

 • புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
  தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
  http://www.ulavu.com
  (ஓட்டுபட்டை வசதிஉடன் )
  உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

  இவண்
  உலவு.காம்

 • T.V.ராதாகிருஷ்ணன் September 7, 2009, 7:17 PM

  நன்றி கிரி

 • சிங்கக்குட்டி September 7, 2009, 8:47 PM

  என் தளத்தில் பண்ணியாச்சு :-)) நல்ல தகவலுக்கு நன்றி.

 • ரஹ்மான் September 7, 2009, 9:01 PM

  அருமையான பதிவு நன்றி நண்பரே.

 • கிரி September 8, 2009, 12:24 PM

  சுரேஷ், பாலா,சரவணகுமரன், ராதாகிருஷ்ணன், அருண், ராதாகிருஷ்ணன்,சிங்கக்குட்டி மற்றும் ரஹ்மான் வருகைக்கு நன்றி

 • LOSHAN September 8, 2009, 12:45 PM

  நல்ல விஷயங்கள் சொல்லி இருக்கீங்க நண்பா.. எனது தளமும் முன்பு ரொம்பவே ஸ்லொவாகத் தான் இருந்தது.. இப்போது கொஞ்சம் பரவாயில்லை.. ஆனாலும் என்ன செய்ய இந்தப் பாழாய்ப் போன மனசு எல்லாத்தையும் வச்சிருக்க ஆசைப் படுத்தே.. 😉

 • THANGA MANI September 9, 2009, 6:58 PM

  நன்று.நன்றி.

 • பிரவின்குமார் September 10, 2009, 7:47 PM

  நல்ல அருமையான பயனுள்ள பதிவு.. நானும் இதனை பின்பற்றி பலமாற்றங்களை செய்துள்ளேன்.
  பாராட்டுகளுடன்
  நன்றி நண்பரே!

 • கிரி September 13, 2009, 7:43 PM

  லோஷன் தங்கமணி பிரவின் குமார் வருகைக்கு நன்றி

 • அதி பிரதாபன் September 20, 2009, 7:58 PM

  அருமை.
  நானும் இதையேதான் பின்பற்றுகிறேன். விட்ஜெட்டே வைக்க வேண்டாமென்றுதான் இருந்தேன். ஆசை யாரை விட்டது… வருபவர்கள் கணக்கைப் பார்க்க மட்டும் ஒன்றை வைத்துள்ளேன்.

Leave a Comment