சென்னையில் இருந்து ஊருக்கு வந்து கொஞ்ச நாட்கள் சொந்தக்காரங்களை பார்க்கவும் அவர்களை எங்கள் வீட்டு நிகழ்ச்சிக்கு அழைக்கவுமே நேரம் சரியாக இருந்தது, குடும்பஸ்தன் ஆனாலே ஒரே குஷ்டமப்பா அங்க இங்கே எங்கேயும் நகர விடமாட்டேங்குறாங்க..
என்னோட நெருங்கிய நண்பர்கள் கொஞ்சம் பேர் பெங்களூரு சென்று விட்டதால் அங்கே ஒரு நாள் பயணமாக சென்று வந்தேன். ரயிலில் டிக்கெட் கிடைக்கவில்லை என்பதால் என் தம்பியை (சித்தப்பா பையன்) விட்டு டிராவல்ஸ் ல் முன்பதிவு செய்ய சொன்னேன் அவன் AC கோச்சில் முன்பதிவு செய்து விட்டான். ஈரோடு வந்து தான் பஸ் ல் செல்ல வேண்டும் என்பதால் அருணை (வால்பையன்) பார்க்காமல் எப்படி போவது ..இடம் கூறி அவரை வர சொன்னேன் பக்காவாக வந்து விட்டார், வந்ததோடு இல்லாமல் வாங்க ஒரு பீரை போடுவோம் என்றார் ஐயையோ! அப்புறம் நான் வழி எல்லாம் ஓட்டுனரை நிறுத்த சொல்லவேண்டும் என்று எஸ் ஆகிட்டேன் (AC பேருந்து என்பதால்), திரும்ப வரும் போது கண்டிப்பாக வரக்கூறினார்..முடியவில்லை. அருண் என்னை மன்னிப்பாராக.
பெங்களூருவில் நண்பன் ஆலோசனை படி சில்க் போர்டில் இறங்கியவுடன் அங்கே வந்து அழைத்து சென்று விட்டான். (இங்கே பேரெல்லாம் ஸ்டைல் ஆக இருக்கு)
சாஃப்ட்வேர் சிட்டி என்றால் கண்டிப்பா பெங்களூருவை தான் கூற முடியும்..சென்னை எல்லாம் கிட்டயே வர முடியாது போல (ஹி ஹி ஆனா இங்கே வேலை பாக்குற ஆளுங்க பெரும்பாலும் நம்ப ஆளுங்க தான்)அத்தனை நிறுவனங்கள், சாலை நெடுகிலும் மென்பொருள் நிறுவனங்கள் தான்.
தற்போது ரயில் பாலம் கட்டுவதால் பெங்களூருவையே தோண்டி போட்டுள்ளார்கள், எங்கு காணினும் போக்குவரத்து நெரிசல். அதுவும் அலுவலக நேரங்களில் மனுஷனுக்கு பைத்தியம் பிடித்து விடும் அப்படி உள்ளது.
பெங்களூருவில் இளசுகளின் அடையாளங்களுள் ஒன்றான MG சாலை பகுதியில் ரயில் பால வேலை நடைபெறுவதால் அந்த இடமே ரணகளமாக உள்ளது என்று கூறி என்னை அங்கே அழைத்து செல்ல மாட்டேன் என்று கூறி விட்டார்கள், பெங்களூரு வந்தால் தவறாமல் நான் செல்லும் இடம்

அங்கே Brigade சாலை அருகே விமானத்தை போல (உள்ளே) வடிவமைப்பு உள்ள Pub எனக்கு ரொம்ப பிடித்தமான ஒன்று, அங்கே வேலை செய்பவர்கள் விமான பணி ஆண் (பெண் எதிர்ப்பதம்) போல உடை அணிந்து இருப்பார்கள், இன்னும் இருக்கிறதா என்று தெரியவில்லை.
பெங்களூரு கர்நாடகாவில் இருக்கிறது அவ்வளோ தான் ஆனால் அங்கே தமிழ் பேசாமல் இருப்பவர்கள் மிக மிக குறைவு.பெரிய அதிசயமாக பெங்களூருவில் தண்ணீர் பிரச்சனை இருப்பதாக கூறினார்கள், ஒரு சில நாள் தண்ணீர் வருவதில்லை என்றார்கள். பெங்களூருக்கே தண்ணீர் பிரச்சனை என்றால்! என்ன கொடுமை இது! ஒரு நாளே இருக்க முடிந்ததால் பலருடன் தொலைபேசியில் மட்டும் பேசி விட்டு கிளம்பிட்டேன்.
நான் முக்கியமாக ஊருக்கு வந்ததே என் பையனுக்கு மொட்டை அடிக்க தான், பழனியில் தான் மொட்டை அடித்தோம். மொட்டை அடித்த பிறகு அழுத என் பையனை விரைவில்! சமாதான படுத்தி ரொம்ப சந்தோசமாகிட்டேன். நானும் இப்ப பையனை கவனிப்பதில் தேறி விட்டேன்

பழனியில் ஏதாவது உதவி வேண்டும் என்றால் தொடர்பு கொள்ள கூறிய வடகரை வேலன் அவர்களுக்கு நன்றி, நல்லவேளை அவருக்கு சிரமம் வைக்கும் படி எதுவும் தேவை வரவில்லை. சுரேஷ் (பழனியிலிருந்து) அவர்கள் எண் இல்லாததால் தொடர்பு கொள்ள முடியவில்லை. தற்போது எங்கள் ஊரிலிருந்து பழனி வரை (கோபி-திருப்பூர்-காங்கேயம்-தாராபுரம்-பழனி) சாலை சிறப்பாக போடப்பட்டுள்ளது.
கோவில், சொந்தகாரங்க வீடு, பெங்களூரு என்று பஜ்ஜி ஆகிட்டேன். இந்த ரணகளத்திலையும் ஒரு கிளுகிளுப்பா டிவி பார்க்க உட்கார்ந்தா அது அதை விட கொடுமையா இருக்கு..
இந்தாங்க என்னோட டிவி புராணம்
என்னங்க இது! உலக அநியாயமா இருக்கு…நிகழ்ச்சிக்கு நடுவே விளம்பரமா! இல்ல விளம்பரத்துக்கு நடுவே நிகழ்ச்சியான்னே தெரியல..விளம்பரமா போட்டு தாக்குறானுக, சரி லோக்கல் கேபிள் டிவியாவது பார்ப்போம் என்று பார்த்தால் அதற்க்கு மற்றவர்களே பரவாயில்ல போல இருக்கு அந்த அளவு விளம்பரம் இதுல சன் மியூசிக் மாதிரி தொலைபேசியில் அழைத்து வேற மொக்கை போட்டுட்டு இருக்காங்க.. ஒரு தமிழ் படம் கூட முழுசா பார்க்கல.
எங்க போனாலும்
என்னை சீரியல் விடுவது இல்லை ஊரிலையும் வம்படியா திருமதி செல்வம் பார்க்க வைத்தாங்க ..அதுல என்னனா கடைசில விளம்பரம் முடிந்த உடனே சீரியல் தொடராம முடித்துட்டாங்க..அடப்பாவிகளா! இது என்னையா இப்படி இருக்குன்னு பார்த்தா ..விளம்பரத்த பார்க்க வைக்கிற டெக்னிக்காம், ரொம்ப கேவலமா இருக்கே என்று டென்ஷன் ஆகி விட்டது. இது எப்படி இருக்கு தெரியுமா! க்ளைமாக்ஸ் ல பாட்டை போட்டு, பாட்டு முடிந்தவுடன் படம் முடிகிற மாதிரி இருக்கு..அட! போடுற பாட்டு கந்தசாமி ல வர கடைசி முமைத்கான் பாட்டு மாதிரி இருந்தாலாவது மனதை தேத்திக்கலாம்

சீரியல் க்கு இந்த பில்டப்பா! முன்னாடி ஸ்டார் மூவிஸ் ல இந்த வேலைய பண்ணிட்டு இருந்த மாதிரி ஒரு நினைவு
நம்ம ஊருல பரவாயில்லைங்க HBO, AXN, Star Movies ல ஓரளவு நல்ல படம் போடுறாங்க..கொஞ்சம் பழைய படமாக இருந்தாலும் போட்ட படமாக இருந்தாலும் பார்க்குற மாதிரி இருக்கு, புது படமும் போடுறாங்க, சிங்கையில் பாடாவதி படமா போடுறானுக.. மொக்கை தாங்காம அன்சப்க்ரைப் பண்ணிட்டேன். இங்கே இதற்க்கு பணமும் அதிகம். இங்கே ஒரு பாராட்டக்கூடிய விஷயம் படம் ஆரம்பித்து கடைசி வரை ஒரு விளம்பரம் கூட இடையில் வராது..நான் ஸ்டாப் படம்.
போனவருடம் விநாயகர் சதுர்த்தியின் போது கலைஞர் டிவி விடுமுறை நாளை முன்னிட்டு என்று சிறப்பு படம் ஒளிபரப்பியது, இந்த வருடம் விநாயகர் கருணை காட்டாமல் ஞாயிறு அன்றே வந்து விட்டார். அப்படியும் அசராமல் விடுமுறை நாளை முன்னிட்டு சிறப்பு படம் என்றார்கள்
சிப்பு தான் போங்க
அப்புறம் சன் டிவி “நினைத்தாலே இனிக்கும்” படத்தை வாங்கினதாலே ஆ ஊன்னா ஒரு விளம்பரம் போட்டுட்டு இருந்தாங்க ..”மாசிலாமணி” விளம்பரமே பரவாயில்ல போல இருக்கு ..”வேட்டைக்காரனை” வேற வாங்கிட்டாங்கலாமே! தீபாவளி நரகாசுரனை விட கொடுமைகாரனா மாறப்போறாங்க..கண்ண கட்ட போகுது இதெல்லாவற்றையும் விட இவர்கள் முதல் தயாரிப்பான தலைவர் படம் “எந்திரன்” வரும் போது எல்லோரும் செத்தீங்க..ஹி ஹி ஹி காலையில் இருந்து இரவு வரை எங்கும் தலைவர் மயம் தான்..:-))) ஏதாவது நக்கல் பண்ணுனீங்க பிச்சு பிச்சு
பதிவுலக நண்பர்கள் அப்துல்லா, பெஸ்கி (எவனோ ஒருவன்), ராஜ் (குறை ஒன்றும் இல்லை), சக்தி (பாசகி), வெயிலான், பரிசல், வடகரை வேலன், லதானந்த், அருணாச்சலம், வினோ (என்வழி), சுந்தர் (ஒன்லி சூப்பர் ஸ்டார்), ஈரா அனைவரிடமும் தொலைபேசியில் பேச முடிந்தது நேரில் பார்க்க முடியவில்லை. முரளி கண்ணன் தொலைபேசி ரிங் சென்று கொண்டே இருந்தது எடுக்கவில்லை. ஷண்முக பிரியன் சார் ஊரில் இல்லை.
அப்துல்லா சந்திக்க வேண்டும் என்று கூறினார் முடியலை தவறாக நினைக்க மாட்டாருன்னு

(சும்மா லுலுலாயிக்கு ஒரு பிட்டு) நினைக்கிறேன், ராஜ் க்கு போன் செய்தால் ஹலோ டியூன் “குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா” என்றது அவரிடம் பேசும் போது வழக்கமாக எல்லோரும் கூறும் சம்பள உயர்வு போனஸ் இல்லை என்பது பற்றி பேச்சு வந்தது..முதல்ல பாட்டை மாத்துங்க உங்க பாஸ் இந்த பாட்டை கேட்டு ராஜ் சந்தோசமா நிம்மதியா இருக்கிறாருன்னு நினைத்து கண்டுக்காம இருக்க போறாருன்னு சொன்னேன்

)) (வடகரை வேலன் கூட இந்த டியூன் தான் வைத்து இருக்கிறார்) வெயிலான் அனைவரும் சந்திக்க பலமுறை முயற்சி செய்தார் முடியலை
கோவி கண்ணன் மாதிரி பயணக்கட்டுரை பதிவுகளா போட்டு எல்லோரையும் ஒரு வழி ஆக்கலாம்னு நினைத்த எண்ணத்தை மாற்றி இதோட நிப்பாட்டிக்குறேன்

அப்புறம் மசாலா மிக்ஸ் வேற ஏதாவது மிக்ஸ் ஆகிடும் ஹி ஹி
பின் குறிப்பு
சம்பந்தம் இல்லாம பெப்சி உமா படம் எதுக்குன்னு கேட்கிறவங்களுக்கு …சன் டிவி பற்றிய செய்தினா அவங்க லோகோ தான் வைக்கணுமா உமா படத்தை வைக்க கூடாதா
No related posts.
Tagged as:
பயணக்குறிப்புகள்
{ 22 comments… read them below or add one }
//சம்பந்தம் இல்லாம பெப்சி உமா படம் எதுக்குன்னு கேட்கிறவங்களுக்கு …சன் டிவி பற்றிய செய்தினா அவங்க லோகோ தான் வைக்கணுமா உமா படத்தை வைக்க கூடாதா
//
அதானே
எல்லோரையும் ”பார்க்க நினைச்சேன் ஆனா முடியல போன்ல தான் பேசினேன். மன்னிச்சுருங்க” இப்படி பிட்ட போட்டே எஸ்கேப் ஆகிடலாம்னு பாக்குறீங்களா?
very intersting mr giri sir.
//எல்லோரையும் ”பார்க்க நினைச்சேன் ஆனா முடியல போன்ல தான் பேசினேன். மன்னிச்சுருங்க” இப்படி பிட்ட போட்டே எஸ்கேப் ஆகிடலாம்னு பாக்குறீங்களா?
///
சபாஷ்!! சரியான கேள்வி!!!
நல்லாப் போகுது பயண மசாலா எக்ஸ்ப்ரஸ்.
நல்லதொரு கோர்வை.. சினிமாவுல வசனகர்த்தா வேலைக்கு முயற்சி செஞ்சீங்களா… இல்லாட்டி செஞ்சுபாருங்க.. நல்லா கல்லா கட்டலாம்ங்க..
எப்படி கிரி இவ்வளவு விஷயங்களையும் ஒன்று விடாமல் ஞாபகம் வைத்து எழுதினீர்கள்?
அபார நினைவாற்றல் உங்களுக்கு.மகிழ்ச்சி.
//இங்கே பேரெல்லாம் ஸ்டைல் ஆக இருக்கு)
//
அங்க பேரு மட்டுமா ஸ்டைலா இருக்கு
ஹி…ஹி..ஹி…
// அங்கே Brigade சாலை அருகே விமானத்தை போல (உள்ளே) வடிவமைப்பு உள்ள Pub எனக்கு ரொம்ப பிடித்தமான ஒன்று, அங்கே வேலை செய்பவர்கள் விமான பணி ஆண் (பெண் எதிர்ப்பதம்) போல உடை அணிந்து இருப்பார்கள், இன்னும் இருக்கிறதா என்று தெரியவில்லை.
//
இருக்குண்ணே.போன மாசம் போய்ட்டு வந்தேன்
மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. பல விசயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது.
நண்பர்களுடனான சந்திப்பு, பெங்களூர் பயண நினைவுகள், தொலைகாட்சியினால் ஏற்படும் அவதிகள், யுவதிகள் என படிப்பதற்கு மிகவும் நன்றாக இருந்தது.
கோபி என்றால் கோபிச்செட்டிப்பாளையமாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.
பொறுப்பான தந்தையானேன் என சொன்னது நன்றாக இருந்தது. மொட்டை போடும் போது குழந்தைகள் அழுவது, தன் அனுமதியில்லாத இழப்பைத் தடுக்க இயலாமையில்தான் என நினைத்துக் கொள்வேன்.
மிக்க நன்றி கிரி அவர்களே.
அண்ணே நல்லாயிருக்கு மசாலா.
உண்மையிலேயே டிவி விளம்பரத் தொல்லை தாங்க முடியல, படம் பாக்குற ஆர்வமே போய்டுது.
ஆனா ஒரு நல்ல விசயம் பாருங்க, இங்க விளம்பரம் போடும்போது அடுத்த சானல்ல படம், அங்க விளம்பரம் போட்டா இங்க படம்… இப்படியே ஒரே நேரத்துல 2 படம் பாத்துக்கலாம். ஹி ஹி ஹி…
//சம்பந்தம் இல்லாம பெப்சி உமா படம் எதுக்குன்னு கேட்கிறவங்களுக்கு …சன் டிவி பற்றிய செய்தினா அவங்க லோகோ தான் வைக்கணுமா உமா படத்தை வைக்க கூடாதா ;) //
பதிவுலக அரசியல்.
//சன் டிவி "நினைத்தாலே இனிக்கும்" படத்தை வாங்கினதாலே ஆ ஊன்னா ஒரு விளம்பரம் போட்டுட்டு இருந்தாங்க//
))
'எந்திரன்' விளம்பரம் ஆ ஊ என்று போட்டால் மட்டும் ரசிச்சு பார்ப்பீர்கள். வேறு படம் என்றால்
அறுவையாக இருக்கா.
//இவர்கள் முதல் தயாரிப்பான தலைவர் படம் "எந்திரன்" வரும் போது எல்லோரும் செத்தீங்க..ஹி ஹி ஹி காலையில் இருந்து இரவு வரை எங்கும் தலைவர் மயம் தான்..:-))) ஏதாவது நக்கல் பண்ணுனீங்க பிச்சு பிச்சு
//
தலைவர் மேல அவ்வளோ பாசமா கிரி.
//தற்போது எங்கள் ஊரிலிருந்து பழனி வரை (கோபி-திருப்பூர்-காங்கேயம்-தாராபுரம்-பழனி) சாலை சிறப்பாக போடப்பட்டுள்ளது.//
அப்ப எங்க ஊரு வழியாதான் வந்திருக்கீங்க போல.
சம்பந்தம் இல்லாம பெப்சி உமா படம் எதுக்குன்னு கேட்கிறவங்களுக்கு …சன் டிவி பற்றிய செய்தினா அவங்க லோகோ தான் வைக்கணுமா உமா படத்தை வைக்க கூடாதா
]]
உண்மையிலே எதுக்குடான்னு நானும் நினைச்சிக்கிட்டே படிச்சிகிட்டு வாறேன்.
இருந்தாலும் அது ஒரு பசுமையான காலம் பாஸ்
ரெண்டு பாகங்களும் கலக்கல் கிரி…
இன்னும் பெப்ஸி உமாவை மறக்கலையா? அடுத்த வருஷம் அவுங்க பொண்ணே காம்பியரா வந்தாலும் வந்துடும்….
//இன்னும் பெப்ஸி உமாவை மறக்கலையா? அடுத்த வருஷம் அவுங்க பொண்ணே காம்பியரா வந்தாலும் வந்துடும்….//
விடுங்க பாவம்.. வயசான ஆளு… அந்த நாள் நியாபகம்… அது பத்தி நமம் மாதிறி யூத்துகளுக்கு என்ன!!!
ஆதவன் குடும்பஸ்தன் என்றாலே பல பொறுப்புகள் ..இதில் அனைவரையும் சந்திக்க வேண்டும் என்பது ரொம்ப சிரமமாகவே இருக்கிறது. கண்டிப்பாக எல்லோருக்கும் தொலைபேசியில் அழைத்து விடுவேன்
========================================================
//PEACE TRAIN said…
very intersting mr giri sir.//
நன்றி PEACE TRAIN
========================================================
வாங்க வஞ்சி கோட்டை வாலிபன்!! ராஜ்
========================================================
// வானம்பாடிகள் said…
நல்லாப் போகுது பயண மசாலா எக்ஸ்ப்ரஸ்.//
நன்றி சார்.. எக்ஸ்ப்ரஸ் க்கு நிறுத்தம் குறைவு எனபதால் இதோட நிப்பாட்டிகிட்டேன்
========================================================
// கார்த்திக் said…
நல்லதொரு கோர்வை.. சினிமாவுல வசனகர்த்தா வேலைக்கு முயற்சி செஞ்சீங்களா… இல்லாட்டி செஞ்சுபாருங்க.. நல்லா கல்லா கட்டலாம்ங்க..//
ஓவரா தான் பாராட்டிட்டீங்க …நன்றி கார்த்திக்
=========================================================
// ஷண்முகப்ரியன் said…
எப்படி கிரி இவ்வளவு விஷயங்களையும் ஒன்று விடாமல் ஞாபகம் வைத்து எழுதினீர்கள்?//
சார் தினமும் நடக்கும் விஷயம் எனபதால் அப்படியே எழுதினேன், சிறப்பாக ஒன்றும் இல்லை. உங்கள் அன்பிற்கு நன்றி சார்,
=========================================================
// எம்.எம்.அப்துல்லா said…
அங்க பேரு மட்டுமா ஸ்டைலா இருக்கு
ஹி…ஹி..ஹி…//
அது சரி தான்
//இருக்குண்ணே.போன மாசம் போய்ட்டு வந்தேன்
//
அப்துல்லா அண்ணே! நீங்க தானே என்னோட இதை போல சந்தேகங்களை உடனுக்குடன் தீர்த்து வைக்கறீங்க
நன்றிகள் பல வாழ்க உங்கள் தொண்டு
==========================================================
// வெ.இராதாகிருஷ்ணன் said…
//நண்பர்களுடனான சந்திப்பு, பெங்களூர் பயண நினைவுகள், தொலைகாட்சியினால் ஏற்படும் அவதிகள், யுவதிகள் என படிப்பதற்கு மிகவும் நன்றாக இருந்தது.//
நன்றி சார்
கோபி என்றால் கோபிச்செட்டிப்பாளையமாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். //
சரி தான் சார்
//மொட்டை போடும் போது குழந்தைகள் அழுவது, தன் அனுமதியில்லாத இழப்பைத் தடுக்க இயலாமையில்தான் என நினைத்துக் கொள்வேன்.//
=========================================================
//எவனோ ஒருவன் said…
அண்ணே நல்லாயிருக்கு மசாலா.//
நன்றி பெஸ்கி
//இப்படியே ஒரே நேரத்துல 2 படம் பாத்துக்கலாம். ஹி ஹி ஹி//
ஆனா எதையும் முழுசா பார்க்க முடியாது
========================================================
// வாசுகி said…
))//
விளம்பரம் போட்டுட்டு இருந்தாங்க//
'எந்திரன்' விளம்பரம் ஆ ஊ என்று போட்டால் மட்டும் ரசிச்சு பார்ப்பீர்கள். வேறு படம் என்றால் அறுவையாக இருக்கா.
ரசிக்கிறேனா! நல்லா பாருங்க தலைவரையும் வாரி இருக்கிறேன்
========================================================
//tirupur said…
தலைவர் மேல அவ்வளோ பாசமா கிரி//
//அப்ப எங்க ஊரு வழியாதான் வந்திருக்கீங்க போல//
ஆமாமா! பைபாஸ் ல போய்ட்டோம்
=========================================================
// நட்புடன் ஜமால் said…
உண்மையிலே எதுக்குடான்னு நானும் நினைச்சிக்கிட்டே படிச்சிகிட்டு வாறேன்.
இருந்தாலும் அது ஒரு பசுமையான காலம் பாஸ்//
நானெல்லாம் தீவிர ரசிகன்
==========================================================
// Mahesh said…
ரெண்டு பாகங்களும் கலக்கல் கிரி…//
நன்றி மகேஷ்
//இன்னும் பெப்ஸி உமாவை மறக்கலையா? அடுத்த வருஷம் அவுங்க பொண்ணே காம்பியரா வந்தாலும் வந்துடும்..//
மறப்பதெல்லாம் நடக்க கூடிய காரியமா! நானெல்லாம் இப்ப பெண்கள் சீரியல் பார்க்கிற மாதிரி இடியே விழுந்தாலும் பெப்சி உங்கள் சாய்ஸ் பார்த்து விடுவேன்
அப்புறம் அவங்களுக்கு பையன் என்று நினைக்கிறேன்
==========================================================
// குறை ஒன்றும் இல்லை !!! said…
விடுங்க பாவம்.. வயசான ஆளு… அந்த நாள் நியாபகம்… அது பத்தி நமம் மாதிறி யூத்துகளுக்கு என்ன!//
ராஜ் அமைதி! அமைதி!!
உங்க பொண்ணு உங்க தொப்பை கீழே ஒளிந்து விளையாடுவதை நான் யாருகிட்டேயும் சொல்ல மாட்டேன் ..கவலைப்படாதீங்க!
பெரிய மனுஷங்க. எப்பவும் பிசியாத்தான் இருப்பீங்க. அதுக்காக ஒவ்வொரு முறையும் தமிழ் நாட்டுக்கு வரும்போதும் இப்படி கடுக்காய் கொடுக்குறது சரியில்லே. ஆமாம். சொல்லிட்டேன்.
வாங்க கிரி, இந்திய பதிவு இரண்டும் அருமை.
இரண்டு பதிவும் அருமை.
சுந்தர், சிங்கக்குட்டி மற்றும் சிவா வருகைக்கு நன்றி
——பதிவுலக நண்பர்கள் ****** வினோ (என்வழி), *********** அனைவரிடமும் தொலைபேசியில் பேச முடிந்தது நேரில் பார்க்க
முடியவில்லை!——–
_______________
Good… Keep it up!!
நல்ல காரியம் செய்தார் உங்கள் நண்பர். எம்.ஜி ரோடை இப்போது பார்த்திருந்தால் வெறுத்துப் போயிருப்பீர்கள். பழைய அழகு போயே போச்சு:(!
// ARASIAL said…
_______________
Good… Keep it up!!//
பலமான உள்குத்து இருக்கும் போல இருக்கே
=======================================================
// ராமலக்ஷ்மி said…
நல்ல காரியம் செய்தார் உங்கள் நண்பர். எம்.ஜி ரோடை இப்போது பார்த்திருந்தால் வெறுத்துப் போயிருப்பீர்கள். பழைய அழகு போயே போச்சு:(!//
அப்படியா! ரயில் பாலம் கட்டி முடித்த பிறகு சரி செய்து விடுவார்கள் என்று நினைக்கிறேன். பெங்களூரின் முக்கிய அடையாளம் அது (என்னை போன்றவர்களுக்கு)