முன்பெல்லாம் புகைப்படம் எடுப்பது என்றால் அவ்வளவு எளிதில்லை கேமராவில் ஃபிலிம் போடணும் பின் அதை சரியாக இணைத்து இருக்கிறோமா என்று பார்க்க வேண்டும், இல்லை என்றால் ஃபிளாஷ் மட்டும் தான் ஆகிட்டு இருக்கும் ஃபோட்டோ எடுத்து இருக்காது, பின் அதை கழுவ கொடுத்து அதில் எது நன்றாக வந்துள்ளதோ அதை பிரிண்ட் போடுவோம்.
தற்போது நிலைமை தலைகீழ் நவீன உலகத்தில் ஃபிலிம் எல்லாம் அதிசய பொருளாகி விட்டது டிஜிட்டல் கேமரா வந்த பிறகு. நவீன உபகரணங்கள் நம் வாழ்க்கையை எளிமை படுத்துவதை போல பல சிக்கல்களையும் உடன் கொண்டு வந்து விடுகிறது. யார் வேண்டும் என்றாலும் எதை வேண்டும் என்றாலும் யாருடைய உதவியும் இன்றி படம் எடுக்கலாம் என்று ஆகி விட்டது. பிரிண்ட் போட்டு தான் நாம் படம் எடுத்ததை பார்க்க முடியும் என்ற காலம் எல்லாம் மலையேறி விட்டது. இதுவே பலரை தைரியமாக தவறு செய்ய தூண்டுகிறது.
டிஜிட்டல் கேமராவால் ஏற்படும் பிரச்சனைகளை விகடன் தனது பத்திரிக்கையில் ஏற்கனவே இது பற்றி விலாவாரியாக கட்டுரை எழுதி அனைவரையும் எச்சரிக்கை செய்து இருந்தது, இதோடு என் அனுபவத்தையும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
கடந்த வாரம் என் மகனின் படத்தை பிரிண்ட் போடுவதற்காக என்னுடைய USB ஸ்டிக்கில் உள்ள மற்ற அனைத்து தகவல்களையும் அழித்து விட்டு (தேட சிரமமாக இருக்கும் என்பதால்) பிரிண்ட் போட போகும் படத்தை மட்டும் காபி செய்து கொண்டு உடனடியாக (Instant) பிரிண்ட் போட்டு தரும் கடையில் சென்று கொடுத்தேன்.
நான் USB ஸ்டிக் கொடுத்து அவர்களுடைய Preview பார்க்கும் ஃபோட்டோ இயந்திரத்தில் அதை சொருகிய பிறகு நான் எப்போதோ டெலீட் செய்த படங்கள் எல்லாம் காட்ட எனக்கு அதிர்ச்சி ஆகி விட்டது.
எனக்கு இது வரை இதற்கென்று தனியாக உள்ள மென்பொருளை பயன்படுத்தினால் மட்டுமே டெலீட் செய்த கோப்புகளை பார்க்க முடியும் என்று நினைத்து இருந்தேன், ஆனால் இதில் எதையும் பயன்படுத்தாமல் அப்படியே அனைத்து தகவல்களையும் உடனே காட்டியது (ஒருவேளை இதில் ஏற்கனவே அதை போல மென்பொருள் உள்ளதா என்பது தெரியவில்லை). ஓரளவு இதை பற்றிய தொழில்நுட்பம் அறிந்து இருக்கும் எனக்கே இந்த நிலைமை என்றால் இதை பற்றி எல்லாம் எதுவுமே தெரியாதவர்கள் நிலையை நினைத்தால் ரொம்ப பரிதாபமாக இருக்கிறது.
இதை நான் இங்கு கூற காரணம், தற்போது காதலர்கள், கணவன் மனைவிகள், மற்றும் ஒரு சில சிற்றின்ப காதலர்கள்!! என்று பலர் தாங்கள் மட்டும் பார்த்து ரசிப்பதற்காக தங்களை “ஏடாகூடமாக” படம் எடுத்து வைத்து கொள்கிறார்கள். இவர்கள் தாங்கள் டெலீட் செய்து விட்டதாக நினைத்து வேறு படங்களை பிரிண்ட் போட USB ஸ்டிக்கை கொடுத்தால் அவர்கள் கதி அதோ கதி தான்.
இதை வைத்து அவர்கள் மிரட்டப்படலாம், இந்த படங்கள் இணையத்தில் விடப்படலாம் (உங்கள் அனைவருக்கும் தெரியும் இதை போன்ற படங்கள் மின்னஞ்சலில் எப்படி காட்டு தீயாக பார்வர்டு ஆகும் என்பது), இணையத்தில் இதை போன்ற படங்களை வீடியோக்களை நல்ல விலைக்கு வாங்க இதற்கென்றே பல கும்பல்கள் உண்டு. விஷயம் வெளியே தெரிந்தால் கற்பனை செய்தே பார்க்க முடியவில்லை, அதன் பிறகு பாதிக்கப்பட்டவர்கள் அடையும் மன உளைச்சல்கள் சொல்லி மாளாது.
இதை போல எடுக்கப்பட்ட பல படங்கள் இணையத்தில் உலா வருகிறது, வீடியோக்கள் உட்பட. பள்ளி, கல்லூரி, அலுவலக, குடும்ப பெண்கள் பலர் உணர்ச்சிவசப்பட்ட தருணங்களில் எடுக்கப்பட்ட படங்கள் என்று பீதியை கிளப்புகிறது. இவர்களுக்கெல்லாம் அறிவே கிடையாதோ! என்று தான் நினைக்க தோன்றுகிறது. நாளை இது அனைவருக்கும் தெரிந்து அந்த பெண் உட்பட அந்த குடும்பத்தின் நிலை என்ன ஆகும் என்ற கவலை கொஞ்சம் கூட இல்லையா! எப்படி இதை போல முட்டாள் தனமாக குறிப்பாக தைரியமாக படம், வீடியோ எடுக்க அனுமதிக்கிறார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது. ஆண்களுக்கு பிரச்சனை இல்லை நம் சமூகம் பெரிதாக கருதாது ஆனால் பெண்களின் நிலைமை!!
தற்போது நண்பர்களிடையே அடல்ட் படங்கள் உலா வருவது சகஜம், ஒருவரிடையே உள்ள லேப்டாப், டெஸ்க்டாப், USB ஸ்டிக் அல்லது மின்னஞ்சலில் என்று ஏதாவது ஒன்றில் ஒரு அடல்ட் படமாவது இல்லாமல் இருப்பது மிக அதிசயமான சம்பவம் ஆகும், அது நண்பர்களிடம் இருந்து வந்ததாகவும் இருக்கலாம் அல்லது தாங்களே தரவிறக்கம் செய்ததாகவும் இருக்கலாம். இதை தவறு என்று கொடி பிடிக்க வரவில்லை, அதை கூற நான் உத்தமனும் அல்ல.
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இன்னொரு பக்கம் உண்டு, இரகசியம் இல்லாத மனிதன் கிடையாது, ஆனால் நாம் எப்படி தான் எச்சரிக்கையாக இருந்தாலும் ஏதாவது ஒரு வழியில் ஏமாந்து விடுவோம். ஆனால் எதை பற்றியும் கவலை படாமல் குருட்டு தைரியத்தில் இருப்பவர்களை என்னவென்று சொல்வது. எனவே இதை போல படங்களை எடுக்காதீர்கள், எடுக்க அனுமதிக்காதீர்கள் அப்படியே எடுத்தாலும் மிக எச்சரிக்கையாக இருங்கள், தொழில் நுட்பம் அதிவேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது.
No related posts.
Tagged as:
அனுபவம்,
தொழில்நுட்பம்
{ 36 comments… read them below or add one }
நன்றி கிரி.
ஏங்க கிரி,அந்த இடத்தில் கேட்டீர்களா? எப்படி நீக்கிய கோப்புகளை காண்பிக்கிறது என்று.
தரவிறக்கம் செய்ததாகவும் இருக்கலாம். இதை தவறு என்று கொடி பிடிக்க வரவில்லை, அதை கூற நான் உத்தமனும் அல்ல]]
உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு பாஸ்.
நல்ல தகவல் கிரி – நன்றி.
இன்றைய சூழ்நிலையில் தேவையான எச்சரிக்கை.நன்றி கிரி.
//எப்போதோ டெலீட் செய்த படங்கள் எல்லாம் காட்ட எனக்கு அதிர்ச்சி ஆகி விட்டது.////
????????????????
thanks for your information
இன்றைய நிலையில் இந்த எச்சரிக்கை அனைவருக்கும் தேவையானது தான்.
நீங்கள் அந்த கடைக்காரரிடம் கேட்டு இருக்க வேண்டும். Ethical laws படி அவர்கள் அப்படியான மென்பொருட்களை பாவிக்க முடியாது.
Thanks for publishing such an informative & useful post.
http://www.hiren.info/download/freeware/usb_format.zip
நல்ல எச்சரிக்கைப் பதிவு!!
யூ.எஸ்.பி பல பார்டிசனுடன் பாஸ்வேர்ட் வசதியுடன் வந்தால் சரியாக இருக்குமா!?
இல்லை அப்படியும் எல்லாம் நடக்குமா!?
ஒரே ஒரு Add-தமிழ் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள் அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.
உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே
Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !
அதற்கான முகவரி : http://www.findindia.net
இப்படியும் நடக்குமா?
(
பாலா, வடுவூர் குமார், ஜமால், ஷண்முக பிரியன், ராஜ், விஜி, டொன் லீ, அருண், சிவா, தேவா, அருண், ராம் மற்றும் சம்பத் வருகைக்கு நன்றி
@வடுவூர் குமார்
இல்லைங்க குமார், எனக்கு இப்படி எதிர்பாராமல் பார்த்ததால் அதிர்ச்சியில் கேட்க தோன்றவில்லை.
@டொன் லீ
வடுவூர் குமார் அவர்களுக்கு கூறியதே உங்களுக்கும்
@சிவா
நன்றி, இதை குறிப்பிட நினைத்து மறந்து விட்டேன், பின்னர் இதை ஒரு பதிவாக எழுதுகிறேன்
@ அருண்
பாஸ்வோர்ட் எல்லாம் சப்பை மேட்டர்..எளிதாக உடைத்து விடலாம். நீங்கள் உங்கள் லேப்டாப்பை சர்வீஸ் செய்ய கொடுத்தால் எல்லாவற்றையும் பார்த்து விடுவார்கள். இதை நானும் ஒரு சிஸ்டம் அட்மின் என்கிற முறையில் கூறுகிறேன்.
சிவா கொடுத்துள்ள அல்லது அதை போன்ற மென்பொருளை வைத்து "சுத்தமாக" ஃபார்மட் செய்தால் மட்டுமே நீங்கள் தப்பிக்க முடியும். மற்றபடி எப்படி ப்ரொடக்ட் செய்தாலும் இதில் திறமையாக உள்ளவர்கள் எளிதில் உடைத்து விடுவார்கள். முடிந்த வரை உங்கள் ரகசியங்கள் உள்ள எதையும் மற்றவர்களிடம் கொடுப்பதை தவிருங்கள். அப்படி மீறி கொடுக்க வேண்டும் என்றால் ஹார்ட் டிஸ்க்கை கழட்டி விட்டு கொடுங்கள்.
@ சம்பத்
இதை விட மோசமாக
தகவலுக்கு நன்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
உபயோகமான தகவல் கிரி. நன்றி.
http://kgjawarlal.wordpress.com
மிக சரி கிரி……
இது ஒரு நல்ல எச்சரிக்கை கட்டுரை…. ஏற்கனவே வந்து, படித்தது என்றாலும், படிக்காதவர்களுக்கு ஒரு எச்சரிக்கை…..
வாழ்த்துக்கள்……மீண்டும் ஒரு நல்ல பதிவை எழுதியதற்கு….
///இதை போல படங்களை எடுக்காதீர்கள், எடுக்க அனுமதிக்காதீர்கள் அப்படியே எடுத்தாலும் மிக எச்சரிக்கையாக இருங்கள், தொழில் நுட்பம் அதிவேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது.///
நல்ல எச்சரிக்கைதான் கிரி மிக்க நன்றி
ஒரு பொருளைப் பற்றிய தெளிவு அதிகமாக இருப்பின், நமக்கு அதன் பயனும் பாதிப்பும் தெரியவரும்.
நல்ல அவசியமான இடுகை.
data recovery software?
வேண்டிய எச்சரிக்கை பதிவு.
சீனா,Jawarlal , கோபி, ஞானசேகரன் மற்றும் ஆ! இதழ்கள் வருகைக்கு நன்றி
@ ஆ! இதழ்கள்
நீங்கள் என்ன கேட்கறீர்கள் என்று புரியவில்லை. டேட்டா ரெகவரி மென்பொருள் வைத்து எடுக்க முடியுமா என்று கேட்கறீர்களா?
You can delete files beyond recovery using the following softwares.
http://www.fileshredder.org/
Another software as a Portable version is also available at
http://www.pendriveapps.com/ultrashredder/
May be useful. Sorry for writing in English.
கிருஷ்ணா கண்டிப்பாக இது அனைவருக்கும் உதவியாக இருக்கும், விரைவில் இது குறித்து ஒரு பதிவெழுத போகிறேன்
how is possible giri
Is this applicable for Digital cameras and MobilePhones?
If so what is the solution?
ubha,
Install the programs like fileshredder. While deleting, if u use right click, you can see "Delete with shredder" like this. If you use that option, the space used for that file will be overwritten and you can not recover this.
If you are using computer with administrative rights, use a portable version. ( ie., when you are using office computer. )
I think, Giri will write a new blog in this topic so that everyone understands.
// R said…
how is possible giri//
R உங்களால் எப்படி நம்ப முடியவில்லையோ அதே நிலைமை தான் எனக்கும்..வடிவேல் சொல்ற மாதிரி அப்படியே ஷாக் ஆயிட்டேன், எதோ நமக்கு விஷயம் தெரிந்து இருக்கிறது என்று கொஞ்சம் தெனாவெட்டா இருந்தால்….இதெல்லாம் வேலைக்கே ஆகாதுன்னு சொல்லாம தொழில் நுட்பம் சொல்லிடுது.
==============================================================
Subha said…
Is this applicable for Digital cameras and MobilePhones?//
சுபா இதற்க்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்…
நீங்க மொபைல் அல்லது கேமராவை யாருக்காவது செகண்ட் சேல் பண்ணுறீங்கன்னு வைங்க..திருட்டு பசங்களா இருந்தா அதில் உள்ள சிப்பின் மூலம் அனைத்து படங்களையும் எடுக்க முடியும்.
ஒரு சிலர் நண்பர்களுக்குள் விளையாட்டாக படம் எடுத்து டெலீட் செய்து இருப்பார்கள்..டெலீட் செய்து விட்டதாக நினைத்து கொடுத்து விட்டால்..முடிந்தது கதை. பல பேர் இதையே தொழிலா வைத்து இருக்காங்க. எச்சரிக்கையா இருக்கணும். முடிந்த வரை மெமரி சிப்பை கழட்டி விட்டு தான் யாருக்கும் கொடுக்கணும்.
//If so what is the solution?//
கிருஷ்ணா அவர்கள் கூறியது தான் இதற்க்கு வழி..இதை பற்றி என் பதிவிலேயே குறிப்பிட இருந்தேன், சரி அதை தனி பதிவாக போடலாம் என்பதால் விட்டு விட்டேன்.
=====================================================
//Krishna said…
I think, Giri will write a new blog in this topic so that everyone understands.//
கிருஷ்ணா நான் தற்போது விடுமுறையில் இந்தியா செல்(வரு)வதால் இது பற்றி கொஞ்சம் தாமதமாக பதிவு எழுதுவேன். நன்றி
ஒரு நாள் நானும் Print எடுக்க ஒரு கடை-ல USB stick-அ கொடுத்தேன்.. எனக்கே தெரியாம அதுல சில "படங்களை" போட்டு கொடுத்துட்டார் கடைகாரர்.. நானும் பார்க்கவில்லை… அடுத்த நாள் என் அப்பா ஜாதகம் print எடுக்கணும் USB கொடு-னு கேட்டார்.. நானும் கொடுத்தேன்.. வேறொரு கடைக்கு என் அப்பா சென்றிருக்கிறார்.. அப்புறம் என்ன… வீட்டுக்கு வந்து ஆத்து ஆத்து-னு ஆத்துனார் சொற்பொழிவு… உடனே நான் சென்ற கடைக்கு போய் "ஏன்யா.. படத்த போட்டியே.. ஒரு வார்த்த எண்ட சொன்னியா யா.. சொல்லிருந்தா என் லேப்டாப்-ல தூக்கி போற்றுபேன்ல.."-னு திட்டிட்டு வந்தேன்..
Hi Giri,
Thanks for this post.
Arul
கிரி-ஜி உங்களுக்கு ஒரு விருது தந்திருக்கேன், வந்து வாங்கிக்கோங்க
என் விண்டோஸ் 2000 லேப்டாப் ௦௦௦ ஹர்ட்டிஸ்க் கெட்டு விட்டது ஆனால் மிக மிக்கியமான சில டேட்டாகள் அதில் உள்ளன திரும்ப கிடைக்க ஏதாவது வழி இருக்கிறதா கிரி?
நல்ல எச்சரிக்கை
வலையுலகில் இவ்வார கிரீடம் , சிறப்புப் பரிசு , தமிழில் ஹிட்ஸ் counter உபயோகமான gadgets போன்ற புதுமையான முயற்சிகளை கொண்டுவந்த tamil10.com இப்போது முற்றிலும் புதிய gadget ஒன்றை அறிமுகப்படுத்துகிறது .இந்த gadget ஐ உங்கள் பதிவில் இணைப்பதின் மூலம் .உங்கள் தளத்துக்கு வரும் வாசகர்கள் அனைவரும் உங்கள் தளத்தில் இருந்தே tamil10 தளத்தின் பிரபல செய்திகளை படிக்கலாம் .உங்கள் வலைத்தளத்துக்கு உபயோகமாய் இருக்கும் இந்த gadget ஐ பற்றி மேலும் அறிய இங்கே வருகை தரவும் .http://blog.tamil10.com/2009/08/08/new-gadget-அனைத்து-தமிழ்10-செய்திகள/
Tamil10.com
நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா?
அதற்காகவே கோலம் வீடு தேடி வரும் பட இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.
கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.
நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.
இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்….. தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்பாளியும பார்வையாளரும நேரடியாக உறவு கொள்ளும இயக்கமே கோலம். எண்ணற்ற புள்ளிகளாக பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிகளை இணைத்து ஒரு கோலம் வரையும் படைப்பாளிகளின் அமைப்பு கோலம்.
இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் உங்கள் முன்பதிவுத் தொகை எமக்கு வந்து எம்மை பிரமிக்கச் செய்யட்டும்.
முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078. செல்பேசி: 9444024947. மின்னஞ்சல்: kolamcinema@gmail.com நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.
கிரி எப்பதான் உங்க blog பக்கத்துல வரப்போறீங்க? நானும் ரொம்ப நாளா வர்றேன் புதுசா பதிவையே காணோம்.
// கார்த்திக் said…
உடனே நான் சென்ற கடைக்கு போய் "ஏன்யா.. படத்த போட்டியே.. ஒரு வார்த்த எண்ட சொன்னியா யா.. சொல்லிருந்தா என் லேப்டாப்-ல தூக்கி போற்றுபேன்ல.."-னு திட்டிட்டு வந்தேன்..//
ஹி ஹி ஹி சூப்பரு
=========================================================
அருள் மற்றும் சக்தி (அன்பிற்கும்) வருகைக்கு நன்றி
=========================================================
// சிங்கக்குட்டி said…
என் விண்டோஸ் 2000 லேப்டாப் ௦௦௦ ஹர்ட்டிஸ்க் கெட்டு விட்டது ஆனால் மிக மிக்கியமான சில டேட்டாகள் அதில் உள்ளன திரும்ப கிடைக்க ஏதாவது வழி இருக்கிறதா கிரி?//
வாங்க சிங்க குட்டி..
இது கொஞ்சம் சிரமமான விஷயம்..ஆனால் இதற்கென்று சில ஹார்ட்வேர் கம்பெனிகள் உள்ளன அவர்கள் சரி செய்து தருவார்கள்..பணம் அதிகம் கேட்பார்கள்.
தாமதமாக பதில் அளித்து விட்டேன் என்று நினைக்கிறேன்..விடுமுறையில் இருந்ததால் உடன் பதில் அளிக்க முடியவில்லை மன்னிக்கவும்.
=========================================================
லதானந்த் தமிழினி ஈழவன் வருகைக்கு நன்றி
ஞானி அவர்களின் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்
//tirupur said…
கிரி எப்பதான் உங்க blog பக்கத்துல வரப்போறீங்க? நானும் ரொம்ப நாளா வர்றேன் புதுசா பதிவையே காணோம்//
வந்துட்டேங்க….விடுமுறையில் இருந்தேன்..வந்தவுடன் நேரமின்மையால் பதிவிட முடியவில்லை.. இனி தொடர்ந்து இருக்கும்.
உங்கள் அன்பிற்கு நன்றி