ஒரு தந்தையின் அதிரடி துரத்தல் “Taken” – திரைவிமர்சனம்

by கிரி on July 17, 2009

taken1 ஒரு தந்தையின் அதிரடி துரத்தல் Taken   திரைவிமர்சனம்

துரத்தல்னா துரத்தல் அப்படி ஒரு துரத்தல், Commando, Apocalypto போன்ற படத்தை போல காட்டுத்தனமான துரத்தல்.

முன்னாள் CIA ஏஜன்ட் Liam Neeson, அவரின் மகள் தன் தோழியுடன் அமெரிக்காவில் இருந்து ஃபிரான்ஸ் சுற்றுலா செல்கிறார் அங்கே உள்ள மஃபியா கும்பலால் அவர் விபசாரத்திற்கு கடத்தப்படுகிறார், இதை Liam Neeson அங்கே சென்று எவ்வாறு தன் மகளை மீட்கிறார் என்பதை தாறுமாறான வேக திரைக்கதையில் கூறி இருக்கிறார்கள். இந்த துரத்தல் 96 மணி நேரத்தில் நடந்து முடிவதாக எடுக்கப்பட்டுள்ளது

படம் மசாலா படமாக எடுக்கப்பட்டு இருந்தாலும் எந்த வகையிலும் இயல்பை மீறாமல் அளந்து விடாமல் அருமையாக எடுத்து இருக்கிறார்கள். ஒரு சில காட்சிகள் அப்படி இருந்து இருக்கலாம் ஆனால் அதெல்லாம் அடிபட்டு போகிறது படத்தின் சுவாராசியத்தில்.

taken4 ஒரு தந்தையின் அதிரடி துரத்தல் Taken   திரைவிமர்சனம்

CIA ஏஜென்ட் என்பதாலோ என்னவோ பின்னி பெடலெடுக்கிறார், அநியாயத்திற்கு ஸ்மார்ட், வில்லன் கோடு போட்டால் இவர் ரோடே போட்டு விடுகிறார், அந்த அளவிற்கு ஒவ்வொன்றையும் லாஜிக்கா அவர் கண்டு பிடிக்கும் போது நாம் அவருக்கு ரசிகர் ஆகி விடுவோம் போல, அந்தளவிற்கு அசத்தி இருக்கிறார். மொத்த படத்தையும் தன் மீது சுமந்து இருக்கிறார், இவருக்கு 56 வயதாம், கண்ணை கட்டுகிறது. என்னா ஓட்டம் ஓடுகிறார், யோசிப்பதில் என்னா சுறுசுறுப்பு, சண்டை காட்சிகளில் அடித்து நொறுக்கிறார்.

taken3 ஒரு தந்தையின் அதிரடி துரத்தல் Taken   திரைவிமர்சனம்

விமான நிலையத்தில் இருந்து பெண்களை எப்படி இவர்கள் கடத்துகிறார்கள் என்பதில் இருந்து அவர்களை விபசாரத்திற்கு பயன்படுத்துவது, போதை ஊசி போட்டு பெண்களை அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பது, பெண்களை ஏலத்தில் ஹைடெக்காக விற்பது என்று மஃபியா கும்பல் செய்யும் வேலையை பார்த்தால் நமக்கு வயிற்றை புரட்டி போடுகிறது. இவை அனைத்துமே நிஜமாக நடக்க வாய்ப்பு இருப்பதாகவே (உண்மையில் இதை விட மோசமாக தான் உலகத்தில் நடந்து கொண்டுள்ளது) காட்டப்பட்டு இருப்பதால் நம் வயிற்றில் பயப்பந்து உருளுகிறது. மகாநதியில் கமல் ஒவ்வொரு அறையாக பார்ப்பாரே அதை போல இதில் ஒவ்வொரு இடமாக தன் பெண்ணை தேடும் போது நமக்கு கண்கலங்கி விடும், இதை போல அனுபவம் எந்த ஒரு நபருக்கும் வரக்கூடாது.

Liam Neeson தன் மகள் கடத்தப்படும் சிறிது நிமிடங்கள் முன்பு போனில் பேசியதை டேப்பில் பதிவு செய்து அதை திரும்ப திரும்ப கேட்டு பதட்டமடையாமல் அதில் க்ளு கண்டுபிடிப்பதிலேயே தெரிந்து விடுகிறது இவர் ஜெகஜால கில்லாடி என்று. உடைந்த போனில் இருந்து மெமரி சிப்பை எடுத்து விரைவாக அதை வைத்து அவர் கண்டுபிடிப்பது மற்றும் உதாரணம் கூற பல காட்சிகள் யப்பா! நீங்க CIA எஜென்ட்டே தான் சந்தேகமே இல்லை என்று கூறத்தோன்றுகிறது.

taken2 ஒரு தந்தையின் அதிரடி துரத்தல் Taken   திரைவிமர்சனம்

இதில் வில்லன்களை எல்லாம் போட்டு தள்ளும் போது சரவெடி. மவனே! அடின்னா அடி மரண அடி! பெண்ணையா கடத்தி இப்படி கொடுமை பண்றீங்க ..நல்லா சாவுங்கடா! என்று சந்தோசத்துடன் கூவ தோன்றுகிறது. நான் எதோ சொல்ல வேண்டும் என்பதற்காக கூறவில்லை நிஜமாகவே எல்லோரையும் துவம்சம் செய்துடுவார், அதுவும் சினிமா தனமாக இல்லாமல் நம்பும் படி. இவரது அகராதியில் குற்றம் செய்தவர்களுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது.

ஒரு காட்சியில் அங்கே உள்ள அனைவரையும் அடித்து காலி செய்வார், அதற்கு முன்பு அங்குள்ள நபர்கள் பொசிசன், எத்தனை பேர், எங்கே இருந்து முதலில் அடிக்க ஆரம்பிக்கலாம் ஒரு கணம் பார்த்து விட்டு அடிப்பது, பெண்களை ஏற்றி கொண்டு கப்பல் (போட்) புறப்பட அதை காரில் விரட்டி சென்று பிடிப்பது என்று ஒவ்வொரு காட்சியும் அதிரடியாக இருக்கும். கடைசியில் Liam Neeson பெண்ணை ஏலத்தில் வாங்கிய ஷேக் (கிழ பயங்க) அந்த பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டும் போது இவர் அந்த ஷேக்கை பார்க்கும் பார்வை இருக்கிறதே அருமை.. அது.. டேய்! நீயெல்லாம் சுண்டைக்காய்.. மிரட்டவும் ஒரு கெத்து வேணுண்டா என்று சொல்வதை போல இருக்கும், பட்டாசாக இருக்கும் அந்த காட்சி.

taken5 ஒரு தந்தையின் அதிரடி துரத்தல் Taken   திரைவிமர்சனம்

இது ஒரு ஃப்ரென்ச் தயாரிப்பு படம், அமெரிக்காவில் இந்த வருட துவக்கத்தில் தான் வெளியாகியது. இந்த படம் அமெரிக்காவிலும் பெரும் வெற்றி, காரணம் இந்த படம் இயல்பாகவும் ஒரு பெண்ணை பெற்ற தந்தையின் நிலையிலும், பாதிக்கப்பட்ட பெண்ணாக நாம் இருந்தால் எப்படி இருக்கும் என்று நிலையிலும் ஒவ்வொருவரும் ஒப்பிட்டு பார்த்து இருக்கலாம், Liam Neeson வில்லன்களை அடிக்கும் போது தாங்களே அவர்களை தண்டித்து விட்டதாக படம் பார்ப்பவர் ஒவ்வொருவரும் நினைக்கும் விதத்தில் காட்சி அமைப்பு உள்ளது. நானும் ஒரு தந்தையின் ஸ்த்னானத்தில் இருந்து இந்த படத்தை ரொம்பவே ரசித்து பார்த்தேன். பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தினால் கொலை வெறி ஆகும் எனக்கு இதை போன்ற படம் பிடித்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. உங்களையும் கண்டிப்பாக கவரும் என்றே நம்புகிறேன்.

இந்த படத்தை நான் தொடர்ந்து இரண்டு முறை DVD யில் பார்த்தேன் icon smile ஒரு தந்தையின் அதிரடி துரத்தல் Taken   திரைவிமர்சனம் . படத்தை இலவசமாக பார்க்க இங்கே செல்லவும்

No related posts.

{ 43 comments… read them below or add one }

நட்புடன் ஜமால் July 17, 2009 at 9:17 AM

நல்லா துரத்தி புடிச்சிருக்கியள், படத்தையும் அதன் சுட்டியையும்.

அவசியம் இந்த வார இறுதியில் பார்த்திடுவோம் …

[[வில்லன்களை அடிக்கும் போது தாங்களே அவர்களை தண்டித்து விட்டதாக படம் பார்ப்பவர் ஒவ்வொருவரும் நினைக்கும் விதத்தில் காட்சி அமைப்பு உள்ளது.]]

வித்தியாசமா இருக்கு …

இதுக்காகவேனும் பார்க்கனும்.

Reply

piratheepan July 17, 2009 at 10:23 AM

படத்தை போலவே உங்கள் விமர்சனமும் வேகமாக இருக்கு.

Reply

மின்னுது மின்னல் July 17, 2009 at 10:27 AM

http://stagevu.com/video/auowkcjqrfzn

/

நான் இங்க தான் பார்த்தேன்

:)

Reply

மின்னுது மின்னல் July 17, 2009 at 10:34 AM

விறுவிறுப்பான விமர்சனம்!

Reply

எம்.எம்.அப்துல்லா July 17, 2009 at 11:26 AM

உங்க விமர்சனம்னாலே ஹாஸ்டல் பட விமர்சனம்தான் ஞாபகம் வருது :)

Reply

வால்பையன் July 17, 2009 at 11:36 AM

ஆங்கில படங்களை பொறுத்தவரை வித்தியாசமான அணுகுமுறை தான் சிலிர்க்கவைக்குது!

Reply

அதி பிரதாபன் July 17, 2009 at 1:20 PM

தங்களது விமர்சனம் அருமை.

Reply

மஞ்சள் ஜட்டி July 17, 2009 at 1:36 PM

படத்தோட பேருக்கு பொருத்தமா, நம்ம ஆளுங்க தான் இந்த படத்தை ஆல்ரெடி சுட்டுடாங்களே??

Reply

Lakshmi July 17, 2009 at 5:16 PM

Really this is an amazing movie….i watched 3 times

Reply

piratheepan July 17, 2009 at 7:16 PM

"மின்னுது மின்னல்" உங்கள் இணைப்புக்கு நன்றி.

Reply

பிரேம்ஜி July 17, 2009 at 7:57 PM

Giri,

pattaya kelappura padamache ithu! Namma kaivasam intha padathoda blu Ray disc irukku. Neram kidaikumpothu adikkadi parpathu vazhakkam. Liam magal kadaththapattu aval "veeeeel" ena kathumpothu manusan close up shot la oru reaction arputhama koduthirupparu. Athuvum antha "good luck" payalai Kandu pidukkumpothu visiladikka thondriyathu. Suvaarasyamaana vimarsanam. Nandri.(tamingilathil eluthiyatharku mannikavum)

Reply

பாசகி July 17, 2009 at 8:20 PM

கிரி-ஜி நான் இன்னும் ஹாஸடல் படமே பாக்கல அதுக்குள்ள இன்னொரு அருமையான விமர்சனமா??? கலக்கல் :)

Reply

Mahesh July 17, 2009 at 9:57 PM

கிரி.. .சினிமாவை விட உங்க விமர்சனம் பரபரப்பா இருக்கு… கட்டாயம் பாக்கணும்…

Reply

மங்களூர் சிவா July 17, 2009 at 10:09 PM

பட அறிமுகம் சூப்பர். லிங்க்-க்கு நன்றி. பார்த்துடுவோம்.

Reply

குறை ஒன்றும் இல்லை !!! July 17, 2009 at 10:22 PM

அண்ணே.. விமர்சனம் கலக்கல்.. ஹ்ம்ம் ஆனா எனக்கெல்லாம் இத தமில்ல டப் பண்ணினதுக்கு அப்புறம் தான் புரியும் :)

Reply

சென்ஷி July 17, 2009 at 11:53 PM

பகிர்விற்கு நன்றி கிரி :)

Reply

கிரி July 18, 2009 at 9:41 AM

//நட்புடன் ஜமால் said…
நல்லா துரத்தி புடிச்சிருக்கியள், படத்தையும் அதன் சுட்டியையும்.
அவசியம் இந்த வார இறுதியில் பார்த்திடுவோம் ..//

அவசியம் பாருங்க ஜமால்

========================================================

// piratheepan said…
படத்தை போலவே உங்கள் விமர்சனமும் வேகமாக இருக்கு.//

நன்றி பிரதீபன்

========================================================

// மின்னுது மின்னல் said…
விறுவிறுப்பான விமர்சனம்!//

நன்றி மின்னுது மின்னல் அப்படியே படத்தை பற்றியும் சொல்லி இருந்தீங்கன்னா நான் சொன்னது உண்மையின்னு கொஞ்சம் நம்பி இருப்பாங்க :-)

========================================================

// எம்.எம்.அப்துல்லா said…
உங்க விமர்சனம்னாலே ஹாஸ்டல் பட விமர்சனம்தான் ஞாபகம் வருது :) //

:-) ) அதை போலவே அதிரடி திரைக்கதை

========================================================

// வால்பையன் said…
ஆங்கில படங்களை பொறுத்தவரை வித்தியாசமான அணுகுமுறை தான் சிலிர்க்கவைக்குது!//

உண்மை தான் அருண்

=========================================================

// எவனோ ஒருவன் said…
தங்களது விமர்சனம் அருமை.//

பெஸ்கி நன்றி

=========================================================

// மஞ்சள் ஜட்டி said…
படத்தோட பேருக்கு பொருத்தமா, நம்ம ஆளுங்க தான் இந்த படத்தை ஆல்ரெடி சுட்டுடாங்களே??//

நம்ம ஆளுங்க தான் எதையும் விட மாட்டாங்களே! இந்த படத்தோட காட்சிய எதோ ஒரு சஞ்சய் தத், ஜான் அபிரகாம் படத்துல சுட்டு போட்டு இருப்பாங்க சரியா! :-)

=========================================================

// Lakshmi said…
Really this is an amazing movie….i watched 3 times//

நான் இது வரை ஐந்து முறை பார்த்து விட்டேன்.. ஒரு வாரத்திலே

==========================================================

// பிரேம்ஜி said…
Giri,

pattaya kelappura padamache ithu! Namma kaivasam intha padathoda blu Ray disc irukku.//

ஆமாம் பிரேம்ஜி கலக்கல் படம்.. Blue Ray டிஸ்கா ..படம் பார்க்க பட்டாசா இருக்குமே! எனக்கும் ஒரு சில படங்களை இதில் பார்க்க ஆசை..ஹி ஹி ஹி ஆனா அதுக்கு இன்னும் Player வாங்கல ;-)

===========================================================

// பாசகி said…
கிரி-ஜி நான் இன்னும் ஹாஸடல் படமே பாக்கல அதுக்குள்ள இன்னொரு அருமையான விமர்சனமா???//

சக்தி முதல்ல ஹாஸ்டல் படம் பாருங்க..:-)

============================================================

// Mahesh said…
கிரி.. .சினிமாவை விட உங்க விமர்சனம் பரபரப்பா இருக்கு… கட்டாயம் பாக்கணும்…//

படம் பார்த்த பிறகு என் விமர்சனம் ஒண்ணுமே இல்லைன்னு சொல்லுவீங்க :-)

=============================================================

// மங்களூர் சிவா said…
பட அறிமுகம் சூப்பர். லிங்க்-க்கு நன்றி. பார்த்துடுவோம்.//

சிவா கண்டிப்பா பாருங்க.. படம் கண்டிப்பாக உங்களை ஏமாற்றாது

=============================================================

// குறை ஒன்றும் இல்லை !!! said…
அண்ணே.. விமர்சனம் கலக்கல்.. ஹ்ம்ம் ஆனா எனக்கெல்லாம் இத தமில்ல டப் பண்ணினதுக்கு அப்புறம் தான் புரியும் :) //

ராஜ் நீங்க வேற ..எனக்கும் ஒரு இழவும் புரியாது…ஆனா இந்த படம் எல்லாம் ஆங்கிலம் தெரியாமையே எளிதா புரியும். என்ன நான் கொஞ்ச விவரங்கள் refer செய்தேன் இதுக்காக.

=============================================================

// சென்ஷி said…
பகிர்விற்கு நன்றி கிரி :) //

சென்ஷி படம் பாருங்க..சும்மா நன்றிய சொல்லிட்டு டீல் ல விட்டுடாதீங்க ;-)

Reply

சென்ஷி July 18, 2009 at 9:54 AM

//// சென்ஷி said…
பகிர்விற்கு நன்றி கிரி :) //

சென்ஷி படம் பாருங்க..சும்மா நன்றிய சொல்லிட்டு டீல் ல விட்டுடாதீங்க ;-) //

இல்ல தலைவா.. நேத்து நீங்க கொடுத்திருக்குற லிங்க்ல போய் படம் பார்த்தேன். 10 நிமிசத்துக்கு பிறகு படம் ஸ்டில்லா நின்னுடுச்சு. ஸ்கிரோல் பாரை இழுத்து விட்டா சவுண்ட் இல்லாம மியுட் ஆ இருக்குது.

இந்த கொடுமைய இப்படியே விடக்கூடாதுன்னு டோரண்ட்ல டவுன்லொடு செஞ்சுட்டேன். இன்னிக்கு இரவு நிச்சயம் பார்த்துடுவேன் :)

எப்பூடி!

Reply

கிரி July 18, 2009 at 10:03 AM

//சென்ஷி said…
இல்ல தலைவா.. நேத்து நீங்க கொடுத்திருக்குற லிங்க்ல போய் படம் பார்த்தேன். 10 நிமிசத்துக்கு பிறகு படம் ஸ்டில்லா நின்னுடுச்சு. ஸ்கிரோல் பாரை இழுத்து விட்டா சவுண்ட் இல்லாம மியுட் ஆ இருக்குது//

அப்படியா! நம்ம ஊர் நெட் ஸ்பீட் ல வரலையா இருக்கும்..இங்கே சர்ர்ருன்னு வரும் :-) அதுக்குன்னு எடுத்த உடனே கடைசி காட்சி வந்துடும்னு நினைத்து விடாதீங்க :-) ))

அதுல நிறைய சைட் க்கு லிங்க் இருக்கும்..ஏன் இப்படி ஆச்சுன்னு தெரியல

//இந்த கொடுமைய இப்படியே விடக்கூடாதுன்னு டோரண்ட்ல டவுன்லொடு செஞ்சுட்டேன். இன்னிக்கு இரவு நிச்சயம் பார்த்துடுவேன் :)

எப்பூடி!//

சூப்பரு! நீங்க வெறும் சென்ஷி இல்ல கில்லாடி சென்ஷி :-)

முக்கு முக்குனு முக்குற டோரண்ட்ல டவுன்லோட் ஆகுது இதுல சரியா வரலையா! என்ன கொடுமை சார் இது..

ஆனா ஒண்ணு படம் பார்த்த பிறகு கஷ்டப்பட்டது வீண் போகலன்னு நீங்க திருப்தி ஆகிடுவீங்க அதற்க்கு நான் கியாரண்டி.. :-)

Reply

R.Gopi July 18, 2009 at 11:16 AM

கிரி

படத்தின் விமர்சனம் அருமை…. பாத்துட வேண்டியதுதான்……

Reply

சென்ஷி July 18, 2009 at 12:06 PM

//முக்கு முக்குனு முக்குற டோரண்ட்ல டவுன்லோட் ஆகுது இதுல சரியா வரலையா! என்ன கொடுமை சார் இது..//

ஹி..ஹி.. டவுன்லோடு ஆப்சனை கொடுத்துட்டு தூங்கப் போயிடுவேன். மறுக்கா காலையில வந்து பார்த்தா டவுன்லோடு முடிஞ்சுருக்கும். அதான் :) )

Reply

கைப்புள்ள July 18, 2009 at 5:57 PM

கிரி, படம் சும்மா சூப்பர் பாஸ்ட் ஜெட் மாதிரி போகுது,
எப்பா சான்ஸ்சே இல்ல.. simply super bossu.

Reply

ராமலக்ஷ்மி July 18, 2009 at 8:09 PM

அதிரடிப் படம் பார்க்கும் ஆர்வம் வழக்கம் இல்லை ஆனாலும் உங்கள் ரசனையான விமர்சனம் சுவாரஸ்யமாக இருக்கிறது:)!

Reply

கிரி July 18, 2009 at 8:29 PM

// R.Gopi said…
கிரி
படத்தின் விமர்சனம் அருமை…. பாத்துட வேண்டியதுதான்……//

கண்டிப்பா பாருங்க…. மிஸ் பண்ண கூடாத படம் கோபி

==========================================================

// சென்ஷி said…
ஹி..ஹி.. டவுன்லோடு ஆப்சனை கொடுத்துட்டு தூங்கப் போயிடுவேன். மறுக்கா காலையில வந்து பார்த்தா டவுன்லோடு முடிஞ்சுருக்கும். அதான் :) )//

ஹி ஹி ஹி உஷாரு தான்.. எனக்கு இந்த டோரன்ட்டுல பொறுமையே இல்லை… இன்று பார்த்து விடுங்க மறக்காம :-)

==========================================================

//
baby said…
கிரி, படம் சும்மா சூப்பர் பாஸ்ட் ஜெட் மாதிரி போகுது,
எப்பா சான்ஸ்சே இல்ல.. simply super bossu.//

:-) ) நான் படம் பார்த்து மிரண்டு போயிட்டேன்..ங்கொய்யாலே அநியாயத்திற்கு இப்படி வேகமான திரைக்கதைல எடுத்து இருக்காங்கன்னு ..இரண்டு பாட்ஷா மூன்று கில்லி ஸ்பீட் படம் :-)

==========================================================

// ராமலக்ஷ்மி said…
அதிரடிப் படம் பார்க்கும் ஆர்வம் வழக்கம் இல்லை ஆனாலும் உங்கள் ரசனையான விமர்சனம் சுவாரஸ்யமாக இருக்கிறது:)!//

ராமலக்ஷ்மி உங்க கொள்கையை கொஞ்சம் தளர்த்திட்டு இதை பாருங்க..அப்புறம் சொல்லுங்க.. ;-)

Reply

பாசகி July 18, 2009 at 8:31 PM

//…இரண்டு பாட்ஷா//

கடுமையான கண்டனங்கள் :) ))

Reply

கிரி July 18, 2009 at 8:34 PM

// பாசகி said…
//…இரண்டு பாட்ஷா//

கடுமையான கண்டனங்கள் :) ))//

ஹி ஹி ஹி…. சக்தி படம் பார்த்தீங்களா இல்லையா!

Reply

பாசகி July 18, 2009 at 8:38 PM

இன்னும் இல்ல-ஜி, next sunday பாக்க try பண்ணறேன்…

கண்டனம் தெரிவிச்சா சண்டை போடணும் நீங்க என்ன சிரிக்கறீங்க, too bad, you're unfit to be a blogger :)

Reply

கிரி July 18, 2009 at 8:40 PM

// பாசகி said…
இன்னும் இல்ல-ஜி, next sunday பாக்க try பண்ணறேன்…//

உங்களுக்கு ரொம்ப தான் பொறுமை… :-)

//கண்டனம் தெரிவிச்சா சண்டை போடணும் நீங்க என்ன சிரிக்கறீங்க, too bad, you're unfit to be a blogger :) //

:-) ))

நாங்க நல்ல அடி வாங்கி தெளிஞ்சுட்டோம் ..அதனால நாங்க உஷாரு! உஷாரு!! ;-)

Reply

பாசகி July 18, 2009 at 8:47 PM

நம்ம கணக்குப்படி ஹாஸ்டலுக்கு அப்புறம்தான இந்தபடம் :)

//நாங்க நல்ல அடி வாங்கி தெளிஞ்சுட்டோம் ..அதனால நாங்க உஷாரு! உஷாரு!! ;-) //

வடை போச்சே :(

விடமாட்டேன். எங்க என்னோட சண்டை போட்டா நான் பிரபலமா(???)யிடுவேனுதான பயப்படறீங்க…

Reply

கிரி July 18, 2009 at 8:54 PM

// பாசகி said…
நம்ம கணக்குப்படி ஹாஸ்டலுக்கு அப்புறம்தான இந்தபடம் :) //

ஹாஸ்டலும் தாறுமாறான படம்.. ஆனா அந்த படம் இப்பவே சொல்லிட்டேன்..ஏடாகூடமா இருக்கும்..என்னை திட்டப்படாது..:-)

//விடமாட்டேன். எங்க என்னோட சண்டை போட்டா நான் பிரபலமா(???)யிடுவேனுதான பயப்படறீங்க…//

ஹி ஹி ஹி அதற்க்கு நீங்க என் கூட சண்டை போடக்கூடாது ..போட வேண்டியவங்க கிட்ட சண்டை போடணும்.. ;-)

Reply

பாசகி July 18, 2009 at 9:01 PM

//ஹி ஹி ஹி அதற்க்கு நீங்க என் கூட சண்டை போடக்கூடாது ..போட வேண்டியவங்க கிட்ட சண்டை போடணும்.. ;-) //

நான் சண்டைக்கு கூப்படறது டைம் பாஸுக்குதான, அதுக்கு நாம ரெண்டு பேரும் போதாது :) )) நான் ஊட்டுக்கு கிளம்பறேன், போய்தான் சமைக்கணும். நாளைக்கு ஃபீரியா இருந்தா சொல்லி அனுப்புங்க சண்டே சண்டை போடலாம் :) )))

Reply

கிரி July 18, 2009 at 9:02 PM

// பாசகி said…
நான் சண்டைக்கு கூப்படறது டைம் பாஸுக்குதான, அதுக்கு நாம ரெண்டு பேரும் போதாது :) )) நான் ஊட்டுக்கு கிளம்பறேன், போய்தான் சமைக்கணும். நாளைக்கு ஃபீரியா இருந்தா சொல்லி அனுப்புங்க சண்டே சண்டை போடலாம் :) )))//

நல்லா திருப்தியா சாப்பிடுங்க..நான் இப்ப தான் சாப்பிட்டேன் :-) Enjoy ur weekend

Reply

பாசகி July 18, 2009 at 9:08 PM

Thanks ji… Take care, bye :)

Reply

அதி பிரதாபன் July 19, 2009 at 12:55 AM

//நாங்க நல்ல அடி வாங்கி தெளிஞ்சுட்டோம் ..அதனால நாங்க உஷாரு! உஷாரு!! ;-) //

ச்ச… வட போச்சே…

Reply

குறை ஒன்றும் இல்லை !!! July 19, 2009 at 12:39 PM

புடிச்சிருக்கோ இல்லையோ..

படிக்கிற காலத்தில பரிட்சை புடிக்கல, காதலிக்கறப்போ அப்பாவ புடிக்கல, வேலைக்கு போனா வேலையே புடிக்கல, கல்யாணத்துக்கு அப்புறம் எதுவுமே புடிக்கல இருந்தாலும் எதையும் தவிர்க்க முடியாமல் ஏத்துக்கிட்ட மாதிறி இதையும் ஏத்துக்கோங்க ஸ்சாமியோயோ…

http://yellorumyellamum.blogspot.com/2009/07/blog-post_19.html

Reply

கார்த்திக் July 19, 2009 at 3:50 PM

அப்பிடியே முழு படத்த ஒட்டிடீங்க.. அருமை..

Blogger-கள் ஆசியுடன் என் முயற்சியை துவங்குறேன்.
http://karthikpathivugal.blogspot.com/

நன்றி

Reply

கிரி July 20, 2009 at 7:05 PM

//எவனோ ஒருவன் said…
ச்ச… வட போச்சே…//

ஆஹா! பல பேர் இதுக்காகவே காத்திருக்கிற மாதிரி தெரியுதே அவ்வ்வ்வ்

===============================================

//குறை ஒன்றும் இல்லை !!! said…
புடிச்சிருக்கோ இல்லையோ..

படிக்கிற காலத்தில பரிட்சை புடிக்கல, காதலிக்கறப்போ அப்பாவ புடிக்கல, வேலைக்கு போனா வேலையே புடிக்கல, கல்யாணத்துக்கு அப்புறம் எதுவுமே புடிக்கல இருந்தாலும் எதையும் தவிர்க்க முடியாமல் ஏத்துக்கிட்ட மாதிறி இதையும் ஏத்துக்கோங்க ஸ்சாமியோயோ…//

ராஜ் நீங்க கூறி இருக்கிறது ரொம்ப அருமையா இருக்கு..நிஜமாகவே…..ரொம்ப ரசித்தேன் :-)

======================================================

/ கார்த்திக்.ச said…
அப்பிடியே முழு படத்த ஒட்டிடீங்க.. அருமை..

Blogger-கள் ஆசியுடன் என் முயற்சியை துவங்குறேன்//

நல பதிவுகளை தர என் வாழ்த்துக்கள் கார்த்திக்

Reply

கிரி July 20, 2009 at 7:42 PM

ராஜ் உங்க தளத்துல என்னால பின்னூட்டம் போட முடியல விரைவில் இடுகிறேன், பொறுத்தருள்க

Reply

Mahesh July 20, 2009 at 8:04 PM

உங்களுக்கு ஒரு விருது. நம்ம திண்ணைக்கு வந்து வாங்கிக்கறீங்களா?

Reply

ஊர்சுற்றி July 21, 2009 at 12:36 AM

படத்தைப் பார்த்திருக்கேங்க.

அருமையான படம், நல்ல வேகம். இயல்பான திரைக்கதை.

மூளைக்கு வேலை.

Reply

குறை ஒன்றும் இல்லை !!! July 21, 2009 at 9:10 PM

//ராஜ் உங்க தளத்துல என்னால பின்னூட்டம் போட முடியல விரைவில் இடுகிறேன், பொறுத்தருள்க//

பரவாயில்லைண்ணே..

Reply

Akila November 2, 2009 at 1:52 PM

we watched this movie last year when we were in Germany. This movie created a little panic especially while staying in an European country for the first time. Ironically we watched in the first week of arrival :( . Fantastic movie. Had the same effect as your review says. :)

Reply

sahayaprabu April 7, 2011 at 11:51 PM

கிரி,

நம்ம கேப்டன் படம் விருத’கிரி’ யத்தான் காப்பி அடிச்சுட்டாங்க… :-)

Reply

Leave a Comment

{ 1 trackback }

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed