நாட்டின் மானத்தை விட பணத்தை நேசிக்கும் வீரர்கள்!

by கிரி on July 29, 2009

தற்போது விளையாட்டு என்பது பணம் கொழிக்கும் ஒரு வியாபாரம் ஆகி விட்டது, வீரர்களுக்கும் சரி அதை நடத்தும் வாரியங்களுக்கும் சரி, இதில் அரசியலும் சேர்ந்து விளையாட்டை கேள்விக்குறியாக்கி விட்டன.

தற்போது மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே நடைபெறும் கிரிக்கெட் போட்டிகள் பற்றி பலரும் அறிந்து இருப்பீர்கள். சம்பள பிரச்சனை காரணமாக முதல் நிலை மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் விளையாட மறுத்ததால் இரண்டாம் நிலை வீரர்களுடன் போட்டியில் களம் இறங்கியது.

WIB2 நாட்டின் மானத்தை விட பணத்தை நேசிக்கும் வீரர்கள்!

முதலில் டெஸ்ட் போட்டிகளில் பங்களாதேஷுடன் போட்டியில் தோல்வி அடைந்தது, தற்போது ஒருநாள் தொடரையும் அவர்களிடம் இருந்து கேவலமாக காட்சியளிக்கிறது. பங்களாதேஷ் அந்நிய மண்ணில் (டெஸ்ட் மற்றும் ஒருநாள்) தொடரை முதன் முதலாக கைப்பற்றிய மகிழ்ச்சியில் திளைக்கிறது.

சம்பளத்தில் பிரச்சனை என்றால் வீரர்களும் பொறுப்பில் உள்ளவர்களும் பேசி ஒரு முடிவிற்கு வந்து இருக்க வேண்டும், இல்லை வீரர்களாவது தங்கள் எதிர்ப்பை வேறு ஏதாவது வழியில் காட்டி இருக்க வேண்டும், அதை விடுத்து போட்டிகளில் கலந்து கொள்ளாமல் தங்கள் நாடு மற்ற நாட்டிடம் கேவலமாக தோற்பதற்கு வழி வகை செய்தது என்ன நியாயம்!

இவ்வாறு நாட்டின் மானத்தை விட தங்கள் சம்பளம் தான் பெரிது என்று நினைக்கும் இவர்கள் எல்லாம் கிரிக்கெட் ல் இருந்து என்ன செய்ய போகிறார்கள். இவர்கள் போட்டிகளில் விளையாடும் போது நாட்டுக்காக கடுமையாக போராடி கோப்பையை வாங்கி கொடுப்பார்கள் என்று எப்படி நம்ப முடியும்?

சம்பளத்தை பற்றி பேசும் இவர்கள் இதை மட்டுமா நம்பி இருக்கிறார்கள், ஹோட்டல்கள், ரியல் எஸ்டேட், விளம்பரம் என்று வருவாயை குவிக்கிறார்கள், பலர் அது போதாது என்று இந்தியா வந்து விளம்பரத்தில் நடித்து விட்டு வேறு போகிறார்கள். எதிர்ப்பை காட்ட எவ்வளவோ வழிகள் உள்ளன, நாளைக்கு இவர்கள் சம்பள பிரச்சனை தீர்ந்ததும் சம்பளம் வந்து விடும், ஆனால் தற்போது போன நாட்டின் மானம் திரும்ப வந்து விடுமா! காலத்திற்கும் இவர்களுக்கு இது அழிக்க முடியாத இழுக்கு தானே.

விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம். தோல்வி அடைந்து விட்டதால் அது எந்த விதத்திலையும் தவறில்லை, அது எப்படிப்பட்ட நாடாக இருந்தாலும் பங்களாதேஷ் போன்ற வலிமை குறைந்த நாடாக இருந்தாலும், ஆனால் தோல்வி அடைய வலுவான காரணங்கள் இருக்க வேண்டும், இதை போல அல்ப தனமான காரணங்களால் தோற்றார்கள் என்பது எவ்வளவு வருந்தத்தக்க விஷயம்.

இவர்கள் வேண்டும் என்றால் தங்கள் சம்பள விசயத்தில் எதிர்ப்பு காட்டி விட்டதாக பெருமை பட்டுக்கொள்ளலாம், நாட்டின் மானம் போனதை பற்றி கவலைப்படாமல் இருக்கலாம், ஆனால் அந்த நாட்டு கிரிக்கெட் ரசிகர்களை என்ன சொல்வது? அவர்களின் ஏமாற்றங்களையும் தங்கள் நாடு இப்படி கேவலமாக தோல்வி அடைந்து விட்டதே என்று ஏற்படும் வருத்தங்களையும் இவர்களால் திருப்பி தரமுடியுமா!

WIB நாட்டின் மானத்தை விட பணத்தை நேசிக்கும் வீரர்கள்!

இந்தியாவும் இவர்களுக்கு சற்றும் சளைத்ததல்ல அதிலும் மூத்த வீரர்கள் பலர் சரியாக விளையாடவில்லை என்றாலும் எப்படியும் நம்மை கொஞ்ச போட்டிகளில் தூக்க மாட்டர்கள் என்ற தெனாவெட்டு இருப்பதால் அலட்சியமாக விளையாடுகின்றனர். இவர்களுக்கு கிரிக்கெட் மட்டுமே சோறு போடுவதில்லை, இது பார்ட் டைம் வேலை, விளம்பரம் தான் இவர்களுக்கு ஃபுல் டைம் வேலை. ஒவ்வொரு பெரிய போட்டிகளிலும் வெற்றி பெரும் போதும் எந்த சாமானியனும் கற்பனையில் கூட நினைக்க முடியாத பரிசுகளை பெறுகிறார்கள், தோற்றாலும் பரிசு பெறுகிறார்கள்.

முன்பு இருந்த மோசத்தை விட தற்போது கொஞ்சம் பராவாயில்லை என்று கூறலாம், சரியாக விளையாடவில்லை என்றால் அணியில் இருந்து தூக்கி விடுவார்கள் என்ற பயம் இருக்கிறது. நமது நாட்டு மக்கள் தொகை 110 கோடிக்கும் மேல் அதில் இந்த 11 பேரை நம்பி கிடப்பது கேவலமாக இருக்கிறது. வாய்ப்பு கேட்டு பலர் வரிசையில் நிற்கும் போது சரியாக விளையாடாத வீரர்களை வீட்டுக்கு அனுப்புவதில் என்ன தவறு?

கிரிகெட்டும் பணமும் பிரிக்க முடியாத ஒன்றாகி விட்டது, ஏற்கனவே பலர் இதை போல செயல்களை கண்டு வெறுத்து போய் கிரிக்கெட் பார்ப்பதையே தவிர்க்கின்றனர். இதை போல சம்பள பிரச்சனையால் வெளிப்படையாகவே நாட்டு மானத்தை வாங்கும் இவர்களை போன்றவர்களை அணியில் வீரர்களாக!!! வைத்துக்கொள்வதை விட கிரிக்கெட் விளையாடாமலே இருந்து கொள்ளலாம்.

கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தங்கள் வெற்றியை அந்நிய மண்ணில் பதித்த பங்களாதேஷ் அணிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

Related posts:

  1. வாவ்! இந்திய அணியா இது!!
  2. Twenty-20(40!) உலககோப்பை கிரிக்கெட் சிறு அலசல்

{ 18 comments… read them below or add one }

1 V.Radhakrishnan July 29, 2009 at 5:05 PM

விளையாட்டுத் துறையில் மட்டுமல்ல, எல்லாத் துறைகளிலும் இதுபோன்ற பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. பிரச்சினைகளை இவ்வாறு எதிர்ப்புக் காட்டுவதன் மூலம் சிரமத்திற்கு உள்ளாகுபவர்கள் மக்கள்தான்.

Reply

2 நட்புடன் ஜமால் July 29, 2009 at 5:59 PM

இதனால் இதை வெறுத்தவர்களில்

நானும் ஒருவன்.

Reply

3 M Arunachalam July 29, 2009 at 6:11 PM

கிரி,

வெஸ்ட் இண்டீஸ் என்பது இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா போல் ஒரே ஒரு நாடு அல்ல. அது அமெரிக்க கண்டத்திற்கு தென் கிழக்கில் இருக்கும் பல தீவு நாடுகளை சேர்ந்த ஒரு கூட்டமைப்பு. அதாவது கயானா, போர்ட் ஒப் ஸ்பெயின், ஆண்டிகா, போன்ற சில, பல தீவு நாட்டு கூட்டணிதான் வெஸ்ட் இண்டீஸ் என்ற கிரிக்கெட் அணி. எனவே, இதில் பல நாடுகளை சேர்ந்த வீரர்கள் ஒரு குழுவாக விளையாடி கொண்டு வந்தார்கள்.

இத்தகைய ஒரு அமைப்பில் தாய் நாட்டு பற்று என்ற ஒன்றை எதிர்பார்ப்பதே தவறு என்பது என் கருத்து. கிரிக்கெட்டை தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் – கால்பந்து போன்றவை – அவர்கள் தனி, தனி நாடுகளாகவே பங்கெடுத்துக்கொண்டு வருகின்றனர். இப்போது, கிரிக்கெட்டிலும் ஏன் அதுபோலவே தனித்தனியாகவே கலந்து கொள்ள கூடாது என்று வெளிப்படையாகவே சிலர் விவாதிக்க தொடங்கி உள்ளனர்.

மேலும், அந்நாடுகளில் சிறுவர்களிடமும் கிரிக்கெட் பற்றிய மோகம் குறைந்து பேஸ் பால், கால் பந்து போன்ற விளையாட்டுகளில் தான் சென்ற சில ஆண்டுகளாகவே மோகம் அதிகரித்துள்ளது. இவை அனைத்தும் சேர்ந்து, ஒரு காலத்தில் அசைக்க முடியாத கிரிக்கெட் வல்லரசாக இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை இன்று ஒன்றுக்கும் உதவாத டெஸ்ட் மேட்ச் மற்றும் ஒரு நாள் அணியாக மாற்றிவிட்டது. இது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்குமே மிகவும் வருத்தம் அளிக்கும் விஷயமாகும்.

அன்புடன் அருண்

Reply

4 ஜோ/Joe July 29, 2009 at 7:04 PM

மேற்கிந்திய தீவுகள் பற்றி நான் சொல்ல விரும்பியதை திரு .அருணாச்சலம் அழகாக சொல்லிவிட்டார்.

Reply

5 கார்த்திக் July 29, 2009 at 7:07 PM

கிரிக்கெட்…பணம் கொழிக்கும் இடமாக மாறிவிட்டது.. சச்சின் டெண்டுல்கர் இந்த ஆண்டு 8 கோடி ரூபாய் வருமான வரி கட்டிருக்காராம்.. இதுவும் ஒரு உதாரணம்..

Reply

6 வானம்பாடிகள் July 29, 2009 at 7:39 PM

சரியான கருத்துக்கள் கிரி. அணியின் வெற்றி முதலிடம் பெற வேண்டும். தோற்றுக் கொண்டே இருந்தால் விளம்பரப் பணத்துக்கும் வேட்டுதான்.

Reply

7 குறை ஒன்றும் இல்லை !!! July 29, 2009 at 8:13 PM

//இவ்வாறு நாட்டின் மானத்தை விட தங்கள் சம்பளம் தான் பெரிது என்று நினைக்கும்//

ஏண்ணே ? ஒரு நாட்டின் மானத்தை இவர்கள் தான் நிர்ணயிக்கிறார்களா?

நமது இந்தியாவில் படிப்பறிவில்லதாவர்கள் பல கோடி, மிக உயர்ந்த பதவியில் உள்ள அனைவரும் இந்த கிரிக்கெட்டை பார்ப்பதில்லை, மேலும் அன்றாடம் காய்ச்சிகளும் இது பற்றி கவலைப்படுவதில்லை..

ஆக என் போன்ற பல உதவாக்கரைகள் தான் கிரிக்கெட்டை பார்த்து அவர்களை ஒரு மிகப்பெரிய சக்தி(போல)யாக்கி இருப்பது

எனவே எந்த ஒரு நாட்டின் மானமும் இவர்களால் போவதில்லை…அப்படி நம்பிக்கொண்டிருக்கும் நம்மால் தான்..

Reply

8 ஆ! இதழ்கள் July 29, 2009 at 8:47 PM

கிரி,

உங்களுக்கு ஒரு விருது வழங்கியிருக்கேன் இங்க வாங்கிக்கோங்க…

http://www.ananthblogs.co.cc/2009/07/blog-post_29.html

Reply

9 கிரி July 29, 2009 at 10:35 PM

//வெ.இராதாகிருஷ்ணன் said…
விளையாட்டுத் துறையில் மட்டுமல்ல, எல்லாத் துறைகளிலும் இதுபோன்ற பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன//

உண்மை தான் சார், இந்த நிகழ்ச்சி விளையாட்டு பற்றியது என்பதால் இதை குறிப்பிட்டேன்.

==============================================================

// நட்புடன் ஜமால் said…
இதனால் இதை வெறுத்தவர்களில்
நானும் ஒருவன்.//

இதுல பெரிய பிரச்சனை ..வெறுத்து விட்டேன் என்று கூறினாலும் திரும்ப பார்க்க வைக்கும் ஒரு போதை விளையாட்டு

===============================================================

//M Arunachalam said…
கிரி,
இத்தகைய ஒரு அமைப்பில் தாய் நாட்டு பற்று என்ற ஒன்றை எதிர்பார்ப்பதே தவறு என்பது என் கருத்து//

நீங்கள் கூறுவது சரி தான் அருண்.

நடைமுறையில் நீங்கள் கூறுவதை ஏற்று கொண்டாலும் மேற்கிந்திய தீவுகள் அணி என்றாலே இவர்கள் தானே! நாளை தோற்றாலும் ஜெயித்தாலும் அது இவர்களையே சாரும். சாதனை பட்டியலில் வெற்றி தோல்விகள் என்பதும் இவர்கள் கணக்கிலே வரும்.

//அந்நாடுகளில் சிறுவர்களிடமும் கிரிக்கெட் பற்றிய மோகம் குறைந்து பேஸ் பால், கால் பந்து போன்ற விளையாட்டுகளில் தான் சென்ற சில ஆண்டுகளாகவே மோகம் அதிகரித்துள்ளது. இவை அனைத்தும் சேர்ந்து, ஒரு காலத்தில் அசைக்க முடியாத கிரிக்கெட் வல்லரசாக இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை இன்று ஒன்றுக்கும் உதவாத டெஸ்ட் மேட்ச் மற்றும் ஒரு நாள் அணியாக மாற்றிவிட்டது. இது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்குமே மிகவும் வருத்தம் அளிக்கும் விஷயமாகும்.//

வருத்தம் அளிக்கும் விஷயம் தான்.

கடைசியாக… நான் மேற்கிந்திய தீவுகளை வைத்து கூறியது ஒரு எடுத்துக்காட்டிற்கு மட்டுமே இது அனைத்து நாட்டு அணிகளுக்கும் பொருந்தும்.

====================================================

ஜோ வருகைக்கு நன்றி

====================================================

//கார்த்திக் said…
கிரிக்கெட்…பணம் கொழிக்கும் இடமாக மாறிவிட்டது.. சச்சின் டெண்டுல்கர் இந்த ஆண்டு 8 கோடி ரூபாய் வருமான வரி கட்டிருக்காராம்.. இதுவும் ஒரு உதாரணம்//

சச்சின் வரி கட்டி இருக்காரே அதை நினைத்து சந்தோசப்படுவோம் ;-)

====================================================

// பாலா… said…
சரியான கருத்துக்கள் கிரி. அணியின் வெற்றி முதலிடம் பெற வேண்டும். தோற்றுக் கொண்டே இருந்தால் விளம்பரப் பணத்துக்கும் வேட்டுதான்//

விளம்பரத்தில் வருகிற பணத்தில் தான் இவர்கள் அதிக தெனாவெட்டாக இருக்கிறார்கள்.

======================================================

// குறை ஒன்றும் இல்லை !!! said…
ஏண்ணே ? ஒரு நாட்டின் மானத்தை இவர்கள் தான் நிர்ணயிக்கிறார்களா?//

இவர்கள் நிர்ணயிப்பதில்லை இவர்களும் நிர்ணயிக்கிறார்கள்.

//நமது இந்தியாவில் படிப்பறிவில்லதாவர்கள் பல கோடி, மிக உயர்ந்த பதவியில் உள்ள அனைவரும் இந்த கிரிக்கெட்டை பார்ப்பதில்லை, மேலும் அன்றாடம் காய்ச்சிகளும் இது பற்றி கவலைப்படுவதில்லை..//

அப்படின்னு சொல்ல முடியலையே ராஜ் கிரிக்கெட் மேட்ச் வந்தா! எங்கு காணினும் கிரிக்கெட்டடா! என்று தான் கூற வேண்டி இருக்கு. சாதாரண நபர் கூட ஸ்கோர் என்னங்க என்று கேட்காமல் இருப்பதில்லையே!

//எந்த ஒரு நாட்டின் மானமும் இவர்களால் போவதில்லை…அப்படி நம்பிக்கொண்டிருக்கும் நம்மால் தான்..//

:-) போட்டிகள் உலகம் முழுவதும் நடக்கின்றன, எனவே அனைவரின் கவனமும் போட்டிகளின் மீது இருக்கும் அப்படி இருக்கையில் ஒரு அணி கேவலமாக தோற்றால் அந்த நாட்டு ரசிகர்கள் வருத்தப்படுவது இயல்பு. அதனாலேயே வேறு எந்த விளையாட்டிற்கும் இல்லாத விசயமாக இதற்க்கு கேவலமாக தோற்கும் போது போராட்டங்கள் கடும் எதிர்ப்புகள் ஏற்படுகின்றன. வீரர்கள் வீடுகள் மீது கூட கல்லெறிய படுகின்றன. இதை போல வேறு எந்த விளையாட்டிற்கும் கிடையாது.

வேறு எந்த விளையாட்டிற்கும் இல்லாத முக்கியத்துவம் இதற்க்கு கொடுக்கப்படுகிறது என்றால் மக்கள் இந்த விளையாட்டின் மேல் வைத்து இருக்கும் ஆர்வம் தான். இது நாம் வேண்டாம் என்றாலும் விடுவதில்லை.

=====================================================

// ஆ! இதழ்கள் said…
கிரி,
உங்களுக்கு ஒரு விருது வழங்கியிருக்கேன் இங்க வாங்கிக்கோங்க…//

நன்றிங்க ஆ! இதழ்கள் :-)

Reply

10 வால்பையன் July 30, 2009 at 11:12 AM

கிரிகெட் என்பது தனி வாரியம் அமைத்து அதில் இருந்து வரும் வருமானத்தில் ஒரு பகுதியை சம்பளமாக தருவது தானே! அதில் நாட்டிற்கு என்ன சம்பந்தம்!

கிரிகெட் தற்போது பணம் கொழிக்கும் பிஸ்னஸ்!

Reply

11 thiru July 30, 2009 at 3:27 PM

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துக்கும் , பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்துக்கும் (அதாவது ரெண்டு கிளப்-க்கு) இடையே நடக்குற மேட்ச்ல நாட்டு பற்று எங்கே வந்தது ? ?

Reply

12 கிரி July 31, 2009 at 12:48 AM

//வால்பையன் said…
கிரிகெட் என்பது தனி வாரியம் அமைத்து அதில் இருந்து வரும் வருமானத்தில் ஒரு பகுதியை சம்பளமாக தருவது தானே! அதில் நாட்டிற்கு என்ன சம்பந்தம்!.//

அருண் அணிகள் விளையாடுவது நாட்டிற்காக தானே! அணி தோல்வி அடைந்தால் அனைவரும் கூறுவது இந்தியா தோல்வி பாக் தோல்வி என்று தானே! இந்திய பாக் கிரிக்கெட் வாரியம் தோல்வி என்று சொல்வதில்லையே!

=========================================================

//thiru said…
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துக்கும் , பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்துக்கும் (அதாவது ரெண்டு கிளப்-க்கு) இடையே நடக்குற மேட்ச்ல நாட்டு பற்று எங்கே வந்தது ? ?//

அருணுக்கு கூறிய பதிலே உங்களுக்கும் :-)

Reply

13 வால்பையன் July 31, 2009 at 10:12 AM

நீங்கள் சொல்வது ஏற்புடயதல்ல கிரி!
ஒலிம்பிக்கில் கலந்து கொள்பவர்களுக்கு அரசாங்கமே செலவு செய்து அனுப்பி வைக்கும்! அவர்களுக்கு பயிற்சிக்கும் அரசாங்க செலவில் ஏற்பாடு செய்யும்!

அவர்களது உடைகளில் விளம்பரம் செய்ய மட்டுமே தனியார் அனுகும்!

ஆனால் கிரிக்கெட் அப்படியல்ல முழுக்க முழுக்க தனி வாரியம்!
கிட்னி கார்டில் கூட விளம்பரம் வரும்!
காசு காசு காசு இதை தவிர வேரென்றும் அறியாத வாரியம் அது!
அதனால் தான் விளைநிலங்கள் நீரில் மூழ்கி விவாசயம் படுத்த போது விவசாய அமைச்சர் தென் ஆப்பிரிக்காவில் T20 பார்த்து கொண்டிருந்தார்!

ஏ.ஆர்.ரகுமான் ஆங்கில படத்துக்கு இசை அமைத்து ஆஸ்கார் வாங்கிய போது நாம் அடைந்த சந்தோசமே கிரிக்கெட்டுக்கும் பொருந்தும்!
அது எங்காளப்பான்னு ஒரு பெருமை தான்!

மனோஜ் நைட் சியாமளன்னு ஒரு டைரக்டர், பாண்டிசேரிகாரர், அப்பா காலத்திலேயே ஃபாரினில் செட்டில் ஆகிவிட்டார்கள், ஆனால் இந்தியா இன்றும் எங்க ஊர் காரர்ன்னு கொண்டாது,

அம்மாதிரி தான் லட்சுமிமிட்டலும்,
சம்பாரிப்பது முதலீடு செய்வது எல்லாம் வெளிநாட்டில், பெருமையாக நாம் சொல்லி கொள்வது அவர் இந்தியாக்காரர்

Reply

14 கிரி July 31, 2009 at 10:43 PM

அருண் ரகுமானையோ மனோஜ் நைட் சியாமளனையோ லட்சுமி மிட்டலையோ நம் நாட்டு மக்கள் கிரிக்கெட் உணர்வுகளுடன் ஒப்பிடவே முடியாது. மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்யாசம்.

மேற்கூறியவர்கள் வெற்றி பெற்றால் சந்தோசம் வெற்றி பெறவில்லை என்றால் அதை நினைத்து பெரியளவில் வருத்தப்படமாட்டார்கள்.

ஆனால் கிரிக்கெட் அப்படி அல்ல, இந்திய மக்களின் உணர்வுகளின் உள்ளே கலந்தது, அதுவும் பாகிஸ்தான் உடன் விளையாடும் போது மக்கள் எந்த அளவு வெறித்தனமாக பார்க்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

கிரிக்கெட் என்பது தனிவாரியம் தான் மறுக்கவில்லை, ஆனால் தனிவாரியமாக இருந்தாலும் இந்திய மக்களின் ஒட்டு மொத்த பிரதிநிதியாக தான் அவர்கள் விளையாடுகிறார்கள், தனிவாரியம் என்ற அளவில் அல்ல, க்ளப் என்ற அளவில் அல்ல. நீங்கள் கூறுவது மேற்கிந்திய தீவுகள் அணிகள் போன்றவற்றிக்கு வேண்டும் என்றால் ஏற்புடையதாக இருக்கலாம், இந்தியா பாக் போன்ற நாடுகளுக்கு ஒத்து வராது.

தாங்கள் விளையாடும் விளையாட்டிற்கும் நாட்டு பற்றிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை நாங்கள் ஒரு தனி வாரியம் என்று அவர்கள் கூறினால் அவர்கள் நிலை என்ன ஆகும் என்று யோசித்து பாருங்கள்..செருப்படி தான் விழும்

வெற்றி பெற்றால் அனைவரும் வெற்றியை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன், தோல்வி அடைந்தால் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றாமல் இருந்ததற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறோம் என்று கூறுவது கிரிக்கெட் வாரியத்திற்கு அல்ல, நாட்டு மக்களிடம் தான். எனவே கிரிக்கெட் வாரியம் சம்பளம் தந்தாலும் அவர்கள் மக்களின் பிரதிநிதிகள் தான். அந்த கிரிக்கெட் வாரியமே முதலில் இப்படி வெற்றிகரமாக ஓடக்காரணமே இந்திய மக்களின் கிரிக்கெட் ஆர்வம் மற்றும் ஆதரவு தான். இவர்கள் ஆதரவு இல்லை என்றால் வாரியமாவது ஒன்றாவது.

தற்போது நடந்த T20 ICC champion (chennai super kings, kaklatta night rider) போன்று பல நாட்டு வீரர்களும் கலந்து விளையாடும் இடத்தில் வேண்டும் என்றால் நீங்கள் சொல்வது போல நாட்டு பற்றை நாம் எதிர்பார்க்க முடியாது, இந்த இடத்தில் நீங்கள் கூறும் க்ளப் வருகிறது.

முடிவாக இந்திய கிரிக்கெட் அணியிடம் அது தனி வாரியமாக இருந்தாலும் மக்கள் வீரர்களிடம் நாட்டுப்பற்றை எதிர்பார்ப்பார்கள், 110 கோடி மக்களின் பிரதிநிதியாக விளையாடும் வீரர்களும் நாட்டு பற்றுடன் தான் விளையாட வேண்டும். இதுவே என் இறுதியான கருத்து.

Reply

15 வால்பையன் July 31, 2009 at 10:53 PM

//இந்திய மக்களின் உணர்வுகளின் உள்ளே கலந்தது, //

அது ஒரு போதை!
கிரிகெட்டை தவிர மற்ற விளையாட்டுகளும் இந்தியாவில் உண்டு!
சானியாமிர்சா இல்லையென்றால் டென்னிஸும் மதிக்கப்படாமல் போகும்!

பிரேசில், இத்தாலி நாடுகளில் கிரிக்கெட் என்றால் புழுவை பார்ப்பது போல் பார்ப்பார்கள்!

மேலும் இங்கே நடந்த டி20 போல் அங்கே கவுண்டி டீம்கள் அதிகம், ப்ளேயர் நாட்டிற்காக விளையாடவே பணம் கொடுத்து தான் அழைத்து வரவேண்டும்!

//110 கோடி மக்களின் பிரதிநிதியாக விளையாடும் வீரர்களும் நாட்டு பற்றுடன் தான் விளையாட வேண்டும்.//

செயிச்சா கோவில் கட்டுறது!
தோத்தா வீட்டை உடைக்கிறது, அருமையான மக்களின் பிரதிநிதிகள் எப்படி இருப்பாங்க!

Reply

16 கிரி July 31, 2009 at 11:26 PM

//அது ஒரு போதை!
கிரிகெட்டை தவிர மற்ற விளையாட்டுகளும் இந்தியாவில் உண்டு!
சானியாமிர்சா இல்லையென்றால் டென்னிஸும் மதிக்கப்படாமல் போகும்!//

இதை நான் மறுக்கவில்லை

//பிரேசில், இத்தாலி நாடுகளில் கிரிக்கெட் என்றால் புழுவை பார்ப்பது போல் பார்ப்பார்கள்!//

இங்கே அப்படி ஃபுட்பாலை பார்ப்பார்கள் ..என்ன செய்வது?

//மேலும் இங்கே நடந்த டி20 போல் அங்கே கவுண்டி டீம்கள் அதிகம், ப்ளேயர் நாட்டிற்காக விளையாடவே பணம் கொடுத்து தான் அழைத்து வரவேண்டும்//

உண்மை தான் வழிமொழிகிறேன்..

//செயிச்சா கோவில் கட்டுறது!
தோத்தா வீட்டை உடைக்கிறது, அருமையான மக்களின் பிரதிநிதிகள் எப்படி இருப்பாங்க!//

:-) அது ஒண்ணுமே பண்ண முடியாது.. காரணம் நம் மக்கள் வளர்ந்த விதம் அப்படி கலாச்சாரம் அப்படி.. வைத்த குடுமி சரைச்சா மொட்டை

Reply

17 mani August 5, 2009 at 12:01 PM

பணம் மட்டும் விளையாட்டு வீரர்களின் குறி என்று கூறி விட முடியாது. அங்கு நடக்கும் பிரச்சனயே வேறு. ஒப்பதம் கைஎழுத்து ஆகவில்லை என்றால் விளையாடும் போது எந்த வீரருக்கு அடிபட்டாலும் அல்லது உயிர் இழக்க
நேரிட்டாலும், அதற்கு கிரிக்கெட் வாரியம் பொறுபாகது(ஒரு ருபாய் கூட வீரரின் குடும்பத்திற்கு கிடைக்காது). ஆனால் வரும் வருமானம் அனைத்தும் வாரியத்திற்கு சொந்தம். இது எந்த வகையில் ஞாயம். உயிரை கொடுத்து விளையாடுபவன் எதற்கு விளையாடுகிறான்? உதாரணத்திற்கு பிராவோ காயம் காரணமாக விளையாடாமல் இருந்த போது அவருக்கு நிவாரண தொகையாக எதுவும் அளிக்கப்படவில்லை.
குறிப்பு: ஏற்கனவே ஐந்து தொடர்களை ஒப்பதம் இல்லாமல் வீரர்கள் விளையாடி உள்ளனர். இது திடிர் முடிவு இல்லை, முறையாக அறிவிக்க பட்ட ஒன்று.

Reply

18 கிரி August 5, 2009 at 8:34 PM

// mani said…
பணம் மட்டும் விளையாட்டு வீரர்களின் குறி என்று கூறி விட முடியாது.//

உண்மை தான் மணி..கிரிக்கெட் வாரியத்தையும் சேர்த்தே கூறி உள்ளேன்.

//ஏற்கனவே ஐந்து தொடர்களை ஒப்பதம் இல்லாமல் வீரர்கள் விளையாடி உள்ளனர். இது திடிர் முடிவு இல்லை, முறையாக அறிவிக்க பட்ட ஒன்று//

தகவலுக்கு நன்றி ..அனைவரும் (வாரியமும் சேர்த்து) சேர்ந்து பேசி தீர்த்து இருக்க வேண்டிய பிரச்னையை இப்படி பெரிதாக்கி விட்டார்கள்.

Reply

Leave a Comment

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)

Previous post:

Next post: