இதுக்கெல்லாம் நான் டென்ஷன் ஆக மாட்டேன் !!

by கிரி on July 14, 2009

super+singer+Junior இதுக்கெல்லாம் நான் டென்ஷன் ஆக மாட்டேன் !!

விஜய் டிவி ஜூனியர் சூப்பர் சிங்கர் 2 ல இந்த பொடுசுக பண்ணுற ரவுசு கலக்கல். ஒவ்வொருவரும் பாடும் அழகும் அவர்கள் செய்யும் சேட்டையும் ரசிக்கும் படி இருக்கிறது. குழந்தைகள் என்பதால் அவர்களின் சந்தோசத்திலும் வருத்தத்திலும் நம்மால் சம பங்கு எடுத்துக்கொள்ள முடிகிறது.

பல்வேறு குழந்தைகள் எதிர்பார்ப்புகள் சந்தோசங்கள் அதிர்ஷ்டங்கள்! வருத்தங்கள் ஏமாற்றங்கள் என்று கலவையாக இருக்கிறது. குழந்தைகள் என்றாலே அவர்களது செயல்கள் அனைவரையும் கவரும் என்றாலும் ஒரு சில குழந்தைகள் அதிகப்படியாக தங்கள் சுட்டித்தனத்தின் மூலம் நம்மை ஈர்ப்பதுண்டு.

சிங்கையில் எப்போதும் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் தாமதமாக தான் ஒளிப்பரப்பாகும் அந்த வகையில் இந்த வாரம் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியில் ஷங்கர் என்ற ஒரு பொடியனை பாட்டு பாட போகும் முன்பு பேட்டி எடுத்தார்கள்..

ரொம்ப கூலாக உட்கார்ந்து கொண்டு பேசிய வசனம் தான் மேலே உள்ள தலைப்பு

 

தான் ப்ராக்டீஸ் செய்த பாடலை பற்றி கூறி விட்டு

நான் செலக்ட் ஆக போறேனோ!………..இல்லைனா யாருக்கு தெரியும்னு எனக்கு தெரியாது

உள்ளே எப்படி பாடப்போறேனோ தெரியல எனக்கு …

Actuala பெருசா ஏதாவது கடிக்கறாங்க இந்த மாதிரி டைம் ல தான் எனக்கு டென்ஷன் ஆகும், இந்த மாதிரி பாட்!(டு) பண்றது!!! செலக்ட் பண்றது இதெல்லாம் அவ்வளவு பெரிய விஷயம் இல்ல(அது சரி!). இதெல்லாம்…. இதுக்கெல்லாம் நான் டென்ஷன் ஆக மாட்டேன்.

அதன் பிறகு பாட வந்து சிறப்பாக பாடவில்லை என்றாலும் அவனோட attitude நன்றாக இருந்தது என்பதற்காக அவனை காத்திருப்பு பட்டியலில் வைத்தார்கள்.

பல குழந்தைகள் (அல்லது அவர்களது பெற்றோர்கள்) பாட தேர்வு செய்வது இளைய தளபதி பாடலை தான், ஆனால் அவரது பாடல்கள் பல ஏடாகூடமாகவே உள்ளது அல்லது குழந்தைகள் பாடுகின்ற அளவிற்கு ஏற்றதாக இல்லை. செல்ல பேரு ஆப்பிள் சைசா கடிச்சுக்கோ, டாடி மம்மி வீட்டில் இல்ல, மொழு மொழுன்னு யம்மா! யம்மா! போன்ற பாடல்களை பாடும் போது கஷ்டமாக உள்ளது. குழந்தை ரசிகர்கள் அதிகம் கொண்டுள்ள விஜய் இதற்காகவது பாடல் வரிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

பெற்றோர்களும் நல்ல பாடல்கள் எத்தனையோ இருக்க இதை போன்ற பாடல்களை குழந்தைகளுக்கு பாட தேர்வு செய்து தருவது அல்லது துணை போவது கஷ்டமாக உள்ளது.

பல குழந்தைகள் சரியாக பாடவில்லை என்றாலும் அவர்களின் துடுக்கு தனத்தால் தேர்வு பெற்றார்கள். சிறியவர்கள் என்றாலும் பெரியவர்கள் என்றாலும் திறமை மட்டும் பத்தாது ஸ்மார்ட்டாக இருந்தால் மட்டுமே பலரை கவர முடியும் என்று சொல்லாமல் சொல்கிறது.

நல்ல விதமாக நிகழ்ச்சிகளை கொடுத்துக்கொண்டு இருந்த விஜய் டிவி, சூப்பர் சிங்கர் மற்றும் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சிகளை ஜவ்வோ ஜவ்வாக இழு இழு என்று இழுத்ததை பார்த்து நொந்து போகாதவர்களே இருக்க முடியாது. கிடைக்கும் விளம்பர பணத்திற்காக பார்வையாளர்களை கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள், இதே வேலையை ஜூனியர் சூப்பர் சிங்கரிலும் காட்டாமல் இருந்தால் நல்லது, நிகழ்ச்சிகளை இழுக்க வேண்டும் என்பதற்காக குழந்தைகள் மனதில் ஆசைகள் எதிர்பார்ப்புகளை ஏகத்திற்கு ஏற்றி விட்டு கடைசியில் அவர்களின் பிஞ்சு மனதை காயப்படுத்தாமல் இருந்தால் சரி.

இந்த வீடியோ சூப்பர் சிங்கர் ஜூனியர் 1 ல் ஒரு சுட்டி செய்த மறக்க முடியாத காமெடி..

No related posts.

{ 26 comments… read them below or add one }

ராமலக்ஷ்மி July 14, 2009 at 8:50 AM

//குழந்தைகள் மனதில் ஆசைகள் எதிர்பார்ப்புகளை ஏகத்திற்கு ஏற்றி விட்டு கடைசியில் அவர்களின் பிஞ்சு மனதை காயப்படுத்தாமல் இருந்தால் சரி.//

பாயிண்ட்!

Reply

ராமலக்ஷ்மி July 14, 2009 at 8:51 AM

//"இதுக்கெல்லாம் நான் டென்ஷன் ஆக மாட்டேன் !!"//

எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று:)!

Reply

நட்புடன் ஜமால் July 14, 2009 at 9:15 AM

குழந்தை ரசிகர்கள் அதிகம் கொண்டுள்ள விஜய் இதற்காகவது பாடல் வரிகளில் கவனம் செலுத்த வேண்டும்.]]

பாடல் வரிகளி(லும்)

குழந்தைகள் அவர்களின் குழந்தை தன்மையை இழக்கின்றார்கள் …

Reply

R.Gopi July 14, 2009 at 9:20 AM

//இளைய தளபதி பாடலை தான், ஆனால் அவரது பாடல்கள் பல ஏடாகூடமாகவே உள்ளது அல்லது குழந்தைகள் பாடுகின்ற அளவிற்கு ஏற்றதாக இல்லை. செல்ல பேரு ஆப்பிள் சைசா கடிச்சுக்கோ, டாடி மம்மி வீட்டில் இல்ல, மொழு மொழுன்னு யம்மா! யம்மா! போன்ற பாடல்களை பாடும் போது கஷ்டமாக உள்ளது. குழந்தை ரசிகர்கள் அதிகம் கொண்டுள்ள விஜய் இதற்காகவது பாடல் வரிகளில் கவனம் செலுத்த வேண்டும்.//

நல்லா சொன்னீங்க போங்க கிரி….. சமூகமாவது, அக்கறையாவது…. அவனவன் கல்லா நிறையரதுக்கு என்னென்ன பண்ணலாம், நமீதாவ போடலாமா (படத்துல ஒரு கேரக்டரா நடிக்க வைப்பது பற்றி சொன்னேன்!!), அசிங்கமா டபுள் மீனிங் டயலாக் வைக்கலாமான்னு தான் பாக்கறாங்க…. அதுலயும், விஜய் ஹாட்-ட்ரிக் தோல்வி குடுத்து இருக்கார்… நீங்க சொல்றது எல்லாம், ரஜினி மட்டுமே சாத்திய படுத்துகிறார்.
அதுவும் அவருக்கு எல்லாரும் தன் படத்தை குடும்பத்துடன் வந்து பார்க்க வேண்டும் என்று பிரியப்படுவதால்…

//குழந்தைகள் மனதில் ஆசைகள் எதிர்பார்ப்புகளை ஏகத்திற்கு ஏற்றி விட்டு கடைசியில் அவர்களின் பிஞ்சு மனதை காயப்படுத்தாமல் இருந்தால் சரி.//

இது நடக்க கூடாதென்பது தான் நம் அனைவரின் ஆசையும்……

Reply

எம்.எம்.அப்துல்லா July 14, 2009 at 9:53 AM

இந்த பெத்தவங்க தொல்லதான் இதில் பெரும் தொல்லை கிரியண்ணே. என்னவோ வாழுகின்ற கடைசி வாய்ப்பையே இழந்த மாதிரி அவங்க குடுக்குற ஃபீலிங்கு…ஒன்னும் சொல்றதுக்கில்லை.

நான் இந்த நிமிடம்வரை எந்தப் போட்டியிலும் அது சூப்பர் சிங்கரோ, அசிங்கரோ எந்த புண்ணாக்கிலும் கலந்து கொண்டதில்லை. நான் பாடி முதல் பாட்டு வெளிவந்து,ரெண்டாவது பாட்டு முடிச்சு, மூனாவது பாடல் அடுத்தவாரம் ரெக்கார்டிங்க்கு வெயிட்டிங். நடக்குறது தன்னால நடக்கும் கிரியண்ணே. போட்டிகளில் கலந்து பரிசு பெற்றால்தான் பாடகராக முடியும்னு இந்த பெற்றோர்களுக்கு யார் சொன்னது???

(கொஞ்சம் வேலைப் பளுவால் கடந்த மூணு,நாலு இடுகைக்கு பின்னூட்டம் போடாம ஓடிப்போய்ட்டேன்.சாரி )

Reply

பிரேம்ஜி July 14, 2009 at 9:56 AM

கிரி,

ரசித்து சிரித்தேன் :-) ))))))))

நன்றி.

Reply

Bleachingpowder July 14, 2009 at 10:12 AM

குழந்தைகள் பங்குபெறும் ரியாலிட்டி ஷோவில், எலிமினேசன் ரவுண்ட் வச்சு பிஞ்சு குழந்தைகளை மனதை புண்படுத்தும் எந்த நிகழ்ச்சிகளையும் நான் பார்ப்பதில்லை கிரி. குரூர மனம் படைத்தவர்கள் இவர்கள்.

Reply

எம்.எம்.அப்துல்லா July 14, 2009 at 10:23 AM

//குரூர மனம் படைத்தவர்கள் இவர்கள்
//

ஆமாண்ணே. அவங்களுக்கு நீங்களும்,நானும் எவ்வளவோ தேவலாம்

:) )

Reply

வால்பையன் July 14, 2009 at 10:47 AM

இதையெல்லாம் பார்க்க உங்களுக்கு டைம் இருக்கா!
நமக்கு லேது!

Reply

Bleachingpowder July 14, 2009 at 10:54 AM

//இந்த வீடியோ சூப்பர் சிங்கர் ஜூனியர் 1 ல் ஒரு சுட்டி செய்த மறக்க முடியாத காமெடி..//

இது காமெடி இல்லை கிரி, இவனுங்க பேக்கிரவுண்டல கெக்கபிக்கே சிரிச்சு அத காமெடி ஆக்க ட்ரை பன்றாங்க, பாவம் எவ்வளவு ஏங்கிருக்கும் அந்த குழந்தை.

Reply

வந்தியத்தேவன் July 14, 2009 at 11:02 AM

மாயா என்ற சூப்பர் சிங்கர் சீனியரில் கலந்துகொண்ட ஒரு பெண் திருச்சி ஆடிசனில் நடுவராக வந்து குழந்தைகளிடம் கடினமாக ந்டந்துகொண்டார். தன் அதிமேதாவித்தனத்தையும் குழந்தைகளிடம் காட்டினார். டாடி மம்மி வீட்டில் இல்லை என குழந்தைகள் பாடும்போது ரசிக்கமுடியவில்லை. இந்த இழவுப்பாட்டுகளை பாடவேண்டாம் என பெற்றோர்கள் சொல்லியிருக்கலாம் ஏனோ சொல்லவில்லை.

ஒரு சில குழந்தைகள் பெரிதாக பாடும் திறமையில்லாம கலந்துகொண்டு எலிமினேட் ஆனதும் அழுவது சகிக்கவில்லை. திருமதி யுகேந்திரனைவிட டிடி பரவாயில்லை நிகழ்ச்சித் தொகுப்பில் சொதப்பவில்லை.

Reply

வால்பையன் July 14, 2009 at 11:19 AM

நீங்கள் வைத்திருக்கும் டெம்ப்ளெட்டில் எதையுமே ஒழுங்காக பார்க்கமுடியவில்லை, குறைந்தபட்சம் சைடில் வைத்திருக்கும் கவுண்டமணி வீடியோவை தூக்குங்கள்!

Reply

ஜாக்கி சேகர் July 14, 2009 at 11:52 AM

சிரியாக பாடாத குழந்தைகள் மனதை நோகடிக்காமல் இருந்தால் சரி…

Reply

ஜோசப் பால்ராஜ் July 14, 2009 at 12:23 PM

இந்த தோத்துப் போண குழந்தைங்க அழுறது, அவங்க பெற்றோர் அழுவுறது, அதோட எல்லாத்துக்கும் மேல சில பசங்க நடுவர்கள குறை சொல்றதுன்னு நிறைய கடியான விசயங்களை தவிர்பதற்காக நான் இந்த நிகழ்சிகள டிஜிடல் செட்டாப் பாக்ஸ்ல ரெக்கார்ட் பண்ணி வைச்சு, பாடுறத தவிர மற்றத ஓட்டிருவேனுங்க.

போன வருசம் ஒரு பைய்ன் ஒழுங்கா பாடாம வெளியேற்றப்பட்டதுக்கு நடுவர்கள் மோசம் அப்டின்னு திட்னான் பாருங்க. ரொம்ப அதிர்சியா இருந்துச்சு அவனோட அப்ரோச். அவனுக்கு திறமையில்ல அதை வளர்த்துக்கனும்னு தோணலையே அவனுக்கு, உடனே நடுவர்கள திட்றானே, இவன் எல்லாம் தன் தோல்விக்கு காரணத்த யாருமேல போடுறதுன்னு தானே யோசிக்கிறான். தன்னோட திறமைய சோதிக்கிறதேயில்லையே? இது ரொம்ப மோசமான அப்ரோச்.

Reply

ஜோ/Joe July 14, 2009 at 12:43 PM

//இந்த பெத்தவங்க தொல்லதான் இதில் பெரும் தொல்லை கிரியண்ணே. என்னவோ வாழுகின்ற கடைசி வாய்ப்பையே இழந்த மாதிரி அவங்க குடுக்குற ஃபீலிங்கு…ஒன்னும் சொல்றதுக்கில்லை.//

ரொம்ப கச்சிதமா சொன்னீங்க அப்துல்லா.

Reply

ராமலக்ஷ்மி July 14, 2009 at 2:55 PM

இங்கு வந்திருக்கும் பின்னூட்டங்களை வாசிக்கையில் இது குறித்த எனது பதிவினையும் பகிர்ந்திடத் தோன்றுகிறது: வேண்டுவது தளமா சோர்வைத் தரும் களமா?

Reply

வாசுகி July 14, 2009 at 4:49 PM

ஒரு நாள் பார்த்தேன். எல்லோருமே கஸ்டப்பட்டு டாடி மம்மி தான் பாடினார்கள். சிறுவர்கள் பாடுவதற்கு கடினமான பாட்டை ஏன் தெரிவு செய்தார்கள் என நினைத்தேன்.
விஜய் பாட்டு தான் பாடவேண்டும் என்று சொல்லி இருப்பார்களோ.

Reply

கிரி July 14, 2009 at 6:04 PM

// ராமலக்ஷ்மி said…
எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று:)!//

இதற்கும் போன வார பதிவுலக நிகழ்விற்கும் சம்பந்தம் உண்டா ஹி ஹி ஹி

=========================================================

//நட்புடன் ஜமால் said…
குழந்தை ரசிகர்கள் அதிகம் கொண்டுள்ள விஜய் இதற்காகவது பாடல் வரிகளில் கவனம் செலுத்த வேண்டும்.]]

பாடல் வரிகளி(லும்)//

நடிகர்கள் அனைவருமே இதை உணர வேண்டும்

=========================================================

// R.Gopi said…
இது நடக்க கூடாதென்பது தான் நம் அனைவரின் ஆசையும்……//

ரொம்ப கஷ்டம் தான் என்று நினைக்கிறேன்

=========================================================

// எம்.எம்.அப்துல்லா said…
இந்த பெத்தவங்க தொல்லதான் இதில் பெரும் தொல்லை கிரியண்ணே. என்னவோ வாழுகின்ற கடைசி வாய்ப்பையே இழந்த மாதிரி அவங்க குடுக்குற ஃபீலிங்கு…ஒன்னும் சொல்றதுக்கில்லை.//

ஓவர் அலும்பு தான் என்ன பண்ணுறது.. இவங்க அலப்பறை விஜய் டிவிய விட மோசமா இருக்கு :-)

//கொஞ்சம் வேலைப் பளுவால் கடந்த மூணு,நாலு இடுகைக்கு பின்னூட்டம் போடாம ஓடிப்போய்ட்டேன்.சாரி //

இந்த டகால்ட்டி சமாதானம் எல்லாம் ஒத்துக்க மாட்டேன் கிர்ர்ர்ர்ர்

அப்துல்லா அண்ணே அடுத்த மாதம் சென்னை வருகிறேன், சந்திக்கிறேன் உங்களை.

=======================================================

//பிரேம்ஜி said…
கிரி,

ரசித்து சிரித்தேன் :-) )))))))//

நன்றி பிரேம்ஜி

=======================================================

//வால்பையன் said…
இதையெல்லாம் பார்க்க உங்களுக்கு டைம் இருக்கா!
நமக்கு லேது//

எல்லாவற்றையும் பார்க்க மாட்டேன் அருண்.. இவங்க பண்ணுற இம்சைய பார்க்க எனக்கு பொறுமை இல்ல.. அவ்வப்போது பார்ப்பேன்

//நீங்கள் வைத்திருக்கும் டெம்ப்ளெட்டில் எதையுமே ஒழுங்காக பார்க்கமுடியவில்லை, குறைந்தபட்சம் சைடில் வைத்திருக்கும் கவுண்டமணி வீடியோவை தூக்குங்கள்!//

எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை..ஒருவேளை டிஸ்ப்ளே ரொம்ப சின்னதா வைத்து இருக்கீங்களா (மானிட்டர் னு சொன்னா வேற ஏதாவது நீங்க சொல்லிட்டா ஹி ஹி ஹி ) சரி உங்க விருப்பபடியே நம்ம கவுண்டரை தூக்கிட்டேன் :-)

Reply

கிரி July 14, 2009 at 6:05 PM

// Bleachingpowder said…
குழந்தைகள் பங்குபெறும் ரியாலிட்டி ஷோவில், எலிமினேசன் ரவுண்ட் வச்சு பிஞ்சு குழந்தைகளை மனதை புண்படுத்தும் எந்த நிகழ்ச்சிகளையும் நான் பார்ப்பதில்லை கிரி. குரூர மனம் படைத்தவர்கள் இவர்கள்.//

அனைத்தையும் பணமாக பார்ப்பவர்களுக்கு இது ஒன்றுமில்லை தான்

//இது காமெடி இல்லை கிரி, இவனுங்க பேக்கிரவுண்டல கெக்கபிக்கே சிரிச்சு அத காமெடி ஆக்க ட்ரை பன்றாங்க, பாவம் எவ்வளவு ஏங்கிருக்கும் அந்த குழந்தை.//

ஹலோ அருண்..எல்லாவற்றையும் சீரியஸ் ஆக பார்க்காதீங்க….அப்புறம் ரொம்ப போர் அடிக்கும்… :-)

குழந்தையின் கோபமும் அழுகையும் கூட ஒரு ரசிப்பு தான் ஒரு தந்தையாக இதை அனுபவித்ததால் கூறுகிறேன்

=============================================================

//வந்தியத்தேவன் said…
இந்த இழவுப்பாட்டுகளை பாடவேண்டாம் என பெற்றோர்கள் சொல்லியிருக்கலாம் ஏனோ சொல்லவில்லை.//

பெற்றோர்களை நினைத்தால் தான் ஆத்திரமாக வருகிறது.

//திருமதி யுகேந்திரனைவிட டிடி பரவாயில்லை நிகழ்ச்சித் தொகுப்பில் சொதப்பவில்லை.//

உண்மை தான்

==========================================================

//jackiesekar said…
சிரியாக பாடாத குழந்தைகள் மனதை நோகடிக்காமல் இருந்தால் சரி.//

என்னங்க ஜாக்கி சேகர் ..கிரியையும் சரியையும் சேர்த்து சிரி ஆக்கிட்டீங்களா :-) ))

============================================================

// ஜோசப் பால்ராஜ் said…
இந்த தோத்துப் போண குழந்தைங்க அழுறது, அவங்க பெற்றோர் அழுவுறது,//

குழந்தைக அழுவதையாவது ஏற்று கொள்ளலாம் ..பெரியவங்க பண்ணுவது தான் ரொம்ப ஓவரா இருக்கு

//அவனுக்கு திறமையில்ல அதை வளர்த்துக்கனும்னு தோணலையே அவனுக்கு, உடனே நடுவர்கள திட்றானே, இவன் எல்லாம் தன் தோல்விக்கு காரணத்த யாருமேல போடுறதுன்னு தானே யோசிக்கிறான். தன்னோட திறமைய சோதிக்கிறதேயில்லையே? இது ரொம்ப மோசமான அப்ரோச்//

இதை எல்லாம் உணர்ந்து கொள்ளும் அளவிற்கு இன்னும் அவர்கள் பக்குவம் அடையவில்லை என்பது என் கருத்து,

=========================================================

ஜோ வருகைக்கு நன்றி

=========================================================

ராமலக்ஷ்மி உங்கள் பதிவு அருமை ..ஏற்கனவே அதற்க்கு ஒரு விரிவான பின்னூட்டம் எழுதி இருக்கிறேன் :-)

=========================================================

// வாசுகி said…
விஜய் பாட்டு தான் பாடவேண்டும் என்று சொல்லி இருப்பார்களோ.//

ஹி ஹி ஹி இருக்கலாம்.. இப்ப தான் எந்த குழந்தைய கேட்டாலும் எனக்கு விஜய் தான் பிடிக்கும்னு சொல்றாங்களே! :-)

Reply

ராமலக்ஷ்மி July 14, 2009 at 6:49 PM

நீங்கள் ஏற்கனவே வாசித்ததுதான். சுட்டி மற்றவருடன் பகிர்ந்திடவே:)!

Reply

அறிவிலி July 14, 2009 at 7:43 PM

ஆம் ஜவ்வாக இழுக்கதவரை சுவாரசியம்தான்.

Reply

கார்த்திக் July 14, 2009 at 8:10 PM

எவ்ளோ ஜவ்வா இழுத்தாலும் கோலங்கள்-ல அடிச்சிக்க முடியாது.. எண்ண தோழரே சரிதானே..?

Reply

ஈ ரா July 15, 2009 at 2:21 PM

//குழந்தைகள் மனதில் ஆசைகள் எதிர்பார்ப்புகளை ஏகத்திற்கு ஏற்றி விட்டு கடைசியில் அவர்களின் பிஞ்சு மனதை காயப்படுத்தாமல் இருந்தால் சரி.//

//இந்த பெத்தவங்க தொல்லதான் இதில் பெரும் தொல்லை கிரியண்ணே. என்னவோ வாழுகின்ற கடைசி வாய்ப்பையே இழந்த மாதிரி அவங்க குடுக்குற ஃபீலிங்கு…ஒன்னும் சொல்றதுக்கில்லை.//

கிரி,

வழி மொழிகிறேன்…

அப்புறம்,

இன்றைக்கு காமராசர் பிறந்த நாளுக்கு என்னுடைய கவிதையை சமர்ப்பித்து இருக்கிறேன்….

நண்பர்கள் வந்து படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்…
நன்றி

http://padikkathavan.blogspot.com/2009/07/blog-post_15.html

Reply

பிரவின்குமார் July 15, 2009 at 3:51 PM

குழந்தைகள் மனதில் ஆசைகள் எதிர்பார்ப்புகளை ஏகத்திற்கு ஏற்றி விட்டு கடைசியில் அவர்களின் பிஞ்சு மனதை காயப்படுத்தாமல் இருந்தால் சரி……

Reply

கிரி July 15, 2009 at 6:21 PM

//ராமலக்ஷ்மி said…
நீங்கள் ஏற்கனவே வாசித்ததுதான். சுட்டி மற்றவருடன் பகிர்ந்திடவே//

ரைட்டு :-)

============================================================

// அறிவிலி said…
ஆம் ஜவ்வாக இழுக்கதவரை சுவாரசியம்தான்.//

உண்மை தான் (குழந்தைகள் என்பதால்)

============================================================

// கார்த்திக்.ச said…
எவ்ளோ ஜவ்வா இழுத்தாலும் கோலங்கள்-ல அடிச்சிக்க முடியாது.. எண்ண தோழரே சரிதானே..?//

அந்த இயக்குனர் தெய்வம். :-) )

============================================================

//ஈ ரா said…
வழி மொழிகிறேன்.//

வாங்க புதுமாப்பிள்ளை ஈ ரா :-)

//இன்றைக்கு காமராசர் பிறந்த நாளுக்கு என்னுடைய கவிதையை சமர்ப்பித்து இருக்கிறேன்…//

வந்து விடுகிறேன்

============================================================

// பிரவின் குமார் said…
குழந்தைகள் மனதில் ஆசைகள் எதிர்பார்ப்புகளை ஏகத்திற்கு ஏற்றி விட்டு கடைசியில் அவர்களின் பிஞ்சு மனதை காயப்படுத்தாமல் இருந்தால் சரி…..//

ஆமாங்க பிரவின் :-)

Reply

அருப்புக்கோட்டை பாஸ்கர் July 16, 2009 at 8:42 PM

//பிஞ்சு குழந்தைகளை மனதை புண்படுத்தும் எந்த நிகழ்ச்சிகளையும் நான் பார்ப்பதில்லை கிரி. குரூர மனம் படைத்தவர்கள் இவர்கள்.//

நானும் வழி மொழிகிறேன் !

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed