Friday, July 10, 2009

அடடா! புக்மார்க் போச்சே! என்று புலம்புவரா நீங்கள்!

புக்மார்க் என்பது கணினி பயன்படுத்துவர்களின் தவிர்க்க முடியாத ஒரு செயலாகி விட்டது, நமக்கு பயனுள்ளவற்றை, பிடித்தவற்றை, சந்தேகங்களை திரும்ப சென்று பார்க்க என்று பல்வேறு வகையில் இவை பயன்படுகின்றன. தேடி அலையாமல் நேராக நமக்கு தேவையான இடத்தை இதன் மூலம் அடைய முடிகிறது.

நம்மில் பலர் (பெரும்பாலனவர்கள்) அலுவலக கணினி மற்றும் வீட்டு கணினி என்று இரு வேறு கணினிகளை பயன்படுத்துவோம். இதில் நாம் இணையத்தில் உலவும் போது மேற்கூறிய காரணங்களுக்காக புக்மார்க் செய்வோம் ஆனால் நமக்கு தேவை படும் நேரம் நம் கணினியில் இல்லாமல் வேறு கணினியில் அந்த புக்மார்க் இருக்கும், இதனால் நடைமுறை சிக்கல் ஏற்படும்.

இந்த பிரச்சனைகளை தவிர்க்க நமக்கு உதவ உள்ளதே புக்மார்க் தளங்கள். நாம் நம் கணினியில் புக்மார்க் செய்வதோடு இந்த தளங்களிலும் புக்மார்க் செய்து விட்டால் நாம் வேறு எந்த கணினியாக இருந்தாலும் அதை நாம் பயன்படுத்த முடியும் இணைய இணைப்பு இருந்தால் போதுமானது. நமது கணினி டேட்டா அழிந்து விட்டாலும் கூட நமக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் இதை நாம் பயன்படுத்த முடியும். பிரௌசிங் சென்டர் சென்றால் கூட நம்மால் நம் புக்மார்க்குகளை பயன்படுத்த முடியும் என்பதால் நமக்கு அத்தியாவசிய தேவை ஏற்படும் போது இதன் பயன்பாடு நன்கு தெரியும்.

இந்த வசதிகளை பல தளங்கள் தற்போது வழங்கி வருகின்றன. இதில் எனக்கு பிடித்த தளங்கள் http://delicious.com மற்றும் http://faves.com

இதில் http://faves.com தளம் மிகவும் வண்ணமயமாக இருக்கும், உங்கள் புக்மார்க் செய்யும் தளத்தின் ஐக்கான்களை இதில் சேர்த்து எளிதில் அடையாளம் கண்டு கொள்ளும்படி இருக்கும். ஆனால் நான் பரிந்துரைப்பது http://delicious.com தளத்தை தான், இது வண்ணமயமாக இல்லாவிட்டாலும், பெரிய நிறுவனமாகவும் அதே சமயம் முன்னணியில் இருப்பதாலும் உங்களுக்கு தொழில்நுட்ப பிரச்சனைகள் எதுவும் வராது, மற்றும் பல தளங்களில் delicious தளத்திற்கு நேரடி சேமிப்பு தொடுப்பு இருக்கும்.

இந்த தளத்தில் உள்ள புக்மார்க் ஐக்கான்களை உங்கள் உலவியில் (பாரில்) நிறுவி கொண்டால் (கூகிள் அறிமுகப்படுத்தியுள்ள தமிழ் மாற்றி ஐக்கான் போல Drag and Drop) உங்களுக்கு தேவையான தளத்தை திறந்து இந்த ஐக்கானை அழுத்தினால் போதும் அதுவே நீங்கள் தற்போது உள்ள தளத்தை அவர்கள் தளத்தில் புக்மார்க் செய்துவிடும் அல்லது நேரடியாக புக்மார்க் தளம் சென்று அங்கேயும் இணைக்கலாம், இதில் நீங்கள் எந்த பிரிவு என்று முதல்கொண்டு தேர்வு செய்யலாம். மற்றவர்களுடன் எளிதில் பகிர்ந்து கொள்ளலாம், அதே போல அதை மற்றவர்கள் பார்க்க கூடாது என்று விரும்பினால் அதையும் தடை செய்ய முடியும். உங்கள் உலவியில் தற்போது உள்ள புக்மார்க்குகளையும் எக்ஸ்போர்ட் செய்து கொள்ளலாம்.

மேற்கூறியவற்றை செய்வதன் மூலம் நமக்கு கிடைக்கும் பயன்கள் ஏராளம், நமக்கு இதன் முக்கியத்துவம் நாம் புக்மார்க்கை தொலைத்து விட்டு மண்டைய சொறியும் போது நன்கு தெரியும்.

Buzz It

25 COMMENTS:

நட்புடன் ஜமால் on 9:01 AM, July 10, 2009 said...

நல்ல பகிர்வு கிரி

நன்றி.

உபயோகம் செய்திடுவோம் ...

பிரேம்ஜி on 9:13 AM, July 10, 2009 said...

சிறப்பான தகவல்.மிக்க நன்றி கிரி.

எவனோ ஒருவன் on 10:45 AM, July 10, 2009 said...

பயனுள்ள தகவல்.
நன்றி.

ராமலக்ஷ்மி on 10:49 AM, July 10, 2009 said...

மிக உபயோகமான தகவல். செய்து விடுகிறேன். ஊருக்கு போகையில் கை கொடுக்குமே:)!

அந்தக் கடைசி வரி அனுபவம் அநேகமாய் பல பேருக்கு இருந்திருக்கும்:)!

வால்பையன் on 11:15 AM, July 10, 2009 said...

புதிய வெர்ஷன் அப்டேட் செய்யும் போது சில சமயம் புக்மார்க் காணாமல் போக வாய்புண்டு!
பார்மெட் பண்ணினால் சொல்லவே வேண்டியதில்லை!

பயனுள்ள பதிவு!

சூர்யா ௧ண்ணன் on 3:20 PM, July 10, 2009 said...

மிக உபயோகமான தகவல்.
நன்றி

நசரேயன் on 7:26 PM, July 10, 2009 said...

உபயோகமான தகவல்

குறை ஒன்றும் இல்லை !!! on 8:37 PM, July 10, 2009 said...

நன்றி அண்ணே..

தேவன் மாயம் on 9:14 AM, July 11, 2009 said...

நல்ல பகிர்வு கிரி. பயனுள்ள தகவல்...

கிரி on 5:42 PM, July 11, 2009 said...

ஜமால், பிரேம்ஜி, பெஸ்கி, ராமலக்ஷ்மி, அருண், சூர்யா கண்ணன், நசரேயன், ராஜ் மற்றும் தேவா வருகைக்கு நன்றி

♠புதுவை சிவா♠ on 6:28 PM, July 11, 2009 said...

கிரி பயனுள்ள தகவல் அளித்தமைக்கு நன்றி

ஆ.ஞானசேகரன் on 6:40 PM, July 11, 2009 said...

பயனுள்ள பகிர்வு நன்றிபா

நிஜமா நல்லவன் on 8:50 AM, July 12, 2009 said...

மிகவும் நன்றி கிரி!

தமிழ் பிரியன் on 9:04 AM, July 12, 2009 said...

பயனுள்ள பகிர்வு! நன்றி கிரி!

☀நான் ஆதவன்☀ on 9:34 AM, July 12, 2009 said...

நன்றி கிரி பகிர்வுக்கு :) (ரொம்ப நாளாச்சோ! கடை பக்கம் வந்து)

Book on 9:40 AM, July 12, 2009 said...

HI,

Plz... add this site also:

http://www.savetheurl.com/

R.Gopi on 10:51 AM, July 12, 2009 said...

Good info, once again from you GIRI.

Keep the good work, going........

ராஜ நடராஜன் on 3:23 PM, July 12, 2009 said...

Delicious தகவலா இருக்குதே!ஒரு மைல் தூரத்துக்கு நீளும் பகுதிகளையெல்லாம் இனி இங்கே தள்ளி விடவேண்டியதுதான்.அதுவும் இரட்டைக்கணினி என்பதால் இந்த ஐடியா நல்லாவே இருக்குது.நன்றி.

கிரி on 6:25 PM, July 12, 2009 said...

புதுவை சிவா,ஞானசேகரன், நிஜமா நல்லவன், தமிழ் பிரியன், நான் ஆதவன், புக், கோபி மற்றும் ராஜநடராஜன் வருகைக்கு நன்றி

பிரவின் குமார் on 3:54 PM, July 15, 2009 said...

கிரி அண்ணே..! பயனுள்ள தகவல் அளித்தமைக்கு நன்றி.....!

Mahatma on 3:11 AM, July 18, 2009 said...

Hi Giri, Just an additional info, Yahoo! Delicious a vanga 2+ yrs ayeduchu..

I really appreciate your posting on various topics. (especially Singapore thai pusam pictures, 5 yrs anghe errunthum oru thadavai kooda poi parathathu ellai, but your pictures fulfiled my desires.
Thanks
Ananthakumar Gandhi.

கிரி on 9:47 AM, July 18, 2009 said...

//பிரவின் குமார் said...
கிரி அண்ணே..! பயனுள்ள தகவல் அளித்தமைக்கு நன்றி....//

:-) வருகைக்கு நன்றி பிரவின்

==================================================================

// Mahatma said...
Hi Giri, Just an additional info, Yahoo! Delicious a vanga 2+ yrs ayeduchu..//

அப்படியா! அதுல எதுவும் தகவல் இல்லையே இது பற்றி

// really appreciate your posting on various topics. (especially Singapore thai pusam pictures, 5 yrs anghe errunthum oru thadavai kooda poi parathathu ellai, but your pictures fulfiled my desires. //

நன்றி அனந்தகுமார் காந்தி

Mahatma on 12:39 PM, August 04, 2009 said...

Giri, Pl visit http://delicious.com/help/terms
look for "Intellectual Property & (Trademarks & Copyrights)"

or go to http://delicious.com/ and browse all the way down to bottom to hit "copyright policy", you can see that takes you to Y!.

There are certain Acquisition made by companies yahoo,MS and google don't touch the content of the site and keep as it is. but there is a reason too. Im sure you would love to hear those. neriya erruku chollrathukku Giri..:) .

வெ.இராதாகிருஷ்ணன் on 2:30 PM, August 04, 2009 said...

நல்லதொரு தளங்களை அறிமுகப்படுத்தியமைக்கும், உதவிக்கும் மிக்க நன்றி கிரி அவர்களே. குறிப்பு எடுத்துக் கொள்கிறேன்.

கிரி on 10:47 PM, August 04, 2009 said...

//Mahatma said...
There are certain Acquisition made by companies yahoo,MS and google don't touch the content of the site and keep as it is. but there is a reason too. Im sure you would love to hear those. neriya erruku chollrathukku Giri..:) //

தகவலுக்கு நன்றி ..நீங்க சொல்லுங்க நான் கேட்க தயார்.. ;-)

============================================================

//வெ.இராதாகிருஷ்ணன் said...
நல்லதொரு தளங்களை அறிமுகப்படுத்தியமைக்கும், உதவிக்கும் மிக்க நன்றி கிரி அவர்களே. குறிப்பு எடுத்துக் கொள்கிறேன்.//

சார் கிரி ன்னு கூறினாலே போதும் :-)