Twenty-20(40!) உலககோப்பை கிரிக்கெட் சிறு அலசல்

by கிரி on June 22, 2009

ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, மேற்கிந்திய தீவுகள் கடைசியாக இலங்கை என்று வெற்றி பெரும் அணிகளை எதிர்பார்த்து இருந்த அனைவரின் நினைப்பிலும் மண்ணை அள்ளி போட்டு விட்டு அசத்தலாக கோப்பையை “பாக்” அணி கைப்பற்றி வெற்றி வாகை சூடி விட்டது.

டாஸ் வென்ற இலங்கை கேப்டன் சங்ககரா பேட்டிங்கை தேர்வு செய்தார், இலங்கைக்கு பாக் ஆரம்பமே அதிர்ச்சி அளித்தது. இந்த தொடர் முழுவதும் ஜொலித்த தில்ஷன் ரன் எதுவும் எடுக்காமல் முக்கிய போட்டியான இதில் “டக்” அவுட்டானார் இளம் வீரர் முகமது அமர் பந்தில் அதுவும் முதல் ஓவரிலேயே. அதன் பிறகு அப்துல் ரசாக் மூன்று விக்கட்டுகள் விரைவில் எடுத்து இலங்கை அணியின் துவக்க வீரர்களை நிலைகுலைய செய்தார், இதன் பிறகு இலங்கை பாடு திண்டாட்டமாகி விட்டது, அணியின் ரட்சகனாக சங்ககரா திறமையாக சமாளித்து விளையாடினார் ஆனால் அவருக்கு அவர்கள் தரப்பில் மாத்யுஸ் தவிர யாரும் சரியான ஒத்துழுழைப்பு தராததால் அதிகளவில் ஓட்டங்களை குவிக்க முடியவில்லை. கடைசியாக 138 ஓட்டங்கள் எடுத்து தனது ஆட்டத்தை முடித்துக்கொண்டது.

cricket1 Twenty 20(40!) உலககோப்பை கிரிக்கெட் சிறு அலசல்

பாக் அணியில் துவக்க வீரர்களான கம்ரன் அக்மல், ஹசன் இருவரும் நல்ல துவக்கம் தந்ததால் எந்தவித நெருக்கடியும் பாக்கிற்கு ஏற்படவில்லை. கடைசியில் அப்ரிடி சோயப் மாலிக் இருவரும் எளிதாக வெற்றியை உறுதி செய்தனர். எந்த வித பரபரப்பும் இல்லாமல் சாதாராணமாக முடிந்தது.

cricket+2 Twenty 20(40!) உலககோப்பை கிரிக்கெட் சிறு அலசல்

போன முறை இறுதி போட்டி வரை வந்த பாக் இந்த முறை உலக கோப்பையை வென்று சாதித்து விட்டது.

எனக்கு இந்த இரண்டு அணிகளுமே பிடிக்காது, இலங்கை அணி தற்போதைய சர்ச்சையால், பாக் எப்போதும் சர்ச்சையால், இவர்கள் இருவரும் இறுதி போட்டிக்கு வந்ததுமே எனக்கு செம கடுப்பாகி விட்டது. தற்போதைய கடுப்பு இலங்கை அணி மீது அதிகம் இருந்ததால் பாக் வெற்றி பெற்றதால் கொஞ்சம் அல்ப சந்தோசம் அடைந்து விட்டேன்.

நமக்கு பிடிக்கிறது பிடிக்கலை அது வேற விஷயம் ஆனால் திறமைசாலிகள் வெற்றி பெற்றார்கள் எனவே என் மனமார்ந்த வாழ்த்துக்கள் பாக் அணிக்கு.

நம் இந்திய அணி முதலில் இருந்தே குழு மனப்பான்மையுடன் விளையாடவில்லை, சேவக் நீக்கம், சரியான துவக்கம் இல்லாதது போன்ற காரணங்களால் இந்திய அணி குழப்பத்திலேயே இருந்தது. விளையாடியவர்களும் போட்டி மனப்பான்மையுடன் விளையாடியதை போல தெரியவில்லை, எதோ உள்ளூர் போட்டிகளில் விளையாடும் எண்ணத்துடன் ஏனோ தானோ வென்று விளையாடி சொதப்பி பல கோடி இந்திய ரசிகர்களின் இதயங்களை தங்கள் பொறுப்பற்ற தனத்தால் நொறுக்கி விட்டார்கள். வெற்றி தோல்வி என்பது விளையாட்டில் சகஜம் என்றாலும் கவுரவமாக தோற்று இருந்தால் யாரும் கேள்வி கேட்கப்போவதில்லை கேவலமாக தோற்றதினால் தான் கடுப்பாகி விட்டார்கள்..அட! தென் ஆப்ரிக்காவுடன் ஆறுதல் வெற்றி கூட பெறலைங்க.. என்னத்தை சொல்றது!

டோனிக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை, அவரது அதிரடி ஆட்டம் எல்லாம் பார்த்து பல நாட்கள் ஆகி விட்டது, மொக்கை போட்டுக்கொண்டு உள்ளார். இந்த போட்டிகளில் டோனி சோபிக்கவே இல்லை. எனக்கு பெருத்த ஏமாற்றம், ஹிட்டரான இவரை போன்றவர்களை நம்பியே Twenty-20 போட்டிகள் உள்ளன.

இந்திய அணியின் பயிற்சியாளர், இந்திய அணி IPL போட்டிகளில் கலந்து கொண்டதாலே சோர்வடைந்து விட்டார்கள், இதனாலேயே நம் அணியின் வெற்றி பறி போய்விட்டது என்று குற்றம் சாட்டி உள்ளார், ஆனால் இதை டோனி மறுத்து பேசியுள்ளார். ஒரு அணி தோல்வி அடையும் போது இதை போல சர்ச்சைகள் வருவது சகஜமே. ஆனால் எனக்கும் IPL போன்ற போட்டிகளில் வீரர்கள் அதிகளவில் பணம் சம்பாதிப்பதால் வெற்றி பெற வேண்டும் என்ற வெறி குறைந்து விட்டதாகவே தோன்றுகிறது. கிரிக்கெட் என்பதை பணம் சம்பாதிக்கும் தொழிலாக இந்தியாவில் அறிவித்து!! விட்டதால் இனி என்னத்தை பேசி என்ன பயன்? ரசிகர்கள் வழக்கம் போல இதற்க்கு புலம்பி விட்டு அடுத்த போட்டியில் இந்திய அணி ஜெயிக்கும் போது சூப்பர்! சூப்பர்!! னு சொல்லிட்டு வழக்கம் போல பிழைப்பை! பார்க்க வேண்டியது தான்.

நம்ம நிலைமை ஆஸ்திரேலியாவை ஒப்பிடும் போதும் பரவாயில்லை icon smile Twenty 20(40!) உலககோப்பை கிரிக்கெட் சிறு அலசல் அவர்கள் கேவலமாக தோற்று விட்டார்கள், அதற்க்கு சைமண்ட்ஸ் இல்லாததே காரணம் என்று ஒரு சப்பை காரணம் கூறி இருக்கிறார்கள். மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென் ஆப்ரிக்க அணிகள் சிறப்பாக விளையாடின இருந்தாலும் கோப்பையை வெல்ல முடியவில்லை. இலங்கை அணி அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி விட்டு இறுதி போட்டியில் சொதப்பி விட்டார்கள். போட்டி நடத்தும் இங்கிலாந்து, மானம் காக்க கடுமையாக போராடியும் ஒன்றும் வேலைக்காகவில்லை.

ஆடவர் போட்டி பற்றி தானே பேசிட்டு இருக்கோம் பெண்களும் Twenty-20 போட்டியில் கலக்கி உள்ளனர், ஆமாங்க! நேற்று இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இடையே நடந்த முதல் Twenty-20 உலககோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து பெண்கள் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. போட்டியை நடத்தும் இங்கிலாந்தை ஆண்கள் அணி கை விட்டாலும் பெண்கள் அணி கோப்பை கைப்பற்றி நிம்மதி அடைய வைத்துள்ளது.

cricket3 Twenty 20(40!) உலககோப்பை கிரிக்கெட் சிறு அலசல்

cricket4 Twenty 20(40!) உலககோப்பை கிரிக்கெட் சிறு அலசல்

இங்கிலாந்து பெண்கள் அணிக்கு இந்த வருடம் அமர்க்களமான வருடம். இந்த வருடம் தான் 50 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் (இதிலும் நியுசிலாந்துடன் இறுதி போட்டி) வெற்றி பெற்றார்கள், தற்போது Twenty-20 முதல் உலக கோப்பை போட்டியிலும் வெற்றி பெற்று அசத்தி இருக்கிறார்கள், அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

No related posts.

{ 38 comments… read them below or add one }

நட்புடன் ஜமால் June 22, 2009 at 9:14 AM

20-பாட்டியா

(இம்புட்டுதேன் நமக்கு கிரிக்கெட் தெரியும்)

Reply

குறை ஒன்றும் இல்லை !!! June 22, 2009 at 9:26 AM

கிரிண்ணே.. வணக்கம்.. நல்லா அலசி இருக்கீங்க..

Reply

R.Gopi June 22, 2009 at 9:57 AM

//எனக்கு இந்த இரண்டு அணிகளுமே பிடிக்காது, இலங்கை அணி தற்போதைய சர்ச்சையால், பாக் எப்போதும் சர்ச்சையால், இவர்கள் இருவரும் இறுதி போட்டிக்கு வந்ததுமே எனக்கு செம கடுப்பாகி விட்டது. தற்போதைய கடுப்பு இலங்கை அணி மீது அதிகம் இருந்ததால் பாக் வெற்றி பெற்றதால் கொஞ்சம் அல்ப சந்தோசம் அடைந்து விட்டேன்.//

நாங்க எல்லாம் ரிவர்ஸ்ல நெனச்சு இருந்தோம் "தல"………

//தென் ஆப்ரிக்காவுடன் ஆறுதல் வெற்றி கூட பெறலைங்க.. என்னத்தை சொல்றது!//

ஹலோ என்ன சொல்ல வரீங்க……. தென் ஆப்பிரிக்காவை விட பலம் குறைந்த இங்கிலாந்திடமே தோல்வி அடைந்தோம், அப்புறம் இவங்கள எங்க ஜெயிக்கறது.. .

//இந்த போட்டிகளில் டோனி சோபிக்கவே இல்லை. எனக்கு பெருத்த ஏமாற்றம், ஹிட்டரான இவரை போன்றவர்களை நம்பியே Twenty-20 போட்டிகள் உள்ளன//

தோணி ஹிட் பண்ணி ரெம்ப நாளாச்சு……. தர்ம அடி தர்மலிங்கமா இருந்த அவரு இப்போ எல்லாம் மட்டையடி மன்னாருதான்……. 11 பந்து ஆடி, 5 ரன் எடுத்தாரு…… நெக்ஸ்ட் ……….

கிரி, சீக்கிரம் இவர்கள் (இந்திய அணி) இந்த தோல்வியில் இருந்து பாடம் கற்று கொள்வார்கள் என்று நம்புவோம்………

Reply

Bleachingpowder June 22, 2009 at 10:41 AM

எனக்கென்னவோ ஆயுதம் தந்து உதவியதற்கு பிரதிபலனாக இலங்கை விட்டு கொடுத்ததோன்னு சந்தேகமா இருக்கு கிரி. விளையாட்டுக்கு சொல்லலை. நல்லா பார்த்தா பாக் ஒரு மொக்க டீம், இலங்கை பேட்டிங் பவுலிங் ரெண்டுலையும் தேர்ந்தவர்கள்.

பாக் கிரிக்கட் வாரியம் இப்பொழுது எதையாவது செய்து, உலகின் (கிரிக்கட் விளையாடும் தேசங்களை) கவனத்தை அவர்கள் பக்கம் திரும்பி பார்க்க வைக்க வேண்டும். இறுதி போட்டியில் இலங்கை பாக்கிஸ்தான்னு முடிவான பிறகு, இலங்கையை கொஞ்சம் அடிக்கி வாசிக்க செய்வதில் பாக்கிற்கு ஒன்னும் பெரிய விசியமே இல்லை.

இப்படி எதையாவது சொல்லி திரியை கொளுத்தி போட்டா தானே நமக்கும் நல்லா பொழுது போகும் :)

Reply

R.Gopi June 22, 2009 at 11:02 AM

//இப்படி எதையாவது சொல்லி திரியை கொளுத்தி போட்டா தானே நமக்கும் நல்லா பொழுது போகும் :) //

*********

நல்லா வெளுக்கராருய்யா ப்ளீசிங் பவுடரு…………

Reply

மங்களூர் சிவா June 22, 2009 at 12:12 PM

/
நட்புடன் ஜமால் said…

20-பாட்டியா

(இம்புட்டுதேன் நமக்கு கிரிக்கெட் தெரியும்)
/

ரிப்பீட்டு

Reply

கிரி June 22, 2009 at 4:12 PM

//நட்புடன் ஜமால் said…
(இம்புட்டுதேன் நமக்கு கிரிக்கெட் தெரியும்//

:-) )

========================================================

//குறை ஒன்றும் இல்லை !!! said…
கிரிண்ணே.. வணக்கம்.. நல்லா அலசி இருக்கீங்க//

அலசி தள்ளிட்டமா ;-)

========================================================

//R.Gopi said…
நாங்க எல்லாம் ரிவர்ஸ்ல நெனச்சு இருந்தோம் "தல //

அக்ரம், அன்வர், மியாண்டட் இவங்க இருந்த போது இருந்த கோபம் தற்போது இல்லை

//ஹலோ என்ன சொல்ல வரீங்க……. தென் ஆப்பிரிக்காவை விட பலம் குறைந்த இங்கிலாந்திடமே தோல்வி அடைந்தோம், அப்புறம் இவங்கள எங்க ஜெயிக்கறது.. .//

நான் சொல்ல வரது என்னன்னா! அப்படி தோற்றத்தினால் ஆறுதல் வெற்றியாவது ரோசம் வந்து நமக்கு பெற்று தருவாங்கன்னு நினைத்தேன் அதிலும் சொதப்பிட்டாங்க ..ம்ஹீம்!..இன்னுமாடா எங்களை நம்புறீங்கன்னு கேட்டுட்டாங்க :-) )

//11 பந்து ஆடி, 5 ரன் எடுத்தாரு……//

ஒரே குஷ்டமப்பா!

//கிரி, சீக்கிரம் இவர்கள் (இந்திய அணி) இந்த தோல்வியில் இருந்து பாடம் கற்று கொள்வார்கள் என்று நம்புவோம்//

வேற வழி ;-)

=============================================

// Bleachingpowder said…
இப்படி எதையாவது சொல்லி திரியை கொளுத்தி போட்டா தானே நமக்கும் நல்லா பொழுது போகும் :) //

ஆஹா! நீங்க தானா அது! ;-)

=============================================

// R.Gopi said…
நல்லா வெளுக்கராருய்யா ப்ளீசிங் பவுடரு.//

அருண் ரணகளத்திலையும் கிளுகிளுப்பு பார்க்கிறாரு ;-)

============================================

// மங்களூர் சிவா said…

ரிப்பீட்டு//

ஹி ஹி ஹி

Reply

வாசுகி June 22, 2009 at 7:12 PM

ரொம்ப சந்தோசம். வேற என்னத்தை சொல்ல.

Reply

ஷண்முகப்ரியன் June 22, 2009 at 9:26 PM

கிரிக்கட் எனக்குச் சிறிதும் தொடர்பில்லாத விளையாட்டு.அதனால் உங்களுக்கு ஓட்டு மட்டும் போட்டு விட்டேன்.

Reply

Anoch June 22, 2009 at 10:22 PM

Hi Nice blog,Very interesting post.keep it up.I am giving some adsense tips here,just read them up as well.
Online Free Videos, NET WORKING,Google Adsense System

Reply

காத்தவராயன் June 22, 2009 at 10:52 PM

//எனக்கு இந்த இரண்டு அணிகளுமே பிடிக்காது, இலங்கை அணி தற்போதைய சர்ச்சையால், பாக் எப்போதும் சர்ச்சையால், இவர்கள் இருவரும் இறுதி போட்டிக்கு வந்ததுமே எனக்கு செம கடுப்பாகி விட்டது. தற்போதைய கடுப்பு இலங்கை அணி மீது அதிகம் இருந்ததால் பாக் வெற்றி பெற்றதால் கொஞ்சம் அல்ப சந்தோசம் அடைந்து விட்டேன்.//

1. இலங்கை அணி பிடிக்கலைன்னு சொல்கிறோம்.சரி.

2. இந்தியா இலங்கை சென்று கிரிக்கெட் விளையாடக்கூடாது என்று சொல்கிறோம்.சரி.

3. ஆனா இலங்கைக்காக விளையாடும் முரளிதரன் பற்றி யாரும் வாயை திறக்கமாட்டேன் என்கிறார்கள். அதெப்டி?

4.ஒன்னுமே புரிய மாட்டேங்குது. உங்குத்தமா? எங்குத்தமா? யார நானும் குத்தஞ்சொல்ல… என்று பாட்டு பாடத்தோன்றுகிறது.

Reply

Mahesh June 23, 2009 at 7:13 AM

கிரிக்கெட்டா… விளையாடறாங்களா?

Reply

Tech Shankar June 23, 2009 at 9:31 AM

super post thala

Reply

வால்பையன் June 23, 2009 at 10:24 AM

//இலங்கை அணி தற்போதைய சர்ச்சையால்//

இலங்கை அணிக்கு என்ன சர்ச்சை, அவர்களும் பாக் போல கோச்சை கொன்றுவிட்டார்களா?
இல்லை சூதாடினார்களா?

Reply

வால்பையன் June 23, 2009 at 10:28 AM

ஒரே சொதப்பலா இருக்கே!

பிடிக்கலைங்கிறிங்க, பிறகு திறமசாலிங்க ஜெயிச்சிடாங்கன்றிங்க,

விளையாட்டுக்கும், ரசியலுக்கும் என்ன சம்பந்தம், அப்படி பார்த்தா பிரிட்டிஷ் கூட தான் நம்மளை 200 வருசம் அடிமையா வச்சிருந்தான், இன்னும் நாம அவன் கால நக்கிகிட்டு தானே இருக்கோம்.

அம்ரிக்கான்னு ஒரு நாடே கிடையாது, பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பு பிரதேசம் தான் அது, சுதந்திரம் கொடுத்தாச்சுங்கிற பேர்ல அங்கிருந்து பழங்குடி மக்களை தொரத்திவிட்டுட்டு பிரிட்டிஷ் மக்கள் தான் அமெரிக்காவை ஆள்றாங்க, நாம இன்னும் அமெரிக்காவுக்கு சொம்பு தூக்கிட்டுதானே இருக்கோம்!

Reply

Bleachingpowder June 23, 2009 at 12:14 PM

//வால்பையன் said…
பிடிக்கலைங்கிறிங்க, பிறகு திறமசாலிங்க ஜெயிச்சிடாங்கன்றிங்க,//

ஆமா தல, என் மேனஜர் கூட கொஞ்சம் திறமைசாலி தான் ஆனா எனக்கு அவனை புடிக்காது.

Reply

Bleachingpowder June 23, 2009 at 12:17 PM

//இலங்கை அணி பிடிக்கலைன்னு சொல்கிறோம்.சரி.//
சரியில்ல தப்பு. எனக்கு இலங்கை அணி ரொம்ப பிடிக்கும். ராஜபக்ஷே மேல தான் கோவம், அந்த டீம் என்ன பாவம் பண்ணுச்சு.

Reply

வால்பையன் June 23, 2009 at 12:21 PM

//ஆமா தல, என் மேனஜர் கூட கொஞ்சம் திறமைசாலி தான் ஆனா எனக்கு அவனை புடிக்காது.//

வேலை அற்ற சமயங்களில் அவருடன் பேசியிருக்கிறீர்களா?
உங்கள் நிறுவனத்தில் டூர் உண்டா அன்று பழகியிருக்கிறீர்களா?

கம்யூனிகேஷன் இல்லைனா பெரிய கேப் விழுந்துரும், சும்மாவாச்சுக்கும் ஒரு பிராபளம் சார் நீங்க தான் சொலுசன் சொல்லனும்னு ஒரு பிட்ட போடுங்க! ராசியாகிவிடுவார் உங்ககூட!

Reply

Bleachingpowder June 23, 2009 at 12:22 PM

//விளையாட்டுக்கும், ரசியலுக்கும் என்ன சம்பந்தம், //

லுசு பயலுக. எதாச்சு பிரச்சனைனா உடனே பாக்கிஸ்தான் கூட விளையாட கூடாதுன்னு சொல்லுவாங்க. விளையாடாம இருந்தா எல்லா பிரச்சனையும் சரியாயிடுமா. இன்னைக்கும் என்னோட ஃபேவரைட் பவுலர்னா அது அக்ரம் தான்.

Reply

வால்பையன் June 23, 2009 at 12:23 PM

முன் ஒருதரம் நான் ஒரு நட்சத்திர ஹோட்டலில் வேலை செய்தேன்,அங்கே எனக்கும் பர்சனல்மேனேஜருக்கும் சம்பந்தமே இல்லாமல் ஆகவில்லை,
அவரு பொழுதுபோக்காக ஜோசியம் பார்த்து கொண்டிருந்தார், எனக்கு அதில் நம்பிக்கை இல்லாத போதும் ஒரு பிரேக் சமயத்தில் எனக்கு எல்லாம் சொல்ல மாட்டிங்களா சார்ன்னு கேட்டேன், அந்த ஆள் உளருவதுகெல்லாம் சூப்பர் சார் அப்படியே சொல்றிங்கன்னு பிட்ட போட்டேன், அதன் பிறகு அவரின் ஆஸ்தான உதவியாளர் நான் தான்.

”சர்வைவல் டு ஃபிட்டஸ்ட்” ரொம்ப முக்கியம்!

Reply

Raja June 23, 2009 at 12:25 PM

நமக்கு இறுதி போட்டியில் வந்த ரெண்டு அணிகளையும் பிடிக்கததால் மேட்ச் பார்க்க வில்லை. பாகிஸ்தானின் தீவிரவாத செயல்களை மறந்து விட்டு இலங்கை தமிழர் பிரச்சனையால் பாகிஸ்தான் ஜெயிக்க வேண்டும் என விரும்பியது கொஞசம் வருத்தமாக தான் இருந்தது.

Reply

கிரி June 23, 2009 at 12:28 PM

//வாசுகி said…
ரொம்ப சந்தோசம். வேற என்னத்தை சொல்ல//

:-)

=================================================

// ஷண்முகப்ரியன் said…
கிரிக்கட் எனக்குச் சிறிதும் தொடர்பில்லாத விளையாட்டு.அதனால் உங்களுக்கு ஓட்டு மட்டும் போட்டு விட்டேன்.//

சார்! எனக்கும் அவ்வளவா தெரியாது.. எதோ தெரிந்ததை கொஞ்சம் இப்படி "விளக்கி" இருக்கிறேன் ;-)

=================================================

// Anoch said…
Hi Nice blog,Very interesting post.keep it up.I am giving some adsense tips here,just read them up as well.//

நன்றி

=================================================

// காத்தவராயன் said…
ஒன்னுமே புரிய மாட்டேங்குது. உங்குத்தமா? எங்குத்தமா? யார நானும் குத்தஞ்சொல்ல… என்று பாட்டு பாடத்தோன்றுகிறது//

:-) ) ஒரே குஷ்டமப்பா!

=================================================

// Mahesh said…
கிரிக்கெட்டா… விளையாடறாங்களா//

ஆஹா! நான் பரவாயில்லை போல இருக்கே

=================================================

//தமிழ்நெஞ்சம் said…
super post thala//

இதில் ஏதாவது உள் குத்துண்டா! ;-)

=================================================

// வால்பையன் said…
ஒரே சொதப்பலா இருக்கே!//

ஹி ஹி ஹி

//பிடிக்கலைங்கிறிங்க, பிறகு திறமசாலிங்க ஜெயிச்சிடாங்கன்றிங்க,//

ஆமாங்க இதில் என்ன தவறு இருக்கு.. எனக்கு பிடிக்காதவன் திறமைசாலியா இருக்க கூடாதா!

//விளையாட்டுக்கும், ரசியலுக்கும் என்ன சம்பந்தம்//

சம்பந்தப்படுத்திக்கிட்டேன்!

(இதை நெருப்பு நீலமேகம் ஸ்டைல் ல் படிக்கவும் :-D )

உங்கள் அளவிற்கு நான் இன்னும் பெருந்தன்மையாக பிரித்து பார்க்க தெரியவில்லை அருண். இன்னும் அந்த அளவிற்கு என் மனதை தயார் படுத்தவில்லை.

Reply

கிரி June 23, 2009 at 12:32 PM

// Raja said…
நமக்கு இறுதி போட்டியில் வந்த ரெண்டு அணிகளையும் பிடிக்கததால் மேட்ச் பார்க்க வில்லை. பாகிஸ்தானின் தீவிரவாத செயல்களை மறந்து விட்டு இலங்கை தமிழர் பிரச்சனையால் பாகிஸ்தான் ஜெயிக்க வேண்டும் என விரும்பியது கொஞசம் வருத்தமாக தான் இருந்தது//

விரும்பினேன் என்று கூற முடியாது.

Reply

அதி பிரதாபன் June 23, 2009 at 2:16 PM

அருமை.

வர வர தோனிய எதிர்பக்குறதே கொறஞ்சிபோச்சி. கேப்டன் ஆகுறதுக்கு முன்னாடி தோனி அவுட் ஆகுற வரை மேட்ச் பார்ப்பேன், இப்போலாம் அந்த அளவுக்கு அவர மதிப்பது இல்ல.

Reply

Bleachingpowder June 23, 2009 at 2:46 PM

//வால்பையன் said…
கம்யூனிகேஷன் இல்லைனா பெரிய கேப் விழுந்துரும்//

நீங்க வேற தல, ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்துல ஏழு மணி நேரம் மீட்டிங் தான், என்ன அந்த ஏழு மணி நேரமும் அவரே பேசிட்டு இருப்பாரு ;)

Reply

வால்பையன் June 23, 2009 at 2:48 PM

//ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்துல ஏழு மணி நேரம் மீட்டிங் தான், என்ன அந்த ஏழு மணி நேரமும் அவரே பேசிட்டு இருப்பாரு ;) //

ரொம்ப வசதியா போச்சு!

சுவாரஷ்யமா கேக்குற மாதிரி மண்டைய மட்டும் ஆட்டுங்க!

Reply

கிரி June 23, 2009 at 3:16 PM

// வால்பையன் said…
ரொம்ப வசதியா போச்சு!
சுவாரஷ்யமா கேக்குற மாதிரி மண்டைய மட்டும் ஆட்டுங்க!//

அவ்வ்வ்வ்வ்வ் ஏழு மணி நேரமும் மண்டைய ஆட்டுனா ..மண்டையே கழண்டு வந்துடுமே ;-)

அருண் (வால்பையன்) உங்களுக்கு ரொம்ப சகிப்பு தன்மை ;-)

Reply

வால்பையன் June 23, 2009 at 3:34 PM

//அவ்வ்வ்வ்வ்வ் ஏழு மணி நேரமும் மண்டைய ஆட்டுனா ..மண்டையே கழண்டு வந்துடுமே ;-) //

எதுக்கு அவ்வளவு கஷ்டம், பேசாம கண்ணை மூடி தூங்குங்க, தலை ஆட்டோமேடிக்கா ஆடும்!

Reply

Bleachingpowder June 23, 2009 at 4:13 PM

//வால்பையன் said…
எதுக்கு அவ்வளவு கஷ்டம், பேசாம கண்ணை மூடி தூங்குங்க, தலை ஆட்டோமேடிக்கா ஆடும்!//

நாட்டாமை,இந்த தீர்ப்புக்கு நான் கட்டுபடறேன்

Reply

கிரி June 23, 2009 at 5:12 PM

// Bleachingpowder said…
//வால்பையன் said…
எதுக்கு அவ்வளவு கஷ்டம், பேசாம கண்ணை மூடி தூங்குங்க, தலை ஆட்டோமேடிக்கா ஆடும்!//

நாட்டாமை,இந்த தீர்ப்புக்கு நான் கட்டுபடறேன்//

ஹா ஹா ஹா நானும் கட்டுப்படறேன் …ஆனால் ஒரே குறை அருண் கிட்ட சொம்பு இருந்துதா இல்லையான்னு தெரியல.. சொம்பு இல்லைனா இது தான் நம்ம வசனம்..

தீர்ப்பு செல்லாது செல்லாது! :-) ))

Reply

வால்பையன் June 23, 2009 at 5:20 PM

//அருண் கிட்ட சொம்பு இருந்துதா இல்லையான்னு தெரியல.. சொம்பு இல்லைனா இது தான் நம்ம வசனம்..
தீர்ப்பு செல்லாது செல்லாது! :-) )) //

அதெல்லாம் நிரைய பேருகிட்ட சொம்பு வாங்கி வச்சிருக்கேன்!
(ரெண்டு அருண் இருப்பதால் என்னை வால் என்றே குறிப்பிடவும்-ப்ளீச்சிங் பெயரும் அருண் தான்)

Reply

கிரி June 23, 2009 at 5:28 PM

// வால்பையன் said…
அதெல்லாம் நிரைய பேருகிட்ட சொம்பு வாங்கி வச்சிருக்கேன்!//

ஹி ஹி ஹி இதுல எதோ பலமான உள்குத்து இருக்கும் போல இருக்கே! ;-)

//ரெண்டு அருண் இருப்பதால் என்னை வால் என்றே குறிப்பிடவும்-ப்ளீச்சிங் பெயரும் அருண் தான்//

அதுனால தான் போன பின்னூட்டத்துல ப்ரேக்கட் ல உங்க புனை பெயரை குறிப்பிட்டேன்

நீங்க இரண்டு பெரும் அருண் என்பதை வைத்து மின்னஞ்சலில் ஒரு கலாட்டா நடந்ததே மறக்க முடியுமா! (சஞ்சையோ யாரோ ஒரு பதிவு போட்டாங்களே!)

Reply

வால்பையன் June 23, 2009 at 5:30 PM

//நீங்க இரண்டு பெரும் அருண் என்பதை வைத்து மின்னஞ்சலில் ஒரு கலாட்டா நடந்ததே மறக்க முடியுமா! (சஞ்சையோ யாரோ ஒரு பதிவு போட்டாங்களே!) //

இப்படியெல்லாம் பேசுவதால் என்னையும் ப்ளீச்சிங் பவுடரையும் பிரிக்கமுடியாது,
நாங்கள் இருவரும் ஒருவர் தான்!

Reply

கிரி June 23, 2009 at 5:36 PM

// வால்பையன் said…
//நீங்க இரண்டு பெரும் அருண் என்பதை வைத்து மின்னஞ்சலில் ஒரு கலாட்டா நடந்ததே மறக்க முடியுமா! (சஞ்சையோ யாரோ ஒரு பதிவு போட்டாங்களே!) //

இப்படியெல்லாம் பேசுவதால் என்னையும் ப்ளீச்சிங் பவுடரையும் பிரிக்கமுடியாது,
நாங்கள் இருவரும் ஒருவர் தான்//

அவ்வ்வ்வ்வ்வ் மறுபடியுமா! தாங்காது ..:-((((

Reply

Desperado June 23, 2009 at 6:12 PM

vaal anna, athu
'survival of the fittest'

Reply

வால்பையன் June 23, 2009 at 6:15 PM

//Desperado said…
vaal anna, athu
'survival of the fittest'//

ஹிஹிஹிஹி

நான் இங்கிலீஷ்ல ரொம்பவே வீக்கு தல!

Reply

சிங்கக்குட்டி June 24, 2009 at 5:06 PM

வணக்கம் கிரி, எப்போதும் நான் விரும்பும் ஒரே காருத்து, உலகக்கோப்பையை இந்திய அணி வாங்கவிடாலும் சரி, ஆனால் இந்திய அணியுடன் தோற்ற காரணத்தால் மட்டுமே பாக் அணி உலகக்கோப்பையை இழக்க வேண்டும். அது மட்டுமே "சபாஸ் சரியான போட்டி".

Reply

கிரி June 25, 2009 at 8:11 PM

// வால்பையன் said…
ஹிஹிஹிஹி
நான் இங்கிலீஷ்ல ரொம்பவே வீக்கு தல!//

நம்ம இங்கிலி பீச்சுக்கு பலத்த ஆதரவு இருக்கும் போல இருக்கே ;-)

======================================================

// சிங்கக்குட்டி said…
வணக்கம் கிரி, எப்போதும் நான் விரும்பும் ஒரே காருத்து, உலகக்கோப்பையை இந்திய அணி வாங்கவிடாலும் சரி, ஆனால் இந்திய அணியுடன் தோற்ற காரணத்தால் மட்டுமே பாக் அணி உலகக்கோப்பையை இழக்க வேண்டும். அது மட்டுமே "சபாஸ் சரியான போட்டி".//

வாங்க சிங்கக்குட்டி, நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் வருகைக்கு நன்றி

என்னை விட ரொம்ம்ப நல்ல எண்ணம் போல இருக்கே :-) ))

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed