“பசங்க” – (தாமத) திரைவிமர்சனம்

by கிரி on June 22, 2009

Pasanga பசங்க   (தாமத) திரைவிமர்சனம்


படம் (பசங்க) “வெடி

pasanga2 பசங்க   (தாமத) திரைவிமர்சனம்

Related posts:

  1. “நாடோடிகள்” – திரைவிமர்சனம்
  2. ஒரு தந்தையின் அதிரடி துரத்தல் “Taken” – திரைவிமர்சனம்
  3. ஈரம் & UPO – திரைவிமர்சனம்
  4. அசத்தலான “அயன்” – திரைவிமர்சனம்

{ 20 comments… read them below or add one }

1 நட்புடன் ஜமால் June 22, 2009 at 7:52 AM

இன்னும் பார்க்கலை …

Reply

2 ஜோ/Joe June 22, 2009 at 8:07 AM

ஆகா ஓகோவென்று எல்லோரும் புகழ ,மிகுந்த எதிர்பார்ப்போடு பார்த்து புஸ்ஸான படம் .. பார்க்கலாம் .. மிகச்சிறந்த படம் என்றெல்லாம் சொல்ல முடியாது ..பிரதான பாத்திரத்தில் (ஜீவா) நடிக்கும் சிறுவனுக்கு நடிப்பே வரவில்லை ..பாவம்.

Reply

3 ராமலக்ஷ்மி June 22, 2009 at 10:55 AM

வழக்கமாய் பார்த்த படங்களின் நிறைகுறைகளை அலசிக் காயப் போடும் நீங்கள், நேரமின்மையால் தாமதமாகப் பதிவிட்டிருக்கிறீர்கள்.. ஆனாலும் பரவாயில்லை என வரும் வாசகர்களை இப்படியா போஸ்டரும், க்ளிப்பிங்கும் போட்டு ஏமாற்றுவது:)? நச் என்று உங்கள் பாணியில் நாலுவரியாவது எழுதியிருக்கலாமில்ல?

Reply

4 கிரி June 22, 2009 at 11:32 AM

//நட்புடன் ஜமால் said…
இன்னும் பார்க்கலை .//

கண்டிப்பா பாருங்க ஜமால்

=======================================================

//ஜோ/Joe said…
ஆகா ஓகோவென்று எல்லோரும் புகழ ,மிகுந்த எதிர்பார்ப்போடு பார்த்து புஸ்ஸான படம்//

அப்படியா!!!!

//மிகச்சிறந்த படம் என்றெல்லாம் சொல்ல முடியாது //

அப்படி சொல்லவில்லை என்றாலும் இதை போல நல்ல படங்கள் வரும் போது நாம் பாராட்டவில்லை என்றால் இதை போல எடுக்க எப்படி துணிவார்கள்?

//பிரதான பாத்திரத்தில் (ஜீவா) நடிக்கும் சிறுவனுக்கு நடிப்பே வரவில்லை ..பாவம்.//

ஜோ எனக்கு அப்படி எதுவும் தெரியவில்லை .. நன்றாகவே நடித்து இருந்தான் என்பது என் கருத்து

==========================================================

// ராமலக்ஷ்மி said…
நேரமின்மையால் தாமதமாகப் பதிவிட்டிருக்கிறீர்கள்//

உண்மையில் படம் பார்க்க எனக்கு நேரமில்லை அல்லது போக முடியவில்லை, நேற்று தான் பார்த்தேன்.

// நச் என்று உங்கள் பாணியில் நாலுவரியாவது எழுதியிருக்கலாமில்ல?//

பலர் ஏற்கனவே விமர்சித்து விட்டார்கள்… இந்த படத்தை இன்னும் கொஞ்சம் பேர் பார்த்தால் சந்தோசம் என்று இதை பதிவிட்டேன்.

இதை போல படங்களை ஊக்குவிக்காமல் விட்டுவிட்டு நல்ல படங்கள் வருவதில்லையே! என்று புலம்புவதில் அர்த்தம் இல்லையே என்றே ஒரே காரணத்துக்காகவே இதை தாமதமாக இருந்தாலும் பதிவிட்டேன்.

நன்றி ராமலக்ஷ்மி உரிமையுடன் கேட்டதற்கு

Reply

5 R.Gopi June 22, 2009 at 12:35 PM

"பசங்க" – படத்துல பின்றாங்க……..

அதுக்கு லேட்டானாலும் லேட்டஸ்ட் விமர்சனம் – பின்றீங்க……….

Reply

6 காத்தவராயன் June 22, 2009 at 10:41 PM

படம் இந்த வாரம்தான் பெங்களூரில் ரிலீஸ் ஆச்சு, தியேட்டரில் பார்க்கவேண்டும் என்பதால் இத்தனைநாட்கள் விமர்சனம் கூட படிக்காமல் காத்திருந்தேன். காத்திருந்தது வீண் போகவில்லை நல்ல படம்.

படம் முடிந்து வீட்டுற்கு வந்த பின்னர் யோசித்து பார்த்தேன்…. இந்த கதையில் விஜய், விஷால் போன்றவர்கள் நடித்திருந்தால் எப்படியிருக்கும் என்று…

அக்னிநட்சத்திரம், நேருக்கு நேர் படங்கள் மாதிரி இருந்திருக்கும்.

Reply

7 கிரி June 23, 2009 at 8:02 AM

//R.Gopi said…
"பசங்க" – படத்துல பின்றாங்க//

கலக்கிட்டானுக … இயக்குனரையே இந்த பாராட்டு சென்றடைகிறது

=======================================================

//காத்தவராயன் said…
படம் இந்த வாரம்தான் பெங்களூரில் ரிலீஸ் ஆச்சு, தியேட்டரில் பார்க்கவேண்டும் என்பதால் இத்தனைநாட்கள் விமர்சனம் கூட படிக்காமல் காத்திருந்தேன். காத்திருந்தது வீண் போகவில்லை //

பசங்கள மாதிரியே உங்களையும் பாராட்டனும் திருட்டு DVD யில் பார்க்காமல் திரை அரங்கில் பார்த்ததற்கு. நானும் இதே காரணத்திற்காக தான் இது வரை பார்க்காமல் இருந்தேன்.

//அக்னிநட்சத்திரம், நேருக்கு நேர் படங்கள் மாதிரி இருந்திருக்கும்.//

கண்டிப்பாக ஆனால் இயக்குனர் கூறியபடி நடித்து இருந்தால்

Reply

8 ஜோ/Joe June 23, 2009 at 8:46 AM

//அப்படி சொல்லவில்லை என்றாலும் இதை போல நல்ல படங்கள் வரும் போது நாம் பாராட்டவில்லை என்றால் இதை போல எடுக்க எப்படி துணிவார்கள்?//

கிரி,
பாராட்டப்பட வேண்டிய முயற்சி என்பதில் சந்தேகம் இல்லை ..அதனால் தான் இந்த படத்தை பார்த்தேன் (வெளியாகும் படங்களில் வெகுசில படங்களையே பார்க்கும் பழக்கம் உள்ளவன் நான்).

இரு பசங்களுடைய தந்தையர் பாத்திரங்களில் நடித்தவர்களின் நடிப்பு ,பாத்திரப்படைப்பு ,ஜீவாவின் முறைப்பெண்ணாக வரும் சிறுமியின் நடிப்பு ,ஓரளவு அந்த காதல் கதை அனைத்தும் அருமை ..ஆனால் மிக முக்கியமான பசங்க சம்பந்தபட்ட காட்சிகள் எனக்கு அவ்வளவாக ஒட்டவில்லை ..ஜீவா பாத்திரத்தில் நடித்த பையனின் தோற்றமும் நடிப்பும் அந்த காதாபாத்திரத்துக்கு ஒத்துவரவில்லை என்பது என் கருத்து ..இருவர் பாத்திரங்களையும் மாற்றிக் கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என நினைக்கிறேன் .. ஜீவாவின் தாதா தனமும் ,கோபமும் ஒட்டவே இல்லை ..பசங்க சம்பந்தபட்ட காட்சிகளை இன்னும் கொஞ்சம் குறும்பு கலந்து மேலும் சுவாரஸ்யப்படுத்தியிருக்கலாம் (அழகி படத்தில் வரும் காட்சிகள் எத்தனை சுவாரஸ்யம்) .

அதிக எதிர்பாத்தது தான் என் ஏமாற்றத்துக்கு காரணம் என நினைக்கிறேன் .மற்றபடி ஆதரிக்க வேண்டிய படம் என்பதில் சந்தேகம் இல்லை.

Reply

9 குறை ஒன்றும் இல்லை !!! June 23, 2009 at 8:54 AM

அய்யோ.. எனக்கு எழுத்து எதுவும் தெரியமாட்டேங்குதே.. என் கண்ணு அதுக்குள்ள நொல்லையா போச்சா…

Reply

10 கிரி June 23, 2009 at 1:01 PM

//ஜோ/Joe said…
ஜீவா பாத்திரத்தில் நடித்த பையனின் தோற்றமும் நடிப்பும் அந்த காதாபாத்திரத்துக்கு ஒத்துவரவில்லை என்பது என் கருத்து//

உண்மை தான் ஜோ, நீங்கள் கூறுவதை ஏற்று கொள்கிறேன். அந்த பையனின் முகம் முரட்டு தனம் இல்லாதது காரணமாக இருக்கலாம்.

//.இருவர் பாத்திரங்களையும் மாற்றிக் கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்//

ஆனால் அன்புவின் முகமும் அப்படி தான் இருந்தது.

//பசங்க சம்பந்தபட்ட காட்சிகளை இன்னும் கொஞ்சம் குறும்பு கலந்து மேலும் சுவாரஸ்யப்படுத்தியிருக்கலாம் //

எனக்கு அஞ்சலி பட சிறுவர்களை மேல்மட்டத்திலும், பசங்க சிறுவர்களை நடுத்தரத்திலும், அழகி படத்தில் உள்ள சிறுவர்களை அதற்க்கு கீழேயும் காட்டி உள்ளதாக தோன்றுகிறது, எனவே அதற்கான குறும்புகளும் சேட்டைகளும் இயல்பாக உள்ளன. இதில் நாம் எந்த விதத்தில் நம் பள்ளி அனுபவங்களை அனுபவித்து இருக்கிறோம் என்பதை வைத்து நம் விருப்பங்களும் மாறலாம் எனபது என் கருத்து.

மேல் தட்டு மக்களுக்கு அஞ்சலி பிடித்து இருக்கலாம், அதை நாம் தவறு என்று கூற முடியாது. இது ஒவ்வொருவர் வாழ்ந்த சூழ்நிலையை பொறுத்த ரசனை என்றே கருதுகிறேன்.

//அதிக எதிர்பாத்தது தான் என் ஏமாற்றத்துக்கு காரணம் என நினைக்கிறேன் //

இருக்கலாம்! நானும் அதிகம் எதிர்பார்த்தேன், ஆனால் என் எதிர்பார்ப்புகள் பொய்க்கவில்லை. ஒருவேளை உங்களை விட குறைவாக எதிர்பார்த்து இருப்பேனோ என்னவோ! ;-)

//மற்றபடி ஆதரிக்க வேண்டிய படம் என்பதில் சந்தேகம் இல்லை.//

நீங்கள் இப்படி நினைத்து இருப்பீர்கள் என்பதிலும் எனக்கு சந்தேகம் இல்லை :-)

==============================================

// குறை ஒன்றும் இல்லை !!! said…
அய்யோ.. எனக்கு எழுத்து எதுவும் தெரியமாட்டேங்குதே.. என் கண்ணு அதுக்குள்ள நொல்லையா போச்சா…//

என்ன கொடுமை இது! அப்படி எதுவும் பிரச்சனை இருப்பதாக எனக்கு தோன்றவில்லையே!

குறை ஒன்றும் இல்லை என்ற உங்களுக்கே குறையா! :-)

Reply

11 Dr.எம்.கே.முருகானந்தன் June 23, 2009 at 3:57 PM

பாரக்க ஆரம்பித்துள்ளேன். உங்கள் பதிவு அலசிப் பார்க்க உதவும்.

Reply

12 உடன்பிறப்பு June 23, 2009 at 4:33 PM

நம்ம விமர்சனத்தை படிச்சீங்களா கிரி

http://kalaignarkarunanidhi.blogspot.com/2009/06/blog-post_11.html

Reply

13 கிரி June 23, 2009 at 5:15 PM

//டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said…
பாரக்க ஆரம்பித்துள்ளேன். உங்கள் பதிவு அலசிப் பார்க்க உதவும்//

நன்றி

=================================================

//உடன்பிறப்பு said…
நம்ம விமர்சனத்தை படிச்சீங்களா கிரி//

இல்லைங்க உடன் பிறப்பு, இணையம் வருவதே ரொம்ப குறைந்து விட்டது.. கண்டிப்பா படிக்கிறேன் நல்ல விதமா தானே எழுதி இருக்கீங்க! ;-)

Reply

14 உடன்பிறப்பு June 23, 2009 at 5:29 PM

//கண்டிப்பா படிக்கிறேன் நல்ல விதமா தானே எழுதி இருக்கீங்க! ;-) //

என்ன இப்படி கேட்டுவிட்டீங்க, போய் பாருங்க

Reply

15 குறை ஒன்றும் இல்லை !!! June 24, 2009 at 1:27 AM

அண்ணே!! நான் சொன்னது என்னால விமர்சனத்த படிக்க முடியலன்னு.. அப்புறம் தான் தெறிஞ்சது நீங்க எழுதவே இல்லேன்னு!!!
You too???????

Reply

16 கிரி June 24, 2009 at 8:14 AM

ஹி ஹி ஹி இப்படி ஒரு அப்பாவி புள்ளையா!

Reply

17 வடுவூர் குமார் June 24, 2009 at 8:32 AM

நேற்று தான் சதயம் திரையரங்கில் பார்த்தேன்.நன்றாக இருந்தது.படம் வெற்றியடைய பிரபல முகங்கள் தேவையில்லை என்பதை உணரவைத்த படம்.

Reply

18 ஜீவன்பென்னி June 24, 2009 at 5:14 PM

intha padaththula varra mathiri naanum kai thattalukkaha padichchirukken. naan padichcha palliyil mudal moondru rank vanguna rank card kodukkurappo kai thatta soluvanga. Intha padaththula chinna chinna tha niraiya visayangal ennai kadanthu poi irukku. mukkiyama naan schoola leadera irunthappo classla pesuna A.V (adanga villai) nu eluthi mela square, cube nnu potturuven. miga arumaiyana padam.

Reply

19 மு.இரா June 24, 2009 at 11:00 PM

அனைவருக்கும் வணக்கம், பசங்க படத்தை பத்தி நானும் சொல்ல விரும்புறேன். தமிழ் படம் பார்த்து வெறுத்து ஷாலிவுட் பக்கம் ஒதுங்கிட்ட என்னை போண்றவர்களுக்கு, இந்த படம் ஆறுதல்…

அழகான காதல்…
இயல்பான குடும்ப வாழ்க்கை…
பள்ளி கூட நினைவுகள்…
அனைத்தும் நலம்.

ஆனால், போட்டுதான் ஆகணும்…
கொஞ்சம் அதிகமாயிடுச்சோ… சொல்லிதான் ஆகணும்.

Reply

20 கிரி June 25, 2009 at 8:19 PM

// உடன்பிறப்பு said…
//கண்டிப்பா படிக்கிறேன் நல்ல விதமா தானே எழுதி இருக்கீங்க! ;-) //

என்ன இப்படி கேட்டுவிட்டீங்க, போய் பாருங்க//

பார்த்துட்டோம்ல :-)

====================================================

// வடுவூர் குமார் said…
நேற்று தான் சதயம் திரையரங்கில் பார்த்தேன்.நன்றாக இருந்தது.படம் வெற்றியடைய பிரபல முகங்கள் தேவையில்லை என்பதை உணரவைத்த படம்.//

சென்னையா! எப்ப போனீங்க!!!

சத்யம் ல கலக்கலா இருக்குமே படம் பார்க்க..:-)

====================================================

// ஜீவன்பென்னி said…
intha padaththula varra mathiri naanum kai thattalukkaha padichchirukken. naan padichcha palliyil mudal moondru rank vanguna rank card kodukkurappo kai thatta soluvanga. Intha padaththula chinna chinna tha niraiya visayangal ennai kadanthu poi irukku. mukkiyama naan schoola leadera irunthappo classla pesuna A.V (adanga villai) nu eluthi mela square, cube nnu potturuven. miga arumaiyana padam.//

ஜீவன்பென்னி உங்களை மாதியே எனக்கும் பல அனுபவங்கள் அவை எல்லாம் திரையில் பார்க்கும் போது அளவிட முடியாத சந்தோசங்கள். மனம் விட்டு சிரித்தேன் பசங்க குறும்புகளை பார்த்து.

உங்கள் முதல் வருகைக்கு நன்றி

====================================================

// மு.இரா said…
அனைவருக்கும் வணக்கம், பசங்க படத்தை பத்தி நானும் சொல்ல விரும்புறேன். தமிழ் படம் பார்த்து வெறுத்து ஷாலிவுட் பக்கம் ஒதுங்கிட்ட என்னை போண்றவர்களுக்கு, இந்த படம் ஆறுதல்…//

ஐய்யயோ! இப்படி ஒரேயடியா! இப்படி தமிழ் திரை உலகை புறக்கணித்து விடாதீங்க.. அப்பப்ப நல்ல படம் வந்துட்டு தான் இருக்கு… என்ன எண்ணிக்கை தான் குறைவு,

//அழகான காதல்…
இயல்பான குடும்ப வாழ்க்கை…
பள்ளி கூட நினைவுகள்…
அனைத்தும் நலம்.//

படம் அடி தூளு! .. உங்கள் முதல் வருகைக்கு நன்றி மு.இரா

Reply

Leave a Comment

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)

Previous post:

Next post: