யாஹூ தனது வலைதள சேவையான Yahoo! 360* யை வரும் ஜூலை 13 ம் தேதியோடு மூடப்போகிறது (நம்முடைய ஃப்ரொபைலை மேம்படுத்த என்று கூறியுள்ளது).
நான் முதன் முதலாக (2005) வலைப்பதிவில் என் எண்ணங்களை பதிய ஆரம்பிக்க எனக்கு ஒரு ஆரம்பமாக இருந்தது இது தான். கூகிள் ன் ப்ளாகர் தளமும் நீண்ட வருடங்களாக இந்த சேவையில் இருந்தாலும் தொடக்கத்தில் எனக்கு இது பற்றி தெரியவில்லை. எனவே படங்களை யாஹூ வலைதளத்தில் சேமித்து அதற்க்கு என் கருத்துக்களை கூறி வந்தேன்.
எனக்கு தமிழில் எழுதுவது எப்படி என்று தெரியாததால் தங்லிஷ் ல் எழுதி வந்தேன். கடந்த வருடம் இணையத்தில் அலைந்து கொண்டு இருக்கும் போது ப்ளாகர் வலைத்தளத்தை கண்டதால் யாஹூ வலைதளத்தில் எழுதுவதை நிறுத்தி விட்டு அதை விட எளிதான ப்ளாகர் சேவைக்கு மாறி விட்டேன்.
யாஹூ தற்போது கூகிள், மைக்ரோசாப்ட் மற்றும் மற்ற போட்டியாளர்களின் போட்டியை சமாளிக்க முடியாமல் தனது பல சேவைகளை நிறுத்தி விட்டது. இதில் பிரபலமான Yahoo! Photos (தற்போது Flickr), Geocities மற்றும் Brief case அடங்கும்.
தற்போது பலரும் யாஹூ மின்னஞ்சலில் இருந்து கூகிள் க்கு மாறி வருகிறார்கள். எனக்கு யாஹூ மின்னஞ்சலில் உள்ள folder option ரொம்ப பிடித்து உள்ளதால் இன்னும் கூகிள் க்கு மாறாமல் இதையே பயன்படுத்தி வருகிறேன், இருப்பினும் கூகிள் யாஹூ வை விட மின்னஞ்சலில் சிறப்பான சேவையை தருகிறது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
தற்போது தனது பிரபல சேவையான Yahoo! 360* Blog யை நிறுத்த போவதாக அறிவித்து இருப்பது இதை பயன்படுத்திக்கொண்டு இருக்கும் ஆயிரக்கணக்கான பயனாளர்களுக்கு மிகவும் அதிர்ச்சியாகவே இருக்கும். எனக்கும் இதை பயன்படுத்திக்கொண்டு இருந்தவன் என்ற முறையில் ரொம்ப வருத்தம்.
தனது வலைதள சேவையை நிறுத்தினாலும் அதில் இருந்த தகவல்களை யாஹூ வில் உள்ள நம்முடைய ஃப்ரொபைலுக்கு (இங்கே மாற்றிக்கொண்டால் இதுவும் ஒரு சிறிய வலைப்பதிவு போலவே தெரிகிறது, Yahoo 360* Blog ல் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதில் பெரும்பாலானவற்றை இதில் செய்யலாம், இருந்தாலும் அதில் இருந்த கவர்ச்சி இவ்வாறு அனைத்தையும் நமது ப்ரொபைலில் ஒருங்கிணைக்கும் போது இதில் இல்லை) மாற்றி கொள்ள எளிதான வழியை ஏற்படுத்தி தந்து இருக்கிறது, ஒரே ஒரு சொடுக்கு மூலம் நம்முடைய பதிவுகளை சில நிமிடங்களில் மாற்றி விடலாம். இதை நாம் விருப்பப்பட்டால் import செய்து வோர்ட் பிரஸ் போன்ற வலை தளங்களுக்கு export செய்து கொள்ளலாம் இல்லை என்றால் தரவிறக்கம் செய்து நம் கணினியில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
மேற்கூறிய அனைத்திற்கும் சிரமமில்லாத வழி முறைகளை யாஹூ ஏற்படுத்தி வைத்துள்ளது (சில கட்டுப்பாடுகளுடன்), சில சொடுக்குகளில் இதை நாம் செய்து விடலாம்.
முதன் முதலில் வலைப்பதிவு எழுத வேண்டும் என்ற ஆசையை எனக்குள் ஏற்படுத்திய Yahoo! 360* க்கு என் பிரியா விடை
No related posts.


{ 15 comments… read them below or add one }
நான் தான் 100 வதுஃபாலோயர்!
இதுக்கெல்லாம் வருந்துவீங்க ..
நன்றி கிரி.
//நல்லதந்தி said…
//
நான் தான் 100 வதுஃபாலோயர்!
நன்றி நல்ல தந்தி
========================================================
//நட்புடன் ஜமால் on 7:26 PM, May 31, 2009 said…
இதுக்கெல்லாம் வருந்துவீங்க //
எனக்கு ரொம்ப இளகிய மனசுங்க
========================================================
//பாலா… said…
நன்றி கிரி.//
அவசியமானவர்களுக்கு நல்ல தகவல்களைத் தந்துள்ளீர்கள்.
//எனக்கு யாஹூ மின்னஞ்சலில் உள்ள folder option ரொம்ப பிடித்து உள்ளதால் இன்னும் கூகிள் க்கு மாறாமல் இதையே பயன்படுத்தி வருகிறேன்//
நானும் அப்படியே:)!
யாருடைய ஓட்டும் தங்களுக்குத் தேவையில்லை.
யாருடைய பின்னூட்டமும் தேவையில்லை.
படைப்பின் வலிமையை மட்டும் நம்பும்
“வாரம்” இணைய இதழ் (லிங்க் க்ளிக்கி இதழைப் படிக்கவும்)
வெளிவந்துவிட்டது. தங்கள் ஆதரவைத் தாரீர்!!!
இப்பத்தான் சூட்கேஸ எடுத்துட்டு போனாங்க. இதையும் மூடப்போறாங்களா? மெயிலாவது இருக்குமா?
நானும் 360ல் இரண்டு, மூன்று!!! பக்கங்கள் வைத்திருந்தேன்.
//ராமலக்ஷ்மி on 6:19 AM, June 01, 2009 said…
அவசியமானவர்களுக்கு நல்ல தகவல்களைத் தந்துள்ளீர்கள்.//
நன்றி ராமலக்ஷ்மி
//நானும் அப்படியே:)//
================================================================
வாரம் இணைய இதழுக்கு நன்றி
================================================================
//☼ வெயிலான் on 12:34 PM, June 01, 2009 said…
இப்பத்தான் சூட்கேஸ எடுத்துட்டு போனாங்க. இதையும் மூடப்போறாங்களா? மெயிலாவது இருக்குமா?//
இதை மூடினாலும் முற்றிலும் என்று கூற முடியாது நமது யாஹூ ஃப்ரோபைலில் பயன்படுத்தலாம்..அனைத்தையும் ஒரே இடத்தில் வைத்துக்கொள்ள இப்படி செய்ததாக கூறி உள்ளது..ஆனால் இதை நீங்கள் ஜூலை 13 க்குள் மாற்றிகொள்ளாவிட்டால் அதில் உள்ள அனைத்தும் அழிந்து விடும்
//நானும் 360ல் இரண்டு, மூன்று!!! பக்கங்கள் வைத்திருந்தேன்//
பதிவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை.வந்ததுக்கு ஆஞ்செலினா அக்கா ஒரு லுக்கு விட்டது:)
//முதன் முதலில் வலைப்பதிவு எழுத வேண்டும் என்ற ஆசையை எனக்குள் ஏற்படுத்திய Yahoo! 360* க்கு என் பிரியா விடை
//
இப்படி ஒண்ணு இயங்கியதே தற்போது தான் தெரியும். இறக்கும் முன் அறிந்து கொள் என்பார்கள், அது இறக்கின்ற எதற்கும் பொருந்தும் போல
அருமையான கட்டுரை..
நீங்க ஒரு நடமாடும் நூலகம் பாஸ்!
அப்படினா என்னான்னே எனக்கு தெரியாதே!
இருந்தாலும் பிரியாவுக்கு விடை கொடுக்க நான் ரெடி!
தகவலுக்கு மிக்க நன்றி.
//ராஜ நடராஜன் said…
பதிவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை.வந்ததுக்கு ஆஞ்செலினா அக்கா ஒரு லுக்கு விட்டது:)//
====================================================
//கோவி.கண்ணன் said…
//
இப்படி ஒண்ணு இயங்கியதே தற்போது தான் தெரியும். இறக்கும் முன் அறிந்து கொள் என்பார்கள், அது இறக்கின்ற எதற்கும் பொருந்தும் போல
கோவி கண்ணன் உதாரண கண்ணனா இருக்கீங்க
=====================================================
//கலையரசன் said…
நீங்க ஒரு நடமாடும் நூலகம் பாஸ்!//
கலையரசன் என் இந்த கொலைவெறி!
எதா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம் அவ்வ்வ்வ்வ்வ்
=====================================================
//வால்பையன் said…
இருந்தாலும் பிரியாவுக்கு விடை கொடுக்க நான் ரெடி!//
விடை கொடுத்து என்ன பயன்..ப்ரியாவை வரவேற்றால் உண்டு
=====================================================
//பிரேம்ஜி said…
தகவலுக்கு மிக்க நன்றி.//
பிரேம்ஜி க்கே நாங்க தகவல் கொடுத்துட்டோம்ல..எப்படீஈஈஈ
கிரி உங்கள் Yahoo 360 முன்பே பார்த்து இருக்கிறேன். நல்ல தொகுப்பு. அதை மூடுகிறார்கள் என்பதை இப்போதுதான் தெரிந்து கொண்டேன். தகவலுக்கு நண்றி.