இலங்கை போரில் உலகநாடுகள் தலையிட “CNN” வாக்கெடுப்பில் பங்கு கொள்ளுங்கள்

by கிரி on May 12, 2009

ஈழத்தமிழர்கள் விசயத்தில் (இலங்கை போரில்) சர்வதேசம் பங்கெடுக்க வேண்டுமா! வேண்டாமா என்று CNN கருத்துக்கணிப்பு நடத்துகிறது. இதில் பலரும் கலந்து கொண்டு தங்கள் வாக்கை சமர்ப்பித்து வருகிறார்கள். இதில் இது சம்பந்தப்பட்ட கருத்துக்களையும் தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால் தற்போது பார்வையாளர்களின் எண்ணிக்கையும் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்ததால் (due to heavy traffic) தற்போது பின்னூட்ட பெட்டியை மூடி விட்டார்கள்.

cnnvote இலங்கை போரில் உலகநாடுகள் தலையிட CNN வாக்கெடுப்பில் பங்கு கொள்ளுங்கள்

இதில் இரு தரப்பும் சரிக்கு சரி உள்ளது, தற்போது (12-05-09 21.00 IST) ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான வாக்களிப்பு முன்னிலையில் உள்ளது (52% ஆம் 48% இல்லை).

ஒரு நாட்டின் பிரச்சனையில் மற்ற நாடுகள் தலையிடுவது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது இல்லை என்றாலும், அங்கே நடப்பது போரில்லை அது இனப்படுகொலை என்பது பெரும்பாலானவர்கள் அறிந்தது. நேற்று முன்தினம் கூட 2000 பொது மக்கள் இலங்கை அரசு அறிவித்த பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்த போது கொல்லப்பட்டு இருக்கிறார்கள் இதில் பலர் பெண்களும் குழந்தைகளும் ஆவார்கள். இதற்கு ஐ நா உட்பட பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பத்திரிக்கை சுதந்திரம் முழுவதுமாக முடக்கப்பட்டுள்ளது, எனவே மனிதாபிமான அடிப்படையில் சிந்தியுங்கள்.

இந்த வாக்கெடுப்பு எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை, ஆனால் இதில் நாம் ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக வாக்களிப்பதால் எந்த வித நஷ்டத்தையும் அடைந்து விடப்போவதில்லை. இன்னும் எவ்வளோ நேரம் அல்லது நாட்கள் இந்த வாக்கெடுப்பு நடைபெறும் என்று தெரியவில்லை, எனவே முடிந்த வரை விரைவாக ஒட்டு போட்டு விடவும்.

உங்கள் வாக்கை CNN தளத்தில் இங்கே சென்று பதியுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு அதிகபட்சம் 1 நிமிடத்திற்கு மேல் ஆகாது. இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் கொண்டு சேருங்கள்.

ஈழ தமிழர்களுக்கு உங்களால் ஆன இந்த சிறு உதவியை செய்யுங்கள்.

No related posts.

{ 21 comments… read them below or add one }

ராஜ நடராஜன் May 12, 2009 at 10:22 PM

பதிவுக்கு நன்றி.

(இவ்வளவு சீக்கிரமாகவா?கையா!கணினியா:)

Reply

வால்பையன் May 12, 2009 at 10:24 PM

அண்ணே காலையிலேயே மெயில் வந்துருச்சு!
நீங்க லேட்டு!

Reply

ராஜ நடராஜன் May 12, 2009 at 10:29 PM

//இந்த வாக்கெடுப்பு எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை, ஆனால் இதில் நாம் ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக வாக்களிப்பதால் எந்த வித நஷ்டத்தையும் அடைந்து விடப்போவதில்லை. இன்னும் எவ்வளோ நேரம் அல்லது நாட்கள் இந்த வாக்கெடுப்பு நடைபெறும் என்று தெரியவில்லை, எனவே முடிந்த வரை விரைவாக ஒட்டு போட்டு விடவும்.//

அப்படியில்லை.CNN அதிகார பூர்வமாக அங்கீகரிக்கப்படாத வெள்ளை மாளிகையின் சுதந்திரமான ஊதுகுழல்.”Whatever happens in whitehouse will end in CNN.” சொன்னது ஒபாமா என நினைக்கிறேன்.

நான் வாக்களித்த நேரம் வரை இலங்கைப் பிரச்சினையில் அனைத்து நாடுகளும் தலையிட வேண்டியது அவசியம்தானா கேள்விக்கு ஆம் என்ற பதில் 53%.

பின்னூட்டம் மூடப் பட்டு விட்டதாக சொல்லி விட்டார்கள்.

Reply

வானம்பாடிகள் May 13, 2009 at 1:03 AM

அளிச்சாச்சி. நன்றி.

Reply

ராமலக்ஷ்மி May 13, 2009 at 6:30 AM

ஆம் எனப் போட்டாயிற்று.

இப்போது ஆம் 82%-ஆகவும், இல்லை 18%-ஆகவும்.

Reply

தமிழ் பிரியன் May 13, 2009 at 8:24 AM

ஓட்டுப் போட்டாச்சுங்க கிரி! பதிவு போட்டதுக்கு மிக்க நன்றி!

Reply

ஷண்முகப்ரியன் May 13, 2009 at 8:41 AM

பயனுள்ள பதிவு கிரி.நன்றி.
நான் ஓட்டுப் போடும் போது 20% வேண்டாம் என்று வாக்களித்திருந்தார்கள்.அவர்களை மனித இனத்திலிருந்து தள்ளி வைக்கலாமா, வேண்டாமா என்று யாராவது வாக்கெடுப்பு நடத்தினால் எவ்வளவு பயனுள்ள தேர்தலாக இருக்கும் அது?
பரிணாம்த்தில் பின்தங்கி இருக்கும் அந்தக் கொடிய விலங்குகளைக் காட்டில் கொண்டு போய் விட்டு,விட்டு வரலாமே.

Reply

Kajanthan May 13, 2009 at 10:45 AM

ஷண்முகப்ரியன் அந்த 20% வோட்டும் சிங்களவர்களிடமிருந்து வந்தது.
இது தான் அவர்கள் தமது நண்பர்களுக்கு அனுப்பிய emails.

Go to this web site poll

http://www.cnn.com/IDesk

PLEASE VOTE “NO” !!!!

PLEASE HURRY

Pass the word around

Reply

வாசுகி May 13, 2009 at 12:35 PM

பதிவுக்கு நன்றி.

Reply

♠புதுவை சிவா♠ May 13, 2009 at 1:00 PM

பதிவு செய்தமைக்கு நன்றி கிரி

Reply

Ramanna May 13, 2009 at 1:46 PM

நல்ல பதிவு. உடனே என் வாக்கை சமர்ப்பித்து விட்டேன்.

Reply

ராஜ நடராஜன் May 13, 2009 at 2:14 PM

காலை வந்தவுடன் உங்க கடைக்கும் சி.என்.என் க்கும் எத்தனை கூட்டம் சேர்ந்திருக்குன்னு பார்த்ததுதான் முதல் வேலை.பின்னூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டாலும் ஓட்டுகள் நமக்கு சாதக % தான்.
பதிவுக்கு மீண்டும் ஒரு நன்றி.

Reply

பாசகி May 13, 2009 at 3:06 PM

கிரி-ஜி நலமா? ஓட்டு போட்டாச்சு, தற்போதய நிலவரம் 77% ஆம், 23% இல்லை. Hope for the best.

Reply

கலையரசன் May 14, 2009 at 11:30 AM

ஓட்டு போட்டாச்சி தல..
இப்ப 77%-ஆம், 23%-இல்லை!
இப்பதிவை பதிந்து,
வழிகாட்டியமைக்கு நன்றி.
http://www.kalakalkalai.blogspot.com

Reply

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). May 14, 2009 at 6:07 PM

ஓட்டு போட்டாச்சுங்க..
தற்போதய நிலவரம் 77% ஆம், 23% இல்லை…

அப்படியே என்னோட நண்பர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பியாச்சுங்க

Reply

arun May 15, 2009 at 5:57 PM

Innaikuthaan mail kidaichuthu. yes endru ottu pottachu. Nallathu nadantha sari.

saritraarun

Reply

Tamil May 15, 2009 at 8:59 PM

போட்டாச்சுங்க…

Reply

Muhammad Ismail .H, PHD, May 15, 2009 at 10:32 PM

@ அன்பின் கிரி,

உங்களின் தற்போதைய பதிவு ' இலங்கை போரில் உலகநாடுகள் தலையிட "CNN" வாக்கெடுப்பில் பங்கு கொள்ளுங்கள் ' ஒரு அருமையான ஒரு 'சளக், புளக்' தான். கை கொடுங்க. முதல் பட்டத்தை நீங்கள் தான் வாங்குகிறீர்கள். காரணம் நீங்கள் குறிப்பிட்ட படி அந்த தளம் முடக்கப்படவில்லை. இன்னும் இயக்கத்தில் தான் உள்ளது. அதில் நானே IP change & Cookies Clear செய்து 10 ஓட்டு போட்டேன். அதுக்கு மேல கடுப்பா ஆகிட்டேன். இப்ப Yes 77% & No 23%. இதே வேலையை ஒரு சிங்கள நாதாரி செய்ய எவ்வளவு நேரம் ஆகும். இதையெல்லாம் நம்பி எப்படி ??? எனக்கு ஓண்ணியும் பிரியல : -)))) இதற்கு பதிலாக அந்த இலங்கையிலிருந்து உயிர் பிழைத்து ஓடோடி நம் நாடு வரும் அந்த மனிதர்களுக்கு கிடைக்கும் கேவலமான வரவேற்பை பற்றி எழுதலாம். அவர்களுக்கு இங்கே தரப்படும் 'சிவப்பு கம்பள வரவேற்பை' பற்றி புளாக்கலாம். ஓ அது உங்களால் முடியாதே ! நீங்க தான் மேசை செய்தியாளர் ஆயிற்றே. எங்களைப் போன்ற களப்பணியாளர்கள் இல்லையே. அதுவும் இங்கே உள்ள அரசாங்கம் உங்கள் வரிப்பணத்தில் தானே இயங்குகிறது. அப்ப என்ன பண்ணலாம் ? சகோதர பாசம் 'புளாக்குல' மட்டும் தானா? அவ்வ்வ்வ்

கிரி பதிவின் சுட்டி – CNN வாக்கெடுப்பில் பங்கு கொள்ளுங்கள்

Reply

Muhammad Ismail .H, PHD, May 15, 2009 at 10:48 PM

@ ராஜ நடராஜன்,

// பதிவுக்கு நன்றி.

(இவ்வளவு சீக்கிரமாகவா?கையா!கணினியா:) //

'மேல் மாடியை' உபயோகப்படுத்தாமல் வெறும் Ctl+C & Ctl+V மூலம் மின்னஞ்சலை பதிவு போட எவ்வளவு நேரம் ஆகும் ?

——————————-

@ மற்ற எல்லாருக்கும்,

முதலில் இந்த Cyber Bullying பண்ணுறத நிறுத்தி தொலைங்க. எந்த செய்தியையும் ஆராய்ந்து பாருங்க. பிறகு அதை பதிவாக்குறதைப்பற்றி முடிவெடுங்க. என்ன புரிஞ்சுதா ?

with care & love,

Muhammad Ismail .H, PHD,

@ வால்பையன்,

// அண்ணே காலையிலேயே மெயில் வந்துருச்சு!
நீங்க லேட்டு! //

இப்படியா பப்ளிக்ல போட்டு கொடுக்குறது. அவர் மெயில் பார்க்கும் போது தான் பார்த்து பதிவிட முடியும்.

——————————-

என்னக் கொடுமையிது. இத்தனை ஓட்டு போட்டும் இன்னும் Yes 77% & No 23% தானா? அப்ப என்னத்துக்கு இந்த ஒட்டளிப்பு. ஒரு வேளை CNN ராஜபக்ஷவிடம் பொட்டி வாங்கி விட்டதா?

பிறகு மேலுள்ள பின்னூட்டம் 49-O என்னும் கேலிக்கூத்தான சட்டப் பிரிவு" http://dondu.blogspot.com/2009/05/49-o.html கானது. இனிமேல் பதிவு போடுவதற்கு முன் மேல்மாடியை கொஞ்சம் உபயோகிக்கவும்.

Reply

கிரி May 17, 2009 at 2:56 AM

//Muhammad Ismail .H, PHD said…
@ அன்பின் கிரி,//

???????

//காரணம் நீங்கள் குறிப்பிட்ட படி அந்த தளம் முடக்கப்படவில்லை.இன்னும் இயக்கத்தில் தான் உள்ளது//

பதிவை முதலில் ஒழுங்காக படிக்கவும்..இப்படி அரைகுறையாக படித்து விட்டு இப்படி பினாத்தி கொண்டு இருக்க வேண்டாம்.

பின்னூட்ட பெட்டியை தான் மூடி உள்ளதாக கூறி இருக்கிறேன் தளத்தை அல்ல.

//இதையெல்லாம் நம்பி எப்படி ??? எனக்கு ஓண்ணியும் பிரியல : -))))//

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆண்டவா! ஐயா! இஸ்மாயில் அது எங்களுக்கும் தெரியும்..

அதனால தான் "இந்த வாக்கெடுப்பு எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை, ஆனால் இதில் நாம் ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக வாக்களிப்பதால் எந்த வித நஷ்டத்தையும் அடைந்து விடப்போவதில்லை" அப்படின்னு கூறி இருக்கிறேன்..

டேய்! நாராயணா இந்த இஸ்மாயில் தொல்லை தாங்கமுடியலடா!

//'மேல் மாடியை' உபயோகப்படுத்தாமல் வெறும் Ctl+C & Ctl+V மூலம் மின்னஞ்சலை பதிவு போட எவ்வளவு நேரம் ஆகும் ?//

:-) )))))

அவர் எதுக்கு கூறுகிறார் என்று தெரியுமா? அவர் மற்றும் நண்பர்கள் கேட்டுக் கொண்டதாலையே இந்த பதிவை எழுதினேன், அதற்காக தான் அந்த ஒரு பதிலை கூறி இருக்கிறார்.

என்ன ஏது என்று எதுவும் தெரியாமல் இப்படி அரைகுறையாக பார்த்து(படித்து) பேசிக்கொண்டு இருக்க வேண்டாம்

//கிரி பதிவின் சுட்டி – CNN வாக்கெடுப்பில் பங்கு கொள்ளுங்கள்//

என்னோட பதிவிலயே இருந்து கொண்டு என் பதிவிற்கே சுட்டியா!!!!!! :-) ))

இன்னொரு பதிவில் நீங்கள் போட்ட பின்னூட்டத்தை எடுத்து இந்த வரியை கூட நீக்காமல் Ctl+C & Ctl+V செய்யும் நீங்கள் எந்த "மாடியை" உபயோகித்து எழுதுகிறீர்கள்..

//இப்படியா பப்ளிக்ல போட்டு கொடுக்குறது. அவர் மெயில் பார்க்கும் போது தான் பார்த்து பதிவிட முடியும்//

அட! ராமாமாமாமாமா….. எனக்கு ஏன் இந்த சோதனை!

//இனிமேல் பதிவு போடுவதற்கு முன் மேல்மாடியை கொஞ்சம் உபயோகிக்கவும்.//

இப்ப இந்த வரியை பார்த்தா உங்களுக்கே சிரிப்பா இல்ல :-) ))))))))

என்னோட "மேல்மாடியே" சரி இல்லைன்னு சொன்னா……. ஹி ஹி ஹி

Reply

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ November 2, 2009 at 7:15 PM

அற்புதமான படைப்புகள் வாழ்த்துக்கள் !

நண்பர்களே இதுவரை திருடப்படாதா உங்கள் குட்டி இதயங்களையும் சத்தம் இல்லாமல் திருடி செல்ல விரைவில் வருகிறது இந்த சங்கரின் அதிரடி படைப்பான கரை தொடாத கனவுகள் உண்மை சம்பவங்கள் ஒரு தொடர்கதையாக ,,,,
http://wwwrasigancom.blogspot.com/
shankarp071@gmail.com

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed