ஏப்ரல் ஃபூல் செய்வதுன்னா பலருக்கு ரொம்ப குஷி, அதுவும் சின்ன குழந்தைக செய்யும் ஏப்ரல் ஃபூல் பார்த்தா ரொம்ப காமெடியா இருக்கும். என்னோட அக்கா பையன் இம்சை தாங்காது சும்மா…மாமா! அங்கே பாருங்க என்பான் .பார்த்தா ஏப்ரல் ஃபூல் என்பான், டேய்! அங்கே என்னடா இருக்குன்னா ஹி ஹி ஹி னு சிரிப்பான். குழந்தைக செய்யும் ஏப்ரல் ஃபூல் ஒரு சுகமான அனுபவம்..அதுவும் நாம் உண்மையாகவே ஏமாந்து விட்டால் அவர்கள் அடையும் சந்தோசத்திற்கு அளவே இருக்காது..அதை அனைவரிடமும் கூறி சிரித்துக்கொண்டே இருப்பார்கள்.
இந்த பெரியவர்கள் ஒரு சிலர் ஏப்ரல் ஃபூல் செய்கிறேன் பேர்வழி என்று ஏடாகூடமாக செய்து விடுவார்கள். விளையாட்டு வினையாகி விடுமளவிற்கு. ஏப்ரல் ஃபூல் அன்று நடந்த ஒரு சோக நிகழ்வையும் நகைச்சுவை நிகழ்வையும் கூறுகிறேன்.
என்னோட தாத்தா காங்கிரஸ் ல் அப்போது பெரிய ஆள் [அப்ப காங்கிரஸ் னு கூற பெருமையா இருந்தது இப்ப...
] காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தவர், அவரது பெயர் K.P.V.கிரி, அவரது நினைவாகவே எனக்கும் அதே பெயர் வைத்தார்கள். அந்த காலத்தில் மிகவும் மரியாதைக்குரிய கட்சியாக இருந்தது தற்போது கோஸ்டி பூசல் மற்றும் சமீப சர்ச்சைகள் என்று எனக்கு வெறுப்பாகி விட்டது. சரி விடுங்க பிரச்சனை காங்கிரஸ் அல்ல..
அரசியலில் இருந்தாலே அவர்களை சுற்றி ஒரு பெரும் கூட்டம் இருக்கும், அதுவுமில்லாமல் என் தாத்தா மரியாதைக்குரியவராக இருந்ததால் பல பெரிய தலைகள் தொடர்பு என்று பரப்பரப்பாக இருந்த நேரம். அந்த நேரத்தில் என் தாத்தா மாரடைப்பு வந்து இறந்து விட்டார், அவர் இறந்தது ஏப்ரல் முதல் தேதி. திடீர் என்று நடந்ததால் யாராலும் அதிர்ச்சியை தாங்க முடியவில்லை. கட்சியினர், உறவினர் மற்றும் அவரது நண்பர்கள் பலருக்கும் இதை தெரிவிக்க அழைத்த போது என் அப்பா, என் குடும்பத்தினர் மற்றும் என் வீட்டில் வேலை செய்த வேலைக்காரர்கள் அனைவரும் வாங்கிய திட்டை இன்றும் நினைவு கூறுவார்கள்.
இவர்கள் அனைவருக்கும் தொலைபேசியில் என் தாத்தா இறந்ததாக கூறிய போது அனைவரும் ஏப்ரல் ஃபூல் செய்வதாக நினைத்து அனைவரையும் திட்டி விட்டார்கள், உங்களுக்கு எதுஎதுல தான் விளையாடுவதுன்னு விவஸ்த்தை இல்லையா என்று. உடல் நிலை சரி இல்லாமல் இருந்து இருந்தாலாவது நம்பி இருப்பார்கள் மாரடைப்பு என்பதால் நல்லா இருந்தவர் எப்படி போய் இருக்க முடியும், இவர்கள் தான் முட்டாள் தனமாக விளையாடி கொண்டு இருக்கிறார்கள் என்று அனைவரும் கொதித்து விட்டார்கள். பிறகு உண்மை புரிந்து அனைவரும் தாமதமாகவே வந்தார்கள். இன்றும் என் தாத்தா நினைவு நாளின் போது இதை நினைவு கூறுவார்கள். எனக்கு இன்று வரை ஏப்ரல் ஃபூல் என்றால் இந்த சம்பவம் தான் நினைவிற்கு வரும்.
இது நகைச்சுவை ஏப்ரல் ஃபூல்..
நான் சென்னையில் நண்பர்களுடன் 12 வருடம் ஒரு வீடு எடுத்து தங்கி இருந்தேன், அது ஒரு கனாக்காலம், மறக்க முடியாத நாட்கள், எத்தனை வேலை கடுமையாக இருந்தாலும் அறைக்கு வந்தால் நண்பர்களுடன் இரவு 1 மணி வரை அரட்டை அடித்து விட்டு, இல்லை எவனாவது வசமா சிக்கினால் அவனை ஒரு வழி ஆக்கி விட்டு தான் தூங்குவோம். நான் எப்போதும் உஷாராக இருப்பேன் ஒரு நாள் எக்கச்சக்கமாக மாட்டி விட்டேன், என்னை செம ஓட்டு ஓட்டிட்டானுக. .அடப்பாவிகளா! இப்படி நம்மை நொக்கி எடுத்துட்டானுகளே என்று கறுவி கொண்டு என்னைக்காவது மாட்டாமையா போய் விடுவானுக என்று சமயம் பார்த்துக்கொண்டு இருந்தேன்.. சரியா ஏப்ரல் ம் வந்தது., என் அறையில் நான்கு பேர் ஒரே அலுவலகம், நான் எப்போதும் அலுவலகத்திற்கு சரியான நேரத்தில் சென்று விடுவேன் மற்ற பசங்க (ஹி ஹி இதுல இருத்தன் இதை படிச்சுட்டு இருப்பான்) நான் கிளம்பும் நேரத்தில் தான் கண்ணே முழிப்பானுக அதிலையும் ஒருத்தன் உலகமகா “சுறுசுறுப்பு”
நான் சீக்கிரம் எழுந்து குளித்து தயார் ஆகி விட்டு எல்லோரோட கை கடிகாரம் மற்றும் சுவர் கடிகாரம் எல்லாவற்றிலையும் நேரத்தை கூடுதலாக மாற்றி வைத்து விட்டேன், டிவி ல செய்தி பார்த்து நேரத்தை கண்டு பிடிச்சுடுவாங்கன்னு கேபிள் யையும் பிடுங்கி விட்டுட்டேன், கேபிள் பவர் கட் மாதிரி. மவனே அன்னைக்கு பார்க்கணுமே 9 மணிக்கெல்லாம்!!! அலறி அடிச்சுட்டு வரானுக. வரும் போதே ஏமாந்தது தெரிந்து விட்டது வந்து என்னை ஒரு கொலை வெறியோட பார்த்தானுக பாருங்க.. டேய்! கிரி இப்ப தாண்ட மனசு குளிரிந்துச்சுனு ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டேன்.
என்னா! ஒரு வில்லத்தனம்னு சொல்றீங்களா! ஹி ஹி
No related posts.


{ 19 comments… read them below or add one }
ஆஹா…. பசுந்தோல் போர்த்திகிட்டு திரியறது நீங்கதானா??? ?:))))
தலைவா…… ஞாயிற்றுக்கிழமை பிறக்கப்போவது ஜூன் மாசம், ஏப்ரல் மாசமுன்னு நெனச்சிக்கிட்டு பதிவுபோட்டு இருக்கீங்க !!!!!!!!!!!!! நீங்க பயன்படுத்தும் காலண்டர யாரோ மாத்தி வச்சி உங்களுக்கே ஆப்பு வச்சிட்டாங்கன்னு நெனைக்கிறேன், யாருன்னு கண்டுபிடிச்சி உசாரா இருந்துக்கோங்க…
//Vijay said…
ஆஹா…. பசுந்தோல் போர்த்திகிட்டு திரியறது நீங்கதானா??? ?:))))//
=================================================================
//காத்தவராயன் said…
தலைவா…… ஞாயிற்றுக்கிழமை பிறக்கப்போவது ஜூன் மாசம், ஏப்ரல் மாசமுன்னு நெனச்சிக்கிட்டு பதிவுபோட்டு இருக்கீங்க !!!!!!!!!!!!! நீங்க பயன்படுத்தும் காலண்டர யாரோ மாத்தி வச்சி உங்களுக்கே ஆப்பு வச்சிட்டாங்கன்னு நெனைக்கிறேன், யாருன்னு கண்டுபிடிச்சி உசாரா இருந்துக்கோங்க…//
ஹா ஹா ஹா
இது நடந்தது இப்ப இல்லைங்க ..லாங் எகோ சோ லாங் எகோ
தாத்தா விஷயம் சங்கடத்திற்குரியது
டைம் சேஞ்ச் பண்ணியது சூப்பர் ஐடியா
ஹா ஹா ஹா
முதல் பத்தி அழகு.
கடிகார முள்ளைக் கூட்டி வைத்து நல்லாத்தான் கலவரமூட்டியிருக்கிறீர்கள்:))!
தாத்தாவின் மறைவை ஒட்டிய சம்பவம் வருந்தத்தக்கது. ஆனால் அந்தக் காலம் போல இப்போ ஏப்ரல் ஃபூல் ஆக்குவதற்கெல்லாம் யாரும் மெனக்கிடுவது போல் தெரியவில்லை.
பாலா, ரிஷான், சரவணா குமரன், ராமலக்ஷ்மி, வாசுகி மற்றும் டொன் லீ வருகைக்கு நன்றி
@ரிஷான்
வாங்க ரிஷான் ரொம்ப நாளைக்கு பிறகு வந்து இருக்கீங்க
@ராமலக்ஷ்மி
“முதல் பத்தி அழகு”
குழந்தைகள் பற்றிய செய்திகள் என்றாலே ஒரு தனி சிறப்பு தான்
“கடிகார முள்ளைக் கூட்டி வைத்து நல்லாத்தான் கலவரமூட்டியிருக்கிறீர்கள்:))!”
“அந்தக் காலம் போல இப்போ ஏப்ரல் ஃபூல் ஆக்குவதற்கெல்லாம் யாரும் மெனக்கிடுவது போல் தெரியவில்லை.”
அப்படி தான் தெரிகிறது
கிரி,
என் பாட்டி இறந்த தேதி 1999 ஏப்ரல் 1. அன்று எங்களுக்கு நீங்கள் சொன்ன அனுபவமே நேர்ந்தது. பல இடங்களுக்கு நான் நேரில் சென்று சொல்ல வேண்டிய சூழலும் ஏற்பட்டது.
1998 ஏப்ரல் 1, கல்லூரி இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருந்த போது நடத்திய கூத்து மிக அருமையானது. கல்லூரியில் படிக்கும் போது பேஜர் வைத்திருந்தேன், என் பேஜரில் செய்திகள் அவ்வப்போது வரும். அப்படி செய்தியாக வருவது போல் ஒரு முக்கிய பாஜக தலைவர் விபத்தில் அடிபட்டு ஆபத்தான நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று செய்தி அனுப்பும்படி செய்துவிட்டு, கல்லூரியில் என்னுடன் படித்த 5 பாஜக அனுதாபிகளை ஏமாற்றிவிட்டேன். காலேஜ கட் அடிக்கவே அடிக்காத சின்சியர் சிகாமணிகள் அன்று கட் அடித்துவிட்டு வீட்டுக்குப் போயி ரேடியோவையும், டிவியையும் படுத்துன பாடு இருக்கே. அவரு நட்சத்திரம் என்னான்னு கேட்டுக்கிட்டு இருந்தானுங்க, அவருக்காக அர்சனை பண்ண.
eanna rascal sinna pulla thanama eirukku
என்ன ராஸ்கல் சின்ன புள்ள தனமா ஈர்க்
//ஜோசப் பால்ராஜ் 9 said…
கிரி,
என் பாட்டி இறந்த தேதி 1999 ஏப்ரல் 1. அன்று எங்களுக்கு நீங்கள் சொன்ன அனுபவமே நேர்ந்தது. பல இடங்களுக்கு நான் நேரில் சென்று சொல்ல வேண்டிய சூழலும் ஏற்பட்டது//
எனக்கு போலவேவா!
//ஒரு முக்கிய பாஜக தலைவர் விபத்தில் அடிபட்டு ஆபத்தான நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று செய்தி அனுப்பும்படி செய்துவிட்டு, கல்லூரியில் என்னுடன் படித்த 5 பாஜக அனுதாபிகளை ஏமாற்றிவிட்டேன்//
ஐயையோ! பீதிய கிளப்புறீங்க..
==========================================================
//anand said…
eanna rascal sinna pulla thanama eirukku//
/
டேய்! கிரி இப்ப தாண்ட மனசு குளிரிந்துச்சுனு ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டேன்.
/
ஹா ஹா
மறுபக்கம்??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
tamil commenta paste panna mudiyala giri
ee raa
நல்ல மனிதர்கள் இறப்பு பெரும்பாலும் நம்ப முடியாததாகவும், திடீரென்றும் நிகழ்ந்து விடுகிறது….
இரண்டாவது பத்தியில் நீங்கள் செய்திருக்கும் குறும்பு சூப்பர்… நான் கூட பாலிடெக்னிக் படிக்கும்போது, ஒரு முறை (பைனல் இயர் ) மார்ச் கடைசி தேதிகளில் ஒரு டுபாக்கூர் கம்பெனி நேமில் நானே ஒரு லெட்டர் பேட் தயாரித்து, கிளாஸ் நண்பர்களுக்கு ‘ நீங்கள் ஷார்ட் லிஸ்டட்’ என்று இன்டர்வியு லெட்டர் அனுப்பி விட்டேன்.. ஒரு ஐந்தாறு பேர் மலர் ஹாஸ்பிடல் அருகில் ரோட்டில் லோ லோ என்று அலைந்தார்கள்…இதில் காமெடி, ஒரோருவரும் வேலை கிடைத்த பின் மற்றவர்களுக்கு சொல்லிக் கொள்ளலாம் என்று நைசாக வேறு வந்து இருந்தார்கள். அப்புறம் என்ன ஒரே அர்ச்சனைதான்..எனக்கு
அன்புடன்
ஈ ரா
//மங்களூர் சிவா said…
/
டேய்! கிரி இப்ப தாண்ட மனசு குளிரிந்துச்சுனு ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டேன்.
/
ஹா ஹா
மறுபக்கம்??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!//
வாங்க சிவா
=============================================================
//ஈ ரா said…
tamil commenta paste panna mudiyala giri//
அது வழக்கமாக ஏற்படும் ஒன்று தான் ..இரு முறை post comment பட்டனை அழுத்தினால் சரியாகி விடும்..
//நல்ல மனிதர்கள் இறப்பு பெரும்பாலும் நம்ப முடியாததாகவும், திடீரென்றும் நிகழ்ந்து விடுகிறது//
//ஒரோருவரும் வேலை கிடைத்த பின் மற்றவர்களுக்கு சொல்லிக் கொள்ளலாம் என்று நைசாக வேறு வந்து இருந்தார்கள்//