படித்தவர்கள் ஓட்டு போடுவதில்லை என்று பலமான குற்றச்சாட்டு நிலவி வருகிறது, அது முற்றிலும் உண்மையும் கூட. மும்பையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ஓட்டு போட விழிப்புணர்வு குறிப்பாக படித்தவர்களிடையே (கஷ்டம்டா சாமி) ஏற்படுத்த பல பிரச்சாரங்கள் செய்யப்பட்டன, அப்படி இருந்தும் மிகக்குறைவான வாக்குகளே பதியப்பட்டன
அது என்னமோ ஓட்டு போடுறதுன்னா அவ்வளோ கஷ்டமா இருக்கு நம்மில் பலருக்கு
இந்த முறை சிங்கையில் இருப்பதால் என்னால் ஓட்டு போட முடியவில்லை, மிக மிக வருத்தமாக உணருகிறேன் ஓட்டு போட முடியவில்லையே என்று அதுவும் இதை போல ஈழ தமிழர் பிரச்சனை நடைபெறும் போது. நான் ஓட்டு போடவில்லையே தவிர இது வரை ஓட்டே போடாமல் இருந்த, போடுவதை பற்றி எண்ணாமல் இருந்த என் நண்பர்கள் பலருக்கு தொலைபேசியில் அழைத்து வற்புறுத்தி ஓட்டு போட சம்மதிக்க வைத்துள்ளேன். இதனால் கொஞ்சம் நிம்மதி ஆனது (ஓட்டு போடுவாங்கன்னு நம்புறேன்)
நாம் நம் வாக்கை பயன்படுத்த தவறுவதால் நம்முடைய வாக்கை இன்னொருவர் பயன்படுத்தி கள்ள ஓட்டு போடுகிறார். நமக்கு இருக்கும் பல உரிமைகள் பறிக்கப்படும் இவ்வேளையில் இருக்கும் இந்த உரிமையையாவது (கடமையையாவது) சரி வர பயன்படுத்துவோம், செய்வோம். நாம் ஓட்டு போடாமல் இருந்து விட்டு இந்த கட்சி ஆட்சிக்கு வந்து விட்டதே அவர்கள் தோற்று விட்டார்களே என்று புலம்புவதில் எந்த பயனும் இல்லை.
தேர்தலின் போது விடுமுறை கண்டிப்பாக விடுவார்கள், அந்த சமயத்தில் உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து சென்றால் எந்த வித சலிப்பும் ஏற்படாது. ஓட்டு இது வரை போடாதவர்கள் கவனத்திற்கு…. ஒரு முறை வாக்களித்து பாருங்க அதில் கிடைக்கும் ஒரு திருப்தி, மன நிறைவு, பெருமையே தனி (ஓட்டு போட்டதுக்கு அப்புறம் அரசியல்வாதிகள் செய்யும் செயலை பார்த்து மனநிறைவு ஆக முடியாது அது வேற விஷயம்
). கட்சி பல உருப்படாதது தான் என்ன செய்வது? இருப்பதில் சுமாரான நபரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் நமக்கு. உங்களுக்கு எந்த கட்சியும் பிடிக்கவில்லை என்றால் 49′O முறையையாவது பயன்படுத்துங்கள், எனவே விதண்டாவாதம் பேசாமல் தயவு செய்து ஓட்டு போடுங்கள்.
கலக்கலா ஓட்டு போட்டவர்களை பார்ப்போம்
இந்த படத்தில் இருக்கும் தாத்தா எதோ பென்சன் வாங்க போறாருன்னு நினைக்காதீங்க..தன்னோட 100 வது வயதில் (நீங்க நம்பித்தான் ஆகணும்) தன்னோட ஜனநாயக கடமையை ஆற்ற சென்று கொண்டு இருக்கிறார். இந்த தள்ளாத வயதிலும் தனக்கு கொடுக்கப்பட்ட உரிமைய சரிவர பயன்படுத்தணும் என்று நினைக்கிற இவரை போன்றவர்களை பார்த்தும் கூட நாம் ஓட்டு போடவில்லை என்றால்..நாம் வாய் கிழிய வசனம் பேசி என்ன பயன்?
இந்த போட்டோ ல இருக்கிறவருக்கு ஒரு விழாவே நடத்தலாம் அந்தளவிற்கு தூள் கிளப்பி இருக்காரு.. அப்படி என்னப்பா செய்து விட்டாருன்னு தானே கேட்கறீங்க! விஷயத்தை கேளுங்க
நம்ம அனைவருக்கும் தெரியும் காஷ்மீர் ல தீவிரவாதிகள் செய்யும் அட்டகாசம், அதுவும் தேர்தல் சமயத்தில் சொல்லவே வேண்டாம். மக்களையும் வேட்பாளர்களையும் மிரட்டி கொண்டே இருப்பார்கள். இதை போல தருணத்தில் நடந்த தேர்தலின் போது தீவிரவாதிகள் ஒரு அறிவிப்பு செய்தாங்க…. என்னன்னு! அதாவது யாரு வந்து மொதல்ல ஓட்டு போடுறாங்களோ அவங்களுக்கு சங்கு தான் என்று….போட்டு தள்ளிடுவோம் னு சொல்லிட்டாங்க. ஓட்டு போடக்கூடாதுன்னு சொல்வதை விட இப்படி சொன்னா அதற்க்கு பலம் அதிகம். எதுக்குடா வம்பு! முதல்ல போய் நம்மை ஏதாவது செய்து விட்டால் என்று ஒரு பயலும் வர மாட்டான் என்று முடிவு செய்து இப்படி ஐடியா செய்து அறிவிப்பு வெளியிட்டார்கள்.
அந்த சமயத்தில் வந்தவர் தான் இவரு.. செம தில்லா வந்து யாருக்கும் பயப்படாம ஓட்டு போட்டாரு.. அதன் பிறகு இவரை ஏதாவது செய்தார்களா என்பது பற்றி தெரியவில்லை.
நமக்கு இவங்க அளவிற்கு எந்த கஷ்டமும் இல்லை, மிரட்டலும் இல்லை அப்படி இருக்கும் போது வரிசையில் நிற்க சோம்பேறித்தனப்பட்டு ஓட்டு போடாம இருந்தால் அதை விட கேவலமான செயல் இல்லை என்று நினைக்கிறேன். அதனால் சோம்பேறித்தனமா இருக்காம டிவி ல வர படங்களை பார்த்துட்டு மட்டை ஆகாம, இணையத்தை நோண்டிட்டு இருக்காம தயவு செய்து ஓட்டு போடுங்க என்று உங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
தேர்தல் கொசுறு
இந்த வீட்டுக்காரரு குசும்பு பிடிச்ச ஆளா இருப்பாரு போல இருக்கு
))
No related posts.





{ 22 comments… read them below or add one }
மும்பையில் மட்டுமல்ல பெங்களூரிலும் கூட இம்முறை ஓட்டுக்கள் 50 சதவிகிதமே பதிவாயின. ஓட்டுப் போட வேண்டியது நம் கடமை. சரியான நேரத்தில் நல்ல பதிவு.
தேர்தல் கொசுறு அருமை:)!
“அவர்கள் வருகிறார்கள்”னு நாஞ்சில் நாடன் விகடன்ல எழுதினாரு.
“இவர்கள் வருகிறார்கள்”னு நீங்க எழுதிட்டீங்க !!
அருமை…
ஜனநாயகத்தில் நீங்களும் இருக்கிறீர்கள் என்று நிரூபிப்பதற்குக் கிடைக்கும் ஒரே வாய்ப்பே தேர்தலில் வாக்களிப்பதுதான்.முறையான காரணமின்றி வாக்களிக்காமல் இருப்பது இறந்து போனதுக்குச் சமம்.நல்ல நேரத்தில் நல்ல பதிவு,கிரி.நன்றி
தேவையான நல்ல இடுகை. நன்றி.
கடைசி புகைப்படம் அமர்க்களம்… ஹா ஹா ஹா
நல்ல பதிவு
//ராமலக்ஷ்மி said…
மும்பையில் மட்டுமல்ல பெங்களூரிலும் கூட இம்முறை ஓட்டுக்கள் 50 சதவிகிதமே பதிவாயின. ஓட்டுப் போட வேண்டியது நம் கடமை.//
ஓட்டு சதவீதம் எப்போது 90% எட்டுகிறதோ அப்போது தான் ஒரு நல்ல மாற்றத்தை அரசியலில் எதிர்பார்க்கலாம்.
//தேர்தல் கொசுறு அருமை:)!//
=================================================================
//Mahesh said…
“அவர்கள் வருகிறார்கள்”னு நாஞ்சில் நாடன் விகடன்ல எழுதினாரு.
“இவர்கள் வருகிறார்கள்”னு நீங்க எழுதிட்டீங்க !!
அருமை//
நன்றி மகேஷ்
=================================================================
//ஷண்முகப்ரியன் said…
ஜனநாயகத்தில் நீங்களும் இருக்கிறீர்கள் என்று நிரூபிப்பதற்குக் கிடைக்கும் ஒரே வாய்ப்பே தேர்தலில் வாக்களிப்பதுதான்//
நல்லா நறுக்குன்னு சொன்னீங்க சார்
//முறையான காரணமின்றி வாக்களிக்காமல் இருப்பது இறந்து போனதுக்குச் சமம்//
நம்மவங்க ஓட்டு போடுவதை எதோ இழிவான விஷயம் மாதிரி கருதுறாங்க. ஓட்டு போட்டு என்ன ஆகப்போகிறது என்று கூறியே எதுவும் மாற்றம் வருவதற்குண்டான வாய்ப்பை அடியோடு அழித்து விடுகிறார்கள்.
==========================================================
//பாலா… said…
தேவையான நல்ல இடுகை. நன்றி.//
நன்றி பாலா
===========================================================
//சரவணகுமரன் said…
கடைசி புகைப்படம் அமர்க்களம்… ஹா ஹா ஹா//
//நல்ல பதிவு//
நன்றி சரவணகுமரன்
படிச்சவங்களுக்கு தானே இந்த பதிவு நான் அப்பீட் ஆகிகிறேன்!
ஓட்டு போட்டுடுவேன் தோழா!
நான் ஓட்டு போட்டுடறேன். ஆளை விடுங்க
“…கட்சி பல உருப்படாதது தான் என்ன செய்வது? இருப்பதில் சுமாரான நபரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் நமக்கு. உங்களுக்கு எந்த கட்சியும் பிடிக்கவில்லை என்றால் 49′O முறையையாவது பயன்படுத்துங்கள்..”
- தேர்தல் புறக்கணிப்பை விட கடைசி ஆப்ஷன் பெஸ்ட்… நம் இருப்பையும் எதிர்ப்பையும் தெரிவிக்க இது நல்ல வழிதான்.
இந்த முறை ஓட்டு டூர் அடிக்கணுமுன்னுதான் ஏற்பாடுகள் செய்திருந்தேன்.பயபுள்ளக அத்தனை பேரும் சொதப்பிட்டாங்க.அதனால இங்கே பாராளுமன்றத்துக்கு பெரியவருக்கும் அசெம்பிளிக்கு துணிச்சலான முதல் ஓட்டு காஷ்மீர் சகோதரனுக்கும் போட்டுக்கறேன்.
இந்த முறை சிங்கையில் இருப்பதால் என்னால் ஓட்டு போட முடியவில்லை, மிக மிக வருத்தமாக உணருகிறேன்
நீங்க சொல்றது சரி… எங்க தொகுதியில் நிற்கும் எல்லோரும் திருடனுங்க… யாருக்கு ஒட்டு போடனும் சொல்லுங்க… ஜனநாயகம் பணநாயகமாக மாறி பல வருசமாச்சு… என்னை பொறுத்தவரையில் இந்தியா ஆங்கிலேயரிடம் இருந்து அரசியல்வாதிகள் கைகளுக்கு மாறியிருக்கு அவ்வளவு தான். ஓட்டு போடனும்…
20 ஆயிரம் செலவு பண்ணி ஒரு பால்காரர் தேர்தலில் நிக்கிறார். அவர் எந்த ஆசையி்ல் நிக்கிறார்னு தெரியலை. நல்ல மனுசன். தோத்தாலும் பரவாயில்லை. என் ஓட்டாவது அவரது எண்ணிக்கையை உயர்த்தட்டும். நியாயத்திற்கும் நாலு பேர் இருக்காங்கன்னு உலகத்துக்கு தெரியட்டும்.
அருமையான இடுகை. நன்றி.
அதெல்லாம் சரியண்ணே. ஆனா ஒவ்வொரு வாட்டியும் ஓட்டுப் போட்டு ஏதாவது ஒரு திருடனைத் தேர்ந்தெடுத்த பின்னால் வருந்தி, 49 ஓ போட்டும் பயன்படாமல் போறதைப் பார்த்தா வருத்தமா இருக்கண்ணே.
//வால்பையன் said…
படிச்சவங்களுக்கு தானே இந்த பதிவு நான் அப்பீட் ஆகிகிறேன்!
ஓட்டு போட்டுடுவேன் தோழா!//
நன்றி அருண்
==================================================================
//வெயிலான் said…
//
நான் ஓட்டு போட்டுடறேன். ஆளை விடுங்க
நான் எங்கங்க உங்களை பிடித்து வைத்து இருக்கிறேன்
==================================================================
//Vaanathin Keezhe said…
தேர்தல் புறக்கணிப்பை விட கடைசி ஆப்ஷன் பெஸ்ட்… நம் இருப்பையும் எதிர்ப்பையும் தெரிவிக்க இது நல்ல வழிதான்.//
வழிமொழிகிறேன்
=============================================================
//ராஜ நடராஜன் said…
இந்த முறை ஓட்டு டூர் அடிக்கணுமுன்னுதான் ஏற்பாடுகள் செய்திருந்தேன்.பயபுள்ளக அத்தனை பேரும் சொதப்பிட்டாங்க//
அடடா! பரவாயில்லை விடுங்க.. என்ன மாதிரி செய்துடுங்க
==============================================================
//நெல்லைத்தமிழ் said…
எங்க தொகுதியில் நிற்கும் எல்லோரும் திருடனுங்க… யாருக்கு ஒட்டு போடனும் சொல்லுங்க… ஜனநாயகம் பணநாயகமாக மாறி பல வருசமாச்சு… என்னை பொறுத்தவரையில் இந்தியா ஆங்கிலேயரிடம் இருந்து அரசியல்வாதிகள் கைகளுக்கு மாறியிருக்கு அவ்வளவு தான். ஓட்டு போடனும்…//
நீங்கள் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடியது தான் என்றாலும் நமக்கு வேறு வழி இல்லை. நாம் குறைந்த பட்சம் 49 O முறையையாவது பயன்படுத்தினால் தான் அதன் மீது ஒரு விழிப்பு வரும். எல்லோருமே இப்படி விரக்தியாகி புறக்கணித்தால் நமக்கு எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்காது..காலத்திற்கும் இப்படியே பேசிட்டு இருக்க வேண்டியது தான். எதுவுமே இல்லாமல் இருக்க குறைந்த பட்ச வாய்ப்பை பயன்படுத்த நினைப்பதில் தவறில்லையே
//20 ஆயிரம் செலவு பண்ணி ஒரு பால்காரர் தேர்தலில் நிக்கிறார். அவர் எந்த ஆசையி்ல் நிக்கிறார்னு தெரியலை. நல்ல மனுசன். தோத்தாலும் பரவாயில்லை. என் ஓட்டாவது அவரது எண்ணிக்கையை உயர்த்தட்டும். நியாயத்திற்கும் நாலு பேர் இருக்காங்கன்னு உலகத்துக்கு தெரியட்டும்.//
இதை போல பலர் நிற்கிறார்கள் நமக்கு தான் தெரிவதில்லை..எல்லோரும் கட்சிகாரர்கள் கொடுக்கும் பணத்தையும் சாதியையும் நம்பி இருப்பதால் எந்த மாற்றமும் வரப்போவதில்லை.
இதில் அரசியல்வாதிகளை மட்டும் குறை கூறி பயனில்லை, அவர்களை ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கும் மக்களும் காரணம், நம் மக்களின் மறதி அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.
===============================================================
//Ramanna said…
அருமையான இடுகை. நன்றி.//
நன்றி ரமணா
===============================================================
//Sanyaasi said…
அதெல்லாம் சரியண்ணே. ஆனா ஒவ்வொரு வாட்டியும் ஓட்டுப் போட்டு ஏதாவது ஒரு திருடனைத் தேர்ந்தெடுத்த பின்னால் வருந்தி, 49 ஓ போட்டும் பயன்படாமல் போறதைப் பார்த்தா வருத்தமா இருக்கண்ணே.//
நீங்கள் கூறுவது சரி தான். 49 O தற்போது முக்கியத்துவம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் பலருக்கு இது பற்றிய விழிப்புணர்வு வரும் போது இதன் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரியும்.
உங்கள் முதல் வருகைக்கு நன்றி
அருமையான இடுகை
வாழ்த்துகள் இந்த பதிவு யூத்ஃபுல் விகடனில் வெளியாகி உள்ளது
ஜெவுக்கு எப்படின்னாலும் லாபம் தான். பிரபாகரன் இறந்தாலும் லாபம், காங்கிரஸ் வென்றாலும் லாபம் தான், அம்மா ஜகஜ்ஜால கில்லாடி
இலங்கை பிரச்சினையில் பலநாடுகளும் தலையிடவேண்டுமா என்பது பற்றி ஓட்டெடுப்பு பற்றி CNN தகவல் பதிவர்கள் பெரும்பாலோரைப் போய்ச் சேரவில்லை.புதுவை சிவாவின் பதிவில் உங்கள் பின்னூட்ட அனுமதி காண நேர்ந்தது.நல்லதுக்கு சரியென்றே பதில் வரும்.அதனால் தொடரட்டும் இதுபற்றிய ஒரு பதிவு.
(முன்பே தெரிந்திருந்தால் பின்னூட்ட ரவுண்டு கட்டி ஆடி இருக்கலாம் சி.என்.என் கிட்ட)
உண்மை..உண்மை
//திகழ்மிளிர் said…
அருமையான இடுகை//
நன்றி திகழ்மிளிர்
============================================================
//KRICONS said…
வாழ்த்துகள் இந்த பதிவு யூத்ஃபுல் விகடனில் வெளியாகி உள்ளது//
அப்படியா! தகவலுக்கு நன்றி உடன் உங்கள் முதல் வருகைக்கும் சேர்த்து
============================================================
//புலிகேசி said…
ஜெவுக்கு எப்படின்னாலும் லாபம் தான். பிரபாகரன் இறந்தாலும் லாபம், காங்கிரஸ் வென்றாலும் லாபம் தான், அம்மா ஜகஜ்ஜால கில்லாடி//
No comments
=============================================================
//ராஜ நடராஜன் said…
இலங்கை பிரச்சினையில் பலநாடுகளும் தலையிடவேண்டுமா என்பது பற்றி ஓட்டெடுப்பு பற்றி CNN தகவல் பதிவர்கள் பெரும்பாலோரைப் போய்ச் சேரவில்லை.புதுவை சிவாவின் பதிவில் உங்கள் பின்னூட்ட அனுமதி காண நேர்ந்தது.நல்லதுக்கு சரியென்றே பதில் வரும்.அதனால் தொடரட்டும் இதுபற்றிய ஒரு பதிவு.//
பதிவிட்டு விட்டேன் நன்றி
==============================================================
//நசரேயன் said…
உண்மை..உண்மை//
நல்ல பதிவு..
ஆனால் எல்லா வாக்குசாவடிக்ளிலும் 49o படிவம் கிடைக்கவில்லைனு கேள்விப்பட்டேன்..