“Layoff” Encounters

by கிரி on April 7, 2009

தற்போது தான் “Layoff” ன் தாக்கம் இந்தியாவில் அதிகமாக உணரப்படுகிறது, கணிப்பொறித்துறை மட்டுமல்லாது அனைத்து துறையினரும் இதில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். இது குறித்து முன்பே ஒரு பதிவில் நான் கூறிய போது பலர் நம்பவில்லை ஒரு சிலர் இந்தியாவில் அதை போல நடக்க வாய்ப்புகள் இல்லை என்று கூறினார்கள், ஆனால் தற்போது நடப்பதை அனைவரும் அறிவார்கள் (இன்னும் கூட ஒரு சிலருக்கு இதன் வீரியம் புரியவில்லை).

பல (பெரும்பாலும் அனைத்து நிறுவனங்களிலும்) நிறுவனங்களில் காஸ்ட் கட்டிங் என்ற பெயரில் செலவு குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அதில் சில சேம்பிள்

சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதம் குறைப்பு நிலைமை சரியாகும் வரை

போனஸ், சம்பள உயர்வு போன்றவை நிறுத்தி வைப்பு (இந்த வருடம் கிடையாது)

Allowance போன்றவை குறைப்பு அல்லது நிறுத்தம்

10 பேர் செய்யும் வேலையை 5 பேர் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் (சில நிறுவனங்களில் இதை விட மோசம்)

8 மணி நேர வேலையில்லாமல் வேலை நேரம் 10, 12 மணி நேரமாக உயர்வு (சில நிறுவனங்களில் சாதாரணமாகவே 10,12 மணி நேரங்கள்)

உள்ளூர் அழைப்புகள் நிறுத்தம், அதாவது உங்கள் நிறுவனத்தில் இருந்து நீங்கள் உங்கள் வீட்டிற்கு அல்லது நண்பருக்கு அழைக்க முடியாது.

இதை விட மோசமாக ஒரு சில நிறுவனங்களில் டிஷ்யு காகிதம் கூட நிறுத்தி உள்ளனர்.

இதை போல செய்தாலும் பரவாயில்லை வேலையை விட்டு தூக்காமல் இருந்தால் போதும் என்ற மன நிலையிலேயே பலர் உள்ளனர்.

முன்பு ஒரே நபர் 4,5 offer களை கையில் வைத்துக்கொண்டு நிறுவனங்களிடம் பேரம் பேசி கொண்டு இருந்தார்கள், அதாவது “இந்த சம்பளம் கொடு இல்லைனா இவங்க கிட்ட போறேன்” என்று, தற்போது நிறுவனங்களின் நேரம் :-) இந்த சம்பளம் தான் தருவேன் சனி ஞாயிறு வேலை இருக்கும் allowance கிடையாது வரதுன்னா வா இல்லாட்டி போய்ட்டே இரு….(இதற்கும் கடும் போட்டி)

இனி தலைப்பு விசயத்திற்கு வருகிறேன்

தற்போது ஒரு சில நிறுவனங்கள் ஆட்குறைப்பு மற்றும் காஸ்ட் கட்டிங் மூலம் ஓரளவு தங்களை நிலை நிறுத்திக்கொண்டன. ஆனால் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் தங்களுக்கு பிடிக்காத, சம்பளம் அதிகம் பெறும், பிரச்சனை செய்கிற நபர்களை (அல்லது அதிகமா கேள்வி கேட்பவர்களை) வேலையை விட்டு தூக்கி வருகின்றன, காரணம் இந்த சமயத்தில் யாராலும் எந்த கேள்வியையும் கேட்க முடியாது என்கிற தைரியத்தால் (அது உண்மையும் கூட). “சிறைச்சாலை” படத்தில் அம்ரிஷ்பூரி வேண்டும் என்றே ஒரு கலவரத்தை ஏற்படுத்தி அதில் தனக்கு பிடிக்காத மற்றும் பிரச்சனை செய்கின்ற நபர்களை லிஸ்ட் எடுத்து போட்டு தள்ளிடுவார் அதை போல தான் இதுவும், இந்த அளவிற்கு ஒப்பிட்டு பார்க்க தேவை இல்லை என்றாலும் ஓரளவு சரியே.

கோவையில் பல (மில்) நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன அல்லது மூடப்போகின்றன, காரணம் இவர்களுக்கு மில் ஓடும் நாட்களை விட ஓடாத நாட்கள் தான் தற்போது அதிக லாபம்.இவர்கள் ஏற்கனவே பல கோடிகள், சொத்துகள் சம்பாதித்து விட்டனர். தற்போதைய சூழ்நிலையில் ஒரு நாள் மில் ஓடுவதும் ஒன்று ஐந்த நாள் ஓடாமல் இருப்பதும் ஒன்று (இது சிறு எடுத்துக்காட்டிற்காக மட்டுமே), இதிலும் தற்போது ஒரு சில நிறுவனங்கள் (அனைத்தும் அல்ல) தற்போது லாபம் அடைந்து இருந்தாலும் அல்லது நஷ்டமடையாமல் இருந்தாலும் தற்போதைய சூழ்நிலையை காரணம் காட்டி பலரை வேலையை விட்டு தூக்கி வருகின்றனர், காரணம் மேற்கூறியது தான் “பொருளாதார நெருக்கடி”! இதன் மூலம் இவர்கள் குறைந்த நபர்களை வைத்து அதிக வேலையை வாங்க முடிகிறது, எந்த எதிர் கேள்வியும் வராமல்.

தற்போது லாபம் அடைந்தவர்களும், நஷ்டம் ஏற்படாமல் இருப்பவர்களும் கூறும் ஒரே வார்த்தை “பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுவனம் சிரமத்தில் உள்ளது” இந்த சூழ்நிலையை பயன்படுத்தி. இதன் மூலம் குறைந்த ஊழியர்கள் மூலம் அதிக வேலையை பெற்று வருகிறார்கள், இது அனைத்து துறையிலும் தற்போது நடந்து கொண்டு இருக்கிறது.

இந்த நிலை இந்த வருட முடிவு வரை தொடரும் என்பது என் (மற்றும் பலர்) கணிப்பு, எனவே வேலை செய்கிறவர்கள் “ஆட்டம்” போடாமல் தங்கள் சூழ்நிலை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கு நல்லது. அதெல்லாம் முடியாது நாங்க கருஞ்சிறுத்தை ..இந்த சலசலப்புக்கெல்லாம் பயப்படமாட்டோம்..என்று கூறினால் பிறகு உங்கள் விருப்பம்.

Related posts:

  1. “Layoff” (ஆட்குறைப்பு) – என் அனுபவங்கள்+பரிந்துரைகள் ((இறுதி)பாகம் 2)
  2. “Layoff” (ஆட்குறைப்பு) – என் பார்வையில் + என் அனுபவம் (பாகம் 1)

{ 29 comments… read them below or add one }

1 நட்புடன் ஜமால் April 7, 2009 at 10:45 AM

\\சம்பளம் அதிகம் பெறும், பிரச்சனை செய்கிற நபர்களை (அல்லது அதிகமா கேள்வி கேட்பவர்களை) வேலையை விட்டு தூக்கி வருகின்றன, \\

சரியா சொன்னீங்க

Reply

2 குடுகுடுப்பை April 7, 2009 at 10:48 AM

நட்புடன் ஜமால் on 10:45 AM, April 07, 2009 said…

\\சம்பளம் அதிகம் பெறும், பிரச்சனை செய்கிற நபர்களை (அல்லது அதிகமா கேள்வி கேட்பவர்களை) வேலையை விட்டு தூக்கி வருகின்றன, \\

சரியா சொன்னீங்க
//

அதிகமா பதில்சொல்றப்வங்களையும் தான்

Reply

3 கோவி.கண்ணன் April 7, 2009 at 10:57 AM

//கோவையில் பல (மில்) நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன அல்லது மூடப்போகின்றன, காரணம் இவர்களுக்கு மில் ஓடும் நாட்களை விட ஓடாத நாட்கள் தான் தற்போது அதிக லாபம்.இவர்கள் ஏற்கனவே பல கோடிகள், சொத்துகள் சம்பாதித்து விட்டனர்.//

நல்லா ஓடிக் கொண்டிருந்த போது ஆர்காட்டார் புண்ணியத்துல கொஞ்சம் நாள் மூடி இருந்தாங்க, அப்ப அவங்களுக்கு கொஞ்சம் நஷ்டம் தான் ஆச்சு

Reply

4 ஷண்முகப்ரியன் April 7, 2009 at 11:25 AM

சம்பாதிக்கப் போகும்,சம்பாதித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கான வருடம் இல்லை இது.நிறையக் கொடுமைகளைச் சந்திக்கப் போகிறோம் கிரி.

Reply

5 R.Gopi April 7, 2009 at 11:46 AM

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதலில் ஆட்டம் காணவில்லை என்று சொல்லிவந்தது. ஆனால், இப்போது சூப்பர் ஆட்டம் (சேவாக் 20/20 போல) கண்டுள்ளது.

இந்த சமயத்தில், கொஞ்சம் (ஏன் கொஞ்சம் நிறையவே) அடக்கி வாசிப்பது, அனைவரின் எதிர்காலத்திற்கும் நல்லது.

சரியான நேரத்தில் “நச்” பதிவு.

ஒரு புறம் “தல”, “தலைவி” மற்றும் அவர்கள் கூட்டணி கட்சிகள், தொண்டர்கள் (குண்டர்கள்) தரும் “திருகு தலைவலி” .

இவை எல்லாவற்றையும் தாங்கும் மனமும், “ஸ்டீல் பாடி”யும் வேண்டும் என்று அந்த “பாடிகாட் முனீஸ்வரனை” வேண்டுவோம்.

Reply

6 ராமலக்ஷ்மி April 7, 2009 at 11:55 AM

உலக நடப்பை உடைத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.

Reply

7 விஷ்ணு. April 7, 2009 at 12:01 PM

// இவர்கள் குறைந்த நபர்களை வைத்து அதிக வேலையை வாங்க முடிகிறது, எந்த எதிர் கேள்வியும் வராமல். //
கேட்ட புசினனஸ் டட்டிக்ஸ்பானுங்க.

// நல்லா ஓடிக் கொண்டிருந்த போது ஆர்காட்டார் புண்ணியத்துல கொஞ்சம் நாள் மூடி இருந்தாங்க //
அற்காட்டாருக்கு அப்பவே தெரிஞ்சுருக்கும் போல நாம தான் அவர தப்ப புருஞ்சுகிட்டோம்.

// இதை போல செய்தாலும் பரவாயில்லை வேலையை விட்டு தூக்காமல் இருந்தால் போதும் என்ற மன நிலையிலேயே பலர் உள்ளனர். //
வசதிகளை குறைத்து கொண்டு சம்பளத்தையும் வேலையையும் கொடுத்தாலே போதும் தற்பொழுது உள்ள காலகட்டத்தில்.

Reply

8 ராஜ நடராஜன் April 7, 2009 at 1:34 PM

//எனவே வேலை செய்கிறவர்கள் “ஆட்டம்” போடாமல் தங்கள் சூழ்நிலை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கு நல்லது. அதெல்லாம் முடியாது நாங்க கருஞ்சிறுத்தை ..இந்த சலசலப்புக்கெல்லாம் பயப்படமாட்டோம்..என்று கூறினால் பிறகு உங்கள் விருப்பம்.//

பின்னூட்டம் போடலாமுன்னு வந்தா பேசுவதை காது கொடுத்து கேட்க முடியல ன்னு ஒருத்தரு பல்லைக் காட்டுறாரு:)

கருஞ்சிறுத்தை,விடுதலை சிறுத்தைக கூட சேர்ந்தா அம்போதான்.நாங்கெல்லாம் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாண்டா சொல்ல வைக்கும் வடிவேலு கூட்டுக்காரங்க:)

Reply

9 SUREஷ் (பழனியிலிருந்து) April 7, 2009 at 2:43 PM

//ஒரு நாள் மில் ஓடுவதும் ஒன்று ஐந்த நாள் ஓடாமல் இருப்பதும் ஒன்று //

ம்ம்ம்ம்ம்ம்ம்

Reply

10 கிரி April 7, 2009 at 2:46 PM

ஜமால் மற்றும் குடுகுடுப்பை வருகைக்கு நன்றி

========================================================

//கோவி.கண்ணன் said…
நல்லா ஓடிக் கொண்டிருந்த போது ஆர்காட்டார் புண்ணியத்துல கொஞ்சம் நாள் மூடி இருந்தாங்க, அப்ப அவங்களுக்கு கொஞ்சம் நஷ்டம் தான் ஆச்சு//

:-) உண்மை தான் மின்சார பிரச்சனையில் அவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது மறுக்கமுடியாத உண்மை

=========================================================

//ஷண்முகப்ரியன் said…
சம்பாதிக்கப் போகும்,சம்பாதித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கான வருடம் இல்லை இது.நிறையக் கொடுமைகளைச் சந்திக்கப் போகிறோம் கிரி.//

உண்மை தான் சார். பிரச்சனைகளை கண்டு பயப்படாமல் அதற்கேற்ப நம்மை மாற்றி கொள்வதே நமக்கும் நம்மை சார்ந்து இருப்பவர்களுக்கும் நல்லது.

==========================================================

//R.Gopi said…
இந்த சமயத்தில், கொஞ்சம் (ஏன் கொஞ்சம் நிறையவே) அடக்கி வாசிப்பது, அனைவரின் எதிர்காலத்திற்கும் நல்லது.//

“அனைவரின்” இது தான் ரொம்ப முக்கியம்

//இவை எல்லாவற்றையும் தாங்கும் மனமும், “ஸ்டீல் பாடி”யும் வேண்டும் என்று அந்த “பாடிகாட் முனீஸ்வரனை” வேண்டுவோம்.//

வழிமொழிகிறேன் :-)

===================================================

//ராமலக்ஷ்மி said…
உலக நடப்பை உடைத்துச் சொல்லியிருக்கிறீர்கள்//

நன்றி ராமலக்ஷ்மி

===================================================

//விஷ்ணு. said…
வசதிகளை குறைத்து கொண்டு சம்பளத்தையும் வேலையையும் கொடுத்தாலே போதும் தற்பொழுது உள்ள காலகட்டத்தில்//

உண்மையில் பலரின் எண்ணமும் இது தான், சலுகைகளை குறைத்து வேலையை தொடர வேண்டும் என்பதே.

====================================================

//ராஜ நடராஜன் on 1:34 PM, April 07, 2009 said…
கருஞ்சிறுத்தை,விடுதலை சிறுத்தைக கூட சேர்ந்தா அம்போதான்//

சங்கு தான். நினைப்பு தான் பொழப்பை கெடுக்குமாம் ..அது மாதிரி ஆகிடும்

//நாங்கெல்லாம் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாண்டா சொல்ல வைக்கும் வடிவேலு கூட்டுக்காரங்க//

:-) )))

Reply

11 கிரி April 7, 2009 at 2:47 PM

//SUREஷ் said…
//ஒரு நாள் மில் ஓடுவதும் ஒன்று ஐந்த நாள் ஓடாமல் இருப்பதும் ஒன்று //
ம்ம்ம்ம்ம்ம்ம்//

வாங்க சுரேஷ்

Reply

12 Mahesh April 7, 2009 at 3:22 PM

நல்ல டைம்லி இடுகை கிரி… போட்ட ஆட்டத்துல பேஸ்மெண்ட், பில்டிங் எல்லாம் வீக்கா இருக்கு…

Reply

13 ’டொன்’ லீ April 7, 2009 at 4:31 PM

உண்மை தான்…கிரி..எனது internship நிறுவனத்திலும் இதே கதிதான்…இரவு 6.30 மணிக்கு air con ஐ நிப்பாட்டிடுவாங்கள்…ஆனா எஞ்சினியர்மாருக்கு இரவு 8 மணிக்கு கூட வீட்டுக்கு போக முடியாத அளவுக்கு வேலை…

சில கம்பனிகள் ஓவராகவே cost cutting பண்ணுகிறார்கள்..இத முன்னமே பண்ணியிருந்திருக்கலாம்..:-))

Reply

14 வடுவூர் குமார் April 7, 2009 at 6:28 PM

எப்பா,முருகா (மயில் மேல் பறக்கும்)
பாதுகாப்புக்கு பெல்ட் போட்டுக்கப்பா இல்லாவிட்டா உனக்கும் லே ஆபு தான். :-)
கிரி சொல்லாம சொல்லிட்டார்,பிறகு உன் இஷ்டம்.
கிரி இதே மாதிரி நிலமை 1997 யில் வந்தது அப்பத்தான் வீட்டை வாங்கிட்டு வேலையும் போய் சிங்கையில் முழித்தேன்.
இப்ப ஓரளவு சுதாரித்துக்கொண்டேன்.வளரும் பருவத்தில் இந்த மாதிரியான ஏற்ற தாழ்வுகளை சந்திக்கத்தான் வேண்டும்.உலக பொருளியல் அப்படி உள்ளது.

Reply

15 ramalingam April 7, 2009 at 6:55 PM

//எப்பா,முருகா (மயில் மேல் பறக்கும்)
பாதுகாப்புக்கு பெல்ட் போட்டுக்கப்பா இல்லாவிட்டா
உனக்கும் லே ஆபு தான்.:-)//
கமெண்ட் சூப்பர்.

Reply

16 கயல் April 7, 2009 at 8:17 PM

//
இதிலும் தற்போது ஒரு சில நிறுவனங்கள் (அனைத்தும் அல்ல) தற்போது லாபம் அடைந்து இருந்தாலும் அல்லது நஷ்டமடையாமல் இருந்தாலும் தற்போதைய சூழ்நிலையை காரணம் காட்டி பலரை வேலையை விட்டு தூக்கி வருகின்றனர், காரணம் மேற்கூறியது தான் “பொருளாதார நெருக்கடி”! இதன் மூலம் இவர்கள் குறைந்த நபர்களை வைத்து அதிக வேலையை வாங்க முடிகிறது, எந்த எதிர் கேள்வியும் வராமல்.
//

உண்மை! உண்மை!

Reply

17 கிரி April 7, 2009 at 8:39 PM

//Mahesh said…
நல்ல டைம்லி இடுகை கிரி… போட்ட ஆட்டத்துல பேஸ்மெண்ட், பில்டிங் எல்லாம் வீக்கா இருக்கு…//

ஹி ஹி ஹி ஆடிய ஆட்டம் என்ன? :-) )))

=================================================================

//’டொன்’ லீ said…
சில கம்பனிகள் ஓவராகவே cost cutting பண்ணுகிறார்கள்..இத முன்னமே பண்ணியிருந்திருக்கலாம்..:-))//

நம்ம ஆளுங்க அடி வாங்குனாலே அசர மாட்டாங்க..இப்ப ஆப்பு வந்தவுடன் தான் யோசிக்கறாங்க போல :-) ))

=================================================================

//வடுவூர் குமார் said…
எப்பா,முருகா (மயில் மேல் பறக்கும்)
பாதுகாப்புக்கு பெல்ட் போட்டுக்கப்பா இல்லாவிட்டா உனக்கும் லே ஆபு தான். :-) //

:-) )) அவர் பிரச்சனை அவருக்கு

=================================================================

//வளரும் பருவத்தில் இந்த மாதிரியான ஏற்ற தாழ்வுகளை சந்திக்கத்தான் வேண்டும்.உலக பொருளியல் அப்படி உள்ளது.//

உண்மைதாங்க வடுவூர் குமார். எனக்கும் நல்ல அனுபவம் உண்டு, இதற்க்கு முன் 2001 ல் இதே போல நடந்த போது சிரமப்பட்டேன், அந்த அனுபவம் தற்போது நன்கு உதவுகிறது.

=================================================================

//ramalingam said…
//எப்பா,முருகா (மயில் மேல் பறக்கும்)
பாதுகாப்புக்கு பெல்ட் போட்டுக்கப்பா இல்லாவிட்டா
உனக்கும் லே ஆபு தான்.:-)//
கமெண்ட் சூப்பர்.//

:-) ) முதல் வருகைக்கு நன்றி ராமலிங்கம்

=======================================================

//கயல் said…
உண்மை! உண்மை!//

கயல் உங்கள் முதல் வருகைக்கு நன்றி

Reply

18 ஜோசப் பால்ராஜ் April 7, 2009 at 9:26 PM

2001ல நானும் ரொம்ப சிரமப்பட்டேன் கிரி. இப்ப ரொம்ப உசாரா இருக்கேன். சிங்கைக்கும் 2001ல கொஞ்சம் பலத்த அடி, அதுனால இங்க இருக்க நிறுவனங்கள் ரொம்ப முன்னெச்சரிக்கையா இருக்காங்க.

நீங்க சொல்லியிருக்கமாதிரி இப்ப நிறைய நிறுவனங்கள் இதான் சமயன்னு கழிச்சுக்கட்ட வேண்டியத எல்லாம் அனுப்பி வைச்சுக்கிட்டு இருக்காங்க.

சூதனமா இருக்கனுங்க.

Reply

19 தமிழன் April 7, 2009 at 9:33 PM

உண்மைதான் இங்கு எங்கள் அலுவலகத்தில் தூக்கிய அனைவரும் பிரச்சனைக்குரியவர்கள், இந்த பதிவு இன்றைய நிலைமையை அப்படியே படம்பிடித்து காட்டியுள்ளது.

Reply

20 ஜோதி April 7, 2009 at 9:59 PM

சரியான நேரத்தில வந்திருக்கும் பதிவு கிரி
வெளிநாட்டிலிருந்து நிறைய பேர வீட்டுக்கு அனுப்பறாங்க குடும்பத்தோட உள்ளவங்க குடும்பத்தை
வீட்டுக்கு அனுப்ப ஆரம்பிச்சாச்சு
இதன் விளைவா இந்தியாவின் உணவு பொருட்கள்
ஏற்றுமதி பாதிப்படையறதுக்கு வாய்ப்புகள் உள்ளது

Reply

21 Arun April 8, 2009 at 2:29 AM

As usual very nice analysis Giri. if possible please write a post on the “Current parties in the election and whom you suggest to vote for in this coming election?”

Thanks,
Arun

Reply

22 கிரி April 8, 2009 at 6:39 AM

//ஜோசப் பால்ராஜ் said…
2001ல நானும் ரொம்ப சிரமப்பட்டேன் கிரி. இப்ப ரொம்ப உசாரா இருக்கேன். //

நான் அப்போது வேலை மாறி இருந்த நேரம் வேற..பேசாம அங்கேயே இருந்து இருக்கலாமோ என்று யோசிக்க ஆரம்பித்து விட்டேன், அந்த அளவிற்கு கலக்கி விட்டது.

============================================================

//திலீபன் said…
உண்மைதான் இங்கு எங்கள் அலுவலகத்தில் தூக்கிய அனைவரும் பிரச்சனைக்குரியவர்கள், இந்த பதிவு இன்றைய நிலைமையை அப்படியே படம்பிடித்து காட்டியுள்ளது.//

நன்றி திலீபன்

============================================================

//புன்னகை on 9:59 PM, April 07, 2009 said…
சரியான நேரத்தில வந்திருக்கும் பதிவு கிரி//

நன்றி புன்னகை

//வெளிநாட்டிலிருந்து நிறைய பேர வீட்டுக்கு அனுப்பறாங்க குடும்பத்தோட உள்ளவங்க குடும்பத்தை வீட்டுக்கு அனுப்ப ஆரம்பிச்சாச்சு//

உண்மை தாங்க..இங்க சிங்கையிலும் இதே நிலைமை தான்.

============================================================

//arun said…
As usual very nice analysis Giri.//

நன்றி அருண்

//if possible please write a post on the “Current parties in the election and whom you suggest to vote for in this coming election?”//

அருண் இந்த தேர்தலில் அனைவருக்குமே தெரியும் அனைத்து கட்சிகளும் எத்தனை கேவலமாக நடந்து கொள்கிறார்கள் என்று. இதில் யாரை என்று நாம் கூறுவது. வரவர நம்பிக்கை குறைந்து கொண்டே போகிறது.

Reply

23 Arun April 8, 2009 at 10:37 AM

thats correct giri, yenaku vara kobathuku pesama sarathkumar ku ottu potturalam pola iruku.. chellatha otttu:)

Thanks,
Arun

Reply

24 வால்பையன் April 8, 2009 at 10:47 PM

//சிலர் இந்தியாவில் அதை போல நடக்க வாய்ப்புகள் இல்லை என்று கூறினார்கள், //

இது இயல்பு தான்!

அந்த தெரிவில் சண்டை என்றால் கண்டிப்பாக அது என் வீடாக இருக்காது என்று முன்முடிவுக்கு நாமே வந்துவிடுவோமே!

அது மாதிரி தான்!

Reply

25 கிரி April 9, 2009 at 8:12 AM

//arun on 10:37 AM, April 08, 2009 said…
thats correct giri, yenaku vara kobathuku pesama sarathkumar ku ottu potturalam pola iruku.. chellatha otttu:)//

ஹி ஹி ஹி

=========================================================

//வால்பையன் on 10:47 PM, April 08, 2009 said…
இது இயல்பு தான்!
அந்த தெரிவில் சண்டை என்றால் கண்டிப்பாக அது என் வீடாக இருக்காது என்று முன்முடிவுக்கு நாமே வந்துவிடுவோமே!
அது மாதிரி தான்!//

அதீத நம்பிக்கை போல இருக்கு ;-)

Reply

26 மங்களூர் சிவா April 11, 2009 at 7:53 PM

nice post.

while earning, we should save & ready to face any kind of such situations.

Reply

27 கிரி April 13, 2009 at 9:32 AM

//மங்களூர் சிவா on 7:53 PM, April 11, 2009 said…
nice post.

while earning, we should save & ready to face any kind of such situations.//

வருகைக்கு நன்றி சிவா

Reply

28 Tech Shankar April 13, 2009 at 12:13 PM

30+ வயது, நரைத்த தலை, திருமணமாகி குழந்தை பெற்றவர்கள் : இவர்களைப் பார்த்துப் பார்த்துத் துரத்துகிறார்கள்.

Reply

29 மானஸ்தன் October 2, 2009 at 8:47 PM

Leave a Comment

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)

Previous post:

Next post: