தமிழம் முழுவதும் சிறு சிறு கட்சிகள்! தோன்றி கொண்டே இருக்கின்றன. அந்த கட்சிகளில் திரை துறையை சார்ந்த பிரபலமான!!! கட்சிகளை மட்டும் இங்கு பார்ப்போம்.
லட்சிய தி மு க விஜய டி ராஜேந்தர்
நான் நினைத்தால் தமிழகமே கொந்தளிக்கும் (எதற்கு என்று தெரியவில்லை) என்று கூறுபவர், அரசியல்வாதி என்ற அடையாளத்திற்காக கட்சி!! நடத்துகிறார். அடிக்கடி பொதுக்குழுவை!! கூட்டி முடிவு செய்கிறேன் என்று கூறுவார், யார் அந்த பொதுக்குழு என்று தெரியவில்லை. அடிக்கடி கலைஞருடன் சண்டை மற்றும் சமரசம் ஆவார். ரொம்ப கோபக்காரர்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சரத்குமார்
எல்லோரும் கட்சி ஆரம்பிக்கறாங்க நாமும் ஆரம்பித்தால் என்ன என்கிற எண்ணத்தோடு ஆரம்பித்ததை போல உள்ளது இவரது கட்சி. இவர் நாடார் சமுதாயத்தை மட்டும் நம்பி கட்சி ஆரம்பித்து உள்ளார், பின் எந்த தைரியத்தில் (நம்பிக்கையில்) இவர் 2011 ல் ஆட்சியை பிடிப்போம் என்று கூறுகிறார் என்று தெரியவில்லை. கடந்த இடைதேர்தலில் சுயேட்சைகள் வாங்கிய ஓட்டை விட இவரது கட்சி வாங்கிய ஓட்டுகள் குறைவு.
அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி கார்த்திக்
பெயரிலேயே கட்சியின் எதிர்காலத்தை வைத்து இருக்கிறார் அட! அதுதாங்க “நாம” கட்சி. இவர் தேவர் வாக்குகளை குறி வைத்து கட்சி தொடங்கியவர். இவரை பார்த்தாலும் சரி இவரது நடவடிக்கைகளை பார்த்தாலும் சரி இவரை யாரும் அரசியல்வாதி என்றே நம்ப மாட்டார்கள், அப்புறம் தானே கட்சி தலைவர். இவர் ஒரு முறை பிரச்சாரத்திற்கு வந்து ஹோட்டலினுள் ஓய்வு எடுக்க சென்று திரும்ப வரவேயில்லை. இவரையும் நம்ம்ம்பி கொஞ்சம் பேர். இவரும் 2011 ல் ஆட்சியை(ஆச்சியை அல்ல) பிடித்து விடுவோம் என்கிறார். ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் முடியல.
வீரத்தளபதி ரித்திஷ் MP(ஆகல ஆனா ஆகிடுவாரு)
இவரை பற்றி சிறு அறிமுகம்
முன்பு முகவை குமார் என்ற பெயரில் தனக்கு தானே போஸ்டர் அடித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் மரம், சுவர், மின்சார கம்பம் ஒட்டி வந்தவர் தான் இந்த ரித்தீஷ். கொஞ்ச நேரம் அசையாமல் நின்றால் மக்கள் மீதே போஸ்டர் ஒட்டி விடுவார்கள் என்ற அளவுக்கு போஸ்டர்களாலேயே புகழ் பெற்றவர். “தன் படத்தைப் பார்க்க வரும் ரசிகர்களுக்கே நூறு ரூபாயும் பிரியாணிப் பொட்டலமும் தரும் ‘ரொம்ப நல்லவர்’ ஜே.கே. ரித்தீஷ். தனக்காக வாக்களிக்கும் வாக்காளர்களை விட்டுவிடுவாரா?” (நன்றி தட்ஸ்தமிழ்)
இவர் தான் தற்போதைய ஹாட் டாபிக், அதுவும் வலையுலகில் சொல்லவே தேவையில்லை. இவருக்கு எந்த கணக்கில் (பணத்தை தவிர மற்றது மட்டுமே சொல்ல வேண்டும்
) MP சீட் கலைஞர் கொடுத்தார் என்று யாராவது விளக்கினால் தேவலை. பிரியாணி பொட்டலத்திற்க்கும் பணத்திற்கும் வோட் போடும் மக்கள் இருக்கும் வரை இவரை போன்றவர்களுக்கு கவலையே இல்லை.. யார் கண்டா! நாளைக்கு இவர் தேர்தலில் வெற்றி பெற்று ஏதாவது துறைக்கு அமைச்சாரானாலும் ஆச்சர்யப்படுவதிற்க்கில்லை.
வருங்கால தமிழ் பேரரசு (இயக்குனர் பேரரசு அல்ல) கட்சி தலைவர் மன்சூர் அலிகான்!!
தி மு க, விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்றவைகள் ஈழ தமிழர்களுக்காக போராடும் என நம்பி இருந்தாராம், பிறகு அவர்களே காங்கிரசுடன் கூட்டணி வைத்ததை பொறுக்கமுடியாமல் இன்னும் ஆறு மாதத்தில் கட்சி தொடங்க போகிறேன் வரும் தேர்தலில் தனி ஆளாக நின்று போட்டியிடுவேன் என்று கூறி உள்ளார் (நல்ல வேளை இது வரை 2011 ல் ஆட்சியை பிடிப்பேன் என்று கூறவில்லை). “ஈழத்தமிழர் பிரச்சினையில் அனைத்து அரசியல் கட்சிகளும் நாடகமாடுகின்றன. இலங்கையில் ஆயிரக்கணக்கான பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.இவர் கற்பழிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். வாழ்க தமிழ் நாடு.
கொசுறு
பாபிலோனா (வருங்கால அரசியல்வாதி!!)
உள்நாடு வெளிநாடு என கான்ட்ராக்ட் முறையில் கலைச்சேவை செய்து புகழ் பெற்றவர் பாபிலோனா.திரையுலகில் தனக்குக் கிடைத்த புகழையும் விளம்பரத்தையும் வீணாக்க விரும்பாத பாபிலோனா, இந்த தேர்தலிலேயே களம் காண தயாராகிவிட்டார்.
“சிறு வயதிலேயே எனக்கு அரசியல் ஆர்வம் நிறைய உண்டு. சினிமாவில் ஒரு நிலைக்கு போனதும் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று ஆரம்பத்திலேயே திட்டமிட்டேன். அந்த நேரம் இப்போது வந்துவிட்டது. நான் சேர விரும்பும் கட்சி புரட்சி தலைவி அம்மாவின் அதிமுக. என்னையும் இணைத்துக் கொள்ளும்படி கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளேன் புரட்சித் தலைவிக்கு. அதிமுகவை நான் தேர்ந்தெடுத்ததற்கு பல காரணங்கள் உண்டு. அவரை மாதிரி தன்னம்பிக்கை கொண்ட பெண்களைப் பார்ப்பது அரிது. தனக்கு வந்த அத்தனை சோதனைகளையும் எதிர்த்து போராடி துணிச்சலாக வெளிவந்த புரட்சிப் பெண்மணி அவர். அவர் தலைமைதான் நாட்டுக்குத் தேவை. அதிமுக ஆட்சி காலம் பொற்காலம். சட்டம் ஒழுங்கு நன்றாக இருந்தது. என்கடைசி காலம் வரை இனி அரசியலில் இருப்பேன். நல்ல கேரக்டர்கள் வந்தால் நடிப்பேன். பாராளுமன்ற தேர்தலில் புரட்சித் தலைவி அனுமதியோடு தமிழ்நாடு முழுவதும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய விரும்புகிறேன்” என்றார் பாபிலோனா. – நன்றி தட்ஸ்தமிழ்
இவருக்கு தனியாக நான் எதுவும் விளக்கம் கொடுக்க தேவையில்லை என்று நினைக்கிறேன்.
வாழ்க மக்கள் வாழ்க இந்தியா(தமிழகம்) வளர்க அரசியல்
No related posts.








{ 27 comments… read them below or add one }
//இவருக்கு தனியாக நான் எதுவும் விளக்கம் கொடுக்க தேவையில்லை என்று நினைக்கிறேன். //
நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் அரசியலில் ஈடுபடும் உரிமை உண்டு.
எல்லோரும் நமக்கு, நம்மை பிடிச்சவங்க தான்.
உண்மையைச் சொல்லுங்க விசயகாந்து ரசிகர்களை மனதில் வைச்சுத்தானே ரீத்தீஸ் புகைப்படத்தை போட்டிங்க
ஆமாவா
இல்லையா
//கோவி.கண்ணன் said…
//இவருக்கு தனியாக நான் எதுவும் விளக்கம் கொடுக்க தேவையில்லை என்று நினைக்கிறேன். //
குசும்ம்ம்ம்பு
============================================================
//SUREஷ் said…
நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் அரசியலில் ஈடுபடும் உரிமை உண்டு.//
சந்தேகமே வேண்டாம்.. தாறுமாறா வழிமொழிகிறேன்
============================================================
//ஜோதிபாரதி said…
எல்லோரும் நமக்கு, நம்மை பிடிச்சவங்க தான்.//
ஹி ஹி ஹி
============================================================
//பாண்டித்துரை said…
உண்மையைச் சொல்லுங்க விசயகாந்து ரசிகர்களை மனதில் வைச்சுத்தானே ரீத்தீஸ் புகைப்படத்தை போட்டிங்க//
இதை கேட்டு ரித்தீஷ் ரசிகர்கள் டென்ஷன் ஆகிட போறாங்க..
))
யப்பா ……………..
தமிழ்நாட்டுக்கு பிடிச்ச சனி சிறிது சிறிதாக விலகி விடும் என்ற நம்பிக்கையில் உள்ளோரே …….. பாருங்கள் ….. 2011-ஆம் ஆண்டு உங்களுக்குத்தான் எத்தனை எத்தனை முதலமைச்சர்கள் …………
கிரி சொன்ன மாதிரி, சரத்குமார் ஏற்கனவே திருமங்கலம் இடைதேர்தலில், சுயேட்சையைவிட குறைவாகவே ஒட்டு வாங்கினார். ராதிகாவை முன்னிறுத்தியதால் ஒரு 800 ஒட்டு வாங்கினார். ஏண்டா, ஒரு 800 ஓட்ட வச்சு பீப்பீ ஊதினதுக்கே 2011-ல முதலமைச்சரா?? கொடுமைடா மக்கா ……..
டி.ஆர்-ர பத்தி தனியா யாரும், யாருக்கும் சொல்ல தேவையில்லை. அவரு, அந்த அளவு பாப்புலர். யாரோ ஒருத்தர் அவர் மீட்டிங்குக்கு கூட்டம் வரலியாமேன்னு கேட்டுட்டு, ஏண்டா கேட்டோம்னு சொல்ற அளவுக்கு அவரை போட்டு, வறுத்தும், பொரித்தும் எடுத்துவிட்டார். (அந்த ஆள் அப்பளத்தைவிட அதிகமாக பொரித்தும், வேர்கடலையைவிட அதிகமாக வறுத்தும் எடுக்கப்பட்டார்).
ஜெ.கே.ரித்தீஷ் சுமார் 30 கோடி அளவுக்கு பணம் கொடுத்து ராமநாதபுரம் சீட் வாங்கினார் என்று நம்பத்தகாத வட்டார செய்திகள் கூறுகின்றன. அவரிடம் இருக்கும் பணம் (சுமார் 300 கோடி) வளர்ப்பு மகன் சுதாகரனிடம் இருந்து ஆட்டை போடப்பட்டதில் ஒரு சிறு துளி (அப்போ மொத்தம் எவ்வளவு இருந்திருக்கும்னு நீங்களே கணக்கு போட்டுக்கோங்க).
மத்தபடி கார்த்திக், மன்சூர் அலிகான் எல்லாம் டகால்டி சங்கத்தின் நிரந்தர உறுப்பினர்கள். காமெடி கூட்டணி.
அதுலயும், கார்த்திக் ரெண்டு வாரம் முன்னாடி சொன்னத நெனச்சு சிரிக்கறதா இல்ல பாவப்படறதான்னு தெரியல. கார்த்திக் என்ன சொன்னார்னா :
“ஒரு கட்சி என்னை கூட்டணி பத்தி விவாதிக்கணும்னு கூப்பிட்டாங்க. போனேன், ரொம்ப ஏமாற்றமா போயிடுச்சு. கூட்டணின்னு சொல்லிட்டு ஒரு சீட் கூட கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. ஒரு சீட் கூட கொடுக்காம கூட்டணின்னா எப்படிங்கன்னு சொல்லிட்டு வந்துட்டேன்”.
பாபிலோனா :
தொங்கும் தோட்டம் பற்றி நோ கமெண்ட்ஸ் ப்ளீஸ்.
அட கொடுமையே இவனுங்க தொல்ல தாங்க முடியலடா சாமி, இதுல இந்த பாபி பொண்ணு வேற, நல்ல கேரக்டர் வந்த நடிப்பாங்கலம்டோய் அது என்ன நல்ல கேரக்டர் எங்களுக்கு தெரியாத??
இடது ஓரத்தில் இருக்கும் யூடியூப் வீடியோ பார்கள் சரியாக படிக்கவிடாமல் தொல்லை பண்ணுகிறது!
அதை எடுத்து விடலாமே!
sooper appu
BALA VELLORE
IPPADI THAN ITHU ILLAM TAMIL NADULA MATUM NATAKUTHUN THERIYALA.
எல்லாருடைய 2011 பத்தி நெனைச்சா சிரிப்பு தான் வருது, ஆனா பாபிலோனாவோட 2011 பத்தி நெனைச்சா ச்ச..ச்ச.ச.. கண்றாவி என்னென்னமோ தோணுது …
என்ன இது அநியாயம் …. எங்கள் தளபதி ரிதீஷயும், எங்கள் தலைவர் டி.ஆர் .யும் இந்த பொடி பசங்களோடு இணைத்து பேசி இருகீர்களே ….. இவர்கள் இரண்டு பெரும் தான் நாளைய இரு பெரும் கட்சிகளாக ( திமுக மற்றும் அதிமுக போல் ) வருவார்கள் …. பொறுத்திருந்து பாருங்கள் ….
//R.Gopi said…
யப்பா ……………..
தமிழ்நாட்டுக்கு பிடிச்ச சனி சிறிது சிறிதாக விலகி விடும் என்ற நம்பிக்கையில் உள்ளோரே//
ஹி ஹி அப்படி எல்லாம் யாரும் அவ்வளோ நம்பிக்கை வைக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்
//ஒரு 800 ஓட்ட வச்சு பீப்பீ ஊதினதுக்கே 2011-ல முதலமைச்சரா?? //
அதுக்கு முன்னாடியே சொல்லிட்டாரு
))
//அந்த ஆள் அப்பளத்தைவிட அதிகமாக பொரித்தும், வேர்கடலையைவிட அதிகமாக வறுத்தும் எடுக்கப்பட்டார்//
அதை தக்க நேரத்தில் வெளியிடலாம் ஒரு பதிவாக
))
கோபி, நீங்க சொன்ன கார்த்திக் விஷயம் படித்து என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை ஹா ஹா ஹா செம காமெடி
==============================================================
//பாலா… said…
(..நம்ம தல எழுத்து மாறாதா?//
ரொம்ப கஷ்டங்க பாலா
===============================================================
//நான் அவன் இல்லீங்கோ said…
அட கொடுமையே இவனுங்க தொல்ல தாங்க முடியலடா சாமி//
தேர்தல் முடியறதுக்குள்ள நாம பஜ்ஜி ஆகிடுவோம்
==============================================================
//வால்பையன் said…
இடது ஓரத்தில் இருக்கும் யூடியூப் வீடியோ பார்கள் சரியாக படிக்கவிடாமல் தொல்லை பண்ணுகிறது!
அதை எடுத்து விடலாமே!//
==============================================================
//Senthil said…
sooper appu//
உங்க முதல் வருகைக்கு நன்றி செந்தில்
==============================================================
//m bala on 12:47 PM, April 09, 2009 said…
BALA VELLORE
IPPADI THAN ITHU ILLAM TAMIL NADULA MATUM NATAKUTHUN THERIYALA.//
நாம தான் எதையும் தாங்கும் இதயம் ஆச்சே
==============================================================
//Nags said…
எல்லாருடைய 2011 பத்தி நெனைச்சா சிரிப்பு தான் வருது, ஆனா பாபிலோனாவோட 2011 பத்தி நெனைச்சா ச்ச..ச்ச.ச.. கண்றாவி என்னென்னமோ தோணுது//
ஹா ஹா ஹா வாங்க Nags ரொம்ப நாளா ஆளை காணோம்
==============================================================
//Scorpion King said…
என்ன இது அநியாயம் …. எங்கள் தளபதி ரிதீஷயும், எங்கள் தலைவர் டி.ஆர் .யும் இந்த பொடி பசங்களோடு இணைத்து பேசி இருகீர்களே ….. இவர்கள் இரண்டு பெரும் தான் நாளைய இரு பெரும் கட்சிகளாக ( திமுக மற்றும் அதிமுக போல் ) வருவார்கள் …. பொறுத்திருந்து பாருங்கள்//
நல்லா கிளப்புறாங்கய்யா பீதிய!
) இந்த கொடுமையையே தாங்க முடியல அவ்வவ்
நீங்க நாட்களுக்கு பிறகு உங்கள் வருகைக்கு நன்றி
கிரி… வர வர உங்க ரவுசு தாங்கல….
))))
நான் நினைத்தால் தமிழகமே கொந்தளிக்கும் (எதற்கு என்று தெரியவில்லை) என்று கூறுபவர், அரசியல்வாதி என்ற அடையாளத்திற்காக கட்சி!! நடத்துகிறார். அடிக்கடி பொதுக்குழுவை!! கூட்டி முடிவு செய்கிறேன் என்று கூறுவார், யார் அந்த பொதுக்குழு என்று தெரியவில்லை. அடிக்கடி கலைஞருடன் சண்டை மற்றும் சமரசம் ஆவார். ரொம்ப கோபக்காரர்.///
ஆமா!! கோவக்காரர்தான்!
சும்மா! இவர் மட்டும் கொந்தளிப்பார்!!
நல்ல காமெடி பதிவுங்க
ஜே.கே. ரித்தீஷ் பறக்கும் ஸ்டில் சூப்பர்.
எல்லா தலைவர்களையும் அருமையாகக் காட்டிய அண்ணன் கிரி அவர்களுக்கு நன்றி
//கொஞ்ச நேரம் அசையாமல் நின்றால் மக்கள் மீதே போஸ்டர் ஒட்டி விடுவார்கள் என்ற அளவுக்கு போஸ்டர்களாலேயே புகழ் பெற்றவர்.//
Super..
வாழ்க சனநாயகம்! அதை தவிற வெறு சொல்ல தெரியவில்லை…
//Mahesh said…
))))//
கிரி… வர வர உங்க ரவுசு தாங்கல….
இந்த அரசியல்வாதிங்க!!! ரவுசு அதை விட தாங்கல
))
======================================================
//thevanmayam on 6:08 PM, April 10, 2009 said…
சும்மா! இவர் மட்டும் கொந்தளிப்பார்!!//
======================================================
//பிரியமுடன் பிரபு said…
நல்ல காமெடி பதிவுங்க//
வாங்க பிரபு, இவங்களை பற்றி பேசினாலே காமெடி தான்
======================================================
//தமிழ்நெஞ்சம் said…
ஜே.கே. ரித்தீஷ் பறக்கும் ஸ்டில் சூப்பர்.
எல்லா தலைவர்களையும் அருமையாகக் காட்டிய அண்ணன் கிரி அவர்களுக்கு நன்றி//
“அருமையாகவா”
)
=======================================================
//சரவணகுமரன் said…
//கொஞ்ச நேரம் அசையாமல் நின்றால் மக்கள் மீதே போஸ்டர் ஒட்டி விடுவார்கள் என்ற அளவுக்கு போஸ்டர்களாலேயே புகழ் பெற்றவர்.//
Super..
//
=======================================================
//ஆ.ஞானசேகரன் said…
வாழ்க சனநாயகம்! அதை தவிற வெறு சொல்ல தெரியவில்லை…//
நம்ம வாழ தான் வழியை காணோம்
அருமையான அலசல் கிரி
கிரி,
மன்சூர் அலி கான் விஜய டி.ராஜேந்தர் உடன் தன் லெட்டர் பேட் கட்சியை இணைத்து விட்டார்… (அப்டேட்)
—
இன்னமும் நிறைய கட்சிகள் உள்ளன..இஸ்லாமிய கட்சிகள்..(ஒரே இனம் ஆனால், பல கட்சிகள் ??) கிறிஸ்துவ பேரவைகள்..இதர ஜாதி (கொங்கு) கட்சிகள்…
இதெல்லாம் எலெக்சன் நேரத்தில் தான் இயங்கும்..(எச்சி பிரியாணி கிடைக்காதா என்று) அப்பாலே …எல்லாம் அடங்கிடும்…நம்ம டி.ஆர் மட்டும் அவ்வப்போ, கோமணம் அவிழ்ந்த குரங்கு மாதிரி கட்சி மாறி ஆதரவு (??) தெரிவிப்பாறு?? கூட காமெடி பேட்டியும் குடுப்பாரு..(சட்டை பட்டனை அவுத்து.. “நான் தமிழன் டா…!!” என்று”., கேள்விப்பட்டேன் மனிதர் Basically நல்லமனம் படைத்தவர் என்று)
அகிலாண்ட நாயகன் ஜேகே ரித்தீஷ் அவர்களை யார் என்றே தெரியாத சினிமா நடிகர்கள் கூட எல்லாம் ஒப்பிட்டு கேவலமாக பதிவு எழுதியமைக்கு அகிலாண்ட நாயகனின் உலக இரசிக மன்றத்தின் சிங்கை கிளை சார்பாக கடுமையான கண்டணங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
உள்நாடு வெளிநாடு என கான்ட்ராக்ட் முறையில் கலைச்சேவை செய்து புகழ் பெற்றவர் பாபிலோனா.திரையுலகில் தனக்குக் கிடைத்த புகழையும் விளம்பரத்தையும் வீணாக்க விரும்பாத பாபிலோனா, இந்த தேர்தலிலேயே களம் காண தயாராகிவிட்டார்.//
மெய்யாலுமா? தலை
//Senthil Kumar said…
அருமையான அலசல் கிரி//
நன்றி செந்தில்
=========================================================
//வெங்க்கி said…
கிரி,
மன்சூர் அலி கான் விஜய டி.ராஜேந்தர் உடன் தன் லெட்டர் பேட் கட்சியை இணைத்து விட்டார்//
மாபெரும் இணைப்பு
//கேள்விப்பட்டேன் மனிதர் Basically நல்லமனம் படைத்தவர் என்று//
சில நேரங்களில் சில மனிதர்கள்
=====================================================
//ஜோசப் பால்ராஜ் said…
அகிலாண்ட நாயகன் ஜேகே ரித்தீஷ் அவர்களை யார் என்றே தெரியாத சினிமா நடிகர்கள் கூட எல்லாம் ஒப்பிட்டு கேவலமாக பதிவு எழுதியமைக்கு அகிலாண்ட நாயகனின் உலக இரசிக மன்றத்தின் சிங்கை கிளை சார்பாக கடுமையான கண்டணங்களை தெரிவித்துக்கொள்கிறேன்//
======================================================
//jackiesekar said…
மெய்யாலுமா? தலை//
ஹி ஹி ஹி அப்படி தான் தட்ஸ்தமிழ் ல கூறி இருக்காங்க