பாராளுமன்ற தேர்தலில் எம்பி சீட் கூட கிடைத்து விடும் போல இருக்கு LKG சீட் கிடைக்காது போல இருக்கு, மிகைப்படுத்தி கூறவில்லை விஷயத்தை கேளுங்க.
இந்த முறை ஊருக்கு ஒரு திருமணத்திற்காக தான் முக்கியமாக சென்றேன். என் அக்கா சென்னையில் இருந்து ஊருக்கு வருவது சந்தேகம் என்று கூறினார்கள், ஏன் என்று கேட்டபோது, ஸ்ரேயா (என் அக்கா பெண்) க்கு திங்கள் கிழமை நேர்முக தேர்வு (Interview) அதனால் சனி ஞாயிறு திருமணத்திற்கு வந்து சென்றால் அவளால் நேர்முகத்தேர்வு திங்கள் சரியாக செய்ய முடியாது!!! என்று கூறினார்..ஏய்! அவ என்ன IAS நேர்முக தேர்வா செய்ய போகிறாள்..இந்த அளவிற்கு பில்ட் அப் கொடுக்கிறே! என்று கலாய்த்தேன்.. அதற்க்கு என் அக்கா கொடுத்த விளக்கத்தை கேட்டு பீதி ஆகாத குறை தான்..
அது பின்வருமாறு
தற்போது அடையாரில் உள்ள பள்ளியில் (இவர்கள் இந்திரா நகரில் இருக்கிறார்கள்) இவளோட அண்ணன் படிக்கிறான், அதனால் இவளுக்கு அட்மிசனில் கொஞ்சம் கூடுதல் சலுகையாம் (அடடா! என்ன ஒரு தாராள மனசு)
இதே பள்ளியில் சேர்த்தால் தான் இருவருக்கும் விடுமுறை விடுவதில் பிரச்சனை இருக்காதாம், வேறு பள்ளிகள் என்றால் மாற்றி விடுமுறை வந்தால் எங்கள் (அம்மா) ஊருக்கு வருவது மற்றும் பல நடைமுறை சிக்கல்கள் உண்டு என்றார், ஏற்று கொள்ளக்கூடியதாகத்தான் இருந்தது.
இதற்க்கு அமைச்சர்கள் சிபாரிசு வேண்டுமாம், அமைச்சர்களுக்கு 30 இடம் வரை தான் கொடுப்பார்களாம் (நம்பினா நம்புங்க)
அப்ளிகேசன் வாங்க இரவு முழுவதும் பள்ளியில் வரிசையில் தேவுடு காக்க வேண்டுமாம் (விதி வலியது)
நன்கொடை 60000 (ஒரு சில பள்ளியில் 80000-100000 வரை) கட்ட வேண்டுமாம் ( நான் கூறிக்கொண்டு இருப்பது LKG பற்றி தான்)
இந்த கட்டணம் இல்லாமல் டெர்ம் கட்டணம் தனி (அதாவது மெயின் டிஷ் வேறு சைடு டிஷ் வேறு)
பெற்றோர் கண்டிப்பாக நன்கு படித்து இருக்க வேண்டும், அப்பொழுது தான் குழந்தைகளுக்கு சொல்லித்தர முடியுமாம்!! (அப்ப இவங்க எதுக்கு இருக்காங்கன்னு அந்த சரஸ்வதிக்கு தான் வெளிச்சம்)
பெற்றோர்களுக்கும் நேர்முகத்தேர்வு உண்டு (ஏன்யா! இப்படி அட்டகாசம் பண்ணறீங்க, வேலைக்கு சேரும் போதே ஒழுங்கா நேர்முகத்தேர்வு செய்தது இல்லை இந்த லட்சணத்துல இது வேறயா)
குழந்தையை சேர்க்கும் போது, குழந்தையின் தந்தையின் சம்பள தகவல்களை ( salary details) கண்டிப்பாக கொடுக்க வேண்டும், குழந்தையின் பள்ளி கட்டணங்களை கட்டக்கூடிய அளவிற்கு அவர் சம்பளம் பெறுகிறாரா என்று பரிசோதித்து பின்னரே குழந்தையை சேர்ப்பார்களாம் (இங்க layoff ல அவனவன் டவுசர உருவிட்டு இருக்கானுக, இதுல இதெல்லாம் வேறயா)
இவள் பயப்படாமல் நேர்முகத்தேர்வு செய்கிறாளா என்பதை சரி பார்க்க ஒரு பள்ளியில் ஒத்திகை பார்த்தார்களாம் (இதெல்லாம் நெம்ப ஓவர்)
இதை எல்லாம் கூட சகித்துக்கொண்டேன் கடைசியா ஒண்ணு சொன்னாங்க பாருங்க…இதுல தான் நான் கொலை வெறி ஆகிட்டேன்..
அது என்னன்னா! திருமணம் ஆனா கையோடு LKG யில் சேர்க்க முன்பதிவு செய்து கொள்கிறவர்கள் அதிகமாகி விட்டார்களாம்..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இதை கேட்டவுடன் சிவாஜி படத்தில் ஸ்ரேயா, ரஜினியை கறுப்பாக இருக்கிறார் என்று கூறியவுடன்….விவேக் டேய்! கடைய மூடுங்கடா! பஸ் ஐ கொளுத்துங்கடா! னு கலாட்ட செய்வார்.. அது மாதிரி ஆகிட்டேன்..
என்னய்யா இது உலக அநியாயமா இருக்கு இதெல்லாம் ரொம்ப ரொம்ப ஓவரா இருக்குன்னு குதித்தேன்,
உடனே மொதல்ல உன் பையனுக்கு (இவனுக்கு இப்ப தான் 6 மாதம் ஆகிறது) என்ன பண்ணுறதுன்னு யோசி! சும்மா இப்படி சொல்றதுல ஒண்ணுமில்ல என்று கூறியதும் காற்று போன பலூன் மாதிரி ஆகிட்டேன். என்ன கொடுமை சார் இது!
கடைசியில் அவளோட அப்பளிகேசன் கொடுப்பது தள்ளிப்போனதால் வெற்றிகரமாக!! திருமணத்தில் கலந்து கொண்டார்கள், இதை பள்ளியில் ஒரு 10 முறை உறுதி செய்து இருப்பார்கள்
)
அரசு பள்ளிகளில் கட்டணம் எதுவும் இல்லை மற்றும் ஒரு சில பள்ளிகளில் சிறப்பான கல்வி, தனியார் பள்ளி மாணவர்களுக்கு சவால் விடும் வகையில் அங்கு படிக்கும் மாணவர்களின் அறிவுத்திறன் என்று சிறப்பாக இருந்தாலும் இன்னும் நாம் தனியார் பள்ளிகளிலே நமது குழந்தைகளை சேர்த்து வருகிறோம்.
தற்போது போட்டி உலகம் ஆகி விட்டபடியால் பெற்றோர்களும் மற்ற குழந்தைகளுடன் போட்டியிட தங்கள் குழந்தைகளை தயார் படுத்த வேண்டியதாக உள்ளது. எனவே கல்வி தான் முக்கியம் என்பதால் பணத்தை பற்றி கவலைப்படாமல் எப்படியாவது தங்கள் பிள்ளைகள் நன்கு படித்தால் போதும் என்று அனைத்து சிரமங்களையும் சகித்துக்கொள்கிறார்கள்.
இதை பயன்படுத்திக்கொண்டு பள்ளிகளும் கல்லூரிகளும் கொள்ளை அடிக்கும் நிறுவனங்களாக மாறி விட்டது. தற்போது கல்வி நிறுவனங்களை தொடங்குவது நல்ல வியாபாரமாக அனைவராலும் கருதப்படுகிறது.
இது குறித்து ஏற்கனவே ஒரு முறை Pre KG க்கு புலம்பி இருக்கிறேன், இது LKG பதிவு (அது போன வருஷம் இது இந்த வருஷம்
) கொஞ்சம் கூடுதல் தகவலுடன்
.
நல்லா கிளப்புறாங்ய்யா பீதிய…
No related posts.


{ 29 comments… read them below or add one }
கொள்ளையோ கொள்ளை…
அந்த பள்ளி ‘வித்யா மந்திரா’ – இல்லே அதுக்கு பக்கத்தில் இன்னொண்ணு – பேரு மறந்து போச்சு…
இது பற்றிய உங்கள் முந்தைய பதிவும் படித்திருக்கிறேன்.
//ஏற்கனவே ஒரு முறை Pre KG க்கு புலம்பி இருக்கிறேன், இது LKG பதிவு //
வேற வழியேயில்லை:(, நீங்க வருஷா வருஷம் இது பற்றிய பதிவு போட வேண்டியிருக்கும்!
Awareness post.. thanks
போங்கப்பா நீங்களும் உங்க கல்யாணமும்.
(இங்க எதுக்குடா இத சொல்றேன்னு நினைக்காதீங்கோ …)
\\இதை பயன்படுத்திக்கொண்டு பள்ளிகளும் கல்லூரிகளும் கொள்ளை அடிக்கும் நிறுவனங்களாக மாறி விட்டது\\
அரசியலுக்கு அடுத்து நல்ல வியா-பாரம்
என்ன கொடுமைங்க இது..
அது நீங்கள் போகும் பள்ளியை பொறுத்து!
என் மகளுக்கு
எல்.கே.ஜி முதல் பீஸ் 1500
மாதம் 120*12=1440+1500=2940
யு.கே.ஜி முதல் பீஸ் 1750
மாதம் 130*12=1560+1750=3310
முதல் வகுப்பு 2000
மாதம் 140*12=1680+2000=3680
நான் படிக்க அனுப்புறேன் ஆனா நீங்க டாக்டர், இஞ்ஞினியர்ன்னு கனவோட அனுப்புறிங்க அதான் வித்தியாசம்
//ச்சின்னப் பையன் said…
கொள்ளையோ கொள்ளை…
அந்த பள்ளி ‘வித்யா மந்திரா’ – இல்லே அதுக்கு பக்கத்தில் இன்னொண்ணு – பேரு மறந்து போச்சு…//
ஹி ஹி எனக்கும் மறந்து போச்சு ஆனால் அடையாறு
===============================================================================
//ராமலக்ஷ்மி said…
வேற வழியேயில்லை:(, நீங்க வருஷா வருஷம் இது பற்றிய பதிவு போட வேண்டியிருக்கும்!//
அப்படிதான் ஆகும் போல இருக்கு
===============================================================================
//தமிழ்நெஞ்சம் said…
Awareness post..//
நன்றி தமிழ்நெஞ்சம்
===============================================================================
//நட்புடன் ஜமால் said…
போங்கப்பா நீங்களும் உங்க கல்யாணமும்.//
ஜமால் நீங்களும் தயாராகுங்க
===============================================================================
//பிரேம்ஜி said…
என்ன கொடுமைங்க இது..//
உலகக்கொடுமைங்க
===============================================================================
//வால்பையன் said…
அது நீங்கள் போகும் பள்ளியை பொறுத்து!//
நீங்கள் கூறுவது சரி தான் அருண்.
//நான் படிக்க அனுப்புறேன் ஆனா நீங்க டாக்டர், இஞ்ஞினியர்ன்னு கனவோட அனுப்புறிங்க அதான் வித்தியாசம்//
நான் கூறுவது ரொம்ப பெரிய பள்ளி பற்றி அல்ல…
நீங்கள் இருப்பது ஈரோடு ..இது சென்னை
வித்யாசம் இருக்கும் என்றாலும் நீங்கள் கூறுவது போல பள்ளியை பொறுத்தது தான். சென்னையில் பெரும்பாலனவர்கள் இதை போன்ற பள்ளிகளிலே சேர்க்கிறார்கள், நீங்கள் வேண்டும் என்றால் விசாரித்து பாருங்க
அரசாங்கம் கல்வியை கொடுப்பது தனது கடமையில்லை என்று கைகழுவியதாலும், மல்டி ஸ்டோர்போல கலர் கலரா காண்வெண்ட்டுகளுக்கு அனுமதி கொடுத்ததாலும் அதுவும் தற்போது சர்வதேச தரம்வாய்ந்த பள்ளிகள் என்று புரளி விடுவதாலும் ப்ரீகேஜீ முதல் யூகேஜீ வரை மாணவர்களை சேர்ப்பதற்கு சென்னையில் விழி பிதுங்கி நிற்கின்றனர் பெற்றோர்கள். அதுவும் விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி இவர்களையும் பற்றிக் கொண்டதால் 30 முதல் 60 சதவிகிதம் கட்டண உயர்வு வேறாம்! இவர்களை உதைப்பதற்கு என்று ஒரு பட்டாளத்தை ரெடி பண்ணாமல் இருக்கும் வரை இதுதொடரத்தான் செய்யும். உதை இவர்களுக்கு மட்டுமல்ல ஆட்சியாளர்களுக்கும் சேர்த்துதான்.
same blood
ஹாஹா…6 மாசத்திலேயே இந்த நிலமையா
போற போக்கப் பார்த்தா அடுத்த மாசம் யூனிவர்சிட்டி அட்மிசன் பத்தி எழுதுவீங்க போல இருக்கே..
கிரிஜி,
சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க.. ஏங்க ஒரு பள்ளியைக் குறித்து பதிவு.. அதிலே அந்த பள்ளியின் பேரே காணோம். இது ‘கிசுகிசு’ பதிவு மாதிரியா??
அப்போ நானும் அடிச்சி விடலாமா? தி. நகர்லே LKGக்கு 1 லட்சம் வாங்கறாங்க. தாம்பரத்துலே 2 லட்சம் வாங்கறாங்கன்னு..
ஒரு வாதத்துக்குதான் கேக்கறேன்… டென்சனாகத் தேவையில்லை.
எங்க அக்கா பொண்ணு பேரும் ஸ்ரேயா. அவங்க திருச்சில இருக்காங்க. இந்த அளவுக்கு கொள்ளை எல்லாம் இல்ல. ஆனா போன வாரம் தான் குட்டிய pre-kg சேக்கலாம்ன்னு வீட்டு பக்கத்துல உள்ள ஸ்கூல்ல முயற்சி பண்ணி இருக்காங்க. அதுக்கு நேர்காணல் உண்டாம். அன்னிக்கின்னு குழந்தை விடாம அழுது ரகளை பண்ணி இருக்கா. அதுனால அட்மிஷன் ரிஜெக்ட் ஆயிடும் போலன்னு என் கிட்ட போன்ல சொன்னா. (அட்மிஷன் successful canditates list ஒரு வாரம் கழிச்சி ஒட்டுவாங்கலாம் ) நான் கன்னாபின்னான்னு கத்தினேன். உங்க பதிவ பாத்தா அது எவ்வளவோ தேவலாம் போல. இத்தனைக்கும் எங்க அக்கா மாநகராட்சி ஸ்கூல்ல படிச்சி நல்ல நிலைமைல தான் இருக்கா. இத அவங்கவங்க நிறுத்தனும். ஆனா ரொம்ப கஷ்டம்ன்னு நினைக்கறேன். தேவை இல்லாத பயம். நம்ப குழந்தை மட்டும் பின்தங்கிடுவான்னு ! அடுத்தது, வீட்டுல உள்ளவங்களோட சண்டை வேற போடவேண்டி வரும்.
எப்படியும் உங்க பையனைச் சேர்க்கும்போது இதைவிட பெரிய்ய்ய்ய்ய்ய பதிவா போட வேண்டி வரும்… பார்த்துக்கிட்டே இருங்க. இப்பவே தயார் பண்ணிக்கிடுங்னா…
வினோஜாஸன்
என்வழி
//சந்திப்பு said…
தற்போது சர்வதேச தரம்வாய்ந்த பள்ளிகள் என்று புரளி விடுவதாலும் ப்ரீகேஜீ முதல் யூகேஜீ வரை மாணவர்களை சேர்ப்பதற்கு சென்னையில் விழி பிதுங்கி நிற்கின்றனர் பெற்றோர்கள்.//
உண்மை
//உதை இவர்களுக்கு மட்டுமல்ல ஆட்சியாளர்களுக்கும் சேர்த்துதான்//
இப்படி கூறி நாம் மனதை தேற்றி கொள்ள வேண்டியது தான்
===============================================================================
//முரளிகண்ணன் said…
same blood//
===============================================================================
//’டொன்’ லீ said…
போற போக்கப் பார்த்தா அடுத்த மாசம் யூனிவர்சிட்டி அட்மிசன் பத்தி எழுதுவீங்க போல இருக்கே..//
விவரங்கள் தெரிந்தால் கண்டிப்பாக எழுதலாம்
===============================================================================
//ச்சின்னப் பையன் said…
கிரிஜி,
சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க..//
தவறா நினைக்கும் அளவிற்கு நீங்க எதுவும் கேட்கவில்லை
//ஏங்க ஒரு பள்ளியைக் குறித்து பதிவு.. அதிலே அந்த பள்ளியின் பேரே காணோம். இது ‘கிசுகிசு’ பதிவு மாதிரியா??//
கிசுகிசு பதிவெல்லாம் கிடையாதுங்க, நடைமுறை பதிவு.
இது நானாக நேரடியாக சென்று திரட்டிய தகவல் கிடையாது மற்றவர்கள் கூறியதை வைத்து எழுதியது. எனவே பள்ளியின் பெயரை எழுதுவது சரியாக இருக்காது என்பது என் கருத்து அதுவுமில்லாமல் எனக்கு பள்ளியின் பெயர் நினைவில்லை. பள்ளியின் பெயர் முக்கியமில்லை பெரும்பாலான அப்பர் மிடில் க்ளாஸ் பள்ளிகளின் நிலைமை இது தான்.
//அப்போ நானும் அடிச்சி விடலாமா? தி. நகர்லே LKGக்கு 1 லட்சம் வாங்கறாங்க. தாம்பரத்துலே 2 லட்சம் வாங்கறாங்கன்னு..//
//ஒரு வாதத்துக்குதான் கேக்கறேன்… //
சென்னையில் பெரும்பாலனா அப்பர் மிடில் கிளாஸ் மக்களின் நிலை இது தான். உங்களுக்கு என் பதிவில் திருப்தி இல்லை என்றால் உங்க நண்பர்களிடம் விசாரித்து பாருங்கள்.
//டென்சனாகத் தேவையில்லை//
சந்தேகமே வேண்டாம்.. அந்த நிலையை எப்போதோ கடந்து விட்டேன்
===============================================================================
//மணிகண்டன் said…
அதுக்கு நேர்காணல் உண்டாம். அன்னிக்கின்னு குழந்தை விடாம அழுது ரகளை பண்ணி இருக்கா. அதுனால அட்மிஷன் ரிஜெக்ட் ஆயிடும் போலன்னு என் கிட்ட போன்ல சொன்னா.//
நீங்க சொன்னதால் நான் கூறவில்லை உண்மையாகவே இவளோட அண்ணன் வரிசையில் நின்று பொறுமை இழந்து நேர்முக தேர்வில்அழுததால் ஒரு பள்ளியில் ரிஜெக்ட் செய்து விட்டார்கள்
//தேவை இல்லாத பயம். நம்ப குழந்தை மட்டும் பின்தங்கிடுவான்னு ! அடுத்தது, வீட்டுல உள்ளவங்களோட சண்டை வேற போடவேண்டி வரும்.//
100 % உண்மை. இந்த காரணங்களுக்காகவே பலர் வாய் மூடி மௌனியாக இருக்கிறார்கள்.
==============================================================================
//ARASIAL said…
எப்படியும் உங்க பையனைச் சேர்க்கும்போது இதைவிட பெரிய்ய்ய்ய்ய்ய பதிவா போட வேண்டி வரும்//
என்னமோ போங்க! ஆல்ரெடி கலக்க ஆரம்பித்து விட்டது
))
கிரி அவசியமான பதிவு. நான் அரசு பள்ளியில் தான் படித்தேன். அடிப்படை ஆங்கிலமோ, கணிதமோ, அறிவியலோ எதிலுமே சோடை போகவில்லை. எனக்கு அமைந்த ஆசிரியர்கள் அப்படி. இப்பொழுது பலரும் ஓய்வு பெற்று விட்டனர். இன்னும் அந்த பள்ளி அதே தரத்தில் இருக்கிறதா என்று தெரியவில்லை.
ஆனால் நான் இப்பொழுது திருச்சியில் இருந்தால் எனது முதல் சாய்ஸ் எனது பள்ளி தான். என்ன சொல்வது? காலம் மாறி விட்டது. நாமும் மாறித்தான் ஆக வேண்டும். மாறாமல் இருந்தால் பின் தங்கி விடுவோம்.
வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு .
நான் படித்தது புதுக்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பாலையா பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில். சென்னையில் நான் எப்படி இருக்கிறேன் என்பதற்கு கண்ணால் பார்த்த கிரி அண்ணனே சாட்சி. என் மகள் படிப்பதும் வெகு சாதாரணப் பள்ளி. சத்தியமாக நான் இதைப் பெருமைக்காகக் கூறவில்லை. பொருளாதாரம் மட்டுமே வாழ்க்கை என்று பெரும்பாலான பெற்றோர்கள் நம்பத் துவங்கிவிட்ட இந் நிலையில் இது போன்ற பள்ளிகளில் தங்கள் பொருளாதாரத்தைத் தொலைப்பதைத் தவிர வேறு வழி இல்லை. பொருள் கடந்து வாழ்வில் எவ்வளவோ உள்ளது.
//SathyaPriyan said…
கிரி அவசியமான பதிவு.//
நன்றி சத்யபிரியன்
//காலம் மாறி விட்டது. நாமும் மாறித்தான் ஆக வேண்டும். மாறாமல் இருந்தால் பின் தங்கி விடுவோம்.//
இதுவே அனைத்து மக்களின் எண்ணமும் பயமும்.
===============================================================================
//jayam said…
வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு //
வாங்க ஜெயம் இதை யாருக்கு சொல்றீங்க
===============================================================================
// எம்.எம்.அப்துல்லா said…
நான் படித்தது புதுக்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பாலையா பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில். சென்னையில் நான் எப்படி இருக்கிறேன் என்பதற்கு கண்ணால் பார்த்த கிரி அண்ணனே சாட்சி.//
உண்மை தான் அப்துல்லா
//நான் இதைப் பெருமைக்காகக் கூறவில்லை.//
இதை உங்களை அறிந்தவர் அனைவருக்கும் தெரியும்.
//பொருளாதாரம் மட்டுமே வாழ்க்கை என்று பெரும்பாலான பெற்றோர்கள் நம்பத் துவங்கிவிட்ட இந் நிலையில் இது போன்ற பள்ளிகளில் தங்கள் பொருளாதாரத்தைத் தொலைப்பதைத் தவிர வேறு வழி இல்லை. //
தெரிந்தே தான் அனைவரும் இதில் பணம் அதிகம் கட்டுகிறார்கள். அனைவரின் சமாதானமும் “நம் குழந்தைகள் நன்கு படித்தாலே போதும்” எந்த சிரமங்களையும் ஏற்று கொள்ள தயார் என்ற மனோபாவம் தான்.
நான், என் அக்கா ரெண்டுபேருமே அரசு பள்ளிகள்தான் படிச்சோம்.அவ இன்னைக்கு MBBS முடிச்சுட்டா, Tuition கூட போனதில்லை… நான் MBA முடிச்சிருக்கேன், என்னோட +1 admission fee வெறும் Rs.83 தான்.
படிக்கனும்னா எங்கிருந்து வேனா படிக்கலாம். ஏட்டுக்கல்வி மட்டும் வாழ்க்கைக்கு போதாது….
நான் பொருளாதார ரீதியா எந்த உயரத்துக்கு போனாலும் எம்மக்களுக்கு அரசு பள்ளிதான். படிப்பையும் தாண்டி உண்மையான நட்பு, சமுதாய ஏற்றத்தாழ்வு, வாழ்க்கையை பத்தின அறிவு இதெல்லாம் தனியார் பள்ளிகள்ல கிடைக்கறதைவிட அரசு பள்ளிகள்தான் அதிகம்…
தனியார் பள்ளிகளுக்கு பல்லாக்கு தூக்கறவரைக்கும் இந்த நிலை மாறாது. எனக்கு பணமும் வாங்கி, இவ்ளோ கண்டிசன்ஸ் போடறவங்களைவிட அதை கர்ம சிரத்தையோட தர்றதுக்கு க்யுல நிக்கறவங்க மேலதான் கடுப்பு.
இந்த கஷ்டத்த இப்போதான் ரெண்டு நாள் முன்னாடி நான் அனுபவிச்சேன். அதாங்க, அந்த LKG அட்மிஷன்…….
யப்பா, இதுக்கே, இம்புட்டு நொரை தள்ளிடுச்சே…. இன்னியும் எவ்ளோ இருக்கு…… நெனச்சா இப்போவே கண்ணா கட்டுதே??
குடுக்கறதுக்கு ரெடியா நம்மவர்கள் இருக்கும் வரை வாங்குபவர்களை குற்றம் சொல்லி ப்ரயோஜனம் இல்லை
(((((((((
///வால்பையன் said…
அது நீங்கள் போகும் பள்ளியை பொறுத்து!
என் மகளுக்கு
எல்.கே.ஜி முதல் பீஸ் 1500
மாதம் 120*12=1440+1500=2940
யு.கே.ஜி முதல் பீஸ் 1750
மாதம் 130*12=1560+1750=3310
முதல் வகுப்பு 2000
மாதம் 140*12=1680+2000=3680
நான் படிக்க அனுப்புறேன் ஆனா நீங்க டாக்டர், இஞ்ஞினியர்ன்னு கனவோட அனுப்புறிங்க அதான் வித்தியாசம்///
நான் வழிமொழிகின்றேன்
//பாசகி said…
படிக்கனும்னா எங்கிருந்து வேனா படிக்கலாம். ஏட்டுக்கல்வி மட்டும் வாழ்க்கைக்கு போதாது….//
நீங்கள் கூறுவது சரி தான் என்றாலும் இது அனைவருக்கும் பொருந்துமா என்பது சந்தேகம்.
//வாழ்க்கையை பத்தின அறிவு இதெல்லாம் தனியார் பள்ளிகள்ல கிடைக்கறதைவிட அரசு பள்ளிகள்தான் அதிகம்…//
வழிமொழிகிறேன்
//தனியார் பள்ளிகளுக்கு பல்லாக்கு தூக்கறவரைக்கும் இந்த நிலை மாறாது. எனக்கு பணமும் வாங்கி, இவ்ளோ கண்டிசன்ஸ் போடறவங்களைவிட அதை கர்ம சிரத்தையோட தர்றதுக்கு க்யுல நிக்கறவங்க மேலதான் கடுப்பு.//
ஒவ்வொருவத்தருக்கும் ஒவ்வொரு பிரச்சனைகள், இதில் நம் கருத்தை கூறலாமே தவிர சரி தவறு என்று முடிவு செய்வது சிரமமே.
================================================================================
//R.Gopi said…
இந்த கஷ்டத்த இப்போதான் ரெண்டு நாள் முன்னாடி நான் அனுபவிச்சேன். அதாங்க, அந்த LKG அட்மிஷன்…….//
//யப்பா, இதுக்கே, இம்புட்டு நொரை தள்ளிடுச்சே…. இன்னியும் எவ்ளோ இருக்கு…… நெனச்சா இப்போவே கண்ணா கட்டுதே??//
எனக்கு பேதி ஆகுது
=================================================================================
//மங்களூர் சிவா said…
(((((((((//
குடுக்கறதுக்கு ரெடியா நம்மவர்கள் இருக்கும் வரை வாங்குபவர்களை குற்றம் சொல்லி ப்ரயோஜனம் இல்லை
பூனைக்கு யார் மணி கட்டுவது எனபது தான் பெரிய பிரச்சனை
=================================================================================
//ஆ.ஞானசேகரன் said…
நான் வழிமொழிகின்றேன்//
இது அவரவர் இருக்கும் நகரங்களையும், எந்த க்ளாஸ் (லோயர், மிடில், அப்பர் மிடில்) ல் இருக்கிறார்கள் என்பதையும் பொறுத்தது.
அபியும் நானும் பார்க்கவில்லை?
அப்படியே இருக்கு நிஜத்திலும்.
//வடுவூர் குமார் said…
அபியும் நானும் பார்க்கவில்லை?
அப்படியே இருக்கு நிஜத்திலும்.//
ஹா ஹா ஹா உண்மையில் பிரகாஷ்ராஜ் நிலைமை மாதிரி தான் பல பேர் நிலைமை.. அந்த படம் பற்றி குறிப்பிட நினைத்து மறந்து விட்டேன்.
//போங்கப்பா நீங்களும் உங்க கல்யாணமும்.//
I agree to Jamal – Thank god I am not married LOL
நான் இந்த கருமாந்திரங்களை ஒரு தகப்பன் என்ற முறையில் அனுபவித்து இருக்கிறேன்..பகல் கொள்ளை..”அவா” நடத்தும் பள்ளிகளில் அட்டகாசம் அதிகம்…
உங்களுக்கும் பையன் இருக்கிறான்.. இன்னும் 2 வருஷத்துல “ஸ்டார்ட் மியூசிக்” தான் …. பார்க்க தானே போறோம் நாங்க
)