Wednesday, March 25, 2009

சிறு தலைவலிக்கு கூட மாத்திரை சாப்பிடுபவரா? கண்டிப்பா இதை படிங்க

                            
நம்மில் பல பேர் சிறு தலைவலி, சளி, காய்ச்சல் போன்றவற்றிக்கு கூட உடனே மருந்து சாப்பிட்டு விடுவார்கள். இதில் என்ன தவறு இருக்கு! தலைவலி காய்ச்சல் என்றால் மருந்து எடுத்துக்கொண்டால் தானே சரி ஆகும்! என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

நான் கூறுவது சிறு தலைவலி மற்றும் தொடக்க காய்ச்சலுக்கு மட்டுமே! தீவிர பிரச்சனைக்கு அல்ல.

நமக்கு அடிக்கடி தலைவலி சளி காய்ச்சல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் நம் உடலில் எதிர்ப்பு சக்தி இல்லாததே. அதனால தான் இது ஒரு சிலருக்கு அடிக்கடி ஏற்படுகிறது. கொஞ்சம் தண்ணீர் மாறினாலோ, தட்பவெட்ப நிலை மாறினாலோ இதன் தாக்கம் அதிகமாக இருக்கும், இதற்க்கு முக்கிய காரணம் நம் உடல் அந்த மாற்றத்தை ஏற்று கொள்ளக்கூடிய அளவிற்கு திராணி இல்லாததே காரணம்.

கொஞ்சம் (நிறைய) பேருக்கு, இப்படின்னா காய்ச்சல் தலைவலி சளி வந்து விடும் அவர்களை கவனித்தீர்கள் என்றால் அவர்கள் அதிகம் மருந்து மாத்திரைகள் உட்கொள்பவர்களா இருப்பார்கள்.

ஒரு சிலருக்கு இவைகள் அவர்கள் பக்கமே வராது அப்படியே வந்தாலும் விரைவில் சரியாகி விடும், காரணம் இதை போல நேர்ந்தால் உடனடியாக மருந்து உட்கொள்ள மாட்டார்கள். ஏதாவது சூடா காஃபி, தூக்கம் அல்லது ரசம் சாதமோடு முடித்து கொள்வார்கள்.

நம் உடலுக்கு இடப்பட்டிருக்கும் கட்டளையே ஏதாவது நம் உடலுக்கு நேர்ந்தால் அதை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனபது தான். நமக்கு ஏற்படும் பிரச்னையை தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் நம் உடல் இருக்கும். எனவே அது செய்து முடிக்கும் முன்பே நாம் மருந்து எடுத்துகொண்டால் நம் உடல் அதற்க்கு பழகி விடும். எனவே வரும் தலைவலி காய்ச்சல் போன்றவற்றை தடுக்க முயற்சிகள் எடுக்காது, அப்படி வந்தவற்றையும் எளிதில் குணப்படுத்தாது, எனவே நீங்கள் மருந்து சாப்பிட்டால் மட்டுமே சரியாகும் என்ற நிலைக்கு உங்கள் உடல்நிலை வந்து விடும்.

முதலில் தலைவலிக்கு ஒரு மாத்திரை சாப்பிட்டவர்கள், போக போக இரண்டு மூன்று சாப்பிட்டால் தான் சரி ஆகும் என்ற நிலைமை வந்து விடும் அல்லது ஸ்ட்ராங்கானா மருந்து உட்கொண்டால் மட்டுமே கேட்கும் படி நம் உடல் பழகி விடும், அதோடில்லாமல் நமது உடலின் எதிர்ப்பு சக்தியும் குறைந்து அடிக்கடி தலைவலி சளி காய்ச்சல் போன்றவைகள் ஆக்கிரமித்து கொள்ளும், உடனே குணமும் ஆகாது ஒரு வாரத்திற்கு மூக்கை உறிஞ்சுகிட்டு இருக்க வேண்டியது தான்.

இதை போன்ற நிலையை தவிர்க்க மருத்துவரிடம் செல்லாமல் நீங்களே தலைவலிக்கும் சளிக்கும் காய்ச்சலுக்கும் (Saridon, Crosin, Vicks action 500, Metacin, Anacin(temporarily relieves minor aches and pains due to headache) போன்றவை) மருந்து உட்கொள்வீர்கள் தானே, அந்த சமயங்களில் அதற்க்கு பதிலாக ஒரு தூக்கமோ, சூடாக ஒரு காஃபியோ அல்லது ரசம் சாதம் மட்டுமோ சாப்பிட்டு நன்கு ஓய்வு எடுத்தாலே போதுமானது. இரவில் படுக்கும் போது வயிற்று வலி வந்தால் உடலின் உஷ்ணமாக கூட இருக்கலாம், இதற்க்கு சிறிது வெந்தயத்தை மோரில் கலந்து சாப்பிட்ட பிறகு தூங்கினால் சரி ஆகி விடும்.

இதை போல செய்ய முடியாத நிலைமையில் இருந்தால் மட்டுமே மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.

மருந்து மாத்திரைகளை தவிர்த்தால் மட்டுமே (அவசியமான நேரங்களில் அல்ல) நமது உடல் நலம் சிறப்பாக இருக்கும், இதை போல தொந்தரவுகள் நம்மை நெருங்காது.

டிஸ்கி

மேற்கூறிய அனைத்தும் தொடக்க நிலைக்கு மட்டுமே, இதற்காக நாமே மருத்துவராக கருதி கொண்டு அலட்சியமாக இருந்து விடக்கூடாது, குணமாகவில்லை என்றால் மருத்துவரை அணுகி சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.

Buzz It

28 COMMENTS:

ஆ.முத்துராமலிங்கம் on 7:54 AM, March 25, 2009 said...

//ஒரு சிலருக்கு இவைகள் அவர்கள் பக்கமே வராது அப்படியே வந்தாலும் விரைவில் சரியாகி விடும், காரணம் இதை போல நேர்ந்தால் உடனடியாக மருந்து உட்கொள்ள மாட்டார்கள். ஏதாவது சூடா காஃபி, தூக்கம் அல்லது ரசம் சாதமோடு முடித்து கொள்வார்கள்//

நான் இந்த வகையாரா. எனக்கும் இப் பிரக்ஞை உண்டு, நல்ல பதிவு
படிப்பவர்கள் பயண்டைவார்கள்

கிஷோர் on 7:54 AM, March 25, 2009 said...

டாக்டர் கிரி வாழ்க.

நல்ல உபயோகமான பதிவு.

ஆனால் மருத்துவர்கள் சளிக்கு நீண்ட நாள் மருந்து உட்கொள்ளச்சொல்கிறார்கள். அதனாலேயே அப்படியே பழகிவிடுகின்றது

வடகரை வேலன் on 9:05 AM, March 25, 2009 said...

டாக்டர் கிரி,

தலைவலி வருவது வேறொரு நோயின் ஆரம்பகட்ட அறிகுறியாகக்கூட இருக்கலாம். சுய மருத்துவம் ஆபத்தானது.

அதிலும் பலசரக்குக் கடையில் வாங்கிச்சாப்பிடும் மாத்திரைகள் மிகவும் ஆபத்து. எக்ஸ்பைரி ஆனது ஆகாதது எதுவும் தெரியாது. அதே போல பாரசிட்டமால் 50 mg வாங்கி 10 வயது குழந்தைக்குக் குடுப்பதை பார்த்திருக்கிறேன். இது மிக மிக ஆபத்தானது. வயதிற்குத் தகுந்த டோஸ்தான் கொடுக்க வேண்டும்.

பிரேம்ஜி on 9:35 AM, March 25, 2009 said...

உபயோகமான பதிவு.மிக்க நன்றி கிரி.

Suresh on 9:43 AM, March 25, 2009 said...

நல்ல உபயோகமான பதிவு.

கிரி on 10:54 AM, March 25, 2009 said...

// ஆ.முத்துராமலிங்கம் said...
நான் இந்த வகையாரா. எனக்கும் இப் பிரக்ஞை உண்டு, நல்ல பதிவு
படிப்பவர்கள் பயண்டைவார்கள்//

நன்றி முத்துராமலிங்கம் உங்கள் முதல் வருகைக்கும் சேர்த்து

================================================================================

// கிஷோர் said...
டாக்டர் கிரி வாழ்க.//

ஐயையோ! இது டாக்டர் விஜய் மாதிரியா அவ்வ்வ்வ்

//நல்ல உபயோகமான பதிவு.//

நன்றி

//ஆனால் மருத்துவர்கள் சளிக்கு நீண்ட நாள் மருந்து உட்கொள்ளச்சொல்கிறார்கள். அதனாலேயே அப்படியே பழகிவிடுகின்றது//

சாதாராண சளிக்கு அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் அவ்வாறு கூற மாட்டார்கள்.

===============================================================================

//வடகரை வேலன் said...
டாக்டர் கிரி//

நீங்களுமா! :-((((

//தலைவலி வருவது வேறொரு நோயின் ஆரம்பகட்ட அறிகுறியாகக்கூட இருக்கலாம். சுய மருத்துவம் ஆபத்தானது.//

சரி தான் வேலன். நம்ம ஆளுங்க தன்னை மருத்துவர் ரேஞ்சுக்கு கருதி கொண்டு செயல்படுவார்கள் அதன் பின் விளைவுகள் பற்றி அறியாமல்.

// பலசரக்குக் கடையில் வாங்கிச்சாப்பிடும் மாத்திரைகள் மிகவும் ஆபத்து. எக்ஸ்பைரி ஆனது ஆகாதது எதுவும் தெரியாது.//

மிக மிக உண்மை

=============================================================================

பிரேம்ஜி மற்றும் சுரேஷ் கருத்திற்கு நன்றி :-)

nilalgal on 11:33 AM, March 25, 2009 said...

hi giri,

nan ungal fan.neengal eluthiya anaithu pathivaiyum udaney padithu viduven.karuthukal therivika vendum endru asai than aanal atharkul system problem endru evanavathu kuptu viduvan nan poitu varuvatharkul page close agi irukum kadupagi viduven.enaku ungal eluthu nadai migavum pidikum manathil patathai solividuvirkal. nanaum ungal ragam than athanal niraiya pirachanaiyum santhichu iruken.neengal ithai kuda oru pathivaga podalam.nan system engineer aga chennai il velai seikiren.ini kandipaga en karuthukal ungal pathivil irukum.

nilalgal on 11:39 AM, March 25, 2009 said...

doctor giri,

neengal intha pathivu pota neramo ennavo enaku cold.nan eppothum tablet sapdamaten.giri oru chinna help tamilil karuthugal eluthuvatharku idea kudukavum.nalla pathivu aanal sila perai matra mudiyathu.

SUREஷ் on 11:58 AM, March 25, 2009 said...

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்று சொல்வார்கள். அந்த அளவு என்பதற்கு அளவு கோல் கொடுப்பவர் மருத்துவர். மூன்றுநாள் என்பது நீண்டகாலமா குறுகிய காலமா என்று முடிவுசெய்பவர் மகா மருத்துவர்.(மருத்துவருக்கு சம்பளம் தரும் நோயாளி)

நட்புடன் ஜமால் on 12:01 PM, March 25, 2009 said...

இப்பல்லாம் குறைத்து கொண்டேன்

ராஜ நடராஜன் on 12:36 PM, March 25, 2009 said...

சித்த வைத்தியம் ஆரம்பிச்சுட்டீங்க!மரம் எப்ப வெட்டுவீங்க:)

எனக்கு தலைவலின்னா தூக்கம்தான் மருந்து!பெரும்பாலும் தூக்க மருந்து நல்லாவே இருக்கும்.

இனியவள் புனிதா on 1:15 PM, March 25, 2009 said...

எனக்கு மிகவும் உபயோகமான பதிவு!!நன்றி கிரி

வால்பையன் on 1:16 PM, March 25, 2009 said...

//கொஞ்சம் (நிறைய) பேருக்கு, இப்படின்னா காய்ச்சல் தலைவலி சளி வந்து விடும் அவர்களை கவனித்தீர்கள் என்றால் அவர்கள் அதிகம் மருந்து மாத்திரைகள் உட்கொள்பவர்களா இருப்பார்கள்.//

காய்ச்சலை விடுங்க, சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும், அது தான் தலைவலிக்கும் காரணமாக இருக்கும். அதற்கு காரணம் சைனஸ் ப்ராபளம்.
அதனை சரி செய்தால் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம்

வால்பையன் on 1:17 PM, March 25, 2009 said...

//ஒரு தூக்கமோ, சூடாக ஒரு காஃபியோ அல்லது ரசம் சாதம் மட்டுமோ சாப்பிட்டு நன்கு ஓய்வு எடுத்தாலே போதுமானது.//

நண்பரே காப்பிக்கும் மாத்திரைக்கும் பெரிய வித்தியாசமில்லை. அதனை சேர்க்க வேண்டாம்.

பாசகி on 3:10 PM, March 25, 2009 said...

நாட்டு வைத்தியர் கிரி, :)

இதுதான் all round performance-ஆ, கலக்குங்க!

சளி, காய்ச்சலுக்கு நான் மருத்துவர்கிட்ட போயி ஏழெட்டு வருசமாச்சு...

ராமலக்ஷ்மி on 3:17 PM, March 25, 2009 said...

டாக்டர் ஒரு போதும் மாத்திரைகளைச் சாப்பிடாதீர்கள் என சொல்ல மாட்டாரே:))! ஆகையால் நீங்கள் டாக்டர் இல்லை சரியா:))? பயனுள்ள பதிவு. உஷ்ணத்துக்கு வெந்தயத்தை மோரில் முன்னிரவே ஊறவைத்து காலை வெற்று வயிற்றில் நன்கு சவைத்து சாப்பிட்டு அந்த மோரையும் குடிப்பது நல்ல பலன் தரும்.

கிரி on 6:39 PM, March 25, 2009 said...

//nilalgal said...
nan ungal fan.neengal eluthiya anaithu pathivaiyum udaney padithu viduven//

என்னையா இது! நமக்கும் ஒரு விசிறியா!!

// atharkul system problem endru evanavathu kuptu viduvan //

ஹா ஹா ஹா உங்கள் கஷ்டம் புரிகிறது. நானும் ஒரு சிஸ்டம் அட்மின் தான் (முன்பு)

//nan system engineer aga chennai il velai seikiren.//

நான் சென்னையில் 10 வருடம் பணி புரிந்து இருக்கிறேன் சிஸ்டம் அட்மினாக.

//ini kandipaga en karuthukal ungal pathivil irukum//

நன்றி :-)

//giri oru chinna help tamilil karuthugal eluthuvatharku idea kudukavum.//

என்பதிவிலேயே அதற்க்கு வசதி இருக்கு, இல்லை என்றால் http://www.google.com/transliterate/indic/Tamil செல்லுங்கள்.

================================================================================

//SUREஷ் said...
மூன்றுநாள் என்பது நீண்டகாலமா குறுகிய காலமா என்று முடிவுசெய்பவர் மகா மருத்துவர்//

ஒரு சிலர் தேவையில்லாமல் அதிக நாட்கள் மருந்து கொடுப்பதாக ஒரு உணர்வு எனக்கு

================================================================================

//நட்புடன் ஜமால் said...
இப்பல்லாம் குறைத்து கொண்டேன்//

நல்ல காரியம் செய்தீங்க

================================================================================

//ராஜ நடராஜன் said...
சித்த வைத்தியம் ஆரம்பிச்சுட்டீங்க!மரம் எப்ப வெட்டுவீங்க:)//

மரமா!!!!!

//எனக்கு தலைவலின்னா தூக்கம்தான் மருந்து!பெரும்பாலும் தூக்க மருந்து நல்லாவே இருக்கும்.//

சிறந்த மருந்து :-))

================================================================================

//இனியவள் புனிதா said...
எனக்கு மிகவும் உபயோகமான பதிவு!!நன்றி கிரி//

மருந்து நிறையா சாப்பிடுறீங்களா! :-) குறைத்துக்குங்க

================================================================================

//வால்பையன் said...
நண்பரே காப்பிக்கும் மாத்திரைக்கும் பெரிய வித்தியாசமில்லை. அதனை சேர்க்க வேண்டாம்.//

எப்பவாது குடிப்பதில் தவறில்லை அருண்

================================================================================

//பாசகி said...
நாட்டு வைத்தியர் கிரி, :)
இதுதான் all round performance-ஆ, கலக்குங்க!//

ஒரு விளம்பரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

===============================================================================

//ராமலக்ஷ்மி said...
டாக்டர் ஒரு போதும் மாத்திரைகளைச் சாப்பிடாதீர்கள் என சொல்ல மாட்டாரே:))! ஆகையால் நீங்கள் டாக்டர் இல்லை சரியா:))? //

:-)))) ஆமாம்

//உஷ்ணத்துக்கு வெந்தயத்தை மோரில் முன்னிரவே ஊறவைத்து காலை வெற்று வயிற்றில் நன்கு சவைத்து சாப்பிட்டு அந்த மோரையும் குடிப்பது நல்ல பலன் தரும்//

இது மிக மிக நல்லது.

நான் முதலில் field வேலையில் இருந்தேன், சுற்றி கொண்டே இருக்க வேண்டும், அந்த சமயத்தில் என் முதலாளி (குடும்ப நண்பர் தான்) யின் வீட்டில் இரவு தங்க நேர்ந்த போது எனக்கு வயிற்று வலி வந்தது, அப்போது அவரின் அம்மா தான் இது உஷ்ணமாக இருக்கும் வெந்தயம் கொடுத்து மோருடன் சேர்த்து குடிக்க கூறினார்கள், அதன் பிறகு தூங்கி விட்டேன், வலியும் போய் விட்டது. அன்றிலிருந்து இன்று வரை இதை போல நேர்ந்தால் முதலுதவியாக இதை தான் பின்பற்றுகிறேன்.

ஆ.ஞானசேகரன் on 7:09 PM, March 25, 2009 said...

நல்ல கருத்துக்கள்,.... நண்பரே தலைவலி என்பது நோய் இல்லை.. ஒரு நோய்க்காண வெளிப்பாடு அல்லது ஒரு நோயின் வெளிப்பாடாகும்.. மற்றும் மன அழுத்தம் போன்றவற்றாலும் வரலாம்... முதலில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று தலைவலி,.. அலச்சியம் செய்யக்கூடாது.... பகிர்விற்கு நன்றி கிரி

தமிழன்-கறுப்பி... on 10:03 PM, March 25, 2009 said...

அண்ணே எப்ப டாக்டரானிங்க..

ஆமா கண்டபடி மாத்திரை எடுத்தா கூடாதுன்னுதான் சொல்லாறங்க...

ஆமா இந்த டென்ஷனை குறைக்கிற மாத்திரை ஏதாவது இருக்கா... :)

Logan on 12:58 AM, March 26, 2009 said...

பாதி படிகர்த்துகுள்ள ஒரே தலைவலி, இருங்க ஒரு அனாசின் போட்டுட்டு வந்து மீதி பதிவ படிக்கிறேன்

arun on 1:29 AM, March 26, 2009 said...

very nice informative article Giri

Thanks,
Arun

கிரி on 9:53 AM, March 26, 2009 said...

//ஆ.ஞானசேகரன் said...
முதலில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று தலைவலி,.. அலச்சியம் செய்யக்கூடாது.... //

வழிமொழிகிறேன்

===============================================================================

//தமிழன்-கறுப்பி... said...
அண்ணே எப்ப டாக்டரானிங்க..//

நாங்க எல்லார் மாதிரியும் கொஞ்ச நேரம் மாறுவோம் ... ;-) (ரொம்ப யோசிக்க கூடாது :D)

//இந்த டென்ஷனை குறைக்கிற மாத்திரை ஏதாவது இருக்கா... :)//

மாத்திரை இல்லை ஆனா ஒரு வழி இருக்கு அது தான் "யோகா"

=================================================================================

//Logan said...
பாதி படிகர்த்துகுள்ள ஒரே தலைவலி, இருங்க ஒரு அனாசின் போட்டுட்டு வந்து மீதி பதிவ படிக்கிறேன்//

ஏற்கனவே தலைவலி இருந்ததா இல்லை என் பதிவை படித்து தலைவலி வந்ததா :-)))

=================================================================================

// arun said...
very nice informative article Giri//

நன்றி அருண் உங்கள் தொடர் உற்சாகமூட்டும் வார்த்தைகளுக்கு.

Mohan on 10:59 AM, March 26, 2009 said...

நல்ல பதிவு! வாழ்துக்கள்!

கீழை ராஸா on 2:10 AM, March 27, 2009 said...

உபயோகத்தகவல்...

Bleachingpowder on 9:34 AM, March 27, 2009 said...

டாக்டர் டாகடர் எனக்கு ஆபிஸ் போனா மேனேஜரை பார்த்தா கோவம் கோவமா வருது. அப்ரைசலை பார்த்தா வயிரு எறியுது. பே சிலிப்பை பார்த்தால் அப்படியே மயக்கமா வருது.லே ஆஃப் பத்தி ஏதாவது ஆர்டிகள் படிச்சா பிபி வேற எகிறுது. இது என்ன டாக்டர் மருந்து??

கிரி on 11:30 AM, March 27, 2009 said...

//Mohan said...
நல்ல பதிவு! வாழ்துக்கள்!//

நன்றி மோகன் உங்கள் முதல் வருகைக்கும் சேர்த்து

=================================================================================

// கீழை ராஸா said...
உபயோகத்தகவல்...//

நன்றி கீழை ராஸா

=================================================================================

// Bleachingpowder said...
டாக்டர் டாகடர் எனக்கு ஆபிஸ் போனா மேனேஜரை பார்த்தா கோவம் கோவமா வருது. அப்ரைசலை பார்த்தா வயிரு எறியுது. பே சிலிப்பை பார்த்தால் அப்படியே மயக்கமா வருது.லே ஆஃப் பத்தி ஏதாவது ஆர்டிகள் படிச்சா பிபி வேற எகிறுது. இது என்ன டாக்டர் மருந்து??//

அருண் இதற்க்கு நீங்க "சிவராஜ் சித்தவைத்திய சாலை" தான் போகணும் ஹி ஹி ஹி

மங்களூர் சிவா on 7:23 PM, March 28, 2009 said...

நல்ல பயனுள்ள பதிவு.

கிரி on 10:15 AM, March 29, 2009 said...

//மங்களூர் சிவா said...
நல்ல பயனுள்ள பதிவு.//

நன்றி சிவா