Monday, February 16, 2009

அட! "ராமா" இவங்க இம்சை தாங்கமுடியல!


ராம் சேனா (இப்ப கூட கொஞ்ச பேரு சேர்ந்துக்கிட்டாங்க) தான் தற்போதைய ஹாட் டாபிக், இதற்கு பலத்த எதிர்ப்பும் சில ஆதரவு கருத்துக்களும் காணப்படுகின்றன. இணையத்தில் இவர்களை கிண்டல் செய்து பல மின்னஞ்சல்கள் உலா வந்து கொண்டு இருக்கின்றன. ஒரு வழியா பிப் 14 ம் வந்து விட்டது, அன்று இவர்கள் செய்த அட்டாகசங்களை கொஞ்சம் பாருங்கள்.

ஒரிசா மாநிலம் ரூர்கேலாவில் ஒரு காதல் ஜோடியை ராக்கி கட்ட வைத்து இம்சை செய்யும் பஜ்ரங்தள் அமைப்பினர்

அடுத்த படம் ராம் சேனா அமைப்பினர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் காதலர்களை தோப்புகரணம் போட வைக்கின்றனர்

உத்திர பிரதேச மாநிலம் ஆக்ராவில் சிவ சேனா கட்சியினர் இளைஞர்களை பிடித்து மொட்டை அடிக்கின்றனர் (யோவ்! இதெல்லாம் உலக அநியாயம்யா!)

இவர்கள் தொல்லை மட்டுமல்லாது ஒரு சில காவலர்களும் வரம்பு மீறி நடந்து கொண்டுள்ளனர்.

இவங்க இம்சை இப்படி என்றால் இந்த இம்சை என்னன்னு பாருங்க



திருச்சியில் காதலர் பாதுகாப்பு !!! (விளங்கிடும்) என்ற பெயரில் சிலர், காதல் ஜோடிகளுக்கு வாழ்த்து சொல்வதற்கு சத்திரம் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர்!! அவர்களை காவலர்கள் எச்சரித்தும் போகாததால் விரட்டியடிக்கின்றனர்.

இதை எல்லாம் பார்க்கும் போது விவேக் காமெடி தான் நினைவுக்கு வருது..

விவேக் ஒரு படத்துல விசுவின் அரட்டை அரங்கத்தை "குறட்டை அரங்கம்" என்று கிண்டல் செய்து ஒரு காமெடி செய்வார், அதில் குறட்டை சத்தம் வாயில இருந்து வருதா இல்ல மூக்குல இருந்து வருதா என்று பட்டிமன்றம்!!..எதுக்கு சந்தேகம் சோதனை செய்து விடலாம் என்று அங்கே உள்ள நடுவர் ஒருவரை,  ஒருத்தரை அழைத்து வாயையும் இன்னொருவரை அழைத்து மூக்கையும் மூட சொல்லுவாரு ..கொஞ்ச நேரத்துல மூச்சடைத்து அந்தாளு சங்காகிடுவாரு :-))))) ..அது மாதிரி....

இனி நீங்களே முடிவு பண்ணிக்குங்க :-)))


செய்தி தினகரன்

Buzz It

32 COMMENTS:

கிஷோர் on 7:51 AM, February 16, 2009 said...

காதலிக்கவே கூடாதா?
அவ்வ்வ்வ்வ்

அப்ப எங்க கதி? :)

ஜோதிபாரதி on 8:20 AM, February 16, 2009 said...

வீம சேன மகராசா மரத்தே பு டுன்கினாரே!
அப்படி
இவங்க கலாச்சார இல்லை இல்லை பண்பாட்டு பகலவர்கள்!
ராம சேன மகராசா எதப் பு டுங்குராங்கன்னு தெரியலை மரத்துக்குப் பதிலா?

இங்கே ஒரு விடயம் குறிப்பிட விரும்புகிறேன். பொங்கல் போன்ற நமது பண்பாட்டுத் திருநாட்களை பழையன கழிதலும் என்று நினைத்து மறந்துவிடும் நம் தமிழ் இளையர்கள், எங்கோ ஐரோப்பாவில் நடந்த விடயத்துக்காக இங்கு நான் தலை கீழ நிப்பேன் என்பது. கண்களை விற்று சித்திடம் வாங்க முயற்சிப்பது போன்ற கொடூரமான அவலம் தான். இருந்தாலும் அவரவர் வேலையை பார்க்காமல் இராம சேனா, இன்னொருவன், அதாவது தனிமனித சுதந்திரத்தைக் கெடுப்பது அவர்களின் வேலை அல்ல. தனிமனித சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துவது நமது பண்பாட்டுக் கழிவுகளுக்கு தெரியாதது மிகவும் கவலை அளிக்கும் விடயம்.

ஜோதிபாரதி on 8:28 AM, February 16, 2009 said...

சித்திரம் என்று இருக்க வேண்டும்.

கிஷோர் on 8:38 AM, February 16, 2009 said...

நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு
நினைவினை கடந்துவிடு
நெஞ்சே நெஞ்சே உறங்கிவிடு
நிஜங்களை துறந்துவிடு

கண்களை விற்றுத்தான் ஓவியமா
வெந்நீரில் மீன்கள் தூங்குமா
கண்ணீரில் காதல் வாழுமா...

(படம்: ரட்சகன்)

:)
:)

M Arunachalam on 9:53 AM, February 16, 2009 said...

If you want to make love, do it within the confines of four walls & legally. No need for you to show it off in public. That is NOT your freedom of right or expression. Then there is no difference between people who are lovers and those who make love for money or "fame". Then you have to face action under "Immoral Traffic Act".

The way these Ram Sene or Bajrang Dal does this may not be correct & is unlawful since they can't take law into their hands. But, even these "so called" lovers also should respect decency in public places & refrain from showing-off in public places.

Vaanathin Keezhe... on 9:54 AM, February 16, 2009 said...

எதெதெற்கெல்லாம் வக்காலத்து வாங்குவது என்ற வரைமுறையே இல்லாமல் போய்விட்டது.

ரோட்டில் கார்த்திகை மாதத்து நாய்களுக்கும் இதுகளுக்கும் வித்தியாசம் இல்லாத அளவுக்கு இதுங்க பண்ற அசிங்கம் தாங்க முடியல. இதுல நீங்கள்லாம் வேற கெளம்பிட்டீங்களா, கையில பந்தத்தோட..

உண்மையிலேயே லவ் மட்டும்தான் இலக்குன்னா, அதுக்கு ஏன் பீச்லயும், ரோடோரத்துலயும் 'ஒதுங்கணும்...' நேர்மையா பொது இடத்திலேயே அமர்ந்து நாகரீகமா பேசலாமே...

எப்பவாவது பொழுது போகலன்னா மெரினா, ஈசிஆர், மேவளூர் குப்பம் (அரக்கோணம் சாலை), ஓஎம்ஆர், வீணா போன சென்னை பூங்காக்கள் பக்கம் போய் பார்த்துட்டு எழுதுங்க.

எவனோ சில அறிவுஜீவி வியாதிங்க குரல் கொடுக்குதேன்னு நீங்களும் மயங்கிடாதீங்க...

எல்லாத்தையும் எங்கேயும் வச்சிக்கலாம்னா, பெட்ரூம்னு தனியா எதுக்கு?

அடுத்த வருசம் காதலர் தினத்துக்கு கையில விளக்கோட சுத்துவானுங்க போலீஸ்காரனுங்களும், காதலர் பாதுகாப்புக் கழகத்தினரும்...

கிரி on 10:59 AM, February 16, 2009 said...

//கிஷோர் said...
காதலிக்கவே கூடாதா?
அவ்வ்வ்வ்வ்//

:-)))

//கண்களை விற்றுத்தான் ஓவியமா
வெந்நீரில் மீன்கள் தூங்குமா
கண்ணீரில் காதல் வாழுமா...//

ஆஹா! கிஷோர் நிஜமாவே காதலிக்கிறார் போல இருக்கே .நடத்துங்க .. சிங்கையா! ஊரா! ;-)

===================================================================

//ஜோதிபாரதி said...
இங்கே ஒரு விடயம் குறிப்பிட விரும்புகிறேன். பொங்கல் போன்ற நமது பண்பாட்டுத் திருநாட்களை பழையன கழிதலும் என்று நினைத்து மறந்துவிடும் நம் தமிழ் இளையர்கள், எங்கோ ஐரோப்பாவில் நடந்த விடயத்துக்காக இங்கு நான் தலை கீழ நிப்பேன் என்பது. //

தலை கீழா நடக்கறாங்களே :-))

//தனிமனித சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துவது நமது பண்பாட்டுக் கழிவுகளுக்கு தெரியாதது மிகவும் கவலை அளிக்கும் விடயம்//

நாட்டுல எத்தனையோ பிரச்சனை இருக்கு அதை எல்லாம் எதிர்த்து போராட மாட்டேங்குறாங்க ..

===================================================================

//M Arunachalam said...
That is NOT your freedom of right or expression. Then there is no difference between people who are lovers and those who make love for money or "fame".//

வழிமொழிகிறேன்

//The way these Ram Sene or Bajrang Dal does this may not be correct & is unlawful since they can't take law into their hands. But, even these "so called" lovers also should respect decency in public places & refrain from showing-off in public places.//

சரியா சொன்னீங்க :-)

===================================================================

//Vaanathin Keezhe... said...
இதுல நீங்கள்லாம் வேற கெளம்பிட்டீங்களா, கையில பந்தத்தோட.. //

ஹா ஹா ஹலோ! நல்லா படிங்க நான் எங்கேயும் எதையும் ஆதரிக்கவில்லை.

//எப்பவாவது பொழுது போகலன்னா மெரினா, ஈசிஆர், மேவளூர் குப்பம் (அரக்கோணம் சாலை), ஓஎம்ஆர், வீணா போன சென்னை பூங்காக்கள் பக்கம் போய் பார்த்துட்டு எழுதுங்க.//

அது ஒண்ணு தாங்க பாக்கி :-))

//எவனோ சில அறிவுஜீவி வியாதிங்க குரல் கொடுக்குதேன்னு நீங்களும் மயங்கிடாதீங்க//

எவனோ சொல்வதுக்கு நான் ஏங்க மயங்கனும்? என் கருத்தை கூறுகிறேன்.

//எல்லாத்தையும் எங்கேயும் வச்சிக்கலாம்னா, பெட்ரூம்னு தனியா எதுக்கு?//

இவர்கள் இதை போல செய்வது சரி என்று நான் எங்கேயும் கூறவில்லை, பொது இடத்த்தில் அநாகரீகமாக நடந்து கொள்வதில் எனக்கும் உடன்பாடு கிடையாது. நீங்கள் இவ்வாறு கேள்வி கேட்பது அதை நான் சரி என்று கூறுவதை போல உள்ளது (Note this point ;-) )

கலாச்சாரத்தை பாதுகாக்கிறேன் என்று இவர்களே சட்டத்தை கையில் எடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. சரி இப்படி கலாச்சாரத்தை மதிக்கிறவங்க..எவன் லஞ்சம் வாங்கறானோ அவனை அடிக்கலாம், மிரட்டலாம் பொது மக்களும் இவர்கள் செயலை வரவேற்பார்கள் என்ன சொல்றீங்க?

//அடுத்த வருசம் காதலர் தினத்துக்கு கையில விளக்கோட சுத்துவானுங்க போலீஸ்காரனுங்களும், காதலர் பாதுகாப்புக் கழகத்தினரும்...//

ஹா ஹா ஹா நல்ல வேளை நான் விளக்கை தூக்கிட்டு சுத்துவேன்னு சொல்லாம இருந்தீங்களே! :-)))

பிளேட்டை மாத்திடாதீங்க :-))

எம்.எம்.அப்துல்லா on 11:42 AM, February 16, 2009 said...

கிரி அண்ணே

இந்த புது டெம்ப்ளேட் சுமாராதாண்ணே இருக்கு.பழசு அருமையா இருந்துச்சே! ஏன் மாத்திட்டீங்க???

my pages on 12:04 PM, February 16, 2009 said...

காதலையும் காமத்தையும் குழப்பிக்கொள்கிறார்கள்.இன்று நடிகர் முரளி படங்களில் போன்று உண்மையான காதல் 10% தான் மீதி 90% ஆண்,பெண் உட்பட காமத்துக்காக காதல் செய்கிறார்கள்

கிரி on 12:14 PM, February 16, 2009 said...

அறிவன்#11802717200764379909 has left a new comment on your post

கலாச்சார விதிகள் ஒரு பக்கம் இருக்க,ராம் சேனாவினர் செய்வது சாரி கொஞ்சம் ஓவர் வகைதான்.

ஆனால் இது இரு புறமும் கூரான கத்தி போன்ற ஒரு விதயம்.

தனிமனித சுதந்திரத்திற்கும் சமுதாய நன்னடைத்தைக்குமான பிளவுக் கோடு மிக மெல்லியது.

பொதுவில் முத்தமிட்டுக் கொள்வது சிங்கை போன்ற நாடுகளில் ஐரோப்பிய நாடுகள் போன்று பொது இடங்களில் நடந்தாலும் சீனப் பெரியவர்களிடம் பேசும் போது அவர்கள் அதை வரும்புவதில்லை என்பதை நான் அறிகிறேன்.

இன்றைய செய்தியில் பிரிட்டனில் 14 வயது சிறுவன் 15 வயது சிறுமியை தாயாக்கி இருக்கிறான்;அந்தச் சிறுவனே இன்னும் குரல் மாறாமல் இன்னொரு சிறுவன் போலத்தான் இருக்கிறான்.

மேற்கத்திய நாகரிகம்,தனி மனித சுதந்திரம் என்று பிதற்றும் நபர்கள் தங்கள் குழந்தைகளுக்கான இந்திய சமூகம் அப்படி மாறுவதை ஏற்றுக் கொள்வார்களா?

எதிலுமே எக்ஸ்ட்ரீம் என்ற நிலை ஏற்படும் போது அதற்கான எதிர்வினையே சமூகமே ஏற்படுத்துகிறது.

ஒருவேளே கயாஸ் தியரிப்படி அதுவும் சரிதானோ??????

------------
அறிவன் கொஞ்சம் எடிட் செய்துள்ளேன் மன்னிக்கவும், இது அவரை மன வருத்தத்திற்கு ஆளாக்கும், நம்மை பற்றி பேசும் போது சரி அதுவே குடும்ப உறுப்பினர்கள் என்று குறிப்பிடும் போது தேவையில்லாத கருத்துக்கள் வரும்.

புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்

Sundar on 12:30 PM, February 16, 2009 said...

:)

அறிவன்#11802717200764379909 on 1:06 PM, February 16, 2009 said...

கிரி,நான் அவரை வருத்தப்படுத்தும் அளவுக்கோ அல்லது அகௌவரமாகவோ எழுதவில்லை என்றே நினைக்கிறேன்.பொதுவாகவே எவரும் வருந்தும் அளவுக்கு எழுதுபவன் அல்லன் நான்.காதலையும் நான் கொச்சையான ஒன்றாகக் கருதவில்லை;காதலைக் கொண்டாடிய பாரதியைக் கொண்டாடுபவன் நான்.
ஆனால் தனிமனித சுதந்திரம் என்ற பொருளில் இன்று சந்தைப்படுத்தப்படும் விதயங்கள் எளிதாகக் காமத்தில் வகைப்படுத்த வேண்டியவை.

எடிட் செய்யாமல் போட்டிருந்தால் அந்த வாதத்தின் தாக்கம் சரியான அளவில் இருந்திருக்கும்.

எனினும் உங்கள் முடிவையும் மதிக்கிறேன்.

ராமலக்ஷ்மி on 2:49 PM, February 16, 2009 said...

முதல் கார்ட்டூன் சூப்பர்:)! நடந்தாலும் நடக்கும். காலம் நல்லாயிருந்தாலும் அதைக் கலிகாலம் ஆக்குவது இந்த அமைப்புகள்தானோ:(! சிறியவர்கள் பாதை மாறினால் பார்த்துக் கொள்ள பெற்றவர் இருக்கிறார். காலமும் கற்றுக் கொடுக்கும். கலாச்சார காவலர்கள் சொல்லுவதோடு நிறுத்தியிருந்தால் அவர் கொள்கை போற்றப் பட்டிருக்கலாம். அநாகரீகமான வழியில் செயலில் இறங்கியிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லையே!

ராமலக்ஷ்மி on 2:51 PM, February 16, 2009 said...

எம்.எம்.அப்துல்லா said...

//கிரி அண்ணே

இந்த புது டெம்ப்ளேட் சுமாராதாண்ணே இருக்கு.பழசு அருமையா இருந்துச்சே! ஏன் மாத்திட்டீங்க???//

எனக்கு இந்த டெம்ப்ளேட் நன்றாக இருப்பதாகவே தோன்றுகிறது.நானும் இதே டெம்ப்ளேட்தான் வைத்திருக்கிறேன்:)) என்பதால் மட்டுமின்றி வெள்ளைப் பின்னணியில் வாசிப்பது இலகுவாகவும் இருக்கிறது:)!

கிரி on 2:55 PM, February 16, 2009 said...

//எம்.எம்.அப்துல்லா said...
கிரி அண்ணே
இந்த புது டெம்ப்ளேட் சுமாராதாண்ணே இருக்கு//

ஹி ஹி ஹி நன்றி :-)

//பழசு அருமையா இருந்துச்சே! ஏன் மாத்திட்டீங்க???//

இந்த டெம்ப்ளேட்டில் படிக்கும் பகுதி அகலமாக இருந்தது, படிப்பவர்கள் அடிக்கடி ஸ்க்ரால் செய்ய வேண்டாம், எளிதாக இருக்கும் என்பதால் இதை மாற்றினேன். வேறு காரணம் எதுவும் இல்லை.

====================================================================

//my pages said...
காதலையும் காமத்தையும் குழப்பிக்கொள்கிறார்கள்//

சரியா சொன்னீங்க.. காலம் மாற மாற அதற்குண்டான அர்த்தமும் மாறி கொண்டே வருவது கவலை அளிக்கும் விஷயம் தான்.

உங்கள் முதல் வருகைக்கு நன்றி

===================================================================

//அறிவன் said .
கலாச்சார விதிகள் ஒரு பக்கம் இருக்க,ராம் சேனாவினர் செய்வது சாரி கொஞ்சம் ஓவர் வகைதான்.//

ரொம்ப ஓவர்ங்க

//தனிமனித சுதந்திரத்திற்கும் சமுதாய நன்னடைத்தைக்குமான பிளவுக் கோடு மிக மெல்லியது//

தாறுமாறா வழிமொழிகிறேன்

//இன்றைய செய்தியில் பிரிட்டனில் 14 வயது சிறுவன் 15 வயது சிறுமியை தாயாக்கி இருக்கிறான்;அந்தச் சிறுவனே இன்னும் குரல் மாறாமல் இன்னொரு சிறுவன் போலத்தான் இருக்கிறான்.//

:-)))))

//மேற்கத்திய நாகரிகம்,தனி மனித சுதந்திரம் என்று பிதற்றும் நபர்கள் தங்கள் குழந்தைகளுக்கான இந்திய சமூகம் அப்படி மாறுவதை ஏற்றுக் கொள்வார்களா//

சொல்ல முடியாது ஏற்று கொண்டாலும் ஏற்று கொள்வார்கள்..

//கிரி,நான் அவரை வருத்தப்படுத்தும் அளவுக்கோ அல்லது அகௌவரமாகவோ எழுதவில்லை என்றே நினைக்கிறேன்//

நீங்கள் நல்ல எண்ணத்தில் எழுதினாலும் ஒரு சில பின்னூட்டம் இடுபவர்கள் அதை புரிந்து கொள்ள மாட்டார்கள். நான் உங்களை இப்பவும் தவறாக கூறியதாக நினைக்கவில்லை.

//பொதுவாகவே எவரும் வருந்தும் அளவுக்கு எழுதுபவன் அல்லன் நான்//

அறிவன் அதை நீங்கள் எனக்கு கூற வேண்டுமா! உங்களை பற்றி எனக்கு தெரியும். நீங்கள் நல்ல எண்ணத்தில் தான் கூறி இருக்கிறீர்கள், ஆனால் அது பற்றி விவாதம் வரும் போது வார்த்தைகள் வேறு விதமாக மாறினால் நம் அனைவருக்கும் மன வருத்தம் ஏற்படும். இது கொஞ்சம் சென்சிடிவான விஷயம் என்பதால்.

//எனினும் உங்கள் முடிவையும் மதிக்கிறேன்.//

நன்றி அறிவன் புரிந்து கொண்டமைக்கு. இதை மனதில் கொள்ளாமல் வழக்கம் போல வாருங்கள்.

===================================================================

// Sundar said...
:)//

வாங்க சுந்தர் புன்னைகையுடன் சென்று விட்டீர்கள் :-)

Shivaji(formerly Shivaji Rao Admirer) on 3:01 PM, February 16, 2009 said...

ஹா ஹா ஹா ஹா !
நல்ல சூடான பதிவு தான் கிரி !
என்றும் அன்புடன் !
Shivaji(formerly shivaji rao admirer)

கிரி on 3:07 PM, February 16, 2009 said...

//ராமலக்ஷ்மி said...
முதல் கார்ட்டூன் சூப்பர்:)! நடந்தாலும் நடக்கும்.//

ஹி ஹி ஹி

//அநாகரீகமான வழியில் செயலில் இறங்கியிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லையே!//

இவர்கள் காதலர்களை அநாகரீகமாக நடந்து கொள்கிறார்கள் என்று கூறி விட்டு, அதையே இவர்கள் செய்கிறார்கள்.

இவர்கள் நோக்கம் சரியாக இருந்தாலும் வழிமுறைகள் சரி இல்லை.

//எனக்கு இந்த டெம்ப்ளேட் நன்றாக இருப்பதாகவே தோன்றுகிறது.நானும் இதே டெம்ப்ளேட்தான் வைத்திருக்கிறேன்:))//

ஹி ஹி ஹி ஹி நாங்களும் வந்துடோம்ல

//வெள்ளைப் பின்னணியில் வாசிப்பது இலகுவாகவும் இருக்கிறது:)!//

வழிமொழிகிறேன் மற்றும் படிக்கும் பகுதி நான் முன்னரே கூறியபடி அகலமாக உள்ளது. டெம்ப்ளேட் அழகாக இருக்கிறது என்பதை விட படிப்பவர்களுக்கு எளிதாக இருப்பதே முக்கியம்.

அப்துல்லா! அண்ணே என்ன சொல்றீங்க..:-)))

===================================================================

//Shivaji(formerly Shivaji Rao Admirer) said...
ஹா ஹா ஹா ஹா !
நல்ல சூடான பதிவு தான் கிரி //

ஹி ஹி ஹி நன்றி

ராஜ நடராஜன் on 3:26 PM, February 16, 2009 said...

ஹே ராம்!

பாஸ்கர் on 3:26 PM, February 16, 2009 said...

ஆனால் தனிமனித சுதந்திரம் என்ற பொருளில் இன்று சந்தைப்படுத்தப்படும் விதயங்கள் எளிதாகக் காமத்தில் வகைப்படுத்த வேண்டியவை.


வழிமொழிகிறேன் !!!!

Logan on 3:35 PM, February 16, 2009 said...

பரிசல்காரனின் காதலர் தின பதிவை பார்த்துவிட்டு தங்களின் பதிவை பார்த்தேன். சிரிப்பு தான் வந்தது.

இவனுகுகேல்லாம் ஒரு பிகுர் கிடைக்கலை என்கிற காண்டுவில், இந்த அமைப்பில் சேர்ந்து விளம்பரம் தேடி கொள்கிறார்கள்.

மெரினா பீச்சில் தினம் தினம் நடக்காத கலாச்சார சீரழிவா காதலர் தினத்தில் நடந்து விட போகிறது?

’டொன்’ லீ on 4:54 PM, February 16, 2009 said...

:-))

இவர்களை பாலா பட வில்லன்களாக போட்டு ஹீரோவின் கையால் மரண தண்டனை தரவேண்டும்

மணிகண்டன் on 6:33 PM, February 16, 2009 said...

*****
இவர்களை பாலா பட வில்லன்களாக போட்டு ஹீரோவின் கையால் மரண தண்டனை தரவேண்டும்
*****

பாலா பட ஹீரோவா போட்டா இன்னுமே bigger punishment டோன் லீ

தமிழன்-கறுப்பி... on 6:48 PM, February 16, 2009 said...

அடங்க மாட்டேய்ங்கிறாங்களே...;)

தமிழன்-கறுப்பி... on 6:48 PM, February 16, 2009 said...

:))

Bleachingpowder on 7:33 PM, February 16, 2009 said...

//Vaanathin Keezhe... on 9:54 AM, February 16, 2009 said...

உண்மையிலேயே லவ் மட்டும்தான் இலக்குன்னா, அதுக்கு ஏன் பீச்லயும், ரோடோரத்துலயும் 'ஒதுங்கணும்...' நேர்மையா பொது இடத்திலேயே அமர்ந்து நாகரீகமா பேசலாமே...
//

என்னது!!!! அப்ப ரோடும், பீச்சும் பொது இடமில்லையா??? என்ன கொடுமை சார் இது.

பொது இடங்களில் அத்துமீறுபவர்களை கண்டால் எனக்கும் பிடிக்காது தான், அதே நேரம் அதிக செலவில்லாமல், நீண்ட நேரம் அமர்ந்து பேசுவதற்கு பீச், பார்க்,கோவிலை விட்டால் அவர்கள் வேறு எங்கு தான் போவார்கள்.

கிரி on 8:24 PM, February 16, 2009 said...

//ராஜ நடராஜன் said...
ஹே ராம்!//

:-))))))

===================================================================

பாஸ்கர் வருகைக்கு நன்றி

===================================================================

//Logan said...
மெரினா பீச்சில் தினம் தினம் நடக்காத கலாச்சார சீரழிவா காதலர் தினத்தில் நடந்து விட போகிறது?//

லோகன் இருங்க உங்கள் கிட்ட தனியா பேசணும் ஹி ஹி ஹி

===================================================================

//’டொன்’ லீ said...
:-))
இவர்களை பாலா பட வில்லன்களாக போட்டு ஹீரோவின் கையால் மரண தண்டனை தரவேண்டும்//

ஹா ஹா ஹா நான் கடவுள் சண்டை உங்களை ரொம்ப பாதித்துவிட்டது போல் உள்ளது

===================================================================

//மணிகண்டன் said...
பாலா பட ஹீரோவா போட்டா இன்னுமே bigger punishment டோன் லீ//

ஹா ஹா ஹா காசிக்கே போய்டுவாங்க அப்படீங்கறீங்களா! :-))

===================================================================

//தமிழன்-கறுப்பி... said...
அடங்க மாட்டேய்ங்கிறாங்களே...;)//

அடக்க ஆள் இல்ல போல இருக்கு ;-)

===================================================================

//Bleachingpowder said...
//என்னது!!!! அப்ப ரோடும், பீச்சும் பொது இடமில்லையா??? என்ன கொடுமை சார் இது//

பொது இடம் தான், அந்த பொது இடத்துல இவங்க பண்ணுற சில்பான்ஸ் வேலைய சொல்றாரு :-)))

//பொது இடங்களில் அத்துமீறுபவர்களை கண்டால் எனக்கும் பிடிக்காது தான், அதே நேரம் அதிக செலவில்லாமல், நீண்ட நேரம் அமர்ந்து பேசுவதற்கு பீச், பார்க்,கோவிலை விட்டால் அவர்கள் வேறு எங்கு தான் போவார்கள்.//

பேசுவதை யாரும் குறை கூறப்போவதில்லை, "சில பல" ;-) அத்துமீறல்களை தான் அவர் குறிப்பிடுகிறார் என்று நினைக்கிறேன். ஆனால் இவர்களில் பாதி காதலர்கள் போர்வையில் வருபவர்களாக தான் இருக்கும்.

renu on 9:01 PM, February 16, 2009 said...

காதல், மானம், வீரம் - இதுவே தமிழர் வாழ்வின் ஆதாரம் மற்றும் அடிப்படை! பழந்தமிழ் இலக்கியங்கள் மட்டுமின்றி இந்திய மொழிகளில் எந்தவொரு பழைய பதிவுகளை எடுத்து ஆய்வீர்களெனில், பருவத்தில் எல்லா பாரதக் குடிமகன்களும் குடிமகள்களும் காதலித்துள்ளனர்.
அப்படிப்பட்ட காதல் அத்தனையும் அந்தக்காலத்தைய பார்க், பீச் போன்ற இடங்களில்தான் நடந்தேறியுள்ளது. அதுவே இப்போதும் நடைமுறை. காதலிக்கும் பருவத்தில் காதலை அவரவர் வீட்டு படுக்கையறையில் நிகழ்த்துவது யதார்த்த சாத்தியங்களில் இல்லை. நமது இந்திய பொருளாதாரத்தில் அவசரமாக வீடு அல்லது ஆபீஸ் போகும் துரிதத்தில் ரூம் போட்டு காதலிப்பது சாத்தியம் இல்லை. எனில் காதலை பார்க்கிலும் பீச்சிலும் செய்வது பற்றி இவ்வளவு பிற்போக்குத்தனமாக ஆராய்வது தவறு.
அப்படி ஆராய்ந்த நண்பர்காள், சபிக்கிறேன் உம்மை! நீங்களோ அல்லது உங்களது வீட்டுப்பெண்களோ முறையாக திருமணம் செய்து கொள்ளவேண்டும். ஆரம்ப காலக் காதலோடு பர்க்கிற்க்கோ, பீச்சிற்க்கோ, திரையரங்கிற்க்கோ செல்லவேண்டும்.
அங்கே, கிடைத்த தனிமையில் ஈருடல் ஓருயிராய் இருக்கும்போது, வீடு திரும்பும்வரை காத்திருக்க இயலாது, கிடைக்கும் சிறிய, மிகச்சிறிய நெருக்கத்தில் அன்பைச் செயலாய் நீங்கள் பரஸ்பரம் தெரிப்பதை எவரோ சில ராமசேனா நண்பர்கள் பார்த்துவிட வேண்டும். உடனே உங்கள் அருகே வந்து பலர் முன்பு வைத்து உங்கள் இருவரையும் கேவலப்படுத்துவார், நீங்கள் கற்பனை செய்துவைதிருப்பதை விடவும் மட்டமானவர்கள் சகா, ரொம்ப அசிங்கமா பேசுவாங்க, அடி கூட விழும்! .
அப்போ கூட்டதுல ஒருத்தன் சொல்வான் "அட இதெல்லாம் வீட்டுல வச்சிக்ககூடாதா?" என்று.!! இது நடக்கும் ராசா! கூட்ட்த்து முன்னாடி கேவலம், எதிபாராம வாழ்கைதுணை முன்னாடி அசிங்கப்பட்டு..... அப்ப யாரும் அருகே துணையில்லாம, அடப்பாவிகளா அப்பிடி என்னடா பாவம் பண்ணினோம்னு குமுறி குமுறி சாவுங்கடியேய்!!!

வால்பையன் on 5:12 PM, February 17, 2009 said...

ராமாயணத்தில் அண்ணலும் நோக்கினால்,
அவளும் நோக்கினால் என்றி இருக்கிறதாமே!

மகாபாரதத்தில் இதே ராமனின் இன்னொரு அவதாரமான கிருஷ்னன் காதல் லீலைகள் புரிவதில் கில்லாடியாமே!

அதை விடுங்கள்

ராமாயணத்தில் ராமனுக்கு சேனையாக இருந்தது வானர படைகளாம், இந்த ராம சேனா ஆட்களுக்கும் என்னை போல் வால் இருக்கிறதா என்ன?

கிரி on 11:07 AM, February 18, 2009 said...

//renu said...
இவ்வளவு பிற்போக்குத்தனமாக ஆராய்வது தவறு.
அப்படி ஆராய்ந்த நண்பர்காள், சபிக்கிறேன் உம்மை!//

ஹா ஹா ரேனு அவங்க கூறியதை தவறா புரிந்து கொண்டீர்கள், அநாகரீகமாக நடந்து கொள்பவர்களை தான் அவ்வாறு கூறி உள்ளார்கள் என்று நினைக்கிறன்.

சரி சரி சாபம் எல்லாம் விடாதீங்க ..பலித்து விட போகுது :-)))


உங்கள் முதல் வருகைக்கு நன்றி ரேனு

======================================================================

//வால்பையன் said...
ராமாயணத்தில் ராமனுக்கு சேனையாக இருந்தது வானர படைகளாம், இந்த ராம சேனா ஆட்களுக்கும் என்னை போல் வால் இருக்கிறதா என்ன?//

:-))))

இவங்களுக்கு வேற எதோ அதிகமா இருக்கு :-)

எம்.எம்.அப்துல்லா on 10:58 AM, February 19, 2009 said...

//அப்துல்லா! அண்ணே என்ன சொல்றீங்க..:-)))

//

என்னப் பத்தி தெரியாதா உங்களுக்கு??? நம்ப எப்பவுமே உண்மைக்கு தலை வணங்குற ஆளு :) நீங்க சொல்றது மிகவும் சரி.

arun on 2:44 AM, March 03, 2009 said...

கிரி,
கொஞ்சம் லேட்டா படிச்சேன் அதுக்கு
மன்னிக்கவும். ரொம்ப நல்ல பதிவு ஆனா நீங்க "safe game style" ல இந்த பதிவ எழுதி இருப்பதா நான் நினைக்குறேன்

பொதுவா உங்க பதிவு ல நீங்க என்ன்ன நினைக்குறீங்க சொல்லுவீங்க இதுல அது இல்லாத மாதிரி தோனுது

கிரி on 9:34 PM, March 12, 2009 said...

//arun said...
கிரி,
கொஞ்சம் லேட்டா படிச்சேன் அதுக்கு
மன்னிக்கவும்.//

படிப்பதே பெரிய விஷயம் இதெல்லாம் எதுக்கு அருண்

//ரொம்ப நல்ல பதிவு ஆனா நீங்க "safe game style" ல இந்த பதிவ எழுதி இருப்பதா நான் நினைக்குறேன்//

நீங்க நினைத்தது சரி தான்

//பொதுவா உங்க பதிவு ல நீங்க என்ன்ன நினைக்குறீங்க சொல்லுவீங்க இதுல அது இல்லாத மாதிரி தோனுது//

கருத்து கந்தசாமியா இல்லாம ஜாலியா ஒரு பதிவு போடலாம் என்று நினைத்து எழுதிய பதிவு.