200 பதிவுகளும், பதிவுலக அனுபவங்களும்

by கிரி on February 19, 2009

bloggers4 200 பதிவுகளும், பதிவுலக அனுபவங்களும்பதிவுலகம் வந்து ஒருவருடம் ஆகி 200 பதிவுகளும் எழுதியாகி விட்டது, உண்மையிலேயே எனக்கு இது பெரிய விசயமாக தான் உள்ளது. பதிவுலகில் ஒருவருடம் என்பது என்னமோ மூன்று வருடத்திற்கு மேல் இருந்ததை போல இருக்கிறது.

blogger5 200 பதிவுகளும், பதிவுலக அனுபவங்களும்

தமிழில் எழுத வேண்டும் நம்ம கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் வந்தேன், ஆனால் பதிவுலகம் இதை மட்டுமல்ல பல அனுபவங்களையும் எனக்கு கொடுத்தது என்றால் மிகையில்லை. எத்தனை அனுபவங்கள்! கணக்கு வழக்கில்லாமல்! அதை பற்றி கூறினால் நான்கு பதிவு போட வேண்டும் அத்தனை உள்ளது (ஹி ஹி ஆனால் படிப்பவர்கள் தூங்கி விடுவார்கள்)

பதிவு எழுதுபவர்கள் அனைவரும் வேண்டுவது அங்கீகாரம், இது ஒன்றிக்காக தான் அனைவரும் மெனக்கெடுகிறோம். நம் எழுத்துக்கள் மற்றவர்களால் படித்து பின்னூட்டங்களால் நிறை குறைகளை பெரும் போது, பாராட்டப்படும் போது அப்பாடா! நம்மையும் யாரோ கவனிக்கறாங்க என்ற நிம்மதி அடைகிறோம்.

நம்மை மற்றவர்கள் அனைவரும் கவனிக்க வேண்டும் என்பது அனைவரின் இயல்பான ஆசையாக இருந்தாலும், அதற்காக மட்டமான வேலைகளில் இறங்க கூடாது என்பது என் தனிப்பட்ட கருத்து. இது வரை எனக்கு பல முறை பல நெருக்கடி வந்த பொழுதும், (கோபமாக எழுதியதுண்டு) கண்ணிய குறைவாக எதையும் எழுதியதில்லை, இனியும் எழுத மாட்டேன்.

bloggers1 200 பதிவுகளும், பதிவுலக அனுபவங்களும்எனக்கு பதிவுலகம் கற்று கொடுத்த பெரிய பாடம் விமர்சனத்தை எதிர் கொள்வது, நாம் எழுத வந்து விட்டாலே விமர்சனத்தையும் எதிர் கொள்ள பழகி கொள்ள வேண்டும். அப்போது தான் மன உளைச்சல் இல்லாமல் இருக்க முடியும்.

பதிவுலகம் வந்த பொழுது அனைவரும் அறிவுறுத்தியது ஏதாவது குழுவில் இணைந்து கொள்ளுங்கள் இல்லை என்றால் அவர்களே உங்களை ஏதாவது குழுவில் இணைத்து விடுவார்கள் என்று.

இது என்னய்யா! அநியாயமா இருக்கு! நமக்கு பிடிக்காத ஒன்றை எப்படி செய்வது? அதெப்படி நம்மை மீறி குழுவில் இணைத்து விடுவார்களா! பார்த்து விடுவோம் என்று இருந்தேன், இது வரை எந்த குழுவிலும் இல்லை.

ஒருவேளை ஒரே மாதிரி பதிவுகள் எழுதி இருந்தால் அப்படி செய்ய முயற்சி செய்து இருப்பார்களோ என்னவோ! என்னா ஒரு வில்லத்தனம்! என்னை இதை போல பதிவுகள் தான் எழுதுவேன் என்று யாராலும் அறுதியிட்டு கூற முடியாது. விளையாட்டு திரைப்படம் அரசியல் நகைச்சுவை கோபம் ஆன்மீகம் செய்திகள் என்று எல்லாமே கலந்து தான் என் பதிவுகள் இருக்கும். என்னை ரஜினி ரசிகனாக மட்டுமே கூற முடியுமே தவிர வேறு எந்த அடையாளத்திலும் அல்ல.

எனது 100 பதிவுகள் மூன்று மாதத்தில் வேகமாக எழுதி விட்டேன். அதில் உருப்படியான பதிவு என்று பார்த்தால் மிக சொற்பமே, இத்தனையும் நான் எழுதியது ஹிட் என்ற போதையால். அதிக பேர் (ஹிட்) வந்தால் தான் திருப்தி இருக்கும் இல்லை என்றால் எதையோ இழந்ததை போல இருக்கும்.

bloggers2 200 பதிவுகளும், பதிவுலக அனுபவங்களும்இது தவறு என்று தாமதமாக தான் புரிந்தது, எனவே பதிவுகள் எழுதுவதை குறைத்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன், இதற்க்கு அடிமையாக கூடாது என்று முடிவு செய்தேன். இப்பவும் இது உண்டு ஆனால் மிக குறைவு.

அடுத்த 100 பதிவு எழுத எனக்கு தற்போது 9 மாதமாகி இருக்கிறது. ஒரு சிலர் ஏன் கிரி நீங்க முன்பு போல (முன்பு எழுதியதை ஒப்பிடும் போது) அதிகமாக பதிவுகள் எழுதுவதில்லை என்பதற்கான காரணமும் இதுவே, இதை பின்னூட்டங்களிலும் கூறி இருப்பேன்.

நான் பதிவர்கள் யாரையும் தனிப்பட்ட தாக்குதல் நடத்துவதில்லை (பதிவுலதாங்க சொன்னேன் icon biggrin 200 பதிவுகளும், பதிவுலக அனுபவங்களும் ), அதில் எனக்கு உடன்பாடும் கிடையாது, கூடுமானவரை என் தரப்பு நியாயத்தை மட்டுமே கூறுவேன், மற்ற பதிவுகளில் சென்று அநாகரீகமாக கருத்து தெரிவித்ததில்லை, இனியும் நடக்காது.

பலருடன் கருத்து மோதல்கள் வந்ததுண்டு அதில் ஒரு சிலர் கருத்து மோதல்களாக மட்டுமே நினைத்து நட்பை குழப்பி கொள்வதில்லை, அதை போல இருவரை குறிப்பிட நினைக்கிறேன்.

bloggers6 200 பதிவுகளும், பதிவுலக அனுபவங்களும்
ஜோசப் பால்ராஜ், இவருக்கும் எனக்கும் சத்யராஜ் குறித்த பதிவில் கருத்து மோதல் வந்தது, ஆனால் அதன் பிறகும் எனக்கு சிறந்த நண்பராக உள்ளார், நட்பையும் கருத்து வேறுபாடுகளையும் குழப்பி கொள்ளாத நல்ல நண்பர்.

இன்னொருவர் ஜோ இவர் தீவிர கமல் ரசிகர் நான் தீவிர ரஜினி ரசிகன் இது போதாதா! icon smile 200 பதிவுகளும், பதிவுலக அனுபவங்களும் ) இவருடனும் கருத்து மோதல்கள் வந்ததுண்டு ரஜினி இல்லாத விசயத்திலும், ஆனாலும் நல்ல நண்பர். என்ன! கொஞ்சம் கோபக்காரர் icon smile 200 பதிவுகளும், பதிவுலக அனுபவங்களும் தற்போதும் என் பதிவிற்கு வந்து கருத்து கூறி உற்சாக மூட்டுவார், கருத்து மோதல்களையே மனதில் வைத்துக்கொண்டு இல்லாமல்.

நான் முதலில் நன்றி கூற நினைப்பது தமிழ்மணத்திற்கு தான், நான் வந்த போது இந்த திரட்டி ஒன்றே பிரபலம் தற்போது நிறைய வந்து விட்டது. தமிழ்மணம் என்ற ஒன்று இல்லை என்றால் நான் அறியப்படமாலே போய் இருப்பேன், திறமை இருந்தால் எப்படி இருந்தாலும் தனித்து தெரிவார்கள் என்றாலும் தமிழ்மணம் இல்லை என்றால் இத்தனை நண்பர்கள் கிடைத்து இருப்பார்களா! என்பது சந்தேகமே! இதை எவராலும் மறுக்க முடியாது. அடுத்த நன்றி தமிழிஷ் இங்கு இருந்தும் அதிக வாசகர்கள் வருகிறார்கள்.

bloggers7 200 பதிவுகளும், பதிவுலக அனுபவங்களும்கணக்கில் அடங்கா நண்பர்கள், நான் யாரையும் குறிப்பிட விரும்பவில்லை, ஒரு சிலரை குறிப்பிட்டு ஒரு சிலரை குறிப்பிட மறந்து விட்டால் அவர்கள் மனது வருத்தப்படும். எனவே நண்பர்கள் அனைவருக்கும் தெரியும் நான் யார் யாரை குறிப்பிடுகிறேன் என்று.

இருந்தாலும் ஆரம்பத்தில் இருந்து ஒரு பதிவு விடாமல் அனைத்து பதிவிலும் வந்து என்னை உற்சாக மூட்டும் ராமலக்ஷ்மி அவர்களை குறிப்பிட்டே ஆக வேண்டும். அவர் எழுதும் கவிதைகளை போலவே எளிமையானவர், எனக்கு சிறந்த நண்பர் என்னை விட மூத்தவராக இருந்தாலும். என் நிறை குறைகளை அவ்வப்போது சுட்டி காட்டி மின்னஞ்சல் செய்து உற்சாகமூட்டுவார், என் மீது அதிக அக்கறை கொண்டவர். எந்த ஒரு கடும் சொற்களையும் கூறாத அருமையான நபர் (அவருக்கு அவ்வாறு கூறவே தெரியாது என்று நினைக்கிறேன்)

feed 200 பதிவுகளும், பதிவுலக அனுபவங்களும்
எனக்கு இதுவரை பின்னூட்டம் அளித்து உற்சாக மூட்டியவர்களுக்கும், தமிழிஷில் வோட் போட்ட முகம் தெரியாத நண்பர்களுக்கும்,இது வரை எனது அனைத்து பதிவுகளையும் படித்து இருந்தும் ஒரு பின்னூட்டம் கூட போடாமல் இருக்கும் (“பெ” இது உன்னை தான்);-) நண்பர்களுக்கும்,என்னை பின் தொடர்பவர்களுக்கும்(Followers), ரீடரில் என்பதிவை இணைத்து கொண்ட நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

No related posts.

{ 81 comments… read them below or add one }

கானா பிரபா February 19, 2009 at 9:34 AM

வாழ்த்துக்கள் கிரி, தொடர்ந்து வராவிட்டாலும் அவ்வப்போது உங்கள் வீட்டுப் பக்கமும் வந்து போவேன். நமீதா படம் போட்டு கும்முன்னு இருந்த ஆளாச்சே ;0

தொடர்ந்து எழுதுங்க‌

Reply

வடுவூர் குமார் February 19, 2009 at 9:54 AM

வாழ்த்துக்கள்,கிரி.

Reply

அத்திவெட்டி ஜோதிபாரதி February 19, 2009 at 9:57 AM

கிரி, ௨00-க்கு வாழ்த்துகள்!
தமிழ்ப் பணி சிறக்க, மென்மேலும் வளர உளங்கனிந்த வாழ்த்துகள்!

Reply

narsim February 19, 2009 at 9:58 AM

வாழ்த்துக்கள்.. இன்னும் நிறைய எழுதுங்கள் தல.. பதிவுலக அனுபவம் பற்றிய வார்த்தைகள் அருமை..

Reply

கோவி.கண்ணன் February 19, 2009 at 9:58 AM

உங்க தலைவர் படம் போல் 200 ஐ தொட்டுவிட்டிங்க வாழ்த்துகள் !

Reply

Vaanathin Keezhe... February 19, 2009 at 10:25 AM

இன்னா நைனா… 200 அட்சிட்டியா… எதாவது குடுக்கணும்போல இருக்கு… காம்ப்ளிமெண்டா… சரி… தனியா வச்சுக்கலாம் கச்சேரிய!!

ஆங்… அப்புறம் திட்டப் போறீங்க…
வாழ்த்துக்கள்பா…

Reply

ARASIAL February 19, 2009 at 10:30 AM

அந்த இரண்டாவது கார்ட்டூன் 200 சதவிகித உண்மையாகிவிட்டது. ஒருவிதத்தில் தொழில்முறை பத்திரிகையாளர்களுக்கு வேலையில்லாமல் செய்துவிட்டது பிளாக்கர்ஸ் உலகம்.

Reply

பிரேம்ஜி February 19, 2009 at 10:36 AM

கிரி,

200 க்கு வாழ்த்துக்கள்.நன்கு பக்குவப்பட்டுவிட்டீர்கள் போல தெரிகிறது.மேலும் சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்

Reply

Nags February 19, 2009 at 10:42 AM

வாழ்த்துகள் கிரி,

மற்றவர் பதிவுக்கு நீங்கள் தொடர்ந்து பின்னூட்டம் இடுவதும் ,பதிவுக்கு புதிய வருகை தருபவர்களை வரவேற்பதும் …. உங்கள் வளர்ச்சிக்கு ஒரு காரணம் ( அதற்காக உங்கள் பதிவுகளை சுமார் என்று சொல்லவில்லை )..

தொடரட்டும் …….

Reply

எம்.எம்.அப்துல்லா February 19, 2009 at 10:45 AM

வாழ்த்துகள் கிரி அண்ணே.

நானெல்லாம் 200 வர இன்னும் 200 வருஷம் ஆகும். :)

Reply

எம்.எம்.அப்துல்லா February 19, 2009 at 10:46 AM

//நான் பதிவர்கள் யாரையும் தனிப்பட்ட தாக்குதல் நடத்துவதில்லை (பதிவுலதாங்க சொன்னேன் :-D ), அதில் எனக்கு உடன்பாடும் கிடையாது, கூடுமானவரை என் தரப்பு நியாயத்தை மட்டுமே கூறுவேன், மற்ற பதிவுகளில் சென்று அநாகரீகமாக கருத்து தெரிவித்ததில்லை, இனியும் நடக்காது.
//

இத நானும் விடாம கடைபிடிக்கிறேன்.

Reply

Vidhya February 19, 2009 at 10:47 AM

கிரி வாழ்த்துகள்… கலக்கிடீங்க போங்க… என்னுடைய விமர்சனங்களை போடாவிட்டாலும் தொடர்ந்து படித்து கொண்டுதான் இருகிறேன்… மென்மேலும் உங்கள் பனி தொடரட்டும்

Reply

எம்.எம்.அப்துல்லா February 19, 2009 at 10:48 AM

//ஜோசப் பால்ராஜ், இவருக்கும் எனக்கும் சத்யராஜ் குறித்த பதிவில் கருத்து மோதல் வந்தது, ஆனால் அதன் பிறகும் எனக்கு சிறந்த நண்பராக உள்ளார் //

அவரும் நானும் திமுக மேட்டர்ல அடிச்சுக்காத அடியா?? சிங்கப்பூர்ல நாங்க ரெண்டு பேரும் சோடி போட்டு சுத்துனத பாத்தவங்க யாராவது நாங்க அடிச்சுகிட்டத நம்புவாங்களா??

கருத்து வேற நட்பு வேறங்கிறத நல்லாச் சொன்னீங்க :)

Reply

எம்.எம்.அப்துல்லா February 19, 2009 at 10:50 AM

//இருந்தாலும் ஆரம்பத்தில் இருந்து ஒரு பதிவு விடாமல் அனைத்து பதிவிலும் வந்து என்னை உற்சாக மூட்டும் ராமலக்ஷ்மி அவர்களை குறிப்பிட்டே ஆக வேண்டும். //

நம்பளும் உங்களோட ரெகுலர் கஷ்டமர் அண்ணே. உங்களுக்கு வந்த டாப் டென் பின்னூட்டத்துல நம்மளும் இருக்கோம்.

Reply

எம்.எம்.அப்துல்லா February 19, 2009 at 10:52 AM

கிரி அண்ணே இன்னோரு முக்கியமான விஷயம், நான் நேரில் சந்தித்த முதல் பதிவர் நீங்கதான். ரொம்ப கைராசியான ஆளு நீங்க(ஹி…ஹி..ஹி..)காரணம் அதுக்கு அப்புறம் கிட்டத்தட்ட முக்காவாசிபேர பார்த்துட்டேன்.

Reply

ஜ்யோவ்ராம் சுந்தர் February 19, 2009 at 10:56 AM

வாழ்த்துகள் கிரி.

Reply

எம்.எம்.அப்துல்லா February 19, 2009 at 10:59 AM

சரி கேக்க மறந்துட்டேன்…நம்ப சின்ன அண்ணே எப்பிடி இருக்காரு??? நடக்க ஆரமிச்சுட்டாரா???

Reply

SurveySan February 19, 2009 at 11:03 AM

வாழ்த்துக்கள் :)

Reply

ஆ.ஞானசேகரன் February 19, 2009 at 11:21 AM

வாழ்த்துகள்!

Reply

ராஜ நடராஜன் February 19, 2009 at 11:21 AM

டபுள் செஞ்சுரியா?வாழ்த்துக்கள்.

இனி பதிவுக்கு….

Reply

ராஜ நடராஜன் February 19, 2009 at 11:29 AM

கார்ட்டூன்கள் பல செய்திகள் சொல்லுகின்றன.

Reply

அபி அப்பா February 19, 2009 at 11:33 AM

//சரி கேக்க மறந்துட்டேன்…நம்ப சின்ன அண்ணே எப்பிடி இருக்காரு??? நடக்க ஆரமிச்சுட்டாரா???//

ஆகா கெளம்பிட்டாருய்யா கொளம்பிட்டாரு! இவரு ராப் தங்கச்சியையே அண்ணான்னு கூப்பிடவராச்சே!

வாழ்த்துக்கள் கிரி!!

Reply

அனுஜன்யா February 19, 2009 at 11:35 AM

வாழ்த்துகள் கிரி. இதுதான் உங்கள் வலைப்பூவுக்கு என் முதல் வருகை. இருநூறு பதிவுகள் சாதாரண விஷயமில்லை.

இட்லிவடை தளத்தில் முத்துக்குமார் விஷயத்தில் உங்கள் பின்னூட்டம் எனக்குப் பிடித்தது. உங்களைப் போல எல்லோரும் இருந்தால் பதிவுலகம் இன்னும் நன்றாக இருக்கும்.

அனுஜன்யா

Reply

☀நான் ஆதவன்☀ February 19, 2009 at 11:42 AM

200ஆஆஆ…..நீங்க எங்கேயே போய்டீங்க…

வாழ்த்துக்கள் கிரி

Reply

butterfly Surya February 19, 2009 at 12:30 PM

வாழ்த்துகள் நண்பரே.

உலக சினிமாக்களில் என்னதான் உள்ளது. அவர்கள் மட்டும் உலக விருதுகளை வாரி குவிக்கிறார்கள். அந்த சினிமாக்கள் எவை..?

அது போன்ற சினிமாக்களை பற்றி அறியவும் பார்த்து ரசிக்கவும் அன்புடன் அழைக்கிறேன்.

உலக சினிமா பற்றிய எனது வலையை பார்க்கவும்

தங்களின் மேலான கருத்துக்களையும் கூறவும்

Reply

Logan February 19, 2009 at 12:35 PM

வாழ்த்துக்கள் கிரி.

//எனது 100 பதிவுகள் மூன்று மாதத்தில் வேகமாக எழுதி விட்டேன்,
அடுத்த 100 பதிவு எழுத எனக்கு தற்போது 9 மாதமாகி இருக்கிறது//

எண்கள் முக்கியமற்று சொல்ல வந்த கருத்து பரிமாற்றமே முக்கியம் என்று எந்த ஆபாச/கெட்ட வார்த்தைகளும் இல்லாத தங்களின் அனைத்து பதிவுகளின் தலைப்பே இதற்கு சான்று…

//பதிவுலகம் வந்த பொழுது அனைவரும் அறிவுறுத்தியது ஏதாவது குழுவில் இணைந்து கொள்ளுங்கள் இல்லை என்றால் அவர்களே உங்களை ஏதாவது குழுவில் இணைத்து விடுவார்கள்//

ஒரு நிர்வாகத்தில் சேர்ந்த பின் எதாவது ஒரு சங்கத்தில் சேர்ந்தே ஆக வேண்டும் பலரும் எதிர்பார்ப்பார்கள், அது மாதிரி எதிலும் சிக்காமல் தனி ஆவர்த்தனம் செய்து கலக்கி விட்டிர்கள் :)

//இது வரை எனது அனைத்து பதிவுகளையும் படித்து இருந்தும் ஒரு பின்னூட்டம் கூட போடாமல் இருக்கும் (“பெ” இது உன்னை தான்) //

இதை படித்தபின் நிஜமாகவே என்னை தான் சொல்கிறாரோ என்று ஒரு கணம் திகைத்தேன் பின்பு நகைத்தேன் :)

Reply

ராமலக்ஷ்மி February 19, 2009 at 12:53 PM

இரட்டை சதத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் கிரி.

உங்களைப் பாராட்ட வந்தால் என்னை பாராட்டு மழையில் நனைத்து வைத்திருக்கிறீர்கள்:)!

சீக்கிரம் அடுத்த சதம் அடியுங்கள் என்று சொல்ல மாட்டேன். எண்ணிக்கை முக்கியம் அன்று. நாம் எழுதும் ஒவ்வொரு பதிவும் ஏதோ ஒரு வகையில் யாரோ ஒருவர் மனதில் நின்றாலும் அதுவே நம் எழுத்துக்குக் கிடைக்கும் மிகப் பெரிய அங்கீகாரம் என்பதே எப்போதும் என் எண்ணம். அந்த வகையிலேயே நீங்கள் தற்சமயம் எடுத்துள்ள ‘slow and steady’ முறை சரியான பாதையில் பலரையும் கவர்ந்து பயணித்து வருகிறது. வரும் பதிவுகளும் அவ்வாறே சிறந்து விளங்கும் என்பதில் உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் எந்த ஐயமுமில்லை:)!

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!

Reply

கிரி February 19, 2009 at 1:29 PM

கானா பிரபா, வடுவூர் குமார், ஜோதிபாரதி,நர்சிம், கோவி கண்ணன்,வினோ,பிரேம்ஜி, நாக்ஸ், அப்துல்லா, வித்யா,சர்வேசன்,ராஜ நடராஜன்,நான் ஆதவன், வண்ணத்துபூச்சியார், லோகன், ராமலக்ஷ்மி பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

@கானா பிரபா — ஏங்க! அது நமீதா இல்ல தலைவி மாளவிகா! :-) ))

@அப்துல்லா — “உங்களுக்கு வந்த டாப் டென் பின்னூட்டத்துல நம்மளும் இருக்கோம்.” இதை எல்லாம் நீங்க சொல்லனுமா! ராமலக்ஷ்மி மூத்தவங்க அதனால அவர்களை குறிப்பிட்டேன். உங்களை பற்றி எனக்கு தெரியாதா! என்ன அண்ணே! :-)

“நம்ப சின்ன அண்ணே எப்பிடி இருக்காரு??? நடக்க ஆரமிச்சுட்டாரா???” — அவன் இப்ப தான் உட்கார முயற்சி செய்துட்டு இருக்கான் :-) ))

@லோகன் “இதை படித்தபின் நிஜமாகவே என்னை தான் சொல்கிறாரோ என்று ஒரு கணம் திகைத்தேன் பின்பு நகைத்தேன் :) ” — இது வேற ஒரு கல்ப்ரிட் :-) ))

@ராமலக்ஷ்மி “சீக்கிரம் அடுத்த சதம் அடியுங்கள் என்று சொல்ல மாட்டேன். எண்ணிக்கை முக்கியம் அன்று” — உங்கள் அறிவுரைக்கு நன்றி ராமலக்ஷ்மி

=================================================================================

ஜ்யோவ்ராம் சுந்தர், ஆ.ஞானசேகரன், அபி அப்பா, அனுஜன்யா ஆகியோரின் முதல் பின்னூட்டத்திற்கு நன்றி

@ஜ்யோவ்ராம் சுந்தர்— சுந்தர் இது எனக்கு முதல் பின்னூட்டமாக இருந்தாலும், என் பெரும்பாலான பதிவுகளுக்கு தமிழிஷ் ல் வோட் போட்டு இருக்கிறீர்கள், அதற்க்கு மிக்க நன்றி.

Reply

பரிசல்காரன் February 19, 2009 at 2:16 PM

வாழ்த்துகள் கிரி.

உங்கள் எழுத்தின் முதிர்ச்சியே நீங்கள் பதிவுலகத்திலிருந்து என்ன அனுபவத்தைப் பெற்றீர்கள் என்பதைப் பறைசாற்றுகிறது. சிங்கப்பூர் குறித்த உங்கள் தொடர்பதிவில் உங்கள் உழைப்பைப் பார்த்து வியந்ததுண்டு நான். அதே போல அரசியல், சமூகக் கருத்துகளில் உங்கள் பார்வையை வழவழ கொழகொழாவென இல்லாமல் நச்-சென்று எடுத்துரைப்பதும் உங்கள் ஸ்பெஷல்.

இந்த முறை இந்தியா வரும்போது நிச்சயமாக திருப்பூர் வரவேண்டும். திருப்பூர் வலைப்பதிவர்கள் பேரவை சார்பாக உங்களுக்கு விழா எடுக்க விழைகிறோம். (உங்கள் ப்ராண்ட் என்னன்னு மெயில்ல சொல்லுங்க.. ஓக்கே?)

Reply

Shivaji(formerly Shivaji Rao Admirer) February 19, 2009 at 2:50 PM

நாளைய தமிழகமே (கிரி உங்களை தான் )

தளராத பொறுமையும் , நிமிர்ந்த பார்வையும்
எதையும் சகித்துகொள்ளும் பக்குவமும்,
அனைவரையும் நம்மை போல் நினைக்கும் குணமும், எதை
பற்றியும் தெளிவாகவும் , ஆழமாகவும் எழுதும் லாவகமும்,
( உண்மையான ) கடமை, கண்ணியம் , கட்டுப்பாட்டை பின்பற்றும்
பண்பும், தவறை ஒப்புக்கொள்ளும் பெருந்தன்மையும் கொண்டவரே !
நீ வாழ நான் வாழ்த்துகிறேன் !
ஏற்றுக்கொள் வேந்தனே !

குறிப்பாக Joe பற்றி நானும் உயர்வான கருத்து கொண்டுள்ளேன்.
ரஜினி நிலம் வாங்கியது சம்பந்தமான விவாதத்தில், அவர் தான் ரஜினி என்ற நடிகருக்கு விசிறி என்றதுடன் , ரஜினி அந்த விஷயத்தில் விக்ரம் மாதிரி ரோல்-மாடல் ஆக நடந்து கொள்ளவில்லை என்று ஆணித்தரமாக கூறினார் .

ராமலக்ஷ்மி அவர்களுக்கும் என் நன்றிகள் .

கிரி தமிழ் நாடு உனக்காக ஏங்கி இருக்கையில் ,
நீ ஏன் இருக்கிறாய் சிங்கை el
பச்சை , வெள்ளை ,என பல வர்ண தமிழா
நீ தலைமையேற்க வா
உடன் பிறப்பும் , ரத்தத்தின் ரத்தமும்
காத்து இருக்கிறோம் !

:) வாழ்த்துக்கள் கிரி !

என்றும் அன்புடன் ,
Shivaji(formerly shivaji rao admirer)

Reply

ஜ்யோவ்ராம் சுந்தர் February 19, 2009 at 3:09 PM

தமிழிஷில் வோட்டுப் போட்டதற்குக் காரணம், எனக்கும் ரஜினி பிடிக்குமே :) :)

Reply

மணிகண்டன் February 19, 2009 at 3:46 PM

வாழ்த்துக்கள் கிரி.

Reply

திகழ் February 19, 2009 at 5:39 PM

வாழ்த்துகள் நண்பரே

Reply

வால்பையன் February 19, 2009 at 5:40 PM

200 க்கு வாழ்த்துக்கள் நண்பரே!

Reply

வால்பையன் February 19, 2009 at 5:42 PM

//இது வரை எந்த குழுவிலும் இல்லை.//

ஹிஹிஹி

இதுவரை எந்த குழுவிலும் இல்லாதவர்கள் குழுவில் இருக்கிறீர்கள்

Reply

வால்பையன் February 19, 2009 at 5:42 PM

//பதிவுலகம் வந்த பொழுது அனைவரும் அறிவுறுத்தியது ஏதாவது குழுவில் இணைந்து கொள்ளுங்கள் இல்லை என்றால் அவர்களே உங்களை ஏதாவது குழுவில் இணைத்து விடுவார்கள் என்று.//

உண்மைதான் நாம் சும்மா இருந்தாலும், நம்மை எதாவது க்ரூப்புல் சேர்த்து விடுவார்கள்

Reply

வால்பையன் February 19, 2009 at 5:45 PM

//இது வரை எனது அனைத்து பதிவுகளையும் படித்து இருந்தும் ஒரு பின்னூட்டம் கூட போடாமல் இருக்கும் (“பெ” இது உன்னை தான்);//

யாருங்க அது?

Reply

வால்பையன் February 19, 2009 at 5:50 PM

//திருப்பூர் வலைப்பதிவர்கள் பேரவை சார்பாக உங்களுக்கு விழா எடுக்க விழைகிறோம். (உங்கள் ப்ராண்ட் என்னன்னு மெயில்ல சொல்லுங்க.. ஓக்கே?)//

எந்த சரக்காக இருந்தாலும் ம் ”மூடி” மட்டும் இவர் கையில் கொடுங்கள் போதும்.

Reply

கணேஷ் February 19, 2009 at 5:53 PM

சார், பின்னுறீங்க.. வாழ்த்துக்கள். தொடர்ந்து பட்டையக் கெளப்புங்க.. என்னை மாதிரி சிறுவர்களுக்கும் உங்கள் ஆதரவு தொடர்ந்து தேவை. :)

Reply

’டொன்’ லீ February 19, 2009 at 6:00 PM

3 மாதங்களில் 100 பதிவா…அடேங்கப்பா….

200 பதிவை 1 வருடத்தில் எழுதி உங்க ட் ரஜினி மாதிரி கலக்கிட்டீங்க…

வாழ்த்துகள்…:-))

Reply

மோகன் February 19, 2009 at 6:38 PM

என்னது 200 பதிவுகளா? மயக்கம் தெளிஞ்ச அப்புறம் வரேன்.

Reply

சரவணகுமரன் February 19, 2009 at 6:43 PM

வாழ்த்துக்கள்,கிரி.

Reply

அருப்புக்கோட்டை பாஸ்கர் February 19, 2009 at 6:48 PM

மனமார்ந்த வாழ்த்துக்கள்,கிரி.

Reply

கிரி February 19, 2009 at 8:45 PM

கே கே, சிவாஜி, மணிகண்டன், திகழ்மிளிர், அருண், கணேஷ், டொன் லீ, மோகன், சரவணகுமரன் மற்றும் பாஸ்கர் வாழ்த்துக்கும் பாராட்டிற்கும் நன்றி

=================================================================================

@கே கே “உங்கள் ப்ராண்ட் என்னன்னு மெயில்ல சொல்லுங்க.. ஓக்கே”

ஹி ஹி ஹி சொல்லிடுறேன் சொன்னதுக்கு அப்புறம் டென்ஷன் ஆகப்படாது.

@சிவாஜி “நாளைய தமிழகமே (கிரி உங்களை தான் )”

அவ்வ்வ்வ்வ்வ் இப்படி ஆரம்பத்துலையே டவுசர கழட்டறீங்களே ;-)

“கிரி தமிழ் நாடு உனக்காக ஏங்கி இருக்கையில் ,
நீ ஏன் இருக்கிறாய் சிங்கை el
பச்சை , வெள்ளை ,என பல வர்ண தமிழா
நீ தலைமையேற்க வா
உடன் பிறப்பும் , ரத்தத்தின் ரத்தமும்
காத்து இருக்கிறோம் !”

ஐயையோ! என்னங்க கலைஞர், கழக கண்மணிகளுக்கு கடிதம் எழுதற மாதிரி சொல்றீங்க.. ;-)

என் பிராஜக்ட் ஏப்ரல் மாதம் முடிந்து விடும் அதனால் எப்படியும் மே மாதம் சென்னை வந்து விடுவேன் (சென்னை என்னை போடா வெண்ணை என்று கூறாமல் இருந்தால்).. உங்களை அங்கே மீட் பண்ணுறேன் கேப்டன் பாணியில் சொல்வதென்றால் We will meet, will meet, meet :-) ))

@ஜ்யோவ்ராம் சுந்தர் “தமிழிஷில் வோட்டுப் போட்டதற்குக் காரணம், எனக்கும் ரஜினி பிடிக்குமே :) :)

அவ்வ்வ்வ்வ்வ்வ் அப்ப நான் எழுதிய பதிவிற்கு இல்லையா! சரி சரி இருந்தாலும் ரஜினி பற்றி இல்லாத பதிவிற்கும் எனக்கு வோட் போட்டு இருக்கீங்க..அதனால மனச தேத்திக்கிறேன் :-( (((

@அருண் — “யாருங்க அது?”

அது என் பதிவை முதலில் இருந்து படித்து ஒரு கமெண்ட் ம் போடாமல் இருக்கும் என் விளங்காத நண்பன் :-) ))

“எந்த சரக்காக இருந்தாலும் ம் ”மூடி” மட்டும் இவர் கையில் கொடுங்கள் போதும்.”

ஹி ஹி ஹி என்னை நல்ல்ல்ல்ல்ல்ல்லா தெரிந்து வைத்து இருக்கீங்க

@கணேஷ் — “என்னை மாதிரி சிறுவர்களுக்கும் உங்கள் ஆதரவு தொடர்ந்து தேவை. :)

பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க!

@மோகன் — “என்னது 200 பதிவுகளா? மயக்கம் தெளிஞ்ச அப்புறம் வரேன்.”

ஹலோ! இதெல்லாம் நெம்ப ஓவர்..

Reply

ஊர்சுற்றி February 19, 2009 at 8:46 PM

3 மாதத்தில் 100 இடுகைகளா!!!!

உங்ககிட்ட நான் வந்து பயிற்சி எடுக்கணும்னு நினைக்கிறேன். :)

Reply

வாசுகி February 19, 2009 at 9:00 PM

hi கிரி,
வாழ்த்துக்கள்

எப்படி தான் உங்களை சீண்டினாலும் நீங்கள் கண்ணியமாக பதிலளிக்கும் விதம் எனக்கு ஆச்சர்யமாக தான் இருக்கிறது.

உங்களது பெரும்பாலான பதிவுகள் interest ஆக வாசிக்கக்கூடியதாக தான் இருந்தது.
ஆரம்பத்தை விட இப்போது உங்களுடைய பதிவுகளில் ஒரு professional இருக்கிறது.

தொடர்ந்து எழுதவும்.

Reply

வடகரை வேலன் February 19, 2009 at 10:58 PM

வாழ்த்துக்கள் கிரி.

உங்கள் வருகை எப்பொழுது?

Reply

நசரேயன் February 20, 2009 at 6:01 AM

வாழ்த்துக்கள் கிரி

Reply

பாலராஜன்கீதா February 20, 2009 at 8:11 AM

இன்னும் பல நூறுகள் இட வாழ்த்துகிறோம்.
வேறொரு “பெ”.
:-)

Reply

எட்வின் February 20, 2009 at 9:17 AM

வாழ்த்துக்கள்…

Reply

Raja February 20, 2009 at 9:28 AM

வாழத்துக்கள் கிரி. ஒரு வருசத்தில் 200 பதிவு என்பது பெரிய விசயம். கலக்குங்க தலைவா.தலைவி மாளவிகா போட்டாவா?? நானும் நமிதானு நினச்சுக்கிட்டு சரியா பார்க்கமா விட்டுட்டேன்.

Reply

ஷங்கர் Shankar February 20, 2009 at 11:59 AM

வாழ்த்துக்கள் கிரி

Reply

கிரி February 20, 2009 at 3:41 PM

ஊர் சுற்றி, வாசுகி, வடகரை வேலன், நசரேயன், பாலராஜன்கீதா, எட்வின், ராஜா மற்றும் ஷங்கர் வாழ்த்துக்களுக்கு நன்றி

=================================================================================

@வாசுகி — “உங்களது பெரும்பாலான பதிவுகள் interest ஆக வாசிக்கக்கூடியதாக தான் இருந்தது.”

இப்ப இல்லையா மொக்கையா இருக்கா அவ்வ்வ்வ்வ்வ்வ்

@வேலன் –”உங்கள் வருகை எப்பொழுது?”

அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை வருகிறேன் வேலன், உங்கள் அனைவருக்கும் விரிவாக மின்னஞ்சல் செய்கிறேன்

@பாலராஜன்கீதா —வேறொரு “பெ”. :-)

ஹா ஹா ஹா எப்படியோ உங்களை ஒருவழியா பின்னூட்டம் எழுத வைத்து விட்டேன், அதற்காக சாபம் எதுவும் விட்டுடாதீங்க ;-)

@ ராஜா — “தலைவி மாளவிகா போட்டாவா?? நானும் நமிதானு நினச்சுக்கிட்டு சரியா பார்க்கமா விட்டுட்டேன்”

அவ்வ்வ்வ் இப்படியே எல்லோரும் கூறி என் இதயத்தில் இடிய இறக்கறீங்களே! தமிழ்நாட்டுலையே நான் ஒருத்தன் தான் மாளவிகாக்கு ரசிகன் போல ஹி ஹி ஹி

Reply

91001103021 February 21, 2009 at 11:50 AM

//இது வரை எனது அனைத்து பதிவுகளையும் படித்து இருந்தும் ஒரு பின்னூட்டம் கூட போடாமல் இருக்கும் (“பெ” இது உன்னை தான்);-) நண்பர்களுக்கும்//
நான் தீன தயாளன் . இந்த பாதி வரி என்ன ரொம்ப பாதிச்சுருச்சு !!!
ஆனாலும் அது உண்மை என் விடயத்தில்

Reply

விண்மீன் February 21, 2009 at 3:38 PM

Arumaiyana pathivu.

Reply

ஜோசப் பால்ராஜ் February 22, 2009 at 11:02 PM

வாழ்த்துக்கள் கிரி.
அட நம்ம கருத்து மோதல்களையும், நட்பையும் போட்டுக் குழப்பிக்கிறதேயில்லீங்க. இதப் போயி பெரிய விசயமா சொல்லியிருக்கீங்க.
இது பத்தி நான் தனிப்பதிவே எழுதலாம். ஏன்னா அந்த அளவுக்கு நான் யார் யார்கிட்டயெல்லாம் கடுமையா கருத்து மோதல்கள் செஞ்சுருக்கேனோ, அவங்க கூட எல்லாம் மிக நெருங்கிய நட்பில் இருக்கேன். என்னதான் நட்பா இருந்தாலும் அவங்க சொல்றதுல எனக்கு உடன்பாடு இல்லன்னாலும் கட்டாயம் எதிர்த்து கேள்வி கேட்பேன். நட்பு வேறு, கருத்து வேறு என்பதே என் கொள்கை.

மீண்டும் வாழ்த்துக்கள்.

Reply

Mahesh February 23, 2009 at 9:35 AM

வாழ்த்துகள் கிரி…

ஒரு வருஷத்துல 200 பதிவா? நானும் பதிவு போட வந்து 6 மாசமாச்சு… 60க்கே நாக்கு தள்ளி நுரை வருது.

நடத்துங்க… நடத்துங்க…

Reply

புதுவை தமிழன் February 24, 2009 at 11:02 AM

இரு நூறு பதிவுகளை முன்னுரை ஆக்கி
இரண்டு ஆயிரம் பதிவுகளை முதலுரை ஆக்கி
இருபது ஆயிரம் பதிவுகளை பொருளுரை ஆக்கி
இரண்டு லட்சம் பதிவுகளை விளக்க உரை ஆக்கி
இரண்டாயிரம் கோடியாய் உங்கள் பதிவு உருவாகி
புது கட்டுரை படைக்க வாழ்த்துகிறேன்

அன்புடன்
வெங்கடேஷ் . இரா
( அன்பே சிவம் )

Reply

மோகன் February 24, 2009 at 2:44 PM

இப்போ தான் மயக்கம் தெளிஞ்சது (நீங்க 200 பதிவு போட்டீங்கன்னு ஒரு பதிவு போட்டீங்க பாருங்க, அதை பாத்து வந்த மயக்கம் தான்).

// நான் பதிவர்கள் யாரையும் தனிப்பட்ட தாக்குதல் நடத்துவதில்லை //

நீங்கள் பிரபலங்களை கூட தாக்கி எழுதிய மாதிரி தெரிய வில்லை.

// இது வரை எனக்கு பல முறை பல நெருக்கடி வந்த பொழுதும், (கோபமாக எழுதியதுண்டு) கண்ணிய குறைவாக எதையும் எழுதியதில்லை, இனியும் எழுத மாட்டேன். //
ஆமாங்க. சரி தான்.

// பதிவுலகம் வந்த பொழுது அனைவரும் அறிவுறுத்தியது ஏதாவது குழுவில் இணைந்து கொள்ளுங்கள் இல்லை என்றால் அவர்களே உங்களை ஏதாவது குழுவில் இணைத்து விடுவார்கள் என்று.//
இது என்னது புதுசா இருக்கு? நான் எந்த குரூப்பலையும் இல்லையே

வாழ்த்துகள் கிரி.

ஆனாலும் நீங்க ஒருத்தர் தான் கூகிள் அக்கௌன்ட் இருக்கறவங்க மட்டும் தான் பின்னூட்டம் போட முடியும்னு ரூல் வச்சி இருக்கீங்க.
மோ. மோகன் குமார்.

Reply

ஈ ரா February 24, 2009 at 8:16 PM

கிரி,

உண்மைய சொல்லனும்னா, நான் அசந்து போயிட்டேன்.. நான் நிறைய பதிவுகளை படித்ததில்லை.. என்னதான் இணையத்தில நிறைய படிக்க முயற்சி செய்தாலும், நான் அடிப்படையில புத்தகம் வாங்கியும், லைப்ரரியில எடுத்துட்டு வந்தும் படிக்கற ஆள். உங்கள் எழுத்து ஒவ்வொரு முறை நான் பார்க்கும் போதும் மெருகேறிக் கொண்டே இருக்கிறது.. எப்படியும் உங்கள் அனைத்து பதிவுகளையும் படிக்க நினைக்கிறேன்.

உங்களுக்கு உள்ளே அசாத்திய திறமை இருக்கிறது – அடக்கத்தை உப்பு மூட்டை தூக்கிக் கொண்டு..

வாழ்க வளமுடன்

அன்புடன்

ஈ ரா

Reply

தேவன் மாயம் February 25, 2009 at 8:41 AM

200 பதிவுகள் போட்ட உங்களை

வாழ்த்துகிறேன்…

Reply

கிரி February 25, 2009 at 9:09 AM

ஸ்டார், ஷமீர்,ஜோசப் பால்ராஜ்,மகேஷ், வெங்கடேஷ், ஈ ரா மற்றும் தேவா அவர்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி

=================================================================================

@வெங்கடேஷ் — “இரண்டாயிரம் கோடியாய் உங்கள் பதிவு உருவாகி “

உங்கள் வாழ்த்து கண்ணை கட்டுது ;-)

@மோகன்– “ஆனாலும் நீங்க ஒருத்தர் தான் கூகிள் அக்கௌன்ட் இருக்கறவங்க மட்டும் தான் பின்னூட்டம் போட முடியும்னு ரூல் வச்சி இருக்கீங்க.”

:-) ))

அது வேற ஒண்ணுமில்ல அரசியல் பதிவு எழுதறோம் ரஜினி பற்றி பதிவு எழுதறோம்..பிடிக்காதவங்க ஏடாகூடமா கமெண்ட் போடுவாங்க.. அதை தவிர்க்க தான். இதில் அப்படி பிரச்சனை (இதுவரை) இல்லை

@ஈ ரா — “உங்களுக்கு உள்ளே அசாத்திய திறமை இருக்கிறது”

நீங்கள் மற்ற(வர்களின்) பதிவுகளை(யும்) படித்தால் உங்களுக்கு என் பதிவுகள் பெரிதாக தோன்றாது.

Reply

Suresh March 3, 2009 at 2:26 PM

Valthukkal thalaiva

Ungalai pondravargalin asirvathathudan nanum pathivu poda arambithu ullan. Pudichu iruntha oru vote panunga :-)

Kandipa ungaluku pidikum endru nambugiran.

http://sureshstories.blogspot.com/2009/03/blog-post_02.html

கருணாநதி அரசு மருத்துவமனையில் ?

அன்புள்ள முதல் அமைச்சர் அவர்களே,

உங்களுக்கு உடம்புக்கு முடியவில்லை என்று நீங்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று இருந்தால் என்ன லாபம் என்று கிழே பதிவு செய்து இருகிறேன்.

Reply

பாண்டித்துரை March 5, 2009 at 11:42 AM

வாழ்த்துகள்

Reply

பாசகி March 12, 2009 at 12:38 PM

ஐய்யோ ஐய்யோ, இவ்ளோ லேட்டா வந்துட்டனே… தப்பா நினைச்சுப்பாரோ??! கோவிச்சுப்பாரோ??! நீங்க தப்பா நினைக்கமாட்டீங்கனு தெரியும், ஏன்னா நீங்க ரொம்ப நல்ல நல்ல்ல்ல்லவரு :) ))

அடடே இன்னும் சொல்லலியா, வாழ்த்துகள் கிரி-ஜி!!!

நீங்க எப்பவுமே எனக்கு கொஞ்சம் special, அதனால மெய்யாலுமே குஜாலா கீது :)

Reply

Suresh March 12, 2009 at 1:59 PM

apprum enoda padivu padichu pidicha podunga oru vote :-)

Reply

Suresh March 12, 2009 at 1:59 PM

Valthukkal nanbarae, 200 na summa va kalakuringa valthukkal 2 pathikkuvae nakku thali poguthu :-)

Reply

கிரி March 12, 2009 at 9:29 PM

//Suresh said…

Valthukkal nanbarae//

நன்றி சுரேஷ்

//nanum pathivu poda arambithu ullan. Pudichu iruntha oru vote panunga :-) //

நல்ல பதிவுகளை நாகரீகமாக எழுத என் அன்பான வாழ்த்துக்கள். நான் பதிவு பிடித்து இருந்தால் கண்டிப்பாக பின்னூட்டம் போட்டு விடுவேன், தமிழிஷ் என்றால் வோட் போட்டு விடுவேன், தமிழ்மணத்தில் மறந்து விடுவேன், என் பதிவிற்கே நான் வோட் போட மறந்து விடுவேன் :-) ))

உங்கள் முதல் வருகைக்கு நன்றி

=================================================================================

நன்றி பாண்டித்துரை

=================================================================================

//பாசகி said…
நீங்க தப்பா நினைக்கமாட்டீங்கனு தெரியும், ஏன்னா நீங்க ரொம்ப நல்ல நல்ல்ல்ல்லவரு :) ))//

:-) ))

//அடடே இன்னும் சொல்லலியா, வாழ்த்துகள் கிரி-ஜி!!!//

நன்றி சக்தி உங்களை காணோமே என்று பார்த்தேன்

//நீங்க எப்பவுமே எனக்கு கொஞ்சம் special, அதனால மெய்யாலுமே குஜாலா கீது :) //

அப்படியா! இது எனக்கு மட்டும் சொன்ன வசனம் என்று நம்ம்ம்ம்ம்பி நன்றி சொல்லிக்கிறேன் ;-)

Reply

Arun March 13, 2009 at 12:32 AM

Congrats giri

yeppa 201 vathu pathivu?
Eagerly waiting….

Thanks,
Arun

Reply

பாசகி March 13, 2009 at 12:46 PM

//அப்படியா! இது எனக்கு மட்டும் சொன்ன வசனம் என்று நம்ம்ம்ம்ம்பி நன்றி சொல்லிக்கிறேன் ;-) //

பாத்தீங்களா கவுத்துட்டீங்க :(

உண்மை உண்மை உண்மை மட்டுமே :)

Reply

கிரி March 13, 2009 at 1:54 PM

//arun said…
Congrats giri//

நன்றி அருண்

//yeppa 201 vathu pathivu?
Eagerly waiting….//

நீங்க ஒருத்தர் என் பதிவு பற்றி இப்படி கேட்கறீங்க போல ஹி ஹி ஹி நன்றி அருண்

அருண் உங்கள் பின்னூட்டம் இந்த பதிவிற்கு எதிர்பார்த்து இருந்தேன், எங்கடா ஆளை காணோமே என்று.

=================================================================================

//பாசகி said…
பாத்தீங்களா கவுத்துட்டீங்க :( //

சக்திய கவுக்க முடியுமா! :-)

//உண்மை உண்மை உண்மை மட்டுமே :) //

நன்றி நன்றி நன்றி :-)

Reply

தமிழன்-கறுப்பி... March 15, 2009 at 10:48 PM

வாழ்த்துக்கள் கிரி அண்ணே…!

Reply

தமிழன்-கறுப்பி... March 15, 2009 at 10:48 PM

ஆரம்பகால வாசகன் என்னைப்பற்றி இங்கே சொல்லாமல் விட்டதுக்கு கண்டனனனனனனனனனனனனம்…

:) )

Reply

தமிழன்-கறுப்பி... March 15, 2009 at 10:48 PM

74

Reply

தமிழன்-கறுப்பி... March 15, 2009 at 10:50 PM

\\
என்னை இதை போல பதிவுகள் தான் எழுதுவேன் என்று யாராலும் அறுதியிட்டு கூற முடியாது. விளையாட்டு திரைப்படம் அரசியல் நகைச்சுவை கோபம் ஆன்மீகம் செய்திகள் என்று எல்லாமே கலந்து தான் என் பதிவுகள் இருக்கும்.
\\
இன்னொன்று சொல்லலாம் நீங்க கவுஜ எழுதி பிளேடு போடமாட்டிங்கதானே…

:)

Reply

தமிழன்-கறுப்பி... March 15, 2009 at 10:51 PM

ஆனா ஒண்ணு மனிசன் எதை மாதத்தினாலும் மாளவிகாவை மட்டும் மாத்த மாட்டேங்கிறாருப்பா..

:) )

Reply

கிரி March 16, 2009 at 12:30 PM

//தமிழன்-கறுப்பி… said…
வாழ்த்துக்கள் கிரி அண்ணே…!//

நன்றி தமிழன்

//ஆரம்பகால வாசகன் என்னைப்பற்றி இங்கே சொல்லாமல் விட்டதுக்கு கண்டனனனனனனனனனனனனம்…//

நல்லா படிங்க எல்லோரையும் குறிப்பிட்டு இருக்கேன் ஆனால் பெயரில்லாமல் :-) )

//இன்னொன்று சொல்லலாம் நீங்க கவுஜ எழுதி பிளேடு போடமாட்டிங்கதானே…//

அப்படின்னா கிலோ என்ன விலை என்று கேட்கிற ஆள் நான் ;-)

//ஆனா ஒண்ணு மனிசன் எதை மாதத்தினாலும் மாளவிகாவை மட்டும் மாத்த மாட்டேங்கிறாருப்பா//

ரொம்ப போர் அடிக்குதா! சரி விரைவில் மாத்திடுவோம் ;-)

Reply

உண்மைத் தமிழன்(15270788164745573644) March 24, 2009 at 8:25 AM

தாமதத்திற்கு மன்னிக்கணும் கிரியாரே..

இப்போதுதான் இந்தப் பதிவைப் பார்த்தேன்..

வாழ்த்துக்கள்..

தங்களது படைப்புகள் பன்மடங்கு பெருகட்டும்..

வாழ்க வளமுடன்..!

Reply

முத்துலெட்சுமி/muthuletchumi March 24, 2009 at 10:05 AM

வாழ்த்துக்கள் கிரி..

Reply

கிரி March 25, 2009 at 7:02 AM

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said…
தாமதத்திற்கு மன்னிக்கணும் கிரியாரே..

இப்போதுதான் இந்தப் பதிவைப் பார்த்தேன்..//

அட! இதில் என்னங்க இருக்கு

//வாழ்த்துக்கள்..

தங்களது படைப்புகள் பன்மடங்கு பெருகட்டும்..//

நன்றி உண்மை தமிழன்

==============================================================================

//முத்துலெட்சுமி-கயல்விழி said…
வாழ்த்துக்கள் கிரி..//

நன்றி முத்துலெட்சுமி – கயல்விழி

Reply

91001103021 April 26, 2009 at 5:35 PM

enna yellaruma chenthu ippatipannitaanga

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed