காதலர்களே! அல்லது காதலை சொல்ல நினைப்பவர்களே! அல்லது சும்மானாச்சிக்கும்!!! காதலிப்பவர்களே!
உங்களுக்கு பீதிய கொடுக்கும் அறிவிப்பை “ராம் சேனா” இயக்கத்தினர் அறிவித்து இருக்கிறார்கள்.
அதாவது பிப் 14 ம் தேதி காதலர்கள் தினம்..ஆமா! அது எங்களுக்கு தெரியாதா.. அதுக்கென்ன இப்ப! னு கேட்கறீங்களா! மேட்டரே அது தான். காதலர்கள் தினத்தன்று பொது இடத்தில் ஜோடியா நின்னுட்டு!! கடலை போட்டுட்டு இருந்தாலும், ரொமான்ஸ்!!! செய்துட்டு இருந்தாலும் கண்ணாலம் கட்டிக்கிற திட்டத்துல இல்லாதவங்க கொஞ்சம் உஷாரா இருங்க
பிரச்சனை என்னனா! காதலர்கள் தினம் என்கிற பெயரில் கலாச்சார சீரழிவை அனைவரும் நடத்துகிறார்கள் என்று “ராம் சேனா” அமைப்பினர் கருதுகிறார்களாம்! அதனால இப்படி இருக்கிற ஜோடிய கபால்னு அமுக்கி அப்படியே பதிவாளர் அலுவலகத்திற்கு கூட்டிட்டு சென்று திருமணம் செய்து வைத்து விடுவார்களாம் அதோடு விடாமல் இதை வீடியோ வேற எடுத்து உலகம் முழுவதும் பரப்பி விடுவார்களாம் (நல்ல எண்ணம்யா) அப்படின்னு இந்த அமைப்பின் தலைவர் பிரமோத் முட்டாலிக் (பேரே சரி இல்லையே
). யோவ்! இது என்னையா அநியாயமா இருக்குன்னு என்னை திட்டாதீங்க.. “ஆல் திட்டுக்கள் அண்டு if பாராட்டுக்கள்!! பார்வர்டு டு ராம் சேனா”
இதற்க்கு இவர்கள் கொடுத்து இருக்கும் விளக்கம், காதலர் தினம் என்பது மேலை நாட்டு கலாச்சாரம், இது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது, இதை அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டுள்ளது எனவே அரசும் காவல்துறையும் எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் இதை போல செய்வதை தவிர்க்க முடியாது. இவர்கள் காதலர்கள் பற்றி மிரட்டி கூறியதை தமிழில் எப்படி சரியான வார்த்தையை பயன்படுத்துவது என்பது தெரியாததால் அப்படியே “Those guys and girls exhibiting public display of affection on Valentine’s Day, beware”.
காதலர் தினத்தை பிரபலப்படுத்தி வாழ்த்து அட்டைகள், பரிசு பொருள் கடைகள், தொலைபேசி நிறுவனங்கள்(குறுந்தகவலுக்காக) போன்றவர்கள் அதிகளவில் சம்பாதிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் நீண்ட நாட்களாக உண்டு. இதனால் போன வருடம் இந்த கடைகளை எல்லாம் ஒரு கும்பல் அடித்து நொறுக்கியது நினைவிருக்கலாம்.
இந்த “ராம் சேனா” அமைப்பு யார் என்று தெரியாதவர்களுக்கு, இவர்கள் தான் சமீபத்தில் மங்களூரில் ஒரு பஃப்பில் கலாச்சாரத்தை சீரழிக்கிறார்கள் என்று அங்குள்ள பெண்களை காட்டுத்தனமாக அடித்து நொறுக்கியவர்கள். தற்போது இது குறித்து வழக்கு! நடந்து வருகிறது.
கலாச்சார பாதுகாவலர்களே!!! உங்கள் நோக்கம் நல்லதாக இருந்தாலும் உங்கள் வழிமுறைகள் கேவலமாக உள்ளது.
ஒரு சிலர் பொது இடங்களில் வரம்பு மீறி அநாகரீகமாக நடந்து கொள்கிறார்கள் என்பதை மறுக்கவில்லை என்றாலும், அதற்காக நீங்களே தண்டிக்கும் அதிகாரத்தை!!! கையில் எடுத்துகொள்வதை கண்டிப்பாக ஏற்க முடியாது.
தற்போது காதலர் தினத்தை கையில் எடுத்துள்ளார்கள், இந்த கல்யாண விஷயம் கர்நாடகாவில் தான் நடக்கிறது எனவே தமிழ்நாட்டுல இருக்கிற காதலர்கள்!! கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டுக்குங்க, ஆனா எதுக்கும் கொஞ்சம் உஷாரா இருந்துக்குங்க
) ஹி ஹி ஹி
இது குறித்து இரு தரப்பு நியாயங்களை கூறும் கமெண்ட்
தவறு: மாமே! இவனுக காதல் ங்கற பெயர்ல அடிக்கிற லூட்டி தாங்க முடியலை! காதலா பண்ணுறாங்க! பார்க் ல உட்காந்துட்டு இவங்க அடிக்கிற கூத்தை சகிக்க முடியல! பீச்சுக்கு குடும்பத்தோட போய் உட்கார முடியுதா! இவங்களை எல்லாம் இப்படி செய்தா தான் பயப்பட்டு ஒழுங்கா இருப்பாங்க.
சரி: மச்சி! இவனுகளுக்கு பிகர் கிடைக்காத கடுப்புல சொல்றானுகடா! இது ஒருத்தனோட தனிப்பட்ட சுதந்திரம். இதுல எதுக்கு இவங்க தலையிடுறாங்க. இது ஜனநாயக நாடு. பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான்!
இது எதிலும் சம்பந்தப்படாதவர்: யோவ்! இங்கே அவனவன் வேலை (job) எப்போ போகும் டவுசர எப்ப கழட்டுவாங்கன்னு தெரியாம பீதில இருக்கான்..இதுல காதலர் தினம் ஆதரவு எதிர்ப்புனுட்டு ..போங்கையா போய் பொழைப்ப பாருங்க! மனுசன கடுப்படிக்காதீங்க!
அப்பாடா! நம்ம வேலை முடிந்தது
))
Related posts:
{ 38 comments… read them below or add one }
கோமணம் காத்துல பறக்குதாம்… தலைக்கு ஏன் குஞ்சலம் கட்டலைன்னு கேட்டானாம்…
வேலை வெட்டி இல்லாத பயலுகதான் கலாச்சாரக் காவலர்களா?
//சும்மானாச்சிக்கும்!!! காதலிப்பவர்களே!
//
சீரியஸா காதலிக்கிறத விட சும்மானாச்சுக்கும் காதலிக்கிறது ரொம்ப கஷ்டம்னு உங்களுக்கு தெரியாதா கிரி? அதென்ன ஸ்மைல் சிம்பல்…? இப்படியெல்லாம் நக்கல் அடிக்கப்புடாது… ஆமா..!!!
//காதலர்கள் தினம் என்கிற பெயரில் கலாச்சார சீரழிவை அனைவரும் நடத்துகிறார்கள் என்று “ராம் சேனா” அமைப்பினர் கருதுகிறார்களாம்!//
நல்ல கண்டுபிடிப்பு!!!
//ஜோடிய கபால்னு அமுக்கி அப்படியே பதிவாளர் அலுவலகத்திற்கு கூட்டிட்டு சென்று திருமணம் செய்து வைத்து விடுவார்களாம்.
அப்பாட கல்யாண செலவு மிச்சம்!! ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி சொல்லிருந்தா செலவில்லாம கல்யாணம் பண்ணிருக்கலாமே!!!
//அதோடு விடாமல் இதை வீடியோ வேற எடுத்து உலகம் முழுவதும் பரப்பி விடுவார்களாம்//
அட… வீடியோ செலவும் மிச்சமா? அப்டியோ போட்டோவும் எடுத்து கொடுத்துட்டாங்கன்னா… நல்லாருக்குமில்ல!!
//இவர்கள் காதலர்கள் பற்றி மிரட்டி கூறியதை தமிழில் எப்படி சரியான வார்த்தையை பயன்படுத்துவது என்பது தெரியாததால் அப்படியே “Those guys and girls exhibiting public display of affection on Valentine’s Day, beware”.//
அய்யோ… அய்யோ.. இத கூட தமிழ்ல எழுத தெரியலியா… நான் எழுதுறேன் பாருங்க கிரி…!
தோஸ் கைஸ் அண்ட் கேர்ள்ஸ் எக்ஸிபைட்டிங் பப்ளிக் டிஸ்பிளே ஆப் அபெக்ஷன் ஆன் வேலண்டைன்ஸ் டே, பீவேர்! இது எப்டி இருக்கு?
//இவர்கள் தான் சமீபத்தில் மங்களூரில் ஒரு பஃப்பில் கலாச்சாரத்தை சீரழிக்கிறார்கள் என்று அங்குள்ள பெண்களை காட்டுத்தனமாக அடித்து நொறுக்கியவர்கள்.//
பாவம் அந்த பப் கேர்ள்ஸ்..!!
//கலாச்சார பாதுகாவலர்களே!!! உங்கள் நோக்கம் நல்லதாக இருந்தாலும் உங்கள் வழிமுறைகள் கேவலமாக உள்ளது//
இந்த பதிவிலலேய உருப்படியான வரி இதுதான்.!!!
யோவ்! இங்கே அவனவன் வேலை (job) எப்போ போகும் டவுசர எப்ப கழட்டுவாங்கன்னு தெரியாம பீதில இருக்கான்..இதுல காதலர் தினம் ஆதரவு எதிர்ப்புனுட்டு ..போங்கையா போய் பொழைப்ப பாருங்க! மனுசன கடுப்படிக்காதீங்க!
அப்படின்னு உங்கள திட்டலாம்னு இருந்தேன். அதையே இது எதிலும் சம்பந்தபடாதவர் கமெண்ட்ன்னு நச்சினு சொல்லிட்டீங்க! கலக்கல்.
ஒருவேளை, எனக்கெல்லாம் அவங்க கல்யாணம் பண்ணி வச்சாங்கன்னா, சைல்ட் மேரேஜ் நடத்திட்டாங்கன்னு அவங்கள போலீஸ் புடிச்சிக்கும்
)
எனக்கு ஏற்கனவே ஒருக்கா கண்ணாலம் ஆகிருச்சு, மறுக்கா எதாவது பிகராண்ட கடல போட்டாலும் கண்ணாலம் பண்ணி வப்பாங்களா?
//Mahesh said…
கோமணம் காத்துல பறக்குதாம்… தலைக்கு ஏன் குஞ்சலம் கட்டலைன்னு கேட்டானாம்…//
ஹா ஹா ஹா
//வேலை வெட்டி இல்லாத பயலுகதான் கலாச்சாரக் காவலர்களா?//
பாதுகாத்துட்டாலும்…….
)
===================================================================
//சினிமா நிருபர் said…
வாங்கய்யா நிருபரே! ஏங்க! ரொம்ப நாளா ஆளை காணோம்னு கேட்டா.. இப்படி வந்து கலாய்க்கறீங்களா!
//சீரியஸா காதலிக்கிறத விட சும்மானாச்சுக்கும் காதலிக்கிறது ரொம்ப கஷ்டம்னு உங்களுக்கு தெரியாதா கிரி? அதென்ன ஸ்மைல் சிம்பல்…? இப்படியெல்லாம் நக்கல் அடிக்கப்புடாது… ஆமா..!!!//
அப்ப அனுபவம் இருக்கும் போல இருக்கே! மாட்டிகிட்டாரு! மாட்டிகிட்டாரு!!
இருங்க உங்க வீட்டுக்கார அம்மா கிட்ட சொல்றேன்
//நல்ல கண்டுபிடிப்பு!!!//
இதற்க்கு பத்ம ஸ்ரீ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது
(இப்ப தான் யாரு வேணாலும் இதை வாங்கலாமாமே)
//அப்டியோ போட்டோவும் எடுத்து கொடுத்துட்டாங்கன்னா… நல்லாருக்குமில்ல!!//
ஹா ஹா ஹா
//இது எப்டி இருக்கு?//
அவ்வ்வ்வ் முடியல! வலிக்குது
//இந்த பதிவிலலேய உருப்படியான வரி இதுதான்.!!!//
இது எதுக்கு..கொசுறா!
)))
நிருபர் வருகைக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி
//ராம்சுரேஷ் said…
)//
ஒருவேளை, எனக்கெல்லாம் அவங்க கல்யாணம் பண்ணி வச்சாங்கன்னா, சைல்ட் மேரேஜ் நடத்திட்டாங்கன்னு அவங்கள போலீஸ் புடிச்சிக்கும்
ஹா ஹா ஹா
இது ராம் சேனா கொடுமைய விட மோசமா இருக்கே
)
===================================================================
//வால்பையன் said…
எனக்கு ஏற்கனவே ஒருக்கா கண்ணாலம் ஆகிருச்சு, மறுக்கா எதாவது பிகராண்ட கடல போட்டாலும் கண்ணாலம் பண்ணி வப்பாங்களா?//
அருண் அவங்களை உள்ள பிடித்து வைத்துடுவாங்க..ஹா ஹா ஹா
ராம்சுரேஷ் said…
)///
//ஒருவேளை, எனக்கெல்லாம் அவங்க கல்யாணம் பண்ணி வச்சாங்கன்னா, சைல்ட் மேரேஜ் நடத்திட்டாங்கன்னு அவங்கள போலீஸ் புடிச்சிக்கும்
அவ்வளவு சின்னபொண்ணா அவங்க
/
வால்பையன் said…
எனக்கு ஏற்கனவே ஒருக்கா கண்ணாலம் ஆகிருச்சு, மறுக்கா எதாவது பிகராண்ட கடல போட்டாலும் கண்ணாலம் பண்ணி வப்பாங்களா?
/
ரிப்பீட்ட்ட்டு
//Mahesh said
வேலை வெட்டி இல்லாத பயலுகதான் கலாச்சாரக் காவலர்களா?///
இவனுங்களுக்கெல்லாம் சாப்பாடு எங்கயிருந்துங்க வர்ர்ர்ர்தூ
அய்யகோ!
அந்தப்பக்கம் போயராதீங்க
ஜாக்கிரதை! எந்த நேரமும் வரலாம்!
அவர்களே மானபங்கமும் படுத்துவார்கள்!!
//வால்பையன் said…
எனக்கு ஏற்கனவே ஒருக்கா கண்ணாலம் ஆகிருச்சு, மறுக்கா எதாவது பிகராண்ட கடல போட்டாலும் கண்ணாலம் பண்ணி வப்பாங்களா?
////
Mr.Vaal
இதுல கொடுமை என்னா பெப்ரவரி14 அன்னைக்கு உங்க துணைவியுடன் வெளியில் சென்று பேசிக்கொண்டிருக்கமுடியாது. அப்படி புச்சா அவங்க உங்க மனைவிதான் நிருப்பிக்க கூடிய காலாச்சார அடையாளங்களை காமிக்கவேண்டும். பிரச்சினை என்னான எந்தவித அடையாளமும் இல்லாம நீங்க கண்ணாலம் பண்ணியிருந்தா வேற என்ன மீண்டும் கல்யாணம். அதான் புரோகிதரோட கிளம்பிட்டானுங்களாமே
அந்த மூணு கமெண்ட்ஸ் ரியலி கிரேட்…. பாவம் காதல்ர்கள்… குறிப்பா, கள்ளக் காதலர்கள்
கிரி
சும்மா சொல்லுங்க
போனமுறை போல போனில் பேசப்போறிங்களா இல்லை நேரில் போகப்போறிங்களா
பெப்ரவரி 14க்கு தலை
இந்த ரவுசு எல்லாம் பெங்களூர், மங்களூர் ல தான் நடக்கும்..சென்னை வாசிகள் பயப்பட வேண்டாம்..:)) இங்கே நம்ம திராவிட சிங்கங்கள் ராம சேனை வாலை நறுக்கி விடுவார்கள்
) எதுக்கும் புதுசா கல்யாணம் ஆனா ஜோடிங்க உஷாரா போங்க..இல்லேன்னா மறு கலியாணம் பண்ணி வெச்சிடுவாங்க..இவனுங்க..
//பாண்டித்துரை said…
)///
ராம்சுரேஷ் said…
//ஒருவேளை, எனக்கெல்லாம் அவங்க கல்யாணம் பண்ணி வச்சாங்கன்னா, சைல்ட் மேரேஜ் நடத்திட்டாங்கன்னு அவங்கள போலீஸ் புடிச்சிக்கும்
அவ்வளவு சின்னபொண்ணா அவங்க//
ராம் சுரேஷ், ராம் சேனா மாதிரி அநியாயம் பண்ணுகிராறு போல
))
//Mr.Vaal
இதுல கொடுமை என்னா பெப்ரவரி14 அன்னைக்கு உங்க துணைவியுடன் வெளியில் சென்று பேசிக்கொண்டிருக்கமுடியாது. அப்படி புச்சா அவங்க உங்க மனைவிதான் நிருப்பிக்க கூடிய காலாச்சார அடையாளங்களை காமிக்கவேண்டும். பிரச்சினை என்னான எந்தவித அடையாளமும் இல்லாம நீங்க கண்ணாலம் பண்ணியிருந்தா வேற என்ன மீண்டும் கல்யாணம். அதான் புரோகிதரோட கிளம்பிட்டானுங்களாமே//
ஹா ஹா ஹா
//கிரி
சும்மா சொல்லுங்க
போனமுறை போல போனில் பேசப்போறிங்களா இல்லை நேரில் போகப்போறிங்களா
பெப்ரவரி 14க்கு தலை//
ஹா ஹா ஹா எனக்கு இப்போதைக்கு பேச இருக்கிற ஒரே ஆளு என் வீட்டுக்காரம்மா தான்..(house owner நினைத்துக்காதீங்க என் மனைவியை தான் கூறினேன்
)
===================================================================
//மங்களூர் சிவா said…
/
வால்பையன் said…
எனக்கு ஏற்கனவே ஒருக்கா கண்ணாலம் ஆகிருச்சு, மறுக்கா எதாவது பிகராண்ட கடல போட்டாலும் கண்ணாலம் பண்ணி வப்பாங்களா?
/
ரிப்பீட்ட்ட்டு//
மங்களூர் சிவாவிற்கும் பஃப்பில் நடந்ததற்கும் சம்பந்தம் உண்டா
))
===================================================================
// ஜோதிபாரதி said…
அய்யகோ!//
//அந்தப்பக்கம் போயராதீங்க
ஜாக்கிரதை! எந்த நேரமும் வரலாம்!
அவர்களே மானபங்கமும் படுத்துவார்கள்!!//
இவங்க பஃப்பில் இதை செய்துட்டு வெளியே வந்து அடிக்கறாங்க.. என்ன கொடுமை சார் இது!
===================================================================
//ஆதவா said…
அந்த மூணு கமெண்ட்ஸ் ரியலி கிரேட்…//
நன்றி ஆதவா! உங்கள் முதல் வருகைக்கும் சேர்த்து
===================================================================
//கீ – வென் said…
) எதுக்கும் புதுசா கல்யாணம் ஆனா ஜோடிங்க உஷாரா போங்க..இல்லேன்னா மறு கலியாணம் பண்ணி வெச்சிடுவாங்க..இவனுங்க..//
இந்த ரவுசு எல்லாம் பெங்களூர், மங்களூர் ல தான் நடக்கும்..சென்னை வாசிகள் பயப்பட வேண்டாம்..:)) இங்கே நம்ம திராவிட சிங்கங்கள் ராம சேனை வாலை நறுக்கி விடுவார்கள்
ஹா ஹா ஹா
யப்பா! இப்படி எல்லோரும் போட்டு தாக்குறீங்க..சிரித்து ஒரு வழி ஆகிட்டேன்
))
//
கலாச்சார பாதுகாவலர்களே!!! உங்கள் நோக்கம் நல்லதாக இருந்தாலும் உங்கள் வழிமுறைகள் கேவலமாக உள்ளது.//
இதுதான் எனக்கும் தோன்றியது மங்களூர் பப் விஷயத்தில்.
//கிரி said
)//
house owner நினைத்துக்காதீங்க என் மனைவியை தான் கூறினேன்
கிரி சார்
அதைதான் நானும் சொன்னேன்.
பெப்ரவரி 14 அன்பர் தினமாமே உங்க அன்பை எப்படி தெரிவிக்கபோறிங்கனு
//”பிப் 14 ம் தேதி “காதல்” செய்தால் உடனடி கண்ணாலம் தான் ஜாக்கிரதை”//
உமாபாரதியை தீவிரமாக காதலித்ததாக கோவிந்தாச்சாரி வெளிப்படையாக சொன்னார். அவங்களுக்கு ஏன் ஆர் எஸ் எஸ் அமைப்பினர் திருமணம் செய்து வைக்கவில்லை ?
//”பிப் 14 ம் தேதி “காதல்” செய்தால் உடனடி கண்ணாலம் தான் ஜாக்கிரதை”//
அன்று மட்டும் கள்ள ஜோடிகள் எதுக்கும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
//Blogger Mahesh said…
கோமணம் காத்துல பறக்குதாம்… தலைக்கு ஏன் குஞ்சலம் கட்டலைன்னு கேட்டானாம்…
வேலை வெட்டி இல்லாத பயலுகதான் கலாச்சாரக் காவலர்களா?//
ரிப்பீட்டு….
கிரி எனக்கு பொண்ணு ரெடி பண்ணி கொடுத்து கல்யாணம் பண்ணி வைப்பாங்களா?
//கோவி.கண்ணன் said…
உமாபாரதியை தீவிரமாக காதலித்ததாக கோவிந்தாச்சாரி வெளிப்படையாக சொன்னார். அவங்களுக்கு ஏன் ஆர் எஸ் எஸ் அமைப்பினர் திருமணம் செய்து வைக்கவில்லை ?//
கோவி.க மீண்டும் வருக
வடை போச்சே
//ராமலக்ஷ்மி said…
இதுதான் எனக்கும் தோன்றியது மங்களூர் பப் விஷயத்தில்.//
நன்றி ராமலக்ஷ்மி
===================================================================
//கோவி.கண்ணன் said… //
வாங்கய்யா! கோவி கண்ணன் ஐயா! எப்படி இருக்கீங்க..பிரணாப் முகர்ஜி மாதிரி!! சுற்று பயணம் போயிட்டு வந்தீங்க எப்படி இருந்தது ஹி ஹி ஹி
//உமாபாரதியை தீவிரமாக காதலித்ததாக கோவிந்தாச்சாரி வெளிப்படையாக சொன்னார். அவங்களுக்கு ஏன் ஆர் எஸ் எஸ் அமைப்பினர் திருமணம் செய்து வைக்கவில்லை ?:)//
பிரபல பதிவருன்னு நிரூபிச்சுட்டாருப்பா
ஹா ஹா
//அன்று மட்டும் கள்ள ஜோடிகள் எதுக்கும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
//
ஹி ஹி ஹி
===================================================================
//நான் ஆதவன் said…
ரிப்பீட்டு….
கிரி எனக்கு பொண்ணு ரெடி பண்ணி கொடுத்து கல்யாணம் பண்ணி வைப்பாங்களா?//
ஆஹா! நான் ஆதவன்.. ராம் சேனா தொழிலையே மாத்திட்டீங்களே ஹா ஹா அவங்க உங்களை காலி வேணா பண்ணுவாங்க ..கல்யாணம் பண்ணி வைக்க மாட்டாங்க
)))
===================================================================
//பாண்டித்துரை said…
கிரி சார்
அதைதான் நானும் சொன்னேன்.
பெப்ரவரி 14 அன்பர் தினமாமே உங்க அன்பை எப்படி தெரிவிக்கபோறிங்கனு//
அது சரி!
//கோவி.க மீண்டும் வருக//
அப்படி கூறக்கூடாது.. சுற்று பயணம்!!! முடித்து சிங்கை திரும்பும் பிரபல பதிவர் கோவி கண்ணன் அவர்களே வருக! வருக!!
)))))
===================================================================
//முரளிகண்ணன் said…
வடை போச்சே//
Be careful! நான் என்னை சொன்னேன் அப்படின்னு அதை சொல்லாம விட்டுட்டீங்க
)
இந்த லொள்ளுப்பார்ட்டிகளின் தொல்லை தாங்க முடியவில்லை
கல்யாணம் மட்டும் பண்ணிவச்சா போதுமா. அஞ்சு லட்சம் வரதட்சணை அப்பறம் பாத்து சவரன் நகை போடணும் இல்லையா இந்த சமுதாயத்து மேல அக்கறை உள்ளவங்க . அப்பறம் ராத்திரிக்கி பெட் ரூம் ரெடி பண்ணி பூ, பழம் எல்லாம் யாரு வைப்பாங்க. அவங்க அப்பனா. பப் கலாச்சாரம் நம்மது இல்லன, பொண்ணுகளை அடிக்கறது நம்ம கலாச்சாரமா. அங்க, அங்க கோடி, கோடி, கொள்ள அடிக்கறானுக நம்ம அரசியல்வாதிங்க. அதை உட்டுருவானுக. என்ன அங்க போன டிக்கியில அடிப்பானுக. அதுதான்.
//’டொன்’ லீ said…
//
இந்த லொள்ளுப்பார்ட்டிகளின் தொல்லை தாங்க முடியவில்லை
கொசு தொல்லை தாங்க முடியலையா!
))
===================================================================
//வழி போக்கன் said…
கல்யாணம் மட்டும் பண்ணிவச்சா போதுமா. அஞ்சு லட்சம் வரதட்சணை அப்பறம் பாத்து சவரன் நகை போடணும் இல்லையா இந்த சமுதாயத்து மேல அக்கறை உள்ளவங்க//
//பப் கலாச்சாரம் நம்மது இல்லன, பொண்ணுகளை அடிக்கறது நம்ம கலாச்சாரமா. //
நல்ல உரைக்கிற மாதிரி கேட்டீங்க போங்க
//அங்க கோடி, கோடி, கொள்ள அடிக்கறானுக நம்ம அரசியல்வாதிங்க. அதை உட்டுருவானுக. என்ன அங்க போன டிக்கியில அடிப்பானுக. அதுதான்.//
சூப்பர்! கலக்கலா சொன்னீங்க.. .ஊரெல்லாம் கொள்ளை அடித்து வயிறு வளர்க்கிறவன விட்டுடுவாங்க ..எவன் இளிச்சவாயனோ அவனை போட்டு நொங்கு எடுக்கறாங்க..ஏன்னா! அவன் தான் எதுவும் கேட்க மாட்டான் எதுவும் பண்ண மாட்டான்..
கொள்ளை அடிக்கிறவன் மேல கைய வைத்தா அவன் இவங்க மேல காலை வைப்பானே!
இவங்களும் இவங்க காலாச்சாரா பாதுகாப்பும்…
நான் மூனாவது ரகம்
இந்த இந்திய தலிபான்காள் எங்கிருந்து திடீர்ன்னு முளைச்சான்கள்?இனி பதிவுக்கு…
//இவர்கள் காதலர்கள் பற்றி மிரட்டி கூறியதை தமிழில் எப்படி சரியான வார்த்தையை பயன்படுத்துவது என்பது தெரியாததால்//
அதுக்குத்தான் இப்படி கத்து வெச்சுருக்கோமே!அதாவது
“ஓ பிரமோத் முட்டாளி போல் தா ஹை” அப்படின்னு அடிச்சு விட வேண்டியதுதானே.
மாமு ,மச்சிக சொல்றது அவங்க அவங்க பக்கம் நியாயம் மாதிரி தெரிஞ்சாலும் மாமு மச்சியப் பார்த்து எரியறாங்கிறது மட்டும் விளங்குது.
ஆனா யோவ் ன்னு குரல் எழுப்பறவன் நிலையும் பரிதாபமாகத்தான் தெரியுது.
இனி பின்னூட்டக் காவலர்கள் என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாம்.
வாலு வித்தியாசமாக இருக்குதே!இன்னும் போறேன்.
பாதிப்பு ரொம்ப அதிகம் போல தெரியுதே.அனுமார் வாலாட்டாம் பின்னூட்டம் போய்கிட்டே இருக்குதே:)நான் நாளைக்கு மீண்டும் வாறேன்.
hello kiri sir naan rajeshyadav indiala yethanaiyo day iruku paavam ithum irunthuttu pogatumaye kalacharatha kaapatharangala? vettiya iruntha ipadi than saiya thoonum…..
Giri,
“இது எதிலும் சம்பந்தப்படாதவர்” – ithu kalakkal giri….
Thanks,
Arun
//நசரேயன் said…
நான் மூனாவது ரகம்//
===================================================================
// ராஜ நடராஜன் said…
இந்த இந்திய தலிபான்காள் எங்கிருந்து திடீர்ன்னு முளைச்சான்கள்?இனி பதிவுக்கு//
அப்பப்ப இந்த மாதிரி வந்துடறாங்க
//”ஓ பிரமோத் முட்டாளி போல் தா ஹை” அப்படின்னு அடிச்சு விட வேண்டியதுதானே.//
//பாதிப்பு ரொம்ப அதிகம் போல தெரியுதே//
ஹா ஹா ஹா அனுபவம் அதிகம் இருக்கும் போல இருக்கு
===================================================================
//yadav said…
hello kiri sir naan rajeshyadav//
வாங்க ராஜேஷ் யாதவ் ..கிரி ன்னு கூப்பிடுங்க போதும் சார் எல்லாம் வேண்டாம்
//indiala yethanaiyo day iruku paavam ithum irunthuttu pogatumaye kalacharatha kaapatharangala?//
இவங்க காப்பாத்திட்டாலும்
//vettiya iruntha ipadi than saiya thoonum…..//
ஹா ஹா ஹா
உங்கள் முதல் வருகைக்கு நன்றி
===================================================================
//arun said…
Giri,
“இது எதிலும் சம்பந்தப்படாதவர்” – ithu kalakkal giri….//
தப்பான மெத்தடாலஜியில்
சரியான ஐடியாலஜி
//அதனால இப்படி இருக்கிற ஜோடிய கபால்னு அமுக்கி அப்படியே பதிவாளர் அலுவலகத்திற்கு கூட்டிட்டு சென்று திருமணம் செய்து வைத்து விடுவார்களாம் //
எப்ப நம்ம ஊரு பதிவு திருமணத்துக்கு இப்டியெல்லாம் விதி மாற்றம் செஞ்சாங்க? அப்டியெல்லாம் அள்ளிப் போட்டுக்கிட்டு போயி பதிவுத் திருமணம் செஞ்சு வைக்க எல்லாம் முடியாதுங்ணா.
அதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடியே நோட்டிஸ் குடுக்கோணும், அப்டியில்லைன்னா ஏற்கனவே கோயில்ல கல்யாணம் செஞ்சுட்டோம் அப்டின்னு ஒரு ஆதாரத்த காட்டி பதிவு செய்யணும்,( ஆயிரத்துல இருந்து 5000 வரைக்கும் குடுத்தா ஆதாரத்த தயார்பண்ணி உடனே கல்யாணத்த பதிவு செய்ய ஆளுங்க இருக்காங்க). ஆனாலும் பதிவருக்கு முன்னாடி தம்பதியர் எதிர்ப்பு தெரிவிச்சா கண்ணாலம் கட்ட முடியாதுங்ணா.
வேணும்ணா ஆர்ய சமாஜ்னு ஒரு அமைப்பு இருக்குல்ல, அங்க உடனடித் திருமணம் செஞ்சு சான்றிதழ் வாங்கிக்கலாம். ஒரு வேளை இராம் சேனா இப்டி தூக்கிட்டு வர்றவங்கள எல்லாம் அங்க கொண்டு போயிருவாங்களோ?
இலஞ்சம் நம்ம கலாச்சாரமா? வன்முறை நம்ம கலாச்சாரமா? அரசியல்ல செய்யிற அராஜகங்கள் எல்லாம் நம்ம கலாச்சாரமா? அதையெல்லாம் தட்டிக்கேட்க வேண்டியது தானே இந்த கலாச்சாரக் காவலர்கள்?
இராமர் பாவங்க கிரி, அவரு பாட்டுக்கு அப்பா சொன்னத கேட்டுட்டு காட்டுக்கு போனாரு, பொண்டாட்டி சொன்னாதக் கேட்டுட்டு மான விரட்டிக்கிட்டு போனாரு, அப்டியே யாரும் சொல்லமலேயே வாலிய மறைஞ்சு நின்னு கொன்னாரு, இராவணண் கூட எல்லாம் சண்டை போட்டாரு. சீதைக்கு ஃபயர் டெஸ்ட் எல்லாம் வைச்சு சுத்தமானவங்கன்னு தெளிவடைஞ்சாரு. ஆனா இப்ப அவரு பெயர் இருக்க இடமெல்லாம் போராட்டமும், வன்முறையும் அராஜகமுமா ஆயிடுச்சே?
இராமர் கோயிலுக்காக இடிக்க கூடாதத இடிச்சாங்க. இராமர் பாலம்னு சொல்லி இடிக்க வேண்டியத இடிக்க கூடாதுன்னு போராடிக்கிட்டு இருக்காங்க. இப்ப இராம் சேனான்னு அடுத்த ஆட்டத்த ஆரம்பிச்சுட்டாங்க.
ஹே இராம்.
//நட்புடன் ஜமால் said…
தப்பான மெத்தடாலஜியில்
சரியான ஐடியாலஜி//
ஆஹா! கலக்குறீங்களே ஜமால்
===================================================================
//ஜோசப் பால்ராஜ் said…
அதனால இப்படி இருக்கிற ஜோடிய
பதிவருக்கு முன்னாடி தம்பதியர் எதிர்ப்பு தெரிவிச்சா கண்ணாலம் கட்ட முடியாதுங்ணா//
எல்லாமே முடியாதுன்னு அவங்களுக்கும் தெரியும்.. வீம்புக்கு செய்கிறவங்களை என்ன பண்ணுவது?
//இலஞ்சம் நம்ம கலாச்சாரமா? வன்முறை நம்ம கலாச்சாரமா? அரசியல்ல செய்யிற அராஜகங்கள் எல்லாம் நம்ம கலாச்சாரமா? அதையெல்லாம் தட்டிக்கேட்க வேண்டியது தானே இந்த கலாச்சாரக் காவலர்கள்?//
எச்சுச்மி! யாரு இளிச்சவாயன்களோ அவர்களை தான் கேட்க முடியும்
//கூடாதுன்னு போராடிக்கிட்டு இருக்காங்க. இப்ப இராம் சேனான்னு அடுத்த ஆட்டத்த ஆரம்பிச்சுட்டாங்க.
ஹே இராம்.
//
நோ கமெண்ட்ஸ்
)