2009 ம் ஆண்டு அனைவருக்கும் சந்தோசமாக அமைய வாழ்த்துக்கள்

by கிரி on January 1, 2009

கடந்த வருடம் அனைவருக்கும் பல ஏற்ற தாழ்வுகளையும், சிரமங்களையும், சந்தோசமான நிகழ்வுகளையும், ஆச்சர்யங்களையும், நெருக்கடியான நிலையையும் கலவையாக கொடுத்து சென்றுள்ளது. இந்த 2009 வருடம் அனைவரும் பல சவால்களை எதிர்நோக்கியுள்ளோம். இந்த வருடம் அனைவருக்கும் சிறப்பான ஆண்டாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இந்த புத்தாண்டு துவங்கியவுடன் சிங்கையில் 12 மணிக்கு சன் டிவி யில் சின்ன திரை நட்சத்திரங்கள் மற்றும் கொஞ்சம் பொடிசுகளுடன் புத்தாண்டை அனைவரும் கொண்டாடிய நிகழ்ச்சியை காண்பித்தார்கள். அதில் திண்டுக்கல் சாரதி படத்தில் வரும் திண்டுகல்லு திண்டுகல்லு பாடலுக்கு அனைவரும் ஆடினார்கள் (அநியாயத்திற்கு சன் டிவி மார்க்கெட்டிங் செய்கிறார்கள் icon biggrin 2009 ம் ஆண்டு அனைவருக்கும் சந்தோசமாக அமைய வாழ்த்துக்கள் ). வழக்கமாக நிகழ்ச்சிகளில் ஆடினால் கொஞ்சம் ஃபார்மலாக ஆடுவார்கள்..ஆனால் இதில் எல்லோரும் செம ஆட்டம் போட்டார்கள்..குட்டி பசங்க உட்பட. புத்தாண்டு கொண்டாட்டம் என்றாலே ஒரு தனி குஷி தான். இதை பார்த்த போது நான் சென்னையில் இருந்த போது நண்பர்களுடன் மெரீனா பீச்சில் ஆடிய ஆட்டம்!!! தான் நினைவிற்கு வந்தது. வருடாவருடம் நண்பர்களுடன் காந்தி சிலை அருகே கூடி புத்தாண்டை கொண்டாடுவோம். இந்த முறை அவர்களுடன் இல்லாதது வருத்தமாக இருந்தது icon sad 2009 ம் ஆண்டு அனைவருக்கும் சந்தோசமாக அமைய வாழ்த்துக்கள்

இந்த நிகழ்ச்சியில் லொள்ளு சபா மனோகர் எல்லோருக்கும் ஹேஹேஹேஹேப்பி நியூயூயூயூ இயர் (அவரோட ஸ்டைல் ல படிக்கவும்) னு சொன்னது செம காமெடியா இருந்தது ஹா ஹா ஹா, ரசித்து சிரித்தேன் icon smile 2009 ம் ஆண்டு அனைவருக்கும் சந்தோசமாக அமைய வாழ்த்துக்கள் ))

மேலே உள்ள இந்த உற்சாகமான பாடல் எனக்கு ரொம்ப பிடித்த பாடல்களில் ஒன்று, இந்த பாடல் உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்த பாடலின் உற்சாகத்தை போலவே இந்த வருடத்தையும் உற்சாகமாக துவங்குவோம்.

No related posts.

{ 19 comments… read them below or add one }

’டொன்’ லீ January 1, 2009 at 9:18 AM

உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் கிரி..

ஆ..கமல் பாட்டு…(எனக்கு இந்தப் பாட்டு பிடிக்கும்..ஆட்டம் பிடிக்காது)

Reply

ராமலக்ஷ்மி January 1, 2009 at 9:33 AM

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கிரி!

புது வருடத்திற்கு தந்த உற்சாகமான பாட்டு பிடிப்பது இருக்கட்டும். இன்னாரை என்றின்றி அருமையான நடிப்பைத் தந்த எவரையும் ரசிப்பவர் நீங்கள் என்பதை புது வருடத்தில் அனைவருக்கும் புரிய வைத்திருப்பதும் பிடித்தது.

Reply

புதுகை.அப்துல்லா January 1, 2009 at 9:49 AM

புத்தாண்டு வாழ்த்துகள்ணே

ஆஆஆஆ ரஜினி கிரி பதிவில் கமல் பாடலா?????
நீங்க உண்மையிலேயே நடுநிலையாலரோ :) )))))

Reply

வாசுகி January 1, 2009 at 12:59 PM

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது புதுவருட வாழ்த்துகள்.
(முன்னைய பதிவில் சொல்லியிருந்தாலும் இது special புது வருட பதிவு என்பதால்)

ரஜினி கிரியாக இருந்தாலும், திறமையுள்ள அனைவரையும் ரசிப்பது மட்டும் அல்ல மதிப்பவர்
நீங்கள் என்பது பலரும் புரிந்திருப்பார்கள்.

Reply

கூடுதுறை January 1, 2009 at 1:13 PM

Happy new year Giri

Reply

பாசகி January 1, 2009 at 2:51 PM

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கிரி-ஜி!!!

// ராமலக்ஷ்மி said…

….இன்னாரை என்றின்றி அருமையான நடிப்பைத் தந்த எவரையும் ரசிப்பவர் நீங்கள் என்பதை புது வருடத்தில் அனைவருக்கும் புரிய வைத்திருப்பதும் பிடித்தது.//

//புதுகை.அப்துல்லா said…

….ஆஆஆஆ ரஜினி கிரி பதிவில் கமல் பாடலா?????
நீங்க உண்மையிலேயே நடுநிலையாலரோ :) )))))//

ரஜினி ரசிகர்கள்ல பெரும்பான்மையானவங்க நல்லது எங்க இருந்தாலும் ரசிப்பம்ங்க :-)

உங்கள் இருவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

Reply

ஈழவன் January 1, 2009 at 5:24 PM

இனிய புது வருட நல் வாழ்த்துக்கள்.

Reply

திகழ் January 1, 2009 at 6:38 PM

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

Reply

அத்திவெட்டி ஜோதிபாரதி January 1, 2009 at 7:27 PM

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Reply

Arun January 1, 2009 at 10:14 PM

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கிரி

Reply

Raja January 2, 2009 at 8:58 AM

எந்திரன் ஆண்டு வாழத்துக்கள் கிரி.
பல வருடம் ஆகியும் இன்னும் நியூ இயர் பாட்டு என்றால் ஞாபகம் வருவது இந்த பாட்டு தான்.

ராஜா.

Reply

வால்பையன் January 2, 2009 at 6:48 PM

ரஜினி கிரியின் பதிவில் கமல் பாட்டு!

என்ன ஒரு பெருந்தன்மை

புத்தாண்டு வாழ்த்துக்கள் கிரி!

Reply

நசரேயன் January 2, 2009 at 9:01 PM

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Reply

தேவன் மாயம் January 4, 2009 at 9:03 PM

உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் கிரி///

Deva…

Reply

Arun January 5, 2009 at 4:34 PM

Adutha pathivu yeppa Giri?

Waiting eagerly……

Reply

கிரி January 5, 2009 at 4:49 PM

//arun said…
Adutha pathivu yeppa Giri?//

விரைவில் எழுதுகிறேன் அருண். நான் தற்போது அதிகளவில் பதிவுகள் எழுதுவதில்லை, இதற்க்கு அடிமையாகி விடக்கூடாது என்று குறைத்து கொண்டேன். உங்கள் அன்பிற்கு நன்றி.

Reply

rajeepan January 6, 2009 at 1:50 PM

புத்தாண்டும் தொடங்கி விட்டது..என்னும் எங்கே உங்கள் புதிய பதிவுகளைக் கானவில்லையே..

Reply

கிரி January 6, 2009 at 5:29 PM

//rajeepan said…
என்னும் எங்கே உங்கள் புதிய பதிவுகளைக் கானவில்லையே..//

எழுதுகிறேன் ராஜீபன். உங்கள் அன்பிற்கு நன்றி.

Reply

புதுகை.அப்துல்லா January 8, 2009 at 8:05 PM

//உங்கள் இருவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!
//

நன்றி பாசகி :) உங்களூக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed