Showing newest 9 of 13 posts from August 2008. Show older posts
Showing newest 9 of 13 posts from August 2008. Show older posts

Thursday, August 28, 2008

கடும் போட்டியில் அரசு கேபிள் மற்றும் DTH

அரசு கேபிள் டிவி வருது வருது என்று நீண்ட காலமாக கூறப்பட்டு பல இடங்களில் வந்து விட்டது மீதி இடங்களிலும் விரைவில் வர உள்ளது. இதில் சன், ஸ்டார் மற்றும் சோனி குழுமங்கள் தங்கள் சேனல்களை தராமல் இழுத்தடித்து வருகின்றன குறைந்த கட்டணத்தில் அதிக சேனல்களை மக்களை ஏமாற்றாமல் தரவே இந்த அரசு கேபிள் தொடங்கப்பட்டது. இதற்க்கு மக்களிடையே வரவேற்புள்ளது. தனியாரிடம் வேறு வழி இல்லாமல் அதிக கட்டணத்தை கொடுத்து தெரிந்தே ஏமாற தேவையில்லை என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் DTH டிவி க்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டு வருகிறது, அதுவும் கேபிள் டிவி களின் போட்டியை சமாளிக்க பல கவர்ச்சிகர சலுகைகளை அறிவித்து வருகின்றன. கட்டண குறைப்பையும் அறிவித்து வருகின்றன. சன் DTH ஒரு படி மேல போய் பல சலுகைகளை அறிவித்து ஓயாமல் விளம்பரம் செய்து பலரை தன் பக்கம் இழுத்துக்கொண்டு இருக்கிறது. சென்னை யில் டாட்டா ஸ்கை அதிகளவில் மக்களால் விரும்பப்படுகிறது (சவுத் ஸ்டார்ட்டர் பேக் க்கிற்கு 50Rs குறைத்துள்ளது). நடுத்தர மக்கள் டிஷ் டிவி மற்றும் சன் DTH வாங்குவார்கள் என்று நினைக்கிறேன் . எனக்கு தெரிந்து சென்னையில் டாடா ஸ்கை அதிகம் உள்ளது, எங்கள் ஊர் கோபி பகுதியில் சன் DTH மற்றும் டிஷ் டிவி அதிகம் மக்களால் பயன்படுத்தப்படுகிறது. தற்போது இவை அனைத்திற்கும் போட்டியாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் பிக் டிவி வந்துள்ளது, பல நவீன தொழில்நுட்பத்துடன் போட்டியில் குதித்துள்ளது. இதனுடைய தற்போதைய குறிக்கோளே DTH சேவையில் 40% பங்கை கைப்பற்றுவதாகும். அதற்கான பிரம்மாண்ட திட்டங்களை தயார் செய்து இருப்பதாக கூறி உள்ளது. இதன் மூலம் மேலும் கட்டணங்கள் குறையலாம் என்று நம்பலாம். இது வாடிக்கையாளர்களுக்கு சந்தோசம் அளிக்கும் செய்தி. போட்டி இருந்தால் மட்டுமே கட்டண குறைப்பை எதிர்ப்பார்க்க முடியும்.

அரசு கேபிள் டிவி க்கு பெரிய பலம் குறைந்த பணத்தில் கட்டண சேனல்கள் உட்பட பல சேனல்களை அதிக தரத்தில் கொடுக்க முடிவது தான். கிராமங்களில் மின்சாரம் பெரும் பிரச்சனையாக உள்ளது, நம் வீட்டில் மின்சாரம் இருக்கும் போது கேபிள் கட்டுப்பாட்டு அறையில் மின்சாரம் இருப்பதில்லை, அங்கே வரும் போது நம் வீட்டில் மின்சாரம் இருப்பதில்லை, இது நான் கடந்த முறை ஊருக்கு சென்று இருந்த போது நன்றாகவே உணர்ந்தேன். இதை போல சில நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன.ஆனாலும் குறைந்த கட்டணத்தில் பெரும்பான்மையான சேனல்கள் தெரிவதாலும் கேபிள் ஆபரேட்டர்கள் தனியாக பல (லோக்கல்) சேனல்கள் தருவதாலும் (இதில் பல படங்கள் மற்றும் புது பாடல்கள் போடப்படுகின்றன) மக்கள் பலர் இதிலேயே திருப்தி அடைந்து விடுகின்றனர். ஒரு மாதம் பணம் கட்ட தாமதம் என்றாலும் அவர்களுக்குள் பேசி கொள்கிறார்கள். எனவே இவர்களிடம் DTH எல்லாம் எடுபடுமா என்று தெரியவில்லை. தற்போது அரசு கேபிள் வந்ததால் பல தனியார் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தங்கள் மாத வாடகையை பெருமளவில் குறைத்துள்ளதாக செய்தியில் கூறப்பட்டுள்ளது. அரசு கேபிள் மாதம் 100 Rs வசூலிக்கிறது (கட்டண சேனல்களையும் தருவதால்)

கேபிள் டிவி யிலேயே திருப்தி படுவார்களா அல்லது இனி பழைய முறையில் அனைத்து வீடுகளிலும் ஏரியல் இருந்தது போல இனி DTH ஆன்ட்டனாக்கள் இருக்குமா என்பது இன்னும் போக போக தெரிந்து விடும்.

Buzz It

Tuesday, August 26, 2008

அசத்திய சீனா - ஒலிம்பிக் 2008 ஒரு கண்ணோட்டம்

ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு பெற்று விட்டன, தொடக்க விழாவில் சில ஏமாற்று வேலைகள் செய்தார்கள் என்ற குற்றசாட்டுகள் மற்றும் பல குற்ற சாட்டுக்கள் ஒதுக்கி விட்டு பார்த்தால் சீனா வெற்றிகரமாகவே ஒலிம்பிக் போட்டிகளை நடத்தி உள்ளது. அதன் கட்டமைப்பை குறிப்பிட்டு சொல்ல வேண்டும், போட்டிகளுக்காக கட்டப்பட்ட விளையாட்டு திடல்கள், நீச்சல் குளங்கள் மற்றும் அரங்கங்கள் என்று அனைத்தும் பார்த்த வரையில் சிறப்பாகவே இருந்தது. நாம் நேரில் சென்று பார்க்கவில்லை தொலைக்காட்சியில் பார்ப்பதை வைத்தே கூறுகிறோம். ஒருவேளை நேரில் பார்த்தவர்களுக்கு அதில் உள்ள குறைகள் தெரிந்து இருக்கலாம்.

சீனா இதில் பெற்ற தங்கங்கள் பற்றி பாராட்டியே ஆக வேண்டும், தங்கங்கள் பற்றி என்பதை விட எப்படி முன்னேறி வந்து இருக்கிறது என்பது. 2000 ம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற போட்டியில் அமெரிக்கா 39 தங்கத்தையும் சீனா 28 தங்கத்தையும் பெற்றது, 2004 ம் ஆண்டு ஏதென்ஸ் ல் நடைபெற்ற போட்டிகளில் அமெரிக்கா 35 தங்கத்தையும் சீனா 32 தங்கம் என்று மிக நெருங்கி வந்தது. பொதுவாக சீனா அதிக தங்கம் பெற்று முதலிடத்தில் இருக்கும், அதலெடிக்ஸ் தொடங்கியவுடன் அமெரிக்கா அடித்து நொறுக்கி முதலில் வந்து விடும், இந்த முறை அது எதற்கும் வாய்ப்பு கொடுக்காமல் அசத்தலாக தொடர்ந்து முன்னணியில் இருந்து முதலிடத்தை பெற்று விட்டது. விளையாட்டில் முன்னேற்றம் என்றால் என்னவென்பதை சீனா வை பார்த்து மற்ற நாடுகள் தெரிந்து கொள்ளலாம்.

முடிவில் சீனா 51 தங்கம், 21 வெள்ளி, வெண்கலம் 28 என்று மொத்தம் 100 பதக்கங்களை பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது. இரண்டாம் இடத்தில் அமெரிக்கா 36 தங்கம், 38 வெள்ளி, 36 வெண்கலம் மொத்தம் 110 பதக்கங்களை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. ரஷ்யா தங்கம் 23, வெள்ளி 21, வெண்கலம் 28 மொத்தம் 72 பதக்கங்களை பெற்று மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.

சீனா இந்த முறை பெல்ப்ஸ், உசைன் போல்ட் போல போட்டியின்றி தாறுமாறாக முன்னணிக்கு வந்து விட்டது. அதிலும் ஜிம்னாஸ்டிக் டேபிள் டென்னிஸ் போன்ற போட்டிகளில் வெகுவாக ஆதிக்கம் செலுத்தியது. கடந்த முறை பெற்ற வெற்றிகளை விட இந்த முறை அதிகம் பெற வேண்டும் என்ற அவர்கள் செய்த முயற்சிக்கும் அதற்காக அவர்கள் எடுத்துக்கொண்ட பயற்சிகளையும் கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும். கடந்த முறை பெற்ற தங்கத்தை விட கிட்டத்தட்ட 20 தங்கம் அதிகம் என்பது எனக்கு சாதாரணமான விசயமாக தெரியவில்லை. இங்கு நமக்கு ஒரு தங்கம் வாங்கவே நாக்கு தள்ளுகிறது, 1 தங்கம் 2 வெண்கலம் வாங்கியதை வரலாற்று சாதனை என்று ஊடகங்கள் வாய் ஓயாமல் கூறுவதை கேட்கும் போதும் படிக்கும் போதும் தர்மசங்கடமாக இருக்கிறது. நம்மவர்கள் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளித்தாலும் இவர்கள் அனைவரும் மிகைப்படுத்தி பாராட்டி கொண்டு இருப்பதை போலவே தோன்றுகிறது. நம்மவர்கள் பாராட்டினால் இதை போல பாராட்டுகிறார்கள் இல்லை என்றால் வேறு ஏதாவது கூறி குறை சொல்கிறார்கள். இரண்டுமே சரி இல்லை என்பதே என் கருத்து.

ஒலிம்பிக் ல் குறிப்பிடத்தக்கவை

ஒலிம்பிக் ல் என்னை பலர் கவர்ந்தவர்கள் என்றாலும் குறிப்பிட்டு சொல்ல கூடியவர்கள் பெல்ப்ஸ் ம் உசைன் போல்ட்டும்.

இதில் அமெரிக்காவை சேர்ந்த பெல்ப்ஸ் சொல்லி அடிக்கும் கில்லி போல நீச்சலில் சொல்லி சொல்லி 8 தங்கம் வாங்கி உலக சாதனையை முறியடித்தார். தங்கம் வெல்வதை என்னமோ கடையில் மிட்டாய் வாங்குவது போல வாங்கியதை பார்த்த போது தலை சுற்றாத குறை தான். அவர் ஒரு சில போட்டிகளில் வெற்றி பெறும் போது அவருக்கும் அவர் பின்னால் வருபவருக்கும் இடையே உள்ள தூரத்தை பார்த்த போது யோவ்! என்னையா போட்டி வைக்கறீங்க என்கிற ரேஞ்சுக்கு வந்து கொண்டு இருந்தார்.

அடுத்து ஜமைக்காவின் உசைன் போல்ட், இவர் ஓடியதை பார்த்த போது இவர் மனுசனா என்றே சந்தேகம் வந்து விடும் அந்த அளவுக்கு தாறு மாறாக ஓடி வெற்றி பெற்றார். 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 400 தொடர் ஓட்ட பந்தயம் மூன்றிலும் தங்கம் வென்றார். 100 மீட்டர் ஓட்டத்தில் வெற்றி கோட்டை தொடும் முன்பே கொண்டாட ஆரம்பித்து விட்டார் அதனால் அவருடைய வெற்றி நொடிகளில் சில நொடிகள் அதிகம் ஆகி விட்டது. இது எனக்கு வருத்தமாகவே இருந்தது. அவர் 200 மீட்டர் ஓட்டத்தை படம் எடுக்க டிராலியில் கண்ணொளி (வீடியோ) எடுத்துக்கொண்டு சென்றவர்களே அவர் ஓட்டத்தை எதிர்பார்க்காமல் திணறி விட்டார்கள்.

இவை தவிர இந்தியாவின் அபினவின் அலட்டல் இல்லாத வெற்றி மற்றும் சுஷில்குமார், விஜேந்தர் வெற்றிகள் (நமக்கு) குறிப்பிடத்தக்கவை

இந்த ஒலிம்பிக் ல் 45 உலக சாதனைகள் 127 ஒலிம்பிக் சாதனைகள் நிகழ்த்தப்பட்டது.

குத்து சண்டையில் மிக பிரபலமான நாடு கியுபா, இந்த முறை 40 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு தங்கம் கூட பெறவில்லை.

பல சாதனைகள், நம்ம முடியாத வெற்றிகள், தோல்விகள் பிரம்மாண்ட தொடக்க மற்றும் முடிவு விழாக்கள் என்று பெய்ஜிங் ஒலிம்பிக் இனிதே முடிந்து விட்டது. அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் இங்கிலாந்தில் லண்டனில் நடைபெற உள்ளது. விளையாட்டில் இந்தியா எங்கேயோ ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப தூரத்தில் உள்ளது. நம்மவர்கள் விளையாட்டை விளையாட்டாக கருதி வருகிறார்கள். நமது அரசியல்வாதிகளும், அரசும் மற்றும் மக்களின் எண்ணங்களும் மாறும் வரை இந்தியா விளையாட்டில் முன்னேற வாய்ப்பே இல்லை. நம்மவர்கள் மாறினாலே அதுவே பெரிய ஒலிம்பிக் சாதனை தான்.

Buzz It

Friday, August 22, 2008

கோவை விமான நிலையத்தை பின் பற்ற முடியாதா?

கடந்த முறை இந்தியா சென்று வந்த போதே இதை கூற வேண்டும் என்று இருந்தேன்  மறந்து விட்டேன். கடந்த முறை சிங்கப்பூர் ல் இருந்து கோவை க்கு விமானத்தில் சென்ற போது என்னுடைய இமிக்ரேசன் மற்றும் பரிசோதனைகள் முடிந்து வெளியே வந்து என்னுடைய பெட்டிகளை எடுத்துக்கொண்டு வெளியே வரும் போது அங்கே இருந்த விமான நிலைய ஊழியர் என்னுடைய பெட்டிகளை என்னுடைய பயண சீட்டுடன் கொடுக்கப்படும் பெட்டிகளின் எண்ணிக்கை மற்றும் அடையாள சீட்டை சரி பார்த்து பின்னரே வெளியே செல்ல அனுமதித்தார்.

சென்னை சிங்கப்பூர் விமான நிலையத்தில் கூட இதை போல நான் பார்க்கவில்லை. கோவையிலும் நான் இதற்க்கு முந்தய முறை வந்த போது சரி பார்க்கவில்லை. இந்த முறை தான் இதை போல சோதனையை பார்த்தேன்.

சரி விசயத்துக்கு வருகிறேன், பொதுவாக இவ்வாறு பெட்டிகளை வெளியே செல்லும் போது யாரும் பரிசோதிப்பதில்லை, யார் வேண்டும் என்றாலும் பெட்டியை மாற்றி எடுத்து செல்லலாம், அவ்வாறு தொலைந்தால் அதற்க்கு ஓரளவு இழப்பீடு பெறலாம் ஆனால் அதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இதை ஏன் கோவை விமான நிலையம் போல (தற்போதும் தொடர்கிறார்களா என்று தெரியவில்லை) அனைவரும் பின்பற்ற கூடாது? நான் ஒவ்வொரு முறையும் வெளியே வரும் போதும் நம் பெட்டி சரியாக இருக்குமா என்று ஒரு யோசனையோடு தான் வருவேன்.

சென்னை மற்றும் மற்ற விமான நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகம் அதனால் இதை போல செயல்படுத்துவது நடைமுறையில் சாத்தியம் இல்லையா?

எத்தனையோ வெட்டி செலவுகள் செய்கிறார்கள் இதற்க்கு ஊழியர்களை அமர்த்தி செய்ய முடியாதா?

இல்லை நான் தவறாக புரிந்து கொண்டு உள்ளேனா?

பெட்டி வரும் முன்பே உள்ளேயே பொருட்களை திருடி விடுகிறார்களே அதற்க்கு என்ன செய்வது என்றெலாம் கேட்கப்படாது ;-) அது தனி விஷயம்.




Buzz It

Thursday, August 21, 2008

மின்னஞ்சலில் வந்த சுவாராசிய படங்கள் :-)

பெட்ரோல் விலை ஏறிய பிறகு ஒரு வாரம் கழித்து பெட்ரோல் போட்டாராம் மறுபடியும் அதிகம் ஆகிடுச்சுனு சொன்னவுடனே கடுப்புல பைப் உடன் பிடிங்கிட்டு வந்துட்டாராம்
கோன் ஐஸ் சாப்பிட்டுட்டு இருந்த என்னை கோமாளிக கையில விட்டுட்டு போய்ட்டாரே ம்ஹீம்
பல்லு விளக்கி பல காலம் ஆச்சு போதுமா! சும்மா கிண்டல் பண்ணிட்டே இருக்கானுக ..  அடப்பாவிகளா! சாப்பாடு வைக்கிற வேலைனு சொன்னானுக நம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பி வந்தா இப்படி முதலைக்கு கொடுக்க சொல்றானுகளே
பூ அழகா! நான் அழகா! :-) கண்ணாடி இல்லாம இருக்கிறதை கண் சிமிட்டும் நேரத்துல எடுத்துட்டானுகளே! மச்சான்! இன்னைக்கு யாருக்கு இந்த கொக்கு மாட்டுதோ அவங்களுக்கு இன்னைக்கு "கொக்கு" பரோட்டா தான் நமீதா என் இப்படி சோகமா இருக்காங்க..அது வேற ஒண்ணும் இல்ல அவங்கள இப்படி போர்த்திட்டு இருக்குற புடவையில பார்த்ததுல வயசான ரசிகர் ஒருவருக்கு நெஞ்சு வலி வந்து அங்கேயே கீழே விழுந்துட்டாராம் ஹய்யோ அஜித் குழந்தை பார்த்து நம்ம கண்ணே பட்டுடும் போல இருக்கே ..

ஹி ஹி நான் வீட்டுல உட்காந்து சீரியல் பார்த்துட்டு இருக்கேன்னு நம்பி ஏமாந்துட்டானுக கிறுக்கு பசங்க அடங்கொக்கமக்கா! இம்மாம் பெரிய தொகையா! பார்த்தாலே கண்ண கட்டுதே இந்த சங்கி மங்கிக ஆர்வத்துக்கு அளவே இல்லாம போச்சே! யோவ்! என்னாங்கய்யா விளையாடுறீங்களா இதுல எப்படி மணி பார்க்கறது!... உங்க வித்யாச நினைப்புக்கு ஒரு வரை முறையே இல்லையா !!!

Buzz It

Tuesday, August 19, 2008

"ஞானி" அவர்கள் கூறியது சரியா?

"ஏழு வயதில் தன் வீட்டு வேலைக்காரி தலையில் பாட்டிலை வைத்து ஏர் கன்னால் சுட்டு வீழ்த்திய பணக்காரச் சிறுவன்தான் அபிநவ். தன் அம்மா தலையிலோ, அப்பா தலையிலோ, தங்கை தலையிலோ பாட்டிலை வைத்து சுட்டுப் பழகவில்லை"


இவ்வாறு ஞானி அவர்கள் கூறி உள்ளார்.


அபினவ் சிறு வயதில் செய்த தவறை, அவர் தற்போது பெற்று இருக்கும் வெற்றியோடு ஒப்பிட்டு கேவலப்படுத்தினால் இதை என்னவென்று கூறுவது? சிறுவயதில் யார் தான் தவறு செய்வதில்லை பெரியவர்களாகிய நீங்களே ஒருவர் பெற்ற வெற்றியை பாராட்டாமல் அவர் எப்போதோ செய்த தவறை காரணம் காட்டி சிறுபிள்ளை தனமாக பேசும் போது அவரை குறை கூறுவதில் என்ன நியாயம்?


இந்தியா தங்கமே வாங்குவதில்லை என்று கூப்பாடு போடுவது, அப்படி யாராவது அபினவ் போல வாங்கினால் அவர்களை பாராட்டாமல் இதை போல குறைகளை பெரிதாக்கி அவரை பணக்காரன், பணக்கார விளையாட்டு, குருவிய சுட்டு பழகினான் வேலைக்காரியை சுட்டு பழகினான் என்று கூறி பெற்று தந்தவரின் ஆர்வத்தையும் குறைத்து விடுகிறார்கள். ஞானி அவர்களை போல நான்கு பேர் கூறுவதை ஊடகங்களும் தங்கள் வியாபரத்திற்காக பெரிதுபடுத்தி அடுத்த முறை ஒலிம்பிக்கில் இவரை போன்றவர்கள் கலந்து கொள்ளும் எண்ணத்தை குழி தோண்டி புதைக்க வைத்து விடுகிறார்கள்.


அப்துல்கலாம் "கனவு காணுங்கள்" என்று கூறியதை அவர் எதோ தூக்கத்தில் காணும் கனவு என்று கூறியதை போல விமர்சித்தவர் ஞானி அவர்கள், அதனால் அபினவ் பெற்ற வெற்றியை இப்படி குறை கூறியதில் ஆச்சர்யம் இல்லை.


வித்யாசமாக கூறினால் தான் மற்றவர்களிடையே தனித்து தெரிய முடியும் என்பதற்காக இவ்வாறு கூறி நம்முடைய பெருமையை மற்ற நாட்டவர் இடையே தங்களால் முடிந்த அளவாவது உயர்த்தி இருக்கும் இவர்களை போன்றவர்களின் வெற்றிகளை குறை கூறாதீர்கள் அல்லது தேடி கண்டு பிடிக்காதீர்கள்.


ஞானி அவர்கள் இவர்களை போன்றவர்களை உயர்த்தி கூறவில்லை என்றாலும் பரவாயில்லை, இதை போல கூறி அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்காமல் இருந்தாலே போதுமானது.


ஒருத்தன் வளரவில்லை திறமையில்லை என்று கூறுகிறார்கள், இவ்வாறு வெற்றி பெற்றால் அவர் பெற்ற வெற்றியை மட்டம் தட்டி இதை போல குறை கூறி விமர்சிக்கிறார்கள்....அனைவரையும் உட்கார்ந்த இடத்தில் இருந்து விமர்சிப்பது எளிது. ஆனால் இதை போல சாதனைகளை செய்வது தான் மிக கடினம்.


அடபோங்கப்பா! நீங்களும் உங்க விமர்சனமும்.. :-(

Buzz It

Friday, August 15, 2008

சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரை போல வருமா?

இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வந்து ஒரு வருடம் ஆக போகிறது, ஆஹா! எல்லோரும் சிங்கப்பூர்! சிங்கப்பூர்!! னு சொல்றாங்களே நாமும் அங்கே வேலைக்கு செல்ல வேண்டும் என்று முயற்சித்து வேலையும் கிடைத்து வந்து விட்டேன். வந்த பொழுது சுகாதாரமான இடம், சுத்தமான சாலை, போக்குவரத்தை மதிக்கும் மக்கள், அகலமான சாலைகள், பிரம்மாண்ட கட்டிடங்கள் நவநாகரீக மக்கள் என்று எங்கு பார்த்தாலும் ஆச்சர்யம். ஒவ்வொன்றையும் பார்க்கும் போதும் அட! சிங்கப்பூர் சிங்கப்பூர் தாண்டா னு நானே சொல்லிப்பேன்...





ஒரு வாரம் போய் இருக்கும் கொஞ்சம் சுரத்து குறைந்து விட்டது..ஏதோ குறையுதே என்னன்னு புரியலையே ன்னு மண்டை குடைய ஆரம்பித்து விட்டது. அது வேறு ஒன்றும் இல்லை நம் மீது அன்பாக இருக்கும் குடும்பத்தையும், எந்த பிரச்சனை என்றாலும் கை கொடுக்கும் நண்பர்களையும் எங்கே சென்றாலும் அவர்கள் உடன் வரும் சந்தோசத்தையும் விட்டு வந்தது தான் என்று உரைத்தது. என்ன செய்வது நம் விருப்பம் அல்லாமல் குடும்ப தேவை என்ற ஒன்றிக்காகவும் வந்து இருக்கிறோமே வேறு வழி இல்லையே இருந்து தானே ஆக வேண்டும் என்று தற்போது அமைதியாக வாழ்க்கை போய் கொண்டு இருக்கிறது. எந்த ஒரு பிரச்சனையும் இல்லை நேரத்துக்கு ரயில், பேருந்து, காஸ் சிலிண்டர், மின்சாரம், தண்ணீர் எல்லாமே கிடைக்கிறது இருந்தும் ஏதோ ஒன்று இல்லை.. எஸ்.ஜே.சூர்யா காமெடி போல "இருக்கு ஆனா இல்ல"





சென்னையில் இருந்த போது சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்ட காலம் உண்டு, விரைவு, சொகுசு பேருந்தில் செல்ல யோசித்ததுண்டு, ஒரே அறையில் இடம் இல்லாமல் நண்பர்களோடு நெருக்கி கொண்டு படுத்துண்டு அன்று கிடைத்த சந்தோசம் எனக்கு தற்போது கிடைக்கவில்லை. தற்போது எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் ஏதோ ஒன்றை இழந்ததை போன்ற உணர்வே.





மற்றவர்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, எனக்கு இந்தியா தான் சொர்க்கமாக தெரிகிறது, அதுவும் நம்ம ஊரு. நட்பின் அருமை பிரிவில் தான் தெரிகிறது, அதை உணர்ந்தவங்களுக்கு மட்டுமே அது புரியும்.





அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.





இளையாராஜாவின் இந்த பாடல் என் மனநிலையை பிரதிபலிப்பதால் இதை இணைத்துள்ளேன்














































Get this widget Track details eSnips Social DNA

Buzz It

Wednesday, August 13, 2008

அசத்தலான "ஒலிம்பிக்" துவக்கவிழா காட்சிகள்

இந்த படங்களை பார்க்கும் போது அடடா! துவக்க விழா காட்சிகளை தொலைக்காட்சியில் பார்க்காமல் தவற விட்டுட்டோமே என்று ரொம்ப வருத்தப்பட்டேன். அதற்க்கு இந்த படங்களின் தரமும் ஒரு முக்கிய காரணம். அழகுக்கு அழகு சேர்த்த இந்த புகைப்படங்களை எடுத்த புகைப்பட நிபுணருக்கு என் பாராட்டுக்கள். நீங்களே பார்த்து சொல்லுங்க :-)






























மேலே உள்ள படம் சீனா குழந்தைகள் தங்கள் கைகளை ஒலிம்பிக் சின்னம் போல அமைத்து கண்ணாடி முன் நின்று அழகு பார்க்கிறார்கள்.

Buzz It

Tuesday, August 12, 2008

ஒலிம்பிக் தங்கமும் - ஒரு பெண்ணின் கண்ணீரும்







இந்தியாவின் அபினவ் பிந்த்ரா ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். நம்முடைய நீண்ட நாள் எதிர்பார்ப்பான தங்கம் (தனி நபர் பிரிவில்) தற்போது தான் நிறைவேறி உள்ளது, அதுவும் 28 ஆண்டுகளுக்கு பிறகு. கடந்த முறை ரத்தோர் வெள்ளி பதக்கம் பெற்று ஆறுதல் அளித்தார்.



இது ஒரு பக்கம் மகிழ்ச்சியை அளித்தாலும் மோனிகா என்ற பெண்ணுக்கு நடந்த நிகழ்வு மிக கொடுமையானது. அவருக்கு பரிசோதனை செய்த போது அவர் போதை பொருள் பயன்படுத்தியதாக கூறி அவரை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப மறுத்து விட்டார்கள், இதனால் அவர் அழுது பேட்டி கொடுத்ததை பலரும் தொலைகாட்சியில் பார்த்து இருப்பீர்கள். நான் போதை பொருள் பயன்படுத்தி இருந்தால் என்னை சாலையில் வைத்து சுட்டு விடுங்கள் என்று விரக்தியில் அழுது கொண்டே கூறி இருந்தார். திரும்ப பரிசோதனை செய்ததில் அவர் போதை பொருள் பயன்படுத்தவில்லை என்று கண்டறியப்பட்டது. ஆனால் தற்போது அது காலம் கடந்த செயலாகி விட்டது.



மோனிகா ஒலிம்பிக்கிற்காக சீனா செல்ல 3.30 மணி விமானத்திற்கு தயாராக இருந்தார் ஆனால் இந்த பரிசோதனை செய்தி 12.30 மணிக்கு வந்ததால் அவரை போக விடாமல் தடை செய்து விட்டார்கள். திரும்ப பரிசோதனை செய்து அவர் குற்றம் அற்றவர் என்று நிரூபிக்கும் முன்பே ஒலிம்பிக் ல் பதிவு செய்வதற்கான நேரம் முடிந்து விட்டது.72 மணி நேரத்துக்கு முன்பே இந்த பரிசோதனையை செய்து இருக்க வேண்டும், ஆனால் அது செய்யப்படவில்லை. மேலும் இவர் அங்கே சென்ற பிறகு சோதனை முடிவை வெளியிட்டால் அவர் இரண்டாவது முறை சோதனை நடைபெற்று போட்டிக்கு தயார் ஆகிவிடுவார் என்று திட்டமிட்டு இதை போல செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. ஒரு சர்வேதச விளையாட்டு வீரரின் வாழ்க்கையை Sports Authority of India கெடுத்துள்ளது. இதில் பலர் மோனிகா ஒலிம்பிக் செல்ல கூடாது என்ற எண்ணத்தில் திட்டமிட்டு இவ்வாறு செய்துள்ளனர் இதற்க்கு CBI விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மணிப்பூர் முதலமைச்சர் கோரியுள்ளார்.



என்ன விசாரணை செய்து என்ன ஆக போகிறது? ஒரு பெண்ணின் வாழ்க்கையையே வீணடித்து விட்டார்கள். இதற்காக அவர் எத்தனை காலம் கஷ்டப்பட்டு பயிற்சி செய்து கொண்டு எத்தனை கனவில் இருந்து இருப்பார். அதை எல்லாம் இவர்களால் திருப்பி தர முடியுமா? இரண்டாவது பரிசோதனை முடிவு வெளிவரும் வரை மற்றவர்களின் கேலி பேச்சுக்கும் கிண்டலுக்கும் ஆளாகி மன உளைச்சலில் இருந்ததை இவர்கள் திரும்ப பெற முடியுமா? அவர் பதக்கம் வாங்குகிறாரோ இல்லையோ அது வேறு விஷயம் ஆனால் ஒருவரின் நீண்ட நாள் ஆசையை போவதற்குண்டான திறமையை நிரூபித்தும் இதை போன்ற தவறு செய்பவர்களால் நிராகரிக்கப்பட்டு விட்டது சரியா?



இனி அவர் திரும்ப என்ன தான் முயன்றாலும் அவரால் முன்பு போல ஆர்வத்துடன் கலந்து கொள்ள முடியுமா! அவரை வேண்டும் என்றே ஒரு சில புரிந்து கொள்ளாத அடி முட்டாள்கள் கிண்டல் செய்வதை தான் தவிர்க்க முடியுமா?



இவ்வாறு ஆர்வத்துடன் இருப்பவரை பகமை உணர்வாலும் காழ்ப்புணர்ச்சியாலும் கேவலமான முறையில் தடுப்பவர்கள் இருக்கும் வரை நம் நாடு வெண்கல பதக்கத்துக்கு கூட முக்கி கொண்டே தான் இருக்கும்.



நம்முடைய மக்கள் தொகை 110 கோடியை தொடப்போகிறது, ஆனால் ஒரு தங்கம் பெற்றதற்கு அதை பெரிய அளவில் கொண்டாடும் நிலைமையிலேயே நாம் இருக்கிறோம். தென் இந்தியர் ஒரு பதவியில் இருந்தால் அவர் தென் இந்தியர்களை மட்டும் சேர்க்கிறார், வட இந்தியர் இருந்தால் அவர்களை சேர்ந்தவர்களை மட்டுமே சேர்க்கிறார், அரசியல்வாதிகள் சிபாரிசு அரசு அதிகாரிகள் சிபாரிசு என்று வருபவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. உண்மையான ஆர்வமும் திறமையும் இருக்கும் பலர் புறக்கணிக்கப்படுகின்றனர். இவ்வாறு நிலை மாற வாய்ப்பு தற்போது இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.



அதுவரை நாம் இதை போல ஒரு தங்க பதக்கத்துக்கு மின்னஞ்சல் பார்வர்டு செய்தும், குறுந்தகவல் அனுப்பியும் இதை போல பதிவுகள் இட்டும் அல்ப சந்தோசம் அடைந்து கொள்வோம். அதை தவிர நமக்கு வேறு வழி இருப்பதாக தெரியவில்லை.



எதுவாகினும் தங்கம் பெற்ற அபினவ் பிந்த்ரா க்கு என் மனமார்ந்த பாரட்டுகள். கிடைத்த பரிசு பணத்திலேயே திருப்தி அடைந்து மேலும் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து சாதிக்க வேண்டுகிறேன்.

Buzz It

Friday, August 08, 2008

உலகம் அழிந்து கொண்டு வருகிறது


உலகம் முழுவதும் சுற்றுப்புற சீர்கேட்டால் வெப்பத்தின் அளவு அதிகரித்து கொண்டு வருகிறது. இதனால் பருவ நிலை மாற்றங்கள் ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு பஞ்சம் பனி உருகுதல் கடல் நீரின் அளவு மிக வேகமாக அதிகரித்தல், பல புதிய நோய்கள், என்று அனைவரையும் பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது.



வெப்பமே பார்த்திராத நாடுகள் கூட தற்போது வெப்பத்தை பார்த்து பயந்து போய் உள்ளன. மின்சிறி என்ற ஒன்றை பயன்படுத்தி இருக்காத நாடுகள் எல்லாம் அதை பயன்படுத்த வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டன.



இந்நிலைக்கு காரணம் காடுகள் அழிப்பு, எந்த காலத்திலும் மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு, தொழிற்சாலைகள் வெளியிடும் சுத்திகரிக்காத கழிவுகள், குண்டு பல்புகள், இவை தவிர பல காரணங்கள், இவை நம் அன்றாட வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டவை.



நம்மால் முடிந்த அளவு இதற்க்கு துணை போகாமல் இருக்கலாம், முக்கியமாக பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைக்கலாம், குண்டு பல்பு அதிக வெப்பத்தை உண்டு பண்ணுகிறது அதை பயன்படுத்துவதை தவிர்க்கலாம், தங்களது வீடுகளில் முடிந்தவர்கள் மரம் வளர்க்கலாம், மின்சார பயன்பாடு இல்லாத போது அதை எரிய விட்டு கொண்டு இருப்பதை நிறுத்தலாம். இவை எல்லாம் நம்மால் முடிய கூடிய எளிதான உதவிகளே.



இன்று இரவு (8-8-08) 8 மணிக்கு இதை மக்களிடைய இதன் தாக்கத்தை உணர செய்ய ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த எக்ஸ்னோரா அமைப்பு அனைவரையும் 8 நிமிடம் அனைத்து மின்சார விளக்குகளையும் அனைத்து இதற்க்கு உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. (இதை பயன்படுத்தி எவனும் திருடிட்டு போகாம இருந்தா சரி)



நம் தமிழக அரசு பாதி நேரம் மின்சாரமே தருவதில்லை, இவர்கள் உலக மக்கள் மீது ரொம்ப அன்பு வைத்து ரொம்ப தீவிரமா கடை பிடிக்கறாங்க போல, சரி அதை விடுங்க. அது தான் அவர்களே பாதி நேரம் மின்சாரத்தை நிறுத்தி விடுகிறார்களே நாம் 8 நிமிடம் நிறுத்தி புதுசா என்ன செய்ய போகிறோம் என்று கேட்க வேண்டாம், இதனால் நாம் பெரிய உதவி செய்துவிட போவதில்லை, இது முக்கியமாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவே இவ்வாறு செய்ய சொல்கிறார்கள், மற்றபடி வேறு எந்த விசயமும் இல்லை. எனென்றால் பாதி பேருக்கு வருஷா வருஷம் வெய்யில் அதிகமாகிட்டே வருகிறதே அப்படிங்கற அளவுல தான் தெரியும் ஆனால் அது எதனால் அதிகம் ஆகிறது என்று தெரியாது. அதனால் விதண்டா வாதம் பேசாமல் உலக சுற்றுப்புற சூழலில் பங்கெடுத்து கொள்ளுங்கள்.



நேற்று பல பதிவர்களின் பதிவுகளில் சென்று இது பற்றி பின்னூட்டம் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்த கோவை விஜய்க்கு என் வாழ்த்துக்கள்.

















Buzz It