Monday, May 26, 2008

என்று தணியும் இந்த மக்களின் கொடூர ரசனை :-(

இந்த வீடியோ காட்சி மனிதர்கள் மிருகம் ஆகி கொண்டு இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. இனி வரும் காலங்களை நினைத்து பயமாக இருக்கிறது, இவர்களின் இந்த நிலை பின்னாளில் எங்கே சென்று முடியும் என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று தெரிகிறது மனிதர்கள் மனிதாபிமானம் என்ற ஒன்றை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டு இருக்கிறார்கள் என்று.

video

Buzz It

"தம்பி" - ஒரு தாமத திரை விமர்சனம்



தம்பி படம் சின்னத்திரையில் வந்த போது அதை பார்த்து சரி ஒரு விமர்சனம் எழுதுவோம் என்று முடிவு செய்தேன், கதை அனைவருக்கும் தெரிந்தது தான் என்பதால் அந்த படத்தை பற்றிய என் கண்ணோட்டத்தை பதிவு செய்து இருக்கிறேன்.



முதலில் இப்படி பட்ட ஒரு கதையை படமாக்க துணிந்த இயக்குனர் சீமானுக்கும் நடித்த மாதவனுக்கும் என் வாழ்த்துக்கள். திரையரங்கிலேயே இந்த படத்தை பார்த்து இருந்தாலும், திரும்ப ஒரு முறை பார்க்க என்னவோ எனக்கு இது சலிக்கவில்லை.



அமுல்பேபி யாக நடித்து கொண்டு இருந்த மாதவன் ஆயுத எழுத்து படத்தின் மூலம் ஆக்ரோஷ காட்சிகளிலும் வெளுத்து கட்டுவேன் என்று சென்னை பாஷையுடன் நிரூபித்து இருந்தார். எனக்கு உண்மையிலேயே அந்த படத்தில் மாதவனின் நடிப்பை பார்த்து மிகுந்த ஆச்சர்யம். அதையே அவர் தம்பியிலும் தொடர்ந்து இருந்தார்.



இந்த படத்தில் வரும் "உடலினை உறுதி செய்" என்ற பாடலும் அதன் இசையும் அருமையாக இருக்கும். நமக்கு கேட்கும் போது நம்மை அறியாமல் அதன் வடிவத்தில் லயித்து விடுகிறோம்.



மார்கெட்டில் மாமூல் கேட்டு ஒரு அப்பாவியை ரவுடிகள் அடிக்க, அங்கே வரும் மாதவன் அவர்களை அடித்து துவைத்து, இப்ப உனக்கு எப்படி வலிக்கிறதோ அதே போல தானே அவருக்கும் இருக்கும் என்று கேட்கும் போதும், உனக்கு இருக்கிற அதே ரத்தமும் சதையும் தானே அனைவருக்கும் என்று கேட்டு கண்ணை உருட்டி மிரட்டும் போது நடிப்பில் மிளிர்கிறார்.



பூஜா, மாதவன் செய்யும் அடிதடியை பார்த்து கடுப்பாகி அவரை திட்டுவார், அதற்கு மாதவன் அவர்கள் தவறு செய்தார்கள் அதனால் அடித்தேன் என்பார், அதற்கு பூஜா அதற்கு காவலர்கள் இருக்கிறார்கள் சட்டம் இருக்கிறது நீ எப்படி செய்யலாம் என்று வாதம் செய்வார். மாதவன் சரிங்க நான் செய்தது தவறு தான் என்று கூறிவிட்டு சென்று விடுவார்.



ஒரு நாள் பூஜா தனது நண்பிகளுடன் ஒரு கடையில் பேசிக்கொண்டு இருக்கும் போது அங்கே இருக்கும் சில இளைஞர்கள் அவர்களை அசிங்கமாக தங்களது கைத்தொலைபேசி மூலம் புகைப்படம் எடுப்பார்கள். எதற்கு வம்பு என்று அவர்கள் அனைவரும் கிளம்பும் போது அந்த இளைஞர்கள் அவர்களிடம் உடையை இழுத்து கலாட்டா செய்வார்கள். அப்போது அங்கே அமர்ந்து இருக்கும் மாதவன் எதுவும் கண்டு கொள்ளாமல் இருப்பார். ஒரு பெண் ஓடி சென்று சார் எங்களை காப்பாத்துங்க என்று கூறும் போது அவர் அவர்களிடம் வந்து அண்ணே! பாவம்ணே இவங்க ..பொண்ணுக கிட்ட நீங்க இப்படி நடக்கலாமா !! அவங்கள விட்டுடுங்க ன்னு கெஞ்சுவார். அவர்கள் அவரை தள்ளி விட்டு தொடர்ந்து கலாட்டா செய்வார்கள், ஆனாலும் இவர் திரும்ப கெஞ்சுவார் அவரை நான்கு பேர் பிடித்துக்கொள்வார்கள். அவர்களை தள்ளிவிட்டு பூஜாவிடம் தன் கண்களை உருட்டி கொண்டு இப்ப நான் என்ன செய்ய? என்ன செய்ய? என்று கேட்பார் அதற்கு பதில் கூற முடியாமல் பூஜா அழும் போது அனைவரையும் அடித்து ஓட விடுவார். பிறகு பூஜாவிடம் வந்து இப்ப எல்லாம் உபதேசம் பண்ணுனா எவன் கேட்குறான் உதைச்சா தான் கேட்குறான் என்று கூறி விட்டு செல்வார். அந்த காட்சி நம் மனதில் நிற்கிறது.



இதில் இருந்து எனக்கு ஒன்று புரிந்தது, மக்கள் ஏன் நடிகர்களை தூக்கி வைத்து ஆடுகிறார்கள் அல்லது அவர்கள் மீது பிரியமாக இருக்கிறார்கள் என்று. நமக்கும் இந்த மாதிரி ரவுடி தனத்தை செய்பவர்களை கண்டால் அடித்து துவைக்க வேண்டும் என்று ஆத்திரம் வரும், ஆனால் நடைமுறையில் அது சாத்தியம் இல்லை என்பதால், நம்மால் செய்ய முடியாததை திரையில் ஒருவர் செய்யும் போது, பார்ப்பவர்கள் தான் அடித்ததாகவே கருதுகிறார்கள். அதனாலேயே அவர்களுக்கு இந்த நடிகர்களை மிகவும் பிடிக்கிறது என்பது என் கருத்து.



சுடும் நிலவு என்ற பாடல் ஒரு அருமையான இசை மற்றும் வரிகள். கேட்பதற்கு ஒரு சுகமான அனுபவம். ஆர்ப்பாட்டம் இல்லாத இசை.



தன்னை காதலிப்பதாக கூறும் பூஜாவிடம், லூஸ் லூஸ் ஒழுங்க படிங்கன்னா sms mms email னு நீங்கெல்லாம் திருந்தவே மாட்டிங்கலான்னு திட்டும் போது பூஜா அந்த திட்டை மிக ரசிப்பார். குறும்பான காதல் காட்சியாக இருக்கும் காதல் இல்லாமல்.



ரவுடிகள் பேருந்தை கொளுத்தும் போது அவர்களுடைய வண்டியை மாதவன் பெட்ரோல் ஊத்தி கொளுத்த போவார், அதற்கு அவர்கள் டேய்! டேய்!! அது என் வண்டிடா!!! என்று கூறும் போது, பேருந்தை காட்டி இதும் உன் வண்டி தாண்டா "இது உங்கள் சொத்து" என்று எழுதி இருப்பதை காட்டுவார். அவர்கள் சென்ற பின் அதை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கும் பொது மக்களிடம், 10 பைசா டிக்கெட் விலை ஏத்திட்டா பற்றி எரியுதுள்ள வயிறு ..வேடிக்கை எது நடந்தாலும் வேடிக்கை! கொலை நடந்தாலும் வேடிக்கை!! ரோடு ல எவன் கிடந்தாலும் வேடிக்கை!!! என்று கண்ணை உருட்டி உருட்டி நம்மை (மக்களை) வாங்கு வாங்குன்னு வாங்குவார்.



வில்லன் மாதவனை தன் வழியில் இருந்து ஒதுங்கி போக சொல்லும் போது, நான் மாற மாட்டேன்..உன்னை மாற்றும் வரை மாற மாட்டேன்



"சோம்பேறிக்கு சுவாசிப்பது கூட சிரமம் தான்"


"முடியாதுன்னா அவனுக்கு அவன் தலை முடி கூட பாரம்தான்"



உதைப்பேன்! நீ திருந்தும் வரை உதைப்பேன்!! என்று கொதிக்கும் போது நடிப்பில் நம்மை கவர்கிறார் மாதவன்.



"வீரன்கறவன் உயிரை எடுப்பவன் கிடையாது, தன் உயிரை கொடுத்தாவது ஒன்னொரு உயிரை காப்பாத்தறவன்" என்று கூறும் இதை போன்ற பல வசனங்கள் நம்மை கவர்கிறது.



படத்தில் இறுக்கத்தை குறைக்க நகைச்சுவைக்கு வடிவேல் வருகிறார், ஒரு காட்சியில் மாதவனின் அப்பாவுக்கு டை அடிக்கும் போது அது வடிவேலின் உள்ளங்கய்யில் பட்டு கருப்பாகி விட அதற்கு அவர் அய்யயோ உடம்புல வெள்ளையா இருந்தது அது ஒரு இடம் தான் அதுவும் போச்சா என்று அழும் போது நம் சிரிப்பை அடக்க முடியவில்லை.



தான் படித்த கல்லூரியில் சிறப்பு விருந்தினராக பேசும் போது ஒரு மாணவர் ரவுடி கைய்யால் பரிசு வாங்க மாட்டேன் என்று கூறும் போது சர்ச்சை எழுகிறது. அதற்கு மாதவன் விளக்கமும் கூறுகிறார். அதன் பிறகு தன் தவறை உணரும் அந்த மாணவர் மாதவனுடன் வருவதாக கூறும் போது ..அவர் நல்ல படி காவலர் ஆகு கலெக்டர் ஆகு அதிகாரத்தை கையில் எடு சாதி என்று கூறும் போது நடைமுறையை தெளிவு படுத்துகிறார்.



"இங்கே சைலன்ஸ் என்பதையே சத்தமாக தானே கூற வேண்டி உள்ளது" என்று கூறும் போது அதில் உள்ள அர்த்தம் நம்மை வியக்க வைக்கிறது.



இதில் மாதவன் பெரும்பாலும் ஆங்கில கலப்பு இல்லாமல் தமிழ் சொற்களையே பயன்படுத்தி இருப்பது சிறப்பு. இதற்கு இயக்குனர் சீமானுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.



பொதுவாக அறிவுரை கூறும் படங்களும், நல்ல சிந்தனைகளை கூறும் படங்களும் நம் ஊரில் ஓடாது, அதனாலேயே அந்த மாதிரியான படங்களை எடுக்க அனைவரும் யோசிக்கிறார்கள். ஆனால் சீமான் அதில் வெற்றி பெற்று இருக்கிறார். எந்த படமாக இருந்தாலும் (இதிலும் பல காட்சிகள் நடைமுறையில் சாத்தியம் இல்லை என்றாலும்) திரைக்கதை சரியாக இருந்தால் எந்த வகை படத்தையும் வெற்றி பெற வைக்க முடியும் செய்திகளை கொண்டு சேர்க்க முடியும் என்பதற்கு "தம்பி" ஒரு உதாரணம்.



Buzz It

Sunday, May 25, 2008

"புதிய கட்சி தொடங்குகிறேன்" பீதியை கிளப்பும் நடிகர் கார்த்திக்

என்ன கொடுமை சார் இது? இந்த வசனத்தை இப்போது கூறினால் சரியாக இருக்கும். நம்ம நடிகர் கார்த்திக் முன்னாள் பார்வர்ட் பிளாக் (அவரை பதவியில் !!! இருந்து நீக்கிடாங்கப்பா நீக்கிட்டாங்க) தமிழக தலைவர் பதவியில் இருந்து தன்னை இருந்து நீக்கியதால் வெகுண்டெழுந்து இந்த அறிவிப்பை வெளியிட்டு பலரை பீதிக்குள்ளாக்கி இருக்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது.


பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தனது ஆதரவாளர்களுடன் (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்) ஆலோசனை நடத்தினார். மக்கள் எதிர்பார்ப்பு போலவே எனது கட்சியின் பெயர் அமையும். பெரிய மாநாடு !!!!! (முடியல என்னால முடியல) நடத்தி எனது கட்சி அறிவிப்பு பற்றி வெளியிடுவேன். எந்த அமைப்பை தொடங்கினாலும் அது அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கியதாக இருக்கும். அது மக்களுக்கு சேவை செய்யும் அமைப்பாக (அடங்கொக்கமக்கா) இருக்கும். இது கோபத்திலும், உணர்ச்சிவசப்பட்டும் எடுத்த முடிவு இல்ல (இதுல இது வேறயா) இவ்வாறு கூறி இருக்கிறார்.


எனக்கு இது வரை கூட பெரிதாக தோன்றவில்லைங்க கடைசியா ஒரு வசனம் அடித்தாரு பாருங்க மவனே நம்ம புரட்சி நடிகர் வருங்கால சூப்பர் ஸ்டார் ரத்தீஷ் தோத்தாரு போங்க... அது என்னன்னா !!! வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். இதை கேட்டவுடன் என் உடம்பெல்லாம் புல்லரிச்சு போச்சுங்க (பக்கத்துல ஆடு தான் வரலை புல்ல சாப்பிடறதுக்கு :-)))) )


இந்த அதிர்ச்சி செய்திய கேட்டவங்க பலர் ரூம் போட்டு அழுவதாக நம்ப தகுந்த தவல்கள் கூறுகின்றன :-)))))


கார்த்திக்க பார்வர்ட் பிளாக் ல எப்படி தலைவர் பதவியில அமர்த்துனாங்கன்னு அதுவே இன்னும் புரியல, அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் கட்சி ஆரம்பிக்கறேன்னு இன்னொரு குண்டை போட்டு அதிர வைக்கிறாரு. கட்சியில பல பேர் அவர் எதுக்கு வராரு போறாருன்னு தெரியாம மண்டைய பிச்சுட்டு இருக்கிறாங்கலாம், போராட்டம் ன்னு வராரு, தேவர் சிலை அவமதிச்சவங்களை சும்மா விட மாட்டேன்னு வந்தாரு, உண்ணாவிரதம் இருக்க போறேன், போராட்டத்த தொடங்க போறேன்னு அதிரடியா சொன்னாரு, ஹோட்டல் ல ரூம் போடறாரு அதற்கு பிறகு வெளியவே வர மாட்டேங்குறாரு, பலருக்கு அவர் இருக்கிறாரா இல்லையான்னே தெரியலே அப்புறம் திடீர்னு கிளம்பிடறாருன்னு புலம்பி தள்ளராங்கலாம்.


இப்ப என்னவோ கட்சி ஆரம்பிக்கிறது ஜட்டி போடறது மாதிரி ஆகிடுச்சு. ஆளாளுக்கு நான் கட்சி ஆரம்பிக்கிறேன் மாநாடு நடத்துறேன்னு கிளம்பிடுறாங்க. நம்ம சரத் குமார்ல இருந்து எல்லோரும் 2011 ஆட்சி அமைக்கபோறோம்னு சொல்லி நம்மள கிச்சு கிச்சு மூட்டிட்டு இருக்காங்க. 2011 ல எத்தனை முதலமைச்சர்னே தெரியலையே, நம்ம ஊரு உருப்படறதுக்கானா வாய்ப்பு ரொம்ப ரொம்ப குறைவு தான்.


மக்களை வச்சு இவங்கெல்லாம் காமெடி கீமெடி பண்ணலையே??? சரி சரி இதுக்கெல்லாம் அழப்படாது ...என்ன புரிஞ்சுதா :-)

Buzz It

Saturday, May 24, 2008

தமிழ் பத்திரிக்கைகளின் "பரபரப்பு" செய்திகள்

எனக்கு நீண்ட நாட்களாக நம்ம தமிழ் பத்திரிக்கைகள் எழுதும் "வித்யாசமான" தமிழ் பற்றி சந்தேகம். எப்போது இருந்து இந்த பழக்கம் இவர்களுக்கு வந்தது. முன்பு மக்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக வந்த போட்டியில் ஒவ்வொரு பத்திரிக்கையும் வித்யாசமான அணுகுமுறையை பின்பற்றி வந்தது, அதில் தினத்தந்தி செய்திகளின் தலைப்புகள் பிரபலம். தினத்தந்தி படிப்பதற்காகவே டீ கடைக்கு வரும் மக்கள் அதிகம். அது பழைய செய்தியாக இருந்தாலும் அதை படிப்பதில் ஒரு சுகம் அவர்களுக்கு. விவேக் ஒரு படத்தில் செய்தித்தாள் படித்து கொண்டு இருப்பவர்கள் செய்திகளை பார்ப்பார் அதில் அவர்கள் பிரதமர் இந்திரா காந்தி பற்றிய (அந்த காலத்தில் வந்த) செய்தி தாளை படித்துக்கொண்டு இருப்பார்கள். அடப்பாவிகளா! அவருக்கு பிறகு சோனியா காந்தி ராஜீவ் காந்தி ஐ கே குஜ்ரால் நரசிம்மராவ் .... னு பல பேர் வந்தாச்சே டா .. னு இன்னும் பழைய செய்தியை படிச்சுட்டு இருக்கீங்கன்னு கேட்பார் அதுக்கு அவர்கள் என்னங்க பண்ணுறது டீ கடைக்கு வந்தா எதாவது படித்தால் தான் திருப்தியாக இருக்கிறது என்று கூறுவார்கள்.


இவர்கள் கூறுவது நகைச்சுவையாக இருந்தாலும் பலர் இதை போலவே இன்னும் இருக்கிறார்கள். அதற்கு நம்முடைய தமிழ் பத்திரிகைகளின் மூளையை மழுங்கடிக்கும் செய்திகளும் அந்த செய்திகளை ஊக்குவிக்கும் நம்முடைய மக்களுமே (நானும் அதில் ஒருவன்) இதற்க்கு காரணம். அதனாலேயே தரமான செய்திகளை பார்க்க முடியாமல் கள்ள தொடர்பு செய்திகளும், அந்த நடிகர் நடிகையுடன் இரவில் "கும்மாளம்" போன்ற செய்திகள் ஆக்கிரமித்துவிட்டன.


தரமான செய்திகளை தரும் பத்திரிக்கைக்கு ஆதரவு தராததால் பல நல்ல பத்திரிகைகளும் நஷ்டத்தை சமாளிக்க இந்த நிலைக்கு மாறி விட்டது அல்லது மாறும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. அதனால் நமக்கு வேறு வழி இல்லாததால் எதாவது ஒரு தமிழ் பத்திரிக்கை வாங்க வேண்டும் என்பதால் அதை படித்து படித்து நம்முடைய செய்தி பார்வையும் மாறி விட்டது. தினத்தந்தி இதற்க்கு முன்னோடி என்பது என் கருத்து. அதே சமயம் மக்களை செய்திகள் !!! படிக்க தூண்டி மக்களிடையே செய்தித்தாள் படிக்கும் விழிப்புணர்வை உண்டாக்கியது இந்த பத்திரிக்கை தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


இந்த மாதிரி செய்திகளை படித்து எனக்கும் இவர்கள் கூறும் வசனம் அத்துபடியாகி விட்டது. செய்திகளின் தலைப்புகள் எப்படி இருக்கும், செய்திகள் எப்படி இருக்கும் என்று என்னுடைய அனுபவம் இது. இதை பார்த்தாலே புரியும் எப்படி பட்ட செய்திகள் நான் படித்து இருக்கிறேன் என்று.


தான் ஊரில் இல்லாத போது பக்கத்து வீட்டு வாலிபருடன் "உல்லாசமாக" இருந்த மனைவியை விஷயம் தெரிந்து கணவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்தார்.


கரும்பு காட்டில் இருந்த தனியாக இருந்த இளம்பெண்ணை வாலிபர் "கதற கதற" (இந்த வசனம் இப்போது குறைந்துள்ளது) கற்பழித்தார்.


பிரபல நடிகை குளியறையில் வழுக்கி விழுந்தார், இதை அறிந்த அவரது தீவிர ரசிகர் மனம் உடைந்து !!! தற்கொலை முயற்சி.


"உற்சாக பானம்" அருந்திய கணிப்பொறி வல்லுநர் போதையில் கலாட்டா செய்ததால் விரைந்து !!! வந்த போலிசார் அவரை கைது செய்தனர்.


நமிதாவை திருமணம்!! செய்வது போல கனவு கண்டேன், பலிக்குமா? (இது எல்லாம் ஒரு கேள்வி என்று எப்படி தான் கேட்கிறார்கள் என்று புரியவில்லை)


வாலிபர்களை மயக்கிய!!! "அழகிகள்" கும்பல் பிடிபட்டது


பிரபல நடிகர் முக்கிய அறிவிப்பு "பரபரப்பு" செய்தி


இது போன்ற செய்திகளே பத்திரிகைகளை ஆக்கிரமித்து உள்ளன. அதுவும் "உல்லாசம்" "அழகி" போன்ற அழகான தமிழ் சொற்களை மிகவும் அசிங்கமான சொற்களாக மாற்றிய பெருமை நம் தமிழ் பத்திரிக்கைகளையே சாரும்.


இந்த நிலை ஏற்பட்டதற்கு காரணம் மக்களா? இல்லை பத்திரிக்கைகளா?



Buzz It

Friday, May 23, 2008

எகிறி அடிக்(காத)கும் கேப்டன் - அரசாங்கம் திரை விமர்சனம்




பொதுவாக நான் கேப்டன் படங்களை பார்ப்பேன், ஆனால் சுதேசி போன்ற படங்களை பார்த்து வெறுத்து போய் இருந்ததால் அதன் பிறகு படத்திற்கே போகவில்லை. சரி நண்பர்கள் பலரும் நன்றாக இருக்கிறது என்று கூறியதை அடுத்து போய் வரலாம் என்று முடிவு செய்து நானும் என் நண்பரும் யிஷுன் ல் உள்ள திரை அரங்கு சென்றோம். திரை அரங்கில் சொல்லிக்கொள்ளும் படி கூட்டம் இல்லை, வார இறுதி நாளாக இருந்தும். சிவாஜி க்கே 3 வது வாரம் கூட்டம் குறைவாக (வார நாட்களில்) இருந்தது என்று கூறி இருந்ததால் எனக்கு இது ஒன்றும் பெரிதாக தோன்றவில்லை.



இது கேப்டனின் 150 படம் என்று அறிவிப்போடு திரைப்படம் தொடங்கியது. ரஜினி, கமல், பிரபு, சரத் குமார் போன்ற பெரிய நடிகர்களின் 100 வது படம் தோல்வி அடைந்த நிலையில் அட்டகாச வெற்றியுடன் வெற்றி பெற்றவர் கேப்டன் பிரபாகரன். அவருடைய 150 வது படம் பெரிய அளவில் வெற்றியை கொடுக்க வில்லை என்றாலும் கண்டிப்பாக தோல்வி இல்லை என்றே கூறவேண்டும்.



இதில் கதை என்னவென்றால் தமிழகத்தில் உள்ள மிக பெரிய புள்ளிகள் (அரசியல் சாராதவர்கள்) தொடர்ச்சியாக கொல்லபடுகிறார்கள். இதை கண்டுபிடிக்க ஒரு சிறப்பு அதிகாரியை நியமிக்கிறார்கள், இந்த பணிக்காக இவர் சென்னை வரும் போது விமானத்தில் காணாமல் போய் விடுகிறார். அனைவருக்கும் பெரிய குழப்பம் (எனக்கும்) விமானம் ஏறி அதை அவருடைய தங்கையிடமும் கை தொலைபேசியில் கூறி விட்டு, வரவில்லை என்றவுடன் பலருக்கும் குழப்பம். விமானத்தில் வந்தவர் சென்னை யில் இறங்கவில்லை என்றால்?... இதை கண்டுபிடிக்க வரும் "பெசல்" அதிகாரி தான் நம்ம கேப்டன். இவர் காணாமல் போனவரின் தங்கையை தான் திருமணம் செய்து இருப்பார். பிறகு கேப்டன் இதற்கான விசாரணையை முடுக்கி விடுகிறார். ரியாஸ்கான் உதவியுடன் விசாரணையை தொடங்கி அதில் சம்பந்த பட்டவர்களை பிடிக்கிறார், தொடர்புடையவர்கள் அனைவரும் பணத்திற்கு மிக சிரமபடுவர்கள், தீவிரவாதியின் மூளை சலவையால் இவ்வாறு செய்து இருப்பார்கள். கடைசியில் தீவிரவாதியை பிடித்து விடுகிறார், ஆனால் அவர் எளிதாக!!! தப்பி கனடா சென்று விடுகிறார்.



கேப்டன் அரசின் அனுமதி பெற்று கனடா சென்று அங்கே உள்ள தலைவனை கண்டுபிடித்து (அங்கே உள்ள காவல் துறை உதவியுடன்) இங்கே கூட்டி வந்து "ஆபரேஷன் ப்ளூ தண்டர்" என்று சதியை கண்டு பிடித்து (குண்டை செயல் இழப்பதற்கான கடவு சொல் வில்லனுடைய கண், இது ஒரு ஆங்கில படத்தில் வருகிறது பெயர் நினைவு இல்லை) சென்னையை காப்பாற்றுகிறார். இது தான் கதை.



இதில் நண்பர் எப்படி காணாமல் போகிறார் என்றால், அவர் வரும் விமானத்திலேயே அந்த தீவிரவாதியும் வருகிறான், அதிகாரியும் தீவிரவாதிகளின் தலைவரும் ஒரே மாதிரி இருப்பதால் தவறாக நினைத்து அந்த ஆபரேஷன் பற்றிய அனைத்து விவரங்களையும் கூறி விடுகிறான். பிறகு தீவிரவாதி உண்மை தெரிந்து அந்த அதிகாரியை விமானத்திலேயே கொலை செய்து, அவரது உடலை பெட்டியில் !!! போட்டு வைத்து வெளியே வரும் போது எடுத்து போய் விடுகிறார்!!!. பரிசோதனை எல்லாம் என்ன ஆனது என்று தெரியவில்லை!!!. ஆனால் அவர் சாகும் முன்பு அதை பற்றிய விவரங்கள் அடங்கிய சிம் அட்டையை (B)பப்புள் (G)கமில் வைத்து விழுங்கி விடுகிறார் (இது "saw" ஆங்கில படத்தில் வருவது). கடைசியில் கேப்டன் இவருடைய பாடியை கண்டுபிடித்து போஸ்ட்மார்டம் செய்யும் போது கண்டு பிடித்து அனைவரையும் அழிக்கிறார்.



முதலில் கேப்டன் எந்த பஞ்ச் வசனங்களையும், தன்னுடைய கதாபாத்திரம் மீறி எந்த செயலையும் செய்யாமல் இயல்பாக ஒரு படம் கொடுத்தற்காக கண்டிப்பாக அவரை பாராட்டலாம். வழக்கமான கேப்டன் படம் போல் இல்லாமல் வித்யாசமாக உள்ளது. மிகவும் பொறுமையாக நடித்துள்ளார், சில சமயம் நமக்கு அவருடைய பழைய சுறுசுறுப்பை காண முடியவில்லை. வயதாகி விட்டது என்பதை அவருடைய நடை காட்டி கொடுக்கிறது. அவசரமாக வருவதை அடக்கி வைத்து இருக்கும் ஒருவர் இருப்பது போல் மிகவும் அவஸ்தையாக முகத்தை வைத்துக்கொண்டு உள்ளார், ஏன் என்று தெரியவில்லை.



கேப்டன் க்கு ஒரு டூயட் பாடல் உண்டு (அது இல்லாமையா), படத்திலேயே இது தான் மிக கொடுமை, கையில் ரிமோட் இல்லையே ஓட்டுவதற்கு என்று நமக்கு தோன்றுகிறது. கேப்டன் தயவு செய்து இனிமேல் டூயட் எல்லாம் வேண்டாம் ரமணா போன்ற கதைகளே உங்களுக்கு பொருத்தம். மக்களும் இதை விரும்பவில்லை, குறைந்த பட்சம் உங்க தொப்பையையும் கழுத்தில் தொங்கும் சதையையும் குறைத்து கொண்டாவது டூயட் தொடருங்கள். இதில் கேப்டனுக்கு மஞ்சள் சிகப்பு வண்ண கோட் இல்லை என்பது ஒரு பெரிய ஆறுதல். அவருடைய விக் தான் கொடுமையாக உள்ளது.



எனக்கு இந்த டூயட் பார்த்தவுடன் அய்யயோ கேப்டன் கனடா ல வேற டூயட் வைப்பாரே! உலக தீவிரவாதிகளிடம் இருந்து எல்லாம் நம் நாட்டின் மானத்தை காப்பாற்றும் கேப்டன் கனடா வில் டூயட் பாடி நம்ம மானத்தை வாங்கி விடுவார் போல இருக்கேன்னு பயந்து இருந்த வேளையில் அப்படி எதுவும் செய்யாமல் நம் வயிற்றில் பாலை வார்த்தார். அவருக்கு கனடாவில் உதவுவது ஒரு தமிழக !! கனடா பெண் காவலர். அதனால் தன் பங்குக்கு கொஞ்சம் கவர்ச்சி காட்டி "டமிலை" கொலை செய்கிறார்.



இந்த படத்தில் கேப்டன் ஆங்கிலம்!! அதிகம் பேசி நம்மை கதி கலங்க வைக்கிறார். அவருடைய ஆங்கிலம் சரியான ஆங்கிலத்துடன் சில எடுத்துக்காட்டு.



pesal : special


aappesar :officer


ipad : Ipod


sekkurity : security


acsan : action


pulu : blue


sal v meet : shall we meet


tekkunikkal : technical



கேப்டன் தான் ஆங்கிலத்தை கொலை செய்கிறார் என்றால் வில்லன் நடிகர் மலையாளி என்பதால் அவரும் ஆங்கிலத்தை மற்றும் தமிழை படாது பாடு படுத்துகிறார். இவரை ஏன் இந்த படத்துக்கு முக்கிய வில்லனாக போட்டார்கள் என்று தெரியவில்லை. இவரை ஒரு பெரிய வில்லனாக அதுவும் முக்கியமாக கனடாவில் இருக்கும் வில்லனாக ஒப்புக்கொள்ள முடியவில்லை.



கேப்டன் மற்றவர்களிடம் பேசும் போதும் சரி நடந்து கொள்ளும் முறையும் சரி மிக அடக்கமாக நடித்துள்ளார். தேவையற்ற நடிப்பு என்று எதுவும் இல்லை அதுவும் குறிப்பாக கனடாவில். சண்டை காட்சியில் முன்பு இருந்த வேகம் இல்லை (வயதாகி விட்டது).



மொத்தத்தில் கேப்டன் படம் ஒருமுறையாவது பார்க்கலாம். டூயட் மற்றும் அனைத்து காட்சிகளிலும் லாஜிக் எதிர்பார்ப்பவர்கள், அது எப்படியா முடியும்.. சும்மா கதை விடுறாங்க..இந்த ஆளு படத்தை எல்லாம் மனுஷன் !!! பார்ப்பானா என்று கேள்வி கேட்பவர்கள் இந்த படத்துக்கு செல்ல வேண்டாம்.



இல்லைங்க கேப்டன் ஒரு சில மொக்கை படம் கொடுத்து இருந்தாலும், பல நல்ல படங்களையும் கொடுத்து இருக்காரு அதனால நாங்களும் ரொம்ப எதிர்பார்க்கலை என்பவர்கள் தாராளமாக செல்லலாம் குறைந்தபட்சம் இவர் ஆர்ப்பாட்டம் இல்லாமல் இயல்பாக நடிக்க முயற்சித்ததை பாராட்டுவதற்காவது.

Buzz It

Wednesday, May 21, 2008

என் முதல் வெளிநாட்டு (சிங்கப்பூர்) விமான பயண அனுபவம் !!! - தொடர்ச்சி....

பணிப்பெண் "ஹெல்ப் ஹெல்ப் எமர்ஜென்சி எமர்ஜென்சி" ன்னு அலறுச்சு பாருங்க!! எனக்கு தூக்கம் எல்லாம் கலைந்து பயத்தில் முகம் எல்லாம் வெளிறி போய் விட்டது.



அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் ங்கற மாதிரி, என்ன பிரச்சனைனு தெரியறதுக்குள்ள பயத்துல அய்யயோ விமானம் சங்காகி விட்டது போல இருக்கே, எட்டி கூட குதிக்க முடியாதே !!! கீழே இறங்காம இப்படியே மேலே கூட்டிட்டு போறாங்களே, தண்ணீரில் மூழ்கி சாவோமா (ஐயோ மீன் வேற வருமே) இல்ல விமானம் வெடித்து சாவோமா! கொடுத்த பீரை கூட வேண்டாம்னு சொல்லிட்டோமே! கடைசிக்கு! அதையாவது குடித்து இருக்கலாம்னு நம்ம கற்பனை அதுக்குள்ளே விமானத்தை விட வேகமா போய்ட்டு இருக்கு. நம்ம கற்பனை வேகம் தான் சூப்பர் சானிக் வேகம் ஆச்சே.



கடைசியில பார்த்தா என் இருக்கைக்கு அடுத்த பக்கம் இருந்த ஒரு வயதான பெண்மணிக்கு மூச்சிரைப்பு, அந்த பாட்டி பாவம் பயங்கரமா மூச்சிரைக்கறாங்க எனக்கு பாவமாக போய் விட்டது, உடன் வந்து இருந்த அவங்க வீட்டுக்காரர்னு நினைக்கிறேன் பயந்து போய் விட்டார். பின்ன இருக்காதா? அப்புறம் இந்த பணிப்பெண் கத்தியது என்னன்னா ...Doctor யாரவது இருக்காங்களான்னு எனக்கு அரைகுறையா கேட்டதில் இந்த Doctor வார்த்தை மட்டும் விழவில்லை. அப்புறம் Business வகுப்பில் இருந்து ஒருவர் Economy வகுப்பில் இருந்து இருவர் வந்தார்கள். அந்த அம்மாவுக்கு சிகிச்சை கொடுத்து காப்பாற்றிவிட்டார்கள். அதன் பிறகு தான் எல்லோருக்கும் உயிரே வந்தது. அந்த அம்மாவின் வீட்டுக்காரர் அழுகாத குறையாக நன்றி கூறினார். Doctorai ஏன் தெய்வம் மாதிரின்னு சொல்றாங்கன்னு அப்ப புரிஞ்சுது எனக்கு.



இங்க ஒரு ரணகளமே நடந்துட்டு இருக்கு, என் பின் இருக்கையில் இருந்த ஒருத்தர் வேகமாக அங்கே சென்றார், என்னடா! பார்த்தா ஒண்ணுமே தெரியல இவரும் Doctora.... ச்சே! நாம எவ்வளோ தப்பா நினைத்து விட்டோம்னு என்னை திட்டிட்டு பார்த்தா நம்ம ஆளு எதுக்கு போனாருன்னு நினைக்கறீங்க, அங்கே போய் வேடிக்கை பார்த்துட்டு இருக்காரு, அடங்கொக்கமக்கா எனக்கு வந்ததே பாருங்க கோபம்.. செம காண்டாகி விட்டது. ஏன்டா! உங்களோட எட்டி பார்க்குற புத்திய எங்க போனாலும் விட மாட்டிங்களான்னு மனதிற்குள் திட்டிவிட்டு உட்கார்ந்தேன் (நம்மால் அது தானே முடியும்:-)). பிறகு பணிப்பெண் காற்று விடுங்க அவங்கவங்க இருக்கைக்கு போய் உட்காருங்கன்னு சொன்னதும் அவர் சரியா !!!! பார்க்க !!! முடியலைங்ற வருத்தத்தோட வந்து இருக்கையில் அமர்ந்து விட்டார். என்ன கொடுமை சார் இது !!



இதற்க்கப்புறம் எனக்கு தூக்கம் வரும்னு நினைக்கறீங்க???? இப்படி நடந்ததால எனக்கு தூக்கம் வரலைங்க பயத்துல ஒண்ணுக்கே வந்து விட்டது :-)))) யாராவது உள்ளே இருந்தா கதவுல சிகப்பு விளக்கு எரியும். என் நேரம்னு பார்த்து எல்லாமே சிகப்பா இருக்கு, அளவா குடித்தா தானே.. இலவசம்னா! நம்ம ஆளுங்க பினாயில கூட குடிப்பாங்களே, சரக்க விடுவாங்களா வண்டி வண்டியா குடிக்க வேண்டியது கழிவறைக்குள்லேயே குடி இருக்க வேண்டியது. அப்புறம் ஒருத்தன் வெளியே வந்தான். யப்பா! வேற எவனாவது போவதற்குள்ளே போயிடலாம்னு போய்ட்டேன்.கழிவறைக்கு போனா அதை வேற எப்படி திறக்கறதுன்னு தெரியல அப்புறம் எப்படியோ அதை இதை அமுக்கி திறந்து உள்ளே போய்ட்டேன், உள்ளே போனா எல்லாம் முடிந்து பிளஷ் பண்ணினா தண்ணீர் வருவதற்கு பதிலாக அது பயங்கரமான சத்ததோட உறிஞ்சுது, அது போட்ட சத்தத்தை நான் எதிர்பார்க்காததால் ஒரு நொடி பயந்து விட்டேன். அப்புறம் கை கழுவ பைப் அமுக்கினா சோப்பு தண்ணீர் வருது என்ன இழவுடா இதுன்னு அப்புறம் கீழே இன்னொரு பொத்தான் இருந்தது அதை அமுக்கினா தண்ணீர் வந்தது அப்பாடான்னு வந்துட்டேன், ஏற்கனவே நிறைய சோப்பு தண்ணீர் சிந்தி இருந்தது நம்மை மாதிரியே யாரோ தடவிட்டு தண்ணீர் எப்படி வரவைக்கிறதுன்னு தெரியாம இப்படி விட்டு போய் இருக்காங்கன்னு புரிஞ்சுகிட்டேன் :-)))



என் இடத்துக்கு வந்தா என் அருகில் இருந்தவர் மேலும் சரக்கு வாங்கி குடித்துக்கொண்டு இருந்தார்.. ஆகா நம்ம மேல வாந்தி எடுக்காம போக மாட்டாரு போல இருக்கேன்னு பயத்தோடவே உட்கார்ந்துகொண்டேன். காலை நல்லா நீட்டிட்டு படுத்த மாதிரி சாஞ்சுட்டாறு. கப்பு வேற தாங்கல!



திடீர்னு விமானம் அதிர ஆரம்பிச்சது அய்யயோ மறுபடியும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா !!! இனி தாங்காதுடா சாமி னு பயந்து நம்ம கற்பனை குதிரையை தட்டி விடுறதுக்குள்ள கேப்டன் ஒண்ணும் இல்லைன்னு அறிவிச்சாறு, இருந்தாலும் எனக்கு பயம், கொஞ்சம் நேரம் அதிர்ந்து விட்டு பிறகு சரியாகி விட்டது. பிறகு நண்பர்களிடம் கேட்ட போது அது அழுத்தத்தில் அப்படி ஆகும், இது சகஜம்னு சொன்னாங்க இருந்தாலும் முதல் முறை என்பதால் எனக்கு உதறல் ஆகி விட்டது. விமானம் இன்னும் சிறிது நேரத்தில் சாங்கி விமான நிலையம் அடைய போகுதுன்னு அறிவித்தாங்க, என் அருகில் இருந்தவர் எழுந்து பணி ஆண் !!! ஒருத்தரை கூப்பிட்டு ரெடி ஷேவ், பேஸ்ட், பிரஷ் எல்லாம் கேட்டு வாங்கி பய்யில போட்டுகிட்டாரு!! வாங்கி போட்ட பிறகு அவர் முகத்துல அப்படி ஒரு பெருமிதம். அட பாவிகளா 31/2 மணி நேர பயணத்துக்கு இதெல்லாம் ஓவர் டா சாமி ன்னு நினைத்துட்டு ஒரு கொலை வெறியோட அந்த ஆள பார்த்தேன்.. அந்த ஆளு எதை பற்றியும் கவலை படாம என்னை ஒரு முறை முறைத்தார். சரி எதுக்குடா வம்பு! மப்புல காதை பார்த்து அப்பிட்டாருன்னு என்ன பண்ணுறதுன்னு வேற பக்கம் திரும்பிட்டேன்.



அப்புறம் ஒரு வழியா விமானம் தரை இறங்கியது. எல்லோரும் எந்த பக்கம் போறாங்கன்னு பார்த்து அவங்க பின்னாடியே போய் எல்லாம் முடிந்து ஒரு வழியா வெளியே வந்துட்டேன்.



வெளியே வந்தவுடன் எனக்கு நினைவு வந்த வசனம் நம்ம கவுண்டரின் பிரபல வசனமான .. "இது என்ன ஊர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சிங்கபூர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்" :-))))))


சிங்கப்பூர் வந்ததும் என்னோட கன்சல்டன்சி விருந்தினர் வீடு தேடி போய் அங்கே கதவு பூட்டப்பட்டு இருந்து, அதை கண்டு நொந்த என் அனுபவத்தை இன்னொரு சமயத்தில் கூறுகிறேன்.

Buzz It

என் 100 வது பதிவு :-) கடந்து வந்த பாதைகள் !!!



இது என்னுடைய 100 வது பதிவு. பிளாக்கர் கணக்கு 2006 ஆண்டே துவங்கி இருந்தாலும் பதிவு எழுத ஆரம்பித்தது என்னவோ 3 மாதம் முன்பு தான். கணிப்பொறி துறையில் இருந்தாலும் எனக்கு என்னவோ இந்த தமிழ் பிளாக்கர் மற்றும் தமிழ்மணம் பற்றி தெரியாமல் போய் விட்டது. இணையத்தில் சுற்றிக்கொண்டு இருந்த பொழுது எதேச்சையாக இதை பார்த்து அட! இதை நாம் எப்படி தவற விட்டோம் என்று என்னை நானே நொந்து கொண்டேன்.


எனக்கு பொதுவாக இணையத்தில் மிகுந்த ஆர்வம் உண்டு, ஆனால் ஆர்வத்தை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் முதலில் சாதரணமாக மின்னஞ்சல் அனுப்பி கொண்டு இருந்த நான் யாஹூ க்ரூப்ஸ் ல பதிவு செய்து க்ரூப்பில் இருந்து ரொம்ப வருடமாக அனைவருக்கும் மின்னஞ்சல் அனுப்பி வந்தேன், எனக்கு வரும் நல்ல மின்னஞ்சல்கள், பயனுள்ள மற்றும் பொழுதுபோக்கு சம்பந்தப்பட்ட மின்னஞ்சல்கள் என்று, பிறகு அடுத்த கட்டமாக வேறு எதாவது செய்ய வேண்டும் என்று இருந்த போது யாஹூ 360* கிடைத்தது அதில் சில படங்களை போட்டு என் கருத்துக்களை கூறி வந்தேன். இருந்தும் திருப்தி கிடைக்கவில்லை. நான் அனைவருக்கும் மின்னஞ்சல் அனுப்பி வந்தாலும் அதற்கு நல்லா இருக்கு அல்லது இந்த மின்னஞ்சல் சரி இல்லை என்று எவரும் கூற மாட்டார்கள், (என் க்ரூப்பில் என்னுடைய நண்பர்களை மட்டுமே இணைத்து இருந்தேன்) எப்போவது ஒரு சில பதில்கள் அதிசயமாக வரும். எனக்கு அது உற்சாகம் அளிக்கவில்லை, எந்த ஒரு செயலுக்கும் உற்சாகமூட்டுதல் இல்லை என்றால் நம்மால் பணியை தொடர முடியாது, ஒரு காலகட்டத்தில் நமக்கு வெறுப்பு வந்து விடும். நானும் அந்த நிலையை அடைந்து இருந்தேன்.


அப்போது கிடைத்தது தான் இந்த வலை தளம். எனக்கு இது மிக சந்தோசத்தை கொடுத்தது, நமக்கு தோன்றியதை தமிழில் எழுதலாம் நம் எழுத்து பிடித்து இருந்தால் பலர் வந்து பார்வை இடுவார்கள் என்ற நிலை என்னை மேலும் உற்சாகமூட்டியது. எனக்கு html java போன்ற பகுதிகளில் அவ்வளவாக அறிவு இல்லை என்றாலும் என்னுடைய வலைதளத்தை அழகாக வைத்து கொள்ளவேண்டும் என்பதில் எனக்கு மிகுந்த ஆர்வம். அதற்காக நான் எடுத்துக்கொண்ட முயற்சிகள் மற்றும் தேடுதல்கள் மிக அதிகம். ஒரு தேடுதலில் இறங்கி விட்டால் அது கிடைக்கும் வரை விட மாட்டேன். நான் தேடியோ அல்லது யாரிடமாவது கேட்டு அதை முடித்து விடுவேன்.


பதிவுகள் பல எழுதி இருந்தாலும் அதில் நல்ல பதிவுகள் ஒரு சில தான் இருக்கும். என்னுடைய பதிவுகளை பார்வையிட்டவர்கள் 3 மாதத்தில் 11000 பேர் மேல் இருந்தாலும், எனக்கு வந்த பின்னூட்டங்கள் மிக மிக குறைவு. ஒரு சிலர் தொடர்ந்து என் பதிவுகளை படிக்கிறார்கள் அதில் பின்னூட்டம் இடுபவர்கள் 50 ல் ஒருவரே :-((. ஒரு சில நேரம் என்னடா இது நாம நல்லா எழுதிய பதிவுக்கும் ஒருத்தரும் எதுவும் சொல்லவில்லையே என்ற ஆதங்கம் இருந்தது, ஆனால் என்னுடைய முந்தய மின்னஞ்சல் நிலைமை போல் இல்லாமல் அப்பப்ப ஒரு சில பின்னூட்டங்கள் வந்து என்னை சமாதான படுத்தி :-) கொண்டு இருந்தன அதே போல வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்ததால் திருப்தியாகவே இருந்தேன். யார் பின்னூட்டம் போட்டாலும் போடாவிட்டாலும் அல்லது வரவில்லை என்றாலும் ஆபாசமான தலைப்புகளோ அல்லது செய்திகளோ உள்ள பதிவுகளை வெளியிடக்கூடாது என்பதில் உறுதியாய் இருக்கிறேன். தற்போது கொஞ்சம் பின்னூட்டம் முன்பை விட பராவாயில்லை என்ற அளவில் வருவது ஒரு பெரிய ஆறுதல் :-)


நான் முதலில் வலைப்பதிவு வெட்டிப்பயல் என்ற பெயரில் துவங்கவே வந்தேன் :-) ஆனால் அதில் ஏற்கனவே நம்ம பாலாஜி இருந்தார், சொல்ல போனால் எனக்கு அவருடைய பதிவுகளை படித்த பிறகு தான் நாம் கண்டிப்பாக ஒரு வலைப்பதிவு துவங்க வேண்டும் என்ற எண்ணமே வந்தது. காசி மற்றும் வசந்தம் ரவி அவர்களின் தொழில்நுட்ப பதிவுகள் எனக்கு மிக உதவியாக இருந்தது. அதற்கு அவர்களுக்கு என் நன்றி. வசந்தம் ரவி சூடான இடுகைகளில் எப்படி இடம் பிடிப்பது என்று ஒரு அருமையான பதிவு எழுதி இருந்தார், நடைமுறையை அப்படியே எழுதி இருந்தார், ஆனால் நான் அதில் அவ்வாறு எழுத மாட்டேன் என்று பின்னூட்டம் இட்டு இருந்தேன். அதை தொடர்ந்து பின்பற்றியும் வருகிறேன். தலைப்பை மட்டுமே நம்பி நல்ல பதிவுகளை தவற விட்டது ஏராளம் அதே போல தலைப்பை நம்ம்பி வந்து உள்ளே ஒன்றும் இல்லை என்று ஆனதும் அதிகம். எனவே பதிவு மட்டும் நன்றாக இருந்தால் போது அதற்கு தலைப்பு தான் முக்கியம் என்று அறிந்தேன். பல பதிவர்களிடம் இருந்து நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டேன்.


திரைக்கதை சரி இல்லை என்றால் நல்ல படமும் தோல்வி அடைந்து விடுகிறது. நல்ல படங்களையும் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் கொடுத்தால் மட்டுமே வெற்றி அடைய முடியும் (எடுத்துக்காட்டாக பருத்தி வீரனை கூறலாம்). அதே போல நம்முடைய பதிவையும் மற்றவர்கள் விருப்பமாக படிக்கும் படி கொடுத்தால் மட்டுமே அனைவரும் வருவார்கள் என்று நான் இந்த 3 மாதத்தில் தெரிந்து கொண்டேன் ;) அப்புறம் ஒன்றும் இல்லாத ஒரு சில பதிவுகளுக்கு எல்லாம் ஏன் அனைவரும் போகிறார்கள் என்றால்... அதற்கும் ஒரு சில :))))) படங்களை உதாரணம் சொல்ல முடியும் ஆனால் வேண்டாம் ;) எனவே மற்றவர்களை குறை கூறுவதை விட்டு நம்மில் என்ன குறை என்று தெரிந்து கொண்டாலே போதும் என்பது என் கருத்து.


இது வரை என் வலைப்பதிவுக்கு வந்தவர்களுக்கும் பின்னூட்டம் இட்டவர்களுக்கும்,தொடர்ந்து இடுபவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தொடர்ந்து வாருங்கள் உங்கள் நிறை குறைகளை கூறுங்கள். என்னுடைய பதிவுகள் பல நகைச்சுவையும் நய்யாண்டியுமே இருக்கும், யாருடைய மனதையாவது இவை புண் படுத்தி இருந்தால் போன போவுதுன்னு என்னை மன்னித்து விடுங்க :-) நம்ம கவுண்டர் சொல்ற மாதிரி "பதிவுல இதெல்லாம் சாதாரணமப்பா" ன்னு எடுத்துக்குங்க.


ஸ்டார்ட் மியூசிக் :-)))

Buzz It

Monday, May 19, 2008

என் முதல் வெளிநாட்டு (சிங்கப்பூர்) விமான பயண அனுபவம் !!!

நான் நீண்ட காலமாக படத்திலும் நண்பர்கள் கூறியும் தான் சிங்கப்பூர் கேள்வி பட்டு இருந்தேன், நிஜத்திலேயே செல்லும் வாய்ப்பு கிடைத்தவுடன் சந்தோசமாகவும் இருந்தது அதே சமயம் கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ஏனென்றால் இது தான் முதல் வெளிநாட்டு பயணம், எப்படி போவது அங்கே யாரை கேட்டு போகணும், டாக்ஸி எப்படி பிடிப்பது கன்சல்டன்சி விலாசத்தை எப்படி கண்டு பிடிப்பது போன்ற சந்தேகங்களும் கூடவே பயமும் இருந்தது.

வீட்டில் அனைவரும் சென்னை விமான நிலையம் வந்து இருந்தார்கள். எனக்கு நேரம் ஆக ஆக படபடப்பு அதிகமாகி விட்டது, இருந்தாலும் அதை வெளி காட்டிக்கொள்ளாமல் (நாம யாரு :D) சிரித்துக்கொண்டு !!! இருந்தேன். உள்ளே அனுமதித்ததும் எல்லோரும் சிறப்பு சீட்டு எடுத்து உள்ளே வந்து இருந்தார்கள். முன் பரிசோதனை முடிந்து போர்டிங் பாஸ் கொடுத்தவுடன் இமிக்ரேசன் செல்லும் முன்பு திரும்ப வந்து அனைவரையும் பார்க்க வந்தேன், நான் ஹாஸ்டலில் மற்றும் சென்னையில் சேர்த்து 18 வருடங்கள் என் அம்மாவை பிரிந்து இருந்தாலும், இந்த பிரிவு என்னை என்னவோ செய்தது. அது வரை அமைதியாக இருந்த என் அம்மா நான் கிளம்புகிறேன் என்று சொன்னதும் எவ்வளோ கட்டுப்படுத்தியும் முடியாமல் அழுது விட்டார்கள். அது வரை தைரியமாக!! கட்டுப்படுத்தி இருந்த நான் எவ்வளோ முயற்சி செய்தும் என் அம்மாவின் கண்களில் கண்ணீரை கண்டதும் எனக்கும் அழுகை வந்து விட்டது பிரிவு தாங்காமல் அல்லது என் அம்மாவின் முகத்தை கண்டதும். அதற்கு மேல் அங்கே நின்றால் அம்மாவுக்கும் சிரமம் எனக்கும் என்னை கட்டுப்படுத்த முடியாது என்று வேகமாக அனைவரிடமும் சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டேன். என்ன தான் சொல்லுங்க எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத அம்மாவின் உண்மையான அன்புக்கு ஈடு இணை இல்லைங்க. நான் கடைசி பய்யன் என்பதால் என் மீது கொஞ்சம் பாசம் அதிகம். எனக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்று இருந்தாலும் என் அம்மாவுக்கு நான் இன்னும் ரொம்ப சின்ன பய்யன் தான்.

பிறகு அனைவரிடமும் பிரியா விடை பெற்று இமிக்ரேசன் சோதனை முடிந்து மேலே வந்தால் உள்ளூர் தொலைபேசி இருந்தது திரும்ப அதில் இருந்து ஒருமுறை அனைவரிடமும் பேசி விட்டு !!! பாதுகாப்பு சோதனை முடிந்து உட்கார்ந்து இருந்தேன். எப்படி போவது? யாரை பார்ப்பது? எளிதாக விலாசத்தை கண்டு பிடித்து விடலாமா? சிங்கப்பூர் சென்றால் அங்கே என்ன கேள்வி கேட்பார்கள்? போன்ற யோசனைகளுடன் காத்து கொண்டு இருந்தேன்.

விமானத்தில் சென்று அமர அறிவிப்பு வெளியிட்டார்கள். நானும் ஒரு பயத்துடனே சென்றேன், தனியாக வேறு செல்கிறோம், முதல் முறை வேறு என்பதால் கொஞ்சம் ஒரு மாதிரியாக தான் இருந்தது. விமானத்தின் உள்ளே செல்லும் முன்பு பயண சீட்டு மற்றும் பாஸ்போர்ட்டை சோதனை செய்தார்கள், பிறகு உள்ளே போகும் முன்பு இன்றைய காலை பத்திரிக்கைகள் அனைத்தையும் வைத்து இருந்தார்கள், அதில் நம்ம தந்தியையும், தினகரனையும் எடுத்துக்கொண்டு உள்ளே சென்றேன். எனக்கு ஹிந்து எல்லாம் படம் பார்க்க தான் தெரியும் ஹீ ஹீ ஹி. விமான பணிப்பெண்கள் ;) நான் அமரும் இடத்திற்கு செல்ல உதவினார்கள் (பணிப்பெண் சூப்பர்ங்க
=P~ ), இந்த பெண்களை பார்த்தவுடன் கொஞ்சம் கூல் ஆகி விட்டேன் ஹீ ஹீ ஹீ.

நான் பயணிகள் அனைவரும் வெளிநாட்டினராக இருப்பார்கள் என்று பார்த்தால், ஒரு கோயம்பேடு KPN டிராவல்ஸ் ல் இருப்பது போன்ற உணர்வு. அத்தனையும் நம்ம மக்கள். என்னடா! இது வெளிநாடு போற உணர்வே இல்லையேன்னு நொந்துட்டு கம்முனு உட்கார்ந்தேன். இதுல கூலி தொழிலாளர்களும் இருந்ததால் ஒரே காச் மூச்னு சத்தம். எனக்கு சுத்தமாக விமானத்தில் செல்லும் ஆசையே போய் விட்டது, நான் கற்பனை செய்து வைத்து இருந்ததற்கும் இதற்கும் சம்பந்தமே இல்லாதது தான் காரணம். என் அருகில் இருந்தவர் எதோ ஒரு சட்டையை பேருக்கு மாட்டி வந்தது போல் உட்கார்ந்து, பேருந்தில் காலை வைப்பது போல் வைத்து உட்கார்ந்து கொண்டார், எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது (புதிது என்பதால் தான் அதற்கு பிறகு இதெல்லாம் சகஜம் என்று உணர்ந்து கொண்டேன் :D என்னுடைய நினைப்பு என்னவென்றால் விமானத்தில் பயணம் செய்பவர்கள் மிகவும் நாகரீகமாக நடந்து கொள்வார்கள் என்று. அது எவ்வளோ பெரிய தவறு என்று என்று அதன் பிறகு எனக்கு ஏற்பட்ட பயணங்களில் அறிந்து கொண்டேன்.

விமானம் புறப்படபோவதாக அறிவித்தார்கள் எனக்கு என் முந்தய உள்நாட்டு விமான பயண அனுபவம் வந்து பயமுறுத்தியது. பெல்ட்டை இறுக்கமாக கட்டி கொண்டேன். ஆனால் அந்த பயணம் போல் இல்லாமல் எந்த ஒரு வித்யாசமும் தெரியாமல் மேலே கிளம்பியது. கீழே இருந்தே விமானத்தை பார்த்து பழகிய எனக்கு, விமானத்தில் இருந்து சென்னையை பார்த்தது ஒரு புது அனுபவமாக இருந்தது. பணிப்பெண்கள் சிறிது நேரத்திலேயே குடிப்பதற்கு ட்ரிங்க்ஸ் கொடுத்தார்கள். என் அருகில் அமர்ந்து இருந்தவரை பார்த்தேன் அதற்குள் தூங்கி இருந்தார் நிறைய முறை வந்திருப்பவர் போல இருக்கு :)) . என் முன்னால் இருந்த மானிடரில் தமிழ் படமும் இருந்தது. உன்னாலே உன்னாலே படம் இருந்தது சரின்னு அதை போட்டேன், எப்படி கேட்பது என்று தெரியவில்லை. ஹெட் போன் இருந்தாலும் அதை எங்கே மாட்டுவது என்று தெரியவில்லை, கொஞ்ச நேரம் ஊமை படமாகவே பார்த்து கொண்டு இருந்தேன், பிறகு சீட்டை சாய்க்கலாம் என்று பார்த்தால் கை பிடி அருகே ஹெட் போன் ஐ சொருகும் இடம் காணப்பட்டது. அட! இதை அவர்களிடம் கேட்டு இருக்கலாமே என்று என்னை நானே திட்டி கொண்டு படம் பார்க்க ஆரம்பித்தேன். பிறகு பிரியாணி, ட்ரிங்க்ஸ் மற்றும் உற்சாக பானங்கள் (அட சரக்குங்க) கொடுத்தார்கள், எனக்கு சிங்கப்பூர் சென்று அங்கே என்ன செய்ய போகிறோம் என்ற கவலையும் யோசனையும் அதிகமாக இருந்ததால் எதையும் சாப்பிட பிடிக்கவில்லை, பீர் கூட சப்பிடலைனா பார்த்துக்குங்க :D சரி அங்கே போய் சாப்பிட என்ன கிடைக்குமோ இங்கேயே எதாவது சாப்பிடுவோம் என்று சாப்பாடை வேண்டா வெறுப்பாக சாப்பிட்டேன். என்னருகில் இருந்தவர் புல் கட்டு கட்டினார். அதை பார்த்ததுமே எனக்கு பசி போய் விட்டது. பெயர் தெரியாத சரக்கு இரண்டு பாட்டில் உள்ளே தள்ளினார், எனக்கு வேற பயம் எங்கேயாவது நம்ம மேல வாந்தி எதுவும் எடுத்து வைத்து விடுவாரோன்னு. இங்கே ஜன்னல் வெளியே அவசரத்துக்கு தலைய கூட நீட்ட முடியாதே :-SS . பிறகு சிங்கப்பூர் ல் என்ன செய்ய போகிறோம் போனவுடன் என்று யோசனை செய்து கொண்டு இருந்ததில் என்னை மறந்து அப்படியே தூங்கி விட்டேன். பிறகு திடீரென்று பணிப்பெண் "ஹெல்ப் ஹெல்ப் எமர்ஜென்சி எமர்ஜென்சி" ன்னு அலறுச்சு பாருங்க!! எனக்கு தூக்கம் எல்லாம் கலைந்து பயத்தில் முகம் எல்லாம் வெளிறி போய் விட்டது.

இதன் தொடர்ச்சியை அடுத்த பாகத்தில் கூறுகிறேன்.

Buzz It

Friday, May 16, 2008

ஆஸ்கார் ரவிச்சந்திரன் இனி வெறும் ரவிச்சந்திரன் !!!


பிரபல தமிழக திரைப்படத் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் எந்த முன் அனுமதியும் பெறாமல் தங்கள் நிறுவன முத்திரை மற்றும் பெயரை பயன்படுத்தி வருவதாக அமெரிக்காவில் உள்ள ஆஸ்கர் அகாடமி குற்றம் சாட்டியுள்ளது.தங்களது டிரேட் மார்க்கை தவறாக பயன்படுத்திவருவதால் ஆஸ்கர் ரவிச்சந்திரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவு செய்துளளதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

திரைப்படத்துறையில் உலக அளவில் சிறந்த படங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான பெருமைக்குரிய ஆஸ்கர் விருதுகளை அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஆஸ்கர் அகாடமி என்ற நிறுவனம் வழங்கிவருவது தெரிந்த விஷயம்தான். ஆனால் அந்த நிறுவனத்தின் டிரேட் மார்க் சின்னத்தை அனுமதியில்லாமல் ரவிச்சந்திரன் பயன்படுத்தி வந்தததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு புதுக்கதை.இந்த விஷயத்தை தங்கள் நிறுவனம் கடுமையாக கருதுவதாக கூறிய ஆஸ்கர் அகாடமி இயக்குநர்களின் ஒருவரான ஸ்காட் மில்லர், இதுதொடர்பாக ரவிச்சந்திரன் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

ரூ.60 கோடி மெகா பட்ஜெட்டில் கமல் 10 வேடங்களில் நடிக்கும் தசாவதாரம் படத்தின் டிரெய்லர் காட்சிகள் ஏற்கெனவே ஆஸ்கர் ரவிச்சந்திரனை நீதிமன்றம் வரை கொண்டு சென்றது. அடுத்து, ரூ.10 கோடி செலவில் ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானை வரவழைத்து சென்னையில் பிரமாண்டமாக நடத்தப்பட்ட அந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில் ஆபாசமாக ஆடை அணிந்து வந்ததாக நடிகை மல்லிகா ஷெராவத் மீது கண்டன கணைகள். ஏதோ நல்லகாலம் நடிகர் ரஜினி தலையிட்டு அந்த விவகாரத்தை சுமுகமாக முடித்து வைத்தார். இப்போது அவரது நிறுவனத்தின் பெயரிலேயே புதிய பிரச்னை.

ஆஸ்கர் நிறுவன பேனரில் இதுவரை 20 படங்களை ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். தற்போது கைவசம் 4 படங்கள் தயாரிப்பு வேலைகள் நடந்து வருகின்றன. கடந்த 15 ஆண்டுகளாக ஆஸ்கர் நிறுவன பெயரையும், ஆஸ்கர் அகாடமி சின்னம் போலவே அச்சாக தனது நிறுவனத்துக்கும் ரவிச்சந்திரன் பயன்படுத்தி வருகிறார். இதுதான் இப்போது சர்ச்சையைக் கிளப்பியது.இந்த சர்ச்சை புண்ணியத்தை நடிகர் ஜாக்கிசான் தான் வாங்கிக் கட்டிக் கொள்ளவேண்டும் போல. ஏனென்றால் ஆர்வமிகுதியால் ஜாக்கிசானை வரவழைத்ததால்தான் தசாவதாரம் படத்தின் மீது சர்வதேச பார்வை பதிந்தது. இதையடுத்துதான் உண்மையான ஆஸ்கர் அகாடமியும் விழித்துக் கொண்டு ரவிச்சந்திரனை பார்த்து உறுமுகிறது.

சர்வதேச அளவில் ஆஸ்கர் அகாடமி தனது சின்னத்தை காப்பிரைட் செய்திருப்பதால் அனுமதியின்றி அதைப் பயன்படுத்துவது சட்டவிரோதமாகும்.இந்நிலையில் மலிவான படத் தயாரிப்புகளுக்கு தங்கள் நிறுவன பெயரை சூட்டியிருக்கும் ரவிச்சந்திரன் மீது மிகப்பெரிய இழப்பீடு தொகை கேட்டு மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என்றும் ஸ்காட் மில்லர் பயமுறுத்துகிறார்.

திரைப்பட விநியோகஸ்தராக இருந்து இந்தளவுக்கு முன்னேறியுள்ள ஆஸ்கர் ரவிச்சந்திரன் விஜய்யின் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டான காதலுக்கு மரியாதை என்ற படத்தின் மூலம்தான் தயாரிப்பாளர் அந்தஸ்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.அவர் மீது எழுந்துள்ள இந்த பரபரப்பு குற்றச்சாட்டு நமது நிருபர் தொடர்பு கொண்டு கேட்டபோது, இது தொடர்பாக ஆஸ்கர் அகாடமியிடமிருந்து தனக்கு எந்த நோட்டீஸோ, தகவல்களோ அளிக்கப்படவில்லை. அப்படி பிரச்னை கிளம்பினால் அதன் விளைவுகளை உரிய முறையில் எதிர்கொள்ளத் தயார் என்று ரவிச்சந்திரன் கூறினார்.

நன்றி தட்ஸ்தமிழ்

Buzz It

"குருவி" பட தயாரிப்பாளருக்கு நன்றி கூறும் மற்ற பட தயாரிப்பாளர்கள் !!!


"குருவி" பட தயாரிப்பாளர் உதயநிதிக்கு மற்ற படத்தயாரிப்பாளர்கள் நன்றி கூறி கொண்டு இருக்கிறார்களாம்.


தற்போது வெளியான "குருவி" படம் "A" சென்டர்களில் சரியாக போகவில்லை, வசூல் குறைந்து விட்டதாக பாக்ஸ் ஆபீஸ் செய்திகள் கூறுகின்றன, ஆனால் "B" மற்றும் "C" சென்டர்களில் ஓரளவுக்கு நன்றாக போகிறது. ஒரு புதிய படம் வந்தாலே உடனே அதனுடைய திருட்டு DVD யும் உடனே வந்து விடும், ஏற்கனவே வசூல் எதிர்பார்த்த படி இல்லாததால் இதன் வரவு இன்னும் படத்தை பாதித்து விடும் என்று கருதியதால் குருவி பட சம்பந்தப்பட்டவர்கள், தாரிப்பாளரிடம் கூறி இதை தடுக்க உங்கள் செல்வாக்கை பயன்படுத்தி முயற்சி எடுங்கள் என்று கூறி உள்ளனர் . இதன் தயாரிப்பாளர் உதயநிதி கலைஞரின் பேரன் என்பதால், தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி 30 லட்சம் மதிப்புள்ள திருட்டு DVD க்களை பறிமுதல் செய்துள்ளனர்.


இவ்வாறு திருட்டு DVD நடவடிக்கை எடுத்ததால், தற்போது வெளிவந்த அனைத்து படங்களின் DVD யும் சேர்த்து கைபற்ற பட்டது. இதனால் பலன் அடைந்த மற்ற பட தயாரிப்பாளர்கள் சந்தோசத்தில் உள்ளனர். எப்படியோ நல்லது நடந்தா சரி..

கொசுறு

மேலே உள்ள படத்தை பார்த்தாலே உங்களுக்கு புரிந்து இருக்கும், கலைஞருக்கு "குருவி" படத்தை சிறப்பு காட்சி போட்டு காட்டி இருக்கிறார்கள் என்று (படம் வேறு பேரன் தயாரிப்பு!!), அனேகமாக நம்ம தலைவர் "பாபா" படத்தை சச்சிதானந்த சுவாமிகளுக்கு போட்டு காட்டிய போது மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் படம் முடிந்து வெளியே வந்து படம் ரொம்ப நல்லா!!! இருக்குன்னு சொன்ன மாதிரி "குருவி" பார்த்து கலைஞர் கதி கலங்கி போய் இருப்பாருன்னு நினைக்கிறேன் ஹீ ஹீ ஹீ

Buzz It

Wednesday, May 14, 2008

மின்னஞ்சலில் திராவிடை கிண்டல் செய்து உலா வரும் படம்


ஏம்பா! உப்பு போட்டு தானே சாப்பிடுறே?? (நான் கேட்கலைங்க மின்னஞ்சலில் வந்தது)


இப்ப தான் ஸ்ரீசாந்த் மாட்டிகிட்டு ஒரு வழியா அதுல இருந்து வெளி வந்து இருக்காரு!!! இப்ப நம்ம திராவிட் நேரம் போல இருக்கு, இப்ப இந்த படம் மின்னஞ்சலில் உலா வருகிறது.

இதுல திராவிடை பார்க்க ரொம்ப ரொம்ப பாவமா இருக்காரு


திராவிட் தொடர்பான என் இடுகை.

Buzz It

இலங்கை தமிழர்கள் பற்றி எனக்கு தோன்றிய சந்தேகங்கள்???

எனக்கு நீண்ட நாட்களாக இலங்கை தமிழர்கள் பற்றிய ஒரு சில சந்தேகங்கள் இருந்து கொண்டே இருக்கிறது. சரி வலை பதிவில் கேட்டாலாவது யாரவது சொல்வார்களா என்ற நம்பிக்கையில் கேட்கிறேன். ஏனென்றால் அதிகளவில் இலங்கை தமிழர்கள் வலைப்பதிவுக்கு வருகிறார்கள் மற்றும் வலை பதிவு வைத்து இருக்கிறார்கள். கீழ் கண்ட கேள்விகளுக்கு முடிந்தால் பதில் தர யாராவது முயற்சிக்கவும்.

இலங்கை தமிழர்கள் எப்போது இருந்து அங்கே இருக்கிறார்கள்?


அங்கே அவர்களின் வளர்ச்சி எப்படி அதிகரித்தது?


தமிழர்கள் அனைவரும் புலிகளுடன் தொடர்பு வைத்து இருக்கிறார்களா?


புலிகளுடன் சம்பந்த படாமல் தனியாக வாழ்க்கை நடத்தும் சாதரண பொது மக்கள் இருக்கிறார்களா?


புலிகளுக்கு என்று தனியாக ருபாய் நோட்டு உள்ளதாமே, அதை மற்ற நாடுகளில் பயன்படுத்த முடியுமா?


இலங்கை இராணுவத்தினர் அட்டூழியங்கள் செய்வதாக செய்திகள் வருகின்றனவே, அது பொது மக்களையா அல்லது வீரர்களின் குடும்பத்தினரையா? (ஆண் + பெண்)


தமிழகத்தில் உள்ள தமிழர்களை அவர்கள் விரும்புகிறார்களா?


தமிழர்களின் மக்கள் தொகை இலங்கையில் எவ்வளவு?


சண்டைகள் நடக்கும் போது 50 - 100 பேர் பலி என்று செய்திகள் வரும் போது வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் எப்படி உணருகிறார்கள்?


இலங்கை அரசும் தனி ஈழம் தர மாட்டேன் என்கிறது, புலிகளும் அதை வாங்காமல் விட மாட்டோம் என்கிறார்கள். இதன் முடிவு என்ன?


இப்போதைய மக்களிடம் இது பற்றிய மாறுபட்ட எண்ணங்கள் தோன்றி இருக்கிறதா?


தினமும் 5 - 10 பேர் பலி என்று செய்திகளில் பார்க்கும் போது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. உயிரின் மதிப்பு உணராமல் அனைவரும் இருக்கிறார்களா? இல்லை உயிர் விடுபவர்களின் உணர்ச்சி புரியாமல் நாம் பேசுகிறோமா? எனக்கு புரியவில்லை.


மேலே நான் கேட்ட கேள்விகள் அனைத்தும், இலங்கை தமிழர்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவலில் கேட்டது தான். மற்ற படி வேறு எந்த உள் அர்த்தமும் கிடையாது.

Buzz It

Tuesday, May 13, 2008

சிங்கப்பூர் பயணமும் நண்பர்கள் பிரிவும்

நான் இருந்த நிறுவனம் எனக்கு நல்ல சம்பளம் மற்றும் முழு சுதந்திரம் கொடுத்து இருந்தது. நான் வேலை மாற நினைத்ததற்கு காரணம், செய்யப்படும் கடுமையான வேலைக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை மற்றும் 6 1/2 வருடம் இருந்து விட்டேன், ஒரு மாற்றம் தேவை பட்டது. பொதுவாக கணிப்பொறி துறையில் ஒரு நிறுவனத்தில் 3 வருடம் வேலை செய்தாலே பெரிய விசயமாக கூறுவார்கள். சிங்கப்பூர் அல்லது துபாய் யில் அதன் மீது இருந்த கவர்ச்சியின் காரணமாக அங்கே வேலைக்கு சேர வேண்டும் என்பது என் ஆவலாக இருந்தது. பிறகு எனக்கு சிங்கப்பூர் சுவிஸ் வங்கியில் வேலை கிடைத்தது.

இங்கு ஒன்றை குறிப்பிட்டே ஆக வேண்டும். என்னுடைய முதல் வேலையில் இருந்து தற்போதைய வேலை வரை என் நண்பர்களின் பங்கு இல்லை என்றால் என்னால் இந்த நிலையை அடைந்து இருக்கவே முடியாது. வாழ்க்கையில் நல்ல நண்பர்களின் உதவி இருந்தால் எதை பற்றியும் கவலை படத்தேவையில்லை. எனக்கு ஒரு கஷ்டம் வரும் போது எல்லாம் உடன் இருந்து ஆலோசனை கூறுவதிலும், உதவுவதிலும் அவர்கள் காட்டிய அக்கறையை எந்த காலத்திலும் மறக்க முடியாது. மறந்தால் நான் நன்றி மறந்தவன் ஆகி விடுவேன். நமக்கு கிடைத்த உதவி சிறிதாக இருந்தாலும், அந்த உதவி நமக்கு எந்த சமயத்தில் கிடைக்கிறது, அதன் முக்கியத்துவம் என்ன என்பதை உணர்ந்தாலே நாம் நமக்கு உதவி செய்தவர்களை மறக்க முடியாது. என் வீட்டில் பணம் வாங்க விருப்பபடாமல் ஒரு சில வேளை சாப்பாட்டுக்கே சிரமப்பட்டு இருந்ததால், பணத்தின் அருமையையும் நண்பர்களின் உதவியையும் வாழ்க்கையில் நன்றாகவே உணர்ந்து இருந்தேன்.


நான் 7 வகுப்பில் இருந்தே ஹாஸ்டலில் படித்தேன் என்பதாலும் சென்னையில் 12 வருடம் படிப்பு மற்றும் வேலைக்காக இருந்ததாலும், வீட்டை விட்டு இருப்பது எனக்கு சிரமமாக தெரியவில்லை ஆனால் சென்னை நண்பர்களை விட்டு பிரிந்து செல்வது தான் எனக்கு மிக சிரமமாக இருந்தது, இரண்டு வாரத்திற்கு ஒரு முறையாவது தேவி, சத்யம், சங்கம், ஆல்பட் அல்லது வுட்லண்ட்ஸ் திரை அரங்கில் எதாவது ஒரு படம் பார்த்து விடுவோம், அது மொக்கை படமாக இருந்தாலும் போய் உட்காந்து விடுவோம். தமிழ் திரை உலகை வாழ வைத்ததில் எங்களுடைய பங்கு அதிகம். ஒரே நாளில் 4 படங்கள் எல்லாம் திரை அரங்கில் பார்த்து சாதனை புரிந்து இருக்கிறோம்.


மயிலாப்பூர் லஸ் ல் வீடு எடுத்து தங்கி இருந்ததால் சங்கீதா, சுக நிவாஸ் தான் எங்கள் சாப்பாட்டு இடம். அன் லிமிடெட் சாப்பாடு போடும் YMIA சாப்பாட்டை மறக்கவே முடியாது, வீட்டு சாப்பாடு போலவே இருக்கும், தற்போது தரம் குறைந்து விட்டது. அங்கே ஒருத்தர் சாப்பிடும் சாப்பாட்டின் அளவை பார்த்து நொந்து போன மெஸ் மேனேஜர், அய்யா நீங்க தயவு செய்து இனிமேல் வராதீங்க, இந்த மாதிரி சாப்பாடு சாப்பிட்டீங்கன்னா எங்க மெஸ் ஐ மூட வேண்டியது தான், என்று அழுகாத குறையாக கேட்டது நினைத்து எனக்கு இன்னும் சிரிப்பு வரும். நானே அவர் சாப்பிடுவதை பார்த்து பயந்து இருக்கிறேன். சாம்பார் மட்டும் 8 கரண்டி வாங்குவார்னா நீங்களே அவர் எப்படி சாப்பாடு சாப்பிட்டு இருப்பார்னு கணக்கு போட்டுக்குங்க. நான் மிகை படுத்தி கூறவில்லை.


புத்தாண்டு தினத்தன்று மெரினாவில் காவலர்கள் வருவது தெரியாமல் ஆடி கொண்டு இருந்தபோது பின்னால் வந்த காவலர்கள் லத்தியில் எல்லோரையும் சாத்து சாத்துன்னு சாத்திய போது அனைவரும் நாலா பக்கமும் சிதறி ஓடி பின்னர் சேர்ந்து நடந்ததை பேசி சிரித்தது என்றுமே மறக்க முடியாது. இதில் எனக்கும் என் நண்பன் ஒருவனுக்கு மட்டும் செரியான அடி. இரண்டு நாள் நான் சரியாக கூட உட்கார முடியலை :D


இவ்வாறு என்னுடைய அனைத்து செயல்களிலும் கலந்து இருந்த அவர்களை பிரிவது தான் எனக்கு சிரமமாக இருந்தது, மாற்றம் ஒன்று தானே எப்போதும் மாறாதது எனவே சிங்கப்பூர் செல்ல தயார் ஆனேன். எனக்கு வெளிநாட்டு பயணம் என்பது இதுவே முதல் முறை, உள்நாட்டு விமானத்தில் போய் எனக்கு ஏற்கனவே பலமான அனுபவம் இருந்ததால் இந்த முறை அதிக பயத்துடனே சென்றேன். என்னுடைய சிங்கப்பூர் விமான பயணத்தையும் முதல் நாள் நான் அங்கே பட்ட அவஸ்தையையும் என்னுடைய அடுத்த இடுகையில் கூறுகிறேன்.

Buzz It

சொதப்பிய திராவிட் காண்டான மல்லையா


IPL போட்டிகளில் மல்லையாவின் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி தோல்வி மேல் தோல்வி கண்டு வருகிறது. தொடர் தோல்வியால் அணி உரிமையாளர் விஜய் மல்லையா, அணித்தலைவர் திராவிட் மேல் கோபம் அடைந்துள்ளார்.


நட்சத்திர வீரர் திராவிடை மிகவும் நம்பி இருந்ததாகவும், வீரர்கள் தேர்வில் இவர் கோட்டை விட்டு விட்டதாகவும் கூறி இருக்கிறார். தான் எதிர்பார்த்த வீரர்களை சேர்க்கவில்லை என்றும், வீரர்கள் தேர்வில் தான் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியதே தான் செய்த மிகப்பெரிய தவறு என்று கூறி உள்ளார். இது வரை விளையாடிய போட்டிகளில் திராவிடும் பெரிதாக ஒன்று சாதிக்கவில்லை.


கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி ஏலத்தில் எடுத்த வீரர்கள் இப்படி சொதப்பினால், யாருக்கு தான் கோபம் வராது. ஒரு சில போட்டிகள் என்றால் பரவாயில்லை பெரும்பாலான போட்டிகளின் நிலைமை இப்படி என்றால் கோபப்படாமல் எப்படி இருக்க முடியும். இவங்களை ஏலத்துல எடுத்ததற்கு பேசாம இன்னொரு KF தொழிற்சாலை ஆரம்பித்து இருக்கலாம் என்று நினைத்து இருப்பார் :)


இப்ப ஒன்றும் செய்ய முடியாது, போட்டிகள் அறை இறுதிக்கு வந்து விட்டன. பேசாம மல்லையா ஒரு KF குடிச்சுட்டு கம்முனு உட்கார்ந்துட்டு இருக்க வேண்டியது தான் இப்போதைக்கு :D.

Buzz It

Monday, May 12, 2008

மே 30 க்கு பின் மின்வெட்டே இருக்காது !!! - அமைச்சர் ஆற்காடு வீராசாமி


"காற்றாலை மின் உற்பத்தி மூலம் கடந்த மாதம் 27 ம் தேதியில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. வெளி மாநிலங்களில் இருந்து நம்முடைய தேவையை பூர்த்தி செய்ய மின்சாரம் வாங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


காற்றாலை மின்சாரம் தற்போது கிடைப்பதால், வரும் 15 ம் தேதிக்கு பிறகு தொழிற்சாலைகளுக்கான மின் வார விடுமுறை ரத்து செய்யப்படும். தமிழகத்தில் தற்போது மின்வெட்டு இல்லை (இந்த பொய் ஆண்டவனுக்கே அடுக்காது). சில பகுதிகளில் இருக்கும் சிறு !!!!!!!!!!!!!!!!!!!! அளவிலான மின்வெட்டு வரும் 30 ம் தேதிக்கு பிறகு முற்றிலும் இருக்காது" என்று செய்தியாளர்களிடம் ஆற்காடு வீராசாமி கூறி உள்ளார்.


இல்ல தெரியாம தான் கேட்கிறேன். அது எப்படிங்க இவங்க மட்டும் மின்வெட்டு இல்லை இல்லைன்னு சொல்லிட்டே இருக்காங்க, ஒருவேளை இவங்க வீட்டுல இல்லைங்கறாங்களா? அவனவன் மின்சாரம் இல்லாமல் படுற கஷ்டம் இவங்களுக்கு எங்க தெரிய போகுது, புழுக்கம் தாங்காமல் ஜன்னலை திறந்து வைத்தால் இது தாண்டா நல்ல சமயம்னு திருடர்கள் வந்து எல்லாத்தையும் திருடிட்டு போய்டுறாங்க. குழந்தைகள் எல்லாம் இரவில் தூங்க முடியாமல் அவதி படுகிறார்கள். சமையல் செய்ய இப்பொழுது மின்சாரம் இல்லை என்றால் பாதி வேலை செய்ய முடிவதில்லை. மின்சார பாதிப்பு சென்னையில் அவ்வளவாக அதிகமாக இல்லை, கிராமங்களிலும் புற நகர் பகுதிகளிலும் மக்கள் படும் கஷ்டம் சொல்லி மாளாது.


எனக்கு இன்று வரை புரியாதது, தி மு க ஆட்சிக்கு வந்தால் மட்டுமே இந்த மின்சார பிரச்சனை (எப்போதும் போல வீராசாமி தான் அமைச்சர்), அதுவும் இந்த முறை அனைத்து இடங்களிலும் வழக்கத்தை விட மழை அதிகமாக பெய்தது, அப்படி இருக்கும் பொழுது மின்சாரம் இல்லை இல்லைன்னு இதையே சொல்லிட்டு இருக்காங்க. நான் அ தி மு க சார்பாக கூறவில்லை, உண்மையிலேயே அவர்கள் ஆட்சியில் மின்வெட்டு இதை போல மோசமாக இல்லை.


இந்த கட்சிகாரங்க கூட்டம் போடுறேன்னு சொல்லி இருக்கிற மின்சாரத்தை எல்லாம் வயர் போட்டு இழுத்து தெருக்கு 100 மின்சார விளக்குகளை தேவை இல்லாமல் எரிய விட்டு ஒலி பெருக்கிகளை அலற விடாமல் இருந்தாலே பாதி மின்சாரம் சேமிக்கப்படும். வரும் 30 தேதிக்கு பிறகு மின் வெட்டே !!! தமிழகத்தில் இருக்காதுன்னு ஆற்காடு வீராசாமி கூறி இருக்கிறார் பார்ப்போம் என்ன நடக்குதுன்னு.

Buzz It

Sunday, May 11, 2008

அதிரடியாக தன்னை நிரூபித்த "பாலாஜி"




லேட் ஆக வந்தாலும் லேட்டஸ்டாக வந்து கலக்கி உள்ளார் தமிழக கிரிக்கெட் வீரர் பாலாஜி. பாகிஸ்தானில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் தொடரில், விக்கெட்டை குவித்து அனைவரின் கவனத்தையும் திருப்பி புகழின் உச்சிக்கு சென்ற இவர், தன்னுடைய உடல் தகுதியை நிரூபிக்க முடியாததால், அடுத்து வரும் போட்டிகளில் இவர் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் இவர் கதை முடிந்தது என்றே பலரும் நினைத்தார்கள், பலர் இவரை மறந்தே விட்டார்கள்.




தற்போது 20-20 போட்டிகளில் தேர்வாகி இருந்த இவர், நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் பஞ்சாப் லெவன் அணிக்கும் இடையே நடை பெற்ற போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை புரிந்துள்ளார். இது IPL போட்டிகளில் எடுக்கப்படும் முதல் ஹாட்ரிக் சாதனை ஆகும்.




இவர் மொத்தம் 5 விக்கெட் எடுத்தார் இதில் நம்ம யுவராஜ் சிங் ம் அடக்கம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹய்டன் மற்றும் ஹுசே இல்லாமல் கொஞ்சம் அடி வாங்கி தான் போனது. தற்போதைய வெற்றி அவர்களுக்கு கண்டிப்பாக ஒரு மனதைரியத்தை கொடுத்து இருக்கும்.




கொசுறு




போட்டிகளில் ரசிகர்களை !!! உற்சாகப்படுத்த வரும் பெண்களுக்கு இப்பொழுது உடையில் மாற்றம் கொண்டு வந்து இருக்கிறார்களாமே? அப்படியா? உண்மைனா ரசிகர்கள் அட! கிரிக்கெட் ரசிகர்கள் தாங்க ;) தவிச்சு போய்டுவாங்களே :))

Buzz It

Saturday, May 10, 2008

நம்ம ஆக்ரோஷ!! ஸ்ரீசாந்த் தான் இப்படி லக்ஷ்மிராய் உடன் குளிர்ச்சி ஸ்ரீசாந்த்தாக போஸ் கொடுக்கிறார்











Buzz It

Friday, May 09, 2008

நிர்மலா தேவி மாதாஜி ..நீங்க இப்படி பண்ணலாமா "ஜி"




இந்த படத்தை பல பேர் ஏற்கனவே மின்னஞ்சலில் பார்த்து இருப்பீர்கள், இது பார்க்காதவர்களுக்காக..

தேசிய கொடிய என்ன அவங்க வீட்டுல காய போடுற துணி கொடின்னு நினைத்துட்டாங்களா?


இது உண்மையா? தெரிஞ்சவங்க சொல்லலாம்


இது உண்மைனா.. ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படலை?

மின்னஞ்சலில் தான் இது சுற்றிக்கொண்டு இருக்கிறதே தவிர இதனால் ஒரு பயனும் இல்லை. என் பங்குக்கு நானும் உங்களிடம் காண்பித்து விட்டேன்.


இதை என்னால எந்த விதத்திலும், எந்த காரணத்திற்காகவும் ஒத்துக்கொள்ள முடியாது இது உண்மை எனில் :(

Buzz It

Thursday, May 08, 2008

என் முதல் விமான பயண அனுபவம் :))


நான் கணிப்பொறி துறையில் இருந்தாலும் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைத்தது இல்லை, கணிப்பொறி துறையில் உள்ளவர்கள் பெரும்பாலானவர்கள் ஒருமுறையாவது சென்று இருப்பார்கள். நான் என் நிறுவனத்தில் இன்டெர்னல் யுனிக்ஸ் அட்மினாக இருந்ததால் அதற்கான வாய்ப்பு மிக குறைவு. இந்த இன்டெர்னல் சப்போர்ட் ல இருந்தாலே இது ஒரு பெரிய தொல்லைங்க, எங்கயும் அனுப்ப மாட்டாங்க (ப்ரோக்ராம் ல இருப்பவர்களுக்கு தான் வாய்ப்பு அதிகம்). இதனாலேயே எனக்கு விமான பயணம் அனுபவம் கிடைக்கவில்லை. அதற்கப்புறம் என்னோட குழுவில் எல்லோரும் போய்ட்டு வந்துட்டாங்க எனக்கு வாய்ப்பு கிடைக்கல. சரி நம்ம ராசி சுத்தி சுத்தி வேற அடித்ததால நானும் அதை பெருசா நினைக்கலை. சீ! இந்த பழம் புளிக்கும் :))

இதை எல்லாம் ஒரு பெரிய விசயமாக !!! கருதி துக்கம் விசாரித்தவங்க பல பேர். என்னடா இவங்க தொல்லைன்னு இருந்தாலும், எனக்கும் இந்த விமானத்துல போய் எப்படி தான் இருக்கும் என்று பார்க்க உள்ளூர ஆசை தான். போனவங்க பல பேர் மச்சான்! அது செம கடிடா என்று கூறும் போது, அனுபவம் இல்லாததால் என்னடா சும்மா சீன் போடுறாங்கன்னு நினைத்துக்கொண்டேன்.

அப்புறம் நானும் பார்த்தேன் இவங்க அனுப்புற மாதிரி தெரியல, சரி நாம பெங்களூர் வது சும்மா போய் வருவோம்னு என்னோட நண்பர்கள் இருவருடன் முடிவு செய்து பெங்களூர் விமானத்தில் செல்ல முடிவு செய்தோம். பயண சீட்டு Rs 1500.

ஒரு சனிக்கிழமை காலையில் டெக்கான் நிறுவன விமானத்தில் போக முன்பதிவு செய்தோம். வெள்ளிக்கிழமை இரவு தூக்கமே வரலை, அடுத்த நாள் விமானத்தில் போவதை நினைத்து. நேரம் போகவே மாட்டேங்குது, என்னடா இது விடியவே மாட்டேங்குதுன்னு புலம்பிட்டே அப்படியே தூங்கிட்டேன். அப்புறம் என்னோட நண்பன் எழுப்பியதும் தான் அலறி அடித்துட்டு எழுந்தேன். உடனே குளித்து தயார் ஆகி துணி எல்லாம் எடுத்து வைத்து கொண்டு குளிர் கண்ணாடி (ஒரு பந்தா வேண்டாமா) அணிந்து கொண்டு புகைப்பட கருவி எல்லாம் எடுத்துக்கொண்டு மூவரும் உள்நாட்டு விமான நிலையம் சென்று விட்டோம். உள்ளே போகும் முன்பு நினைவாக புகைப்படம் எடுத்துக்கொண்டோம் (பின்னே பெரிய சாதனை இல்லையா எங்களுக்கு) அறிவிப்பு வராததால் உள்ளே காத்திருந்தோம், அறிவிப்பு வந்ததும் அனைத்து சோதனைகளும் முடிந்து விமானம் செல்ல பேருந்தில் கூட்டி சென்றார்கள்.

எனக்கு பயங்கர ஆர்வம் ஆகி விட்டது, நேரம் நெருங்க நெருங்க. பேருந்தில் இறங்கியதும் எல்லோரும் தட தடன்னு விமானம் நோக்கி ஓட ஆரம்பிச்சுட்டாங்க, கோட் சூட் போட்டவனும் ஓடுறான், சாதாரணமான ஆளும் ஓடுறான். எங்களுக்கு ஒன்றும் புரியலை, எதுக்கு ஓடுறாங்க? பயண சீட்டு தான் கையிலே இருக்கே! இருக்கை எண் உடன், அப்புறம் எதுக்கு ஒடுறாங்கன்னு எங்களுக்கு பயங்கர குழப்பம் ஆகி விட்டது.

மேலே ஏறியதும் தான் தெரிந்தது எங்க வேண்டும் என்றாலும் உட்கார்ந்து கொள்ளலாமாம். அடபாவிகளா! இது தெரியாம போச்சேன்னு நொந்துட்டு கிடைத்த இடத்தில் உட்கார்ந்து கொண்டோம். ஏன்டா! பேருந்துல தான் இப்படின்னா விமானத்திலும் இப்படி தானா என்று செம கோபம் வந்து விட்டது. நான் ஒரு பில்டப் ல வந்தா இப்படி சொதப்பியதில் செம காண்டாகி விட்டது. இதில் 50 பேர் உட்காரலாம் அவ்வளோதான்.

என் கனவு நிறைவேறும் நேரமும் வந்தது, அறிவிப்புடன் விமானம் ஓடுதளத்தில் மெதுவாக சென்று திடீரென செம வேகத்துடன் (வேகம்னா வேகம் அப்படி ஒரு வேகம்) ஓடி மேலே பறந்தது, எனக்கு அடி வயிற்றில் ஜிவ்வுனு இருந்தது. (பெரிய விமானத்தை விட இதில் வித்யாசம் அதிகம் என்று அடுத்த முறை பெரிய விமானத்தில் சென்ற போது தெரிந்தது, அதில் இப்படி இல்லை) நான் வேற பிக்கப் தான் கேள்வி பட்டு இருக்கேன் ;) இந்த பிக்கப் மறக்க முடியாதது. இதெல்லாம் ஒரு 5 நிமிடம் தான் அதற்கப்புறம் ஒன்றுமே தெரியவில்லை, எதோ சாதாரணமா எப்போதும் போல் உட்கார்ந்து இருப்பதை போன்ற உணர்வே.

பணிப்பெண் வந்து அவசர காலத்தில் எப்படி நம்மை பாதுகாத்து கொள்வது என்று விளக்கினார்கள். அது வரை எதுவும் எனக்கு தோன்றவில்லை, இதை கேட்டவுடன் பயம் வந்து விட்டது, இப்போது பார்த்து தான் பல ஹாலிவுட் பட விமான விபத்து காட்சிகள் நினைவுக்கு வந்து என்னை பயமுறுத்தின. உள்ளூர நடுக்கம் இருந்தாலும் அதை வெளி காட்டிக்காமல் என் நண்பர்களுடன் பேசி கொண்டு இருந்தேன், பேசிட்டு ஜன்னல் பக்கம் திரும்பியதும் சிறிய விமானம் என்பதால் மூடப்படாத காத்தாடி அதி வேகமாக சுற்றியதை பார்த்து எனக்கு அடி வயிறு கலங்க ஆரம்பித்து விட்டது, எதாவது பறவை வந்து மோதி விடுமோ என்று செய்திகளில் படித்ததெல்லாம் அப்போது தான் நினைவுக்கு வந்து இம்சித்தது. பயத்தில் நான் அந்த பக்கமே திரும்பவில்லை. பணிப்பெண் சாப்பிட எதோ கொண்டு வந்தார்கள், பணம் கொடுக்க வேண்டும் என்றதால், அந்த எண்ணத்தையே கை விட்டேன். நாங்களே கஷ்டப்பட்டு விமான பயண சீட்டு வங்கி இருக்கோம், இதுல இது வேறயா...

இன்னும் சிறிது நேரத்தில் இறங்க போகிறோம் என்று அறிவித்தார்கள், என்னடா! இது அதுக்குள்ளே பெங்களூர் வந்து விட்டதா ன்னு ஆச்சர்யம் ஆகி விட்டது, 45 நிமிட பயணம் தான் சென்னையில் இருந்து. விமான இறங்கும் போது தட தடன்னு செம சத்தம் எனக்கு தூக்கி வாரி போட்டது, அய்யயோ இப்படியே ஒரேடியா மேலே கூட்டிட்டு போய்டுனுவாக போல இருக்கேன்னு பயத்துல நாக்கெல்லாம் உலர்ந்து விட்டது. ஏற்கனவே பயந்து போய் இருந்த நான், இன்னும் பயந்து விட்டேன். எனக்கு தெரிந்த எல்லா கடவுளையும் கும்பிட்டு விட்டேன். அது வரை சிரித்து கொண்டு இருந்த என் நண்பர்களும் கப் சிப் னு ஆகிட்டாங்க. சிரிப்பு போய் முகம் எல்லாம் வெளிறி விட்டது. அப்புறம் ஆடிட்டே தட தட ன்னு இறங்கி விட்டது (சிறிய விமானத்தில் இப்படி தான் இருக்கும் என்று பிறகு கூறினார்கள்), எனக்கு இறங்கியதும் தான் உயிரே வந்தது.

இந்த மாதிரி முதல் அனுபவம் எனக்கு பயத்துடன் அமைந்து விட்டது. என்னோட சிங்கப்பூர் விமான பயணத்தை என்னுடைய அடுத்த இடுகையில் கூறுகிறேன் :D

Buzz It

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் +2 தேர்வுகள் நடைபெற்றது, அதன் முடிவுகள் நாளை வெளியிடப்படுகிறது.


இந்த முறை வினாக்களை படித்து பார்க்க கூடுதலாக 10 நிமிடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருந்து இருக்கும்.


இந்த முறை கிட்டத்தட்ட 6 லட்சத்துக்கும் அதிகமான பேர் தேர்வு எழுதினார்கள். மாணவர்களின் சான்றிதல் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வு முடிவை அறிவிக்கும் முன்பே மதிப்பெண்களை திறந்து பார்க்க கூடாது என்று தேர்வு துறை எச்சரித்துள்ளது .


கீழ் கண்ட தளங்களில் நாளை முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்


http://www.tnresults.nic.in/

http://www.dge1.tn.nic.in/

http://www.dge2.tn.nic.in/

http://www.dge3.tn.nic.in/


இந்த தளங்களிலும் முயற்சி செய்து பார்க்கலாம்

http://www.maalaimalar.com/


http://www.chennaionline.com/

http://makkalmurasu.com/reg.asp

http://dinamalar.com/

இது தொடர்பான என் இடுகை

Buzz It

Wednesday, May 07, 2008

யு ட்யூப் இந்திய தளம் தொடக்கம்


யு ட்யூப் இணையத்தளம் வீடியோ பரிமாற்றத்துக்கான மிக சிறந்த ஊடகமாக கருதப்படுகிறது. தொலைக்காட்ச்சியில் தவற விட்ட நிகழ்ச்சிகளை இதில் கண்டு மகிழ முடியும். இதில் இல்லாத வீடியோ வே கிடையாது என்று கூறலாம். இந்த இணைய தளத்தின் வளர்ச்சியை கண்டு கூகிள் நிறுவனம் இதை பெரும் தொகை கொடுத்து வாங்கி கொண்டது, அதில் தன்னுடைய தொழிநுட்பத்தையும் சேர்த்து, அதை இன்னும் மேம்படுத்தி உள்ளது. இதில் தினமும் ஆயிரக்கணக்கான நிகழ்வு படங்கள் அனைவராலும் ஏற்றப்படுகிறது.


இதன் வளர்ச்சியின் அடுத்த பகுதியாக, யு ட்யூப் இந்தியாவிற்கான தனி தளத்தை தொடங்கி உள்ளது. நம்மை பற்றிய நிகழ்வுகளை இதில் எளிதாக காணலாம்.


பல தனியார் நிறுவனங்களிடம் இருந்து வீடியோ க்களை பெற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து பெறப்படும் படங்களை இதில் காணலாம். இந்த புதிய பகுதியால் மட்டுமே இதை காண முடியும் என்று இல்லை, அனைத்து தளங்களிலும் காணலாம். ஆனால் இந்த தளத்தில் சென்றால் நம்மை சார்ந்த வீடியோ க்களை எளிதில் கண்டு பிடிக்க முடியும்.


புதிய தளத்தின் முகவரி http://in.youtube.com/

Buzz It

Tuesday, May 06, 2008

"சூர்யா" வா இது !!! என்னங்க இப்படி தாறுமாறா இருக்காரு ...(படங்கள்)






Buzz It

தசாவதாரம் இந்துக்கள் மனதை புண்படுத்தும் படமல்ல - ஆஸ்கார் ரவிச்சந்திரன்

தசாவதாரம் படம் இந்து கடவுள்களை இழிவுபடுத்துவதாக கூறி, அவ்வாறு காட்சிகள் இருந்தால் படத்தை வெளியிட விடமாட்டோம் மற்றும் திரை அரங்கு முன்பு ஆர்பாட்டம் செய்வோம் என்று ராமகோபாலன் கூறி இருந்தார்.


தசாவதாரம் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் "இப்படம் நாத்திகனை ஆத்திகன் ஆக்கும் படம், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட இந்த படத்தை பார்த்தால் கடவுளை நம்பி வணங்குவார்கள். பட வெளியீட்டுக்கு பின்பு குங்குமம் வைத்து இருப்பவர்கள் பலரை காண முடியும். எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம், 24 மணி நேரமும் !!! பக்தி உணர்வோடு தான் இருப்பேன். இந்துக்கள் மனதை இப்படம் புண்படுத்தாது, கடவுள் நம்பிக்கையை தூண்டும் படமாக இருக்கும்" என்று கூறி உள்ளார்.


எனக்கு இப்ப ஒரு சந்தேகம் வந்து விட்டது, இவர் "இப்படம் நாத்திகனை ஆத்திகன் ஆக்கும் படம்" என்று கூறி விட்டார். இப்ப "தி க" காரங்க இதை நாங்க அனுமதிக்க முடியாது இது கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை அவமதிக்கும் படி உள்ளது என்று போராட்டம் எதுவும் ஆரம்பித்து விடுவார்களா?


யப்பா சீக்கிரம் படத்தை வெளியிடுங்க.. இல்லேன்னா உங்களை ஒரு வழி ஆக்கிடுவாங்க...

Buzz It

Monday, May 05, 2008

இதற்கு பெயர் தான் இனிப்பான உதடுகளா?


எப்படி தான் இப்படி எல்லாம் யோசிக்கறாங்களோ?


நானும் ஒன்று யோசித்தேன் ஆனா அதை சொல்ல மாட்டேன்! :D

Buzz It

Saturday, May 03, 2008

சுவாரஸ்யம் இல்லாத "குருவி" - திரை விமர்சனம்

நேற்று முன்தினம் என் நண்பர் விஜய் ரசிகர் "குருவி" படத்திற்கு முன்பதிவு செய்கிறேன் நீங்கள் வருகிறீர்களா? என்ற கேட்ட போது, நான் சிங்கப்பூர் வந்து 8 மாதங்களாகியும் இன்னும் இங்கு தமிழ் படம் திரை அரங்கு சென்று பார்க்கவில்லை, தசாவதாரம் தான் முதல் படமாக பார்க்க வேண்டும் என்று முடிவோடு இருந்தேன், ஆனால் படம் பொங்கலுக்கே வருவதாக கூறி இன்னும் வெளியீட்டு தேதி அறிவிக்காததால் இதை நம்பி இருக்க முடியாது என்று கேட்டவுடன் சரி என்று கூறி விட்டேன்.


இன்று யிஷுன் கோல்டன் வில்லேஜ் திரை அரங்கில் 10 வெள்ளி மதிப்புள்ள அனுமதி சீட்டுடன் முன்பே சென்று விட்டோம். அமர்ந்து இருந்தவர்கள் அனைவரும் நம்மவர்கள் என்பதால் நம்ம ஊரில் பார்க்கும் உணர்வே இருந்தது.


பின்னால் அமர்ந்து இருந்த குழுவினர் படம் ஆரம்பித்தவுடன் விசில் அடித்து அதிர வைத்துக்கொண்டு இருந்தார்கள். சரி விஜயின் தீவிர ரசிகர்கள் போல் உள்ளது இன்று படம் பார்த்த மாதிரி தான் என்று நினைத்து நொந்து பார்க்க ஆரம்பித்தேன். பின்னர் தான் தெரிந்தது விஜயை கிண்டல் செய்யவே அப்படி கத்தினார்கள் என்று.


கதை என்னவென்றால் விஜயின் அப்பா மணிவண்ணன் ஆந்த்ரா மாநிலத்தில் ஒரு கல் உடைக்கும் குவாரியில் கல் உடைக்கும் போது அதில் வைரம் இருப்பதை கண்டு அரசுக்கு சொல்ல முயற்சிக்க அதை வில்லன் கும்பல் சுமன் ஆஷிஷ் வித்யார்தி அவர்களை அடிமையாக்கி வெளியுலகிற்கு தெரியாமல் அடைத்து வைத்து அவர்களை வேலை வாங்குகிறார்கள், அதோடு அந்த வைரத்தை விற்று கோடிகளில் சம்பாதிக்கிறார்கள் இதை விஜய் எப்படி கண்டுபிடித்து மனிவண்ணனையும் அவரோடு அடிமைகளாக இருப்பவர்களையும் மீட்கிறார் என்பதே கதை.


எனக்கு இந்த படத்தின் பாடல் "டண்டனக்க டர்ணா" கேட்டவுடன் நினைவுக்கு வந்தது நம்ம தலைவர் "பாபா" பட பாடல் "புர்ர்ர்ர்ர்ர்ர் பாபா சினிமா சினிமா தான், அதில் இந்த பாடல் வந்த போதே பலரும் கிண்டல் செய்ய படமும் அதற்கு தகுந்த மாதிரி மொக்கயாய் இருக்க படம் ஊத்திக்கொண்டது, எனக்கு இப்போது இந்த பாடலை கேட்டதும் சரி இந்த படமும் என்னவோ ஆக போகிறது என்று எனக்கு தோன்றியது, அதே போல படமும் சொதப்பி விட்டது. என்னடா இது இன்னும் ஆரம்பிக்கவே இல்லை அதுக்குள்ள முடிவ சொல்றான்னு பார்க்கறிங்களா? உங்களை ஏமாற்ற வேண்டாம் என்றே முன்னரே கூறி விட்டேன் மற்றும் எனக்கு தனிப்பட்ட கோபம் எதுவும் விஜயின் மீது கிடையாது, ஒரே மாதிரி நடித்துக்கொண்டு இருக்கிறார் என்பதை தவிர்த்து.


எடுத்தவுடன் கார் பந்தயம் போன்ற காட்சி, அனைவரும் காரில் இருந்து விஜய் வரப்போகிறார் என்று விசில் அடித்து உற்சாகமாக இருக்க, வெளியே வருவது விவேக், ரசிகர்கள் ஏமாற்றமாக, வந்த விவேக் விஜய் வருவதை பற்றி ஒரு பில்ட் அப் கொடுக்க, விஜய் வேறு இடத்தில், மூடி இருந்த தொட்டி விலகி அதில் இருந்து விஜய் தண்ணீருடன் பீச்சியடிக்க மேலே வருகிறார், யாருமே அதை ஒரு பரபரப்புடன் எதிர்பார்க்காததால் அவருடைய தொடக்க காட்சி சப்பென்று அமைந்த விட்டது. அதற்கு விவேக் அறிமுக காட்சியே சிறப்பாக இருந்தது. விஜயின் அறிமுக காட்சி இவ்வளவு சப்பென்று வந்ததை நீண்ட படங்களுக்கு பிறகு இப்போது தான் பார்க்கிறேன்.


பிறகு விஜய் தன்னுடைய ஓட்டை காருடன் (கிண்டல் செய்யவில்லை உண்மையிலேயே டப்பா கார் தான்) போட்டியில் கலந்து கொள்கிறார். அனைத்து கார்களும் கலக்கலாக இருக்க விஜயின் கார் மட்டும் காயலான் கடை கார் மாதிரி இருக்கிறது, அனைவரும் அதை கிண்டல் செய்ய விஜய் மௌனமாக அஜித் மாதிரி போட்டி உடையில் போஸ் கொடுக்கிறார் (அஜித்தை மனதில் வைத்து தான் என்று நினைக்கிறேன்) பின்னர் போட்டி ஆரம்பமாகி கார்கள் ஓட துவங்குகின்றன விஜயின் கார் பாகங்கள் ஒவ்வொன்றாக கழன்று கொள்ள, விடாமல் காரை ஓட்டுகிறார், பேனட்,கதவு,பம்பர் என்று எல்லாமே கழண்டு விடுகிறது, கடைசியில் விசை மிதியும் உடைந்து போக அனைவரும் சிரிக்கிறார்கள், உடனே விஜய் அறுந்து போன கேபிளை வாயில் கடித்து இழுத்து வேகத்தை கூட்டி பறந்து சென்று (உணமையாகவே) முதலிடம் பிடிக்கிறார். பின்னர் போட்டியில கலந்துக்கிறது முக்கியம் இல்ல யாரு ஜெயிக்கறாங்க என்பது தான் முக்கியம் என்று யாருக்கோ சவால் விடுகிறார்.


அப்பாவின் பணத்தை வாங்க மலேசியா செல்லும் விஜய் சுமனின் தங்கை த்ரிஷாவை சந்திக்கிறார் புதுவருட நேரத்தில் கண்ணை கட்டிக்கொண்டு Mask of Zorro போல . முதல் பாதியில் விஜய் ஒரு ஸ்பைடர் மேன் ஆகவே இருக்கிறார், பாதி நேரம் பறந்து கொண்டே இருக்கிறார், த்ரிஷா கீழே விழும் போது ரொம்ப ரொம்ப உயரமான கட்டிடம் பறந்து சென்று பிடித்து கயிறு மூலம் காப்பாற்றுகிறார் ஆனாலும் திரிஷா தண்ணீரில் விழுந்து விடுகிறார், விஜய் கண்ணை கட்டி கொண்டு இருந்ததால் அவரை கண்டு பிடிக்க சென்னை வருகிறார். அவருக்கு வேலை விஜய் யை துரத்துவது மட்டுமே. த்ரிஷா அழகாக இருக்கிறார், இந்த படத்தில் இடுப்பு சுளுக்கு ஏற்பட்டு அதற்கு எண்ணை தடவும் இடத்தில் என்னை போல் ரசிகர்களை கிறங்கடித்து கிளுகிளுப்பு மூட்டுகிறார். என்னமோ போங்க! என் மனசு என்கிட்டே இல்ல :( எனக்கு படத்தில் இந்த காட்சி மட்டுமே திருப்தி ஆனது ;) விஜய் ரசிகர்கள் மன்னிக்க.


படத்தில் அனைவரும் விஜயை மாறி மாறி சுடுகிறார்கள் ஆனால் வேகமாக வரும் துப்பாக்கி குண்டை விட வேகமாக ஒதுங்கி தப்பித்துக்கொள்கிறார். சில குண்டுகள் அவரை தவிர மற்ற இடங்களில் துளைக்கிறது.


இவை எல்லாவற்றையும் விட கொடுமை ரசிகர்களே நொந்து போனது இந்த காட்சி தான், விஜயை வில்லன்கள் துரத்தி வர அவர் ஓடி ஓடி மொட்டை மாடிக்கே வந்து விடுவார் அதற்கு பிறகு ஓட முடியாது வில்லன்கள் வேறு வந்து விடுவார்கள், தப்பிக்க என்ன வழி என்று பார்ப்பார் நமக்கு ஒன்றும் வழியில்லை என்று தோன்றுகிறது, விஜய் மேலே பருந்தை பார்க்கிறார் அல்லது கடவுளை பார்க்கிறாரா என்று சரியாக தெரியவில்லை, எதோ ஏடாகூடமாக நடக்க போகிறது என்று பார்த்தால் விஜய் அங்கே மாடியில் இருந்து தாவி சம்பந்தமே இல்லாத தூரத்தில் இருக்கும் மெட்ரோ ரயில் பாலத்திற்கு பறந்து தாவி பிடித்துக்கொள்கிறார். வில்லன்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறார்கள். பின்னர் அதோடு நிற்காமல் பாலத்திலேயே ரயிலுக்கு இணையாக ஓடி ரயிலை பிடித்து ஏறி, அங்கே இருந்து வில்லன்களை பார்த்து விரலால் சுடுகிறார் அதோடு இடைவேளை. இப்படி ஒரு இடத்திலா இடைவேளை போட வேண்டும், அனைவரும் கிண்டல் செய்ய வசதியாக போய் விட்டது முன் வரிசையில் இருந்தவர் நான் கூட நேரா ரயிலுக்கு உள்ளேயே தாவி விடுவார் என்று நினைத்தேன் என்று கிண்டல் செய்ய அனைவரும் சிரித்து விட்டார்கள்.


இடைவேளை வரை, படத்தை ஓரளவிற்காவது காப்பாற்றுவது விவேக் தான், இல்லை என்றால் ரொம்ப கடுப்பாகி இருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து.


இடைவேளைக்கு பிறகு முழுவதும் ஆந்த்ரா கடப்பாவில் நடப்பதையே காட்டுகிறார்கள்,நமக்கும் வறண்ட இடத்தையே பார்த்து சலிப்பாகி விடுகிறது. இடையில் த்ரிஷா பாடலில் வந்து ஜில் சேர்க்கிறார். இதில் பலானது மற்றும் மொழு மொழுன்னு யம்மா யம்மா பாடலும் என்னவோ போல் உள்ளது கேட்க, விஜய் தனக்கு பெண் ரசிகைகளும் குழந்தை ரசிகர்களும் அதிகம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இந்த மாதிரி பாடல் வரிகளை தவிர்க்க வேண்டும். மொழு மொழுன்னு யம்மா யம்மா பாடலின் போது ஒருத்தர் ஏடா கூடமாக கிண்டல் செய்தார். த்ரிஷாவும் பாடலுக்கு தகுந்த மாதிரி இருக்கிறார் அழகாக.


படையப்பாவில் ரஜினி மேலாடை இல்லாமல் சண்டை போடுவார் அப்போது அப்பாஸ் 'What a man" என்று சொல்வார், அதை பார்த்தே அனைவரும் தலைவரை கிண்டல் செய்தார்கள், இதில் விஜயும் அப்படி ஒரு போஸ் கொடுக்கிறார், நல்ல வேளை பனியனுடன்.


இடைவேளைக்கு பிறகு விவேக் இல்லை, படமும் வறட்சியாக போகிறது, திரிஷாவை தவிர்த்து. விஜய் வழக்கம் போல ஆட்டத்தில் பட்டய கிளப்புகிறார். நளினமான மற்றும் வேக ஆட்டத்தில் நான் தான் ராஜா என்பதை கூறாமல் ஆட்டத்தில் காட்டுகிறார். கடைசியில் அனைவரையும் கொன்று !! தன் அப்பாவையும் உடன் அடிமைகளாக இருக்கும் அனைவரையும் காப்பாற்றுகிறார் என்பதே முடிவு.


கில்லி என்று தாறுமாறான விறுவிறுப்பான படத்தை கொடுத்த இயக்குனர் தான் இதை இயக்கினார் என்று கூறினால் நம்ப முடியவில்லை. விஜய் இனிமேல் இதை போல் நம்ப முடியாத காட்சிகளில் நடிப்பதை நிறுத்த வேண்டும், இப்பொழுதெல்லாம் மக்கள் அதை ரசிப்பதில்லை கிண்டல் தான் செய்கிறார்கள் என்பதை உணர வேண்டும். இப்ப தொலைக்காட்சியில் எந்த குழந்தையை கேட்டாலும் விஜய் தான் பிடிக்கும் என்று கூறுகிறார்கள். அதிக குழந்தை ரசிகர்களை கொண்டுள்ள விஜய் வன்முறை காட்சிகளை குறைத்து நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம்.


முடிவாக குருவி எப்படி உள்ளது என்றால் விஜய் பாடல் தான் நினைவுக்கு வருகிறது "டண்டனக்க டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னா"

Buzz It

Friday, May 02, 2008

"கரகாட்டக்காரன்" திரைப்படம் ஒரு தாமத விமர்சனம் !!


இன்று அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் பார்த்தால் சன் தொலைக்காட்சியில் "கரகாட்டக்காரன்" படம் போட்டு இருந்தாங்க, சிங்கையில் எப்போதும் ஒரு வாரம் கழித்து தான் வரும் என்பதால் இன்று தான் போட்டு இருந்தார்கள்.


படம் வந்து பல வருஷம் ஆச்சே இப்போ என்னையா விமர்சனம் பண்ண போறேன்னு கேட்கறிங்களா? அப்போ வாய்ப்பு கிடைக்கல இப்ப வலை தளம் இருக்கு அது தான் ;). நான் கதையை விமர்சனம் செய்யப்போவது இல்லை. அதில் நான் மிக ரசித்த காட்சிகளை மட்டும் குறிப்பாக நம்ம கவுண்டர் செந்தில் நகைச்சுவை.


நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த படம் பார்த்ததால் ரொம்ப நேரம் மனம் விட்டு சிரித்து கொண்டு இருந்தேன், நான் கவுண்டரின் தீவிர ரசிகன் வேறு (உள்ளத்தை அள்ளித்தா படம் வரை மட்டுமே) என்பதால் சிரித்து வயிறே வலி ஆகி விட்டது.


ராமராஜன் கூட்டணியினர் கரகாட்டம் ஆடிக்கொண்டு இருக்கும் போது ஒருத்தர் செந்திலையும் கோவை சரளாவையும் பார்த்து அடடா! இவங்களை பார்த்தால் தில்லானா மோகனாம்பாள் சிவாஜி பத்மினி மாதிரியே இருக்கு என்று கூற கவுண்டர் கோபமாகி டேய்! நீ எதை வைத்து இந்த மூஞ்சியை பார்த்து அப்படி சொன்னே என்று அடிக்க கை ஓங்கவும், அவர் அய்யா இவர் தான் 10 ருபாய் கொடுத்து அப்படி சொல்ல சொன்னாரு என்று கூற.. டேய் ஏன்டா இப்படி? என்று கேட்டவுடன் செந்தில் "ஒரு விளம்பரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்று இழுக்க ஏன்டா அந்த சினிமா காரங்க தான் இப்படி அவங்களே போஸ்டர் அடித்து ஒட்டி கொள்கிற மாதிரி ஏன்டா பண்ணுறேன்னு சொன்னதும் செந்தில் பாவமாக முகத்தை வைத்து கொள்வார், உடனே கவுண்டர் பாரு திருவிழாவில காணாம போனவன் மாதிரி முழிக்கிறதன்னு கலாய்க்க செம காமெடி.


இவர்கள் அனைவரும் சிறப்பாக ஆடுவதை பார்த்து கனகாவின் அப்பா "ரொம்ப நல்ல ஆடுனிங்க தம்பி" னு அடி மனதில் இருந்து கூறுவார். அது மனதார கூறுவது போல சிறப்பாக இருக்கும். என் மனதில் அவருடைய நடிப்பு பதிந்து விட்டது.


இவர்கள் அனைவரும் காலைக்கடனை முடிக்க ஊர்பக்கம் ஒதுங்க செந்தில் எங்கேன்ன போறோம் என்றதும் ம்ம்ம் கம்ப்யூட்டர் கத்துக்கன்னு கலாய்ப்பதும், தோட்டக்காரர் டேய்! யாருடா அது அங்கே அசிங்கம் பண்ணுறதுன்னு திட்டியதும் கவுண்டர் விவசாயம் பண்ணினால் போதுமா? யாரு உரம் போடுவது என்று நக்கலடிக்க, செந்தில் அய்யா! ஆனது ஆச்சு இன்னும் கொஞ்சம் என்று இழுக்க அவர் அடிக்க ஓடி வர சிரித்து கண் கலங்கி விட்டது.


கனகாவின் அப்பா ராமராஜனை பாராட்டி மாலை போட்டு விட்டு செல்ல கவுண்டர் உடன் வைத்து இருப்பவர் வைத்து இருக்கும் மாலை தனக்கு என்று எண்ணி அவரிடம் அய்யா! அந்த மாலை என்று இழுக்க, அவர் இது சாமிக்குங்க என்று கூற மூக்குடைப்பட்ட கவுண்டர் சரி சரி சாமிக்கே போடுங்க என்று சமாளிப்பார் :)))


கவுண்டர் மிகவும் ரசித்து வாசித்து கொண்டு இருக்கும் போது அருகில் செந்தில் குறட்டை விட்டு தூங்கி கொண்டு இருப்பார், கவுண்டர் கோபமாகி டேய்! இங்க ஒருத்தன் கஷ்டப்பட்டு வாசிக்கிறேன் நீ தூங்கிட்டு இருக்கியான்னு திட்டுவார், செந்தில் அண்ணே! எனக்கு எது பிடிக்கலையோ நான் உடனே தூங்கிவிடுவேன் என்று கூற கவுண்டர் கோபமாகி கண்ட படி திட்டுவார், செந்தில் அதை கண்டு கொள்ளாமல் அண்ணே! தூக்கம் வருது வாசிங்கன்னே என்று இன்னும் வெறுப்பேத்த, கவுண்டர் கோபத்தின் உச்சிக்கே செல்வது எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காதது.


ராமராஜன் கவுண்டர் செந்தில் ஆகியோர் கனகாவின் வீட்டுக்கு செல்ல அங்கே கனகா ராமராஜனுக்கு மோர் கொடுக்க, கனகா கோபத்தில் இருப்பதை பார்த்து ராமராஜன் என்ன மோர் சூடா இருக்கு? என்று இரட்டை அர்த்தத்தில் கூற அதுக்கு பதிலடியாக கனகா ஆங்! நேத்து முழுவதும் மாடு வெய்யில் நின்னுட்டு இருந்தது என்று கிராமத்து நக்கலாக கூறுவது ரசிக்கும் படி இருக்கும்.


ராமராஜன் குழுவினர் அனைவரும் ஊருக்கு அவங்க டப்பா காரில் கிளம்ப கனகாவின் அப்பா, தம்பி! பார்த்து மெதுவா போங்க என்று கூற, செந்தில் நீங்க சொல்லலைனாலும் கார் மெதுவாக தான் போகும் ஏன்னா..... என்று ஆரம்பிக்க கவுண்டர் அவரை அடித்து அடக்க, என் சிரிப்பை அடக்க முடியவில்லை.


வாழைப்பழம் அனுபவத்தால் கவுண்டர் எதையும் செந்திலிடம் கூறாமல் இருக்க, செந்தில் அவரிடம் வெத்தலை பாக்கு வாங்க கேட்க, யப்பா! ஒருமுறை பட்டதே போதும் இனி வேண்டாம்டா சாமி என்று ஒதுங்க, செந்தில் கவுண்டரிடம் அண்ணே! நான் திருந்த ஒரு சந்தர்ப்பம் கொடுக்க கூடாதா என்று அப்பாவியாய்!!! கேட்கும் இடம் ரசிக்கும் படி இருக்கும்.


இவர்களின் காரை பார்க்கும் போதெல்லாம் ஒருவர் ஈயம் பித்தளைக்கு பேரிச்சம் பழம் என்று அருகில் வர, கோபமான கவுண்டர் இனி இந்த பக்கம் வந்தே தொலைந்தாய் என்று மிரட்ட, அதுக்கு அவர் அண்ணே நான் வியாபாரின்னே என்று கூற ஆமாம்! இவர் பெரிய கப்பல் வியாபாரி என்று கலாயக்க, செந்தில் அண்ணே! அண்ணே! பேரிச்சம் பழம் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சுன்னே என்று சப்பு கொட்ட கோபத்தின் உச்சிக்கே செல்வது நம்மை சிரிப்பின் உச்சிக்கே அழைத்து சென்று விடுகிறது. அண்ணே! நீங்க போங்கண்ணே நான் காரை பார்த்துக்குறேன் என்று காரை தடவி கொண்டே செந்தில் கூற எதுக்கு இவனுக்கு போட்டு பேரிச்சம் பழம் வாங்கவா என்று கூறுவது காமெடி யின் உச்சம்.


இந்த படத்தின் வெற்றிக்கு இளையராஜா வின் இசை முக்கியம் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த மான் பாடலும் குடகு மலை பாடலும் நம்மை எங்கோ கொண்டு சென்று விடுகிறது. மாங்குயிலே பாடல் அனைவரையும் கட்டி போட்டு விடுகிறது. ராமராஜன் தன் பங்குக்கு அட்டகாசமாக கரகாட்டம் ஆடி நம்மை ஆச்சர்யபடுத்துகிறார். கனகாவின் நடிப்பும் சிறப்பான நடிப்பு (கனகாவை எங்க ஊர் கோபிசெட்டிபாளையத்தில் கோவில் காளை படத்திற்காக வந்த போது ஒப்பனை இல்லாமல் பார்த்து நான் அதிர்ச்சி அடைந்த தருணங்கள் உண்டு)


ஒட்டு மொத்தத்தில் எந்த ஒரு ஆடம்பரம் மற்றும் பிரம்மாண்டமும் இல்லாமல் எளிமையான எழுத்து நடையில் சிறப்பான நகைச்சுவையின் மூலம் வெளிவந்த ஒரு சிறப்பான படம் இது. எந்த காலத்திலும் இதை ரசிக்கும் படி உள்ளதே இதன் பெருமைக்கு சான்று.

Buzz It

மல்லிகா ஷெராவத் உடை பிரச்சனை + தசவாதாரம் சிலை பிரச்சனை



என்னடா இது! இன்னும் மல்லிகா ஷெராவத் உடையை பிரச்சனை ஆக்காமல் இருக்கிறார்களே என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். அதெல்லாம் விட்டுடுவோமா, அதுக்குள்ளே எங்களை பற்றி வேறு முடிவுக்கு வந்தால் எப்படி என்று இந்து மக்கள் கட்சி யில் இருந்து கனிராஜன் ஒரு வழக்கை பதிவு செய்து விட்டார்.


"நான் இந்து மக்கள் கட்சியின் தென்சென்னை மாவட்ட அமைப்புச் செயலாளராக இருக்கிறேன். தேச நலனுக்காகவும், கலாச்சார நெறிமுறைக்காகவும் இந்த அமைப்பு பாடுபடுகிறது. கடந்த ஏப்ரல் 25-ந் தேதி ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கும் தசாவதாரம் சினிமாவின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.


இந்த விழாவில் முதல்-அமைச்சர் கருணாநிதி, ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். குடும்பப் பெண்கள், இளைஞர்கள் மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் நாகரீகமாக உடையணிந்தபடி வந்திருந்தனர்.ஆனால் மல்லிகா ஷெராவத் என்ற இந்தி நடிகை தமிழ் கலாசாரத்தை மீறி, தமிழக மக்களின் மனதை புண்படுத்தும் நோக்கத்தில் அரைகுறை ஆடையணிந்து, அதாவது குட்டை பாவாடை அணிந்து வந்திருந்தார். இதனால் தமிழ் பண்பாளர்கள் பலர் முகம் !!! சுளித்தனர்.


முதல்-அமைச்சர் எதிரில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்து அவமரியாதை செய்தது மட்டுமல்லாமல், ஆபாசமாக அறுவருக்கத் தக்க சேஷ்டைகளையும் (அப்படியா!!!) செய்தார். இதை டி.வி., பத்திரிகைகளில் பார்த்து மனம் புண்பட்டு விட்டது!!!!. தமிழ் கலாச்சாரத்தில் பற்று உள்ளவர்களுக்கு இது மன வேதனையையும் அவமானத்தையும் அளித்தது. கீழ்த்தரமான எண்ணங்களை உண்டு பண்ணும் வகையில் அவரது உடை அமைந்திருந்தது" இவ்வாறு அவருடைய புகாரில் கூறி இருக்கிறார்.


நாட்டுல எத்தனையோ பிரச்சனை மற்றும் தீர்க்கப்படாத வழக்குகள் இருக்க இப்ப இது ரொம்ப முக்கியமா? என்ன கொடுமை சார் இது?


நல்ல வேளை ஜாக்கி சான் ஆணாக போய் விட்டார், இல்லை என்றால் அவரும் உடை சரியாக அணியவில்லை என்று வழக்கு பதிவு செய்து இருப்பார்கள்.


கொசுறு தகவல்


கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமலஹாசன் 10 வேடங்களில் நடிக்கும் தசாவதாரம் சினிமாவில் சைவ, வைணவ சமயங்களுக்கு இடையே 16-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட மோதலை காட்சியாக்கி இருக்கிறார்கள். அப்போது இந்து கடவுள்களின் சிலைகளை சேதப்படுத்துவது போன்ற சர்ச்சைக்குரிய காட்சியையும் அவர்கள் சேர்த்திருப்பதாக தெரிகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.


சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் இந்த படத்தை வெளியிட விடமாட்டோம். தியேட்டர் முன்பு போராட்டம் நடத்துவோம் என்று விசுவ இந்து பரிஷத் தலைவர் வேதாந்தம் கூறியுள்ளார்.


ஸ்ஸூ இப்பவே கண்ணை கட்டுதே! முடியல!!

Buzz It

Thursday, May 01, 2008

தடுப்பூசி பலி தொடர்கிறது (படம்) - அரசு என்ன செய்கிறது?




திருவள்ளூரில் தடுப்பூசி போடப்பட்ட 4 குழந்தைகள் இறந்து விட்டது, இதன் பிறகு சென்னை மற்றும் சில இடங்களில் இதே போல நடந்து குழந்தைகள் பலியாகின. இந்த சோகமே இன்னும் முடியாத நிலையில் காட்டு மன்னார் கோவில் அருகே ஒரு குழந்தைக்கு போடப்பட்ட தடுப்பூசியால் அந்த குழந்தை இறந்தது.



இன்று இறந்து போன குழந்தை யின் தாய் தன்னுடைய குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டும் என்றாலும், தற்போது 4 குழந்தைகள் பலி ஆனதால், பயந்து தன்னுடைய குழந்தைக்கு தடுப்பூசி போடாமல் இருந்தார், ஆனால் மருத்துவமனை ஊழியர்கள் ஒன்றும் பயம் இல்லை, தைரியமாக வந்து ஊசி போடுங்கள் என்று கூறியதால் சென்று தன் குழந்தைக்கு ஊசி போட்டு வந்தார், பகல் முழுவதும் நன்றாக இருந்த குழந்தை இரவு இறந்து விட்டது என்று கூறி அழுதார்.



என்னதான் நடக்குது இங்கே? குழந்தைகள் உயிருடன் இவ்வளவு மட்டமாகவா விளையாடுவது. அரசு என்ன செய்து கொண்டு இருக்கிறது? சுகாதார துறை அமைச்சர் அன்புமணி என்ன நடவடிக்கை எடுத்துக்கொண்டு இருக்கிறார் என்று தெரியவில்லை. சம்பந்த பட்டவர்கள் அனைவரும் அடுத்தவரை கை காட்டி கொண்டு இருக்கிறார்கள்.ஒரு குழந்தை கிடைக்க அனைவரும் தவம் செய்து கொண்டு இருக்கையில் இந்த மாதிரி கவனக்குறைவால் தன் குழந்தைகளை இழக்கும் பெற்றோருக்கு என்ன சமாதானம் சொல்வது?



இதற்க்கு யாருடைய கவனக்குறைவு காரணம் என்றாலும், குழந்தைகளின் உயிரோடு விளையாடும் இவர்களுக்கு யாராகினும் கடும் தண்டனை கொடுத்தாக வேண்டும். விசாரணை நடத்துறேன்னு சொல்லுறாங்க... என்ன நடத்தி என்னங்க பண்ணறது போன உயிர் திரும்ப வருமா? இவங்க விசாரணையை இவங்க தான் மெச்சிக்கணும்.

Buzz It

மரக்கன்று நடும் விழாவும்! அரசியல்வாதிகளும்!



இன்று செய்தியில் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்று நடப்போவதாக அவரது ரசிகர்கள் கூறியுள்ளதை பார்த்ததும் எனக்கு தோன்றிய எண்ணங்கள். தற்போது எதற்கெடுத்தாலும், மரக்கன்று நடுவது ஒரு விளம்பரம் ஆகி விட்டது. அட! மரக்கன்று நடுவது என்பது நல்ல விஷயம் தானே! அதில் என்ன குறை கண்டீர்கள்? என்று கேட்கிறீர்களா?



மரக்கன்று நடுவதையும் மற்றவர்களுக்கு உணவு கொடுப்பதையும் விட சிறப்பான சேவை எதுவும் இல்லை என்பது என் கருத்து. இவர்கள் பணி மரக்கன்று நடுவதொடு நின்று விடுகிறது, நற்றால் மட்டும் போதுமா? யார் அதை பராமரிப்பது? இவர்கள் பாட்டுக்கு மரக்கன்று நற்று விட்டு சென்று விடுகிறார்கள், தண்ணீர் ஊற்றுவது கிடையாது, வேலி அமைத்து அதை பாதுகாப்பது கிடையாது. அப்புறம் எதுக்குங்க இது மாதிரி செய்கிறார்கள்? ஒரு வாரம் சென்ற பிறகு பார்த்தால் அந்த இடத்தில் நற்ற செடியின் காய்ந்து போன குச்சி மட்டுமே இருக்கும். இதை பார்க்கும் போது நமக்கு மனது கனத்து போய் விடுகிறது.



தற்போது 100000, 500000 மரக்கன்றுகளை நடுவது அரசியல்வாதிகளுக்கும் மற்றும் அரசுக்கும் ஒரு நாகரிகம் மற்றும் பெருமை ஆகி உள்ளது. இவர்கள் நடும் செடியில் 100 ல் 5 செடி வந்தாலே பெரிய விஷயம், இதை நான் மிகைப்படுத்தி கூறவில்லை, இவற்றை நான் கவனித்து கொண்டு தான் வருகிறேன். ஒரு சில இடங்களில் மட்டுமே பராமரிக்கிறார்கள். சரி இவர்கள் தான் இப்படி என்றால் "ஈஷா" யோகம் என்ற நிறுவனத்தார் எங்கள் ஊரில் அனைத்து இடங்களிலும் செடிகளை நட்றார்கள். பாதுகாப்புக்காக அதை சுற்றி குச்சி கட்டி வைத்து இருந்தார்கள். இப்போது உள்ளே இருந்த செடி கருகி விட்டது, அதை சுற்றி வைத்த குச்சிகள் மட்டுமே தழைத்துள்ளன. இவர்களே இப்படி செய்யும் போது மற்றவர்களை என்ன வென்று சொல்வது? மொத்தத்தில் நானும் செடி நடுகிறேன் என்று பெருமை பீத்தவே இவர்கள் செடி நற்று கொண்டு இருக்கிறார்கள்.



எனக்கு மரம் வளர்ப்பதிலும் இயற்கையை பாதுகாப்பதிலும் (என்னால் முடிந்தவரை) மிகுந்த ஆர்வம் உண்டு, அதை செய்து கொண்டும் இருக்கிறேன். சரி இவர்கள் செய்வது ஒரு சிலருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் மற்றும் இவர்கள் நடுவதில் ஒரு 10 செடியாவது வளராதா என்ற நம்பிக்கையில் இதை எல்லாம் சகித்துக்கொள்ள வேண்டி உள்ளது. நடும் செடி 10 ஆக இருந்தாலும் அதை ஒழுங்காக பராமரித்தாலே போதும் என்பது என் தனிப்பட்ட கருத்து.

Buzz It