Monday, March 31, 2008

பெங்களூர் ல் தமிழ் திரை அரங்குகள் தாக்கப்பட்டது


கலைஞர் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் பற்றிய பிரச்சனை குறித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பெங்களூர் ல் வன்முறை ஏற்பட்டது. தமிழ் திரைப்படங்கள் ஓடிய நடராஜ் மற்றும் விநாயக் திரை அரங்குகள் சூறையாடப்பட்டது. அருகில் இருந்த தமிழர் கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டது.



என்ன பிரச்சனை என்றாலும் தமிழ் படங்கள் ஓடும் திரை அரங்குகள் தாக்கப்படுவது தொடர்கதையாகி விட்டது. தமிழ் மற்றும் ஹிந்தி படங்களே அங்கே ஓடுகின்றன. இவர்கள் எடுக்கும் படத்தை இவர்களே பார்ப்பது இல்லை, இதனால் இது போன்ற சமயங்களில் தங்கள் ஆத்திரத்தை தீர்த்து கொள்கிறார்கள்.



இந்த காவேரி தண்ணீரை வைத்துட்டு இவங்க பண்ணுற ஆட்டம் ....என்னமோ போங்க வயிறு எரியுது.. பாவம் அங்கே இருக்கிற தமிழர்கள் எல்லாம் உயிரை கையில பிடித்துட்டு இருப்பாங்க, இனி என்ன நடக்குமோன்னு. தமிழ் நாடு பதிவு எண்ணை கொண்ட வாகனத்தை எடுக்கவே இனி பயமா இருக்கும். எந்த சந்துல இருந்து எவன் வந்து அடிக்க போறானோன்னு பயந்துட்டே போகணும். கர்நாடகாவில் இருக்கும் தமிழர்கள் உண்மையிலேயே ரொம்ப பாவம் குறிப்பாக பெங்களூர்.



கலைஞர் எனக்கு தெரிந்து ரொம்ப நாகரிகமா தான் கூறி இருந்தார், அதற்கே இவங்க இந்த அட்டகாசம் பண்ணிட்டு இருக்காங்க. எது பண்ணினாலும் அதற்கு பிரச்சனை பண்ணுவேன்னு கூறினா..எப்படிங்க.... இதை இப்படியே தொடர விடக்கூடாது, எதாவது முடிவு கண்டிப்பாக எடுக்க வேண்டும்.

Buzz It

தமிழக பேருந்துகளை கர்நாடகாவில் உள்ளே நுழைய விட மாட்டோம் ! - ரக்சன வேதிகே அமைப்பு

"ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை வருகிற 9ம் தேதிக்குள் ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால், தமிழகத்திலிருந்து ஒரு பஸ்சையும் கர்நாடகத்திற்குள் விட மாட்டோம். தமிழ் சானல்களை ஒளிபரப்ப விட மாட்டோம். தமிழ்ப் படங்களை திரையிட விட மாட்டோம் என கன்னட ரக்சன வேதிகே என்ற அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது"


இந்த காவேரி தண்ணீரை வைத்து கொண்டு இவங்க பண்ணுற அட்டகாசம் தாங்க முடியலைப்பா! எது பண்ணினாலும் உடனே தமிழ் நாட்டு பேருந்த கொளுத்துவேன், தமிழ் நாடு பதிவு எண்களை கொண்ட வாகனங்களை கொளுத்துவேன், தமிழ் சேனல் ஒளிபரப்ப விடமாட்டேன் மற்றும் தமிழ் திரைப்படங்களை வெளியிடும் திரை அரங்குகளை அடித்து நொறுக்குவேன்னு இவங்க பண்ணுற அக்கிரமம் அந்த ஆண்டவனுக்கே அடுக்காது. இப்ப தான் கொஞ்ச நாளா பிரச்சனை எதுவும் இல்லாம இருந்தது.


இது குறித்து கலைஞரின் முதிர்ச்சியான பேச்சின் சில முக்கிய அம்சங்கள்


துரைமுருகனை விட்டு என்னால் பதில் சொல்ல முடியும். ஆனால் நானே பதில் சொல்லுகிறேன் என்றால், தமிழ்நாட்டு மக்களின் சார்பாக மட்டுமல்ல, 6 கோடி மக்களின் சார்பாக மட்டுமல்ல, இந்தியாவின் இறையாண்மை கேள்விக்குறியாகியிருக்கிறதே, இப்படி ஆகலாமா என்று கேட்போரின் சார்பாக நான் இந்தக் கேள்வியை, கர்நாடக மாநிலத்தில் உள்ளவர்களை அல்ல, இந்தியாவை வழி நடத்துகிற மத்திய அரசுக்கு கேட்க விரும்புகிறேன்
கர்நாடகத்தில் இருப்பவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். எதை தமிழகம் உரிமையோடு செய்ய நீங்கள் வழி விட்டீர்கள். காவிரியில் இடைஞ்சல். ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு ஏற்கனவே ஒப்பந்தம் போடப்பட்டு கர்நாடகத்தின் ஒப்புதலைப் பெற்று மத்திய அரசும் சம்மதம் கொடுத்து நிறைவேற்றப்படுகின்ற திட்டம்தான் ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்.


எங்களுக்குக் குடகில் இருந்து வருகிற நீர்தான் இல்லை என்றால், குடிநீருக்காகப் பயன்படும் ஓகனேக்கல் தண்ணீரும் கிடையாது என்று சொன்னால் என்னாவது?


கர்நாடகத்தில் உள்ள அவசரக்காரர்களே, என்னைப் பொறுத்தவரை பலமுறை இப்படிப்பட்ட பல பிரச்சினைகள், நம்முடைய மாநிலத்திற்கும், பக்கத்து மாநிலத்திற்கும் வந்தபோதெல்லாம் பொறுமை காத்திருக்கிறேன்.யாரோ சில சமூக விரோதிகள் இதை பெரியதாக ஆக்கி, தீப்பற்றச் செய்து விடுவார்கள் என்பதால்தான் பொறுமையாக இருந்து வருகின்றேன். ஆனால் எனது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. அந்த எல்லையை மத்திய அரசு உணரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இந்த விஷயத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு இன்றைக்கு அங்கு சிறு துளியாக இருக்கின்ற பகை உணர்வு வளராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சிறு பொறி, பெருந்தீயாக மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


இதை விட சிறப்பாக இந்த பிரச்சனைக்கு பதில் கூற முடியாது என்பது என் கருத்து.

Buzz It

சென்னை உஸ்மான் சாலை மேம்பாலம் திறக்கப்பட்டது - படங்கள்

சென்னை தியாகராய (டி) நகர் வடக்கு உஸ்மான் சாலை - மகாலிங்கபுரம் சாலை புதிய மேம்பாலம் ஒரு வழியாக திறக்கப்பட்டது. நீண்ட நாட்களாக கட்டப்பட்டு, பொது மக்களை பல வழிகளில் சுற்றி வர செய்த மேம்பால பணி விரைவில் !!! திறக்கப்பட்டது அதிசயமே! நான் கூட இன்னும் 6 மாதம் ஆகுமோ என்று இருந்தேன்.



எனக்கு ஒன்று புரியவே இல்லைங்க! மக்களுக்கு இதை கட்டி முடிக்கும் வரை கடும் இடைஞ்சல் என்று தெரியும், அதனால் அதற்கு தகுந்த மாதிரி முன்பே எல்லா திட்டங்களையும் தீட்டி, நிதியை ஒதுக்கி பிறகு ஆரம்பித்து விரைவாக முடிக்க வேண்டியது தானே , பாதி கட்டிய பிறகு நிதி பற்றவில்லை, அனுமதி கிடைக்கவில்லை என்று கால தாமதம் செய்து மக்களின் பொறுமையை சோதித்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த பாலம் கட்டும் வரை அந்த பகுதியில் வசித்த மக்கள் பட்ட போக்குவரத்து சிரமங்கள் சொல்லி மாளாது. இதை எல்லாவற்றையும் விட கொடுமை கிண்டி மேம்பாலம் அதை பற்றி எழுதினால் ஒரு கட்டுரையே போடலாம், அந்த பகுதியில் இருந்து வரும் மக்கள் ரத்த கண்ணீர் வடித்து தினமும் அலுவலகம் வருகிறார்கள்,அதுவும் மழை என்றால் சொல்லவே வேண்டாம். எனவே அரசு இதை போன்ற முக்கிய இடங்களில் பாலங்களை கட்டும் போது விரைவாக முடிக்கும் படி திட்டங்களை போடுவது மக்களின் பாராட்டுதலை பெற வழி வகுக்கும். இது எல்லாம் நம்ப ஊர்ல நடக்க கூடிய காரியமா? என்று கேட்கிறீர்களா... ;)




மேலே உள்ள படம் படி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது, இது சோதனை அடிப்படையிலேயே உள்ளது, நிரந்தரமானது அல்ல.

Buzz It

Sunday, March 30, 2008

கண்டபடி உயரும் சென்னை வீட்டு வாடகை!! ஒரு அலசல்

சென்னையில் கண்டபடி உயர்ந்து வரும் வீட்டு வாடகை அனைவரையும் கவலை கொள்ள வைத்துள்ளது, குறிப்பாக நடுத்தர மக்களையும் அரசாங்க வேலையில் உள்ளவர்களையும்.



முன்பு பேச்சலர்களுக்கு வாடகைக்கு விட மாட்டேன் என்று கூறியவர்கள், இப்போது அவர்களை தவிர மற்றவர்களுக்கு வாடகைக்கு விட யோசிக்கிறார்கள். இதற்க்கு முக்கிய காரணம் கணிப்பொறி துறையில் கிடைக்கும் அதிக சம்பளம். முக்கியமாக யாரும் அலைய தயாராக இல்லை என்பதால் 1000 அல்லது 2000 அதிகம் என்றாலும் சரி என்று ஒத்துக்கொள்ளும் மனோபாவம். நானும் கணிப்பொறி துறையில் தான் இருக்கிறேன் என்றாலும், உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டியதாக தான் இருக்கிறது.



நான்கு பேச்சலர்கள் சேர்ந்து 3000 வாடகை மதிப்புள்ள வீட்டிற்கு 1000 வீதம் 4000 கொடுக்க தயாராக இருப்பதால் இவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இன்று ஒரு வீடு வாடகைக்கு free ads அல்லது classifieds ல் வருகிறது என்றால், நம்பினால் நம்புங்கள் காலை 7 மணிக்கு பிறகு நீங்கள் அந்த எண்ணை தொடர்பு கொண்டால் அந்த வீடு முடிந்து விட்டதாக கூறுவார்கள். அந்த அளவுக்கு சென்னையில் வீடு கிடைப்பது கஷ்டம்.



கணிப்பொறி துறையில் உள்ளவர்களால் மட்டுமே வாடகை உயர்வு என்பதை ஒப்புக்கொள்ள முடியாது, சதவீதத்தில் வேண்டும் என்றால் அளவு அதிகம் இருக்கலாம். இன்றைய காலக்கட்டத்தில் அனைத்து தொழில்களுமே சிறப்பாக உள்ளன, எனவே அனைவருமே அதிக பணம் கொடுத்து, அலைவதற்கு விரும்பாமல் உடனடியாக வீட்டை பிடிக்க விரும்புகிறார்கள். இதை எல்லாவற்றையும் விட தரகர்கள், இவர்களின் பங்கு விலை உயர்வுக்கு மிக முக்கியம். தங்களுக்கு கிடைக்கும் தரகு பங்கின் அளவை அதிகரிக்க இவர்களே போலியான ஒரு டிமாண்ட் ஏற்படுத்திவிடுகிறார்கள், மற்றும் வீட்டு வாடகையை உயர்த்தி விடுகிறார்கள்.



இப்பொழுது சென்னையில் 6000 குறைவாக வீடு கிடைப்பது மிக அரிது, அதுவும் பல கண்டிப்புகள் உடன் வேறு. வீடு எடுப்பது என்றால் சாதாரண விஷயம் இல்லை, ஏலம் போன்றது தான் அங்கே சென்றால் யார் அதிகம் கூறுகிறார்களோ,அவர்களுக்கே அந்த வீடு. அதிக வீட்டு வாடகை கொடுப்பது வேறு வழி இல்லை என்றாலும், கொடுக்கும் வாடைகைக்கும் அவர்கள் கொடுக்கும் வசதிகளுக்கும் சம்பந்தமே இல்லை. எந்த ஒரு வசதியும் செய்து கொடுக்காமல் கண்டபடி வாடகை வசூலிப்பது தான் பலரின் வயித்தெரிச்சலுக்கு காரணம்.



நடுத்தர மக்களின் வருமானத்தில் பாதி வீட்டு வாடைகைக்கே போய் விடுவது கசப்பான உண்மை. என்னுடைய கவலை எல்லாம் வரும் காலங்களில் இவர்கள் எப்படி இதை சமாளிக்க போகிறார்கள் என்பது. முன்பு கிண்டி என்றால் வாடகை குறைவு என்று அங்கே வீடு பார்த்தார்கள், பிறகு அது தாம்பரம் ஆனது, இப்பொழுது அங்கேயும் உயர்ந்து விட்டது. இப்படியே சென்றால் செங்கல்பட்டில் தான் வீடு பார்க்க முடியும் போல உள்ளது.



ஒருவர் ஒரு வீட்டை காலி செய்கிறார் என்றால், அடுத்து வரும் நபருக்கு அந்த வீட்டின் உரிமையாளர் 500 குறைந்தது அதிகம் சொல்கிறார். இப்பொழுது யாரையும் அதிக நாட்கள் தங்க விடுவதில்லை (அப்போது தான் வாடகையை அடிக்கடி உயர்த்த முடியும்) அப்படியே அனுமதித்தாலும் வாடகை உயர்வு முன்பு போல இல்லாமல் அதிகளவில் இருக்கும். ஒத்துக்கொள்ளவில்லை என்றால் பேசாமல் வீட்டை காலி செய்ய வேண்டியது தான், அடுத்த நபர் தயாராக இருக்கிறார், நீங்கள் எப்போது கிளம்புவீர்கள் என்று, எனவே வீட்டு உரிமையாளருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எனவே குழந்தைகளின் பள்ளி மற்றும் அலுவலக இடம் முதலியவற்றை கருத்தில் கொண்டு அடிக்கடி மாற்ற முடியாத நடை முறை சிக்கல் இருப்பதால் அவர்கள் கேட்பதை அழுது தொலைக்க வேண்டி உள்ளது.



சொந்த வீடு வைத்து இருப்பவர்கள் வீட்டு வாடகை பற்றி எப்படி வேண்டும் என்றாலும் கருத்து கூறலாம், வீடு வாடகைக்கு இருப்பவர்களுக்கு மட்டுமே அதன் உண்மையான வலி தெரியும். எனக்கும் அந்த அனுபவம் இருப்பதால் கூறுகிறேன்.



இதில் அரசு தலையிட்டு இந்த வசதிகள் இருந்தால் மட்டுமே இந்த வாடகையை வசூலிக்கலாம் என்று வாடகையை நிர்ணயம் செய்ய வேண்டும், இல்லை என்றால் இதற்க்கு விடிவு இல்லை. கண்டிப்பாக என்றாவது ஒரு நாள் இந்த வாடகை பிரச்சனை பெரிய அளவில் விஸ்வரூபம் எடுக்கும் என்பது என் கருத்து. கடைசியாக, கொடுப்பவர்கள் இருக்கும் வரை வாங்குபவர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள், எனவே அரசு தலையிட்டால் மட்டுமே இதை கட்டுக்குள் கொண்டு வர முடியும். அதுவரை வேற என்னங்க! பொலம்பிட்டே கொடுத்துட்டு இருக்க வேண்டியது தான் வேற வழி! எவ்வளோ பார்த்துட்டோம்! இதை பார்க்கமாட்டோமா !!

Buzz It

Saturday, March 29, 2008

கிரிக்கெட் - சாதனைகளும் ஏமாற்றங்களும்



இந்தியா - தென் ஆப்ரிக்கா போட்டியில் சேவாக் தென் ஆப்ரிக்காவை பின்னி பெடலேடுத்து விட்டார், அவர்கள் நொந்து நூடுல்ஸ் ஆகி விட்டார்கள். இவர் எடுத்த ஓட்டங்களை கணக்கில் எடுத்து பார்த்தால் இந்தியா மிக பெரிய எண்ணிக்கையை எடுக்கும் என்று அனைவராலும் நம்ப பட்டது, ஆனால் அவர் பின் வந்தவர்கள் அனைவருமே சொதப்பியதால் வாய்ப்பிருந்தும் அனைத்தையும் கோட்டை விட்டார்கள். இதில் சில சாதனைகளையும் சில ஏமாற்றங்களையும் காண்போம்.

சாதனைகள்


சேவாக் எடுத்த 319 ஓட்டங்களே இது வரை இந்தியா சார்பில் எடுத்த அதிகமான ஓட்டமாகும்.

இரண்டு முறை 300 எடுத்தவர்கள் பட்டியலில் சேவாக், பிராட்மேன் மற்றும் லாரா வுடன் இணைந்தார்.

அதிவேகமாக 300 (278 பந்தில்) எடுத்ததில் முதலிடம்.

சேப்பாக்கம் அரங்கில் கவாஸ்கர் எடுத்த அதிக பட்ச ஓட்டங்களை (236) தாண்டினார் சேவாக்.

சேவாக் தில்லாக 6 அடித்து 194 ல் இருந்து 200 வந்தார், அதே போல 291 ல் இருந்து 6 அடித்து 300 ஐ நெருங்கினார்.

திராவிட் 10000 ஓட்டங்களை கடந்தார் (இந்தியாவில் 3 வது வீரர் உலக அளவில் 6 வது வீரராவார்)


ஏமாற்றங்கள்


சேவாக் 400 ஓட்டங்கள் எடுத்து லாராவின் சாதனையை முறியடிப்பார் என்று ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 319 ஓட்டங்களில் அவுட் ஆனார்.

சச்சின் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

மிக பெரிய எண்ணிக்கையை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விரைவில் அனைவரும் அவுட் ஆகினர்.

இன்று இந்தியா பட்டய கிளப்பும் என்று ஆவலோடு வந்த சென்னை ரசிகர்கள், ஊசிபட்டாசாக ஆனதில் வெறுத்து போனார்கள்.


கொசுறு


18 வருடங்களுக்கு பிறகு ரவி சாஸ்திரி க்கு முதல் குழந்தை பிறந்துள்ளது. பீச் கேண்டி மருத்தவமனையில் தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள்.

Buzz It

Friday, March 28, 2008

ஆக்ரோஷ ஸ்ரீசாந்த்தா! அநாகரிக ஸ்ரீசாந்த்தா!!


சமீப காலமாக போட்டிகளில் ஸ்ரீசாந்த் ஆக்ரோஷமாக !! செயல்படுவது அனைவரும் அறிந்தது, இதற்க்கு பெயர் ஆக்ரோஷமா! அல்லது அநாகரிகமா !! என்பதை அவர் தான் கூற வேண்டும். போட்டிகளில் ஒரு வெறி இருந்தால் மட்டுமே வெற்றியை அடைய முடியும், இதை பாகிஸ்தான் ஆட்டக்காரர்கள் நம்மிடம் விளையாடும் போது காண முடியும். ஆனால் ஸ்ரீசாந்த் மற்றவர்களை திட்டுவதையும் முறைப்பதையும் இடிப்பதையும் தான் ஆக்ரோஷம் என்று கருதி வருகிறார் போல் உள்ளது.



நேற்று நடந்த தென் ஆப்ரிக்கா போட்டியில் பந்து வீச்சுக்கு சற்றும் உதவாத ஆட்ட களத்தில் நம் பந்து வீச்சாளர்கள் அனைவரையும் பொளந்து கட்டி கொண்டு இருந்தார்கள், விக்கெட் எடுப்பது மிக சிரமமாக இருந்தது, இந்நிலையில் டி வில்லியர்ஸ் ஸ்ரீசாந்த் பந்தை வெளுத்து வாங்கி கொண்டு இருந்தார், அதனால் கடுப்பான ஸ்ரீசாந்த் அவரை முறைத்தும் திட்டிக்கொண்டும் இருந்தார். அவரும் கடுப்பாகி 4 அடித்துக்கொண்டு இருந்தார், இந்நிலையில் 4 அடித்து விட்டு அடுத்த பந்தில் அவுட் ஆனார். உடனே ஸ்ரீசாந்த் பயங்கரமாக கத்தி குதித்து டி வில்லியர்சை பார்த்து முறைத்தார், பின்னர் மற்ற வீரர்கள் வந்து சமாதான படுத்த வேண்டி இருந்தது. நடுவர் வந்து தலையிட்ட பிறகு நிலைமை கட்டுக்குள் வந்தது.



ஸ்ரீசாந்த் தான் செய்வது அவரை மட்டும் பாதிக்க வில்லை, ஒட்டு மொத்த இந்தியாவை அது பாதிக்கிறது என்பதை உணராமல் உள்ளார். இவ்வாறு களங்களில் அநாகரிகமாக நடப்பது மற்ற வீரர்களையும் பாதிக்கிறது, அவர்களின் நடத்தையும் அதே போல நினைக்க தோன்ற வைக்கும். ஆஸ்திரேலியா வீரர்கள் இதனாலேயே உலக மக்களின் நன் மதிப்பை பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



எனவே ஸ்ரீசாந்த் தனது வெறியை எதிரணி வீரர்களுடன் சண்டை போடுவதில் காட்டாமல் மற்றும் தேவை இல்லாமல் அவுட் கேட்காமல் பந்து வீசுவதில் காட்டினால் அவருக்கும் பெயர் கிடைக்கும். நமது கிரிக்கெட் நிர்வாகம் இதை மேலும் தொடர அனுமதிக்கக்கூடாது.

Buzz It

செல்போன் கட்டணங்கள் குறைகிறது!

கடந்த சில மாதங்களாக செல்போன் நிறுவனங்களின் போட்டிகளினாலும், உபயோகிப்பாளர்களின் உயர்வினாலும் கட்டணம் குறைந்து வருகிறது. இப்போது வாடிக்கையாளர்கள் மேலும் மகிழ்ச்சி அடையும் விதமாக தொலை தொடர்புத்துறை ஒழுங்கு முறை ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.


பொதுத்துறை நிறுவனமான பி எஸ் என் ல் லின் உள்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள் கிராமப்புறங்களில் சேவைகளை வழங்கி வருகின்றன. இதற்க்கு தனியார் நிறுவனங்கள் பி எஸ் என் ல் க்கு தங்களது மொத்த வருவாயில் 0.75 சதவீதத்தை கட்டணமாக செலுத்தி வருகின்றன, இதற்க்கு அச்செஸ் டெபாசிட் சார்ஜ் (ADC) என்று பெயர்.


இந்நிலையில் ஏப்ரல் 1 ம் தேதியில் இருந்து இந்த கட்டணத்தை செலுத்த தேவை இல்லை என்று தொலை தொடர்புத்துறை ஒழுங்கு முறை ஆணையம் (TRAI) தெரிவித்துள்ளது. இது உள்ளூர் மற்றும் எஸ் டி டி அழைப்புகளுக்கு மட்டுமே பொருந்தும்.


இந்த அறிவிப்பின் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு 600 கோடி மிச்சம் ஆகிறது. இதை வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பொருட்டு உள்ளூர் மற்றும் எஸ் டி டி அழைப்புகளுக்கு கட்டணங்களை குறைக்க முன் வந்துள்ளன.


இதுகுறித்து ஏர்டெல் கூறுகையில் இதன் மூலமாக கிடைக்கும் பலனை கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க முடிவுசெய்துள்ளோம்.


வோடாபோன் நிறுவனமும் கட்டண குறைப்பை அமுல்படுத்த போவதாக கூறி உள்ளது, டாடா இண்டிகா நிறுவனமும் இதையே கூறி உள்ளது.


தனியார் நிறுவனங்கள் கட்டண குறைப்பை அமுல்படுத்த போவதால் பி எஸ் என் ல் நிறுவனமும் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எனவே விரைவில் செல்போன் கட்டண அறிவிப்பை அனைத்து நிறுவனங்களும் அறிவிக்க உள்ளது.

Buzz It

Wednesday, March 26, 2008

கு.க விளம்பரத்தில் ராமதாசு அய்யா! கோபத்தில் கட்சியினர்..

ராமநாதபுர மாவட்டத்தில் ஆண்களுக்கான குடும்பக்கட்டுப்பாடு நவீன சிகச்சை முகாம் நடை பெற்றது. இதற்காக தமிழக அரசின் சார்பில் குடும்பக்கட்டுபாட்டை வலியுறுத்தி பிரச்சாரம் ஊர்தி மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது


இதில் ராமதாசு அய்யா தலைப்பாகை அணிந்து இருப்பது போல அச்சிடப்பட்ட படம் விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. அந்த விளம்பரத்தில் ராமதாசு அய்யா கூறுவது போல "நான் செஞ்சுட்டேன்! நீங்க எப்போ!!" என்று வாசகம் இடம் பெற்று இருந்தது ஹா ஹா ஹா


இந்த ஊர்தி பேருந்து நிலையம் அருகே வந்த போது, அதை பார்த்த பா ம க கட்சிக்காரர்கள் டென்ஷன் ஆகி அதை நிறுத்தி சண்டை போட்டு அதை அப்புறப்படுத்தி இருக்கிறார்கள். இதை மேல் இடத்துக்கு கொண்டு போவதாக கங்கணம் கட்டி கொண்டு உள்ளார்கள்.

Buzz It

Monday, March 24, 2008

காபி வித் அனு சீசன் 2 விழா ஒரு விமர்சனம்

நான் சமீபத்தில் காபி வித் அனு பார்த்தேன், அதில் சீசன் 1 முடிந்து சீசன் 2 ஆரம்பம் ஆனது, அதற்கு லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்து இருந்தார்கள். அதில் பேசிய அனைவருமே (ஒரு சிலரை தவிர்த்து) ஆங்கிலத்திலேயே பேசிக்கொண்டு இருந்தார்கள், அனுவை பேட்டி எடுத்த பெண் (பெயர் தெரியவில்லை, கலக்க போவது யாரு வில் சேதுவுடன் வரும் பெண்) ஆங்கிலத்திலேயே பேசிக்கொண்டு இருந்தார், தமிழ் நாட்டு மருமகள் என்று கூறிக்கொண்டு இருக்கும் குஷ்பூவும் பெயருக்கு இரண்டு தமிழ் வார்த்தை பேசி விட்டு முழுவதும் ஆங்கிலத்திலேயே பேசிக்கொண்டு இருந்தார்.


இதை எல்லாவற்றையும் மிஞ்சும் விதத்தில் விஜய் தொலைக்காட்சி விளம்பரத்துக்கு பிறகு நிகழ்ச்சி தொடங்கும் முன் இது பற்றிய சிறு காட்சிகளை ஒளிபரப்பியது, ஒளிபரப்பியதில் பிரச்சனை இல்லை, இடையிடையே ஆங்கிலடப்படத்துக்கு இடையிடையே அந்த படம் பற்றிய செய்திகளை கூறுவார்களே, அதே போல ஆங்கிலத்திலேயே அனைத்தையும் கூறி அதிர வைத்தது. நாம் பார்ப்பது தமிழ் தொலைக்காட்ச்சியா இல்லை, AXN தொலைக்காட்ச்சியா என்று சந்தேகம் வரும் அளவுக்கு இருந்தது. கால மாற்றத்தில் அனைத்தையும் தமிழிலேயே எதிர்பார்ப்பது நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று, ஆனால் ஒட்டு மொத்தமாக இப்படி தமிழை புறக்கணிப்பதை பார்த்தால் மனது கனக்கிறது.


பேசிய பலரும் (தமிழ் தெரியாதவர்களை தவிர்த்து) தமிழே தெரியாது போலவும், அதை வேற்று மொழி போலவும் கருதி புறக்கணித்தது மனதுக்கு கஷ்டமாக இருந்தது. விஜய் தொலைக்காட்சி தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என்று நிகழ்ச்சி நடத்தினால் மட்டும் போதாது, மற்ற நிகழ்ச்சிகளில் அதை பின்பற்ற கொஞ்சமாவது முயற்சிக்க வேண்டும். அதற்காக மக்கள் தொலைக்காட்சி அளவுக்கு சொல்லவில்லை. நடைமுறையில் ஒத்து வரக்கூடிய அனைத்தையும் பின்பற்றலாம்.


ஏங்க எனக்கு ஒன்று புரியலை? அப்படி என்னங்க பேசுறதுக்கு தமிழ் கேவலமாக போயிற்று??????

Buzz It

Sunday, March 23, 2008

தற்கொலைக்கு முயன்ற விவசாயி :( அதை படமெடுத்த நிருபர்கள்

தமிழகம் முழுவதும் பருவம் மாறி மழை பெய்து வருகிறது, தொடர்ந்து மழை பெய்ததால் பயிரிடப்பட்ட பயிர்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுவிட்டன. அறுவடை சமயத்தில் நெல் பயிர்கள் சேதம் அடைந்ததால் பல விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்துள்ளனர். இதில் ஒரு வயதான விவசாயி இதற்க்கு முன் ஏற்பட்ட நஷ்டத்திற்கு பிறகு கடனை வாங்கி பயிரிடப்பட்ட பயிர்கள் மழையால் நாசமடைந்ததால் விரக்தி அடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார், அவர் துடித்துகொண்டு இருப்பதை தொலைக்காட்சி நிருபர்களும், செய்தித்தாள் நிருபர்களும் படம் எடுத்து கொண்டு இருக்கிறார்கள். இதை நான் பார்த்த போது மனது கனத்து விட்டது.




செய்தியாளர்களின் வேலை செய்தி சேகரிப்பது தான் அதை நான் மறுக்கவில்லை, ஆனால் எந்த செய்தி சேகரிப்பிலும் மனிதாபிமானம் என்ற ஒன்றை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.

Buzz It

Saturday, March 22, 2008

தோனி செய்வது சரியா?

தோனி கொடுத்த பேட்டியில் மூத்த வீரர்கள் அனைவரையும் வாருவாருன்னு வாரி இருக்கிறார். ஆஸ்திரேலியாவை புரட்டி எடுத்த பிறகு அனைவரும் புகழ்ந்து பேசியதில் உச்சி குளிர்ந்து வெற்றி முழுவதும் தன்னால் வந்தது, தான் எடுத்த முடிவுகளினால் வந்தது என்று நினைக்க ஆரம்பித்து விட்டார், இந்திய வெற்றிக்கு இவர் முக்கிய காரணமாக இருந்தாலும் பேச்சில் தன்னடக்கம் இல்லையென்றால் வீழ்ச்சி உடன் வரும் என்பதை அறியாமல் இருக்கிறார்.


மூத்த வீரர்களை நீக்கியதே இந்த வெற்றிக்கு காரணம் என்று கூறி இருக்கிறார், இவர் கூறியதில் உண்மைகள் இருந்தாலும் ஊடகங்கள் முன்பு இவ்வாறு கூறுவது தவறு. இதே நிலை தொடர்ந்து இருக்காது என்பது இவருக்கு தெரியவில்லை, இதே இளைஞர் அணி இன்னொரு போட்டியில் மரண அடி வாங்கலாம், அப்போது இதே ஊடகங்கள் தோனி செய்தது தவறு மூத்த வீரர்களை நீக்கியது தவறு, அனுபவ வீரர்கள் இல்லாததே தோல்விக்கு காரணம் என்று பக்கம் பக்கமாக விமர்சிப்பார்கள். அது தெரியாமல் பேசிக்கொண்டு இருக்கிறார்.


அது மட்டும் அல்லாது எப்போதுமே ஒரு அணி இளைஞர்களை மட்டுமே நம்பி இருக்க முடியாது, ஒரு சில அனுபவ வீரர்களும் தேவை. சச்சினின் பங்கு ஆஸ்திரேலியா வெற்றியில் என்ன என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அனுபவ வீரர்கள் என்பதற்காக சிறப்பாக திறமையை நிரூபிக்காதவர்களை வைத்துக்கொண்டு இருக்க முடியாது, பழைய பெருமையை சொல்லி அணியில் நீடிக்க முடியாது என்பதை அவர்களும் உணர்ந்து இருப்பார்கள். எனவே யாராக இருந்தாலும் திறமையை நிரூபித்தால் மட்டுமே அணியில் இடம் உண்டு என்பதை உணர்ந்து உள்ளார்கள். இரண்டு தொடர்களில் பங்கு பெறவில்லை என்பதாலேயே கங்குலி திராவிட் விளம்பரங்கள் குறைந்து விட்டன, எனவே அணியில் இருக்கும் வரை மட்டுமே நமக்கு மரியாதை என்பதை இப்போது அனைவரும் கண்டிப்பாக தெரிந்து வைத்து இருப்பார்கள்.


முன்பு தான் எப்படி விளையாடினாலும் விளையாடா விட்டாலும் அணியில் இருப்பார்கள் பழைய சாதனைகளை கருத்தில் கொண்டு, இப்போது அதை எல்லாம் நினைத்து பார்க்கவே முடியாது. சச்சினையே ஒரு தொடரில் உட்கார வைத்த பிறகு மற்றவர்கள் ஏமாத்திரம்.


தோனி, வீரர்களுக்கு கொடுக்கும் ஆலோசனையையும் பேட்டியில் குறிப்பிடுகிறார், இதனால் வீரர்கள் என்னடா இது! நமக்கு ஒண்ணுமே தெரியாத மாதிரி இல்ல இவர் பேசிட்டு இருக்காருன்னு நினைக்க தோன்றும். முதலில் இவ்வாறு பேட்டியில் கூற இவருக்கு அனுபவமும் இல்லை, வயதும் இல்லை. நாளைடைவில் இவருக்கு அணியில் எதிர்ப்பு வலுக்க இதுவே காரணமாகலாம். தோனி திறமையான நபர், அதில் சந்தேகம் இல்லை..அதுவே அவருக்கு தலைக்கணத்தை கொடுத்தால், அதுவே அவருடைய வீழ்ச்சிக்கு ஆரம்பமாகும். சுக்கிர திசை எப்போதும் ஒரே இடத்தில் இருக்காது என்பதை தோனி உணர்ந்தால் சரி.

Buzz It

கோடையில் வெளுத்து வாங்கும் மழை!







வங்க கடலில் ஏற்பட்டு இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழ்நாடு முழுவதும் மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால தமிழ்நாடு முழுவதும் மழை வெளுத்து வாங்குகிறது, பருவம் தவறி மழை பெய்வதால், இதை எதிர்பார்க்காத விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடனை வாங்கி பயிர் செய்த நெல் அறுவடைக்கு தயாரான நிலையில் அனைத்தும் மழையால் பாதிக்க பட்டதில் நஷ்டம் அடைந்த விவசாயிகள் கண்ணீர் விட்டுக்கொண்டுள்ளனர்.


மழையோ வறட்ச்சியோ பாதிக்கப்படுவது விவசாயிகள் தான். இவர்களுக்கு கிடைக்கும் இலாபமே மிக குறைவு, அதிலும் இதை போல் மழையால் பாதிக்கப்படுவதால் கடன் மேல் கடன் வாங்கி வறுமையில் உழன்று கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு கொடுக்கப்படும் அரசு சலுகைகளே இவர்களை இதுவரை காப்பாற்றி கொண்டு வந்துள்ளன.


குற்றாலத்தில் மழையால் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது. எதிர்பாரத நீர்வீழ்ச்சியால் பொது மக்கள் சந்தோசமடைந்துள்ளனர்.


இதே போல கோடை மழை சென்னையில் 1997 வருடம் பெய்தது. அப்போது சென்னையே வெள்ளத்தில் மூழ்கியது, இன்னும் ஒரு நாள் மழை பெய்தாலும் சென்னையே பெரும் பாதிப்பை சந்திக்கும் என்ற நிலையில் மழை நின்று நிம்மதி கொடுத்தது. கீழ் தளத்தில் இருந்த வீடுகள் அனைத்தும் நீரில் மூழ்கியது, அதன் பிறகு கீழ் தளத்தில் வீடு பார்ப்பது என்றாலே அனைவருக்கும் பயத்தை கொடுத்தது. அது இன்றும் கூட ஒரு சில இடங்களில் தொடர்கிறது.மழை பெய்தாலும் பிரச்சனை பெய்யவில்லை என்றாலும் பிரச்சனை. இயற்கை ஒன்று தான் மனிதனை அவ்வப்போது மிரட்டி கொண்டு தன்னுடைய பலத்தை உணர்த்திக்கொண்டு இருக்கிறது. இயற்கையை நாம் அழித்து கொண்டு இருக்கும் வரை இதை போல நிகழ்ச்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

Buzz It

Friday, March 21, 2008

தமிழக பட்ஜெட்டும் இலவச தொலைக்காட்சியும்!

தமிழக அரசின் 2008-2009 பட்ஜெட் அறிவிப்பில் இலவச தொலைக்காட்சி க்கு 750 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொலைகாட்சி கொடுப்பதால் பொது மக்களுக்கு என்ன பயன்? பொது மக்களுக்கு தொலைக்காட்சி கொடுப்பதன் மூலம் அவர்களுடைய அன்றாட வாழ்வில் எந்த ஒரு முன்னேற்றத்தையும் காண முடியாது, அது அவர்களை மேலும் சோம்பேறிகள் தான் ஆக்கும். தற்போதைய கருத்து கணிப்பு ஒன்று சொல்கிறது "தொலைக்காட்சிகளே ஒருவருடைய தூங்கும் நேரத்தை நிர்ணயிக்கின்றன, தமக்கு பிடித்த நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காக தங்கள் தூங்கும் நேரத்தை கூட மாற்றுவதாக".


இந்த 750 கோடியை பயன்படுத்த எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கும் போது, மக்களின் வரிப்பணத்தை இதற்க்கு செலவு செய்யும் போது ஆதங்க படாமல் இருக்க முடியவில்லை. கொடுக்கப்படும் தொலைக்காட்சிகளாவது சரியான நபரை சென்றடைகிறதா என்றால் அதுவும் இல்லை!, கட்ச்சிக்காரங்களும், அதிகாரத்தில் உள்ளவர்களும் அதை தவறான முறையில் எடுத்துக்கொண்டு, உண்மையிலேயே சேரவேண்டிய நபருக்கு அந்த பயனை அடையாமல் தவிர்த்து விடுகிறார்கள். இதை வாங்கி பாதி விலைக்கு விற்கும் செயலும் நடக்கிறது.


மாணவர்களும் எப்போது வீட்டில் இருந்தாலும் கார்ட்டூன் நெட்வொர்க், ஜெட்டிக்ஸ் மற்றும் போகோ நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டு படிப்பில் கவனம் செலுத்துவதில்லை. அரசு இப்படி செய்வது அவர்களை வலியவந்து கெடுப்பது போல உள்ளது.


எதோ தேர்தலுக்காக இலவச தொலைக்காட்சி அறிவித்தார்கள், இப்பொழுது பட்ஜெட் லேயே அறிவித்து அதை தொடர் கதையாக்கி விட்டார்கள். ஏற்கனவே போட்ட சாலை நன்றாக இருக்கும் போது அதை தோண்டி மறுபடியும் போடுவார்கள், புதிதாக சாலை போட்ட அடுத்த நாளே புது சாலையில் குழி தோண்டுவார்கள் இவ்வாறு மக்கள் வரிப்பணத்தை வீண் செய்து கொண்டு இருந்தவர்கள் இப்பொழுது பட்ஜெட் ல் வீண் செய்வதற்காக பணத்தை ஒதுக்கி செய்து கொண்டு இருக்கிறார்கள். மக்கள் எப்போது இலவசத்தை வேண்டாம் என்று சொல்கிறார்களோ அப்போது தான் முடிவு கிடைக்கும். இது நடக்கும் என்று எனக்கு தோன்றவில்லை.

Buzz It

Thursday, March 20, 2008

தள்ளிப்போகும் "தசாவதாரம்"


கமல் ரசிகர்களுக்கு சோகமான செய்தியாக தசாவதாரம் படம் வெளியீடு தள்ளிபோடப்பட்டு உள்ளதாக ஆஸ்கார் ரவிச்சந்திரன் கூறி உள்ளார். உலகமே தசாவதாரம் படத்தை எதிர் பார்த்துக்கொண்டு இருக்கிறது, கடந்த பொங்கலுக்கு வெளி வந்து இருக்க வேண்டிய படம் இப்போது தள்ளி தள்ளி சென்று ஒரு வழியாக ஏப்ரல் 10 ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பாடல் ஜாக்கி சானால் ஏப்ரல் 2 ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது, அனைவரும் பாடல் வெளியீட்டிற்கும் பட வெளியீட்டிற்கும் குறைந்த அளவே இடைவெளி உள்ளது என்று கூறி கொண்டு இருந்தார்கள், இது படத்தின் வெற்றியை பாதிக்கும் என்று கூறினார்கள்.



இப்பொழுது ரவிச்சந்திரன் ஜாக்கிசான் தேதி கிடைக்காததால் மற்றும் கிராபிக்ஸ் வேலைகள் பாக்கி உள்ளதால் வெளியீடு தள்ளிப்போவதாக கூறி உள்ளார். வெளியீடு தேதி தள்ளி போய் கொண்டே இருப்பது அனைவரையும் கவலை கொள்ள வைத்து உள்ளது.



ஏப்ரல் 18 ம் தேதி இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் துவங்குவதால், இது கண்டிப்பாக தசாவதாரத்தின் வெற்றியை பாதிக்கும் என்று கருதப்படுகிறது. சோனி மாக்ஸ் இப்பொழுது இருந்தே விளம்பரங்களை போட்டு தாக்கி வருகிறது. எனவே இப்படம் மே மாதம் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது. மே மாதத்தில் குருவி படம் வெளியாகிறது. எனவே போட்டிகளுடனே வெளியாகும்.



ரவிச்சந்திரன் ஜாக்கிசானுக்காக தாமதம் செய்கிறார் என்றால் அதை ஏற்று கொள்ளவே முடியவில்லை. கமலின் கடுமையான உழைப்பில் வெளியாகும் படம் இவரின் வெளியீட்டில் தான் நன்றாக போகப்போகிறதா? விளம்பரத்துக்காக என்றால் அதை இந்தியாவில் உள்ள பிரபலமான நபரை வைத்தே வெளியிடலாமே? ஜாக்கிசானுக்கு கமலை பற்றி என்ன தெரியும்? அவருக்காக திரும்பவும் தள்ளி வைப்பது கமலை அவமானப்படுத்துவதாகவே உள்ளது.



இதில் மிகப்பெரிய ஆச்சர்யம் பட இயக்குனர் K.S. ரவிக்குமார் இந்த படத்தை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது. கமலாவது அப்பப்ப பேட்டி கொடுத்தார். ஒரு வேளை படம் வெளிவந்ததும் படம் பேசும் என்று நினைத்துவிட்டாரோ. எதுவாகினும் இதற்க்கு மேலும் படத்தை வெளியிட தாமதம் செய்யாமல் வெளியிட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

Buzz It

தூக்கில் போடுங்கள் அல்லது விடுதலை செய்யுங்கள்!

இந்தியாவை சேர்ந்தவர் சரப்ஜித், இவர் 1992 ம் ஆண்டு பாகிஸ்தானில் குண்டு வைத்ததாக பாகிஸ்தான் அரசால் கைது செய்யப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர். இவரை விடுதலை செய்ய கூறி இவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் நீண்ட நாட்களாக போராடி வருகிறார்கள், இந்தியா அரசும் இதற்காக பல நடவடிக்கைகளை எடுத்தது, ஆனால் பாகிஸ்தான் அரசு பதில் எதுவும் சொல்லாமல் தண்டனை காலத்தை நீட்டித்துக்கொண்டு இருக்கிறது. இப்போது இவரது தூக்கு தண்டனை 2008 ஏப்ரல் 1 ம் தேதியில் இருந்து 30 ம் தேதிக்கு மாற்றி வைத்து உள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டு உள்ளது.


பாகிஸ்தான் அரசு அவர் தவறு செய்து இருந்ததாக கருதினால், தண்டனையை மாற்ற முடியாது என்ற நிலையில் திட்டவட்டமாக இருந்தால் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லை மன்னிப்பு கொடுக்கலாம் அல்லது அவர் மீதான குற்றம் சரிவர நிரூபிக்கப்படவில்லை என்று கருதினால் விடுதலை செய்ய வேண்டும்.


இதில் எதையுமே செய்யாமல் இப்படி இழுத்தடிப்பதால் அவரை கொல்கிறார்களோ இல்லையோ, அவருடைய குடும்பத்தை மற்றும் அவர்களுடைய எதிர்பார்ப்புகளை தினமும் கொன்று கொண்டு இருக்கிறார்கள். சரப்ஜித் தண்டனை அனுபவிக்கிராரோ இல்லையோ இவருடைய மனைவி தினமும் செத்து செத்து பிழைத்துக்கொண்டு இருப்பார் அவர் வருவாரா மாட்டாரா என்று எந்த முடிவும் தெரியாமல். இந்தியா அரசோ அல்லது பாகிஸ்தான் அரசோ அவர்களுக்கு இவர் மற்ற கைதிகளில் ஒரு கைதி, ஆனால் இவருடைய குடும்பத்தினருக்கு இவர் தான் குடும்ப சொத்து. இவர் ஏற்கனவே 15 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டார். 15 ஆண்டுகளாக எந்த முடிவும் தெரியாமல் ஒரு குடும்பத்தினர் இருக்கின்றனர் என்றால் அதை விட கொடுமையான விஷயம் எதுவும் இல்லை, அதுவும் உயிருடன் கிடைப்பாரா மாட்டாரா என்று.


எனவே அரசுகள் தகுந்த முடிவு எடுத்து மேலும் இழுத்தடிக்காமல் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதே அனைவரும் எதிர்பார்க்கும் ஒன்று.

Buzz It

Wednesday, March 19, 2008

தமிழ் இதயங்களை நொறுக்கிய ரகுவரன்




ரகுவரன் என்றாலே நம்முடைய நினைவுக்கு வருவது, அவருடைய அலட்டல் இல்லாத நடிப்பும், அவருடைய வித்யாசமான வசன உச்சரிப்பும் தான். இப்படிப்பட்ட ஒரு சிறந்த நடிகர் குடி பழக்கத்தால் நம்மை விட்டு பிரிந்து தமிழ் திரை உலகிற்கு ஈடு கட்ட முடியாத இழப்பை ஏற்படுத்தி விட்டார்.




ரகுவரனை பிடிக்காதவர்கள் மிக குறைவே என்றே கருதுகிறேன், அவருடைய வித்யாசமான வில்லன் நடிப்பால் அனைவரையும் தன் வசம் ஈர்த்து இருந்தார். அவருடைய படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது என்றால் புரியாத புதிர், பாட்ஷா மற்றும் லவ் டுடே. புரியாத புதிரில் ஐ நோ என்று சைக்கோ தனமாக பேசி அனைவரையும் டென்ஷன் செய்து இருப்பார். பாட்ஷாவில் மார்க் அந்தோனி என்கிற வேடத்தில் பட்டய கிளப்பி இருப்பார். அதில் கூற ஏகப்பட்ட காட்சிகள் உள்ளது. இந்த படத்தில் ரகுவரன் ரஜினியை மிரட்டும் அவர் செய்யும் அலட்டல் இல்லாத நடிப்பு எவராலும் செய்ய முடியாது. லவ் டுடே ல் பாசம் மிகுந்த அப்பாவாக நண்பராக கலக்கி இருப்பார். ரஜினியின் வில்லன்களில் முக்கிய இடத்தை பிடித்தவர். அஞ்சலி, முகவரி, சிவப்பதிகாரம், சம்சாரம் அது மின்சாரம், ரன் போன்ற படங்கள் அவரது குணச்சித்திர நடிப்புக்கு சான்று.




வில்லன் என்றால் இரும்பை போல உடல்வாகும் முரட்டு தனமான பார்வையும் தான் என்பதை உடைத்தெரிந்தது இவர் மட்டுமே. தனது மெல்லிய தேகத்தின் மூலமே அனைவரையும் மிரட்டி இருந்தார், இப்படி பட்ட நடிகர் நம்மை பிரிந்து விட்டார் என்பதை மனம் ஏற்று கொள்ள மறுக்கிறது. அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் :(

Buzz It

Monday, March 17, 2008

குசேலன், குசேலுடு படப்பிடிப்பு தொடங்கியது


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் குசேலன் மற்றும் குசேலுடு (தமிழ் மற்றும் தெலுகு) படப்பிடிப்பு ஆந்தராவில்தொடங்கியுது. இதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, வெங்கடேஷ் மற்றும் சந்திரபாபு நாயுடு போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டு படப்பிடிப்பை தொடங்கி வைத்தனர்.



சிரஞ்சீவி குறிப்பிடும் போது எனக்கு சமீப காலத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் மனம் வருந்தி இருந்தேன், அந்த நேரத்தில் ரஜினி தான் எனக்கு ஆறுதல் கூறியதோடு ஒரு நாள் முழுவதும் சென்னையில் என்னை அவருடைய வீட்டிலேயே தங்க வைத்து என்னுடனே இருந்து என்னை அந்த நிலையில் இருந்து மாற்ற உதவினார். அவருடன் தீபாவளி முழுவதும் அவருடைய வீட்டிலேயே இருந்தேன். ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று, ஆனால் அவர் ஒரு சிறந்த மனிதர் என்பது அவரை புரிந்து கொண்டவர்களுக்கு தெரியும்.



ரஜினி பேசும் போது தெலுங்கு படவுலகு எனக்கு ரொம்ப பிடித்த ஒன்று. இங்கே நான் தொடர்ந்து நடிக்கலாமா வேண்டாமா என்று குழம்பிய நிலையில் இருந்தேன், அப்போது என்னுடைய நண்பர் மோகன் பாபுவிடம் கேட்டேன், அவர் இங்கு திரைத்துறையில் அரசியல் அதிகம் அதனால் நீ தமிழ் லேயே இரு, என்றார்.. பிறகு தான் தெரிந்தது தன்னுடைய நிலையை காப்பாற்றிக் கொள்ளவே அவ்வாறு கூறினார் என்று..இவ்வாறு நகைச்சுவையாக குறிப்பிட்டார், ரஜினி பேசும் போது தெலுங்கு மொழியிலேயே பேசினார்.



தெலுங்கு படத்தில் பசுபதி கதாபாத்திரத்தில் ஜெகபதி பாபு நடிக்கிறார். சிரஞ்சீவி கிளாப் அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.



இந்த படத்தில் 5 பாடல்கள், ஒரு பாடல் ரஜினியின் ஓபனிங் பாடல், இன்னொன்று படத்தில் நடிகராக வரும் ரஜினியும் நடிகையாக வரும் நயன்தாரா நடிக்கும் பாடல், மற்றொன்று சோகமான பாடல், அடுத்தது வடிவேல், பாஸ்கர், லிவிங்க்ச்டன் மற்றும் பசுபதி இணைந்து கிராமத்தில் பாடும் பாடல். ஐந்தாவது பாடல் கிளைமாக்ஸ் சிறப்பு பாடல். ஆனால் ஒரிஜினல் படத்தில் இரண்டு பாடல்கள் மட்டுமே இருக்கிறது.

Buzz It

திபெத் ல் என்ன நடக்கிறது?


நீங்கள் கொஞ்ச நாளாக டிவி யில் பார்த்து இருக்கலாம் திபெத் ல் நடக்கும் கலவரம் பற்றி.. எனக்கு தெரிந்தவற்றை இதில் கூறுகிறேன். இந்த கலவரம் எதுக்காக நடக்கிறது என்றால், இவ்வளவு நாட்களாக திபெத் சீன ஆக்கிரமிப்பில் இருந்து வருகிறது.. ஆண்டு எனக்கு சரியாக நினைவு இல்லை. அவர்கள் விடுதலை கேட்டு போராட்டம் நடத்தி கொண்டு இருக்கிறார்கள், சீனாவும் அடம்பிடித்து கொடுக்க மாட்டேன் என்று கூறு வருகிறது, எதுவுமே சரி வரவில்லை என்றவுடன் கடைசிக்கு சுயாட்சி முறையாவது கொடுங்கள் என்று கேட்டு இப்பொழுது பலத்த எதிர்ப்பு நிலவி வருகிறது. அதை சீன அரசு கண்டுக்காமல் போராட்டம் நடத்தி வருபவர்களை பாவம் புண்ணியம் பார்க்காமல் சுட்டு தள்ளி வருகிறது மற்றும் பலரை கைது செய்து வருகிறது. இது வரை பல பேர் புத்த பிட்சுகள் உட்பட சுடப்பட்டு இறந்து விட்டார்கள். இதுக்கு உலகம் முழுவதும் கடும் கண்டனம் கிளம்பி உள்ளது.




ஒலிம்பிக் போட்டிகள் வேறு சீனா வில் நடைபெற உள்ளதால், சீனாவுக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது. ஒரு சில நாடுகள் மற்றும் வீரர்கள் போட்டிகளில் பங்கேற்க மாட்டோம் என்று கூறி வருகிறார்கள். ஆனால் சீனா அரசு இவர்கள் வேண்டும் என்றே ஒலிம்பிக் நடக்கும் நேரத்தில் விளம்பரம் தேட இவ்வாறு செய்கிறார்கள் என்று கூறுகிறது (எனக்கு அதில் தவறு இருப்பதாக தோன்றவில்லை, இந்த சமயத்தில் மட்டுமே உலகின் கவனத்தை தன் பக்கம் இழுக்க முடியும்)




திபெத் ல் இருந்து அதிக பேர் இந்தியாவில் குடியேறி விட்டார்கள். தற்போது திபெத் ஐ சேர்ந்த மாணவர்கள் கூட அடக்கு முறையை எதிர்த்து சென்னையில் ஊர்வலம் நடத்தினார்கள். ஆனால் அடக்கு முறையால் யாரும் எதையும் சாதிக்க முடியாது, அவர்களுக்கு தொடர்ந்து தலைவலி இருந்து கொண்டே இருக்கும்.

Buzz It

Sunday, March 16, 2008

அரேபியா குதிரையுடன் அட்டகாச போஸ் கொடுக்கும் பெண் !


சார்ஜாவில் நேற்று நடை பெற்ற அரேபியா குதிரைகளுக்கான திருவிழாவில் அந்த பகுதியை சேர்ந்த நாடுகளில் இருந்து 200 க்கும் மேற்பட்ட குதிரைகள் கலந்து கொண்டன. அதில் ஒரு குதிரையுடன், அரேபியா இளவரசி உடையுடன் ஒரு பெண் கொடுக்கும் அட்டகாச போஸ்.


இந்த பெண் இன்னும் கொஞ்சம் முறைப்பாக முகத்தை வைத்து இருந்தால், இன்னும் சிறப்பாக வந்து இருக்கும். குதிரை செம போஸ் கொடுத்து இருக்குங்க.. அதனோட முடியே அதற்கு ஒரு கம்பீரத்தை கொடுத்து இருக்கு.....என்னை இந்த படம் ரொம்ப கவர்ந்தது.

Buzz It

ஸ்பென்சரில் சிறிய தீ விபத்து - ஒன்றும் இல்லாத பிரச்சனைக்கு!


ஸ்பென்சர் வளாகம்..சென்னையின் அடையாளம். சென்னையின் மிகப்பெரிய வணிக வளாகம். இங்கு நேற்று காஷ்மீர் கை வினை பொருட்கள் கடையில் வேலை செய்பவர்களுக்கும், அங்கு இருக்கும் டீ கடை ஊழியர்களுக்கும் சண்டை ஏற்பட்டு அங்கே தீ விபத்து ஏற்பட்டது. டீ கொடுத்ததற்கு பணம் கேட்க சென்ற சிறுவனுடன் சண்டை ஏற்பட்டு, சண்டை முற்றி இரு கடை ஊழியர்களும் அடித்து கொண்டனர், இந்த சண்டையில் டீ கடையில் இருந்த மண்ணெண்ணெய் கேன் விழுந்ததால் தீ பிடித்துக்கொண்டது, இதனால் பொது மக்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடினார்கள், என்ன நடக்கிறது என்று புரியாமல். இதனால் ஸ்பென்சர் முன்பு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அருகிலேயே காவல் நிலையம் இருந்ததால் உடனடியாக காவலர்கள் வந்ததால் நிலைமை மேலும் மோசம் அடையாமல் தவிர்க்கப்பட்டது. பிரச்சனைக்கு காரணமானவர்களையும் காவலர் கைது செய்தனர்.



என்னங்க இது! ஒரு டீ விசயத்துக்கு தேவை இல்லாம இப்படி அடித்து கொள்கிறார்கள். மிஞ்சி மிஞ்சி போனா ஒரு 5 இல்ல ஒரு 10 ருபாய் இருக்குமா அதுக்கு போய் முட்டாள் தனமா சண்டை போட்டு அவங்களே ஆயிரக்கணக்கில் செலவு வைத்து கொண்டார்கள். இவங்கெல்லாம் திருந்தவே மாட்டாங்களா? என்ன கொடுமை சார் இது!

Buzz It

தூள் கிளப்பும் "இசை அருவி"

கலைஞர் டிவி குழுமத்தில் இருந்து தற்போது வெளி வந்து இருக்கும் புது இசை சேனல் "இசை அருவி". தற்போது அதிக நேயர்களை கவர்ந்து இழுத்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன (அப்படியாங்க!). தற்போது டி ஆர் பீ ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது.




கலைஞர் டிவி, முன்பு சன் டிவி செய்து கொண்டு இருந்த வேலையை செய்து கொண்டு இருப்பதால் அதாங்க ... எல்லா படத்தோட உரிமையையும் வாங்கி விடுவதால் புதுபுது பாட்டாக போட்டு தள்ளி கொண்டு இருக்கிறதாம் (நிஜமாவா !). எனக்கு தெரியாதுங்க..நான் நம்ம ஊர்ல இல்ல...

முன்பு சன் டிவி எல்லா படத்தோட உரிமையையும் வாங்கி விட்டதால், விஜய், ராஜ் போன்ற டிவி கள் டப்பிங் படத்தை போட்டு காலத்தை ஒட்டி (நம்மளை பாடாய் படுத்திக்) கொண்டு இருக்கின்றன.




இப்ப என்னடானா சன் டிவி க்கே ஆப்பு வைத்துட்டாங்க.. இன்னும் விஜய் ராஜ் அளவுக்கு நிலைமை போக வில்லை என்றாலும்..இதே பெரிய அடி தான்..சன் டிவி யின் பெரிய பலமே நிகழ்ச்சிகளை அனைவரும் விரும்பும் வகையில் கொடுப்பது தான், அதனாலேயே இன்னும் நிலைத்து நின்று கொண்டு இருக்கிறது... இப்ப அது முக்கிட்டு இருக்க வேண்டிய நிலைமைக்கு வந்து விட்டது.. அதிகாரம் இருந்த போது அநியாயமாக விஜய் மற்றும் ராஜ் டிவி யின் செய்திகளை நிறுத்தினார்கள், மற்றும் பல இடைஞ்சல்களை கொடுத்தார்கள்.




"ஆடிய ஆட்டம் என்ன ! பேசிய வார்த்தை என்ன !!" எதற்கும் ஒரு முடிவு உண்டு என்பது இவற்றை எல்லாம் பார்க்கும் போது நமக்கு புரிகிறது. எப்போதும் ஆட்டம் போட்டு கொண்டே இருக்க முடியாது.

Buzz It

Saturday, March 15, 2008

"செக்ஸ்" டாக்டர் பிரகாஷ் இப்போ வெறும் பிரகாஷ்

டாக்டர் பிரகாஷ் ... இவர் பெயரை தெரியாதவங்களே இருக்க முடியாது. தனது மருத்தவமனைக்கு வரும் பெண்களை அவர்கள் மயக்கமாக இருக்கும் போது ஆபாசமாக படம் எடுத்து நெட் ல விட்டதால் வசமாக மாட்டி 2001 ஆண்டில் இருந்து சிறையில் இருக்கிறார். இது இல்லாமல் நீல படங்களை எடுத்து காசு பார்த்து கொண்டு இருந்ததும் விசாரணையில் தெரிய வந்ததால் வெளி வர வாய்ப்பே இல்லாமல் கம்பி எண்ணி கொண்டு இருக்கிறார், இருந்தாலும் அவர் போட்ட கணக்கு தப்பாகி கொண்டே போவதால் பேசாம கம்பிய எண்ணுரத விட்டுட்டு வெளிய வரதுக்கு என்ன பண்ணுறதுன்னு யோசித்து யோசித்து பார்த்து வேற வழி ஒண்ணும் கிடைக்காததால் திரும்பவும் கம்பி எண்ணி கொண்டு இருக்கிறார் :))


இப்பொழுது அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டதால், அவர் பெயரை மருத்துவ கவுன்சிலில் இருந்து நிரந்தரமாக நீக்கி விட்டார்கள். இனி இவர் டாக்டர் என்று தன்னுடைய பெயருக்கு முன்னால் போட முடியாது. மருத்துவ தொழிலும் பார்க்க முடியாது தன்னுடைய வாழ்நாள் முழுவதும். இனி டாக்டர் இல்ல கம்பவுண்டர் வேலை கூட பார்க்க முடியாது :D


ஜிளுஜிளுப்பா இருந்தாரு இப்ப என்னடான்னா கொசுக்கடி வாங்கிட்டு, மண்டைய சொரிஞ்சுட்டு படுத்து விட்டத்தை பார்த்துட்டு இருக்காரு.... அதனாலே மக்களே ..குஜாலா இருங்க ..ஆனா அடுத்தவங்களை இம்சை பண்ணிட்டு தில்லாலங்கடி வேலை பண்ணிட்டு இருந்தா.. நமக்கும் இதே கதி தான் ;)

Buzz It

அடி மேல் அடி வாங்கும் ஆஸ்திரேலியா - முதலிடத்தை இழந்தது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு உலகின் நம்பர் ஒன் அணியாக இருக்கும் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்காவால் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. நேற்று நடந்த மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் வங்கதேசத்தை வீழ்த்தியதன் மூலம், இந்த முதலிடத்தை மீண்டும் நீண்ட இடைவெளிக்கு பிறகு தென் ஆப்ரிக்கா கைப்பற்றியது.


இரு அணிகளும் சம புள்ளிகளே (127) எடுத்து உள்ளன, தென் ஆப்ரிக்கா 0.191 புள்ளிகள் அதிகம் என்பதால் முதலிடத்தில் உள்ளது. அடுத்த போட்டியில் "ஆஸ்திரேலியா" மீண்டும் முதலிடத்தை கைப்பற்றி விடும் என்றாலும், இது ஆஸ்திரேலியாவிற்கு பெரிய அடி தான்.


ஆஸ்திரேலியா குறைந்தது 7 ஆண்டுகளாக யாராலும் அசைக்க முடியாத அணியாக இருந்து வருகிறது, இந்த நிலை தற்போது மெக்ராத் மற்றும் வார்னே வின் ஓய்வுக்கு பிறகு மாறி வருகிறது. உலகின் தலைச்சிறந்த அணியாக இருந்தாலும், அவர்களின் அநாகரிக நடவைக்கைகளால் மற்ற நாட்டு மக்களிடம் நன் மதிப்பை பெற வில்லை. ஆஸ்திரேலியா நம்மிடம் கடந்த தொடரில் அடி வாங்கியதை பார்த்து "பாகிஸ்தானில்" உள்ளவர்கள் கூட சந்தோசப்பட்டார்கள். ஆஸ்திரேலியா வெற்றி பெற எந்த விதமான கீழ்த்தர நடவடிக்கைகளுக்கும் இறங்குவார்கள் என்பது உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.


ரிக்கி பாண்டிங் கிரிக்கெட்டில் பட்டய கிளப்பினாலும் அவருக்கு சச்சினுக்கு இருக்கும் மரியாதையில் பாதி கூட யாரும் கொடுப்பது இல்லை. இதற்க்கு காரணம் அவர் நடந்து கொள்ளும் முறை. சதம் அடிப்பதில் சச்சினை நெருங்கி கொண்டு இருந்தாலும், சச்சினுக்கு இருக்கும் புகழ் மற்றும் மற்ற நாட்டினர் கொடுக்கும் மரியாதை, மதிப்பு இவருக்கு கொடுப்பது கிடையாது. இந்தியா வில் நடந்த "லீக்" போட்டிகளுக்கான ஏலத்தில் சைமண்ட்சை விட குறைவான விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார், இதனால் நொந்து போய் பேட்டி எல்லாம் கொடுத்தார்.


தென் ஆப்ரிக்கா முதலிடத்தை கைப்பற்றி இருந்தாலும் ஆஸ்திரேலியாவுக்கு சவாலான அணி இந்தியா என்றால் அது மிகை ஆகாது. முன்பு ஒரு முறை ஹைடன் இவ்வாறு கூறி இருந்தார் "இந்தியாவை ஈடன் கார்டன் ல் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்பு தோற்கடிக்கும் போது எனக்கு கிடைக்கும் சந்தோசத்துக்கு அளவே இல்லை, அவர்கள் ரசிகர்கள் முன்பு தலை குனிந்து நிற்பதை பார்ப்பதிலே எனக்கு பெரிய மகிழ்ச்சி". இந்தியாவிடம் கேவலமாக பிரவீன் மற்றும் இஷாந்த் ஷர்மா போன்ற சிறு வயது வீரர்களிடம் அவ்வளோ பெரிய விளையாட்டு அரங்கில் அவர்களுடைய நாட்டிலேயே தோற்ற போது அவரின் மனநிலை எப்படி இருந்தது என்று நமக்கு தெரியவில்லை.


இந்திய ரசிகர்கள் எவ்வளோ பெரிய கிரிக்கெட் வெறியர்கள் என்பது உலகத்தினர் அனைவருக்கும் தெரிந்த ஒன்று, அவர்களிடம் இவ்வாறு கூறிய போது நம்மவர்கள் பதில் பேச முடியாத நிலையில் இருந்தார்கள், அதற்கு மொத்தமாக சேர்த்து வைத்து இந்த தொடரில் பதிலடி கொடுத்தார்கள். எவ்வளோ தான் சிறந்த அணியாக இருந்தாலும் தன்னடக்கம் இல்லை என்றால் இந்த மாதிரியான கேவலமான நிலைகளையும் சந்திக்க வேண்டும் என்பதற்கு இவர்களே உதாரணம். இப்பொழுது இந்தியாவிற்கு முதல் எதிரி பாகிஸ்தானை விட ஆஸ்திரேலியா தான் எனபது போல் சூழ் நிலை உள்ளது.


எப்பொழுதும் ஒருவரே முதல் இடத்தில் இருக்க முடியாது, அந்த நிலை மாறி கொண்டே இருக்கும் இது தான் உலக நியதி. இவ்வளோ வருடமாக முதல் இடத்தில் இருந்த பில் கேட்ஸ் பின்னுக்கு தள்ளப் படவில்லையா, எப்போதும் நம்பர் ஒன் என்று கூறப்பட்ட சன் டிவி ஆட்டம் காணவில்லையா? மாற்றம் ஒன்று தான் மாறாமல் இருப்பது.


மார்ச் 26 இந்தியா தென் ஆப்ரிக்காவுடன் மோதுகிறது, இப்போட்டிகள் கண்டிப்பாக விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. முதல் டெஸ்ட் போட்டி சென்னை யில் நடை பெறுகிறது.

Buzz It

Friday, March 14, 2008

25 வருடங்களுக்கு பிறகு பாம்குரோவில் சூப்பர் ஸ்டார் !

சென்னையில் உள்ள பாம்குரோ ஹோட்டலுக்கு ரஜினி வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ரஜினி காலையில் வாசுக்கு போன் செய்த போது அவர் பாடலுக்காக GV பிரகாஷுடன் இருப்பதாக கூறியதும், ரஜினி உடனே அங்கே சென்று தானும் அந்த உரையாடலில் கலந்து கொண்டார் "குசேலன்" பட பாடல் விவாதத்திற்காக. ரஜினி இங்கு 25 வருடத்துக்கு பிறகு இங்கு வந்தார் என்பதால் அங்கு இருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.ரஜினி வரவு எதிர்பாராமல் நடந்ததால் ஹோட்டல் நிர்வாகம் அங்கே கூட்டத்தை கட்டுப்படுத்த கஷ்டப்பட வேண்டி இருந்ததாக கூறினார்கள்.

























கொசுறு:




யோவ்! இதெல்லாம் ஒரு செய்தியா? னு கேட்காதிங்க..இது ரஜினி ரசிகர்களுக்காக. நீங்க டென்ஷன் ஆகி இருந்தா! உங்க விண்டோ வலது பக்கம் மேலே சிகப்பு நிறத்துல ஒரு மார்க் இருக்குல்ல, அதை அமுக்கிட்டு என்னை திட்டாம போய்டுங்க :))

Buzz It

விஜயின் "குருவி": கேரளாவில் மெகா விற்பனை


விஜயின் "குருவி" படம் கேரளாவில் மிகப்பெரிய தொகைக்கு (1.50 கோடிக்கு என்று கூறப்படுகிறது) விற்கப்பட்டு உள்ளது. கேரளாவில் தமிழ் படங்களுக்கு தடை விதித்து இருந்தாரகள், படம் வெளியான 2 வாரங்களுக்கு பிறகே கேரளாவில் வெளியிட அனுமதித்து இருந்தாரகள். பிறகு முக்கிய நடிகர்கள் படம் மட்டும் அனுமதித்தார்கள் ரஜினி,கமல் மற்றும் விஜய் போன்றவர்கள்.










கடந்த வருடம் வெளியான "போக்கிரி" கேராளாவில் வசூலில் சாதனை படைத்தது, அதிக திரை அரங்குகளில் 100 நாட்கள் ஓடியது. விஜயின் அழகிய தமிழ் மகன் தமிழ்நாட்டில் தோல்வி அடைந்தது, ஆனால் கேரளாவில் ஓரளவுக்கு ஓடியது. ஆனால் இப்பொழுது தரணி இயக்கத்தில் உதாயநிதி தயாரிப்பில் வெளி வரும் இந்த படம் நல்ல விலைக்கு விற்கப்பட்டு உள்ளது. ரஜினி மற்றும் கமலுக்கு பிறகு விஜய்க்கு அதிக ரசிகர்கள் கேரளாவில் உருவாகி உள்ளனர்.
இப்படம் "மே" மாதம் வெளியாகிறது, அந்த நேரத்தில் முக்கிய நடிகர்கள் படம் எதுவும் வெளியாக வில்லை.













கேரளாவில் கேரள படங்களை விட தமிழ் படங்களே சிறப்பாக ஓடுகின்றன, அதற்கு காரணம் கேரளாவில் அதிக பொருட் செலவில் எடுக்கப்படுவது இல்லை, கிராபிக்ஸ் காட்சிகள் இல்லை, நவீன முறையில் படம் இருப்பதில்லை மற்றும் குறிப்பாக "கலை" படம் போல் இருப்பதால் பொதுமக்கள் விரும்புவது இல்லை. இவை அனைத்தும் தமிழ் படங்களில் இருப்பதால் அங்கு தமிழ் படங்கள் பெரிய வெற்றி பெறுகின்றன, ஆதரவும் அதிகமாக காணப்படுகிறது.










ஏப்ரல் மாதம் மெகா பட்ஜெட் படமான கமலின் "தசாவதாரம்" வெளியாகிறது, ஆனால் அதை பற்றி இன்னும் செய்திகள் வரவில்லை. இந்த படமும் பட்டையை கிளப்பும் என்று நம்பலாம்.

Buzz It

கிரிக்கெட்: மினி உலகக்கோப்பை போட்டிகள் அறிவிப்பு

சி சி நேற்று மினி உலக கோப்பைக்கான அறிவிப்பை வெளியிட்டது. 2008 செப்டம்பர் மாதம் இப்போட்டிகள் தொடங்குகிறது. இந்த முறை போட்டி பாகிஸ்தானில் நடை பெற உள்ளது. "" பிரிவில் பாகிஸ்தான்,இந்தியா,ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. "பி" பிரிவில் தென் ஆப்ரிக்கா,நியூசுலாந்து,இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் போட்டியை சந்திக்கின்றன. இப்பிரிவுகள் தற்போதைய ஒரு நாள் தர வரிசையை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டு உள்ளன.





"" பிரிவில் அனைத்து அணிகளுமே சிறப்பான அணி என்பதால் தற்போதைய நிலைமையில், போட்டி கண்டிப்பாக கடுமையாக இருக்கும். பாகிஸ்தானுக்கு இது சொந்த நாட்டில் நடக்கும் போட்டி வேறு எனவே உள்ளூர் ஆதரவு அதிகமாக இருக்கும் மற்றும் இது வரை மினி உலக கோப்பையை பாகிஸ்தான் கைப்பற்றியது இல்லை. மினி உலக கோப்பையில் இது வரை எந்த அணியும் ஒரு முறைக்கு மேல் கைப்பற்றியது இல்லை. தற்போதைய நிலைமையில் இந்தியா அணி மிகுந்த பலம் உள்ள அணியாக திகழ்கிறது மனரீதியாகவும். ஆனால் செப்டம்பருக்குள் இந்த நிலைகள் மாறலாம் எனவே பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.





இது வரை மினி உலக கோப்பையை கைப்பற்றிய நாடுகள்






ஆண்டு - அணி


1998 - தென் ஆப்ரிக்கா


2000 - நியூசிலாந்து


2002 - இந்தியா - இலங்கை


2004 - வெஸ்ட் இண்டீஸ்


2006 - ஆஸ்திரேலியா

Buzz It

Wednesday, March 12, 2008

மிஷ்கினின் "நந்தலாலா"

மிஷ்கின் சித்திரம் பேசுதடி மற்றும் அஞ்சாதே! ஆகிய வெற்றி படங்களை கொடுத்தவர். இவர் அஞ்சாதேக்கு முன்பு நந்தலாலா என்ற படத்தை தான் இயக்க திட்டமிட்டு இருந்தார், ஆனால் தயாரிப்பாளர் கடைசியில் சரி வராததால் அந்த படத்தை கை விட்டார், இந்த படத்திற்காக ஷ்நிக்தா என்றா பெண்ணை கூட்டி வந்து அதற்கு கஷ்டப்பட்டு நடிப்பு பயிற்சியும் கொடுத்து தயார் செய்து இருந்தார், படம் கை விடப்பட்டதால் அந்த பெண்ணை அஞ்சாதே படத்தில் "கத்தாழ கணனாலே" பாட்டில் ஆட வைத்து விட்டார். இப்பொழுது மறுபடியும் நந்தலாலா படத்தை சூர்யாவை வைத்து இயக்கலாம் என்று செய்திகளில் கூறுகிறார்கள். அஞ்சாதே படத்தை நான் இன்னும் பார்க்க வில்லை. திருட்டு டி வீ டி யில் பார்க்க விருப்பம் இல்லாததாலும் மற்றும் திரை அரங்கில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்பதாலும் இன்னும் பார்க்காமலே இருக்கிறேன். சித்திரம் பேசுதடி படம் வெற்றி பெற்ற போது பலரும் இந்த படம் வெற்றி பெற்றது "வாளை மீன்" பாடலால் என்று கூற, ஒரு பாட்டுக்காக என் திறமையை குறைத்து மதிப்பிட்டவர்களுக்கு அஞ்சாதே படத்தின் மூலம் பதில் கூறுவேன் என்று கூறி அதை நிரூபித்தும் விட்டார். மிஷ்க்கின் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லேண்ட்மார்க்கில் வேலை செய்து கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது, திரைப்படத்தின் மீது உள்ள ஆர்வத்தால் இத்துறைக்கு வந்தார். நல்ல திரைப்படங்களை கமர்ஷியல் கலந்து தர முயற்சித்துக்கொண்டு இருக்கும் மிஷ்கினுக்கு வாழ்த்துக்கள் பல.

Buzz It

Tuesday, March 11, 2008

டி ராஜேந்தர் ப(யமுறுத்த)டம் எடுக்க தயார் ஆகி விட்டார்! வீராச்சாமிக்கு அடுத்து "கருப்பசாமி"


விஜய டி ராஜேந்தர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இவ்வாறு கூறி உள்ளார் "நான் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் உடன் இணைந்து ஒரு தலை காதல் என்ற படத்தை தயாரிக்கிறேன் இதில் குறளரசன் நடிக்கவில்லை (நல்லவேளை தப்பிச்சோம் :)) ), என்னோட 25 வருட திரை வாழ்க்கையில் செட் போடாமல் எடுக்க போகிறேன். இது கிராமத்து படக் கதையாக இருக்கும் இதில் கருப்பசாமி என்ற வேடத்தில் நடிக்கிறேன். அமீரின் பருத்தி வீரன் படத்தை பார்த்த பிறகு இனிமேல் எடுத்தால் இந்த மாதிரி அர்த்தமுள்ள படங்களை தான் எடுப்பது (அப்ப அவரே ஒத்துகிட்டாரா இதுவரை நல்ல படம் எடுக்கலைன்னு !) என்று முடிவு செய்து விட்டேன், அந்த படத்தின் பாதிப்பிலிருந்து விடுபடவே ரொம்ப நாள் ஆச்சு " இவ்வாறு கூறி உள்ளார். விஜய டி ராஜேந்தர் சார் உங்களோட வீராச்சாமி படம் பார்த்த பல! பேர் இன்னும் அந்த பாதிப்பிலிருந்தே விடுபடல, நீங்க என்னடான்னா அதுக்குள்ள மறுபடியும் ஒரு அதிர்ச்சி கொடுக்க தயார் ஆகிட்டிங்க. நீங்க வீராச்சாமில அண்டர்வேருடன் சண்டை போட்டதை பார்த்து எனக்கு இன்னும் அந்த பயமே தெளியல..இப்ப இது வேற கிராமத்து கதைன்னு சொல்றிங்க கோமணம் கீது கட்டிட்டு சண்டை போட்டு ஏ டண்டனக்க டனுக்கு னக்கா னு பீதிய கிளப்பிடாதிங்க...எனக்கு இப்பவே உங்க அடுத்த படத்த பார்க்கும் ஆவல் அதிகம் ஆகிடுச்சு...சத்யமாங்க! நம்பினா நம்புங்க!

Buzz It

Monday, March 10, 2008

தினம் ஒரு மரம் நடுகிறேன்! கிச்சு கிச்சு மூட்டும் தமிழ் குடிதாங்கி ராமதாசு அய்யா

இப்படி ஒரு அறிக்கை விட்டு எல்லோரையும் கிச்சுகிச்சு மூட்டி கொண்டு இருக்கிறார், நம்ம தமிழ் குடிதாங்கி அய்யா. இவரு இன்னும்.. இவரோட கட்சிக்காரங்களும் இவரும் சேர்ந்து அப்பொழுது வெட்டிய மரத்தை கணக்கெடுத்தால் இவங்க ஆயுசு முழுக்க செடியை நட்டால் கூட அதை ஈடு செய்ய முடியாது, இதுல இவரு இப்படி சொல்லி இருக்காரு " இந்தியாவில் தினமும் ஒருவன் மரம் நட்டுக்கொண்டு இருக்கிறான், அது யார் தெரியுமா?" இவர் கேள்வி கேட்டதும் அவனவன் மண்டை பிச்சுட்டு யோசித்து இருந்து இருக்கான்..யாரா இருக்கும்? ஒரு வேளை அப்துல் கலாமா இருக்குமா? இல்ல சிறுதுளி அமைப்பா இருக்குமா? இப்படி பல கோணத்துல யோசித்து இருக்காங்க..கடைசியா நம்ம அய்யா அது வேற யாரும் இல்ல நான் தான் அதுன்னு சொன்னதும்? அங்கே இருந்த பா ம க காரங்களே டென்ஷன் ஆகிட்டாங்கலாம் ...மக்களே நாம மரம் வெட்டுனதை கொஞ்சம் மறந்து இருக்காங்க ..இவரு வேற சும்மா இல்லாம ..தினம் ஒரு மரம் நற்றேன்... செடி நற்றேன்னு சொல்லி காமெடி பண்ணிட்டு இருக்காருன்னு டென்ஷன் ஆனதாக கேள்வி? ;) பா ம க ல காடு வெட்டி குருன்னு ஒருத்தர் பேரு. இதை அவரும் பெருமையா சொல்லிட்டு இருக்காரு! கொடுமைடா சாமி !! காடுவெட்டி குரு, மாடுவெட்டி திருன்னு என்னையா பேரு இது? மரத்த வெட்டுனதே உலக மகா அநியாயம் ..இதுல வெட்டுனதை பெருமை சொல்லுற மாதிரி பேரு வேற காடு வெட்டி குருவாம்!. தமிழ் குடிதாங்கி அய்யா முதல்ல இவரு பேர மாத்த சொல்லுங்க அப்புறமா உங்க கட்சி காரங்களுக்கு அறிவுரை சொல்லுங்க அப்புறமா வந்து பொது மக்களுக்கு அறிவுரை சொல்லலாம்.

Buzz It

Saturday, March 08, 2008

+2 பொது தேர்வில் "பிட்" அடிக்கும் மாணவிகள்

இதுநாள் வரை மாணவர்களே அதிகம் "பிட்" அடித்து பொது தேர்வில் மாட்டி கொண்டு இருந்தார்கள், இப்பொழுது பெண்கள் எல்லாம் துறைகளிலும் முன்னேறி வந்து கொண்டு இருக்கின்றனர், அதனால் இதையும் விட கூடாது என்று இதிலும் போட்டி போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். பிட் அடிப்பது பொதுவாக மாணவர்கள் மற்றும் மாணவிகள் பலரும் செய்யும் ஒன்று, அனைத்து காலகட்டங்களிலும் இது நடந்து கொண்டு இருக்கிறது, மாணவர்கள் சதவீதத்தில் இது அதிகமாக இருக்கிறது. மாணவர்கள் மட்டும் ஏன் இந்த விசயத்தில் அதிகமாக இருக்கிறார்கள்? என்று எனக்கு தோன்றியது.

இது குறித்து எனக்கு தோன்றிய எண்ணங்கள்


பொதுவாக மாணவர்களுக்கு வீட்டில் அதிக சுதந்திரம் உண்டு, நண்பர்களுடன் வெளியே சுற்றுவது, படத்துக்கு செல்வது, ஊர் சுற்றுவது என்று பல வாய்ப்புகள். இதனால் படிப்பு கெடுவதால் தேர்வு நேரத்தில் பிட் அடிக்கிறார்கள்.


சரி.. மாணவிகள் சதவீதம் ஏன் குறைவாக இருக்கிறது? மாணவிகள் பொதுவாக பள்ளி முடிந்ததும் வீட்டிற்க்கு வந்து விடுவதால் படிப்பில் அதிக கவனம் செலுத்தி பிட்டுக்கு வேலை இல்லாமல் தேர்வில் தேர்ச்சியடைந்து விடுகிறார்கள்.


ஆனால் இப்பொழுது மாணவர்களுக்கு இணையாக மாணவிகளும் வெளியே சுற்றுவது, கட் அடித்து படத்துக்கு போவது, நண்பர்களுடன் மற்றும் நண்பிகளுடன் ஊர் சுற்றுவது, தன்னை அழகாக காட்டி கொள்வதற்கு அதிக நேரத்தை செலவிடுவது இது போன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுவதால் இவர்களுடைய படிப்பு கெடுகிறது. இதுவே இவர்களை பிட் அடிக்க தூண்டுகிறது.


அப்ப... பொழுது போக்கிற்கு இடம் கொடுத்தால் படிக்கவே முடியாதா? என்று கேட்காதிர்கள் ..நான் இங்கே பிட் அடிப்பவர்களையும் மற்றும் படிப்பில் நாட்டம் குறைந்தவர்களையும் மட்டுமே கூறி கொண்டு இருக்கிறேன். படிப்பவர்கள் எந்த நிலையிலும் மதிப்பெண் பெற்று சிறப்பாக வருவார்கள் இது மாணவ,மாணவி இருவருக்கும் பொருந்தும்.


இந்த நிலை தொடர்ந்தால் (வாய்ப்புகள் அதிகம் :( ) இது நாள் வரை தேர்ச்சி சதவீதத்தில் முன்னணியில் இருக்கும் மாணவிகள் பின்தங்க வாய்ப்புகள் அதிகம்.

Buzz It

Friday, March 07, 2008

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் பேட்டி :) நீண்ட நாட்களுக்கு பிறகு ...

இன்று குசேலன் பட பூஜை தொடங்கியது. இதில் அனைத்து திரையுலக பிரபலங்கள், பத்திரிக்கைகாரர்கள், வலைத்தள புகைப்பட நிபுணர்கள் மற்றும் பொது வாழ்க்கை பிரபலங்கள் அனைவரும் திரண்டு இருந்தனர்.
நீங்க நாட்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் பேட்டி அளித்தார்....


அவர் கூறியதாவது மறுபடியும் என் குருநாதர் கே பி சார் படத்தில் நடிப்பது எனக்கு மிதுவும் சந்தோசமாக இருக்கிறது, அவருடைய தயாரிப்பில் நான் நடித்த நெற்றிக்கண், அண்ணாமலை மற்றும் முத்து படங்கள் பெரிய வெற்றி பெற்றது. இதில் முத்து எனக்கு உலக புகழை பெற்று தந்தது. என் திரையுலக வாழ்க்கையில் இவரின் படங்களே எனக்கு திருப்புமுனையாக இருந்தது.







குசேலன் பற்றி கூறும் போது, இந்த படத்தில் எனக்கு முக்கியமான வேடம், இது ரசிகர்கள் மற்றும் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும். ஆனால் இதில் பசுபதிக்கே அதிக முக்கியத்துவம் அதாவது கதையில் 50% இவரே வருவார், 25% வடிவேல் இருப்பார் நான் இதில் மீதி உள்ள 25% என்று சிரித்தபடி கூறினார். அசோக்ராஜ் என்ற கதா பாத்திரத்தில் நடிக்கிறேன்.

மீனா இந்த படத்துல கதாநாயகியா நடிக்கிறாங்க ,இவங்க முதல்ல என் கூட குழந்தையா நடித்தாங்க,அப்புறம் கதாநாயகியா நடித்தாங்க , இப்ப அம்மாவ நடிக்கிறாங்க ...எனக்கு இல்லைங்க..... (சத்தமாக சிரித்து விட்டு ;) ) ரெண்டு குழந்தைகளுக்கு அம்மாவா இந்த படத்துல நடிக்கிறாங்க.




கே பி சார் நாலா தான் எனக்கு ஜப்பான் ல ஒரு ரசிகர் வட்டம் கிடைத்தது. இந்த படமும் சிறப்பான வெற்றி பெரும் என்று கூறினார்.




தலைவரை புகைப்படம் எடுக்க புகைப்படக்காரர்கள் தள்ளுமுள்ளில் இருந்ததால் ரஜினி பொறுமையாக நின்று அனைவருக்கும் போஸ் கொடுத்தார். நாளைய செய்திகளில் இதுவே முக்கிய இடம் பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தலைவர் என்றாலே செய்தி தானே!.




மார்ச் 17 ம் தேதி படபிடிப்பு தொடங்குகிறது. இதில் தலைவரின் கால்ஷீட் 20 நாட்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.




குசேலன் படம் தொடங்குவதை பற்றி பல வித கருத்துக்கள் மீடியா வில் வந்தாலும், இறுதியாக என்னை நம்பி படம் எடுப்பவர்களுக்கு எப்போதும் பிரச்சனை வராது என்பதை நிரூபிக்கும் வண்ணம் இந்த படம் தொடங்கி உள்ளது. படம் பட்டய கிளப்ப வாழ்த்துகிறேன்.

Buzz It

Thursday, March 06, 2008

தொடரும் சிதம்பர சர்ச்சை !!

இப்பொழுதான் ஒரு அளவுக்கு தீட்சிதர்கள் தேவாரம் தமிழ் சர்ச்சை முடிந்தது. இப்பொழுது மறுபடியும் புது சர்ச்சை அது... கலைஞரின் உத்திரவுக்கு பிறகு தேவாரம் பாட அனுமதித்த தீட்சிதர்கள் அவர்கள் பாடி சென்ற பிறகு அந்த இடத்தை கழுவி தீட்டு கழித்து உள்ளார்கள் என்ற புகார் கிளம்பி உள்ளது. ஒரு சாரார் அது சிவராத்திரிக்காக செய்தது என்று கூற! இது குறித்து விசாரணை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். கடவுள் வந்து எனக்கு அதை செய்யணும் இதை செய்யணும் இந்த மொழில பாடணும் என்று கூறி கொண்டு இருக்க வில்லை, நம்மவர்களே கடவுளின் பெயரால் அடித்து கொண்டு இருக்கிறார்கள். கடவுள் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர் இதில் எனக்கு தான் முக்கியத்துவம் தர வேண்டும் என்று அனைவரும் முழங்கி கொண்டு இருப்பது, இவர்கள் கொடுக்கும் மரியாதை கடவுளுக்கா,சமஸ்கிருதத்திற்க்கா,தமிழுக்கா இல்லை தனி மனித ஈகோவிற்கா என்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம் :(

Buzz It

கேப்டன் டிவி - அதிரடி முடிவு !!!

எல்லோரும் டிவி வைத்து இருக்காங்க தி மு க வுக்கு கலைஞர் டிவி,காங்கிரஸ் க்கு மெகா டிவி, ஜெ வுக்கு ஜெயா டிவி, பா ம கா வுக்கு மக்கள் டிவி அதுனால நம்மளும் ஒரு டிவி ஆரம்பிக்கலாம்னு நம்ம கேப்டன் ஆரம்பிக்க போறாரு. கேப்டன் ம் பார்த்தாரு என்னடா இது நாம சொல்றத யாருமே மதிக்க மாட்டேங்குறாங்க , ஒரு டிவி லையும் நம்ம செய்தி வர மாட்டேங்குதேன்னு கடுப்பாகி இந்த முடிவுக்கு வந்துட்டாரு போல இருக்கு. இவரு கட்சி ஆரம்பிச்சதையே விளையாட்டு செய்தி சொல்லுற நேரத்துக்கு பக்கத்துல சொல்லி சன் டிவி இவர வெறுப்பேத்தி விட்டது, அந்த கடுப்பே இவருக்கு இன்னும் போய் இருக்காது. இப்ப சன் டிவி கூட கலைஞர் சண்டை என்றதும் அப்பப்ப கேப்டன் செய்தி தலை காட்டுது. இவங்கள நம்பிட்டு இருந்தா தேர்தல்ல நம்ம கழுத்துல போட்ட துண்டை, நம்ம தலையில போட வைத்து விடுவாங்கன்னு முடிவு செய்து இந்த அதிரடி முடிவ எடுத்துட்டாரு.. இனி நம்ம கேப்டன் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள தீவிரவாதிகளை சுடுரத நாம பார்த்தே ஆக வேண்டும் டிவி ல அப்புறம் கேப்டன் டிவி ல பம்பரம் விடுற காட்சி இருக்குமா? ஹீ ஹீ

Buzz It

Wednesday, March 05, 2008

கிரிக்கெட் - அடித்து நொறுக்கிய இந்தியா !!!


04-03-08 நடந்த இரண்டாவது இறுதி போட்டியில் இந்தியா ஆஸீயை அடித்து துவைத்து காயப் போட்டு காமன் வெல்த் வங்கி தொடரை அட்டகாசமாக கைப்பற்றி இருக்கிறது. இறுதி போட்டிகளில் சோபிக்காத சச்சின், அவ்வாறு பேசி கிண்டல் செய்துகொண்டு இருந்தவர்களுக்கு (என்னையும் சேர்த்து) மட்டையால் பதில் சொன்னார். சச்சின் அடிக்க வில்லை என்றால் போட்டியின் முடிவு வேறு மாதிரி ஆகி இருக்கலாம். முதலில் பேட் செய்த இந்தியா 280 ஓட்டங்கள் எடுக்கும் நிலையில் இருந்த போது பின் வரிசை மட்டையாளர்கள் சொதப்பியதால் 259 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது, ஆனாலும் குறைந்த ஓட்டங்கள் என்று கூறி விட முடியாது. பின்னர் ஆடிய ஆஸீ க்கு ஆரம்பமே அதிர்ச்சி அளித்தார் பிரவீன் குமார். கில்லி,பாண்டிங் மற்றும் கிளார்க் மூவரையும் அடுத்தடுத்து அனுப்பி அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். அப்புறம் ஹய்டன் வந்து நங்கூரம் மாதிரி நின்னு பின்ன ஆரம்பிச்சுட்டார் அவருக்கு சைமண்ட்சம் நல்ல கரம் கொடுத்தார். என்னடா! இது நமக்கு சங்கூதி விடுவாங்க போல இருக்கேன்னு வயித்த கலக்க ஆரம்பித்து விட்டது. ஹய்டன் ரன் அவுட் ஆனார் அப்புறம் கடைசியாக ஹோப்ஸ் நம்பிக்கை அளிக்க என்னடா இது சோதனை! கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய் விடும் போல இருக்கேன்னு, கடைசி ஓவர்ல 13 ஓட்டம் தேவை பட்டது, பதான் பந்து வீசி கடைசி இரண்டு விக்கெட்டையும் எடுத்து இந்திய ரசிகர்கள் நெஞ்சில் பாலை வார்த்தார். இறுதியில் அனைவரின் இதயத்துடிப்பும் அதிகரித்து இருக்கும் பரபரப்பான ஆட்டத்தால். முடிவில் இந்தியா 9 ஓட்டங்கள் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி ஓவராக ஆட்டம் போட்ட ஆஸீ க்கு மரண அடி கொடுத்தது.



போட்டியின் குறிப்பிடத்தக்க அம்சங்கள்

இந்தியா ஆஸீ யில் கைப்பற்றும் முதல் முத்தரப்பு ஒரு நாள் தொடர்.

இரண்டு இறுதி போட்டியிலும் சச்சின்(91) நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அடித்து நொறுக்கினார்.

தனது இறுதி போட்டியில் சாதிக்க முடியாமல் கில்லி வருத்தத்துடன் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

இளம் வீரர் பிரவீன்குமார் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

23 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா ஆஸீ மண்ணில் வெற்றி பெற்று இருக்கிறது.
இந்த முறையும் சைமண்ட்ஸ் மற்றும் ஹய்டன் அவுட் ஆக ஹர்பஜன் காரணமாக இருந்தார்.

இறுதி போட்டி என்றாலே பீதி அடையும் இந்தியா, இந்த முறை சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது.

Buzz It

Tuesday, March 04, 2008

குப்பையான தமிழ் பட பெயர்களுக்கு வரிச்சலுகை கிடையாது - தமிழக அரசு

தமிழ் மொழியின் பயன்பாட்டினை ஊக்குவிப்பதற்காக தமிழ் மொழியில் பெயர் சூட்டப்படும் திரைப்படங்களுக்கு வரிச் சலுகையை தமிழக அரசு அறிவித்தது.
ஆனால் கடந்த சில காலங்களாக தமிழ்மொழி என்று சொல்லி தமிழ் மொழியைச் சிதைத்துச் சீர்குலைக்கின்ற வகையில் பெயர்கள் சூட்டப்பட்டு திரைப்படங்கள் வெளி வருகின்றன.
அவர்கள் தங்களுக்கும் வரிச் சலுகை அளிக்க வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்கின்றனர். இதனால் அரசின் வரிச்சலுகை அறிவிப்பின் உண்மையான நோக்கம் நிறைவேறாத நிலை ஏற்படுகிறது.
இதனால் தமிழுக்கு சிறிதும் பொருந்திவராத வகையில் பெயர் சூட்டப்பட்டு எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு கண்டிப்பாக வரிச் சலுகை அளிக்கப்பட மாட்டாது என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து எனக்கு எழும் சந்தேகங்கள்


1. தமிழ் பெயர் வைப்பது நல்லது, அதற்கு வரிச்சலுகை அறிவிப்பதால் என்ன பயன்? படத்தின் பெயர் மட்டும் தமிழாக இருந்தால் போதுமா? படம் எப்படி குப்பையாக இருந்தாலும் சரியா?


2. படத்துக்கு தமிழ் பெயர் வைப்பதால் மட்டும் தமிழ் வளர்ந்து விடுமா?
3. தமிழ் பெயர் வைப்பதால் வரி விலக்கு என்பதற்கு பதிலாக, தமிழ் பெயர் வைக்கா விட்டால் வரி எப்போதும் இருப்பதை விட அதிகம் என்று ஏன் அரசுக் கூறக்கூடாது?


4. மிகவும் சிறப்பாக எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு தற்போது கொடுக்கப்படும் சலுகைககளை ஏன் உயர்த்த கூடாது?


5. எந்த ஒரு சுகாதார வசதியும் இல்லாமல், மிகவும் மோசமாக வைத்து இருக்கும் திரை அரங்குகள் கண்டபடி கட்டணம் வசூலித்து கொண்டு இருப்பதை ஏன் அரசு கண்டு கொள்ளவில்லை?


6. டிக்கெட் கட்டணத்தை கட்டுப்படுத்திய அரசு இப்பொழுது அதை பற்றி கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்?

Buzz It

ஹிட்டா இல்ல ஷிட்டா


நம்ம சிம்பு படம் காளைக்கு தான் இப்படி ஒரு விளம்பரம் ஹா ஹா ஹா தப்பு பண்ணலாம் ஆனா இது கொடுமையிலும் கொடுமை. ஒரு வேளைபடத்தோட முடிவு தெரிந்ததுனால இப்படி வெறுப்புல போட்டுடாங்களோ என்னவோ? ஹீ ஹீ ஹீ. இதுல தலைவர் படத்து பேர வேற டேமேஜ் பண்ணிட்டாங்க அது தான் வயித்தெரிச்சலா இருக்கு... சிம்புனாலே அது வம்பு தான் போல இருக்கு

Buzz It

Sunday, March 02, 2008

02.03.08 இந்தியா Vs ஆஸீ


02.03.08 நடந்த 3 இறுதி போட்டி விளையாட்டில் முதலாவது இறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவுடன் நடந்த போட்டியில் அசத்தலாக வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சச்சின் அடித்த சதமும் ரோகித் ஷர்மாவின் (66) பொறுப்பான ஆட்டமும் இந்தியா வெற்றி பெற உதவியது. பந்து வீச்சாளர்களும் குறைந்த ரன்களில் ஆஸியை அடக்கியதும் ஒரு காரணம். சச்சினுக்கு இந்த போட்டியை கண்டிப்பாக மறக்க முடியாது. பொதுவாக சச்சின் 100 எடுத்தால் இந்தியா தோற்று விடும் என்பது ஒரு பொதுவான கருத்து ஆனால் இப்போட்டியில் அவுட் ஆகாமல் 117* ரன்கள் எடுத்து உள்ளார். சச்சின் இதுவரை 41 சதங்கள் எடுத்து இருந்தாலும் இந்த சதம் மிகவும் சிறப்பு ஏ்னென்றால் இது வரை சச்சின் ஆஸீ மண்ணில் 100 எடுத்தது இல்லை ஒரு நாள் போட்டிகளில். ஸ்டீவ் வாக் குறிப்பிடும் போது சச்சின் இந்த குறையை தீர்த்து வைப்பாரா? என்று கேட்டு இருந்தார். ஏனென்றால் சச்சினுக்கு இதுவே கடைசி ஆஸீ டூர் ஆக இருக்கும், இந்த நிலையில் இவர் சதம் அடித்து இருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சியான ஒன்று தான். பொதுவாக இந்தியாவுக்கு இறுதி போட்டி என்றாலே பயம் தான், இதே போல் அடுத்த போட்டியிலும் வென்று இந்தியா தொடரை கைப்பற்றுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

போட்டியில் குறிப்பிடத்தக்கவை


சிட்னியில் நடந்த 11 போட்டிகளிலும் இந்தியா தோல்வி அடைந்து இதில்முதல் முறையாக வெற்றி பெற்று இருக்கிறது.


சச்சின் 9 ஆண்டுகளுக்கு பிறகு இறுதி போட்டியில் சதம் அடித்து இருக்கிறார்.


சச்சின் 99 ரன் எடுத்து இருந்த போது லீ வீசிய பீமர் பந்தில் தலையில் அடிபட்டது, சச்சின் அதை பெரிதாக எடுத்து கொள்ளாததால் சர்ச்சை தவிர்க்கப்பட்டது.


ஹர்பஜன் உடன் சண்டை போட்டு வந்த சைமண்ட்ஸ் ம் ஹைடனும் இவருடைய பந்திலேயே அவுட் ஆனார்கள்.


சச்சின் இதுவரை 39 போட்டிகளில் ஆஸ்திரேலியாவில் விளையாடி இருந்தாலும் இதுவே அவருக்கு முதல் சதம்.


ஆஸீ கடைசி வரை சச்சின் தங்கள் நாட்டில் சதம் எடுக்க விடாமல் பல முறைகளை கையாண்டு போராடியது அத்தனையையும் தடுத்து இந்த ரன் இயந்திரம் முத்திரை பதித்தது.

Buzz It

விஜய் டிவி யின் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு

விஜய் டிவி சமீப காலங்களில் புதிது புதிதாக நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி கொண்டு உள்ளது. இதை பார்த்து மற்ற டிவி க்கள் காப்பி அடித்து கொண்டு இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. விஜய் டிவி யும் வட இந்திய மற்றும் வெளிநாட்டு டிவி களை பார்த்து காப்பி அடித்து கொண்டு தான் உள்ளது, அதையும் மறுக்க முடியாது. இருந்தாலும் வித்யாசமான நிகழ்ச்சிகளை தொடர்ந்து தந்து கொண்டு இருக்கிறது, அதற்காக கண்டிப்பாக பாராட்ட வேண்டும், தொடர்களை தராமல் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தருவதற்கு விஜய் டிவி ஒரு முன்னுதரானமாக இருந்தது என்றால் மிகை ஆகாது. விஜய் டிவி யில் இருந்து சென்றவர்கள் குறிப்பாக இப்பொழுது சன் டிவி அசத்த போவது யாரு க்கு சென்றவர்கள் நன்றி மறந்து தங்களுக்கு வாழ்வு கொடுத்தது மற்றும் தன்னை ஆளாக்கியது சன் டிவி தான் என்று கூறிய போது, நன்றி கிலோ என்ன விலை என்று கேட்க தோன்றியது? அவர்கள் விஜய் டிவி யுடன் பிரச்சனையுடன் சென்றாலும் இவ்வாறு கூறியதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. விஜய் டிவி இவர்களை இவ்வாறு அறிமுக படுத்த வில்லை என்றால் இந்நேரம் அவர்களுடைய நிலைமை கோட் சூட்டுடன் இருக்குமா என்பது சந்தேகமே!!! இப்பொழுது தமிழை மேம்படுத்த அல்லது பிரபலப்படுத்த மற்றும் தமிழ் பேச்சாளர்களை அதிகரிக்க புது நிகழ்ச்சி ஒன்றை ஆரம்பித்து இருக்கிறார்கள் விஜய் டிவி அது தான் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு. தமிழ் பேசுவதையே அசிங்கமாக நினைக்கும் தமிழ்நாட்டில் இதை போன்ற நிகழ்ச்சிகள் வருவதில் ஆச்சர்யம் இல்லை. 10 ம் வகுப்பு வரை கட்டாய தமிழ் சட்டம் கண்டிப்பாக வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. இதற்கும் கண்டிப்பாக எதிர்ப்புகள் இருக்க தான் செய்யும், எதிர்ப்பு என்பது எதற்கு தான் இல்லை. இதற்க்கு தமிழ் மட்டும் என்ன விதி விலக்கா?

Buzz It

Saturday, March 01, 2008

பட்ஜெட் 2008 - 2009 | விவசாயக்கடன் தள்ளுபடி

பட்ஜெட் 2008 ல விவசாய கடனை தள்ளுபடி பண்ணி இருக்கிறதா சொல்லி இருக்காங்க ஒரு சிலர் இதை தப்புன்னும் சரின்னும் சொல்லிட்டு இருக்காங்க எப்போதும் போல. தமிழ் நாட்டுல விவசாய கடனை தள்ளுபடி பண்ணிய போது அதனால் பயனடைந்த குடும்பங்கள் பல. தண்ணீர் பிரச்சனை,ஆட்கள் கூலி அதிகம், பருவ மழை பொய்ப்பு, வெள்ளம் போன்ற காரணங்களால் போட்ட முட்டு வழியை (முதல்) எடுக்க வழியில்லாமல் பல குடும்பங்கள் தத்தளித்து கொண்டு இருக்கிறது. பலர் தற்கொலை செய்து கொண்டதாகவும், எலியை சாப்பிட்டதாகவும் ஆதாரபூர்வமான செய்திகள் நமக்கு வந்தது. இவ்வளவு கஷ்டப்படும் இவர்களுக்கு விவசாய கடனை தள்ளுபடி செய்தது தவறில்லை. இதில வோட்டிற்க்காக கொடுத்தார்களா என்ற விவாதத்திற்கு நான் வரவில்லை. கலைஞர் தமிழ் நாட்டில் கடனை தள்ளுபடி செய்த போது அதில் பலன் அடைந்தவர்கள்,கஷ்டம் குறைந்தவர்கள் கண்டிப்பாக கட்சி பேதம் இல்லாம அவரை மனதார வாழ்த்தி இருப்பார்கள். தமிழ்நாட்டை போலவே மற்ற மாநிலங்களும் இதே நிலைமை தான், மொழிகள் மாறினாலும் விவசாயிகள் படும் கஷ்டம் ஒண்ணுதானே!! இதில் ஏற்று கொள்ளவே முடியாதது இதை பயன் படுத்தி பல பணக்காரர்களும், கட்சிக்காரர்களும் தங்கள் கடனை தள்ளுபடி செய்து கொண்டது. எனவே நோக்கம் நல்லதாக இருந்தாலும் செயல்படுத்தும் விதம் சரி இல்லை என்றால் எந்த செயலும் சரியாக வராது. இவங்க பாராளுமன்றத்துல ஒழுங்கா செயல்படதாதுனால (இவங்க தான் அப்பப்ப குடுமி பிடி சண்டை போடுறாங்களே) ஏற்படுற நஷ்டத்தை விட இந்த நஷ்டம் எனக்கு பெரிதாக தோன்றவில்லை.

Buzz It

பெர்லினில் அமீர்

இயக்குனர் அமீருக்கு பெர்லினில் நடந்த உலக திரைப்பட விழாவில் கலந்து கொண்டு ஆசியா பிரிவில் சிறந்த இயக்குனருக்கான சிறப்பு விருதை பெற்று இருக்கிறார். இதில் விழாவில் கலந்து கொள்ள வந்த படங்கள் 3,000. அதில் 174 படங்கள்தான் தேர்வாயின. இதில் 36 படங்களை மட்டும் போரம் (Forum) எனும் பிரிவுக்கு தேர்ந்தெடுத்தார்கள். அதில் ஒன்று பருத்தி வீரன். இந்தியாவில் இருந்து சென்ற ஒரே படம் பருத்தி வீரன் என்பது தமிழர்களாகிய நமக்கு மிகவும் பெருமை அளிக்கும் விஷயம். கடந்த முறை ராம் படத்துக்காக அமீர் இதே விழாவில் விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது. அமீர் இதை போல பல விருதுகள் வாங்கி இந்தியாவுக்கு குறிப்பாக தமிழ் நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

Buzz It

யாஹூ பிளாக் 360*


எனக்கு இந்த நெட் ல ஒரு ஆர்வம் இருந்துட்டே இருந்தது ரொம்ப நாளா.. நானும் என்னனென்னவோ முயற்சி செய்து பார்த்தேன் ஒண்ணும் வொர்க் அவுட் ஆகல அப்ப தான் இந்த யாஹூ 360* பார்த்தேன் அதுல போட்டோ போட்டு அதுக்கு கமெண்ட் எழுதி பார்த்தேன் (தங்க்ளிஷ் கமெண்ட் ;) ) அது கொஞ்சம் திருப்தியா இருந்துச்சு , அப்ப தமிழ் பாண்ட் வேற இல்லாததுனால சரியா பண்ண முடியல அப்படியே தமிழ இங்கிலிசா எழுதி இருந்தேன், பாதி பேர் அதை படித்து ஏர்வாடி போற நிலைமைல இருந்தாங்க அது வேற மேட்டர் ஹி ஹி. உங்களுக்கும் தில் இருந்தா இந்த ப்ளாக் ல இருக்கிற என்னோட யாஹூ பிளாக் லிங்க் போய் பாருங்க.

Buzz It

கிளம்பிட்டான்யா...

எனக்கு இந்த blog ல இல்ல எதாவது சைட் ல நமக்குன்னு எதாவது பண்ணனும் நம்முடைய கருத்து மற்றும் எண்ணங்களை எங்கயாவது எழுதணும்னு ரொம்ப நாளா ஆசை இருந்தது அப்ப எல்லாம் இந்த சைட் ல தமிழ் ல எழுதற மாதிரி எல்லாம் வரல. என்ன தான் நம்ம கருத்த இங்கிலீஷ் சொன்னாலும் முழுமையா சொன்ன மாதிரி இருக்காது நமக்கும் ஒரு திருப்தி கிடைக்காது (இங்கிலீஷ் நமக்கு ஒழுங்கா வேற வராது அது வேற விஷயம் ஹீ ஹீ ஹீ ) அப்ப தான் இந்த கூகிள் தமிழ் பான்ட் வெளியிட்டாங்க .. (அதுக்கு முன்னாடியும் இருந்தது ஆனால் இந்த அளவுக்கு பேமஸ் ஆகல)இது ரொம்ப உதவியா இருந்துச்சு இதை வைத்து நான் பல சைட் ல கமெண்ட் எழுதி இருக்கேன். இதற்க்கு அப்புறம் தான் இந்த பிளாக் எல்லாம் பண்ண தைரியம் வந்தது. இப்ப நெட் ல மொக்கை போட நானும் ரெடி ஆகிட்ட்ட்ட்ட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

Buzz It