"Layoff" (ஆட்குறைப்பு) - என் அனுபவங்கள்+பரிந்துரைகள் ((இறுதி)பாகம் 2)
எப்போதும் தனக்கு கஷ்டம் வரும் போது தான் அதன் வலி புரியும், மற்றவர்களுக்கு ஏற்படும் போது ஓரளவிற்கு தான் உணர முடியுமே தவிர முழுதும் அறிய முடியாது..அதனால தான் முன்னாடியே சொல்லிட்டாங்க போல "தனக்கு வந்தா தான் தெரியும் தலைவலியும் திருகு வலியும்" என்று :-)
Layoff பற்றி கேள்வி பட்டு இருந்தாலும், தெரிந்த நிறுவனங்களில் நடந்து கொண்டு இருந்தாலும் அது பற்றி முக்கியத்துவம் கொடுக்கவில்லை நான். அது நமக்கே நேரும் போது தான் அதன் வீரியம் உணரமுடிந்தது.
நான் ஒரு பிரபல வங்கியில் பணி புரிந்து வருகிறேன், UNIX ஆபரேட்டிங் சிஸ்டம் ல் ப்ரோடக்சன் சர்வர் சப்போர்ட் ல் இருக்கிறேன். எங்கள் நிறுவனத்தில் layoff பற்றி எல்லாம் பேச்சே அடிபடவில்லை அதனால் அது பற்றி நினைப்பு இருந்தாலும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
நானும் என் டீமில் உள்ள பெண் நண்பரும் பேசி கொண்டு இருந்தோம், எங்க TL(team leader) வந்து அந்த பெண்ணை தனியே அழைத்து சென்றார். எதற்கு இவரை கூட்டிக்கொண்டு கொண்டு செல்கிறார், ஏதாவது பிரச்சனையா என்று யோசித்துக்கொண்டு இருந்தேன், கொஞ்ச நேரத்தில் திரும்ப வந்தார் "she is leaving" னு கூறினார், எனக்கு ஒன்றும் புரியவில்லை..என்ன சொல்றீங்கன்னு கேட்டேன்..Our company has started the layoff னு சொன்னாரு எனக்கு குபீர்னு ஆகி விட்டது. என்னடா கொஞ்ச நேரம் முன்னாடி சிரித்து பேசிட்டு இருந்தோம் அதற்குள் நிலைமை இப்படி ஆகி விட்டதே என்று, அந்த பெண்ணுக்கும் அதிர்ச்சி தான் என்றாலும் அவர் ஏற்கனவே இங்கே பிடிக்கவில்லை இந்தியா செல்வதாக கூறி கொண்டு இருந்தார், எனவே மனதளவில் பெரிய பாதிப்பில்லை. இந்த நீக்கம் திறமையின் அடிப்படையில் அல்ல.
இன்னொரு டீமில் ஒருத்தர் விடுமுறையில் இந்தியா சென்று இருந்தார் அவருக்கு அவருடைய TL போன் செய்து வேலையை விட்டு நீக்கியதாக கூறி விட்டார், குழந்தை பெறுவதற்காக விடுப்பில் இருந்த ஒரு பெண்ணுக்கும் இதே நிலைமை.
ஒரு சிலருக்கு வேலையை விட்டு நீக்கிய செய்தி கூறியவுடன் செக்யுரிட்டி உடன் வெளியே சென்று விடப்பட்டனர், அவர்களால் திரும்ப மெயில் மற்றும் எதையும் அக்சஸ் செய்ய முடியாது, என்ன நடந்தது என்பதை உடன் பணி புரிபவர்களிடமும் கூற முடியாது அப்போதைக்கு.
இதில் நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர் என்று எந்த பாகுபாடும் இல்லை. எவரை வேண்டும் என்றாலும் உடனடியாக நீக்குகிறார்கள். உடனடியாக என்றால் உடனடியாக தான், மீட்டிங் முடிந்து வெளியே வந்தால் வீட்டிற்கு போக வேண்டியது தான்
இதில் ஒரு ஊழியரின் திறமையை வைத்து மட்டும் நீக்குவதில்லை, அவருடைய சம்பளம் அதிகம் இருந்தாலும், கடைசியாக சேர்ந்தவர் என்று எதையும் அறுதியிட்டு கூற முடியாத அளவிற்கு நீக்கம் உள்ளது.
இதை போல பல செய்திகள் உள்ளன, இது என் நிறுவனத்தில் மட்டுமே நடந்தது என்று எண்ண வேண்டாம், பல நிறுவனங்களில் இதை போல நடந்துள்ளது, நடந்து கொண்டு இருக்கிறது. இவை யாவும் வெளிநாடுகளில் நடந்தவையை அடிப்படையாக வைத்து கூறி இருக்கிறேன். இந்தியாவில் இந்த அளவிற்கு மோசம் இருக்காது என்று நம்புகிறேன்.
மேலே சிலதை நான் எதற்கு கூறினேன் என்றால், எது எப்போது நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. மிகவும் அசால்ட்டாக எடுத்துக்கொள்ளாமல் நிலைமை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள் எதற்கும் தயாராக இருங்கள் என்று அறிவுறுத்தவே. எதற்கும் தயாராக இருந்து கொண்டால் பாதிப்பு ஏற்பட்டாலும் அதன் அதிர்ச்சியை நம்மால் தாங்கி கொள்ள முடியும்
என்னுடைய சில பரிந்துரைகள்
தற்போது உள்ள நிறுவனத்தில் இருந்து வேறு நிறுவனத்திற்கு மாற முயற்சிக்காதீர்கள் காரணம் புதியவராக இருந்தால் வேலைய விட்டு நீக்கப்படுவதில் அவர்களுக்கே வாய்ப்பு அதிகம் (Last joinee first out)
தற்போதுள்ள வேலையில் தவறுகள் ஏற்படாமல் பார்த்து கொள்ளுங்கள்
நீங்கள் செய்யும் வேலையை மற்றவர்களுக்கு அறிய படுத்துங்கள் (visibility)
முடிந்த வரை உங்கள் மேலதிகாரியுடன் முறைத்து கொள்ளவேண்டாம் மற்றும் உங்கள் டீம் சம்பந்தப்பட்ட இடங்களில் தேவை இல்லாத பிரச்னையை கிளப்ப வேண்டாம்
முறுக்கி கொண்டு நிற்பது எல்லாம் தற்போது வேலைக்காகாது என்பதை உணருங்கள்
முடிந்தால் ஏதாவது certification (இது ஐ டி துறையை சேர்ந்தவருக்கு) முடித்து வையுங்கள்
உங்களுக்கு வேலை எதுவும் இல்லை என்பதை காண்பித்து கொள்ளாதீர்கள் (உண்மையிலேயே ஒரு சிலர் பிராஜக்ட் இல்லாமல் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் அதனால் கட்டாய விடுப்பு அளிக்கப்படுகிறது, இது அவர்களுக்கல்ல) ஏதாவது வேலையை நீங்களே எடுத்து போட்டு செய்யுங்கள்
2009 வருடம் (குறிப்பாக முதல் ஐந்து மாதம்) எந்த ஒரு பெரிய ரிஸ்க் ம் எடுக்க வேண்டாம்
புதிய ஆடம்பர பொருட்கள் அல்லது விலையுயர்ந்த பொருட்கள், வாகனங்கள் எதுவும் வாங்காதீர்கள், குறிப்பாக வெட்டி செலவு செய்யவே வேண்டாம்
முடிந்த வரை சேமிப்பில் கவனம் செலுத்துங்கள், பின்னாளில் வேலையில் பிரச்சனை என்றால் சமாளிக்க உதவும்
என் ப்ராஜக்ட் முடிவதால் ஏப்ரல் வரையே என் வேலை உறுதி செய்யப்பட்டுள்ளது (அதே பெரிய விஷயம்) அதன் பிறகு இங்கேயே வேறு டீமிற்கு மாற்றி தருகிறேன் என்று கூறி இருக்கிறார்கள், இருந்தாலும் நான் எங்களுடைய இந்திய கிளைக்கு மாற்று கேட்டு இருக்கிறேன், எதுவும் உறுதி இல்லை இருந்தாலும் செய்து தருகிறேன் என்று நம்பிக்கை அளித்துள்ளார்கள். எதுவும் எப்போதும் நடக்கும் அதனால் அதை பற்றி எல்லாம் நான் நினைத்து எப்போதும் கவலைபடுவதில்லை. நடப்பதை யாரும் தடுக்க முடியாது.
என்னுடைய ஆலோசனைகள்
முதலில் எதற்கும் கவலை படாதீர்கள், யோசிப்பது வேறு கவலைப்படுவது வேறு. கவலைப்படுவதால் எந்த பிரச்சனையும் தீர்ந்து விடப்போவதில்லை. அவ்வாறு நீங்கள் கவலை பட்டுக்கொண்டு இருப்பதால் எந்த பயனும் இல்லை, நீங்கள் கவலை பட்டதை ஒரு லிஸ்ட் எடுத்து பாருங்கள் அதில் நாம் கவலை பட்டதால் எத்தனை பிரச்சனை தீர்ந்து இருக்கிறது என்று. அதன் பின் நாம் எவ்வளவு முட்டாள் தனமான காரியம் செய்கிறோம் என்று புரியும்.
தற்போது அனைவருக்கும் தேவை மன தைரியம் மட்டுமே. எது வந்தாலும் பார்த்து கொள்ளலாம் என்ற தைரியம் மனதில் இருக்க வேண்டும்.
ஒரு சிலர் கஷ்டப்படாமலே வேலைக்கு சேர்ந்து, பல ஆயிரம், லட்சம் சம்பாதித்து இருக்கலாம் அதனால் வாழ்க்கையில் கஷ்டம் என்ற நிலையை எட்டி பார்க்காமலே இருந்து இருக்கலாம். அவர்களுக்கு தற்போதைய நிலை, வாழ்க்கை என்றால் என்ன? கஷ்டங்கள் என்றால் என்ன? முக்கியமாக பணத்தின் அருமை என்ன? நாம் செய்யும் வேலையின் முக்கியத்துவம் என்ன? பணம் மட்டுமே அல்ல வாழ்க்கை அதையும் தாண்டி பெற்றோர் பாசம், ஆதரவு, நண்பர்கள் நட்பு, பணியில் கிடைக்கும் மன நிறைவு என்று பல உள்ளது என்பதை கண்டிப்பாக புரிய வைக்கும். பெரிய நிறுவனங்கள் தாங்கள் செய்த தவறுகளை திருத்தி கொள்ள இது ஒரு வாய்ப்பாக இருக்கும்.
எனவே நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்று நினைப்பதை தவிர வேறு வழி இல்லை, கவலை இல்லாமல் இருப்பதும் (அதற்காக எதற்கும் முயற்சி செய்யாமல் இருந்து விடாதீர்கள்) தைரியமான மனதை கொண்டு இருப்பதுமே அனைவருக்கும் தற்போது மிகவும் அவசியமான ஒன்றாகும். வரும் ஆண்டு 2009 கடும் சவால்களை ஐ டி துறை மட்டுமல்லாது அனைத்து துறையினரும் எதிர் நோக்கியுள்ளோம், எனவே உண்மை நிலை உணர்ந்து அதன் படி நடந்தால் வாழ்க்கையில் எதுவுமே ஒரு பொருட்டே இல்லை, நம்மால் எதையும் சமாளிக்க முடியும். எத்தனையோ பிரச்சனைகளை கடந்து வந்துள்ளோம் அதை போல இது ஒரு பிரச்சனை அவ்வளோ தான். இந்த சவாலை நம் சமாளிக்கும் திறனுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாக கருதினால் மலையும் கடுகு. வாழ்க்கையில் நமக்கு மட்டுமே கஷ்டம் இல்லை "நமக்கும் கீழே உள்ளோர் கோடி"
மேலே கூறியவை யாவும் என் சொந்த கருத்துக்களே, எனவே எனக்கு பிரச்சனையாக தோன்றும் விஷயம் மற்றவர்களுக்கு எதுவுமில்லாத விசயமாக இருக்கலாம். இது நாம் எச்சரிக்கையாக இருந்து கொள்வதற்கான அறிவுறுத்தல் மட்டுமே.











39 COMMENTS:
நல்ல பதிவு!
ஆலோசனைகளுக்கு நன்றி!
உண்மை நிலவரத்தை அப்படியே எடுத்துச்சொல்லியுள்ளீர்கள் கிரி.
நான் வேலை செய்யும் போதும் என் கம்பனி மோசமான வீழ்ச்சியை சந்திக்க தொடங்கியபோது இப்படியா நிலையை அனுபவித்துள்ளேன்.அப்போது நான் படிப்பு காரணமாக இன்னும் 3 மாதங்களில் விலக இருந்தேன்.என்றாலும் என் முதல் வேலையிலேயே retrench ஆக விருப்பம் இல்லை. Boss அழைத்தாலே மனதை திடப்படுத்திக் கொண்டு தான் செல்வோம். ஆனால் நான் விலகும் வரை என் department ல் அப்படி எதுவும் நடக்கவில்லை..
மிகச் சிறந்த தொடர் பதிவு.
உங்கள் முந்தைய பதிவில் இருந்த நகைச்சுவை உணர்வு இங்கே காணவில்லை.
ஆனால் மிகுந்த அக்கறையான சீரியசனா தலைப்பை அதே அக்கறையுடன் இறுதிவரை கொண்டு சென்றமைக்கு நன்றியும் பாராட்டுகளும்.
Layoff நினைத்தால் கதி கலங்குது.
ஏதாவது Side Business செய்தே தீரவேணும்போல.
அதுகுறித்து ஒரு தனித் தொடர்பதிவை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். நன்றி
//Namakkal Shibi said...
நல்ல பதிவு!//
நன்றி நாமக்கல் சிபி
===================================================================
//'டொன்' லீ said...
உண்மை நிலவரத்தை அப்படியே எடுத்துச்சொல்லியுள்ளீர்கள் கிரி.//
நன்றி டொன் லீ
===================================================================
//தமிழ்நெஞ்சம் said...
மிகச் சிறந்த தொடர் பதிவு.//
நன்றி தமிழ்நெஞ்சம்
//உங்கள் முந்தைய பதிவில் இருந்த நகைச்சுவை உணர்வு இங்கே காணவில்லை.//
உண்மை தான். அந்த தொடர் நகைச்சுவைக்காகவே எழுதினேன். இதிலும் அப்படி எழுதினால் பதிவின் முக்கியத்துவம் குறைந்து விடும் என்றே எழுதவில்லை.
//ஆனால் மிகுந்த அக்கறையான சீரியசனா தலைப்பை அதே அக்கறையுடன் இறுதிவரை கொண்டு சென்றமைக்கு நன்றியும் பாராட்டுகளும்.//
நன்றி
//Layoff நினைத்தால் கதி கலங்குது.
ஏதாவது Side Business செய்தே தீரவேணும்போல//
அவ்வாறு செய்வது நல்லது தான். சுமைகளை குறைக்கும்
//அதுகுறித்து ஒரு தனித் தொடர்பதிவை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். //
எனக்கு அந்த அளவிற்கு அனுபவம் இல்லை, முயற்சி செய்கிறேன். உங்கள் அன்பிற்கு நன்றி.
ஒண்ணும் சொல்றதுகில்ல!
படிக்கும் போதே லேச அடிவயிர பிசையுது! எத்தனை நண்பர்கள் இதனால் கஷ்டப்பட்டிருப்பார்கள்.
உங்கள் ஆலோசனைகள் எல்லாமே பயனுள்ளவை, இருப்பினும் வேலை நீக்கம் இனி நடக்காது என நம்புவோம்.
கிரி... உங்களுடைய சமீபத்தைய பதிவுகளில் மிக நல்ல பதிவு இது. நல்ல எளிய ஆலோசனைகளையும் கடுமையான யதார்த்தத்தையும் எழுதியிருக்கிறீர்கள்.
புத்தாண்டு இனிமையாக அமைய வாழ்த்துக்கள் !!
பதிவை அக்கறையுடன் எழுதியுள்ளீர்கள்.
உங்களின் பரிந்துரைகள், பலரும் இப்போது கடைப்பிடிப்பது தான்.
ஆனால் தற்போது வேலை நீக்கம்
குறைந்துள்ளது என நினைக்கிறேன்.
ஆனால் எப்போதும் வேலையிலிருந்து நீக்கப்படலாம் என அச்சம் நிலவுகிறது தான்.
..............
கிரி அவர்கள் அடுத்த ஆண்டும்
பயனுள்ள + நகைச்சுவையான பதிவுகளை வாரி
வழங்குவார் என நம்புகிறேன்.
என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
புத்தாண்டு வாழ்த்துகள் கிரி!. பிறக்கும் புத்தாண்டு எல்லோருக்கும் பிரகாஷமாக அமைய வேண்டும் என்று வேண்டிக் கொள்வோம்.
//நீங்கள் கவலை பட்டதை ஒரு லிஸ்ட் எடுத்து பாருங்கள் அதில் நாம் கவலை பட்டதால் எத்தனை பிரச்சனை தீர்ந்து இருக்கிறது என்று. அதன் பின் நாம் எவ்வளவு முட்டாள் தனமான காரியம் செய்கிறோம் என்று புரியும்.//
100/100 சரி.
கஷ்டம் தான் கிரி.
வாழ்க்கையில் எதையும் எதிர்கொள்ளும் தைரியத்தை இந்த கட்டம் தரும். அனைவருக்கும் தேவையான ஆலோசனைகள்...
Excelllent Giri
ஜனவரி 1. புத்தாண்டு முதல் வலை உலகில் ஓடி, எனது சேவையை செய்யலாம் என்று இருக்கிறேன். தங்களது மேலான ஆதரவை வேண்டி வரவேற்கிறேன்.
//வால்பையன் said...
படிக்கும் போதே லேச அடிவயிர பிசையுது! எத்தனை நண்பர்கள் இதனால் கஷ்டப்பட்டிருப்பார்கள்.//
என் நண்பர்கள் பலர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் அருண்.
//உங்கள் ஆலோசனைகள் எல்லாமே பயனுள்ளவை, இருப்பினும் வேலை நீக்கம் இனி நடக்காது என நம்புவோம்.//
இன்னும் பெரிதாக ஆரம்பிக்கவில்லை என்பதே உண்மை. நல்லதையே நினைப்போம்.
===================================================================
//வாசுகி said...
பதிவை அக்கறையுடன் எழுதியுள்ளீர்கள்.//
நன்றி வாசுகி
//கிரி அவர்கள் அடுத்த ஆண்டும்
பயனுள்ள + நகைச்சுவையான பதிவுகளை வாரி
வழங்குவார் என நம்புகிறேன்//
:-))) உங்கள் நம்பிக்கை வீண் போகாது.
//என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.//
உங்களுக்கும்
===================================================================
//ராம்சுரேஷ் said...
புத்தாண்டு வாழ்த்துகள் கிரி!. பிறக்கும் புத்தாண்டு எல்லோருக்கும் பிரகாஷமாக அமைய வேண்டும் என்று வேண்டிக் கொள்வோம்.//
உங்கள் எண்ணம் போலவே நல்லபடியாக நடக்க வேண்டுகிறேன். உங்கள் முதல் வருகைக்கு நன்றி.
===================================================================
//பாசகி said...
//நீங்கள் கவலை பட்டதை ஒரு லிஸ்ட் எடுத்து பாருங்கள் அதில் நாம் கவலை பட்டதால் எத்தனை பிரச்சனை தீர்ந்து இருக்கிறது என்று. அதன் பின் நாம் எவ்வளவு முட்டாள் தனமான காரியம் செய்கிறோம் என்று புரியும்.//
100/100 சரி//
வருகைக்கு நன்றி சக்தி. புத்தாண்டு வாழ்த்துக்கள் :-)
===================================================================
//சரவணகுமரன் said...
கஷ்டம் தான் கிரி.//
என்ன செய்வது? வேறு வழி இல்லை.
//வாழ்க்கையில் எதையும் எதிர்கொள்ளும் தைரியத்தை இந்த கட்டம் தரும். //
நானும் இதையே நம்புகிறேன். இதை அனைவரும் ஒரு நல்ல அனுபவமாக எடுத்துக்கொள்ள வேண்டியது தான்.
===================================================================
//arun said...
Excelllent Giri//
நன்றி அருண். ரொம்ப நாளா ஆளை காணோம்!
===================================================================
//கூட்ஸ் வண்டி said...
ஜனவரி 1. புத்தாண்டு முதல் வலை உலகில் ஓடி, எனது சேவையை செய்யலாம் என்று இருக்கிறேன். தங்களது மேலான ஆதரவை வேண்டி வரவேற்கிறேன்.//
உங்கள் கூட்ஸ் வண்டி ஒரு எக்ஸ்பிரஸ் வண்டியாக கலக்க வாழ்த்துக்கள் :-)
நல்ல பதிவுகளை கொடுக்க வாழ்த்துக்கள்.
''இனி நல்லதே நடக்க ஆண்டவனை பிரார்த்தனை செய்யுவோம்''
மிக அருமையாக மிகுந்த அக்கரையுடன் எழுதியிருக்கீங்க கிரி
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நடப்பினை உள்ளது உள்ளபடி உரைத்ததோடு நில்லாது
கடைப் பிடிக்க வேண்டிய
நல்ல அறிவுரைகளை வழங்கி
தைரியமும் அளித்திருக்கிறீர்கள்.
பாராட்டுக்களும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களும்!
// எப்போதும் தனக்கு கஷ்டம் வரும் போது தான் அதன் வலி புரியும், மற்றவர்களுக்கு ஏற்படும் போது ஓரளவிற்கு தான் உணர முடியுமே தவிர முழுதும் அறிய முடியாது..அதனால தான் முன்னாடியே சொல்லிட்டாங்க போல "தனக்கு வந்தா தான் தெரியும் தலைவலியும் திருகு வலியும்" என்று :-)//
கிரி, மற்றவர்கள் கஷ்டத்தை நீங்கள் முழுவதுமாக உணர்ந்தே எழுதியிருக்கிறீர்கள், படிப்பவர்களையும் உணர வைத்து இருக்கிறீர்கள்...
நன்றி..
ஈ ரா
அடிச்சு ஆடறதுன்னா இப்படி இருக்கணும் கிரி!மிகவும் பயனுள்ள பதிவு.
புது வருடம் ஆரம்பிக்குதுன்னு சொல்லிக்கிறாங்க!உங்களுக்கும் ஒரு வாழ்த்து சொல்லிக்கிறேனே!
//படகு said...
''இனி நல்லதே நடக்க ஆண்டவனை பிரார்த்தனை செய்யுவோம்''//
வழிமொழிகிறேன். உங்கள் முதல் வருகைக்கு நன்றி படகு.
===================================================================
//மங்களூர் சிவா said...
மிக அருமையாக மிகுந்த அக்கரையுடன் எழுதியிருக்கீங்க கிரி//
நன்றி சிவா
//இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.//
உங்களுக்கும் வாழ்த்துக்கள் :-)
===================================================================
//ராமலக்ஷ்மி said...
பாராட்டுக்களும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களும்!//
நன்றி ராமலக்ஷ்மி. புத்தாண்டு வாழ்த்துக்கள்.
===================================================================
// ஈ ரா said...
கிரி, மற்றவர்கள் கஷ்டத்தை நீங்கள் முழுவதுமாக உணர்ந்தே எழுதியிருக்கிறீர்கள், படிப்பவர்களையும் உணர வைத்து இருக்கிறீர்கள்...//
நன்றி ஈ ரா.
எனக்கு எடுத்தவுடன் நல்ல வேலை கிடைத்து வந்துவிடவில்லை. மிகவும் கஷ்டப்பட்டே இந்த நிலைக்கு வந்து இருக்கிறேன் நண்பர்கள் உதவியுடன். சாப்பாட்டிற்கே பணம் இல்லாத நாட்கள் பல உண்டு, எனவே எனக்கு இந்த கஷ்டம் புரியவில்லை என்றால் எந்த காலத்திலும் இதை உணர மாட்டேன். எனவே தான் இதை குறிப்பிட்டு எழுதி இருந்தேன்.
===================================================================
//ராஜ நடராஜன் said...
அடிச்சு ஆடறதுன்னா இப்படி இருக்கணும் கிரி!மிகவும் பயனுள்ள பதிவு.//
நன்றி ராஜ நடராஜன். உங்களை போல ஒரு சிலர் கூறும் போது மகிழ்ச்சியாக உள்ளது, நாம் பயனுள்ள பதிவை எழுதி இருக்கிறோம் என்று.
//புது வருடம் ஆரம்பிக்குதுன்னு சொல்லிக்கிறாங்க!உங்களுக்கும் ஒரு வாழ்த்து சொல்லிக்கிறேனே//
:-) உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்
கிரி,
நிதர்சனத்தை பதிவு செய்துள்ளீர்கள்;வலிக்கிறது.
தொடங்கும் புத்தாண்டு அனைத்தையும் சரி செய்யும் என நினைக்கிறேன்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
//வடுவூர் குமார் said...
உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்//
நன்றி வடுவூர் குமார். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
===================================================================
//வடகரை வேலன் said...
கிரி,
நிதர்சனத்தை பதிவு செய்துள்ளீர்கள்;வலிக்கிறது//
பாதிக்கப்பட்டவர்கள் இது பற்றி எண்ணி மேலும் வருத்தமடையாமல் நடைமுறையை புரிந்து கொண்டு நடப்பது நல்லது.
//தொடங்கும் புத்தாண்டு அனைத்தையும் சரி செய்யும் என நினைக்கிறேன்//
நல்லதையே நினைப்போம், நல்லதே நடக்கும்.
//புத்தாண்டு வாழ்த்துக்கள்//
உங்களுக்கும் வாழ்த்துக்கள், உங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பு கூறுங்கள்.
Hi Kiri Vaanakaam
Good Post for the right time..
the Lay-off that time some company give some month Pay-off.
I think now in Bangalore based IT people create one organization to their rights and and get their benefit and secure their life..
all IT people joined together..
and wish you Happy New year all your family and Friends..
God Plus You..
yours
puduvai siva
//எனவே நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்று நினைப்பதை தவிர வேறு வழி இல்லை,//
:(
இப்போதைக்கு எனக்கு ஒண்ணும் பிரச்சனையில்லைங்க. எனிவே, ரொம்ப நல்ல பதிவு.
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
:)
பதிவுன்னா இப்படி யல்லவா இருக்கணும், நல்ல தகவல் கிரி
நிறைய சொல்லுங்க கேட்டுகிறேன்
worth
பெரிய விசயமெல்லாம் எழுதறிங்க அண்ணணே...
பயனுள்ள பதிவு...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
//
ஏதாவது பிரச்சனையா என்று யோசித்துக்கொண்டு இருந்தேன், கொஞ்ச நேரத்தில் திரும்ப வந்தார் "she is leaving" னு கூறினார்,
//
இங்கேயும் அதே நெலம தான்.. வெள்ளிகிழமை வந்தாலே புளி தான் வயித்துல..
வரும் ஆண்டு இனிதே அமையட்டும் அனைவருக்கும்.
//புதுவை சிவா :-) said...
Hi Kiri Vaanakaam//
வணக்கம் சிவா
//Good Post for the right time..//
நன்றி
//the Lay-off that time some company give some month Pay-off.//
உண்மை தான் பலருக்கு ஒரு மாதம் சம்பளம் கொடுத்து நீக்கி இருக்கிறார்கள்.
//I think now in Bangalore based IT people create one organization to their rights and and get their benefit and secure their life..//
இதெல்லாம் வேலைக்கு ஆகும் விசயமாக எனக்கு தோன்றவில்லை, நிறுவனம் நஷ்டத்தில் ஓடுகிறது என்றால் அவர்கள் செய்யும் வேலை நீக்கம் தவிர்க்க முடியாத ஒன்று.
//wish you Happy New year all your family and Friends..//
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
===================================================================
// புருனோ Bruno said...
//எனவே நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்று நினைப்பதை தவிர வேறு வழி இல்லை,//
:(//
வாங்க புருனோ சார்
===================================================================
//Karthik said...
இப்போதைக்கு எனக்கு ஒண்ணும் பிரச்சனையில்லைங்க.//
இது இப்படியே தொடர இறைவனை வேண்டுகிறேன் :-)
//எனிவே, ரொம்ப நல்ல பதிவு.//
நன்றி
//புத்தாண்டு வாழ்த்துக்கள்!//
உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
===================================================================
//நசரேயன் said...
பதிவுன்னா இப்படி யல்லவா இருக்கணும், நல்ல தகவல் கிரி//
நன்றி நசரேயன்
//நிறைய சொல்லுங்க கேட்டுகிறேன்//
அவ்வளோ தாங்க. இனி நாம கவனமாக இருப்பது தான் முக்கியம்.
===================================================================
//vipoosh said...
worth//
முதல் வருகைக்கு நன்றி விபூஷ்
===================================================================
//தமிழன்-கறுப்பி... said...
பெரிய விசயமெல்லாம் எழுதறிங்க அண்ணணே...//
எனக்கு தெரிந்த கொஞ்சத்தை பகிர்ந்து கொண்டேன் அவ்வளோ தான்.
//பயனுள்ள பதிவு...//
நன்றிங்க
//இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...//
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
===================================================================
//ஆளவந்தான் said...
இங்கேயும் அதே நெலம தான்.. வெள்ளிகிழமை வந்தாலே புளி தான் வயித்துல..//
அட! ஆளவந்தான் இங்க தினம் தினம் எல்லோருக்கும் பேதியே ஆகிட்டு இருக்கு.
//வரும் ஆண்டு இனிதே அமையட்டும் அனைவருக்கும்//
வழிமொழிகிறேன்
Very Thoughtful Post...
Happy New Year !!!
P.S: Aanaalum innum poruppu ilaama jollya suthi kittu irukken varumbothu paathukalaamnu ;)
//நான் எங்களுடைய இந்திய கிளைக்கு மாற்று கேட்டு இருக்கிறேன், எதுவும் உறுதி இல்லை இருந்தாலும் செய்து தருகிறேன் என்று நம்பிக்கை அளித்துள்ளார்கள்//
கிரி... உங்களுக்கு இந்திய கிளைக்கு மாறுதல் கிடைக்க வாழ்த்துக்கள்.
லேஆப் பற்றி விரிவாக எழுதியமைக்கு நன்றி..! இந்த பதிவு பலருக்கு பல விஷயங்களை புரிய வைத்திருக்கும் என்றால் மிகையல்ல. தமிழ்நாட்டில் இதேபோல ஆள்குறைப்பு நிகழ்வுகள் பல நிறுவனங்களிலும் நடந்து வருகின்றன. பல நிறுவனங்கள் எதற்காக இப்படியொரு பிரச்னை வந்தது என்று கூட தெரியாமல் எல்லோரும் குறைக்கிறார்கள்... நாங்களும் குறைக்கிறோம் என்பது போல குறைத்து வருகிறார்கள்.
Hello Giri,
A well written blog. Keep it up. Should be helpful for a lot of people.
All the best.
Cheers,
Ramanna
//nathas said...
Very Thoughtful Post...//
நன்றி nathas
//Happy New Year !!!//
உங்களுக்கும்
//Aanaalum innum poruppu ilaama jollya suthi kittu irukken varumbothu paathukalaamnu ;)//
வரும் போது பார்த்துக்கலாம்னு இருப்பது சரி என்றாலும், எச்சரிக்கையாக இருப்பதில் தவறில்லையே. இலாபம் இல்லை என்றாலும் நஷ்டம் கண்டிப்பாக இல்லையே இதனால். தயவு செய்து அசால்ட்டாக இருக்காதீர்கள்.
===================================================================
// சினிமா நிருபர் said...
கிரி... உங்களுக்கு இந்திய கிளைக்கு மாறுதல் கிடைக்க வாழ்த்துக்கள்.//
ஆஹா! நிருபர் வாங்க வாங்க. நீண்ட மாதத்திற்கு பிறகு வந்து இருக்கீங்க, நன்றி.
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி, கிடைத்தால் சந்தோசம் பார்ப்போம்.
//தமிழ்நாட்டில் இதேபோல ஆள்குறைப்பு நிகழ்வுகள் பல நிறுவனங்களிலும் நடந்து வருகின்றன.//
உண்மை தான், ஆனால் இந்தியாவில் இது அவ்வளவாக உணரப்படவில்லை. இதன் பாதிப்பு ஏற்படும் போது தான் அதிர்ச்சி அடைய போகிறார்கள் :-(
===================================================================
// Ramanathan said...
Hello Giri,
A well written blog. Keep it up. Should be helpful for a lot of people.//
ஹலோ! மச்சி எப்படி இருக்கே? உன்னோட பாராட்டிற்கு நன்றி.
என் வலைப்பதிவு வந்ததற்கு மிக்க நன்றி :-)
well composed article.Wish u a happy and prosperous new year.Hope ur predictions will become a mirage soon.
Hi
good one and timely article....
Being in a same profession (Unix storage admin for banking organization)... all my onsite job search also become long distance view....
//balaji said...
well composed article.Wish u a happy and prosperous new year.Hope ur predictions will become a mirage soon.//
வருகைக்கு நன்றி பாலாஜி, உனக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
===================================================================
//vijayakumar said...
Hi
good one and timely article....//
நன்றி
//Being in a same profession (Unix storage admin for banking organization)... all my onsite job search also become long distance view....//
பார்ப்போம் எப்படி போகிறது என்று!
உங்கள் முதல் வருகைக்கு நன்றி விஜயகுமார்
திரு . கிரி அவர்களே,
உங்கள் பதிவு மிகவும் அருமை. கண்டிப்பாக இந்த நேரத்தில் இது போன்ற ஒரு பதிவு அவசியம். உங்கள் பதிவில் என் மனதை கவர்ந்த விழயம் கவலைபடுவது யோசிப்பது. உண்மை அருமையான சிந்தனை திரு கிரி அவர்களே. உங்களுக்கு உங்கள் நிறுவன இந்திய கிளையில் பணி மாற்றம் கிடைக்க வாழ்த்துகிறேன்...
நன்றியுடன்
வெங்கடேஷ் . இரா
Hi Giri
After long time, typing the comment again.
How are you doing and what about your work, still in singapore with the same line, and how is the job market
Friendly
Vijayakumar
Post a Comment