தற்போது உலகம் முழுவதும் உள்ள மக்களால் அதிகம் உச்சரிக்கப்படும் வார்த்தை “Layoff”. லீமேன் பிரதர்ஸ் வங்கி திவாலனதில் ஆரம்பித்த பிரச்சனை தற்போது தொடர்ந்து பல வங்கிகள் திவாலாகி அவை சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளும் தற்போது பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளன. பாதிக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களும் தங்களுக்கு ஏற்பட்ட நிதி பிரச்னையை சமாளிக்க ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ளன. இதில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கணிப்பொறி துறையை சார்ந்தவர்கள்.
Layoff, அமெரிக்க மற்றும் ஐரோப்பா நாடுகளில் அதிகளவில் நடந்துள்ளது, நடந்து கொண்டிருக்கிறது. Onsite ல் இருந்த பலர் தற்போது இந்தியா திரும்பி கொண்டுள்ளனர், பொதுவாக மேலை நாடுகளில் எதுவாக இருந்தாலும் contract போடப்படும், வீடு, கேபிள் கனெக்சன், இணைய கனெக்சன் என்று அனைத்திற்கும், குறிப்பிட்ட மாதங்கள் அல்லது வருடங்கள் வரை அதை பயன்படுத்தி ஆக வேண்டும், இடையில் துண்டித்தால் அதற்க்கு அபராதம் செலுத்த வேண்டும், தற்போது அமெரிக்காவில் ஒரு சில இடங்களில் இவ்வாறு இடையிலேயே செல்பவர்களுக்கு சலுகையாக அபராத கட்டணம் வசூலிக்காமல் இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். அந்த அளவிற்கு அதிகளவில் துண்டிப்பு உள்ளது.
இன்னும் இந்தியாவில் அதிகளவில் Layoff நடக்கவில்லை (காரணம், குறைவான செலவு பிடிக்கும் நாடு என்பதால்) எனவே, அதன் பாதிப்பு இன்னும் பெரிதாக உணரப்படவில்லை வெளிநாடுகளை ஒப்பிடும் போது. விரைவில் இந்தியாவிலும் அதிகளவில் Layoff நடைபெற வாய்ப்புள்ளது. தற்போது நடப்பது எல்லாம் ஒரு பெரிய விசயமே இல்லை.
எனக்கு இதை போல நிலை புதிது இல்லை, 2001 ஆண்டு இதே போல ஒரு முறை ஏற்பட்டது அப்போதும் இதே போல ஆட்குறைப்பு நடைபெற்றது மற்றும் பல சிக்கல்கள் எழுந்தன. கடந்த 5 அல்லது 6 வருடத்தில் வேலையில் சேர்ந்தவர்களுக்கு இது பற்றி அதிகம் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை, கேள்வி பட்டிருக்கலாம். எனக்கு அது புதிய அனுபவமாக இருந்ததால் சற்று மிரண்டு தான் போனேன், ஆனால் தற்போதைய நிலை போல இல்லாமல் ஓரளவிற்கு விரைவாக சரி ஆகி விட்டது. அப்போது இந்த அளவிற்கு ஐ டி துறை வளர்ச்சி அடையவில்லை, அப்போது தான் ஆரம்பம். அசுரத்தனமான ஐ டி வளர்ச்சி என்பது கடந்த மூன்று அல்லது நான்கு வருடத்தில் ஆனதே. தற்போதைய பிரச்சனையில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் இன்னும் மோசமான நிலையை அனைத்து துறைகளும் குறிப்பாக ஐ டி அடையவில்லை என்பதே, அதற்க்கு முன்பே வாங்கும் அடி பலமானதாக உள்ளது.
தற்போதைய பிரச்சனை ஐ டி துறையில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் தான், வேண்டும் என்றால் பாதிப்பு சதவீதம் இவர்களுக்கு அதிகம் என்று கூறலாம். விஜய் டிவி நீயா? நானா? நிகழ்ச்சியில் ஒருவர் “ஐ டி துறை பின்னடைவை பட்டாசு வெடித்து கொண்டாடியதாக குறிப்பிட்டார்” அவர் ஐ டி துறை சேர்ந்தவர் ஒருவரால் அவமானபடுத்தப்பட்டு இருக்கலாம் அல்லது அவரது தாழ்வு மனப்பான்மையாக இருக்கலாம், பிரச்சனை அவர் இல்லை அவர் கூறிய விஷயம் .. முதல் பாதிப்பு வங்கிகள், வங்கிகள் பாதிப்பானால் அதனால் கடன் தர முடியாது. கடன் வாங்க முடியவில்லை என்றால் தொழிற்சாலைகள் வைத்து இருக்கும் ஒரு சில நிறுவனங்கள் பெரும் பாதிப்புள்ளாகும். காரணம் இவர்கள் வங்கிகளிடம் கடன் வாங்கி தான் முதல் போட்டு தொழில் நடத்துகிறார்கள் பல நேரங்களில். இவை கிடைக்காத போது உற்பத்திக்கு சிக்கல் வருகிறது, இதனால் வேலை இழப்பு. பொதுவாக வங்கிகள் பாதிப்புக்குண்டானால் அதன் பாதிப்பு மற்றவர்களுக்கு அதிகளவில் இருக்கும், காரணம் அதை சார்ந்து சாதாரண மக்கள் முதல் பெரிய பெரிய நிறுவனங்கள் வரை இருக்கின்றன. எனவே தான் அரசுகள் நஷ்டம் ஏற்பட்ட வங்கிகளுக்கு கடன் கொடுத்து நஷ்டத்தை சரி கட்டி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்கிறது.
இதை போல பிரச்சனைகளால் அனைவரிடமும் பண புழக்காட்டம் குறைவாக உள்ளது அல்லது எதிர்கால பயத்தை கருத்தில் கொண்டு செலவு செய்ய தயங்குகிறார்கள். இதனால் கார், இரு சக்கர வாகனங்கள் போன்றவற்றை வாங்குவதை ஒத்தி போடுகிறார்கள். இதனால் விற்பனை குறைவதால் அதை சார்ந்த நிறுவனங்கள் திடீர் விற்பனை குறைவு மற்றும் நிதி நிலையை சமாளிக்க முடியாமல் திணறுகின்றன. இதனால் 70 வருடமாக டோயோட்டா நிறுவனம் லாபத்தில் இருந்து தற்போது நஷ்டத்தை சந்தித்துள்ளது.
வீடு வாங்குவதை நினைத்தே பார்க்க முடியாத நிலையில் தான் பலர் உள்ளனர், வாங்கியவர்களும் எப்படி கட்டப்போகிறோம் என்ற குழப்பத்தில் உள்ளனர், தற்போது இவர்களுக்குள்ள பிரச்சனை பணத்தை கட்ட முடியவில்லை என்று வீட்டை விற்க நினைத்தாலும் வாங்க ஆள் இல்லை. இதனால் வீட்டை கட்டி வைத்துள்ள பல நிறுவனங்கள் சலுகை விலையில் எப்படியாவது தள்ளி விடவேண்டும் என்று தான் முயற்சி செய்கின்றனர். இந்த கஷ்டத்திலும் நல்ல நிகழ்வு கட்டுப்பாடுகள் இல்லாமல் உயர்ந்து கொண்டு இருந்த ரியல் எஸ்டேட் வீழ்ச்சி.
கணிப்பொறி நிறுவனங்கள் நஷ்டத்தை சமாளிக்க தங்கள் செலவுகளை குறைக்கின்றன இதனால் கால் டாக்சி போன்ற பல அதை சார்ந்த சிறு அமைப்புகள் முன்பு போல இல்லாமல் தங்கள் வருமானத்தில் பாதிக்கப்படலாம். பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துள்ளன. இதனால் விமான நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல்கள் பல பாதிக்கப்பட்டுள்ளன, (இவை யாவும் கணிப்பொறி துறையை சார்ந்தவர்களால் மட்டுமே அல்ல அனைத்து துறைகளாலும்) தற்போது கட்டண குறைப்பையும் சலுகைகளையும் அறிமுகப்படுத்தி உள்ளன. புதிய கட்டிடங்கள் கட்டப்படுவது குறைந்துள்ளது அல்லது அனுமதி மறுக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் இந்த புதிய கட்டிட வேலைகளை நம்பி இருக்கும் கூலி தொழிலாளர்கள் பலர் வேலைவாய்ப்பை இழக்கின்றனர், இவர்கள் என்ன ஐ டி துறையிலா பணி புரிகிறார்கள்? இவர்களுக்கும் ஐ டி துறைக்கும் என்ன சம்பந்தம்? எனவே பாதிப்பு என்பது அனைவருக்குமே ஐ டி துறைக்கு மட்டுமே எனபதை ஏற்று கொள்ளமுடியவில்லை. இதில் பாதிப்பு சதவீதத்தில் தான் வேறுபாடு உள்ளதே தவிர இவர்களுக்கு மட்டுமே பாதிப்பு என்று கூறுவது அல்லது நினைத்துக்கொண்டு இருப்பது அறியாமையே.
எனவே ஐ டி துறை பாதிக்கப்பட்டு விட்டது அதனால் சந்தோசம் என்று இவரை போல நினைப்பவர்கள் முட்டாள் தனமாக தான் சிந்திக்கிறார்கள். இன்று ஐ டி துறையில் உள்ளவர்களுக்கு ஏற்படும் பிரச்சனை நாளைக்கு இவரை போன்ற ஐ டி யில் சம்பந்தப்படாமல் இருப்பவர்களுக்கும் நேரலாம்! அல்லது நேராமலும் போகலாம்!! பாதிப்பு அனைவருக்கும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எதுவும் தற்போதைய நிலையில் உறுதி இல்லை. ஏனெனில் வல்லுனர்கள் கூறுவது இன்னும் மோசமான நிலையை நாம் அடையவில்லை என்று, ஆனால் அந்த நிலைக்கு முன்பே ஏற்பட்டு கொண்டுள்ள பாதிப்புகளை அனைவரும் செய்திகள் மூலமாக தினமும் படித்துக்கொண்டுள்ளோம்.
எனது அடுத்த பகுதியில் ஐ டி துறையில் எப்படி ஒருத்தர் எந்தெந்த முறையில் அதிரடியாக வேலை நீக்கம் செய்யப்படுகிறார் என்பதை குறிப்பிடுகிறேன். வேலை நீக்கம் என்றால் முன் அறிவிப்பு செய்து குறிப்பிட்ட காலம் வைத்திருந்து அல்ல..Immediate.. on the spot termination
Related posts:
{ 43 comments… read them below or add one }
சரியான அலசல்…
I wrote small post related to this, but you have covered lot of things here. it seems 2009 will be worst
\\”"Layoff” (ஆட்குறைப்பு) – என் பார்வையில் + என் அனுபவம் (பாகம் 1)”\\
பல பாகங்கள் இருக்கோ …
நல்ல தகவல் …
//ஆளவந்தான் said…
சரியான அலசல்… //
நன்றி
//it seems 2009 will be worst//
கண்டிப்பாக, இதை பலர் உணராமல் உள்ளனர்.
உங்கள் முதல் வருகைக்கு நன்றி ஆளவந்தான்
===================================================================
//அதிரை ஜமால் said…
பல பாகங்கள் இருக்கோ//
இல்லைங்க ஜமால் இன்னும் ஒரே பாகம் தான்
இதிலேயே அனைத்தையும் கூறி விட முயற்சித்தேன் பல விஷயங்கள் விடுபட்டதால் இரண்டு பாகமாக பிரித்து விட்டேன்.
//அதிரை ஜமால் said…
நல்ல தகவல் …//
நன்றி
ம்ம்..உண்மைதான்..
எனக்கெல்லாம் பணச்சுணக்கம் என்ற விபரமெல்லாம் சிங்கை வந்த போது 1997/98 யில் தெரியவந்தது.அதன் வீரியமும் புரிந்தது .நம்மூரில் இந்த வார்தையை அப்போதெல்லாம் நான் கேள்விப்பட்டதே இல்லை.
உங்களோட இந்த போஸ்டிங் நல்ல இருக்கு. எனக்கு இந்த மாதிரி ஒரு அனுபவம் பிசிநேச்ஸ்ல ஏற்பட்டுச்சு. 1992-1993-ல ரியல் எஸ்டேட் பிசினஸ் நல்ல பூமல இருந்துச்சு. நான் ரியல் எஸ்டேட் Businessla போய் மாட்டிட்டேன். தப்பிச்சு வர 14 வருஷம் ஆயுடுச்சு. அதனால இந்த முறை பூம்ம்ள நான் ரியல் எஸ்டேட் பக்கமே போகலை. இப்போ டவுன் ஆக ஆரம்பிச்சுருக்கு. எப்படியும் 4/5 வருசத்துல திரும்பவும் பிக் ஆகும். சோ நான் இப்பவே மார்க்கெட் மொவேமேன்ட் வாட்ச் பண்ண ஆரம்பிச்சிட்டேன்.
அதுபோலத்தான் இப்ப பிசினஸ் எல்லாம் டோவ்ன். நாம் எதுக்கு பயப்படனும். திரும்பவும் வரும் அதைய கேட்ச் பண்ண இப்பவே ரெடி ஆகணும்.
என்ன அதுவரைக்கும் தக்குபுடிக்கிற சக்தி வேண்டும். அதனால் ஒன்னும் பயப்பட வேண்டியதில்லை.
//எனது அடுத்த பகுதியில் ஐ டி துறையில் எப்படி ஒருத்தர் எந்தெந்த முறையில் அதிரடியாக வேலை நீக்கம் செய்யப்படுகிறார் என்பதை குறிப்பிடுகிறேன். //
Perfect analysis report.
Well done boss.
If somebody is enjoying for IT down, they are brainless.
More and More sub branches of world network is down now. Not only IT.
If any branch of this network is network – we must afraid and cry but not to enjoy for other’s failure.
That fellow is sadist.
வேலை நீக்கம் எல்லா துறையிலும் வந்து விட்டது,
ஆரம்பித்தது நிதிதுறை,
நல்ல பதிவு
//’டொன்’ லீ said…
ம்ம்..உண்மைதான்..//
வருகைக்கு நன்றி ‘டொன்’ லீ
===================================================================
//வடுவூர் குமார் said…
நம்மூரில் இந்த வார்தையை அப்போதெல்லாம் நான் கேள்விப்பட்டதே இல்லை//
எனக்கு 2001 ல் ஏற்ப்பட்ட பிரச்சனையில் தெரிந்தது
===================================================================
//radhakrishnan said…
உங்களோட இந்த போஸ்டிங் நல்ல இருக்கு.//
நன்றி ராதாகிருஷ்ணன்
//அதுபோலத்தான் இப்ப பிசினஸ் எல்லாம் டோவ்ன். நாம் எதுக்கு பயப்படனும். திரும்பவும் வரும் அதைய கேட்ச் பண்ண இப்பவே ரெடி ஆகணும்//
சரியா கூறி இருக்கீங்க..இது குறித்து என் அடுத்த பாகத்தில் கூறுகிறேன்,
//என்ன அதுவரைக்கும் தக்குபுடிக்கிற சக்தி வேண்டும். அதனால் ஒன்னும் பயப்பட வேண்டியதில்லை.//
வழிமொழிகிறேன்
===================================================================
//கோவி.கண்ணன் said…
((((((//
===================================================================
//Sharepoint the Great said…
Perfect analysis report.
Well done boss.//
நன்றி
//More and More sub branches of world network is down now. Not only IT.//
உண்மை தான் இது பலருக்கு தெரிவதில்லை அல்லது புரிவதில்லை
===================================================================
//வால்பையன் said…
வேலை நீக்கம் எல்லா துறையிலும் வந்து விட்டது//
ஆமாம் ஆனால் ஒரு சிலர் தவறாக நினைத்துக்கொண்டுள்ளார்கள்.
//ஆரம்பித்தது நிதிதுறை//
சரி தான்.
//நல்ல பதிவு//
நன்றி அருண்
ur right..
கடந்தா நான்கு ஐந்து ஆண்டு அதீத வளர்ச்சி.. வீழ்ச்சி நோக்கும் போது ஈழப்பு இர்ரிட்டிபாகவே இருக்கும் …
soon w’ll reach the saturation point..
நல்ல பதிப்பு கிரி!! சிலர் (அல்லது பலர்) எதோ ஐ.டி என்றலே ஒரு அரக்கனை பற்றி பேசுவதை போல் பேசுகிறார்கள்!! அவர்களுக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை? கேட்டால் விடு வாடகை அதிகம் ஆகிறது, விலைவாசி உயர்கிறது என்று காரணம்! அது ஓரளவிற்கு உண்மையும் கூட! ஆனால் வீட்டு வாடகையை ஐந்து மடங்கு உயர்த்துபவர்களை பற்றி யாரும் கவலை படுவது இல்லை! ஒரு ஊரில் ஒருவர் வாடகையை அதிகமாக சொன்னால் வேற வீடு பார்க்கலாம்! ஒரு ஊரே வீட்டின் வாடகையை உயர்த்தினால் நாம் எப்படி பொறுப்பு ??
//”ஐ டி துறை பின்னடைவை பட்டாசு வெடித்து கொண்டாடியதாக குறிப்பிட்டார்”//
பைத்தியகாரதனத்தின் வெளிப்பாடு.
கருத்துச் சுதந்திரத்திற்கு இவர்களால்தான் கடிவாளம் வரப்போகிறது
//இந்த கஷ்டத்திலும் நல்ல நிகழ்வு கட்டுப்பாடுகள் இல்லாமல் உயர்ந்து கொண்டு இருந்த ரியல் எஸ்டேட் வீழ்ச்சி.//
புரியலீங்க….
//.Immediate.. on the spot termination//
????????????????????????????
//எனவே ஐ டி துறை பாதிக்கப்பட்டு விட்டது அதனால் சந்தோசம் என்று இவரை போல நினைப்பவர்கள் முட்டாள் தனமாக தான் சிந்திக்கிறார்கள். இன்று ஐ டி துறையில் உள்ளவர்களுக்கு ஏற்படும் பிரச்சனை நாளைக்கு இவரை போன்ற ஐ டி யில் சம்பந்தப்படாமல் இருப்பவர்களுக்கும் நேரலாம்! அல்லது நேராமலும் போகலாம்!! பாதிப்பு அனைவருக்கும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எதுவும் தற்போதைய நிலையில் உறுதி இல்லை. //
What did IT people do when the So called Other people were suffered in India?
Did the same argument happened against IT people then?
PS
//Nags said…
கடந்தா நான்கு ஐந்து ஆண்டு அதீத வளர்ச்சி.. வீழ்ச்சி நோக்கும் போது ஈழப்பு இர்ரிட்டிபாகவே இருக்கும்//
நீங்கள் கூறுவது சரி தான்.. வளர்ச்சி எந்த அளவிற்கு அதிகமாக இருந்ததோ அதை போல இந்த சமயங்களில் பாதிப்பும் இருக்கும் என்றே கருதுகிறேன்.
===================================================================
//Bhuvanesh said…
நல்ல பதிப்பு கிரி//
நன்றி புவனேஷ்
//ஒரு ஊரே வீட்டின் வாடகையை உயர்த்தினால் நாம் எப்படி பொறுப்பு ??//
ஐ டி துறையின் பங்கு மற்றவர்களை ஒப்பிடும் போது அதிகம் அதனால் குற்றசாட்டுகளும் அதிகம். ஐ டி துறையை சேர்ந்தவர்களால் “மட்டுமே” பாதிப்பு என்று கூற முடியாது சதவீத அடிப்படையில் ஐ டி யை குறிப்பிடலாம்.
===================================================================
//SUREஷ் said…
//இந்த கஷ்டத்திலும் நல்ல நிகழ்வு கட்டுப்பாடுகள் இல்லாமல் உயர்ந்து கொண்டு இருந்த ரியல் எஸ்டேட் வீழ்ச்சி.//
புரியலீங்க….//
சாதாரண மக்களால் புதிய வீடு,நிலம் வாங்குவது என்பதை கற்பனையில் கூட நினைத்து பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது சேமிப்பு கை வசம் இருந்தும். தற்போது அதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
//????????????????????????????//
உங்கள் கேள்வி மற்றும் சந்தேகத்திற்கான பதில் எனது அடுத்த பாகம் (பதிவு)
===================================================================
//prognostic said…
What did IT people do when the So called Other people were suffered in India?//
மற்றவர்கள் கஷ்டப்படுவதற்கும் என் பதிவில் கூறியவற்றிக்கும் என்ன சம்பந்தம்? ஐ டி துறை சம்பந்தம் இல்லாதாவர்களுக்கு இதை போல நிலைமை இருந்தாலும் இதே பதில் தான். யார் பாதிக்கப்பட்டால் என்னங்க? கஷ்டம் கஷ்டம் தானே!
//Did the same argument happened against IT people then?//
இதுல என்னங்க ஐ டி துறை .. மற்ற துறை பாதிப்பு யாருக்கு இருந்தாலும் இது தான் பிரச்சனை என்று கூறினால் ஏற்று கொள்ள வேண்டியது தானே. நான் என் பதிவில் ஐ டி துறையை ஆதரித்து பதிவெழுதவில்லை, உலக நடப்பை கூறுகிறேன் அவ்வளவே, சரியாக படித்து பாருங்கள்.
எந்த ஒரு துறையானாலும் அது பாதிக்கப் படும் போது அதனால் குறையும் பணப்புழக்கம் மற்ற எல்லாத் துறைகளையும்.. எல்லாத் தட்டு மக்களையும் பாதிக்கும் என்பதுதான் நிதர்சனம். எந்தத் துறைக்கும் பரிந்து கொண்டு வராமல் தற்போதைய நிலைமையைத் தெளிவாகவே அலசியிருக்கிறீர்கள் கிரி.
ஐயா,
தாங்கள் நன்றாக அலசி எழுதியுள்ளீர்கள்.
பயனுள்ள பதிவு.
பகுதி 2 ஐயும் வாசிக்க ஆவலாக உள்ளேன்.
US based companies தான் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளது என நினைக்கிறேன்.
நன்றி…
//Perfect analysis report.
Well done boss.
If somebody is enjoying for IT down, they are brainless.
More and More sub branches of world network is down now. Not only IT.
If any branch of this network is network – we must afraid and cry but not to enjoy for other’s failure.
That fellow is sadist.//
தகவல் தொழிற்நுட்ப துறையின் வீழ்ச்சியால் ரிலையன்ஸ் பிரசுக்கு லாபமா நஷ்டமா
தகவல் தொழிற்நுட்ப துறையின் வளர்ச்சியால் எங்கள் தெருவில் மிதிவண்டியில் காய்கறி விற்பவருக்கு லாபமா நஷ்டமா
என்று கொஞ்சம் தெளிவாகத்தான் கூறுங்களேன்
//ராமலக்ஷ்மி said…
எந்தத் துறைக்கும் பரிந்து கொண்டு வராமல் தற்போதைய நிலைமையைத் தெளிவாகவே அலசியிருக்கிறீர்கள் கிரி//
நன்றி ராமலக்ஷ்மி
===================================================================
//வாசுகி said…
ஐயா//
//தாங்கள் நன்றாக அலசி எழுதியுள்ளீர்கள்.
பயனுள்ள பதிவு//
நன்றி வாசுகி
===================================================================
// புருனோ Bruno said…
தகவல் தொழிற்நுட்ப துறையின் வீழ்ச்சியால் ரிலையன்ஸ் பிரசுக்கு லாபமா நஷ்டமா
தகவல் தொழிற்நுட்ப துறையின் வளர்ச்சியால் எங்கள் தெருவில் மிதிவண்டியில் காய்கறி விற்பவருக்கு லாபமா நஷ்டமா//
சார் நீங்க ரொம்ப கஷ்டமான கேள்வி கேட்டு இருக்கீங்க..உங்களுக்கு தெளிவாக கூறும் அளவிற்கு எனக்கு அனுபவமும் இல்லை வயதும் இல்லை.
என் அறிவிற்கு எட்டியதை இங்கே கூறி இருக்கிறேன், எனவே நீங்கள் மேலும் இது பற்றி தெரிந்து கொள்ள இந்த துறையில் உள்ள வல்லுனர்களை கேளுங்கள் அவர்கள் உங்களுக்கு தெளிவாக விளக்குவார்கள். உங்களுக்கு பதில் கூற நான் சரியான நபர் அல்ல.
கிரி…நல்ல பதிவு….
நீங்க உதாரணத்துக்கு டொயொட்டாவை சொன்னதால சொல்றேன். இந்த மாதிரி விற்பனைக் குறைவு, நிதி நெருக்கடி வரும்போது டொயோட்டா மாதிரி பெரிய நிறுவனத்தை விடாதைச் சார்ந்து இருக்கற ஆயிரக்கணக்கான ‘துணை’உற்பத்தியாளர்கள் (ancillary / satellite industries) அடைகிற நெருக்கடி மிகப் பெரியது. குளத்துல கல் எறிஞ்சா வர ripple effect. நடுவுல இருக்கற அலையோட வட்டம் சிறியது. ஆகப் பெரிய அலை வட்டம் ரொம்ப வெளில இருக்கும்.
இப்ப இருக்கற நிலைமையை correction phaseனு எடுத்துக்கிட்டா அடுத்து வர consolidation phase பலமா இருக்கும். இருக்கணும். பார்ப்போம்.
அருமையான அலசல் கிரி..
பெரும்பாலான் துறைகளுக்கு பாதிப்பு இருப்பது உண்மையே.. ஆனால் ஐடிக்கு மிக மிக அதிகம்.. காரணம், இப்போதைக்கு ஐடி துறை தான் பெரிய அளவில் வெளிநாட்டினரை நம்பி செயல்படுகிறது. வங்கிகளுக்கு நீங்க சொல்லும் அளவு பாதிப்பு வராது. நம்ம ஊர் கடன் கொடுக்கும் முறை கடினமானது. திருப்பி செலுத்த முடியாத கடனாக மாற வாய்ப்பு இருபப்து சொற்பமே.. நம்ம நாட்டில் சேமிப்பு பழக்கம் அதிகம்.. ஆகவே வங்கித் துறை பெரிய பாதிப்புக்கு உள்ளாகாது என்றே தோன்றுகிறது.
மனச் சாட்சி படி சொல்றேன், எங்க நிறு வனத்திலையும் லே ஆப்புதான்!
Excellent Info and really hard efforts.Looking for Part 2.
Mukthar.Tanjore
மிக நன்றாக அல்சி ஆராய்துள்ளீர்கள்.
உலகெங்கும் ஒரு துறை மற்ற துறையை சார்ந்துள்ளது..
இது கண்ணுக்குத்தெரியாத வட்டம் மாதிரி..
ஒரு துறையில் ஏற்படும் நஷ்டம், அடுத்த துறையில் பாதிப்பை உண்டாக்கும்..
ஆட்குறைப்பு பற்றி நன்றாக அலசியுள்ளீர்கள்.இன்னும் ஓர் ஆண்டுக்கும் மேல் இந்தப் பிரச்சினை தொடரும் வாய்ப்புள்ளது.கணினி யுகத்தில் மீண்டும் மாற்றங்கள் வரும்.அது தவிர்க்க இயலாதது.
Nice postng Giri…
I have said somewhere else too, there are talks which says that MNCs in Singapore will be asked to reduce the salries than cutting down on jobs.
I can’t imagine those type of things happening in India and the trade unions accepting it. They will simply go on strike.
நல்ல அலசல் கிரி
//Mahesh said…
கிரி…நல்ல பதிவு….//
நன்றி மகேஷ்
//குளத்துல கல் எறிஞ்சா வர ripple effect. நடுவுல இருக்கற அலையோட வட்டம் சிறியது. ஆகப் பெரிய அலை வட்டம் ரொம்ப வெளில இருக்கும்.//
நீங்கள் கூறுவதை அப்படியே வழிமொழிகிறேன். எங்கோ இருக்கிற லீமன் பிரதர்ஸ் வங்கி நஷ்டத்திற்கு மற்றவர்கள் ஏன் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அனைவரும் யோசித்தாலே போதுமானது.
//இப்ப இருக்கற நிலைமையை correction phaseனு எடுத்துக்கிட்டா அடுத்து வர consolidation phase பலமா இருக்கும். //
சரியா கூறி இருக்கீங்க
===================================================================
//SanJaiGan:-Dhi said…
அருமையான அலசல் கிரி..//
நன்றி சஞ்சய்
//நம்ம ஊர் கடன் கொடுக்கும் முறை கடினமானது. திருப்பி செலுத்த முடியாத கடனாக மாற வாய்ப்பு இருபப்து சொற்பமே.. நம்ம நாட்டில் சேமிப்பு பழக்கம் அதிகம்.. ஆகவே வங்கித் துறை பெரிய பாதிப்புக்கு உள்ளாகாது என்றே தோன்றுகிறது.//
சந்தேகம் வேண்டாம் சஞ்சய், நீங்கள் கூறுவதை நான் வழிமொழிகிறேன். நான் நம் நாட்டை மட்டும் வைத்து மட்டும் இதை கூறவில்லை. ஒட்டு மொத்த உலக வங்கிகளை வைத்தே கூறினேன். நீங்கள் கூறுவது போல நம் வங்கிகள் கட்டுப்பாடாக தான் இருக்கின்றன. இருந்தாலும் நிதி நெருக்கடி என்று வரும்போது பாதிப்பு இவர்களுக்கும் இருக்கும், எனென்றால் நம் வங்கிகள் பல அமெரிக்க வங்கிகளில் முதலீடு செய்துள்ளன மற்றும் உலகம் முழுவதும் நிலவும் பொருளாதார நெருக்கடி. தற்போது கடன் கொடுப்பதில் நம் வங்கிகள் பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளன.
இது உங்களுக்கு முதல் வருகை என்று நினைக்கிறேன் நன்றி
===================================================================
//sheik said…
Excellent Info and really hard efforts.Looking for Part 2.//
நன்றி sheik உங்கள் முதல் வருகைக்கும் சேர்த்து
===================================================================
//ஜோதிபாரதி said…
மனச் சாட்சி படி சொல்றேன், எங்க நிறு வனத்திலையும் லே ஆப்புதான்!//
===================================================================
//இராகவன் நைஜிரியா said…
மிக நன்றாக அல்சி ஆராய்துள்ளீர்கள்.//
நன்றி ராகவன்
//ஒரு துறையில் ஏற்படும் நஷ்டம், அடுத்த துறையில் பாதிப்பை உண்டாக்கும்//
கண்டிப்பாக. ஒவ்வொரு துறையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ மற்ற துறையை சார்ந்துள்ளது.
உங்கள் முதல் வருகைக்கு நன்றி
===================================================================
//ராஜ நடராஜன் said…
ஆட்குறைப்பு பற்றி நன்றாக அலசியுள்ளீர்கள்.//
நன்றி ராஜ நடராஜன்
//இன்னும் ஓர் ஆண்டுக்கும் மேல் இந்தப் பிரச்சினை தொடரும் வாய்ப்புள்ளது//
அப்படிதான் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
//கணினி யுகத்தில் மீண்டும் மாற்றங்கள் வரும்.அது தவிர்க்க இயலாதது//
வழிமொழிகிறேன்
===================================================================
//பாலு மணிமாறன் said…
Nice postng Giri…//
நன்றி பாலு
//I can’t imagine those type of things happening in India and the trade unions accepting it. They will simply go on strike.//
எனக்கு அதை நினைத்து பயம் தான். எப்படி பிரச்னையை சமாளிக்க போகிறார்கள் என்று. பார்ப்போம் இதை ஒரு சவாலாக எடுத்து கொள்வதை தவிர வேறு வழி இல்லை.
===================================================================
//நசரேயன் said…
நல்ல அலசல் கிரி//
நன்றி நசரேயன்
நல்லா கிளப்புறீங்க பீதியை
It didn’t start with Lehman Brothers but much before that. Lehman Brothers filed banckruptcy in Sep 2008 and the crisis started from March 2008. The GSEs Fannie Mae and Freddie Mac in debt of $5 trillion and that is biggest reason for this collapse.
http://en.wikipedia.org/wiki/Subprime_mortgage_crisis
//இது உங்களுக்கு முதல் வருகை என்று நினைக்கிறேன் நன்றி //
தேவை இல்லாம இங்க ஒரு கொலை விழும். உங்க வலைப்பூ வடிவமைப்பு பார்த்து வாய்பிளந்துட்டு போனது மறந்து போச்சாக்கும்?
//முரளிகண்ணன் said…
நல்லா கிளப்புறீங்க பீதியை//
===================================================================
//Udhayakumar said…
It didn’t start with Lehman Brothers but much before that. Lehman Brothers filed banckruptcy in Sep 2008 and the crisis started from March 2008.//
தகவலுக்கு நன்றி உதயகுமார். இந்த பிரச்சனை அனைவருக்கும் தெரிய வந்தது லீமன் பிரதர்ஸ் வங்கி திவாலான பிறகு தான்.
உங்கள் முதல் வருகைக்கு நன்றி
===================================================================
//SanJaiGan:-Dhi said…
//
தேவை இல்லாம இங்க ஒரு கொலை விழும். உங்க வலைப்பூ வடிவமைப்பு பார்த்து வாய்பிளந்துட்டு போனது மறந்து போச்சாக்கும்?
ஹா ஹா ஹா அப்படியா! மறந்துட்டேன்…. மன்னிக்கவும்
ஸார் ,
உண்மைெ என்னவென்றால். இப்போது இங்கு பண்டிகை காலம். அனைத்து அமெரிக்க மக்களூம் சந்தோஸத்தில் இருக்கும் நேரம்… அதனால் தான் ஆள்குரைப்பு இன்னும் முழுமையாக ஆரம்பிக்கப்படவில்லை.. (இது அரசு எடுத்த முடிவு)
பொருத்திருந்து பாரும்… இங்கே ஆரம்பிச்சா , இந்தியாவுக்கு வலிக்கும்…
வரும், ஜனவரி மாதம் , நிதி ஒதுக்கீடு ஆரம்பிக்கப்படும்… அப்போ பாருங்க.. டவுசர அவுத்துருவாங்க…
எதுவும் இருக்காது… ஆட்குறைப்பு மட்டுமே…
சங்கர்.
// ChennaiTAMILAN said…
வரும், ஜனவரி மாதம் , நிதி ஒதுக்கீடு ஆரம்பிக்கப்படும்… அப்போ பாருங்க.. டவுசர அவுத்துருவாங்க… //
முதல் ஐந்து மாதம் பல நிறுவனங்களில் ஆட்குறைப்பு அதிகம் இருக்கும் என்றே கருதுகிறேன். இதை பலர் உணராமல் பிரச்சனை முடிந்து விட்டதாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
உங்கள் முதல் வருகைக்கு நன்றி சங்கர்
புருனோ Bruno said…
// தகவல் தொழிற்நுட்ப துறையின் வீழ்ச்சியால் ரிலையன்ஸ் பிரசுக்கு லாபமா நஷ்டமா
தகவல் தொழிற்நுட்ப துறையின் வளர்ச்சியால் எங்கள் தெருவில் மிதிவண்டியில் காய்கறி விற்பவருக்கு லாபமா நஷ்டமா
என்று கொஞ்சம் தெளிவாகத்தான் கூறுங்களேன்//
என் சின்ன அறிவுக்கு எட்டிய சில விஷயங்கள். காய்கறி விற்பவருக்கு கண்டிப்பாக நஷ்டம்தான். ஒருதுறை செழிப்பாக இருக்கையில் அதன் பலன் அடிமட்டம் வரை பாய்வதும் அதன் வீழ்ச்சி அடிமட்டம் வரை தாக்குவதும் கண்கூடு. இன்ன துறை என்று சொல்ல வரவில்லை. ஒரு உதாரணத்துக்கு இன்று வீட்டு வேலை, குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் பேபி சிட்டிங், சமையல் வேலை, வயதானவர்களை கவனித்துக் கொள்ளும் பேஷண்ட் கேர் போன்றவற்றில் பலருக்கும் நல்ல சம்பாத்தியம். தம்பதியர் இரண்டு பேரும் வேலைக்குப் போகிற வீடுகளில் கணக்குப் பார்க்காமல் அள்ளிக் கொடுக்கிறார்கள். ரீடெய்ல் முதல் பல தொழில்கள் செழித்திருப்பதும் இவர்கள் தாராளமாகச் செலவழிப்பதால்தான். சரி தள்ளு வண்டிக்காரன் கதைக்கு வருவோம். நம்ம மக்கள் எது எப்படியானாலும் சாப்பாட்டில் குறை வைப்பதில்லைதான். ஆனாலும் இந்த ஆட்குறைப்பு அச்சுறத்தல் அது நடந்தே முடிந்த சோகம் ஆகியவற்றில் பீதியுற்று இருப்பவர்கள் காலிஃப்ளவர் வாங்கும் இடத்தில் கத்திரிக்காயும், ஆப்பிள் வாங்கும் இடத்தில் வாழைப் பழத்தையும் வாங்கி முடித்து விடுவார்கள். அவன் மீதி ஸ்டாக்கை ஃப்ரிஜ்ஜிலா போய் வைக்க முடியும். நான் செல்லும் காய்கறிக் கடையிலே இதைக் கண்ணாலே பார்க்கிறேன். பில் போடக் கொடுத்த பின்னர் “ஏ அப்பா, கொத்தமல்லி கட்டு இந்த விலையா? அப்ப வேண்டாம். அது இல்லாம சமைக்க முடியாதா என்ன?” என்று சொல்லி அதை திருப்பி வைக்கிற காட்சிகளை. பெரிய கடைகள் மீதமாவதை ஏசிக் குளிரில் அட்லீஸ்ட் அடுத்த நாள் வரை வைத்து விற்பார்கள். ஆனால் வண்டிக்காரன்:(?
வாடிய மல்லி வாடியதுதான். வாடிய வயிறும் வாடியதுதான்.
//ராமலக்ஷ்மி on 7:52 AM, January 02, 2009 said…
என் சின்ன அறிவுக்கு எட்டிய சில விஷயங்கள். காய்கறி விற்பவருக்கு கண்டிப்பாக நஷ்டம்தான். ஒருதுறை செழிப்பாக இருக்கையில் அதன் பலன் அடிமட்டம் வரை பாய்வதும் அதன் வீழ்ச்சி அடிமட்டம் வரை தாக்குவதும் கண்கூடு. இன்ன துறை என்று சொல்ல வரவில்லை//
தாறுமாறாக வழிமொழிகிறேன்
//பில் போடக் கொடுத்த பின்னர் “ஏ அப்பா, கொத்தமல்லி கட்டு இந்த விலையா? அப்ப வேண்டாம். அது இல்லாம சமைக்க முடியாதா என்ன?” என்று சொல்லி அதை திருப்பி வைக்கிற காட்சிகளை. பெரிய கடைகள் மீதமாவதை ஏசிக் குளிரில் அட்லீஸ்ட் அடுத்த நாள் வரை வைத்து விற்பார்கள். ஆனால் வண்டிக்காரன்:(?//
உண்மை தான். உங்கள் விளக்கத்துடன் சேர்ந்து என் விளக்கமும்.
இன்று (என்றால் உடனே அல்ல தற்போதைய சூழ்நிலையில்) வண்டிக்காரன் சுதாரித்து இனி அதிகமாக கொண்டு வந்தால் நமக்கு நஷ்டம் ஏற்படும் என்று உணர்ந்து, அளவாக கொண்டு வந்து தனக்கு ஏற்படும் நஷ்டத்தை குறைக்க முயற்சி செய்வான், தனக்கு மிகவும் பின்னாளில் தொடர்ந்து இதே போல நடந்தால். ஆனால் இடைப்பட்ட காலத்தில் நஷ்டம் நஷ்டம் தான்.
அதே போல பெரிய கடைகள் எத்தனை நாள் பிரிட்ஜில் வைக்க முடியும்? வாங்கும் திறன் குறைந்தால் விற்பனையின் அளவு குறைவதை உணர்ந்து, பெரிய கடைகளும் தங்கள் பொருட்களின் அளவை (விற்பனை குறைவதால்) குறைத்து தான் ஆக வேண்டும். இல்லை என்றால் அவர்களும் கடும் நஷ்டத்தை சந்தித்து தான் ஆக வேண்டும். அவர்களும் எத்தனை நாள் ப்ரிட்ஜில் வைத்து பாதுகாக்க முடியும்!
//வாடிய மல்லி வாடியதுதான். வாடிய வயிறும் வாடியதுதான்//
வழிமொழிகிறேன்
சரியாக கூறினீர்கள் ராமலக்ஷ்மி, ஒரு துறை வீழ்ச்சி அடையும் போது அதை சார்ந்த அல்லது சாராத பல துறைகள் மறைமுகமாகவோ நேரடியாகவோ பாதிப்படைவதை தவிர்க்க முடியாது. உடனே நேரவில்லை என்றாலும் பாதிப்பு கண்டிப்பாக உணரப்படும்.
ஒரு சிலர் எண்ணலாம் இப்ப என்ன நடந்து விட்டது, இப்படி பேசி கொண்டு இருக்கிறார்கள் என்று. இதே நிலை தொடந்தால் இதை விட மோசமாக ஆக அதிக வாய்ப்புண்டு. நம்ம நேரம் நன்றாக இருந்தால் இந்த வீழ்ச்சி விரைவிலேயே சரி ஆகி விடும்.
Due to time restrictions typing in english, sorry,
Excellent review, those who joined the IT jobs directly and got salary in 5/6 digits will face this situation hard but peoples who started their life with less salary in IT itself and came to a good position will never bother abt this situations. But zen proverb “Ithuvum Kadanthu Pogum” will match any situation any time and for all peoples…..
கிரி,
நீண்ட நாட்களுக்குப்பிறகு ஒரு நல்ல ஆழமான கட்டுரை படித்ததில் மகிழ்ச்சி. முடிந்தால் இது போன்ற கட்டுரைகளை தொடர்ந்து எழுதவும்.
//Logan said…
those who joined the IT jobs directly and got salary in 5/6 digits will face this situation hard but peoples who started their life with less salary in IT itself and came to a good position will never bother abt this situations.//
சரியா சொன்னீங்க லோகன்.
//zen proverb “Ithuvum Kadanthu Pogum” will match any situation any time and for all peoples//
வழிமொழிகிறேன்
===================================================================
//கயல்விழி said…
நீண்ட நாட்களுக்குப்பிறகு ஒரு நல்ல ஆழமான கட்டுரை படித்ததில் மகிழ்ச்சி//
நன்றி கயல்விழி
//முடிந்தால் இது போன்ற கட்டுரைகளை தொடர்ந்து எழுதவும்//
உங்கள் அன்பிற்கு நன்றி, முயற்சி செய்கிறேன்.