எந்திரன் படம் ஐங்கரன் இன்டர்நேஷனல் அதன் பங்குதாரரான ஈராஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இருந்தது, தற்போது உலகளவில் நிலவும் நிதி நெருக்கடி காரணமாக ஏற்பட்ட சிக்கலில் இருந்த அவர்களிடம் இருந்து பெரும் தொகைக்கு இந்த படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கி உள்ளது.
சன் பிக்சர்ஸ் விநியோக உரிமை பெற்று இது வரை காதலில் விழுந்தேன், தெனாவெட்டு படங்களை வெளியிட்டுள்ளது மற்றும் பல படங்களை வெளியிட உள்ளது.
தற்போது முதல் முறையாக அதிக பொருட்செலவில் எந்திரன் படத்தை தயாரிக்கப்போகிறது. இதை கலாநிதி மாறன், ரஜினி, ஷங்கர் ஆகியோர் அதிகாரபூர்வமாக தெரிவித்தனர்.
குசேலன் படம் வெளி வந்த போது ரஜினியை தாறுமாறாக விமர்சித்துக்கொண்டு இருந்தது சன் டிவி. போன மாத ரஜினிகாந்த், தற்போது சன் செய்தியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகி விட்டார்
. இனி படம் வெளிவரும் வரை ரஜினியை பற்றி எந்த செய்தியும் தவறாக போட மாட்டார்கள். அப்படி போட்டால் அது அவர்களுக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும். மிக சிறந்த!! வியாபாரிகளான சன் குழுமம் இதை அறியாமலா இருப்பார்கள்!
காதலில் விழுந்தேன் படத்திற்கே உலக பட ரேஞ்சிற்கு விளம்பரம் செய்தார்கள், எந்திரன் படத்திற்கு …. நினைத்தாலே கண்ணை கட்டுதே!
ம்ம்ம் காலம் தான் எவ்வளவு வேகமாக மா(ற்)றுகிறது
No related posts.


{ 32 comments… read them below or add one }
நல்லவேளை… மர்மயோகி போன்று , எந்திரனையும் ஊத்தி மூடாமல் விட்டார்கள். நிச்சயம் எந்திரன் வெற்றி படம்தான்.
மகிழ்ச்சிதானா:)))?
உண்மைதான். சாதாரண படங்கள் கூட சன் விளம்பரம் செய்தால் நன்றாக ஓடுகிறது. ரஜனி + ஷங்கர் படம் என்றால் கேட்க வேண்டுமா?
கிரி
பல ரஜினி ஆதரவு தளங்கள் சன் டிவிக்கு எதிரான நிலை எடுத்திருந்தார்களே?
அவர்கள் இதை வரவேற்கிறார்களா?
//பிரகாஷ் said…
நிச்சயம் எந்திரன் வெற்றி படம்தான்.//
பார்ப்போம். குசேலனுக்கும் இப்படி தான் கூறினார்கள். அதிக எதிர்பார்ப்பு ஆபத்தானது.
===================================================================
//ராமலக்ஷ்மி said…
மகிழ்ச்சிதானா:)))?//
மகிழ்ச்சி தான், கூடவே பயமும் வருவதை தவிர்க்க முடியவில்லை.
===================================================================
//முரளிகண்ணன் said…
கிரி
பல ரஜினி ஆதரவு தளங்கள் சன் டிவிக்கு எதிரான நிலை எடுத்திருந்தார்களே?
அவர்கள் இதை வரவேற்கிறார்களா?//
வாங்க முரளிகண்ணன் எப்படி இருக்கீங்க? விடுமுறை முடிந்ததா?
சன் டிவி மீது எதிர்ப்பு இருந்தது உண்மை தான், ஆனால் ஆனந்த விகடன் அளவிற்கு இல்லை என்பதே என் கருத்து. குமுதம் சன் டிவி போன்றவைகள் மொத்தமாக பிரச்சனை செய்யவில்லை அவ்வப்போது ஆதரவு செய்திகளை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்ப்பில் இருந்து மாறி மாறி இருந்தது. சன் டிவி ரஜினியின் பேட்டியை ஒளிபரப்பியதை முக்கியமாக குறிப்பிடலாம். ரஜினியின் ரசிகர் மன்ற பேட்டி சன் டிவி யில் வந்ததாலையே பலரை சென்றடைந்து என்பதை யாராலும் மறுக்க முடியாது, என் ஒரு பதிவில் கூட குறிப்பிட்டு இருந்தேன். எனவே சன் டிவி க்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பு தொடர்ந்து இருந்து இருக்காது என்றே நினைக்கிறேன் ஆனந்த விகடனை ஒப்பிடும் போது, இது என் தனிப்பட்ட கருத்து.
இப்பவே தலைவர் படத்துக்கு நல்ல விள்ம்பரம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இன்றைய சன் தொலைகாட்சியிம் 7 மணி செய்திகளில் தலைப்பு செய்திகளாக சூப்பர் ஸ்டார் தயாநிதியை பார்த்து பேசியதை சொன்னார்கள். விடாமல் சன் செய்திகள் அலைவரிசையில் இதே செய்தியை பல முறை ஒளி பரப்பி வருகிறார்கள்.
கூடவே இந்த படம் அடுத்த ஆண்டு இறுதியில் ( 2009 டிசம்பர் ??) வெளி வரும் என்று சொன்னார்கள். இது தான் எனக்கு உதைக்கிறது.
சங்கர் போன்ற இயக்குநர்களை அவர்கள் போக்கில் விட வேண்டும். அதுவும் சூப்பர் ஸ்டார் இருக்கிறார்.
ஏற்கனவே முடிவு செய்த 2010 ஏப்ரல் மாத ரீலிஸ் என்பதை முன்பாக செய்ய சன் சங்கருக்கு கண்டிப்பாக நெருக்கடி கொடுக்கும்.:(
வியாபாரம், சினிமா, அரசியல்.. எல்லாத்தையும் மொத்தமா கலக்கி சாதார சனங்களை கொள்ளுராங்கப்பா
சீக்கிரம் படத்தோட கதையை சொல்லுவேன்
// நசரேயன் said…
சீக்கிரம் படத்தோட கதையை சொல்லுவேன்//
என்னோட தளத்தில கதை இருக்கு பாஸ்.
எந்திரன் புத்தம்புதிய கதை
http://kanavukale.blogspot.com/2008/12/entirely-different-entertainment.html
//Arun Kumar said…
ஏற்கனவே முடிவு செய்த 2010 ஏப்ரல் மாத ரீலிஸ் என்பதை முன்பாக செய்ய சன் சங்கருக்கு கண்டிப்பாக நெருக்கடி கொடுக்கும்.:(//
அவ்வாறு இருக்காது என்றே நினைக்கிறேன். ஷங்கர் அதற்க்கு ஒப்புகொள்வாரா என்று தெரியவில்லை,
===================================================================
//SK said…
//
வியாபாரம், சினிமா, அரசியல்.. எல்லாத்தையும் மொத்தமா கலக்கி சாதார சனங்களை கொள்ளுராங்கப்பா
திறமை அதிகாரம் ஆளுமை பணம் என்று அனைத்தும் ஒரு சேர இருப்பதே காரணம்
===================================================================
//நசரேயன் said…
சீக்கிரம் படத்தோட கதையை சொல்லுவேன்//
===================================================================
//SUREஷ் said…
என்னோட தளத்தில கதை இருக்கு பாஸ்//
என்னோட தளத்தில் தான் இதை கூறாமல் இருந்தீர்கள் என்று நினைக்கிறேன்
) தலைவர் தலைவர் னு சொல்லிட்டு அவரை வாரி இருக்கீங்க.
// திறமை அதிகாரம் ஆளுமை பணம் என்று அனைத்தும் ஒரு சேர இருப்பதே காரணம் //
எல்லாம் ஒரே இடத்தில் ஒரே குழுவுக்குள் இருப்பாதால் அவர் இஷ்டத்திற்கு செய்கிறார்கள் என்று தோன்றுகிறது கிரி.
வருத்தமாகவும் உள்ளது.
அடடடடடே!!!!
//விஜய் ஆனந்த் said…
அடடடடடே!!!!//
===================================================================
//SK said…
எல்லாம் ஒரே இடத்தில் ஒரே குழுவுக்குள் இருப்பாதால் அவர் இஷ்டத்திற்கு செய்கிறார்கள் என்று தோன்றுகிறது கிரி. //
தோன்றவே தேவையில்லை sk இதுவே உண்மை, அடுத்தவர்களின் வெற்றி தோல்வியை சில சமயங்களில் இவர்களே தீர்மானிக்கிறார்கள். இது நல்லதிற்கு இல்லை. எங்கே சென்று முடியுமோ!
//வருத்தமாகவும் உள்ளது.
//
நம்மால் முடிந்த ஒன்று
எந்திரன் படத்திற்கு …. நினைத்தாலே கண்ணை கட்டுதே!
//
அட! ரஜினி கிரிக்கே கண்னக்கட்டுத்தா??
))
குசேலன் நிலை எந்திரனுக்கு என்றாகிவிடுமோ என்ற பயத்தில் தயாரிப்பாளர்கள் விலகும் போது சன்குழுமம் போன்ற மிக நேர்மையான மீடியாக்களின்!!! துணையுடன் எந்திரன் வெளிவருவது மிகவும் நல்லது தான்!
அம்மா ஆட்சியில் இருந்த காலத்தில் நடந்ததாக ஒரு சம்பவம் கேள்விப்பட்டேன். கலாநிதி மாறன், அப்போது சர்வ அதிகாரங்களோடு விளங்கிய ஒரு ‘ராஜ’ பிரமுகரை சினிமா பாணியில் (நடுரோட்டில் காரை நிறுத்தி, சட்டென்று கிழிறங்கி, பட்டென்று பக்கத்துக் காரில் ஏறி, படபடவென்று வியாபாரம் பேசுவது) சந்தித்துப் பேசினதாக. அப்போது நம்பவில்லை. இப்போது நம்புகிறேன். அவர் வியாபாரத்தை வியாபாரமாக மட்டுமே பார்க்கிறவர் என்ற விஷயம் இன்னொருமுறை அழுத்தமாக நிரூபிக்கப் பட்டிருக்கிறது!
//புதுகை.அப்துல்லா said…
))//
அட! ரஜினி கிரிக்கே கண்னக்கட்டுத்தா??
அப்துல்லா! அளவிற்கு மீறினால் ……
===================================================================
//Shajahan.S. said…
சன்குழுமம் போன்ற மிக நேர்மையான மீடியாக்களின்!!! துணையுடன் எந்திரன் வெளிவருவது மிகவும் நல்லது தான்!//
ஹா ஹா ஹா சரியா சொன்னீங்க!
குசேலனுக்கு திரை அரங்கு உரிமையாளர்கள் போர் கொடி!!! என்று கூறி கொண்டு இருந்தார்கள், இனி எந்திரனால் பெரும் லாபம், திரை அரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சி என்று கூறி கொண்டு இருப்பார்கள்…..முடியல..
===================================================================
//பாலு மணிமாறன் said…
அவர் வியாபாரத்தை வியாபாரமாக மட்டுமே பார்க்கிறவர் என்ற விஷயம் இன்னொருமுறை அழுத்தமாக நிரூபிக்கப் பட்டிருக்கிறது!//
அதுவும்! அப்படி இப்படி வியாபாரி இல்லைங்க..யப்பா! இவர்களை போல நான் யாரையும் பார்த்தது இல்லை, ஒரு வேளை நம்ம ஊரிலேயே இருப்பதால் நமக்கு அனைத்து விசயமும் தெரிகிறது என்பதாலோ!
ரூம் போட்டு யோசிப்பாங்க போல!
//போன மாத ரஜினிகாந்த், தற்போது சன் செய்தியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகி விட்டார்
. //
ஹி ஹி ஹி
நல்ல விளம்பரம் கிடைக்கும் தான்.
கிரி!படம் எப்ப வெளியீடு சொல்லுங்க.குசேலனையெல்லாம் இதில் சரி கட்டிடலாம்.சிவாஜி நேரத்திலேயே எந்திரன் கண்ணைக் கட்டிய மாதிரி ஞாபகம்.
பெரிய எடிர்பார்ப்பை ஏற்ப்படுத்துவதும் சில நேரங்களில், திகட்டி விடும்.
சன் டீவி இந்த விசயத்தில் அடக்கி வாசித்தலே நலம்!
TRIPLE S = single S
SuperStar + Sun + Shankar = Success!
எப்படி!
சன் பிக்சர்ஸ் வாங்கினாலும் அவர்களுக்கு நட்டமில்லை.
ஒருவேளை எந்திரன் குசேலன் பார்ட் 2 போல ரிசல்ட் வந்தாலும்,
“இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக திரைக்கு வந்த முதல் நாளிலே…” என்று போட்டு பணத்தை விளம்பரம் மூலமாக அள்ளிடுவாங்க !
//பெரிய எடிர்பார்ப்பை ஏற்ப்படுத்துவதும் சில நேரங்களில், திகட்டி விடும்.
சன் டீவி இந்த விசயத்தில் அடக்கி வாசித்தலே நலம்!//
கண்ணை மூடிக்கொண்டு வழிமொழிகிறேன்
அதான் Partnership Agreement திருத்தி Reregister செய்துகொண்டார்களே இனிமேல் என்ன கூட்டாக கொள்ளையடித்து.. மன்னிக்கவும் மொட்டையடித்து ரவுண்டாக பிரித்து கொள்வார்கள்.
//வாசுகி said…
நல்ல விளம்பரம் கிடைக்கும் தான்.//
சந்தேகமே இல்லை..ஓவராக போய்விடக்கூடாது!
===================================================================
//ராஜ நடராஜன் said…
கிரி!படம் எப்ப வெளியீடு//
ஷங்கர் உட்பட யாருக்கும் தெரியாது
//குசேலனையெல்லாம் இதில் சரி கட்டிடலாம்//
அது சரி! சொல்வது நீங்க.. அது தான் பயமா இருக்கு
)))
===================================================================
//வால்பையன் said…
பெரிய எடிர்பார்ப்பை ஏற்ப்படுத்துவதும் சில நேரங்களில், திகட்டி விடும்//
முற்றிலும் உண்மை.
//சன் டீவி இந்த விசயத்தில் அடக்கி வாசித்தலே நலம்!//
இவங்க சும்மாவே இருக்க மாட்டாங்களே!
(
===================================================================
//பரிசல்காரன் said…
TRIPLE S = single S
SuperStar + Sun + Shankar = Success!
எப்படி!//
அ(எ)ப்படி இல்ல! இது எப்படி இருக்கு?
)) கலக்கல்
===================================================================
//கோவி.கண்ணன் said…
ஒருவேளை எந்திரன் குசேலன் பார்ட் 2 போல ரிசல்ட் வந்தாலும்//
படமே வரலை!!! அதற்குள்ளே உங்க வழக்கமான வேலைய ஆரம்பித்து விட்டீங்களா? யப்பா! யாராவது இந்த கோவி கண்ணனை கொஞ்சம் “கவனிங்க”
)
//இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக திரைக்கு வந்த முதல் நாளிலே…” என்று போட்டு பணத்தை விளம்பரம் மூலமாக அள்ளிடுவாங்க//
சந்தோசமா! திருப்தியா!! சன் டிவி யைவிட ரஜினியை டேமேஜ் செய்வதிலேயே குறியா இருக்காரு ..உங்களை….. நற நற நற
===================================================================
//நான் ஆதவன் said…
கண்ணை மூடிக்கொண்டு வழிமொழிகிறேன்//
நான், ஆதவன் கண்ணை திறந்து விட்டு வழிமொழிகிறேன்
))))))
//Vanangamudyy said…
அதான் Partnership Agreement திருத்தி Reregister செய்துகொண்டார்களே இனிமேல் என்ன கூட்டாக கொள்ளையடித்து.. மன்னிக்கவும் மொட்டையடித்து ரவுண்டாக பிரித்து கொள்வார்கள்//
அரசியல்ல இதெல்லாம் ஜகஜம்
))
உங்கள் முதல் வருகைக்கு நன்றி வணங்காமுடி (உங்களை மொட்டை அடிக்க முடியாது போல இருக்கே ஹா ஹா ஹா)
// மிக சிறந்த!! வியாபாரிகளான சன் குழுமம் இதை அறியாமலா இருப்பார்கள்!//
சரியாக சொன்னீர்கள் கிரி
//ம்ம்ம் காலம் தான் எவ்வளவு வேகமாக மா(ற்)றுகிறது//
பணம்-தான் எப்படி மாற்றுகிறது!!!
மிக்க நன்றி கிரி சார். இனிமேல் அடிக்கடி வருவேன்..
//Brat said…
சரியாக சொன்னீர்கள் கிரி//
நன்றி Brat
//பணம்-தான் எப்படி மாற்றுகிறது!!!//
இதற்க்கு உங்கள் முதல் பதிலை ரிப்பீட்டுகிறேன்
)
===================================================================
//Vanangamudyy said…
மிக்க நன்றி கிரி சார்..//
ஐயையோ! வணங்காமுடி.. சார் மோர் எல்லாம் வேண்டாம், கிரி னு கூப்பிடுங்க போதும்.
// இனிமேல் அடிக்கடி வருவேன்//
வாங்க! வாங்க!! ஆனா திட்டுறதா இருந்தா கொஞ்சம் பார்த்து திட்டுங்க..:-)
ரஜினி படத்தை வாங்க சன் டிவிக்கு கசக்குமா?
பிரபஞ்சத் தொலைக்காட்சிகளில் முதல் முறையா….. இந்த டமாரம் தாங்க முடியாதே….
ஆமா… எந்திரன் படத்துக்கும் கமலோட இந்திரன் சந்திரன் படத்துக்கும் எதாவது தொடர்பு உண்டா?…. என்று என் நண்பன் கேட்கிறானே????
குசேலன் படத்தை கிழித்தவர்கள் இப்போது எந்திரனை புகழ்கிறhர்கள்.
அரசியலில் இதெல்லாம் சகஜம்பா… என்று கவுன்டமணி சொல்வாரே அது தான் நினைவுக்கு வருகிறது.
எது எப்படியோ தலைவர் படத்துக்கு தொல்லை கொடுக்காமல் இருந்தால் சரிதான்.
//Mahesh said…
பிரபஞ்சத் தொலைக்காட்சிகளில் முதல் முறையா….. இந்த டமாரம் தாங்க முடியாதே….//
ஹி ஹி ஹி காது பஞ்சர் ஆகிடும்
))
//எந்திரன் படத்துக்கும் கமலோட இந்திரன் சந்திரன் படத்துக்கும் எதாவது தொடர்பு உண்டா?…. என்று என் நண்பன் கேட்கிறானே????//
எனக்கு இதற்கும் தில்லு முல்லுக்கும் (படத்தை சொன்னேன்
) சம்பந்தம் உண்டா என்று தோன்றுகிறது.. அதிலையும் அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் “இந்திரன்” என்று வரும் ஹி ஹி ஹி
===================================================================
//கடையம் ஆனந்த் said…
குசேலன் படத்தை கிழித்தவர்கள் இப்போது எந்திரனை புகழ்கிறhர்கள்//
நீங்கள் கூறியதே தான்
)) அரசியல்ல இதெல்லாம் சகஜம்
//எது எப்படியோ தலைவர் படத்துக்கு தொல்லை கொடுக்காமல் இருந்தால் சரிதான்.//
டேய்! நாராயணா! கொசு தொல்லை தீர்ந்தததடா!
)))))))