தோல்விகளையே பார்த்து பழக்கப்பட்ட நமக்கு தற்போதைய தொடர் வெற்றி நிச்சயமாக ஒரு சந்தோஷமான நிகழ்வு தான். இன்னும் இங்கிலாந்தை தொடர்ந்து ஐந்து ஒரு நாள் போட்டிகளில் வென்றதையே 5-0 நம்மால் நம்ப முடியவில்லை, அதற்குள் அடுத்த அதிர்ச்சியாக முதல் டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று இருக்கிறோம், அதுவும் மிக பெரிய வெற்றியாக.
போட்டியின் முதல் நான்கு நாட்கள் இங்கிலாந்து வசமே இருந்தது, செய்திகளில் கூட இந்தியா திணறல் என்று தான் கூறி கொண்டு இருந்தார்கள், நான் கூட இந்தியா அவ்வளோ தான் போல இருக்கு, சரி பல வெற்றிகளை பெற்றதால் தற்போது தோற்றாலும் பெரிய வருத்தம் இல்லை என்று தான் நினைத்து இருந்தேன், தொடர்ந்து வெற்றி பெற்று கொண்டே இருக்க முடியாது அல்லவா! நம்மவர்கள் கூட இந்தியா தோற்று இருந்தால் ரொம்ப கோபப்பட்டு இருக்க மாட்டார்கள் என்றே கருதுகிறேன், நல்லா விளையாடி தோற்றாலும் எப்பாவது தோற்றாலும் யாரும் தவறா நினைக்க மாட்டார்கள், ஆனால் நம்ம இந்திய அணி தோற்பதையே வழக்கமாக வைத்து இருந்ததால் எல்லோரும் செம கடுப்பில் இருந்தார்கள். தற்போது (தான்) அந்த நிலைமை மாறியுள்ளது. பலர் கிரிக்கெட் பார்ப்பதையே நிறுத்தி விட்டனர் அல்லது அவர்கள் ஆர்வம் குறைந்து விட்டது. அட! போங்கப்பா எப்படி இருந்தாலும் தோற்க போறானுக! இதுல இதை பார்த்தா என்ன பார்க்காட்டி என்ன! என்று தான் நினைத்து இருந்தார்கள். தற்போது இந்நிலை மாறி இருக்கும் என்று நினைக்கிறேன்.
இந்த போட்டியில் மட்டும் இரண்டாவது இன்னிங்ஸ் ல் சேவாக் அடித்து நொறுக்கவில்லை என்றால் கண்டிப்பாக நம்ம ஆளுங்க தடுப்பாட்டம் தான் ஆடி இருப்பார்கள், இதை கேப்டன் டோனி கூட ஒப்புக்கொண்டார் (இப்படி பயப்படுவதை எப்ப தான் நிறுத்த போறாங்களோ). இவரின் சரவெடிக்கு ஆட்டநாயகன் விருது மிக பொருத்தமானது தான்.
இங்கிலாந்து அணி கண்டிப்பாக தோல்வி அடைவோம் என்று கனவிலும் (எவரும்) நினைத்து இருக்க மாட்டார்கள் எனென்றால் போட்டி அவர்களுக்கு சாதகமாகவே நான்கு நாட்களும் இருந்தது. சேவாக் பட்டய கிளப்பியதில் நமக்கு நம்பிக்கை வந்தது (சேவாக் LBW அவுட் இல்லை என்று பேட்டியில் கூறினார்) உடன் காம்பிரும் தன் பங்குக்கு சிறப்பாக விளையாடினார். இந்த போட்டியில் மட்டுமில்லை பல போட்டிகளில் திராவிட் சூப்பராக சொதப்பி கொண்டுள்ளார், பேசாமல் இவர் சில காலம் ஓய்வெடுப்பது நல்லது, மற்றவர்கள் குற்றசாட்டுகளில் இருந்தாவது தப்பிக்கலாம்.கடைசி 8 இன்னிங்ஸ் ல் சேர்ந்து மொத்தமே 130 ஓட்டங்களுக்குள் தான் எடுத்துள்ளார். போட்டியை பார்ப்பவர்கள் அனைவரும் இவர் மீது செம கடுப்பில் உள்ளனர். இன்னும் எத்தனை போட்டிகளில் தான் பழைய சாதனைகளை கணக்கில் வைத்து வாய்ப்பு கொடுப்பார்களோ!
இந்த போட்டியில் வெற்றி பெற்றதை விட எல்லோருக்கும் ஆச்சர்யம் சச்சின் 100 அடித்து அவுட் ஆகாமல் இருந்தது!!! சச்சின் பல சாதனைகளை செய்து இருந்தாலும் மேட்ச் வின்னர் என்று வரும் போது சறுக்கி விடுவார். சேசிங் என்றாலே சச்சின் சந்தேகம் தான் (எனக்கு இன்னும் மறக்காமல் இருப்பது தைரியமாக உலககோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக வாக்கர் யூனிஸ், அக்தர் பந்துகளை பொளந்து கட்டியது தான்) , பதட்டத்திலேயே அவுட் ஆகி விடுவார் அதுவும் 90 ஓட்டங்களை கடந்து விட்டால்… அவ்வளோதான்!. ஆனால் இந்த முறை அனைவர் வாயையும் அடைக்கும் படி கலக்கலாக பொறுப்பாக விளையாடி அசத்தி விட்டார், 41 வது டெஸ்ட் சதம் இது, வாழ்த்துக்கள் சச்சின்.
காம்பிர் திராவிட் லக்ஷ்மன் என்று சீரான இடைவெளியில் அனைவரும் அவுட் ஆன போது, என்னடா இது! சங்கூதிட்டாங்க போல இருக்கே என்று பீதியான வேளையில் சச்சினும் யுவராஜும் சும்மா நங்கூரம் கணக்கா அசையாமல் நின்று நம் வயிற்றில் பாலை வார்த்தார்கள். இங்கிலாந்து அணியினரும் என்னென்னவோ செய்து பார்த்தார்கள்.. ம்ஹீம்! முதல் இன்னிங்ஸ் ல் வேலை செய்த இவர்கள் திறமை இதில் சோபிக்கவில்லை, எப்படி பந்து போட்டாலும் இவர்கள் இருவரும் அடித்ததால் வெறுத்தே போய் இருப்பார்கள். கை க்கு எட்டியதே வாய்க்கு எட்டாமல் போய் விட்டதே என்று ரொம்ப ஃபீல் செய்து இருப்பார்கள்
))
அதுவும் யுவராஜ் இவர்களுக்கு பெரிய தலைவலியாக இருக்கிறார், அனைத்து போட்டியிலும் இவர்களை நொறுக்கி தள்ளி இருக்கிறார் T20 உட்பட. டெஸ்ட் போட்டியிலும் தன்னால் சிறப்பாக விளையாட முடியும் என்று நிரூபித்துள்ளார். இங்கிலாந்து அணியினர் இவன் எப்ப தான் அவுட் ஆகி தொலைவான்! என்று நினைத்து இருப்பார்கள்
)))) நெருக்கடியான பல சமயங்களில் யுவராஜ் சிறப்பாக விளையாடி தான் மேட்ச் வின்னர் என்பதை நிரூபித்து கொண்டு இருக்கிறார்.
டோனி தலைமையில் இந்தியா அணி பல சாதனைகளையும் வெற்றிகளையும் அடைந்து வருகிறது. அதில் இது குறிப்பிடத்தக்க வெற்றி (நான்காவது பெரிய சேசிங்). இந்திய மக்கள் அனைத்து போட்டிகளிலும் இவர்கள் வெற்றி பெற வேண்டும் என்று பேராசை படவில்லை, மிகவும் கேவலமாக விளையாடி தொடர்ந்து தோல்வி அடைய கூடாது என்று தான் நினைக்கிறார்கள். 110 கோடி இந்திய மக்களின் பிரதிநிதிகளாக விளையாடும் இவர்கள் தங்களின் பொறுப்புணர்ந்து விளையாடினாலே போதுமானது வெற்றி நம் வாசம். என்ன தான் இவர்கள் சிறப்பாக வெற்றி பெற்றாலும் என்றைக்கு காலை வார போறாங்களோ என்ற பயம் இருப்பது உண்மை தான்
)
No related posts.


{ 22 comments… read them below or add one }
(எனக்கு இன்னும் மறக்காமல் இருப்பது தைரியமாக உலககோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அக்ரம் அக்தர் பந்துகளை பொளந்து கட்டியது தான்)
———————————-
Akthar ok, but its not Akram, but Waqar Younis, right???
Correct me if i am wrong !!!
நீங்கள் கூறியது சரி தான் கோபி (என் ஊர் பெயரும் கோபி
) மாற்றி விடுகிறேன். சுட்டி காட்டியமைக்கு நன்றி.
கிரி நல்லா அலசியிருக்கீங்க… எப்ப நம்ம OZயே ஜெயிச்சோமோ, இங்கிலாந்தெல்லாம் ஜுஜுபி
கிரி,
ஒரு நாள் போட்டி ஆகட்டும், டெஸ்டாகட்டும் ய்வராஜின் பங்கு சிறப்பானது. அவரது ஃஃபார்மே நாம் வெர்றி பெறக் காரணம்.
சச்சின் இதற்கு முன்பும் சென்னை போட்டிகளில் கலக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. 2000 ஆண்டு பாகிஸ்தானுடனான போட்டி (இந்தியா தோற்றது, ஆனாலும் டெண்டுல்கர் சதம் அடித்து 9வது ஆளாக அவுட்டானார்). அவுஸ்திரேலியாவுடன் 1998 போட்டி,
//ஆனால் இந்த முறை அனைவர் வாயையும் அடைக்கும் படி கலக்கலாக பொறுப்பாக விளையாடி அசத்தி விட்டார், 41 வது டெஸ்ட் சதம் இது, வாழ்த்துக்கள் சச்சின்.//
கிரிக்கெட் ஒருகாலத்தில் பார்ப்பேன்(கல்லூரிக் காலம்). இப்போ இண்ட்ரெஸ்ட் போய் விட்டது. ஆனாலும் மேட்ச் காலத்தில் வீட்டில் அதுதான் ஓடும் டிவியில்:). சச்சின் சதம் அடித்த காட்சியை நேற்று மகனுடன் சேர்ந்து ரசித்தேன்.
நம்மூரு போலிஸை பாராட்டி, ECB-காரங்க momento கொடுத்தாங்க!!! பாத்தீங்களா??
//நான் ஆதவன் said…
கிரி நல்லா அலசியிருக்கீங்க… //
நன்றி ஆதவன். அலசி தள்ளிடுவும்ல
)
//எப்ப நம்ம OZயே ஜெயிச்சோமோ, இங்கிலாந்தெல்லாம் ஜுஜுபி
//
ஹி ஹி ஹி நம்ம ஆளுங்களை நம்பி எதையும் கூற முடியாது
===================================================================
//வடகரை வேலன் said…
கிரி,
ஒரு நாள் போட்டி ஆகட்டும், டெஸ்டாகட்டும் ய்வராஜின் பங்கு சிறப்பானது//
சும்மா சொல்லக்கூடாதுங்க வேலன்! பின்னி பெடலெடுக்கிறாரு
===================================================================
//’டொன்’ லீ said…
சச்சின் இதற்கு முன்பும் சென்னை போட்டிகளில் கலக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது//
‘டொன்’ லீ இந்த பதிவு எழுதும் முன்பு வரை இதை குறிப்பிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன், மறந்து விட்டேன் அவ்வ்வ்வ்வ்வ். நீங்க வேற நினைவு படுத்தி டென்ஷன் செய்யறீங்கோ
(
===================================================================
//ராமலக்ஷ்மி said…
சச்சின் சதம் அடித்த காட்சியை நேற்று மகனுடன் சேர்ந்து ரசித்தேன்.//
ம்ஹீம்! நமக்கு cricinfo தான்… அதென்னமோ நான் டிவி ல பார்க்கும் போது மட்டும் போட்டி மொக்கையாகவே இருக்கு [இல்ல நான் பார்ப்பதால் அப்படி ஆகி விடுதா
))) ] ..டேய்! கிரி உனக்கு அதிர்ஷ்டம் அவ்வளோ தான்.
//அதென்னமோ நான் டிவி ல பார்க்கும் போது மட்டும் போட்டி மொக்கையாகவே இருக்கு [இல்ல நான் பார்ப்பதால் அப்படி ஆகி விடுதா
))) ] ..டேய்! கிரி உனக்கு அதிர்ஷ்டம் அவ்வளோ தான்.//
நானும் இப்படி தான் நினைப்பேன்.அநேகமாக sachin 90 எடுத்தால் 100 எடுக்கும் வரை (எடுத்தால்)TVக்கு முன்னால் இருப்பதில்லை.அவ்வளவு tension ஆக இருக்கும்.பிறகு Highlights இல் பார்க்க வேண்டியது தான்.
//ஹி ஹி ஹி நம்ம ஆளுங்களை நம்பி எதையும் கூற முடியாது//
சரியாக சொன்னீர்கள்.
சிலவேளையில் தோல்வி தான் என்று வெறுத்துப்போய் TV ஐ நிற்பாட்டிவிட்டு போனால் india win என்று நண்பர்களிடம் இருந்து phone calls வரும். தலைகீழாகவும் நடக்கும்(பெரும்பாலும்).
இப்போ சிலகாலமாக match பார்ப்பதில்லை.உங்கள் பதிவு அந்த கவலையை குறைத்து இருக்கு.
நல்ல ஒரு டீம் ஸ்பிரிட் தெரிகிறது.
சிறப்பான துவக்கம்.
நேர்த்தியான பங்களிப்பு
ஒருவர் சொதப்பினாலும் மற்றொருவர் தாங்கி பிடித்தல் என இந்திய அணி பெரும் சவாலாகத் தான் இருக்கிறது.
டிராவிட்டை மட்டும் இன்னும் வைத்திருப்பது ஏனென்று புரியவில்லை.
ஒருவேளை செலக்சம் கமிட்டிக்கு திருஷ்டி, கண் படுதலில் நம்பிக்கை இருக்கும் போல,
//விஜய் ஆனந்த் said…
நம்மூரு போலிஸை பாராட்டி, ECB-காரங்க momento கொடுத்தாங்க!!! பாத்தீங்களா??//
அப்படியா! நான் பார்க்கவில்லை.
ரசிகர்களுக்கு மேல போலீஸ் ஐ குவித்ததை பார்த்து அசந்து போய்ட்டாங்க போல
===================================================================
//வாசுகி said…
நானும் இப்படி தான் நினைப்பேன்//
why blood same blood
))
//இப்போ சிலகாலமாக match பார்ப்பதில்லை.உங்கள் பதிவு அந்த கவலையை குறைத்து இருக்கு.//
நான் கூட பார்ப்பதில்லை, தற்போது தான் பார்க்கிறேன்.
===================================================================
//வால்பையன் said…
டிராவிட்டை மட்டும் இன்னும் வைத்திருப்பது ஏனென்று புரியவில்லை.
ஒருவேளை செலக்சம் கமிட்டிக்கு திருஷ்டி, கண் படுதலில் நம்பிக்கை இருக்கும் போல//
ஹி ஹி ஹி
டிராவிட் பேசாம அவரே விலகி கொள்வது அவருக்கு மரியாதையை கொடுக்கும்
நல்லா விளையாடி தோற்றாலும் எப்பாவது தோற்றாலும் யாரும் தவறா நினைக்க மாட்டார்கள்,//
ஹா……… ஹா………..
//இதை கேப்டன் டோனி கூட ஒப்புக்கொண்டார் //
வழக்கமாக முன்மொழிவார். இதில் வழிமொழிகிறார்
நல்ல மேட்ச்
சச்சினை குறை கூறியவர்கள் இன்னும் கொஞ்ச நாள் மௌனம் சாதிச்சு தான் ஆகணும்
// SUREஷ் said…
வழக்கமாக முன்மொழிவார். இதில் வழிமொழிகிறார்//
வழியாம இருந்தா சரி
)
====================================================================
//Bhuvan said…
நல்ல மேட்ச்
சச்சினை குறை கூறியவர்கள் இன்னும் கொஞ்ச நாள் மௌனம் சாதிச்சு தான் ஆகணும்
//
எல்லோரும் திட்டும் போது இதை போல எதையாவது செய்து அவர்கள் வாயை அடைத்து விடுகிறார். ஆனால் இது தொடர்ந்தால் இது அவருக்கு பிரச்சனையில் தான் முடியும். சிறப்பாக விளையாட வேண்டும் அல்லது சிறப்பாக விளையாடும் போதே ஓய்வு பெற்று விட வேண்டும்.
கிரி, இன்னும் ஒன்றிரண்டு தொடர்களை தொடர்ச்சியாக வெல்லட்டும். எனக்கு தெரிந்து இலங்கையில் நடந்த தொடரின் பொழுது இந்திய அணியினரை திட்டாதவர்கள் குறைவு. இப்பொழுது அதிக புகழ்ச்சி. ஆனாலும் இந்திய அணியின் resilience அதிகம் ஆகி இருப்பதாகவே தெரிகிறது. சச்சின் எப்பொழுதுமே மேட்ச் வின்னர் தான் ! இந்த போட்டியில் யுவராஜும், சேவாகும் விளையாடியது போல், முன்பு அவருக்கு சப்போர்ட் செய்தவர்கள் குறைவு.
// மணிகண்டன் said…
கிரி, இன்னும் ஒன்றிரண்டு தொடர்களை தொடர்ச்சியாக வெல்லட்டும்//
இவர்களை நம்பி எதுவும் நினைக்க கூட முடியாதே
//சச்சின் எப்பொழுதுமே மேட்ச் வின்னர் தான் ! இந்த போட்டியில் யுவராஜும், சேவாகும் விளையாடியது போல், முன்பு அவருக்கு சப்போர்ட் செய்தவர்கள் குறைவு//
முன்பு சச்சின் தொடக்க வீரராகவே இறங்குவார், இதற்காக கங்குலியுடன் சண்டை எல்லாம் நடந்தது கூட உண்டு. தொடக்க வீரராக இறங்கிய ஒரு காரணத்தாலும் அதிக சாதனைகள் செய்ய முடிந்தது. இவரை மிடில் ஆர்டரில் இறக்கிய போது வேண்டும் என்றே சரியாக விளையாடாமல் இருந்தார் என்ற குற்ற சாட்டும் உண்டு.
யுவராஜும் தன்னால் மிடில் ஆர்டரில் விளையாடுவதால் சாதனைகள் (சதம் போன்றவை எடுக்கும் வாய்ப்பு மிக குறைவு) புரிய முடியவில்லை என்று கூறியபோது, அவருக்கு இதை போல சாதனைகளை விட அணியை வெற்றி பெற வைப்பதே மிக சிறந்த சாதனை என்று அவருக்கு கவுன்சிலிங் செய்யப்பட்டது. அதன் பின்னர் அவர் புரிந்து கொண்டு இன்று வரை அதை சரியாக செய்கிறார் அதனாலே அவரை மேட்ச் வின்னர் என்று அழைக்கிறார்கள்.
சச்சின் மிக சிறந்த ஆட்டக்காரர் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது, ஆனால் ப்ரஷர் என்று வரும் போது பதட்டமடைந்து விடுகிறார் என்பதை பல ஆட்டங்களில் நிரூபித்துள்ளார். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
வருகைக்கு நன்றி மணிகண்டன்
இந்தியா கெலிச்சாச்சா?
கிரிக்கெட் அறிவு எனக்கு ரெம்ப கேவலம், மேட்ச் பிக்ஸ்ங் க்கு அப்புரம்மா பார்கிறதை விட்டு புட்டேன்
//நசரேயன் said…
இந்தியா கெலிச்சாச்சா?//
ஆஹா! நீங்க தானா அது
)
//மேட்ச் பிக்ஸ்ங் க்கு அப்புரம்மா பார்கிறதை விட்டு புட்டேன்//
நல்ல காரியம் செய்தீர்கள்.
இவர்கள் சிறப்பாக வெற்றி பெற்றாலும் என்றைக்கு காலை வார போறாங்களோ என்ற பயம் இருப்பது உண்மை தான்
)
/
Giri,
You did not mention about Sehwag heroics…he made 50% damage to england.Credit should go to him for this victory.
He made the target as reachable.
அப்துல்லா வருகைக்கு நன்றி
===================================================================
// sabavivek said…
Giri,
You did not mention about Sehwag heroics//
என்னங்க! ஒரு பாராவே போட்டு இருக்கேன்
“இந்த போட்டியில் மட்டும் இரண்டாவது இன்னிங்ஸ் ல் சேவாக் அடித்து நொறுக்கவில்லை என்றால் கண்டிப்பாக நம்ம ஆளுங்க தடுப்பாட்டம் தான் ஆடி இருப்பார்கள், இதை கேப்டன் டோனி கூட ஒப்புக்கொண்டார் (இப்படி பயப்படுவதை எப்ப தான் நிறுத்த போறாங்களோ). இவரின் சரவெடிக்கு ஆட்டநாயகன் விருது மிக பொருத்தமானது தான்”
அவர் அடித்து ஆடியதை நான் பார்க்கவில்லை, எனவே அதை பற்றி விரிவாக எழுத முடியவில்லை.
//he made 50% damage to england.Credit should go to him for this victory.
He made the target as reachable//
நீங்கள் கூறுவதை வழி மொழிகிறேன். இந்த வெற்றிக்கு பெரும்பான்மையான காரணம் சேவாக் தான்.
உங்கள் முதல் வருகைக்கு நன்றி சபா விவேக்.