ரஜினியும் – நானும் – என் அனுபவங்களும்

by கிரி on December 12, 2008

rajini+kuselan ரஜினியும்   நானும்   என் அனுபவங்களும்
நான் 12 வது படிக்கும் முன்பு வரை ரஜினிக்கு ரசிகன் கிடையாது, பொதுவாக மற்றவர்கள் படம் போல ரஜினி படமும் பிடிக்கும் அவ்வளோ தான், ரஜினிக்கு ரசிகனாக மாறியது 1995 ம் ஆண்டு பாட்ஷா வெளியான பிறகு தான். கோபியில் பாட்ஷா வெளிவந்த போது முதலில் சரியாக போகவில்லை லேட் பிக் அப் தான் அதன் பிறகு படம் பட்டய கிளப்பியது வேறு விஷயம் (மற்ற இடங்கள் எப்படி என்று தெரியவில்லை) என்னுடைய நண்பர்கள் பலர் படம் நல்லா இல்லை என்று கூறியதால் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் சென்றேன் ரஜினி ரசிகனும் இல்லை. ஆனால் படம் பார்த்த போது ரஜினியின் வசனங்களும் கவர்ச்சியும் சண்டை காட்சிகளும், படத்தின் விறுவிறுப்பான திரைக்கதையும் என்னை ரஜினிக்கு ரசிகனாக்கி விட்டது, அன்றிலிருந்து இன்று வரை ரஜினியின் ரசிகனாக உள்ளேன், அவரது நடிப்புக்கு மட்டுமல்ல அவருடைய எளிமை மற்றும் பல்வேறு காரணங்களுக்காக, ஆனால் கட் அவுட்டிற்கு பால் ஊத்தும் அளவிற்கு வெறியனாக அல்ல. பொதுவாக ரசிகன் என்றால் இவர்களை போல தான் இருப்பார்கள் என்று ஒரு தவறான அபிப்ராயம் இருக்கிறது.

பதிவுலகம் வந்த போது ரஜினிக்கு இங்கு இருந்த எதிர்ப்பு நான் எதிர்பாராதது. நான் முதன் முதலில் ரஜினிக்கு ஆதரவாக எழுதிய ஒரே ஒரு பதிவின் மூலம் நான் ரஜினி ரசிகனாக பதிவுலகில் அறியப்பட்டேன். நான் பதிவுலகம் வந்து 10 மாதங்கள் தான் ஆகிறது இதில் 175 பதிவுகள் வரை எழுதி இருக்கிறேன், அதில் ரஜினியை பற்றி அல்லது ரஜினிக்கு ஆதரவாக (புகைப்பட பதிவு தவிர்த்து) 6 பதிவுகள் எழுதி இருந்தாலே அதிகம். ஆனால் இதற்கே என்னை ரஜினி ரசிகர் மன்ற தலைவர் மற்றும் கொ. ப. செ. ரேஞ்சுக்கு சிலர் கூறிக் கொண்டுள்ளார்கள் icon smile ரஜினியும்   நானும்   என் அனுபவங்களும் ). ஒருவேளை ஒரு பதிவு எழுதினால் 100 பதிவு போட்ட மாதிரின்னு நினைத்துட்டாங்களா icon smile ரஜினியும்   நானும்   என் அனுபவங்களும் )) இத்தனைக்கும் நான் கண்மூடித்தனமாக ரஜினியின் கருத்துக்களை ஆதரிப்பதில்லை, என் மனதிற்கு எது சரி என்று படுகிறதோ அதை மட்டுமே எழுதுவேன் நமக்கு சரி என்று படுவது மற்றவருக்கு தவறாக தோன்ற வாய்ப்பு இருப்பது இயல்பு தானே! பின்னூட்டங்களிலும் என்னால் முடிந்த வரை நாகரிகமான முறையிலே என் பதிலை தெரிவிக்கிறேன். நான் இது வரை எவரையும் நேரிடையாகவோ மறைமுகமாகவோ தனிமனித தாக்குதல் பதிவுகள் எழுதியதில்லை.

ரஜினி குசேலன் வெளியீட்டின் போது தெளிவில்லாமல் பேசிய பேச்சிற்கு பிறகு சட்டக்கல்லூரி பிரச்சனையின் போது எப்படி எல்லோரும் கொந்தளித்தார்களோ அதை விட அதிகமான பதிவுகள் ரஜினியை கொத்து பரோட்டா போட்டன, பலரும் இதற்காகவே காத்திருந்தது போல எத்தனை கேவலமாக விமர்சிக்க முடியுமோ அந்த அளவிற்கு விமர்சித்தார்கள், ரஜினி ரசிகனான நானும் இந்த சமயத்தில் சில பதிவர்களால் மனதளவில் பாதிக்கப்பட்டேன். நேரிடையாகவும் மறைமுகமாகவும் பதிவுகள் மற்றும் பின்னூட்டங்கள் மூலம் கிண்டலடித்து கொண்டு இருந்தார்கள்(இருக்கிறார்கள்). அந்த சமயத்தில் கவனித்து இருந்த பதிவர்களுக்கு தெரியும். ரஜினியை விட ரஜினிக்கு ரசிகனாக இருப்பது மிக சிரமம் போல icon smile ரஜினியும்   நானும்   என் அனுபவங்களும் )

முதலில் கோபப்பட்டாலும், பின் எப்படி பொறுமையாக இருப்பது, விமர்சனங்களை ஏற்று கொள்ள எப்படி பழகி கொள்வது, கிண்டலடிப்பவர்களை எப்படி ஒதுக்கி தள்ளுவது என்று இவர்களிடம் இருந்தே கற்று கொண்டேன். இதற்காக நான் இவர்களுக்கு நன்றி கூறி கொள்கிறேன். நான் அப்போது நினைத்தது பதிவுலகத்தில் ஒரு சிலரையே நம்மால் சமாளிக்க முடியாமல் மன உளைச்சல் ஆகிறதே, ஒட்டு மொத்த தமிழ்நாடும் ஊடகங்களும் பதிவுலகமும் கும்மி எடுத்த போது ரஜினியின் மன நிலை எப்படி இருந்து இருக்கும் என்று தான். உண்மையில் இந்த பிரச்சனையால் ரஜினிக்கு அனுபவம் கிடைத்ததோ இல்லையோ எனக்கு ரொம்ப ரொம்ப கிடைத்தது icon smile ரஜினியும்   நானும்   என் அனுபவங்களும் )))) நாம் நியாயமாக இருக்கும் போது யாரை பற்றியும் கவலைப்படவேண்டிய அவசியமே இல்லை, ஆனால் இது எனக்கு தாமதமாக தான் புரிந்தது.

ரஜினியிடமும் எனக்கு பிடிக்காத சில விஷயங்கள் உள்ளது, அவரின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பேன் என்று என்னை கருத வேண்டாம், ஒரு சில விஷயங்கள் ரஜினி ஏன் செய்ய செய்ய கூடாது என்று ரசிகர் அல்லதாவர்கள் நினைப்பது போல நானும் நினைப்பதுண்டு. ரஜினி தவறு செய்தாலும் தவறு தான், வெறும் குறைகளை மட்டுமே வைத்து ஒருத்தரை ஒதுக்க என்னால் முடியாது, ரஜினியின் பல கருத்துக்கள் எனக்கு பிடித்து இருக்கிறது. அவரிடம் இருந்து நல்ல விசயங்களை எடுத்து கொள்கிறேன். அவர் கிட்ட என்ன நல்ல விஷயம் இருக்கு? என்று அவரை பிடிக்காதவங்க சின்னப்புள்ளைத்தனமா கேட்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன் icon smile ரஜினியும்   நானும்   என் அனுபவங்களும்

ரஜினி என்றால் நான் அதிகம் கவனிக்கபடுவதற்கு காரணமாக நான் கருதுவது, பல முனை தாக்குதல் icon smile ரஜினியும்   நானும்   என் அனுபவங்களும் )) வந்தாலும் நாகரீகமான முறையில் அனைத்தையும் சமாளிப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம், ரஜினி ரசிகன் என்பதால் ரஜினி செய்வது அனைத்தும் சரி என்று நான் என்றும் வாதிடுவதில்லை, ஏனோ தானோ என்று ரஜினியை ஆதரித்து பதிவெழுதுவதில்லை. ரஜினியை பற்றிய பதிவென்றால் ரஜினி பற்றி மட்டுமே இருக்கும், மற்ற நடிகர்களை மறைமுகமாக கிண்டலடிக்க, மட்டம் தட்ட மாட்டேன். ஒரு ரசிகன் என்பவன் மற்ற நடிகர்களையும் மதிக்க தெரிய வேண்டும், நான் மதிக்கிறேன்…. icon wink ரஜினியும்   நானும்   என் அனுபவங்களும்

நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் ரஜினி கிடையாது, 33 வருட திரை வாழ்க்கையில் பல இன்னல்கள், அவமானங்கள், வெற்றி தோல்விகள், தடைகள், ஏற்ற தாழ்வுகள் என்று அனைத்தையும் கடந்து வந்தவர். வட இந்திய திரை உலகம் தான் இந்தியாவின் திரை அடையாளம் என்பது போல பீற்றி கொண்டு இருக்கும் வட மாநிலத்தவருக்கு அவர்களது ஊடகங்களை வைத்தே சிவாஜி என்ற ஒரு படத்தின் மூலம் பதிலடி கொடுத்தவர். நமது தமிழ் படங்களை உலகளவில் பிரபலபடுத்தியவர். இன்றும் அனைத்து நடிகர்களுக்கும் சிம்ம சொப்பனமாக இருப்பவர். பல மாதமாக அவரை தவறாக சித்தரித்து எதிர்மறையான எண்ணங்களை பொது மக்களிடையே கஷ்டப்பட்டு ஏற்படுத்தி வைத்த ஊடகங்களை தனது ஒரே ஒரு வெளிப்படையான பேட்டியின் மூலம் பொதுமக்களை தன் பால் ஈர்த்து அவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தவர். தன்னை பற்றி புறம் கூறுபவர்களை கிண்டலடிப்பவர்களை பொருட்படுத்தாதவர், மற்றவர்களை என்றும் குறை கூறாதவர், இதை போல பல பெருமைகளை கொண்டவர். ரஜினியிடம் சில குறைகள் இருந்தாலும் (குறைகள் இல்லாத மனிதர் உண்டா?) என்றும் எனக்கு அவர் ஒரு சூப்பர் ஸ்டார் தான்.

இன்று பிறந்த நாள் காணும் ரஜினி அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ரஜினி ரசிகர்களுக்கும், rajinifans.com, Onlyrajini.com சுந்தர், envazhi.com வினோ ஆகியோருக்கும் இந்த பாட்டை டெடிகேட் செய்கிறேன் icon smile ரஜினியும்   நானும்   என் அனுபவங்களும்

No related posts.

{ 60 comments… read them below or add one }

நசரேயன் December 12, 2008 at 2:27 AM

நான் தான் முதல்ல ?

Reply

நசரேயன் December 12, 2008 at 2:31 AM

/*ரஜினியின் பல கருத்துக்கள் எனக்கு பிடித்து இருக்கிறது. அவரிடம் இருந்து நல்ல விசயங்களை எடுத்து கொள்கிறேன்.*/
வழி மொழிகிறேன்

Reply

பிரகாஷ் December 12, 2008 at 2:31 AM

ரஜினி வாழ்க! ரஜினி வாழ்க!! ரஜினி வாழ்க!!!

Reply

நசரேயன் December 12, 2008 at 2:32 AM

/*
இந்தியாவின் திரை அடையாளம் என்பது போல பீற்றி கொண்டு இருக்கும் வட மாநிலத்தவருக்கு அவர்களது ஊடகங்களை வைத்தே சிவாஜி என்ற ஒரு படத்தின் மூலம் பதிலடி கொடுத்தவர்
*/
உண்மை..உண்மை.. உண்மையை தவிர வேறு ஒன்றும் இல்லை

Reply

ஸ்ரீதர்கண்ணன் December 12, 2008 at 2:49 AM

ரஜினியை விட ரஜினிக்கு ரசிகனாக இருப்பது மிக சிரமம் போல :-) )

Reply

குடுகுடுப்பை December 12, 2008 at 3:00 AM

நான் கூட ரஜினிய வெச்சு ஒரு பதிவு போட்டிருக்கேன் இன்னக்கி.

Reply

அணிமா December 12, 2008 at 3:43 AM

தலைவருக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

Reply

கிரி December 12, 2008 at 4:38 AM

//நசரேயன் said…
நான் தான் முதல்ல ?//

யோசிக்கவே வேண்டாம், என் பதிவிற்கு யாரும் ஓடி வந்து பின்னூட்டம் போடமாட்டாங்க :-) ))

===================================================================

பிரகாஷ், ஸ்ரீதர் கண்ணன், குடுகுடுப்பையார் மற்றும் உருப்புடாதது_அணிமா ஆகியோரின் முதல் வருகைக்கு நன்றி

Reply

வற்றாயிருப்பு சுந்தர் December 12, 2008 at 4:48 AM

வாழ்த்த வயதில்லையாதலால் வணங்குகிறேன்! :-) ))

அது சரி

//ரஜினி ரசிகர்களுக்கும், rajinifans.com, Onlyrajini.com சுந்தர், envazhi.com வினோ ஆகியோருக்கும் இந்த பாட்டை டெடிகேட் செய்கிறேன்//

அப்படியே என்னை மாதிரி பாலு ரசிகர்களுக்கும் (வெறியர்களுக்கும்) இதை டெடிகேட் செய்யறது.. பாலுவின் டாப் பாடல்கள்ல இது இன்னிக்கு வரைக்கும் இருக்குல்ல?

நன்றி!

Reply

இராம்/Raam December 12, 2008 at 4:59 AM

கிரி,

நீங்க சொன்னது என்னம்மோ சரிதான்… இந்த பதிவுலகத்தை பொறுத்த வரை ரஜினி ரசிகன்’ன்னு சொல்லிக்கிட்டா நம்மளை எதிரி மாதிரிதான் நடத்துவாங்க… :)

நாமே ரசிகன்னு சொல்லிக்கிட்டாலும் முதல் நாள் போயி படம் பார்க்க சந்தர்ப்பம் வாய்க்காது, ஆனா இவங்கல்லாம் முதல் நாளிலே படம் பார்த்துட்டு வந்து என்னனோமோ (..)விமர்சனமின்னு எழுதுவாங்க… ஹிம் எல்லாருக்கும் விளம்பரம் தேவைப்படுது’லே… :)

ஒரு பெரிய கூத்து என்னான்னா பதிவுலக நண்பர் ஒருவர் பெங்களூரூ வந்துருந்தாரு, அவரோட சிவாஜி விமர்சனம் குமுதத்திலே வேற வந்து தொலைஞ்சுருந்தது… ஏன் உங்களுக்கு இப்பிடியொரு கொலைவெறி’ன்னு கேட்டேன், ஒடனே இந்த ஒலகத்தை காக்க வந்து ஞானி மாதிரி ரசிக கண்மணிகளை ரஜினி என்னும் மாயை’லிருந்து காக்க வந்திருக்கேன்னு ஒரே அறுவை…. :(

நான் ஒரு வகையிலே ரஜினிய விட பெரிய ஆளு, இந்த உலகத்திலே பிளாக் படிக்கிற எல்லாருக்கும் என்னை தெரியுமின்னு அல்டாப்பு வேற… :) என்னத்த சொல்ல, செவனே’ன்னு சரக்கு மண்டுங்க’ன்னு சொல்லிட்டு திரும்பி ஒங்கார்ந்துட்டேன்… :)

இந்த நாட்டு மக்களுக்கு புத்தி சொல்லுறவங்களோட இம்சை தாங்கமுடியல நாராயணா… :)

Reply

கிரி December 12, 2008 at 6:47 AM

//வற்றாயிருப்பு சுந்தர் said…
வாழ்த்த வயதில்லையாதலால் வணங்குகிறேன்! :-) ))
அப்படியே என்னை மாதிரி பாலு ரசிகர்களுக்கும் (வெறியர்களுக்கும்) இதை டெடிகேட் செய்யறது.. பாலுவின் டாப் பாடல்கள்ல இது இன்னிக்கு வரைக்கும் இருக்குல்ல?//

வாங்க சுந்தர். ரஜினியின் வெற்றியில் SPB க்கு பங்கு இல்லாமலா! அவர் பாடல் சென்டிமென்ட்டா இருப்பதை விரும்பாத ரசிகரும் உண்டோ!

===================================================================

//இராம்/Raam said…
கிரி,
நீங்க சொன்னது என்னம்மோ சரிதான்… இந்த பதிவுலகத்தை பொறுத்த வரை ரஜினி ரசிகன்’ன்னு சொல்லிக்கிட்டா நம்மளை எதிரி மாதிரிதான் நடத்துவாங்க… :) //

அப்படி தான் பண்ணுறாங்க..ஆனால் அதை பற்றி எல்லாம் கவலை படுவதில்லை. நம் மனசுப்படி நடக்கத்தான் அடுத்தவர்கள் விருப்பத்திற்க்காகவா நாம் பதிவு எழுத முடியும்?

//விமர்சனமின்னு எழுதுவாங்க//

சரியா குறிப்பிட்டு (விமர்சனமுன்னு) இருக்கீங்க :-) ))

//ரசிக கண்மணிகளை ரஜினி என்னும் மாயை’லிருந்து காக்க வந்திருக்கேன்னு //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

//இந்த நாட்டு மக்களுக்கு புத்தி சொல்லுறவங்களோட இம்சை தாங்கமுடியல நாராயணா… :) //

ஹி ஹி ஹி

Reply

ராஜ நடராஜன் December 12, 2008 at 7:16 AM

ரஜனிக்கு முதல் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

கிண்டலுக்குத்தான் பதிவுக்கு வந்தேன்.ஆனால் உங்கள் எழுத்தும் பிறந்தநாள் அறிவிப்பும் அந்த எண்ணத்தை மாற்றிவிட்டது.

Reply

ஜெகதீசன் December 12, 2008 at 7:38 AM

கிரி,
சூப்பர் ஸ்டாருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

பதிவை இன்னும் படிக்கலை… வீட்டுக்குப் போய் படிக்கிறேன்..

Reply

ராமலக்ஷ்மி December 12, 2008 at 7:48 AM

வற்றாயிருப்பு சுந்தர் said…
// பாலுவின் டாப் பாடல்கள்ல இது இன்னிக்கு வரைக்கும் இருக்குல்ல?//

கிரி said…
// ரஜினியின் வெற்றியில் SPB க்கு பங்கு இல்லாமலா!//

இரண்டும் சரி:)! SPB குரல் + ரஜினியின் ஸ்டைல்=அருமையான பாடல் காட்சி. அதை அவரது பிறந்த தினப் பதிவில் பகிர்ந்து கொண்டிருப்பது வெகு பொருத்தம்.

Reply

கிரி December 12, 2008 at 9:19 AM

ராஜ நடராஜன், ஜெகதீசன், ராமலக்ஷ்மி வருகைக்கு நன்றி

Reply

வால்பையன் December 12, 2008 at 9:49 AM

//ரஜினிக்கு ரசிகனாக மாறியது 1995 ம் ஆண்டு பாட்ஷா வெளியான பிறகு தான்.//

பாட்ஷா படம் வெளிவந்த போது நான் ஈரோட்டில் ஆட்டோ தான் ஓட்டி கொண்டிருந்தேன். படம் பார்த்த பின்பு ஆட்டோ ஓட்டுவதே ஒரு ஹீரோயிசம் போல ஒரு நினைப்பு. ஆனாலும் நான் யாருக்கும் ரசிகராய் இருந்ததில்லை என்பது கூடுதல் தகவல்

Reply

வால்பையன் December 12, 2008 at 9:50 AM

//ரஜினியை விட ரஜினிக்கு ரசிகனாக இருப்பது மிக சிரமம் போல :-) )//

ரசித்த வரிகள்

Reply

வால்பையன் December 12, 2008 at 9:51 AM

//ரஜினியை பற்றிய பதிவென்றால் ரஜினி பற்றி மட்டுமே இருக்கும், மற்ற நடிகர்களை மறைமுகமாக கிண்டலடிக்க, மட்டம் தட்ட மாட்டேன்.//

அப்போ நீங்க இன்னும் சரியா அரசியல் கத்துகலைன்னு அர்த்தம்.

Reply

வால்பையன் December 12, 2008 at 9:52 AM

//இன்று பிறந்த நாள் காணும் ரஜினி அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்//

இது தான் மேட்டரா?

Reply

வால்பையன் December 12, 2008 at 9:53 AM

ரோபோ வரட்டும்

பார்க்கலாம், இன்னும் அதே சூடு இருக்குதான்னு

Reply

Vaanathin Keezhe... December 12, 2008 at 10:03 AM

கோவை கேஜி மற்றும் பாபா காம்ளெக்ஸில் டிக்கெட் கிடைக்காமல் மேட்டுப்பாளையம் சுமதியில் போய் இந்தப் படத்தை நின்று கொண்டே பார்த்தேன்…

அது என்னமோ ரஜினி என்றால் லாஜிக் மீறல் பிடித்திருக்கிறது…

நம் அடி மனதின் ஆசை அது… சில சட்டங்களை மீற வேண்டும், சில மரபுகளைத் தாண்ட வேண்டும்… இதெல்லாம் அடிமனதின் ஆசைகள். ஏதோ ஒரு விதத்தில் இந்த விருப்பங்கள் ரஜினி மூலம் நிறைவேறுவதாக பலரும் உணர்கிறோம்.

தவிர, ஒருவர் என்னதான் பெரிய அறிவுக் கொழுந்தாக இருந்தாலும், உள்ளுக்குள்ளே யாராவது ஒருவருக்கு ரசிகனாகவே இருப்பார்.

“எனக்கு நடிகர் நடிகைகளே பிடிக்காது… நான் பகுத்தறிவுக்காரனாக்கும்” என்று சிலர் பீற்றிக் கொள்வார்கள்.

ஆனால் நான் எம்ஆர் ராதாவுக்கு ரசிகன் என்பார்கள்!

இல்லாவிட்டால் வாயில் நுழையாத ஒரு லத்தீன் அமெரிக்க நடிகரை அல்லது மலையாள நடிகரைச் சொல்லுவார்கள்.

எதற்கு இந்தப் பாசாங்கு… நான் மனதில் காணும் கனவுகளை, அசாதாரணங்களை… திரையில் என்னைவிட ஸ்டைலாக, லகுவாக நிகழ்த்திக் காட்டும் ஒரு அசகாய சூரனுக்கு மகிழ்ச்சியோடு ரசிகனாயிருப்பது ஒன்றும் தேசவிரோதம் அல்ல…

காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளுங்கள். ரஜினியை நாம் நிறைய பார்த்துவிட்டோம். அவர் தன் மனதைத் திறந்து ரசிகனிடம் பேசியும் விட்டார்.

கண்ணா… நம்ம வழி இதான்… முடிஞ்சா வா… இல்லன்னா உனக்குப் புடிச்ச வழியில போய்க்கி்ட்டே இரு, என்று வெளிப்படையாகவே கூறிவிட்டார்.

இதற்கு மேல் அவரைக் குறை கூறுபவர்கள், எவர் சொன்னாலும் ‘குரை’ப்பை நிறுத்தப் போவதில்லை.

Perversion-ஐ பதிவு என்று மூடத்தனமாய் நம்பிக் கொண்டிருக்கும் இந்த சிலருக்காக நீங்கள் இவ்வளவு விசனப்படுவது தேவையற்றது…

Carry on Giri…

Vinojasan
http://www.envazhi.com

Reply

Vaanathin Keezhe... December 12, 2008 at 10:07 AM

அருமையான பாட்டு. இதயத்துக்குப் பக்கத்தில் அமர்ந்து இனியவள் தடவிக் கொடுக்கும் இனிய சுகானுபவம்…

ராஜா-ரஜினி-SPB… என்ன ஒரு கூட்டணி போங்க!

நன்றி கிரி…

Reply

கிரி December 12, 2008 at 10:14 AM

//வால்பையன் said…
பாட்ஷா படம் வெளிவந்த போது நான் ஈரோட்டில் ஆட்டோ தான் ஓட்டி கொண்டிருந்தேன்//

அப்படியா! அப்ப ஈரோடு வந்தா என்னை ரவுண்டு ஆட்டோ ல கூட்டிட்டு போங்க :-)

//அப்போ நீங்க இன்னும் சரியா அரசியல் கத்துகலைன்னு அர்த்தம்//

தமிழக அரசியலே மோசமாக உள்ளது என்று நொந்து உள்ளேன், அதை விட மோசமாக பதிவுலக அரசியல் உள்ளது. உங்களுக்கு தெரியாதாதல்ல வெறுத்து போய் ஒதுங்கி இருக்கிறீர்கள். இதை போன்ற அரசியலை நான் காத்துக்கொள்ள விரும்பவில்லை அதன் அருகே கூட போக விருப்பம் இல்லை.

//ரோபோ வரட்டும்
பார்க்கலாம், இன்னும் அதே சூடு இருக்குதான்னு//

உண்மையில் சூடு பலரின் வயிற்றில் இருப்பதே பல பிரச்சனைகளுக்கு காரணம் :-)

Reply

வால்பையன் December 12, 2008 at 10:18 AM

//எனக்கு நடிகர் நடிகைகளே பிடிக்காது… நான் பகுத்தறிவுக்காரனாக்கும்” என்று சிலர் பீற்றிக் கொள்வார்கள். //

நண்பரே நடிப்பு என்பது அவர்களுக்கு ஒரு தொழில், சினிமா திரை முழுவதும் நடிப்பாலேயே நிரம்பி இருக்கிறது.

இதை மிஞ்ச யாருமில்லை என்று எதுவும் கிடையாது, ஒவ்வொரு நாளும் புதிதாக ஒரு சாதனை அரங்கேறி கொண்டேதான் இருக்கிறது,

அதனால் நானும் ரசிகன் தான் சினிமாவுக்கு, நடிகர்களுக்கல்ல

Reply

வால்பையன் December 12, 2008 at 10:20 AM

//அப்ப ஈரோடு வந்தா என்னை ரவுண்டு ஆட்டோ ல கூட்டிட்டு போங்க :-) //

தாராளமாக,
எங்களிடம் சொந்த ஆட்டோ இருக்கிறது, என் அப்பா தான் அதை ஓட்டி கொண்டிருக்கிறார், நீங்கள் வரும்போது சொல்லுங்கள், அதில் ஊர் சுற்றலாம்

Reply

வால்பையன் December 12, 2008 at 10:21 AM

//இதை போன்ற அரசியலை நான் கத்துக்கொள்ள விரும்பவில்லை அதன் அருகே கூட போக விருப்பம் இல்லை.//

அதை யாரும் விரும்பி கற்பதில்லை, ஆனாலும் தானாகவே வந்து சிக்குவது மாதிரி சிக்க வைப்பானுங்க பாருங்க, அங்கே தான் அவனுங்களோட அரசியல் தந்திரத்தை பாராட்டனும்

Reply

கிரி December 12, 2008 at 10:31 AM

//Vaanathin Keezhe… said…
கோவை கேஜி மற்றும் பாபா காம்ளெக்ஸில் டிக்கெட் கிடைக்காமல் மேட்டுப்பாளையம் சுமதியில் போய் இந்தப் படத்தை நின்று கொண்டே பார்த்தேன்… //

எங்க ஊர்ல பார்த்து இருக்கீங்க :-) ரசிகனாக இல்லாமல் இந்த படம் பார்த்து ரசிகன் ஆனேன் என்றால் நான் எந்த அளவு படத்தை ரசித்து இருப்பேன்.

//Perversion-ஐ பதிவு என்று மூடத்தனமாய் நம்பிக் கொண்டிருக்கும் இந்த சிலருக்காக நீங்கள் இவ்வளவு விசனப்படுவது தேவையற்றது… //

நீங்கள் கூறுவதை ஒத்துக்கொள்கிறேன் வினோ. விசனப்படுவதை நான் எப்போதோ நிறுத்தி விட்டேன், அதை பதிவிலும் விளக்கியுள்ளேன், இந்த பதிவு கூட ஒரு தன்னிலை விளக்கம் போல தான் கடைசி முறையாக, புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளட்டும்.

பதிவுலகம் சாராத ரசிகர்கள் இந்த பதிவை படித்தால் சிறிது குழம்பி விடுவார்கள், ரஜினிக்கு நான் ஆதரவா இல்லை எதிர்ப்பா என்று :-) )) அவர்களுக்கு தெரியாது பதிவுலகத்தில் ரஜினி ரசிகனாக இருப்பது எத்தனை பெரிய சிரமம் என்று!

//ராஜா-ரஜினி-SPB… என்ன ஒரு கூட்டணி போங்க!//

எத்தனை சூப்பர் ஹிட் பாடல்கள்! SPB அவர்களின் குரலில் தலைவர் பாடல் என்றாலே தனி சிறப்பு தான். ஒருவன் ஒருவன் முதலாளி எனக்கு மிக மிக பிடித்த பாடல்.

Reply

கிரி December 12, 2008 at 10:44 AM

//வால்பையன் said…
அதனால் நானும் ரசிகன் தான் சினிமாவுக்கு, நடிகர்களுக்கல்ல//

அருண் இது உங்களை போல உள்ளவர்களுக்கான வினோ அவர்களின் பதில் அல்ல, அதனால் குழம்ப வேண்டாம்.

//தாராளமாக,
எங்களிடம் சொந்த ஆட்டோ இருக்கிறது, என் அப்பா தான் அதை ஓட்டி கொண்டிருக்கிறார், நீங்கள் வரும்போது சொல்லுங்கள், அதில் ஊர் சுற்றலாம்//

அப்படியா! எனக்கு ரொம்ப நாளா தெரிந்தவங்க ஆட்டோ ல இப்படி போகனும்னு ரொம்ப ஆசை. பார்த்து கூட்டிட்டு போங்க..:-) அப்பாடா! நீண்ட நாள் ஆசை ஒன்று நிறைவேற போகிறது :-)

//அதை யாரும் விரும்பி கற்பதில்லை, ஆனாலும் தானாகவே வந்து சிக்குவது மாதிரி சிக்க வைப்பானுங்க பாருங்க, அங்கே தான் அவனுங்களோட அரசியல் தந்திரத்தை பாராட்டனும்//

இந்த விசயத்துல நான் உஷாருங்க. தெரியாம மாட்டினாலும் ஒரு பெரிய கும்பிடு போட்டு விட்டு வந்து விடுவேன். இது வரை பெரிதாக எந்த விசயத்திலும் மாட்டாததே இதற்க்கு சான்று. இதை போல விசயங்களில் எனக்கு சுத்தமாக ஆர்வம் இல்லை அதே போல பிடிப்பதுவும் இல்லை. இவ்வாறு செய்து எதை சாதிக்க போகிறார்கள்?

Reply

ஜோ/Joe December 12, 2008 at 10:52 AM

சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

நடிகர் திலகம் ,கமல்ஹாசன் -க்கு அடுத்து எனக்கு பிடித்த நடிகர் ரஜினி.

Reply

விஜய் ஆனந்த் December 12, 2008 at 10:54 AM

கிரி,
சூப்பர் ஸ்டாருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

உங்களுக்கும் வாழ்த்துக்கள்!!!சூப்பரா எழுதியிருக்கீங்க….

Reply

கிரி December 12, 2008 at 11:44 AM

வருகைக்கு நன்றி ஜோ

===================================================================

விஜய் ஆனந்த் தலைவர் பிறந்தநாளில் ஸ்மைலி போடாமல் இரண்டு வார்த்தை கூறியதற்கு நன்றி :-) ))))

Reply

சரவணகுமரன் December 12, 2008 at 11:54 AM

//முதலில் கோபப்பட்டாலும், பின் எப்படி பொறுமையாக இருப்பது, விமர்சனங்களை ஏற்று கொள்ள எப்படி பழகி கொள்வது, கிண்டலடிப்பவர்களை எப்படி ஒதுக்கி தள்ளுவது என்று இவர்களிடம் இருந்தே கற்று கொண்டேன்.//

சூப்பர்…

Reply

நல்லதந்தி December 12, 2008 at 12:22 PM

வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!
வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!
வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!
வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்கவாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!
வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!
வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!
வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!

சூப்பஸ்டாரின் புகழ் வான் உள்ள அளவும் என்றும் நிலைத்து நின்று வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!
வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!!.

Reply

Arun December 12, 2008 at 12:23 PM

மற்றவர்களை என்றும் குறை கூறாதவர்
- For me this is the best character I learned from Rajini. Thanks Giri, very nice post.

Reply

கிரி December 12, 2008 at 1:10 PM

சரவணகுமரன் வருகைக்கு நன்றி

===================================================================

//நல்லதந்தி said…
யப்பா! இத்தனை வாழ்த்தா! போதும் போதும் :-)

===================================================================

//arun said…
மற்றவர்களை என்றும் குறை கூறாதவர்
- For me this is the best character I learned from Rajini. Thanks Giri, very nice post.//

நீங்கள் கூறியதற்காக கூறவில்லை அருண், உண்மையிலேயே எனக்கு மிகவும் பிடித்த குணம். இதனால் கிடைக்கும் மன திருப்தி அலாதியானது, முதலில் மிக சிரமமாக இருந்தது தற்போது ஓரளவிற்கு பழகி கொண்டேன்.

Reply

வாசுகி December 12, 2008 at 2:05 PM

சூப்பர் ஸ்டாருக்கு எனது இனிய‌ பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உங்களுடைய பதிவுக்கு comment பிறகு எழுதுகிறேன்.

Reply

கடையம் ஆனந்த் December 12, 2008 at 2:35 PM

ரஜினியின் பல கருத்துக்கள் எனக்கு பிடித்து இருக்கிறது. அவரிடம் இருந்து நல்ல விசயங்களை எடுத்து கொள்கிறேன்.
//
வழி மொழிகிறேன்.
//
சூப்பர் ஸ்டாருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

Reply

Sri December 12, 2008 at 4:26 PM

நல்ல பதிவு கிரி.. நான் சில மாதங்களாக பதிவுலகில் ஒரு silent spectator-ஆக இருக்கிறேன். இங்கே பலரும் தங்கள் மனதில் உள்ள விஷத்தை கொட்டுகிறார்கள். ஹும்.. நல்லவர்களுக்கு காலமில்லை போலிருக்கிறது.

Reply

கிரி December 12, 2008 at 4:57 PM

//வாசுகி said…
சூப்பர் ஸ்டாருக்கு எனது இனிய‌ பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உங்களுடைய பதிவுக்கு comment பிறகு எழுதுகிறேன்//

:-) வாங்க, என்ன ரஜினி ரசிகரான உங்களை காணோம் என்று பார்த்தேன். விரிவா கூறுங்க

==========================================================================

கடையம் ஆனந்த் வருகைக்கு நன்றி

==========================================================================

//Sri said…
நல்ல பதிவு கிரி..//

நன்றி ஸ்ரீ

//நான் சில மாதங்களாக பதிவுலகில் ஒரு silent spectator-ஆக இருக்கிறேன்//

நீங்கள் மட்டுமல்ல பலரும் இப்படி தான் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். நான் இவர்களுக்கு ஈடு கொடுத்து இருக்கிறேன், நான் யாரை பற்றியும் கவலைப்படுவதில்லை. என் வழியில் நியாயமாக இருக்கிறேன்.

Reply

Nags December 12, 2008 at 5:19 PM

தலைவர்க்கு அன்பு பிறந்தநாள் வாழ்த்துகள் …….

Reply

Logan December 12, 2008 at 8:41 PM

//ஒரு பதிவு எழுதினால் 100 பதிவு போட்ட மாதிரின்னு நினைத்துட்டாங்களா // – சூப்பர்.

//ஒரு ரசிகன் என்பவன் மற்ற நடிகர்களையும் மதிக்க தெரிய வேண்டும், நான் மதிக்கிறேன்…. ;-) //
வழி மொழிகின்றேன்.

குசேலன் ஓரளவு குடும்பத்துடன் பார்க்கக்குடிய படம்தான் ( வடிவேலு – நயந்தாரா காட்சிகளை தவிர). பத்திரிக்கைகளும் ஊடகங்குளும் சேர்ந்து படத்தை ஓட முடியாமல் செய்துவிட்டன :(

ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Reply

கிரி December 12, 2008 at 9:40 PM

Nags மற்றும் லோகன் வருகைக்கு நன்றி

Reply

Raja December 12, 2008 at 9:56 PM

ஒரே பதிவுல சூப்பர் ஸ்டார் (ரசிகரா) ஆக்கிட்டாங்க.
//ரஜினியை விட ரஜினிக்கு ரசிகனாக இருப்பது மிக சிரமம் போல
சூப்பர் ஸ்டாருக்கு ரசிகர்ன சும்மாவ. தலைவர் நல்லவர இருக்கிறதுனால கண்டவங்க இம்சிக்கிறத சகிக்க முடியல.

தலைவா வாழக பல்லாண்டு.

Reply

வாசுகி December 12, 2008 at 11:16 PM

பதிவு நல்லா இருக்கு.
//ஒருவேளை ஒரு பதிவு எழுதினால் 100 பதிவு போட்ட மாதிரின்னு நினைத்துட்டாங்களா//
ஹி ஹி ஹி
//ரஜினியை விட ரஜினிக்கு ரசிகனாக இருப்பது மிக சிரமம் போல.//
சரி தான். ரஜினி ரசிகனுக்கே இந்த நிலை என்றால் ரஜினி பாவம் தான். எப்படித்தான் எல்லாவற்றையும்
பொறுமையாக கேட்டுக்கொண்டு இருக்கிறாரோ. அதனால் தான் அவரை சிறந்த பண்பாளர் என்கிறோம்.

“காதலின் தீபம் ஒன்று” எல்லாருக்கும் பிடித்த பாடல் தான்.
superb.
எனக்கு மிகவும் பிடித்த பாடல் “ஆகாய கங்கை பூந்தேன் மலர்”. (மலேசியா வாசுதேவன்)
அதில் ரஜினி நடந்து வரும் style இருக்கே. அட அட அட.. எத்தனை தரம் வேண்டும் என்றாலும் பார்க்கலாம்.

அவரின் நடிப்பு ,style இற்கு அப்பால் அவரின் சிறந்த பண்பு தான் அவரை super star ஆக உயர்த்தியது.
ஆனால் அவர் கை அசைத்தால் கூட அதை முன் அட்டையில் போட்டு கவர் story எழுதி பணம் பார்ப்பவர்கள்,
பின்பு கற்பனை கதை எழுதி அவரை தாறுமாறாக விமர்சிப்பது கவலையாகவே உள்ளது.
இதற்கு பிறகும் கூட அவர் மக்கள் மத்தியில் super star ஆக அமர்ந்துள்ளார் என்றால் நிச்சயமாக அது அவரின்
நல்ல பண்புக்கு கிடைத்த பரிசே.
ரஜினி ரசிகை என்பதில் எனக்கு பெருமையே.

ஆனால் ரஜினியில் ஏன் இத்தனை வெறுப்புடன் எல்லொரும் நடந்து கொள்கிறார்கள் என்பது புதுமையாக
தான் இருக்கு. (அவரின் உயர்ச்சி பிடிக்கவில்லையோ)
இவற்றை எல்லாம் வென்று அவர் இன்னும் உச்சத்திற்கு
(இருக்கா?)போக வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பமும்.
நன்றி.

Reply

மோகன் December 12, 2008 at 11:27 PM

கிரி,

//ரஜினியை பற்றிய பதிவென்றால் ரஜினி பற்றி மட்டுமே இருக்கும், மற்ற நடிகர்களை மறைமுகமாக கிண்டலடிக்க, மட்டம் தட்ட மாட்டேன். ஒரு ரசிகன் என்பவன் மற்ற நடிகர்களையும் மதிக்க தெரிய வேண்டும், நான் மதிக்கிறேன்…. ;-) //

சரியாகச் சொன்னீர்கள்.

//நாமே ரசிகன்னு சொல்லிக்கிட்டாலும் முதல் நாள் போயி படம் பார்க்க சந்தர்ப்பம் வாய்க்காது, ஆனா இவங்கல்லாம் முதல் நாளிலே படம் பார்த்துட்டு வந்து என்னனோமோ (..)விமர்சனமின்னு எழுதுவாங்க… ஹிம் எல்லாருக்கும் விளம்பரம் தேவைப்படுது’லே… :) //

இராம் சொன்னது போல ரஜினியைப் பிடிக்காத பலர் அவர் படத்தை முதல் நாளே பார்த்துவிட்டு வந்து விமரிசனம் என்ற பெயரில் தங்கள் கோவத்தை(?) தீர்த்துக் கொள்கின்றனர்.

Reply

கிரி December 13, 2008 at 12:22 AM

//Raja said…
சூப்பர் ஸ்டாருக்கு ரசிகர்ன சும்மாவ. தலைவர் நல்லவர இருக்கிறதுனால கண்டவங்க இம்சிக்கிறத சகிக்க முடியல.//

என்னங்க பண்றது? இதை சொல்வதோட நாம சந்தோசப்பட்டுக்க வேண்டியது தான். உங்கள் முதல் வருகைக்கு நன்றி ராஜா

===================================================================

//வாசுகி said…
பதிவு நல்லா இருக்கு. //

நன்றி வாசுகி

//அவர் கை அசைத்தால் கூட அதை முன் அட்டையில் போட்டு கவர் story எழுதி பணம் பார்ப்பவர்கள், பின்பு கற்பனை கதை எழுதி அவரை தாறுமாறாக விமர்சிப்பது கவலையாகவே உள்ளது.//

இவங்க இம்சை தாங்க முடியலை. கண்டபடி இஷ்டத்திற்கு எழுதிட்டு இருக்காங்க.

//ரஜினி ரசிகை என்பதில் எனக்கு பெருமையே. //

என் பதிவில் சொன்ன மாதிரி வேற எங்கயும் போய் சொல்லிடாதீங்க, போச்சு அவ்வளோ தான் உங்க கதை :-) ))))))))))

//இவற்றை எல்லாம் வென்று அவர் இன்னும் உச்சத்திற்கு (இருக்கா?)போக வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பமும்//

இவரை போன்றவர்கள் கண்டப்பாக அந்த நிலையை அடைவார்கள்.

உங்களின் விரிவான பின்னூட்டத்திற்கும் நீங்கள் தொடர்ந்து தரும் உற்சாகத்திற்கும் நன்றி வாசுகி.

===================================================================

//மோகன் said…
கிரி,
இராம் சொன்னது போல ரஜினியைப் பிடிக்காத பலர் அவர் படத்தை முதல் நாளே பார்த்துவிட்டு வந்து விமரிசனம் என்ற பெயரில் தங்கள் கோவத்தை(?) தீர்த்துக் கொள்கின்றனர்.//

என்னங்க பண்ணுறது? இதை நாம கூறினா நம்மை நக்கலடிக்கறாங்க..:-) கண்டுக்காம போவதை தவிர யாமொன்றும் அறியா பராபரமே :-)

வருகைக்கு நன்றி மோகன்

Reply

ஈ ரா December 13, 2008 at 11:29 AM

கிரி ஜி,

அருமையான பதிவு…

// பல மாதமாக அவரை தவறாக சித்தரித்து எதிர்மறையான எண்ணங்களை பொது மக்களிடையே கஷ்டப்பட்டு ஏற்படுத்தி வைத்த ஊடகங்களை தனது ஒரே ஒரு வெளிப்படையான பேட்டியின் மூலம் பொதுமக்களை தன் பால் ஈர்த்து அவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தவர். தன்னை பற்றி புறம் கூறுபவர்களை கிண்டலடிப்பவர்களை பொருட்படுத்தாதவர், மற்றவர்களை என்றும் குறை கூறாதவர்,//

நான் சிறுவயது முதலே ரஜினி ரசிகன்…”மாமாவுக்கு ரஜினி ஸ்டைல் பண்ணிக் காட்டு” இது அந்தக் காலதில் குழந்தைகள் இருக்கும் பல வீடுகளில் ஒலித்த டைலாக். தலையை சிலுப்பி விடுதலில் ஆரம்பித்து பல மேனரிசங்களால் கவரப்பட்டு படிப் படியாக ரஜினி என்னும் மாமனிதனின் மேனிசங்களால் (MANISM(??) சரியா ) கவரப்பட்டவன்..

பாஷா படத்தை ஒவ்வொரு ஞாயிறும் தியேட்டரில் போய் பார்ப்பதை வழக்கமாக வைத்து இருந்தோம்.. அதன் பின்னர் ஓராண்டுக்கு பின்னர் காமதேனு தியேட்டரில்a செகண்ட் ரிலீஸ் செய்யப்பட போதும் நின்று கொண்டே பார்த்தோம்…

மற்றபடி, நீங்கள் கலாய்க்கும் பதிவர்களைப் பற்றி அதிகம் கவலைப் படாதீர்கள்.. உங்கள் கருத்துக்களை தொடர்ந்து எழுதுங்கள்.. உங்கள் நடை மிக அருமையாக உள்ளது…

ஆண்டவன் அருளால் விரைவில் மிகப் பெரிய மாற்றம் வரும்… இது பற்றி தனியாக என் பதிவில் சில நாட்களில் எழுதுகிறேன்…

நன்றி

ஈ ரா

Reply

கிரி December 13, 2008 at 8:05 PM

//ஈ ரா said…
கிரி ஜி,
அருமையான பதிவு//

நன்றி ஈ ரா

//மேனிசங்களால் (MANISM(??) சரியா ) கவரப்பட்டவன்..//

மேனரிசம் :-)

//அதன் பின்னர் ஓராண்டுக்கு பின்னர் காமதேனு தியேட்டரில்a செகண்ட் ரிலீஸ் செய்யப்பட போதும் நின்று கொண்டே பார்த்தோம்//

நான் “அண்ணாமலை “படம் காமதேனு திரையரங்கில் இரண்டாவது வெளியீட்டில் நல்லா என்ஜாய் செய்து பார்த்தேன், முதல் நாள் எப்படி கலக்கலாக இருக்குமோ அதே போல. எனக்கு ரொம்ப ஆச்சர்யமாகவும் இருந்தது.

//நீங்கள் கலாய்க்கும் பதிவர்களைப் பற்றி அதிகம் கவலைப் படாதீர்கள்.. உங்கள் கருத்துக்களை தொடர்ந்து எழுதுங்கள்//

நான் இவர்களை பற்றி கவலைபடுவதை நிறுத்தி நீண்ட நாட்கள் ஆகி விட்டது :-) இவர்களை எல்லாம் பார்த்தால் கம்பெனி நடத்த முடியுமா! :-) ))) எனினும் உங்கள் அக்கறைக்கு நன்றி

//உங்கள் நடை மிக அருமையாக உள்ளது//

உங்களை போல சிறப்பாக எழுதுபவர்கள் இவ்வாறு கூறுவது எனக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது

//ஆண்டவன் அருளால் விரைவில் மிகப் பெரிய மாற்றம் வரும்… இது பற்றி தனியாக என் பதிவில் சில நாட்களில் எழுதுகிறேன்//

எதிர்பார்க்கிறேன் :-)

உங்கள் வருகைக்கு நன்றி ஈ ரா

Reply

ஈ ரா December 13, 2008 at 9:36 PM

கிரி அவர்களே,

// தலையை சிலுப்பி விடுதலில் ஆரம்பித்து பல மேனரிசங்களால் கவரப்பட்டு படிப் படியாக ரஜினி என்னும் மாமனிதனின் மேனிசங்களால் (MANISM(??) சரியா ) கவரப்பட்டவன்.. //

நான் MANISM என்று எழுத முயற்சித்தது பேராண்மை என்று குறிக்க… மேனரிசம் என்பது ஒருவரின் ஸ்டைல் அல்லது பழக்கம் என்று சொல்லலாம் என நினைக்கிறேன்..
MANISM சரியா? சரி என்று தான் நினைக்கிறேன்

ஈ ரா

Reply

கிரி December 13, 2008 at 9:48 PM

//ஈ ரா said…
கிரி அவர்களே//

அட! என்னங்க ஈ ரா ..என்னை அவர்களே! இவர்களேன்னு சொல்லிட்டு இருக்கீங்க :-)

//நான் MANISM என்று எழுத முயற்சித்தது பேராண்மை என்று குறிக்க… //

ஹி ஹி நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன் போல ;-)

//மேனரிசம் என்பது ஒருவரின் ஸ்டைல் அல்லது பழக்கம் என்று சொல்லலாம் என நினைக்கிறேன்//

சரி தான். அவர்களை அறியாமலே இதை செய்வார்கள்.

//MANISM சரியா? சரி என்று தான் நினைக்கிறேன்//

இது சத்யமா எனக்கு தெரியாது :-) )))

ஈ ரா உங்கள் தொலைபேசி எண்ணை அனுப்புகிறீர்களா? (வெளியிடமாட்டேன்) சுந்தரிடம் கேட்டு தற்போது தான் மின்னஞ்சல் செய்தேன்.

Reply

benza December 14, 2008 at 2:15 AM

கிரி சார், நான் கொஞ்சம் இன்டர்நெட் விளக்கம் குறைந்தவன் >>>
'' மனசாட்சி '' யில் கவரப்பட்டு, இப்போ ரஜனி விமர்சனம் வாசித்து,
அவருக்கும் தங்களுக்கும் உள்ள மன உளைச்சல்களை உணர்கின்றேன் >>>
'பப்ளிக்' கென்று வந்தால், பலரது பார்வையில் பட்டு, பல விதமான
கருத்தோடங்களை சந்தித்து, மகிழ்வதும் விசனப்படுவதும் வாழ்க்கை தானே >>>

ஆரம்ப காலத்தில் தண்ணில சூட்டிங் ரைம்ல கலாட்டா பண்ணிய வடு இன்னமும் தக்க வைத்துள்ளனர் சிலர் >>>

பிரயோஜனமில்லாத இந்த சப்ஜெக்ட் ஐ மாத்தி ஒரு புதிய சப்ஜெக்ட் தொடக்கினால்
எப்படி இருக்கும் ?

Reply

கிரி December 14, 2008 at 11:38 AM

சார் வணக்கம். உங்கள் பதிலில் இருந்து நீங்கள் என் பதிவுகளை படிக்கிறீர்கள் என்று நம்புகிறேன், நன்றி. நீங்கள் கூறுவதை முற்றிலும் வழிமொழிகிறேன்.

இது உண்மையில் பிரயோஜனம் இல்லாத சப்ஜெக்ட் தான். ஆனால் இதை பதிவுலகில் ஒரு தன்னிலை விளக்கமாக தர பயன்படுத்திக்கொண்டேன், மற்றபடி வேறு எந்த காரணமும் இல்லை. எனக்கு இதை போன்ற விசயங்களில் விருப்பமும் இல்லை, இதனால் முன்பு அதிகளவில் பாதிக்கப்பட்டேன், அதுவே காரணம். என் பின்னூட்டங்களில் கூறியபடி இதுவே இதை போன்ற பதிவுகளில் கடைசியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

உங்கள் பதிவை பார்த்ததில் நீங்கள் வயதில் மிக மூத்தவராக இருக்கிறீர்கள், நீங்கள் தயவு செய்து என்னை சார் என்று அழைக்க வேண்டாம். உங்களின் முதல் பின்னூட்டத்திற்கும் அன்பான அறிவுரைக்கும் மிக்க நன்றி

Reply

Tech Shankar December 14, 2008 at 7:04 PM

ரஜினிகாந்த் பற்றிய நல்ல அலசல் பதிவு.

வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்

Reply

Tech Shankar December 14, 2008 at 7:04 PM

நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் ரஜினி கிடையாது.

வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்

Reply

பாண்டித்துரை December 15, 2008 at 7:57 AM

பதிவு நன்றாக உள்ளது கிரி

உங்களுக்கும் உங்களின் தலைவருக்கும் வாழ்த்துகள்

http://singaporetamilbolgers.blogspot.com/

Reply

கிரி December 15, 2008 at 9:18 AM

//Sharepoint the Great said…
ரஜினிகாந்த் பற்றிய நல்ல அலசல் பதிவு.//

நன்றி தமிழ்நெஞ்சம்

===================================================================

//பாண்டித்துரை said…
பதிவு நன்றாக உள்ளது கிரி//

நன்றி பாண்டித்துரை உங்களின் முதல் வருகைக்கும் சேர்த்து.

Reply

வாசுகி December 15, 2008 at 2:13 PM

ரஜினியின் பிறந்ததினத்தையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்து
‘ரவிராஜ்’ என்பவர் பத்திரிகையில் எழுதியிருந்த கவிதை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. அதன் சில பகுதிகள் தான் இவை.

அன்று நீ தமிழ் சினிமாவுக்கு கிடைத்தது “அபூர்வராகங்கள்”. அப்போது தமிழக மக்களின் மனதில் எழுந்த கேள்வி
“தம்பிக்கு எந்த ஊரு”.
ஆனால், இன்று நீதான் தமிழகத்தின் ‘தங்கமகன்’.
உன் கடின உழைப்பால் நீ ஒரு உண்மையான ‘உழைப்பாளி’ என்பதை நிரூபித்தாய்.
அதற்கு பரிசாய் தமிழ் சினிமாவின் முடி சூடா ‘மன்னன்’ ஆனாய். இளையவர்களுக்கு
நீ ஒரு சிறந்த ‘தளபதி’.
அரசியல் ராஜாக்களுக்கு நீ ‘ராஜாதிராஜா’. நாளைய தமிழகத்தின் ‘எஜமான்’.
உன்னை நம்பியவர்களை காப்பதில் நீ ‘ராணுவவீரன்’.
அதனால் எதிரிகள் பயந்தோடுவர் ‘மாவீரன்’ உன்னை கண்டு…………………
குழந்தைகளுக்கு நீ என்றும் ‘அன்புள்ள ரஜினிகாந்த்’. …………………………………….உன் ரசிகர்கள் துடிப்பார்கள்
‘உன் கண்ணில் நீர் வடிந்தால்’
உன்னை பொறுத்தவரை ‘நான் மகான் இல்லை’ என்பாய்.
மக்களை பொறுத்தவரை நீ ஒரு
‘அதிசயப்பிறவி’. …..
உலக அரங்கில் சக்கை போடுகின்றன உன் படங்கள் ‘சிவா’.
அதனால் என்றும் நீ தான்
சூப்பர் star.
அதற்கு ‘அடுத்த வாரிசு’ யாருமேஇல்லை.
தமிழ் சினிமாவின் ‘தனிக்காட்டு ராஜா ‘ நீ தான்…………………
‘ஆயிரம் ஜென்மங்கள்’ எடுத்தாலும் அழிக்க முடியாத இந்த வீர ‘சிவாஜி’க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ந‌ன்றி: வீரகேசரி,அட்டன் ரவிராஜ்

Reply

கிரி December 15, 2008 at 2:52 PM

பகிர்விற்கு நன்றி வாசுகி. உங்கள் மின்னஞ்சல் முகவரியை தெரியப்படுத்தவும்.

Reply

R.Gopi December 16, 2008 at 9:03 AM

தலைவா நீ வாழி பல்லாண்டு

12ஆம் 12, அதற்கு தரணியிலே தனி சிறப்புண்டு
12ஆம் 12, அதற்கு தரணியிலே தனி இடமுண்டு
இன்று என் தலைவனின் பிறந்த நாள், சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள்

நிலவை காட்டி சோறு ஊட்டினாள் அன்று
திரையில் உன்னை காட்டி சோறு ஊட்டுகிறாள் இன்று

உலகெங்கும் உன் படம் அனைவரையும் வசீகரிக்க
சிறியோரும், பெரியோரும் அதைக்கண்டு குதூகலிக்க
உன் படம் வரும் நேரமே பாரெங்கும் பண்டிகையாம்

உன் திரைப்படத்தில் கற்றுக்கொள்ள நல்ல பல விஷயங்கள் உண்டு – ஆகவே என் குரு நீ
நல்ல பல விஷயங்களை போதித்ததால் – என் ஆசிரியனும் நீ
வழிநடத்திச் செல்வதால் – தலைவனும் நீ

துணிந்தபின் உனக்கு அரியணையே இலக்கு
இன்று எங்கள் இதய சிம்மாசனம் – முடிவெடு
நாளை இந்நாட்டின் சிம்மாசனம்

வாழிய நீ பல்லாண்டு !!

Reply

கிரி December 16, 2008 at 12:31 PM

கோபி உங்க கவிதை கலக்கலா இருக்கு :-)

உங்கள் முதல் வருகைக்கு நன்றி

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed