ரஜினியின் ஸ்டைலான நடிப்பு மட்டுமல்லாது அவரின் பல கருத்துக்களும் எனக்கு ரொம்ப பிடிக்கும். ரஜினி பல பேட்டிகள் பத்திரிக்கைகளுக்கு கொடுத்து இருக்கிறார் என்பது தெரியும், ஆனால் துக்ளக்கில் பல கட்டுரைகளை 1996 ம் ஆண்டு எழுதி இருக்கிறார் என்பது சமீபத்தில் தான் தெரியும். இதில் அவர் கூறி இருக்கும் பல கருத்துக்கள் என் கருத்துக்களோடு ஒத்து போவதே அவர் மீது உள்ள ரசிப்பு தன்மையை அதிகப்படுத்துகிறது. அவரது எளிமையான இதை போல பேச்சுக்களால் மக்களை கவர்ந்ததில் ஆச்சர்யமில்லை. அவர் எழுதிய கட்டுரைகளில் ஒன்று இது.
இனி ரஜினி…..
“கஷ்டப்படுகிறவர்களுக்கு, துன்பம் அனுபவித்தவர்களுக்கு ஆண்டவன் ஒரு நாள் உதவாமற்போக மாட்டான். எப்பொழுதுமே கஷ்டப்படட்டும் என்று யாரையும் ஆண்டவன் கை விட்டுவிட மாட்டான். ஆரம்பதிலிருந்து கடைசி வரை கஷ்டப்பட்டே வாழ்ந்து செத்தவர்கள் இந்த உலகத்தில் யாரும் கிடையாது. அதே போல, பிறந்த தேதியிலிருந்து இறுதிவரை சந்தோஷத்துடனே வாழ்ந்து மடிந்தவர்களும் கிடையாது. அது தான் இயற்கை என்று சொல்லும் போது, அதில் பல அம்சங்களும் அடங்கி இருக்கும். கஷ்டம் – சுகம்; பாவம் – புண்ணியம்; நல்லவர்கள் – கெட்டவர்கள்…. என்று பல வகையான அனுபவங்களும் கொண்டதுதான் இயற்கையின் போக்கு. வாழ்க்கையில் கஷ்டதையும் ஒரளவாவது அனுபவித்தால்தான் சுகத்தின் பலன் நமக்கு முழுமையாகக் கிட்டும். நீங்கள் ஓர் ஏர் கண்டிஷ்ண்ட் ரூமிலேயே தொடர்ந்து இருந்து கொண்டிருந்தால், அதனுடைய அருமை அவ்வளவாகத் தெரியாது. ஆனால் சிறிது நேரம் வெயிலில் இருந்துவிட்டு, அதன் பிறது ஏ.சி.ரூமுக்குப் போனால், அப்பொழுது அதன் அருமை நன்றாகவே தெரியும்.
ஆகையால்தான், மனிதர்களின் இந்த இயல்பை அறிந்த ஆண்டவன், கஷ்டம், சுகம் இரண்டையுமே வாழ்க்கையில் சேர்த்தே வைத்திருக்கிறான். நமக்கு சுகமான அனுபவங்கள் வரும்போது நாம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். கஷ்டமான அனுபவங்கள் நேரிட்டால், மிகவும் வெறுத்துப்போய் விடுகிறோம்.
இப்படிப்பட்டவர்களை ஆண்டவனுக்குப் பிடிக்காது என்று நான் நினைக்கிறேன். இதனால் தான் சில பேருக்கு சில நேரங்களில் ஆண்டவனின் அருள் கிட்டுவதில்லையோ என்றுகூட எனக்கு தோன்றுகிறது. சுகத்தை மட்டும் விரும்பி ஏற்கிற மனிதன், கஷ்டம் வரும்போது அதை பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னால், அவன் இறைவனையோ, இயற்கையையோ புரிந்து கொள்ளவில்லை என்று தான் அர்த்தம்.
வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமான விஷயமல்ல என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நமக்கு இன்பம் கிட்டும் பொழுது அது நிலையானது அல்ல என்ற உணர்வு நம்முள் இருந்தால், நாம் அடக்கத்துடன் அந்த இன்பத்தை அனுபவிப்போம். அதே போல், கஷ்டம் வரும்பொழுது அதுவும் நிலையானதல்ல என்று நாம் உணர்ந்து கொண்டால் அந்த கஷ்டத்தின் சுமை தாங்க முடியாமல் அப்படியே நொந்து போய் நொறுங்கிவிட மாட்டோம். வாழ்க்கையில் இரண்டும் கலந்து தான் இருக்கும். அதுதான் நல்லதும் கூட.
ஒரு விஷயத்தை நாம் அனைவருமே தெரிந்து கொள்ள வேண்டும். மற்ற கஷ்டங்களோடு ஒப்பிடும்போது பண கஷ்டம் – அதாவது பணம் இல்லை என்கிற கஷ்டம் பெரிய கஷ்டமே இல்லை. சின்ன வயதிலேயே நமக்கு மிகவும் வேண்டியவர்கள் இறந்து போவது, சரியான நேரத்தில் நல்ல இடத்தில் கல்யாணம் செய்து நன்றாக வாழ முடியவில்லை என்கிற நிலை; நமது குழந்தைகள் முறையாக வளரவில்லை என்ற குறை, நமக்கு மிகவும் வேண்டியவர்களிடமே ஏற்பட்டுவிடுகிற மனஸ்தாபங்கள்; நமக்கு மிகவும் பிடித்தவர்களே நம்மை ஏமாற்றி விடுகிற நிலைமை… போன்ற கஷ்டங்கள் நம்மை மிகவும் பாதிக்ககூடியவை. நான்கூட முன்பெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தது உண்டு, பணம் இருந்தால் என்ன துன்பம் வந்தாலும் தாங்கி கொண்டுவிட முடியும் என்று. ஆனால், அப்படி இல்லவே இல்லை என்பதை நாம் உணர்ந்துவிட்டேன். பணம் இல்லையே என்ற கஷ்டம் கொஞ்சம் தான் வேதனையைத் தரும். ஆனால், நான் மேலே குறிப்பிட்ட மாதிரி நிலைமைகள் தான் நமக்கு அதிக வேதனையை கொடுக்ககூடிய கஷ்டங்கள்.
பிரச்சனைகள் வரும்போது – அது பணப் பிரச்சனையோ, அல்லது மன நிலையைப் பாதிக்கக்கூடிய வேறு ஏதாவது பிரச்சினையோ – என்ன சம்பவங்கள் நடந்தாலும், அதனால் உடனே மனம் உடைந்து அந்தக் கஷ்டத்தின் சுமையைத் தாங்க முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டு வாழ்வதில் அர்த்தமில்லை. அந்த கஷ்டத்தை தீர்க்க, உடனடியாக முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும். அந்த பிரச்சனைக்கு எப்படி தீர்வு காண முடியும் என்று யோசிக்க வேண்டும். அந்த பிரச்சினை எப்படி உருவானது? ஏன் உருவானது? யாரால் உருவானது? அதில் நம் தவறு என்ன? என்றெல்லாம் தீர ஆராய்ந்தால், பிரச்சினை உருவானதற்கான காரணம் தானாகப் புரிந்துவிடும். தவறு நம்முடையதாக இருந்தால், மன்னிப்புக் கேட்க வேண்டும். மற்றவர்களுடைய்தாக இருந்தால், அதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். ஒரு பொய் சொன்னால் அதை மறைப்பதற்கு நூறு பொய்கள் சொல்ல வேண்டி வருவது போல – ஒரு கஷ்டத்தை நிவர்த்தி செய்வதில் உடனே கவனம் செலுத்தாவிட்டல், அதைத் தொடர்ந்து மேலும் மேலும் பல கஷ்டங்கள் உருவாகிவிடும்.
ஒன்றை மட்டும் திட்டவட்டமாகச் சொல்கிறேன். ஆண்டவன் எங்கேயும் இல்லை. மக்களுடைய இதயத்தில் தான் – மனதில் தான் இருக்கிறார். நான் எத்தனையோ வெளி நாடுகளைச் சுற்றிப் பார்த்திருக்கிறேன். உலகத்தின் பல பாகங்களையும் சுற்றி வந்திருக்கிறேன். தமிழக மக்களுக்கு இருக்கிற மனித நேயம், கருணை, அந்த மனித இயல்பு வேறு யாருக்கும் எங்கேயும் கிடையாது. அதனால் தான் நம்முடைய தமிழ் நாட்டை ‘வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்’ என்று சொல்கிறார்கள்.
ஒருவனிடம் திறமை இருந்து, நல்ல எண்ணம், நல்ல மனிதத்தன்மையும் இருந்தது என்று சொன்னால், அவனுடைய மொழி பற்றியோ, ஜாதி பற்றியோ, எதைப் பற்றியும் தமிழக மக்கள் கவலைப்பட மாட்டார்கள். ஆகவே இந்த மாதிரி உயர்ந்த குணம் உள்ள மக்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற வரைமுறை இருக்க வேண்டும் இல்லையா? இவர்களுக்கு ஏதாவது கெடுதல் செஞ்சா, துரோகம் செஞ்சா – அவர்களை ஆண்டவன் தண்டிக்காமல் விடவே மாட்டான். வினை விதைத்தவன் வினை அறுப்பான் இது உறுதி”
நன்றி : துக்ளக் மற்றும் சுந்தர் (Onlyrajini.com)
No related posts.


{ 31 comments… read them below or add one }
சமீபத்தில் ரஜினி எழுதியதா ? நான் ஜூட்டு !
//டொன் லீ said…
//
வருகைக்கு நன்றி டொன் லீ
===========================================================================
//கோவி.கண்ணன் said…
சமீபத்தில் ரஜினி எழுதியதா ? நான் ஜூட்டு !//
1996 ஆண்டு என்பது சமீபமா
))
நீங்க ரஜினி 1975 ல் அபூர்வ ராகங்கள் வந்த போது எழுதி இருந்தது என்று கூறினா கூட இந்த வசனத்தை தான் சொல்ல போறீங்க அதுக்கு எதுக்கு இந்த பில்ட் அப் . சரி நடுநிலைமை காப்பாத்திட்டீங்க
)))
சமீபத்தில் 1970 ஜனவரியில் துக்ளக் பத்திரிகை ஆரம்பித்த போது வந்த கட்டுரைகளை படித்திருக்கிறீர்களா? ரொம்ப சுவாரசியமாக இருக்கும்.
)))
அன்புடன்,
டோண்டு ராகவன்
//dondu(#11168674346665545885) said…
சமீபத்தில் 1970 ஜனவரியில்//
அவ்வ்வ்வ்வ்வ்வ் டோண்டு ஐயா இதற்க்கு கோவி கண்ணன் பின்னூட்டத்திற்கும் சம்பந்தம் உண்டா
))))
//துக்ளக் பத்திரிகை ஆரம்பித்த போது வந்த கட்டுரைகளை படித்திருக்கிறீர்களா? ரொம்ப சுவாரசியமாக இருக்கும்.
)))//
படித்ததில்லை, வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த கட்டுரை கூட நண்பர் ஒருவர் கொடுத்தது தான்.
ஏற்கனவே படித்தது தான் என்றாலும் இன்னொரு முறை படிக்க நன்றாக இருந்தது.
கீழே இடது புறத்தில் இருக்கும் நம் நடிகர் திலகத்தின் படம் அருமை.
நல்ல கட்டுரை
//கீழே இடது புறத்தில் இருக்கும் நம் நடிகர் திலகத்தின் படம் அருமை.//
அது விவேகானந்தர் இல்லையா?
//ஜோ / Joe said…
ஏற்கனவே படித்தது தான் என்றாலும் இன்னொரு முறை படிக்க நன்றாக இருந்தது.//
அப்படியா! ஏற்கனவே படித்து இருக்கிறீர்கள!!!
//கீழே இடது புறத்தில் இருக்கும் நம் நடிகர் திலகத்தின் படம் அருமை//
நன்றி ஜோ. நான் கருப்பு வெள்ளை நடிகர் திலகம் படம் தேடினேன், கிடைத்த அனைத்தும் பிக்ஸ்செல் சரி இல்லை, சரி இது நல்லா இருந்தது என்று வைத்தேன்.
===================================================================
//சரவணகுமரன் said…
நல்ல கட்டுரை//
நன்றி சரவணகுமரன்
//அது விவேகானந்தர் இல்லையா?//
அவர் படத்திற்கும் கீழே பாருங்க
)
நான் முன்பே வாசித்திருக்கிறேன்.(i think, in onlyrajini.com)
இருந்தாலும் மீண்டும் வாசிக்க நல்லாவே இருக்கு. நம்ம rajini பற்றியல்லவா….
//ரஜினியின் ஸ்டைலான நடிப்பு மட்டுமல்லாது அவரின் பல கருத்துக்களும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.//
ரஜினியின் style யாருக்கு தான் பிடிக்காது.(சிலருக்கு பொறாமை). முள்ளூம் மலரும் , ஆறிலிருந்து அறுபதுவரை போன்ற படங்களில்
அவரது சிறந்த நடிப்பை காணலாம். அண்ணாமலை, முத்து, பாட்ஷா, படையப்பா போன்ற படங்களில் superb style.
ரஜினியுடன் பழகுபவர்கள் எல்லோருமே அவரை சிறந்த பண்பாளர் என்று தான் சொல்வார்கள்.
இல்லை என்றால் மிகவும் கீழ்த்தரமான விமர்சனங்களை கூட சிரிப்போடு பேசாமல் விட்டுவிடுகிறாரே.
//அது விவேகானந்தர் இல்லையா?//
இது super joke.
நகைச்சுவையாக தானே கூறினீர்கள்.
துக்ளக்கின் பழைய வாசகன் என்ற வகையில் இக் கட்டுரையைச் சுடச் சுடப் படித்தேன்.
டொண்டு அண்ணா கூறிவது போல் பழைய புத்தகங்களை பார்த்தால் இப்போதும் சுவாரசியம் குன்றாச் சிரிப்புத் தான்
வரும்.
//வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமான விஷயமல்ல என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நமக்கு இன்பம் கிட்டும் பொழுது அது நிலையானது அல்ல என்ற உணர்வு நம்முள் இருந்தால், நாம் அடக்கத்துடன் அந்த இன்பத்தை அனுபவிப்போம். அதே போல், கஷ்டம் வரும்பொழுது அதுவும் நிலையானதல்ல என்று நாம் உணர்ந்து கொண்டால் அந்த கஷ்டத்தின் சுமை தாங்க முடியாமல் அப்படியே நொந்து போய் நொறுங்கிவிட மாட்டோம்.//
நல்ல கருத்துக்கள். இதைப் புரிந்து நடந்ததால்தான் அத்தனை உயரத்தை எட்ட முடிந்திருக்கிறது.
சூப்பர் கிரி!
//இதில் அவர் கூறி இருக்கும் பல கருத்துக்கள் என் கருத்துக்களோடு ஒத்து போவதே அவர் மீது உள்ள ரசிப்பு தன்மையை அதிகப்படுத்துகிறது.
இது “ஆட்டோ” வா இல்ல உண்மையா?
(பல நேரங்களில் தலைவர் என்ன சொன்னாலும், அது என் கருத்தாக மாறிவிடுகிறது!)
நல்ல கட்டுரை.. ரஜினி எழுதிய மற்ற கட்டுரைகள் இருந்தால் வெளியிடவும்
//vasuhi said…
நான் முன்பே வாசித்திருக்கிறேன்.(i think, in onlyrajini.com)//
அங்கே தான்
//இருந்தாலும் மீண்டும் வாசிக்க நல்லாவே இருக்கு. நம்ம rajini பற்றியல்லவா….//
அப்படி! போட்டு தாக்குங்க
//ரஜினியின் style யாருக்கு தான் பிடிக்காது.(சிலருக்கு பொறாமை).//
ஹா ஹா ஹா
//மிகவும் கீழ்த்தரமான விமர்சனங்களை கூட சிரிப்போடு பேசாமல் விட்டுவிடுகிறாரே//
இதன் காரணமாகவே மற்றவர்களில் இருந்து வேறுபட்டு இருக்கிறார்.
//நகைச்சுவையாக தானே கூறினீர்கள்.//
சரவணகுமரன் மேல இருக்கும் விவேகானந்தர் படம் பார்த்து கூறினாரா! இல்லை குசும்புக்கு கேட்டாரா என்று தெரியலை
===================================================================
//யோகன் பாரிஸ்(Johan-Paris) said…
துக்ளக்கின் பழைய வாசகன் என்ற வகையில் இக் கட்டுரையைச் சுடச் சுடப் படித்தேன்//
நிறைய பேர் படித்து இருக்கீங்க போல!!!
//டொண்டு அண்ணா கூறிவது போல் பழைய புத்தகங்களை பார்த்தால் இப்போதும் சுவாரசியம் குன்றாச் சிரிப்புத் தான் வரும்//
நீங்கள் எல்லாம் இதை போல கூறுவதை கேட்கும் போது பழைய புத்தகங்கள் படிக்க வேண்டும் என்று ஆவல் மேலிடுகிறது.
===================================================================
// ராமலக்ஷ்மி said…
நல்ல கருத்துக்கள். இதைப் புரிந்து நடந்ததால்தான் அத்தனை உயரத்தை எட்ட முடிந்திருக்கிறது.//
மிக மிக உண்மை. இந்த கட்டுரையில் உள்ள கருத்துக்கள் பல என்னை மேம்படுத்தி கொள்ள கண்டிப்பாக உதவும்.
===================================================================
//Bhuvan said…
சூப்பர் கிரி! //
நன்றி புவன்
//இது “ஆட்டோ” வா இல்ல உண்மையா?//
அப்படின்னா!
//பல நேரங்களில் தலைவர் என்ன சொன்னாலும், அது என் கருத்தாக மாறிவிடுகிறது//
ஒரேயடியாக அப்படியே ஏற்று கொள்ள வேண்டாம் புவன். நமக்கு பொருந்தி வருபவைகளை நமக்கு சரி என்று படுவதை ஏற்று கொள்ளலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து.
===================================================================
//Sri said…
நல்ல கட்டுரை.. ரஜினி எழுதிய மற்ற கட்டுரைகள் இருந்தால் வெளியிடவும்//
நன்றி ஸ்ரீ. நானும் மற்ற கட்டுரைகளை கேட்டுள்ளேன், நண்பர் சுந்தர் அல்லது வினோ யாராவது கொடுத்தால் கண்டிப்பாக பதிவிடுகிறேன். நானும் மற்ற பாகங்களை படிக்க ஆவலாக இருக்கிறேன்.
உங்கள் முதல் வருகைக்கு நன்றி
தலைவரின் கருத்துக்கள் எப்போதும் சோடை போனதில்லை. அது ஆன்மீக கருத்தாக இருக்கட்டும், பொது பிரச்சினை பற்றிய கருத்தாக இருக்கட்டும். அவருக்கு நிகர் அவர் தான். அது தான் அவரை உச்சத்தில் வைத்திருக்கிறது.
அவருக்காக இன்னும் ஒரு உச்சம் காத்திருக்கிறது.
/*கஷ்டப்படுகிறவர்களுக்கு, துன்பம் அனுபவித்தவர்களுக்கு ஆண்டவன் ஒரு நாள் உதவாமற்போக மாட்டான். எப்பொழுதுமே கஷ்டப்படட்டும் என்று யாரையும் ஆண்டவன் கை விட்டுவிட மாட்டான்.*/
அடுத்த படத்துக்கு குத்து வசனம்
சிவாஜி படமும் உங்க ப்ரோபைல் படமும் ரெம்ப நல்லா இருக்கு
உங்கள் தலைவரின் கருத்துக்கள் அருமை !
ரஜினியின் இரசிகராய் இருப்பவர்கள்,அவருடைய ஸ்டைலையும்,மேனரிஸத்தையும் விரும்பிதான் அவருடைய இரசிகர்களாய் இருப்பதில்லை.அவருடைய ஆன்மிகத்தையும்,நேர்மையையும்,எளிமையையும்,மனதில் உள்ளதைப் பட்டென்று பேசும் தன்மையையும் உள்ளடக்கியே இரசிக்கிறார்கள்.என்பது நிதர்சனம்.கம்லுக்கும் ரஜினிக்கும் உள்ள பெரும் வேறுபாடு இதுதான் .இதனால்தான் ரஜினியின் ”கொடி பறக்குது” என்றென்றும்.
//கடையம் ஆனந்த் said…
தலைவரின் கருத்துக்கள் எப்போதும் சோடை போனதில்லை. அது ஆன்மீக கருத்தாக இருக்கட்டும், பொது பிரச்சினை பற்றிய கருத்தாக இருக்கட்டும். அவருக்கு நிகர் அவர் தான். அது தான் அவரை உச்சத்தில் வைத்திருக்கிறது.//
வழிமொழிகிறேன்.அப்போதே இவ்வளவோ அனுபவமாக கூறி இருக்கிறார் என்றால் தற்போது சொல்லவே தேவையில்லை.
===================================================================
//நசரேயன் said…
அடுத்த படத்துக்கு குத்து வசனம்//
நசரேயன் இந்த வசனம் கூறி 12 வருடம் முடிந்து விட்டது
//சிவாஜி படமும் உங்க ப்ரோபைல் படமும் ரெம்ப நல்லா இருக்கு//
நடிகர் திலகம் எப்போதும் கலக்கல் தான், ஹி ஹி தலைவியும்…..
===================================================================
//அருப்புக்கோட்டை பாஸ்கர் said…
உங்கள் தலைவரின் கருத்துக்கள் அருமை !//
நன்றி பாஸ்கர்
நல்ல கருத்துக்கள் எங்கே இருந்தாலும் எடுத்துக்கொள்ள வேண்டியது தானே!
===================================================================
//நல்லதந்தி said…
ரஜினியின் இரசிகராய் இருப்பவர்கள்,அவருடைய ஸ்டைலையும்,மேனரிஸத்தையும் விரும்பிதான் அவருடைய இரசிகர்களாய் இருப்பதில்லை.அவருடைய ஆன்மிகத்தையும்,நேர்மையையும்,எளிமையையும்,மனதில் உள்ளதைப் பட்டென்று பேசும் தன்மையையும் உள்ளடக்கியே இரசிக்கிறார்கள்//
சரியா சொன்னீங்க நல்லதந்தி. எனக்கு நடிப்புடன் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை முறை பெரிதும் கவர்ந்தது.
//சரியா சொன்னீங்க நல்லதந்தி. எனக்கு நடிப்புடன் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை முறை பெரிதும் கவர்ந்தது.//
இதனாலதான் நான் கிட்டத்தட்ட ***** இருந்து **வருடமாய் ரஜினி இரசிகனாய் இருக்கிறேன்.அந்த ஸ்டார் வரும் இடங்களில் உங்கள் விருப்பமான வருடத்தை எழுதிக்கொள்ளலாம்!
// நல்லதந்தி said…
//
இதனாலதான் நான் கிட்டத்தட்ட ***** இருந்து **வருடமாய் ரஜினி இரசிகனாய் இருக்கிறேன்.அந்த ஸ்டார் வரும் இடங்களில் உங்கள் விருப்பமான வருடத்தை எழுதிக்கொள்ளலாம்!
உங்க அளவிற்கு நான் இல்லை நல்ல தந்தி. கடந்த 13 வருடமாக ரசிகனாக உள்ளேன்
ரசினி சொன்னத கேட்டா… குளிர்லயும் வேர்க்குதே…
/////கஷ்டப்படுகிறவர்களுக்கு, துன்பம் அனுபவித்தவர்களுக்கு ஆண்டவன் ஒரு நாள் உதவாமற்போக மாட்டான். எப்பொழுதுமே கஷ்டப்படட்டும் என்று யாரையும் ஆண்டவன் கை விட்டுவிட மாட்டான்.////
ஆக, மனிதர்களுக்கு கஷ்டம் என்பது ஆண்டவன் பிரச்சினை, நம் பிரச்சினை அல்ல.
அதிகார போதைக்காக மனப்பாலில் மசாலா கலந்து குடிக்கும் விஜயகாந்தைப் போல, எப்போதுவேண்டுமானாலும் குதர்க்கம் வெளிப்பட வாய்ப்புள்ள கமலகாசனைப் போல, சமூக பிரச்சினையின் வேரைத் தேட திராணியற்ற ரஜினிகாந்தும் தமிழக அரசியலுக்கு சற்றும் தகுதியற்றவர் என்பது தெளிவாகிறது. இதை 1996 -லேயே தெளிவுற விளக்கிவிட்டார் என்பது ஆச்சர்யமாக தோன்றவில்லை.
எவருக்கும் சிறிதும் நேரடி பயனில்லாத நல்ல குணம் யாருக்கு வேண்டும்?
//Vasu said…
ரசினி சொன்னத கேட்டா… குளிர்லயும் வேர்க்குதே…//
வேற ஏதாவது பிரச்சனையாக இருக்க போகிறது வாசு
))
உங்கள் முதல் வருகைக்கு நன்றி
===================================================================
//மோகன் கந்தசாமி said…
அதிகார போதைக்காக மனப்பாலில் மசாலா கலந்து குடிக்கும் விஜயகாந்தைப் போல, எப்போதுவேண்டுமானாலும் குதர்க்கம் வெளிப்பட வாய்ப்புள்ள கமலகாசனைப் போல, சமூக பிரச்சினையின் வேரைத் தேட திராணியற்ற ரஜினிகாந்தும் தமிழக அரசியலுக்கு சற்றும் தகுதியற்றவர் என்பது தெளிவாகிறது
//
மோகன் கந்தசாமி இந்த பதிவு ரஜினி கூறியது பற்றியது. உங்கள் பிரச்சனை ரஜினி என்றால் ரஜினியை பற்றி மட்டும் விமர்சிக்கலாமே இந்த பதிவிற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத விஜயகாந்த்தையும், இதை போல பிரச்சனைகளில் எப்போதும் தலையிடாத கமலை பற்றியும் எதற்கு விமர்சிக்கிறீர்கள்.
//எவருக்கும் சிறிதும் நேரடி பயனில்லாத நல்ல குணம் யாருக்கு வேண்டும்?//
உங்களை போல அனைத்தும் பகுத்தறிந்து ஆராய்ந்து பார்க்கும் நபர்களுக்கு அவசியம் இல்லாமல் இருக்கலாம், என்னை போல சாதாரண மக்களுக்கு இதை போல கருத்துக்களே மிகவும் உதவுகிறது.
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் வருகைக்கு நன்றி
நல்ல கட்டுரை. பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்
ரஜினி… இந்தப் பெயருக்குள்ள சிறப்பே தனி…
நேற்று, இன்று, நாளை, சமீபம், அண்மை…இதற்கெல்லாம் அப்பாற்பட்ட பல கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார் இந்த அதிசய மனிதர்.
இவற்றைப் புரிந்து கொள்பவர்கள் இன்றைக்கு அதிகரித்து வருகிறார்கள் என்பது நல்ல மாற்றம்.
வினோஜாசன்
//Sharepoint the Great said…
நல்ல கட்டுரை. பகிர்ந்தமைக்கு நன்றிகள்//
நன்றி தமிழ்நெஞ்சம்
=====================================================================
//ARASIAL said…
ரஜினி… இந்தப் பெயருக்குள்ள சிறப்பே தனி…//
//இவற்றைப் புரிந்து கொள்பவர்கள் இன்றைக்கு அதிகரித்து வருகிறார்கள் என்பது நல்ல மாற்றம்//
நல்லது கூறினாலும் ரஜினியை பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக குறை கூறினால் எதுவும் செய்ய முடியாது.
I donot think it was writen by rajini.But way of meassage very useful.thanks to sssssooooooo.ramasamy.shahul
//shahul said…
I donot think it was writen by rajini.//
இனி இதுக்காக நான் என்னங்க கற்பூரம் அடித்தா சத்யம் செய்ய முடியும்.. அட! நம்புங்க ரஜினி எழுதியது தான்
)
//way of meassage very useful//
எப்படியோ! கடைசியா இப்படி கூறினீர்களே
உங்கள் முதல் வருகைக்கு நன்றி