இவர்கள் மாணவர்களா ! மிருகங்களா !!

by கிரி on November 13, 2008

சட்டக்கல்லூரியில் இரண்டு கோஸ்டி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற மோதலை சன் டிவி ஒளிபரப்பியது. இதை போல ஒரு கொடுமையான காட்சியை அரசியல்வாதிகள், ரவுடிகள் சண்டையின் போது கூட பார்த்தது இல்லை. மிகை படுத்தி கூறவில்லை, சன் டிவி யில் கூட இளகிய மனதுள்ளவர்கள் பார்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார்கள் என்றால் அதன் வீரியம் எப்படி இருந்து இருக்கும் என்று புரிந்து கொள்ளுங்கள்.

ஒரு கும்பல் இடையே தனியாக ஒரு மாணவர் மாட்டி கொண்டார் அவரை காப்பாற்ற சென்ற மாணவரும் மாட்டி கொண்டார். அவரை அடித்த அடியை பார்த்தவுடன் என் கண்கள் கலங்கி விட்டன. அனைவரும் ஹாக்கி ஸ்டிக், கட்டை கொண்டு அவரை அடித்து துவைத்து எடுத்தார்கள், இதை பல செய்தி நிறுவனங்கள் வீடியோ எடுத்து கொண்டுள்ளன, இத்தனை கொடுமையையும் அங்கே இருந்த காவலர்கள் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்ததை தான் என்னால் தாங்க முடியவில்லை. ஒருவரை மாட்டை விட மோசமாக போட்டு மிருகத்தனமாக அடித்து கொண்டுள்ளார்கள் இவர்கள் ம**** போகிறது என்று வேடிக்கை பார்த்து கொண்டுள்ளார்கள். குறைந்த பட்சம் தடுக்கவாவது முயற்சி செய்ய கூடாதா.

அந்த மாணவன் என்ன தான் எதிர் கோஷ்டிக்கு பிரச்சனை செய்து இருக்கட்டும் (வசமாக சிக்கியது இவர்கள் இருவர் மட்டுமே நமக்கு தெரிந்து) அதற்க்கு இவர்கள் செய்ததை எவரும் மன்னிக்க மாட்டார்கள். அந்த மாணவன் அடி வலி தாங்காமல் எதிர்க்க திராணியில்லாமல் கீழே விழுந்து விட்டான் (மயக்கமாகி விட்டான் என்று நினைக்கிறேன்) பார்க்காதவர்கள் நம்ப மாட்டீர்கள் (தற்போது வீடியோ அப்டேட் செய்துள்ளேன்) கணக்கு வழக்கு இல்லாமல் காட்டு தனமாக அடித்தார்கள் அவர்கள் அடித்ததில் கட்டை கூட உடைந்து விட்டது. குறைந்த பட்சம் அவருக்கு 30 அடி விழுந்து இருக்கும், ஹாக்கி ஸ்டிக் ல் இத்தனை அடி விழுந்தால் அந்த மாணவனின் நிலையை நினைத்து பாருங்கள். பின்னர் அந்த கும்பலில் இருந்த இளகிய !!! மனம் கொண்ட மாணவன் போதும் என்று கூறி அனைவரையும் அழைத்து சென்றான், இன்னொரு மாணவனை அடித்ததில், சுக்கல் சுக்கலாகி விட்டான் அவனால் எழுந்திருக்கவே முடியவில்லை, கை கால்கள் கண்டிப்பாக முறிந்து இருக்கும், எழுந்தவுடன் நிற்க முடியாமல் வலியால் துடித்து நிலை தடுமாறி திண்டாடி அருகே இருந்த மரத்தின் கிளையை பிடித்து தொங்கி நிற்க முடியாமல் நின்றதை பார்த்த போது கல் மனமும் கலங்கி விடும்.

இத்தனையும் நடந்தது கல்லூரியின் உள்ளே அல்ல, சட்ட கல்லூரியின் வாயிலிலே பொதுமக்கள் மற்றும் ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாத காவலர்கள் முன்பு நடந்தது.

சட்டகல்லூரியில் படிக்கும் !!! இந்த மாணவர்கள் !!! தான் நாளைய சட்டத்தை தாங்கி பிடிப்பவர்களா! தமிழ்நாடு விளங்கிடும். மாணவர்களுக்குள் அடிதடி என்பது சகஜம் தான் இது பல காலமாக நடந்து வருவது, ஆனால் இது அடிதடி இல்லை கொலை வெறி தாக்குதல். இவர்கள் சட்டத்தில் இருந்து தப்பித்தாலும் கடவுள் கண்டிப்பாக மன்னிக்க மாட்டார்.

No related posts.

{ 48 comments… read them below or add one }

SurveySan November 13, 2008 at 11:12 AM
கிரி November 13, 2008 at 11:16 AM

//mathangi mumu சிட்…

ivungu ellam padchu natta kappathu vanugala ******….
pavamunga antha payian //

கொஞ்சம் எடிட் செய்துள்ளேன் mathangi mumu.

அந்த பையன் பிழைத்தால் கடவுள் அருள் தான்.

===================================================================

// SurveySan said…
:( //

வாங்க சர்வேசன். பார்த்தவர்களும் வாயடைத்து போய் இருப்பார்கள்.

Reply

முரளிகண்ணன் November 13, 2008 at 11:18 AM

அரசு,சட்ட அமைச்சர், காவல்துறை எல்லாமும் நாக்கை பிடிங்கிக்கொண்டு செத்துவிடலாம்

Reply

☀நான் ஆதவன்☀ November 13, 2008 at 11:24 AM

இனி வரும் காலம் இளைஞர்கள் காலம்???
:-(

Reply

வால்பையன் November 13, 2008 at 11:26 AM

இவர்களை வளர்த்த பெற்றோர்களும், பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியர்களும், இந்த சமுதாயமும் வெக்கபட வேண்டிய நேரமிது.

சரியான தலைப்பை தான் வைத்திருக்கிறீர்கள்.

மனிதன் மீண்டும் விலங்காக மாறி கொண்டிருக்கிறான்

Reply

ஜோ/Joe November 13, 2008 at 11:27 AM

சே! நானும் பார்த்து விட்டு கண்ணை மூடிக்கொண்டேன்.

என்ன கேவலம் .நம் சமூகம் மீது இருந்த நம்பிக்கை கொஞ்சம் குறைவது போலிருக்கிறது .

காட்டுமிராண்டிகள்!

Reply

ராமலக்ஷ்மி November 13, 2008 at 11:28 AM

நாடு எங்கே போகிறது :( ?

Reply

எம்.ரிஷான் ஷெரீப் November 13, 2008 at 11:48 AM

என்ன இது?
அந்த மாணவரை மிருகத்தனமாகத் தாக்குகிறார்கள். சுற்றியிருக்கும் காவல்துறையினர் சிறிதும் மனம் பதறாமல் வேடிக்கை பார்க்கிறார்கள். ஏன் இப்படி? :(

அம் மாணவரை அடித்தவர்கள் வீடியோ ஆதாரத்தோடு கைது செய்யப்பட வேண்டும். கல்லூரியிலிருந்து நீக்கப்பட வேண்டும். தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இவ்வளவு பகிரங்கமாகக் குற்றம் செய்தவர்கள் எந்தத் தண்டனையுமின்றி விடுவிக்கப்பட்டால், நாளை இதே போலக் கலகம் செய்ய இன்னொரு குழு தயங்கமாட்டார்கள்.

மிகுந்த வருத்தமளிக்கிறது. :(

Reply

Rajaraman November 13, 2008 at 12:10 PM

நாம் இந்த செந்தமிழ் நாட்டில் தான் இருக்கிறோமா இல்லை நமீபியா அல்லது எத்தியோப்பியா போல் ஏதாவது நாட்டில் இருக்கிறோமா என்று சந்தேகம் வருகிறது. ஆமாம் இங்கு அரசாங்கம், போலீஸ் இவையெல்லாம் இருக்கின்றனவா. இந்த நிலையில் நாம் சிங்கள காடயரை காய்ந்து கொண்டு இருக்கிறோம்.

Reply

Arun November 13, 2008 at 12:18 PM

Kan kalangiduchu giri

Reply

சரவணகுமரன் November 13, 2008 at 12:23 PM

:-( (

Reply

KATHIR = RAY November 13, 2008 at 12:24 PM

Vera Kalloor Students na Police Correct panni iruppanga. Law college students police ulla poi irunda naalaikku college fulla strike panni tamilanadu fulla rakalai panni iruppanga antha rowdy law college students. eppome law students kum policekum othe varathu. atha avanga kandukkala. nalla thu than.

Reply

♠புதுவை சிவா♠ November 13, 2008 at 12:30 PM

Giri
all Govt Law college students support some political parties so they not worry anything the Law.

So the police man make any action the same student all against the police. and ask them sorry before the students it happen many time in colleges.

But in this video clips is very danger before the poice just watched it . if the police man think that wonded person his son or brother they watch it??

so all the college and Education give way the politician and casetessiam.

Thanks for your real anger Giri.

puduvai siva.

Reply

Arul November 13, 2008 at 12:41 PM

thakkuthalil eedupatta anaithu manavarkalum dismiss panna vandum

evargal ellam padchu entha payanum ellai

Reply

பயணி November 13, 2008 at 1:09 PM

எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் நாம்?

வன்முறையில் ஈடுபட்ட மாணவ மிருகங்களை ஜெயிலில் போட வேண்டும்,வேடிக்கை பார்த்த போலிஸ் தடியர்களை தூக்கில் போட வேண்டும்.

Reply

Nanda Nachimuthu November 13, 2008 at 1:21 PM

எதற்குமே அர்த்தம் இல்லாமல் போய் விட்டது.எத்தனை மக்கள் இந்த படக் காட்சியை பார்த்து நிலை குலைந்து போய் இருப்பார்கள்.கோவை மதுரை போன்ற சட்டக் கல்லூரிகளிலும் இது போன்ற சம்பவங்கள் நிகழும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று கருதுகிறேன்.சராசரி மனிதனாக இருப்பது வேதனையாக உள்ளது.எமது சட்டமும் அரசாங்கமும் இதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ , காரணமாகவோ ஆதரவாகவோ இருப்பது …. “எமது சட்டமும் அரசாங்கமும் ” என்று சொல்ல யோசிக்க வைக்கிறது….நந்தா நாச்சிமுத்து.

Reply

கோவி.கண்ணன் November 13, 2008 at 1:36 PM

ரொம்ப கொடுமை. :(

Reply

எம்.ரிஷான் ஷெரீப் November 13, 2008 at 1:41 PM

சட்டக்கல்லூரி காட்டுமிராண்டித்தனம்: உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
சென்னை: அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் மாணவர்கள் காட்டுமிராண்டித்தனமாக மோதிக் கொண்டதை கைகட்டி வேடிக்கை பார்த்த காவல்துறை உதவி ஆணையர், இன்ஸ்பெக்டர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4 எஸ்ஐகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மோதலுக்குக் காரணமான 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கொலை முயற்சி, சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்தது உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த கொடூர தாக்குதலில் 4ம் ஆண்டு மாணவர்கள் பாரதி கண்ணன், சித்திரை செல்வன், மூன்றாம் ஆண்டு மாணவர் ஆறுமுகம், இரண்டாம் ஆண்டு மாணவர் அய்யாதுரை ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கண்ணெதிரில் கொலைவெறித் தாக்குதல் சம்பவம் நடந்தும், அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த சென்னை ஐகோர்ட் உதவி கமிஷனர் நாராயணமூர்த்தி, இன்ஸ்பெக்டர் சேகர்பாபு ஆகியோர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். எஸ்பிளனேடு காவல் நிலையத்தைச் சேர்ந்த 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

உபயம்:
http://www.aol.in/tamil/news/2008/11/13/tn-law-college-violence–asst-commissioner-inspector-suspend.html

Reply

kmlrajan November 13, 2008 at 2:20 PM

எங்கே செல்கிறது நம் சமுதாயம்?

ஒரு பக்கம், முற்றும் துறந்த துறவிகள் என்று நாம் கருதியிருந்தவர்களும், இந்த நாட்டின் பாதுகாப்புக்கு அரணாக இருக்கவேண்டிய இராணுவத்தின் சில புல்லுருவிகளும் தரங்கெட்ட‌ இழிசெயல்களில் ஈடுபட்டு நம் சமூக நல்லிணக்கத்திற்கு இழிபெயரை ஏற்படுத்தும் நிகழ்வுகளெல்லாம் இன்று செய்திகளாகி விட்டன.

பாடம் பயிலவேண்டிய மாணவர்கள், மதவெறியும், சாதிவெறியும், சினிமா மோகமும், கீழ்த்தர அரசியல் உணர்வுகளும் த‌ம் வாழ்வின் ப‌குதிக‌ளாக‌க் க‌ற்றுக்கொள்ளும் போது, இத்த‌கைய‌ இழிசெய‌ல்க‌ள் தொட‌ர்ந்து கொண்டு தான் இருக்கும்.

நீதிபோத‌னை வ‌குப்புக‌ள், த‌ன்ன‌ம்பிக்கைப் பாட‌ங்க‌ள் துவ‌க்க‌ப்ப‌ள்ளிகளிலேயே முறைப்ப‌டி ப‌யிற்றுவிக்க‌ப்ப‌டாமை, எவ்வ‌ள‌வு மோச‌மான‌ நிக‌ழ்வுக‌ளை ந‌ம‌க்கு உண‌ர்த்துகிற‌து என்ப‌தை இன்றைய கல்வியாளர்கள் உண‌ர‌வேண்டும்.

காஞ்சிபுர‌ம் ஓரிக்கை தனியார் பள்ளியில் சென்ற‌ வார‌ம் ஒரு ம‌த‌வெறிக்கும்ப‌ல் நிக‌ழ்த்திய‌ வெறியாட்ட‌ங்க‌ளும் ந‌ம‌க்கு இந்திய‌ தேச‌ம் ஏதோ அத‌ள‌பாதாள‌த்துக்கு எடுத்துச்செல்ல‌ப்ப‌டுகிற‌தோ… என்ப‌தை உண‌ர்த்துகிற‌து.

இறைவா, எங்க‌ள் தேச‌த்தைக்காப்பாற்று! என்று பிரார்த்திப்ப‌தைத் த‌விர‌ என‌க்கு வேறுவ‌ழி தெரிய‌வில்லை.

Reply

kppradeep November 13, 2008 at 2:33 PM

“எதையும் தாங்கும் இதயம்” உள்ள திராவிட போலீஸ் வேறு என்ன செய்யும். இவர்கள் மாணவர்கள் அல்ல மிருகங்கள். பிரச்சனையை காலம் காலமாக வளர்த்து விட்டவர்கள் முன்னால் மாணவர்கள் அதாவது இன்றைய வக்கீல்கள் மற்றும் ஜாதி கட்சிகள்

Reply

மோகன் November 13, 2008 at 2:55 PM

பொதுவாகவே சட்டக்கல்லூரி மாணவர்களைப் பற்றி பொது மக்களிடம் (அதான் நம்மிடம்) நல்ல அபிப்ராயம் இல்லை. அவை எல்லாம் சரி என்பது போலவே இவர்கள் நடந்துக்கொ(ல்)ள்கிறார்கள்.

ஆனால் காவல் துறை எதற்கு இதை வேடிக்கை பார்த்தது என்றே புரிய வில்லை. அட, அடித்த மாணவர்களை(??) இவர்களால் ஒன்றும் செய்ய முடிய வில்லை என்றால், அடி வாங்கிக் கொண்டு இருந்த மாணவர்களையாவது தூக்கி கொண்டு போய் இருக்கலாமே.

Reply

balachandar muruganantham November 13, 2008 at 4:06 PM

இவங்கள திருத்தவே முடியாது. இந்த காவல் துறை என்ன தான் பன்னுறாங்க?

Reply

ஒற்றன் November 13, 2008 at 4:16 PM

நவீன கல்வி முறையும், சினிமா தாக்கமும் சட்டக் கல்வி மாணவர்களையும் விட்டு வைக்கவில்லை.

‘இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள்’

இந்த வாசகம் இப்பொழுது மனதில் அச்சத்தை ஏற்படுத்துகிறது!

Reply

ராமலக்ஷ்மி November 13, 2008 at 4:16 PM

ரிஷான் தந்துள்ள தகவல்கள் சற்றே ஆறுதல் அளிப்பதாக உள்ளன. நன்றி ரிஷான். இவர்களுக்கு வழங்கப் படும் தண்டனை மற்றவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும்.

Reply

M Arunachalam November 13, 2008 at 4:46 PM

Giri,

I have not seen the video & I don't intend to see it either.

I feel this is nature's way of balancing itself. When everyone knows that Madras Law College is made up OF Rowdies, FOR Rowdies & run BY Rowdies, any right thinking person should feel happy that these rowdies fight among themselves & kill each other.

THEY ARE HELPING SOCIETY BY GETTING RID OF ROWDIES, is it not?

So, what is there to feel sorry in this as Chennai will have at least 2 rowdies less after this episode.

Let there be more such incidents in Madras Law College in the days & years to come so that many more rowdies can get killed by their fellow rowdies.

Vazhga Dravidam.

Reply

Sundar சுந்தர் November 13, 2008 at 5:27 PM

வீடியோ பார்க்க மனசுக்கு தைரியம் இல்லை.

Reply

வடகரை வேலன் November 13, 2008 at 5:40 PM

சட்டம் படிக்க விருப்பபட்டு வர்பவர்கள் குறைவு. அப்படியே விருப்பபட்டு வருபவர்கள் வீட்டிலோ அல்லது உறவு முறையிலோ ஏறகனவே வக்கீல்கள் இருப்பர்.

எனவே எதைப்பற்றியும் கவலை கிடையாது. மீறினால் இருக்கவே இருக்கு கோர்ட் கேஸ் என்கிற விட்டேத்தித்தனமும் ஒரு காரணம்.

இங்கு கோவையிலும் மற்ற கல்லூரி மணவர்களைவிட சட்டக் கல்லூரி மணவர்களுக்கு நல்ல பெயர் கிடையாது; யாரும் அதுபற்றி கவலைப் படுவது கிடையாது.

போலிசை குறை சொல்வது ஒரு லெவலுக்கு மேல முடியாது. அவங்களுக்கு மாணவர் சக்தி பற்றி பயம். இதற்கு முன் நடந்த சம்பவங்களும் அதைத்தான் உறுதி செய்கின்றன.

Reply

Nanda Nachimuthu November 13, 2008 at 5:51 PM

suspend panradhellam eye washnga…they shdnt allow this to happen at all….adi vaangina pasanga hospitalla irukkaanga…ivangala suspend senju ennaga pogudhu…useless system..

Reply

அத்திவெட்டி ஜோதிபாரதி November 13, 2008 at 5:52 PM

ரோட்டுல கூட்டமா காக்கி சட்டை போட்டுக்கிட்டு வேடிக்கை பாக்கிறாங்களே! அவங்க எல்லாம் செக்கியுரிட்டியா? கூர்காவா? அரசாங்க பஸ் டிரைவர் கண்டக்டர்களா? இல்லை வொர்க் சாப்பில் வேலை செய்கிறார்களா?

வாழ்க! வாழ்க!!

Reply

’டொன்’ லீ November 13, 2008 at 6:20 PM

இவர்களையெல்லாம் படிக்க அனுப்பிய பெற்றோரின் உழைப்பை நினைக்கும் போது..இரத்தக் கண்ணீர் தான் வருகிறது..

காவல்துறையை எதுக்கு குறை சொல்ல..? அவர்கள் ”தம் கடமையைத்” தான் செய்துள்ளனர்…

Reply

கபீஷ் November 13, 2008 at 6:57 PM

நான் vedio பாக்கல, அவ்வளவு தைரியம் இல்ல. ஏன் கிரி, இப்படி ஒரு தலைப்பு, மிருகங்கள் உணவுக்காகவும், எதிரிகளிடமிருந்து தற்காக்கவும் தான் பிற உயிர்களைத் தாக்கும்.

Reply

ஜோசப் பால்ராஜ் November 13, 2008 at 7:13 PM

கிரி,
நேத்து இந்தக் கொடுமைய நானும் நேத்துப்பார்த்தேன், எனக்கு வந்த கோவத்துல கொஞ்சம் கூட என்னால எழுத முடியல, அவ்ளோ கேவலமாத்தான் வார்த்தைகள் வந்துச்சு. அதான் எழுதல.

வீடியோ ஆதாரமே இருக்கு. அந்த தாக்குதல்ல ஈடுபட்ட அத்தனை பேரையும் கடுமையா தண்டிக்கணும், அந்தத் தாக்குதல வேடிக்கைப் பார்த்துக்கிட்டு சும்மா நின்ன காவலர்கள் மீதும் கடுமையா நடவடிக்கை எடுத்தே ஆகணும். என்ன செய்யப் போகுது இந்த சட்டமும், ஆட்சியும் ?

Reply

யோகன் பாரிஸ்(Johan-Paris) November 13, 2008 at 7:25 PM

மிருகங்களைக் கேவலப்படுத்த வேண்டாம்.
மிருகங்கள் கூட தன் அதே இனத்தை இவ்வளவு கொடூரமாகத் தாக்காது.

Reply

nilavan November 13, 2008 at 7:53 PM

வருங்கால தமிழக முதலமைச்சர்கள் வாழ்க

Reply

muthu November 13, 2008 at 8:08 PM

ஒருத்தன் கத்தி எடுத்துக்கொண்டு பாய்வதும்., அவனை இழுத்துப்போட்டு மற்ற சிலர் சரமாரியாக தாக்குவதும்.. அதுவும் சென்னையின் பிரதான இடத்தில், சட்டக்கல்லூரி வளாகத்தின்..

அடி வாங்கியவன் மேல் பச்சாதாபம் வந்தாலும், அவனும் கத்தியை எடுத்துக்கொண்டு அடுத்தவன் மேல் பாய்ந்துள்ளான் என நினைக்கும் போது அவனையும் ஒரு மாணவனாக பார்க்க முடியவில்லை..

வேடிக்கை பார்த்த சட்டக்கல்லூரி மாணவர்கள்.. அடத்தூ நீங்களாடா படித்து முடித்து சட்டத்தை காப்பற்ற போகின்றீர்கள்?

காவல்துறை – கைக்கட்டி வேடிக்கை பார்த்த உங்களுக்கு மக்கள் ரத்தம் சிந்தி உழைத்து கொடுகும் வரியில் இருந்து சம்பளம் வாங்க கைக்கூசவில்லை?? த்தூ

வளைத்து வளைத்து போட்டோ எடுத்த பத்திரிக்கைதுறையே – நாளை காலை முதல் பக்கத்துக்கு நல்ல கலர் போட்டோ கிடைத்தது என்று எடுத்து தள்ளி, படம் வரைந்து பாகம் குறித்த உங்களுக்கு , உங்கள் பத்திரிக்கைக்கு கிடைக்கும் பரபரப்பை விட அந்த சம்பவம் மலிதாகிவிட்டதா?? நீங்கள் சமுதாயத்தின் நாண்கு தூண்களில் ஒரு தூண் என்றூ சொல்லிக்க வெக்கமாயில்லயா?

Reply

நல்லதந்தி November 13, 2008 at 8:08 PM

காவல்துறையை தன் வசம் வைத்துள்ள கலைஞர் கருணாநிதி இன்று இதற்க்கு எதாவது விளக்கம் கொடுக்க உளற வேண்டுமே என்று சட்டசபைக்கே வரவில்லை. /இவரெல்லாம் ஒரு முதல்வர்.நமெல்லாம் இவருடைய ஆட்சி பீடத்தின் கீழ் வாழும் குடிமக்கள்.வெட்கக் கேடு. கலைஞர் ஆட்சிக்கு வந்தாலே சட்டமும் ஒழுங்கும் தூங்கப் போய்விடும் என்பதற்க்கு மீண்டும் ஒரு உதாரணம்

Reply

நசரேயன் November 14, 2008 at 3:38 AM

என்ன கொடுமை சார் இது

Reply

thenali November 14, 2008 at 4:54 AM

//கலைஞர் ஆட்சிக்கு வந்தாலே சட்டமும் ஒழுங்கும் தூங்கப் போய்விடும் என்பதற்க்கு மீண்டும் ஒரு உதாரணம்//

கலவரம் நடந்த பின்பு போலிஸ் வரக்கூடாது என சென்னைக் கல்லூரி மாணவர் போராடியதால் போலிஸ் கல்லூரியை விட்டு வெளியேறிவிட்டதாம். கோவை சட்டக் கல்லூரியை நாசப்படுத்திய மாணவ ரவுடிகளை காலையில் கைது செய்து மாலையில் போலிஸ் விட்டுவிட்டதாம். இந்த லட்சணத்தில் அரசு நடவடிக்கை எடுத்தால் சட்டஒழுங்கு இப்படித்தான் பல்லிளிக்கும்.கலைஞருக்கு பாரளுமன்ற தேர்தலில் கெலிக்கும் எண்ணமே இல்லை போல!

Reply

paarvai November 14, 2008 at 5:45 AM

நெஞ்சு பதைக்கிறது. அடிபட்ட மாணவர்களின் பெற்றோர் மனம் என்ன புண்பட்டிருக்கும்? காவல்துறையின் அதிகாரம் கழக ஆட்சியிலே கட்டப்படுவது கண்கூடு. அன்று மதுரையில் வேடிக்கை பார்த்தனர். இன்று சென்னையிலே. கழக ஆட்சியிலே சட்டம் ஒழுங்கு கேவலமாக இருக்கும் என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு.

Reply

Vijay November 14, 2008 at 9:31 PM

மனம் பாரமாக இருக்கு, கிரி :(

Reply

ஆட்காட்டி November 15, 2008 at 7:04 AM

மனிதர்கள்.

Reply

அருப்புக்கோட்டை பாஸ்கர் November 15, 2008 at 8:57 PM

கிரி, இத்தனை செய்தவர்கள் கூலி படையினர் என்றும் ஒரு கருத்து இருக்கிறது !
தமிழ்நாட்டில் தற்போது விடுதலை சிறுத்தையினர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை நிலவி வருகிறது ! திரு கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு கெட்டு போகும் என்பதற்கு மற்றும் ஒரு ஆதாரம் .
இவர்கள் நீதிமன்றத்திற்கு மட்டும் செல்ல போகுபவர்கள் அல்ல . நாட்டின் மிக முக்கியமான அமைச்சர் பதவிகளையும் வகிக்க போகிறவர்கள் . நம் நாட்டின் நிலைமையை நினைத்தால் மனம் பதறுகிறது !

Reply

Nam-Tamil November 16, 2008 at 10:51 AM

//அந்த பையன் பிழைத்தால் கடவுள் அருள் தான்.//

அட பாவிகளா இதற்கு கடவுள் அருள் மட்டும் தான் குறையா?

என்ன இந்த புலம்பல்….!!

இது நமக்கு புதியது அல்ல…. !!
இன்று படம் காட்டப்பட்டது… அவ்ளவு தான்….!

இது முழுவதும் திட்டமிட்ட பட்டது என்று தெரியவில்லை…..!!!
அடிவாங்கியவன் (கத்தியுடன் சண்டையிடவன்) அவனது குழுவும் அ.தி.மு.க (தேவர் கட்சி) ஜெயலிதாவின் அறிக்கை அவனுக்கு சாதகமாக இருப்பதை கவனியுங்கள்.
அடித்தவன் தி.மு.க அவர்களது கூட்டண்ந்நியினர் (காவல் துறையின் பாராமுகம்)

இதுகூட தெரியாமல் நாம்…..??!
அப்பாவி தமிழராய்…! எங்கும் அடிவாங்கும் தமிழராய்…..!

அனைத்து மாணவரின் இதுவரை கல்வி தகுதியை ரத்து செய்யவேண்டும்….!
அவர்கள் பெற்றோர் அனைவரையும் சிறையில் அடைக்க வேண்டும். இந்த குடும்பங்கள் அகதி ஆக்கப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்த பட வேண்டும், அகதி முகாமில் இருக்கும் குடும்பங்கள் அவர்களுக்கு பதில் அவர்களின் இடாங்கள்ளில் வாழ வாய்பளிக்க பட வேண்டும்….!

இந்த மாணவர்கள் உருவாக்க காரணம் இவர்கள் தான். ஈனன் பெற்ற ஈன்னர்கள்.. இந்த மிருகங்கள் பற்றி முன்கூட்டியே காவல் துறையிடம் புகார் கொடுக்கவில்லை…? இது பற்றி தெரியாமல் என்ன பிள்ளை வளர்கின்றிகள்…??
இதில் நடவடிக்கை எடுக்க கூறி சாலை மறியல் வேறு….?

மாற்றம்…! நம்மால் முடியும்….!!!

நான் சுயேட்சை சட்டமன்ற உறுபினராக வாய்பளிக்கயுங்கள் , 2 வருடங்களில் நான் மாற்றுகிறேன் என் தொகுதியை…. அல்லது ராஜினாமா செய்கிறேன்…..! இது வாக்குறுதி அல்ல… இதை பதிவுமுறை செய்து கையொப்பம் இட நான் தயார்…?? மக்கள் தயார்ரா….????

Reply

கிரி November 17, 2008 at 4:37 PM

Muthukumar said…
ஜனநாயகம் என்ற மகத்தான கோட்பாட்டுக்கு நாம் கொஞ்சமும் தகுதியானவர்களே அல்லர் நாம் என்ற என் எண்ணம் நமது அரசியல் வியாதியஸ்தர்களாலும் அவ்வப்போது இதுபோன்ற எச்சப்பொறுக்கிகளாலும் உறுதிப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

நமக்கெல்லாம் சர்வாதிகாரமே தீர்வு. அல்லது தேர்தல் ஆணையம் போல காவல்துறையும் ஆணையமாக்கப்பட்டால் கொஞ்சமேனும் மேம்பட வாய்ப்பு.

உங்கள் தலைப்பில் ஏன் மிருகங்களை கேவலப்படுத்துகிறீர்கள் ? பாதுகாப்பு/உணவு என்ற இரண்டைத்தவிர “போஸ்டரில் இடம் பெற்ற கல்லூரி பெயரில் ***********”**** என்பதற்கெல்லாம் குதறிக்கொள்ளாதவை மிருகங்கள்.

நிர்வாணமாக கட்டிப்போட்டு கொதிக்கும் எண்ணையை மேலே கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, விஷ ஜந்துக்களை மேலே விட்டு கடிக்கச்செய்து சித்தரவதை செய்து கொஞ்சம் கொஞ்சமாக துடிக்கத் துடிக்க கொல்லவேண்டும் இந்த நாதாரிகளை என்று வெறி வந்தது.

முத்துக்குமார் எடிட் செய்ததற்கு மன்னிக்கவும்

===================================================================

BioAgeS !nnovations said…

nasama pora arasial vathikulum ********** police karanum irrukumvari tamilnatai kadaval vanthalum kapatha mudiathu, thiavuseithu edit seiavandam.

எடிட் செய்ததற்கு மன்னிக்கவும் BioAgeS !nnovations

Reply

கார்த்திக் சங்கரசுப்ரமணியன் November 17, 2008 at 6:23 PM

Annae Vanakam.. Epdi irukeenga..?? This Ganeshkanth brother Karthik. Blog-a appappa update panidureenga.. Very nice..

Reply

Arun November 21, 2008 at 3:14 AM

yenna giri romba naala pathivu podala? we are missing it. If possible seekaram oru pathivu podunga

Reply

goundan February 16, 2009 at 3:13 PM

Giri.if we see that video definetly all people will get angry against the students who were attacked.But what those people did(who injured)?.we do not know.Because we have no video for that.why those people attacked them.?Because that two people trying to kill one guy infront of many students.That is why they did like that.one tamil proverb.VINAI VITHAITHAVAN VINAI ARUPPAN.

Reply

varun June 28, 2010 at 5:48 PM

ரெண்டாவதா அடி வாங்குன பய்யன் அடுத்த வாரமே செத்துட்டான் அத பத்தி ஒரு பத்திரிக்கையும் வெளிலே சொல்லல

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed