ரஜினியின் பேட்டியை ஒளிபரப்பிய சன் டிவி குசேலன் சம்பந்தப்பட்ட கேள்வி பதில்களை ஒளிபரப்பவில்லை, முதலில் இந்த பேட்டிகளை எப்படி ஒளிபரப்பியது என்றே புரியவில்லை!!! குசேலன் வெளியீட்டில் இருந்து சமீப காலங்களில் ரஜினி எதிர்ப்பு செய்தியாகவே கூறி கொண்டு இருந்தது. ஆனால் சன் டிவி இந்த பேட்டியை ஒளிபரப்பியதன் மூலமே நல்ல ரீச் கிடைத்தது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
வழக்கம் போல ரஜினி பேட்டியில் குறை கூறி கிண்டலடித்து, திட்டி பேசுபவர்கள் பேசி கொண்டே தான் இருக்கிறார்கள்..இதெல்லாம் புதுசா என்ன!
எத்தனை பார்த்து இருக்கோம்
ஒருத்தரை பிடிக்கலைனா அவர் என்ன செய்தாலும் பேசினாலும் குற்றம் தான், அது நொள்ளை இது நொட்டையினு ஏதாவது குறை கண்டு ஏதாவது சொல்லிட்டே இருப்பாங்க.
இதுல இந்த இந்த தினமலர் போன்ற பத்திரிக்கைகள் வேறு..இவங்களா ஒரு தேதி அறிவித்து சந்திப்பு என்று போட்டு அன்று கல்லா கட்டிப்பாங்க, அப்புறம் சந்திப்பு நடக்கலைனா (எப்படி நடக்கும்) ரஜினி ரசிகர்களுக்கு ஹல்வா கொடுத்தாட்டாருன்னு அதையும் செய்தியா போட்டு கல்லா கட்ட வேண்டியது. அப்புறம் பேட்டி முடிந்ததும் ரஜினி ஓட்டம்! னு அண்ட புளுகு புளுக வேண்டியது. நீங்களாகவே அறிவிப்பு செய்தீங்க நீங்களாகவே இல்லைன்னு சொன்னீங்க இதற்க்கு ரஜினி என்ன பண்ணுவார்.
ரஜினி ரசிகர்கள் கூட்டம் நடந்து விட்டது நாட்டுல இருக்கிற அத்தனை பிரச்சனையும் தீர்ந்து விட்டது என்று குமுதம் கார்ட்டூன் போட்டுள்ளது, ஏன்யா! நடக்காத சந்திப்பை கவர் ஸ்டோரி, கவர் இல்லாத ஸ்டோரி, சூப்பர் ஸ்டோரி னு போட்டு காசு பார்க்க வேண்டியது (இந்த சந்திப்பையும் எப்படியும் இரண்டு வாரத்திற்காவது ஓட்டுவீங்க) அப்புறம் நீங்களே இந்த மாதிரி கார்ட்டூன் போட்டு நக்கல் அடிக்க வேண்டியது. குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுறது என்பது இது தானா! ரஜினியா வந்து ஒவ்வொரு முறையும் தேதி கூறி தள்ளி வைத்துட்டு இருந்தாரு! அப்படியே தள்ளி வைத்தாலும் அது ரஜினிக்கும் ரசிகர்களுக்கும் உள்ள பிரச்சனை உங்களுக்கென்ன! நீங்க தான் நாட்டு மக்கள் பயன் பெற உருப்படியான படங்களை!!! நடு பக்கத்தில் போட்டு நாட்டு மக்களுக்கு சேவை ஆற்றிட்டு இருக்கீங்கல்ல, எந்த ஒரு சினிமா சம்பந்தப்பட்ட செய்தியும் போடாம மக்களுக்கு அறிவு வளர்க்கும் திருக்குறள் சத்யசோதனை பற்றிய கருத்துக்களை கூறிட்டு இருக்கீங்கல்ல அதையே தொடர்ந்து செய்ய வேண்டியது தானே..உங்களை யாரு வந்து ரஜினி சந்திச்சாரா பேசினாரா மூச்சுட்டாரா தும்மல் போட்டாரான்னு வந்து பார்க்க சொன்னது. போய் எல்லோரும் முதல்ல உங்க வீட்ட சுத்தம் செய்யுங்க..அப்புறம் வந்து அடுத்தவன் வீடு நாறுதுன்னு சொல்லலாம்.
ரஜினி அரசியலுக்கு வருகிறார் வரலை அது ரஜினிக்கும் ரசிகர்களுக்கும் உள்ள பிரச்சனை, என்னமோ ரஜினி ரசிகர்கள் மேல ரொம்ப அக்கறை மாதிரி எல்லோரும் மாஞ்சு மாஞ்சு விவாதிச்சுட்டு இருக்காங்க, ஐடியா கொடுத்துட்டு இருக்காங்க. இதுல இவர்கள் எல்லாம் எப்ப திருந்த போகிறார்களோ என்று வசனம் வேறு! சிரிப்பு தான் வருது. வீட்டுல உட்காந்துட்டு அவன் சரி இல்லை இவன் ஏமாத்துறான், இவனுகளுக்கு வேற வேலை வெட்டியே!!! கிடையாது, பால் ஊத்துறான், கற்பூரம் காட்டுறான் னு சொல்ற ஒரு சில பேர் இந்த வலைப்பதிவை கட்டிட்டு, எப்ப பார்த்தாலும் தமிழ்மணத்துலையே குத்த வைத்து உட்காந்துக்கிட்டு எந்த மாதிரி பதிவு போட்டு ஹிட் ஏத்தலாம், எவனை திட்டலாம், எப்படி ஒருத்தனை கட்டம் கட்டலாம் னு (இன்னும் கொஞ்சம் இருக்கு நாகரீகம் கருதி குறிப்பிடவில்லை) கம்ப்யூட்டரை கட்டிட்டு அழ வேண்டியது இதுல மற்றவர்களுக்கு அறிவுரை மற்றும் கிண்டல் வேறு!, வெட்டி வேலை செய்கிறான் என்று. ஒருத்தன் என்ன செய்தாலும் குற்றம் அதே நாம செஞ்சு அதை யாரும் கேட்கலைனா நாம குற்றமே செய்யலைன்னு அர்த்தம் கிடையாது. ரசிகனாவது பால் ஊத்துறதையும் கற்பூரம் காட்டுறதையும் அந்த ஒரு நாள்ல முடிச்சுட்டு அவன் பொழைப்ப பார்க்க போயிடுறான், ஆனா அவனை கிண்டல் செய்யும் மற்றவர்கள்…எதற்கெடுத்தாலும் லாஜிக் பார்த்து பேசும் அதி புத்திசாலிகள்… !!!
அவன் கண்ணுக்கு தெரிஞ்சு வெட்டி செலவு பண்ணுறான், நாம கண்ணுக்கு தெரியாம வெட்டி செலவு பண்ணிட்டு இருக்கோம், நேரத்தை விரயம் செய்து கொண்டு இருக்கிறோம். இந்த அதி புத்திசாலிகளுக்கு தன்னிடம் உள்ள குறைகள் புரியாது சொன்னாலும் அதற்க்கு ஏதாவது லாஜிக் பேசுவாங்க. இப்படி இருக்கிறவங்க தங்களிடம் உள்ள பிரச்சனைகளை உணர மாட்டாங்க..அடுத்தவன் சரி இல்லை, முட்டாள்னு குறை கூறிட்டு இருப்பாங்க. ஒருத்தனை விரல் நீட்டி குற்றம் கூறும் போது மற்ற விரல்கள் நம்மை நோக்கி தான் இருக்குங்கறதை மறந்துடாதீங்க.
அவசியமில்லாமல் ஒருவரை குறை கூறி அல்ப சந்தோசப்படுவதையும் அடுத்தவருக்கு அறிவுரை கூறுகிறேன் பேர்வழி என்று நக்கல் அடிப்பதையும் ஐடியா கொடுப்பதையும் விட்டு விட்டு, அதி புத்திசாலிக பாஷையில சொல்வதுன்னா உருப்படியா வேற வேலை இருந்தா போய் பாருங்க இல்ல… நல்ல!! பதிவு எழுத முயற்சி செய்யுங்க. ஏன்னா! நீங்க தான் ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ள வழியில் செலவழிக்கிறவங்க ஆச்சே!
Related posts:
- “ரஜினி கமல்” ரசிகர்கள் நேர்மையாக விமர்சிக்க முடியுமா?
- எந்திரன் ரஜினி ஒரு மைக்ரோ முன்னோட்டம் – 1
- “ரஜினி” திரைப்பட முதல் காட்சி (FDFS) அனுபவங்கள் (பாகம் 2)
- “ரஜினி” திரைப்பட முதல் காட்சி (FDFS) அனுபவங்கள் (இறுதி பகுதி)
- “ரஜினி” திரைப்பட முதல் காட்சி (FDFS) அனுபவங்கள் (பாகம் 1)
- 1996 ல் துக்ளக்கில் ரஜினி எழுதிய கட்டுரை
- எந்திரன் ரஜினி ஒரு மைக்ரோ முன்னோட்டம் – 2
- அஜித் ரஜினி கமல் விஜய் டிவி “கோ”
{ 50 comments… read them below or add one }
கிரி, கூல்
//ஒருத்தனை விரல் நீட்டி குற்றம் கூறும் போது மற்ற விரல்கள் நம்மை நோக்கி தான் இருக்குங்கறதை மறந்துடாதீங்க
//
ஹைய்யா… ஆனா காலுல உள்ள 10 விரலும் முன்னாடி உள்ளவங்கள தானே காட்டுது
உப தகவல்: இன்னொரு கைல உள்ள 5 விரலும் தரையை பாத்துட்டு இருக்கும்.
//முரளிகண்ணன் said…
கிரி, கூல்//
===========================================================================
//Great said…
ஹைய்யா… ஆனா காலுல உள்ள 10 விரலும் முன்னாடி உள்ளவங்கள தானே காட்டுது//
நீங்க தானா அது
)) நீங்க காலை காட்டி பேசுவீங்கன்னு எனக்கு தெரியாது ஹி ஹி ஹி
//உப தகவல்: இன்னொரு கைல உள்ள 5 விரலும் தரையை பாத்துட்டு இருக்கும்.//
அடேங்கப்பா! கலக்குறீங்க..;-) அசத்தல்!
வாசிக்கும் போது என்ன சொல்ல நினைத்தேனோ அதை முரளிக் கண்ணன் சொல்லி விட்டார்.
COOOOOOOOOOOOOOOOOL!
சும்மா நச்சுனு சொன்னிங்க தலைவா…
என்னை பொறுத்த வரை ரஜினி தமிழராக தமிழ் இன நண்பராக தான் வாழ்கிறார்
நமக்கு நாகரிகம் அவசியப்படுகிறது…..
இப்ப நான்ன்ன்ன்ன்ன்ன் என்ன செய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா ?
பாராட்டி பின்னூட்டனுமா ? எதிர்த்து பின்னூட்டனுமா ?
//முத்து said…
சும்மா நச்சுனு சொன்னிங்க தலைவா… //
நன்றி முத்து
//என்னை பொறுத்த வரை ரஜினி தமிழராக தமிழ் இன நண்பராக தான் வாழ்கிறார்//
இப்படி சொன்னீங்கன்னா ..உங்களை என்ன சொல்லுவாங்க தெரியும்ல
)))
உங்கள் முதல் வருகைக்கு நன்றி முத்து
===================================================================
??ராமலக்ஷ்மி said…
வாசிக்கும் போது என்ன சொல்ல நினைத்தேனோ அதை முரளிக் கண்ணன் சொல்லி விட்டார்.
COOOOOOOOOOOOOOOOOL!//
நீங்கள் கூறும் படி இருக்க தான் முயற்சி செய்கிறேன்…. என்ன பண்ணுறது சில சமயம் இப்படி ஆகிடுது..வரம்பு மீறாம தான் இருக்கேன்னு நினைக்கிறேன்
====================================================================
//கோவி.கண்ணன் said…
இப்ப நான்ன்ன்ன்ன்ன்ன் என்ன செய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா ?//
//பாராட்டி பின்னூட்டனுமா ? எதிர்த்து பின்னூட்டனுமா ?//
இப்ப நான்ன்ன்ன்ன்ன்ன் என்ன சொல்லலலலலலலலலலல
)) வழக்கம் போல திட்டுங்க
அய்யா எல்லோருக்கும் வணக்கம், நான் புதிதாக இந்த ப்லோக் பக்கம் வந்திருக்கேன், ரஜினியை பத்தி அவுங்க ரசிகர்கள் பத்தியும் நல்லா சொன்னிங்க, பொதுவாவே நம்ம வூர்ல படிச்சவகள்ளனாலும் சரி, கட்டவுட்டுக்கு பாலூதுற பரதேசியானாலும் சரி இந்த ரஜினி விஷயத்துல எல்லாருடைய திங்கிங்கும் ஒண்ணுதான், ரேஞ்சுதான் கொஞ்சம் வித்தியாசப்படும், இங்கன்னு இல்ல உலகத்துல எங்க தமிழன் இருக்கானோ அங்கெல்லாம் இப்படித்தான் இருக்கானுங்க, நான் கொஞ்ச நாள் மலேசியா நாட்டுல இருந்தேன், அங்க ரஜினி படம் ரிலீஸ் ஆனா வுருலேருந்து கட் அவுட் வருது, கூட்டத்துல ப்லோக் டிக்கெட் விக்கிறாங்க, அதெல்லாம் நம்ம கம்பர்
பண்ணும்போது எங்கேயும் இந்த தமிழன் சரியில்லை என்று தான் தோனுகிறது,
இந்த ரஜினியை பத்தி நம்ம மிடியாகளும் சரி, அரசியல் வாதிகளும் சரி பொத்திகிட்டு போயிருந்தால் இன்னைக்கு இந்த ஆளு இவ்வளவு பாபுலர் ஆயிருக்க மாட்டான், கண்டபடி வுலரிகிட்டு இருக்க மாட்டான், வந்தோமா, எதோ நடிச்சோமா,பொழைப்ப பாத்தொமான்னு இல்லாம, அடக்கி வாசிச்சொமான்னு இல்லாம, இப்ப கமல் இல்லையா! அரசியல் பத்தியும் மத்த எத பத்தியும் எதாவது பேசுரரா? அதுக்காக நான் கமல் பக்கம் இல்ல, எதோ ஒரு நாள் லீவுல ஒரு படம் பாத்தோமா, வந்தோமானு இல்லாம இப்பல்லாம் சினிமா இல்லாம இன்னும் எவ்வளோ என்டேர்டைன்மேன்ட் வந்திருச்சி, பொழப்ப பாக்காம நம்ம பேசியே அந்த ஆள பெரிய ஆளா ஆக்குவோம்,இது தான் நாம செய்கிற பெரிய தப்பு, காரணம் எதாவுது வேலை வெட்டிக்கு போன இந்த மாதிரி பிரச்சனை இல்லாம போகும், நான் வேலை செய்யும் ஹோட்டலுக்கு அர்னோல்ட் வந்தார் இரோப்பா, அமெரிக்க நாட்டவர்கள் எல்லாம் ஒரு ஜஸ்ட் ஒரு சிரிப்பு, ஒரு கை குலுக்கல்,அவ்வளவுதான், வேலையை பாத்துகிட்டு போயிகிட்டே இருக்காங்க, ஆனா நம்ம சாருக்கான் வந்ததுக்கு ஹோட்டலே சாந்த கடை ஆயிடுச்சி, நம்ம ப்ளடி இந்தியன்ஸ், பண்ணிய கூத்து,இதெல்லாம் மாறனும்னா நல்ல அரசியல் தலைவர் வேணும், நல்ல திட்டங்கள் போடணும் மக்கள் மனசை திசை மாத்தனும், எனக்கு தெரிஞ்சி இந்த மலேசியா , சிங்கப்பூர் ஆகிய நாடுகள் ஒரு பத்து வருஷத்துல எல்லாம் டெவலப் ஆச்சி, எல்லா துறையும் ஒரே சீரான வளர்ச்சி, பத்து வருஷம் அப்புறம் ஒட்டு மொத்த நாடே பாக்க வித்தியாசமா தெரிஞ்சது, இவலவுக்கும் அங்க பெட்ரோல் இல்ல, பாம் ஆயில் ஒண்ணுதான், கொஞ்சம் ரப்பர், இத வச்சிக்கிட்டு அவுங்க நல்ல டவலப் பண்ணிட்டாங்க, அரசாங்கம் நல்லா இருந்தா இந்த டுபாகொர் ஆசாமிங்க எங்கோ காணாம போயிடுவாங்க, எதோ என்னோட கருத்தை சொன்னேன் தப்ப எடுத்துகாதிங்க,
”நச்” பதிவு.
இவனுங்க ரஜினியை வெச்சி வாரவாரம் என்னத்தையோ எழுதி சம்பாரிக்கிற காசை,ரஜினி கூட கஷ்டப்பட்டு நடிச்சி சம்பாரிச்சி இருக்க மாட்டார்!.
இந்தப் பதிவிற்க்காக மீண்டும் வாழ்த்துகள்!.
//எதோ என்னோட கருத்தை சொன்னேன் தப்ப எடுத்துகாதிங்க,//
ரொம்ப சொல்லிட்டீங்கன்னு நினைக்கிறேன்
))) உங்கள் வருகைக்கு நன்றி
கிரி, வழக்கம் போல் அசத்திவிட்டீர்கள். தொடரட்டும் உங்கள் பணி. ரஜினியின் வெற்றிக்கான காரணமே, அவருக்கு அவரது எதிரிகள் கொடுக்கும் முக்கியத்துவம்தான்.
மேலும், ரசிகர்கள் சந்திப்பு என்பது ரஜினிக்கும் அவரது ரசிகர்களுக்கும் உள்ள தனிப்பட்ட ஒரு விஷயம். (Private issue). இவர்களை யார் அழைத்தது? செய்தியை போட்டு கல்லா கட்டவேண்டும் என்ற ஒரே நோக்கில் அழையா விருந்தாளிகளாக அங்கு சென்றார்கள். அப்படியும் சூப்பர் ஸ்டார் அவர்களை வரவேற்று உபசரித்தார்.
அதற்க்கு இவர்கள் காட்டும் நன்றிக்கடன் இது தான்.
- சுந்தர்
//நல்லதந்தி said…
”நச்” பதிவு.
இவனுங்க ரஜினியை வெச்சி வாரவாரம் என்னத்தையோ எழுதி சம்பாரிக்கிற காசை,ரஜினி கூட கஷ்டப்பட்டு நடிச்சி சம்பாரிச்சி இருக்க மாட்டார்!.
இந்தப் பதிவிற்க்காக மீண்டும் வாழ்த்துகள்!.//
நன்றி நல்லதந்தி.
===================================================================
//வெயிலான் said…
இப்பதான் இத படிச்சேன்.
நீங்க வேற மாதிரி சொல்றீங்க. ஒண்ணும் புரியமாட்டேங்குது.//
வெயிலான் லிங்க் எடிட் செய்ததற்கு மன்னிக்கவும். எனக்கு அதை போன்ற பதிவிற்கு கருத்து கூற விருப்பம் இல்லை. தேவையில்லாத மனஸ்தாபம் தான் வரும்.
உங்கள் வருகைக்கு நன்றி
கிரி…
இன்றைக்கு மீடியாவில் எந்த Ethics-ம் கிடையாது. எனவே அவர்கள் எதையுமே பொருட்படுத்துவதில்லை.
பெருந்தன்மை, துரோகம் இரண்டுக்கும் ஒரே பாப்புலாரிட்டிதான் மீடியாவில்.
இந்த மன நிலை இனி மாறுமா என்றும் தெரியவில்லை…
வெறும் வியாபாரிகளைக் கூட ஏற்றுக் கொள்ளலாம். வியாபாரத்துடன் சேர்ந்து தங்கள் மனதில் விகாரங்களையும் தலையில் கட்டப் பார்க்கும் இவர்களை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்க வேண்டும், இவர்களின் வாடிக்கையாளர்கள்.
ஆனால் துரதிருஷ்டம், இவர்களும் அந்த வக்கிரத்தைப் படித்து அல்ப சந்தோஷம் கொள்ளும் நச்சு போதைக்கு அடிமையாகிக் கிடக்கிறார்கள்.
http://www.envazhi.com
வணக்கம்…நல்ல பதிவு
வாழ்த்துக்கள்…
// இதெல்லாம் மாறனும்னா நல்ல அரசியல் தலைவர் வேணும், நல்ல திட்டங்கள் போடணும் மக்கள் மனசை திசை மாத்தனும், எனக்கு தெரிஞ்சி இந்த மலேசியா , சிங்கப்பூர் ஆகிய நாடுகள் ஒரு பத்து வருஷத்துல எல்லாம் டெவலப் ஆச்சி, எல்லா துறையும் ஒரே சீரான வளர்ச்சி, பத்து வருஷம் அப்புறம் ஒட்டு மொத்த நாடே பாக்க வித்தியாசமா தெரிஞ்சது, இவலவுக்கும் அங்க பெட்ரோல் இல்ல, பாம் ஆயில் ஒண்ணுதான், கொஞ்சம் ரப்பர், இத வச்சிக்கிட்டு அவுங்க நல்ல டவலப் பண்ணிட்டாங்க, அரசாங்கம் நல்லா இருந்தா இந்த டுபாகொர் ஆசாமிங்க எங்கோ காணாம போயிடுவாங்க, //
உங்கள் கருத்தை வழி மொழிகிறேன் – டுபாக்கூர் ஆசாமிங்க என்று இன்றைய அரசியல்வ்யாதிகளையும் , நல்ல திட்டங்கள் போட தன்னை தயார் செய்து வரும் தலைவராக, ரஜினியையும் நீங்கள் கூறி இருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்கிறேன் உம் கற்பனை வாழ்க திரு என் கற்பனை அவர்களே..
அன்புடன்
ஈ ரா
“Popular Personனாலே Problemதான்”
இந்த ஆங்கில பழமொழிக்கு ரஜினியே முதல் உதாரணம். நான் அறிந்த தமிழ் சினிமா நடிகர்களிலே சிவகுமாரை அடுத்து பொது இடங்களில் தன்னை பற்றி எதுவும் மறைத்து பேசாதவர். அவர் தலை சொரிந்தால் கூட படம் எடுத்து வியாபாரம் செய்தவர்களே அதிகம், தற்போதைய சூழலில் எந்த பத்திரிகையும் அவரை பற்றி நல்ல செய்தியே போடாது. நடுநிலையான ஆனந்த விகடன் கூட இதற்கு விதி விலக்கு அல்ல. எல்லாம் வியாபார யுக்தி…
//Simple_Sundar said…
ரஜினியின் வெற்றிக்கான காரணமே, அவருக்கு அவரது எதிரிகள் கொடுக்கும் முக்கியத்துவம்தான்.//
சரியாக கூறினீர்கள். இவர்கள் ரஜினியை மட்டம் செய்ய செய்ய அவர் மேலே மேலே வளர்ந்து கொண்டு இருக்கிறார். பூனை கண்ணை மூடி கொண்டால் உலகம் இருண்டு விட்டதாக நினைத்து கொள்ளுமாம். அது மாதிரி நாலு பேரு சேர்ந்து திட்டிட்டு தங்களுக்குள்ள சந்தோஷ பட்டுக்குறாங்க
//செய்தியை போட்டு கல்லா கட்டவேண்டும் என்ற ஒரே நோக்கில் அழையா விருந்தாளிகளாக அங்கு சென்றார்கள்//
இதை தவிர வேற எந்த காரணமும் இல்லை.
//அப்படியும் சூப்பர் ஸ்டார் அவர்களை வரவேற்று உபசரித்தார்//
பகையாளியாக இருந்தாலும் பொது இடங்களில் மரியாதை கொடுக்க வேண்டும் என்பது ரஜினி எண்ணம். இவர்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் கீழ்த்தரமாக நடந்து கொள்கிறார்கள். இவர்கள் என்றும் மாறப்போவதில்லை.
கிரி…
எனக்கு தெரிஞ்ச ஒரு விஷயத்தை சொல்றேன். கேளுங்க…!
பாபா படம் சூட்டிங் நடந்து முடியும் தருவாயில் இருந்தபோது தமிழகத்தின் அனைத்து தினசரிகள், வார மாத இதழ்கள் பாபாவைப் பற்றியே எழுதித் தள்ளின. பல வாரங்கள் குமுதம், விகடன் குழும பத்திரிகைகளில் ரஜினியின் படத்தையே அட்டைப்படமாக போட்டன. அதே நேரத்தில் நம்ம புரட்சி கலைஞர் விஜயகாந்த் ரமணான்னு ஒரு படத்துல நடிச்சார். அதுக்காக ஒரு பிரஸ் மீட் ரெடி பண்ணினார். பிரஸ் மீட் என்று சொன்னதும் நான் உள்பட அனைத்து பத்திரிகை நிருபர்களும் அங்கு ஆஜர். அவர் பிரஸ் மீட் தொடங்கி குறைந்தது அரை மணி நேரத்துக்கும் மேலாக அனைத்து பத்திரிகைகளையும் திட்டித் தீர்த்தார். ரஜினி… ரஜினி.. ரஜினி..ன்னு எழுதுறீங்களே. அவர் மட்டும்தான் படம் நடிக்கிறாரா? அவரு படத்தை போஸ்டர்ல பெருசு பெருசா போட்டு ப்ரீ பப்ளிசிட்டி தேடி கொடுக்குறது எந்த விதத்துல நியாயம்னு காண்டா கேட்டார். அப்போ வார இதழின் நிருபர் ரொம்பவே கடுப்பாகி… சார்… உங்க படத்தை அட்டைப்படமா போட்டா எவனும் புக்கை வாங்க மாட்டேங்கிறான். ஆனா அவரு படத்தை போட்டா.. எங்களுக்கு நோ ரிட்டர்ன், என்றார். அதன் பிறகு விஜயகாந்த் கப் சிப் ஆகி, ரமணா படத்தின் சிறப்புகளை சொல்லத் தொடங்கினார்.
நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால்… ரஜினி என்பவர் ஒரு சரித்திர சாதனை மனிதர். அவர் பேசினாலும் செய்தி… பேசாமல் அமைதியாக இருந்தாலும் செய்தி. ஏன்… நீங்கள் சொல்வதுபோல மூச்சு விட்டால்கூட அது செய்தியாக்கப்படலாம். கல்லா கட்டுவது பற்றி பேசுவதற்கு யாருக்கும் தகுதி இல்லை. ரஜினியைப் பற்றி எழுதினால் அவர்களது புத்தகத்தின் சர்குலேசன் அதிகரிக்கும். இதுவும் ஒரு ட்ரிக்.
நான் பொதுவாக ஒன்று கேட்கிறேன்…!
பத்திரிகை போஸ்டரிலோ… அட்டையிலோ… கற்பழிப்பு, செக்ஸ் கொடுமை, செக்ஸ் டார்ச்சர் போன்ற வார்த்தைகள் இடம்பெற்றால் உங்களில் எத்தனைபேர் அந்த செய்தியை படிக்காமல் வேறு செய்திக்கு போவீர்கள். இதுபோன்ற செய்திகளுக்கு கூடத்தான் பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுக்கின்றன. அதேபோலதான் ரஜினி இஸ்யூவும். ரஜினியைப் பற்றி எப்படி, என்ன எழுதினாலும் பத்திரிகைகள் விற்கின்றன. ஏன்… இதனை விரும்பாத ரசிகப்பெருமக்கள் சம்பந்தப்பட்ட பத்திரிகைகளை புறக்கணித்து உங்கள் எதிர்ப்பை காட்டுங்கள் பார்க்கலாம். ரஜினியையும், ரசிகர்களையும் பற்றி தவறாக எழுதினால் விற்பனை சரிகிறது என்றால் எந்த பத்திரிகையில்தான் அப்படி எழுதுவார்கள்.
நீங்கள் தொட்டிலையும் ஆட்டி விட்டு பிள்ளையையும் கிள்ளி விடுவது போல என்று சொன்னீர்களே… அதுபோல… புத்தகத்தையும் வாங்கி படித்து விட்டு… அதற்கு எதிர்ப்பு என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம் கிரி?
முதல்வர் கருணாநிதி ஒருமுறை தினமலரைப் பற்றி விமர்சித்தார். அடுத்த நாளே திமுக தொண்டர்கள் தினமலர் பத்திரிகையை வாங்கி எரித்தார்கள். அதனை படம் பிடித்த தினமலர், திமுகவின் முட்டாள் தொண்டர்கள் தினமலரை வாங்கி எரித்ததன் மூலம் தினமலர் சர்குலேஷன் இன்று இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என்று செய்தி வெளியிட்டது.
//Vaanathin Keezhe… said…
கிரி…
இன்றைக்கு மீடியாவில் எந்த Ethics-ம் கிடையாது. எனவே அவர்கள் எதையுமே பொருட்படுத்துவதில்லை.//
அவர்கள் பணம் மற்றும் விற்பனையை மட்டுமே கருத்தில் கொள்கிறார்கள். இதில் தவறாக நினைக்க எதுவுமில்லை. ஆனால் தவறான செய்திகளை தவிர்க்கலாம் என்பது தான் என் கருத்து.
//வியாபாரத்துடன் சேர்ந்து தங்கள் மனதில் விகாரங்களையும் தலையில் கட்டப் பார்க்கும் இவர்களை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்க வேண்டும், இவர்களின் வாடிக்கையாளர்கள். //
தங்கள் கருத்துக்களை திணிக்க பார்க்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் பலரதரப்பட்ட மக்கள் எண்ணங்கள் கொண்ட மக்கள் இருப்பதால் புறக்கணிப்பு எனபது நடைமுறைக்கு சரியாக வராது.
வருகைக்கு நன்றி வினோ
//EE. RAA @ Rams said…
வணக்கம்…நல்ல பதிவு
வாழ்த்துக்கள்…//
நன்றி ஈ ரா
===================================================================
//Logan said…
“Popular Personனாலே Problemதான்”//
சரியா சொன்னீங்க லோகன்..
//நடுநிலையான ஆனந்த விகடன் கூட இதற்கு விதி விலக்கு அல்ல. எல்லாம் வியாபார யுக்தி//
விகடன் எல்லாம் நடுநிலை தவறி நீண்ட நாட்கள் ஆகி விட்டது.
===================================================================
// வால்பையன் said…
//
நட்பு பின்னூட்டத்திற்கு நன்றி வால்பையன்
)
கிரி கூல் டவுன் கூல் டவுன்….
ரஜினியைப் பத்தி தப்பா எழுதி அவர் புகழை மேலும் பரப்புராங்கன்னு நினைச்சுகங்க….
//சினிமா நிருபர் said…
கிரி…
எனக்கு தெரிஞ்ச ஒரு விஷயத்தை சொல்றேன். கேளுங்க…!//
முதல்ல உங்களோட நீண்ட விளக்க பின்னூட்டத்திற்கு நன்றி நிருபர்.
//ஏன்… இதனை விரும்பாத ரசிகப்பெருமக்கள் சம்பந்தப்பட்ட பத்திரிகைகளை புறக்கணித்து உங்கள் எதிர்ப்பை காட்டுங்கள் பார்க்கலாம்.ரஜினியையும், ரசிகர்களையும் பற்றி தவறாக எழுதினால் விற்பனை சரிகிறது என்றால் எந்த பத்திரிகையில்தான் அப்படி எழுதுவார்கள் //
நீங்கள் எந்த அர்த்தத்தில் கூறினீர்கள் என்று தெரியவில்லை. ரசிகர்கள் வாங்க மறுத்தால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்பது என் கருத்து. அப்படி என்றால் பாபா படமோ குசேலன் படமோ வெற்றிகரமாக ஓடி இருக்க வேண்டும். ரசிகர்களால் மட்டுமே ஒரு படம் ஓடி விட முடியாது, பொது மக்களும் பார்ப்பதால் மட்டுமே ஒரு படம் வெற்றி படம் ஆக முடியும், அதே காரணம் தான் பத்திரிக்கைகளுக்கும். பத்திரிகைகளை புறக்கணிப்பது என்பது நடைமுறைக்கு ஒத்து வராது என்பது என்கருத்து. அதற்காக அவர்கள் கண்டபடி எழுதும் போது நம் எதிர் கருத்தை எப்படி தெரிவிக்காமல் இருக்க முடியும்? சொன்னதில் விமர்சனம் செய்தால் பரவாயில்லை ஆனால் சொல்லாததை எல்லாம் சொன்னதாக இவர்களே ஒரு கற்பனை செய்தி போட்டால் எப்படி அவர்களை குறை கூறாமல் இருக்க முடியும்.
//புத்தகத்தையும் வாங்கி படித்து விட்டு… அதற்கு எதிர்ப்பு என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம் கிரி?//
புத்தகம் வாங்குவதால் மட்டுமே அதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடாதா! தவறான செய்தி காணும் போது, புத்தகம் வாங்குகிறாய் அதனால் எதுவும் சொல்ல கூடாது என்றால் எப்படிங்க நிருபர்.
//தினமலர் சர்குலேஷன் இன்று இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என்று செய்தி வெளியிட்டது//
ரஜினிக்கும் அதே தான்..அனைவரும் ரஜினியை விமர்சிக்க அவர் எதுவும் அவர்களை போல வார்த்தைகளை விடாமல் இருப்பதாலேயே அவரின் மதிப்பும் உயர்ந்து கொண்டே போகிறது. ரஜினியை பிடிக்காதவர்கள் வேண்டும் என்றால் இதை மறுக்கலாம் அல்லது கிண்டல் அடிக்கலாம், ஆனால் இது தான் உண்மை.
உங்களின் நீண்ட பகிர்விர்க்கும் விளக்கத்திற்கும் நன்றி. நீங்களும் நிருபர் என்பதால் இதை ஒரு நல்ல விமர்சனமாகவே எடுத்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
//ரசிகர்கள் வாங்க மறுத்தால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்பது என் கருத்து. அப்படி என்றால் பாபா படமோ குசேலன் படமோ வெற்றிகரமாக ஓடி இருக்க வேண்டும். ரசிகர்களால் மட்டுமே ஒரு படம் ஓடி விட முடியாது, பொது மக்களும் பார்ப்பதால் மட்டுமே ஒரு படம் வெற்றி படம் ஆக முடியும்.//
ரசிகர்கள் வாங்க மறுத்தால் பாதிப்பு இருக்காது என்று நீங்கள் சொல்வது தவறு கிரி. நீங்கள் யாரை பொதுமக்கள் என்று கருதுகிறீர்கள்? உதாரணத்துக்கு ஒரு விஷயம் கிரி..! சாதாரணமாக ஒரு பத்திரிகை 1 லட்சம் பிரதிகள் விற்கிறது என்று வைத்துக் கொள்வோம். ரஜினி படத்தையோ, ரஜினி பற்றிய செய்தியையோ எழுதினால் அதன் சர்குலேஷன் ஒன்றரை லட்சமாகவோ, 2 லட்சமாகவோ உயருவது உண்மை. நான் பத்திரிகையை புறக்கணிக்கச் சொல்வது ரஜினி படத்துக்காக, செய்திக்காக வாங்கும் அந்த 50 ஆயிரம், 1 லட்சம் ரசிகர்களைத்தான். இவர்கள் அதனை புறக்கணிக்கத் தொடங்கினாலே… அவர்கள் இனி இதபோல பரபரப்புக்கா செய்தி எழுத வேண்டாம். ரஜினி ரசிகர்கள் விளித்துக் கொண்டார்கள். ஏமாளிகள் அல்ல. சரியான செய்தியாக இருந்தால் மட்டுமே எழுதலாம் என்ற முடிவை எடுப்பார்கள் அல்லவா?
பொதுவாக வாசகர்களின் பல்ஸை பார்ப்பது சர்குலேஷனை வைத்துதான். எந்த செய்தி வெளியிட்டால் எவ்வளவு பிரதிகள் போகிறது என்று தினமும் கணக்கு போடுவது பத்திரிகைகளின் வழக்கம். அவ்வளவு ஏன்? நானும் சரி… நீங்களும் சரி… எந்த பதிவு போட்டால் எவ்வளவு பேர் பார்க்கிறார்கள், எத்தனை கமெண்ட் வருகிறது என்று கணக்கு போட்டு, நமது வலைப்பூவுக்கு வரும் வாசகர்கள் விரும்புவது போன்ற தகவல்களை தர முயற்சிப்பது இல்லையா? அதுபோலதான் பத்திரிகைகளின் சர்குலேஷன் கணக்கும். புரிந்திருக்கும் என கருதுகிறேன்.
படம் ஓடுவதையும், பத்திகை விற்பதையும் ஒப்பிட்டு இருக்கிறீர்கள். இந்த ஒப்பீட்டை நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஒரு சினிமா ஓடவில்லை என்றால் அந்த படம் சரியில்லை என்று அர்த்தம். நல்ல படமாக இருந்தால் நீங்கள் சொல்லும் பொதுமக்கள் தியேட்டருக்கு போய் ஒரு தடவைக்கு ரெண்டு தடவை பார்ப்பார்கள். ஆனால் நல்ல படம் இல்லை என்றால் அந்த படம் பிளாப் ஆகி விடும். அதேமாதிரி… நல்ல செய்திகள் எழுதினால் அந்த பத்திரிகை விற்பனை அதிகரிக்கும். நீங்கள் கூறுவதுபோல தரமில்லாத செய்திகளை எழுதினால் சர்குலேஷன் டவுன் ஆக ஆகியிருக்க வேண்டும் அல்லவா?. ஆனால் இங்கு சர்குலேஷன் எகிறுகிறதே..!
அதனால் ரசிகர்கள் நினைத்தால் சம்பந்தப்பட்ட பத்திரிகைகளுக்கு நல்ல பாடம் புகட்ட முடியும் என்பது என் கருத்து. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. ஆனால் ரசிகர்கள் ஒன்றுபடுவது எப்போது? முடிந்தால் இதனையே தலைப்பாக வைத்து ஒரு பதிவு போடுங்கள்.
//நான் ஆதவன் said…
கிரி கூல் டவுன் கூல் டவுன்….//
//ரஜினியைப் பத்தி தப்பா எழுதி அவர் புகழை மேலும் பரப்புராங்கன்னு நினைச்சுகங்க….//
புரிந்து கொள்ளுபவர்கள் புரிந்து கொள்வாங்க..படிப்பது தான் உண்மை என்று நம்பி பேசும் நபர்கள் தான் இவர்கள் இலக்கு. ரஜினி பேசியதில் பிடிக்காமல் விமர்சனம் செய்வது தவறில்லை, பிடிக்கவில்லை என்பதற்காக கண்டபடி பேசுவதை தான் சகிக்க முடியலை. கருத்து சுதந்திரம் என்று ஒவ்வொருவரும் போடும் ஆட்டம் ….முடியல
//புரிந்து கொள்ளுபவர்கள் புரிந்து கொள்வாங்க..படிப்பது தான் உண்மை என்று நம்பி பேசும் நபர்கள் தான் இவர்கள் இலக்கு. ரஜினி பேசியதில் பிடிக்காமல் விமர்சனம் செய்வது தவறில்லை, பிடிக்கவில்லை என்பதற்காக கண்டபடி பேசுவதை தான் சகிக்க முடியலை. கருத்து சுதந்திரம் என்று ஒவ்வொருவரும் போடும் ஆட்டம் ….முடியல
//
EE RAA
//சினிமா நிருபர் said…
ரசிகர்கள் வாங்க மறுத்தால் பாதிப்பு இருக்காது என்று நீங்கள் சொல்வது தவறு கிரி. //
ஒப்பு கொள்கிறேன் நிருபர். ஒரு பத்திரிகை சரி இல்லை என்றால் வாங்காமல் இருக்கலாம் உங்களுக்கே தெரியும் சமீப காலமாக பெரும்பாலான பத்திரிக்கைகள் சகட்டு மேனிக்கு பொய் பிரச்சாரம் செய்கிறது, ஏன் என்று எனக்கு புரியவில்லை. அப்புறம் எதாவது ஒரு பத்திரிகை வாங்கி தான் ஆக வேண்டும் என்ற நிலைமை வரும் போது இருப்பதில் சுமாரா!!! திட்டுறவங்களை வாங்கியாக வேண்டிய நிலைமை ..நடைமுறையில் இது தான் சாத்தியம்.. அனைவரும் வாங்காமல் இருப்பார்களா என்பது சந்தேகம்..இதனால் தான் இவர்கள் திரும்ப ரஜினியை புகழ்ந்து ஒரு கட்டுரை போட்டு மறுபடியும் இழுக்கிறார்கள், இவர்களும் முன்பு இருந்த கோபம் போய் வாங்க ஆரம்பித்து விடுவார்கள்.
//சரியான செய்தியாக இருந்தால் மட்டுமே எழுதலாம் என்ற முடிவை எடுப்பார்கள் அல்லவா?//
நீங்கள் கூறுவதை 100% வழிமொழிகிறேன் ஆனால் நடைமுறையில் சாத்தியம் இல்லை என்பதே என் கருத்து.
//நானும் சரி… நீங்களும் சரி… எந்த பதிவு போட்டால் எவ்வளவு பேர் பார்க்கிறார்கள், எத்தனை கமெண்ட் வருகிறது என்று கணக்கு போட்டு, நமது வலைப்பூவுக்கு வரும் வாசகர்கள் விரும்புவது போன்ற தகவல்களை தர முயற்சிப்பது இல்லையா?//
தருவோம் நிருபர். அப்படி வர வைப்பதற்காக நான் என்றுமே தரம் தாழ்ந்து என் பதிவுகளை எழுதுவதில்லை நீங்களும் கூட. ஆனால் நீங்கள் கூறுவது போல பத்திரிக்கைகள் அதை போல இருக்காது அவர்கள் எதற்கு ஆதரவு அதிகமோ அதை தான் அதிகம் போடுவார்கள் நேர்மை நியாயம் எல்லாம் பார்க்க மாட்டார்கள்.
//நல்ல செய்திகள் எழுதினால் அந்த பத்திரிகை விற்பனை அதிகரிக்கும். நீங்கள் கூறுவதுபோல தரமில்லாத செய்திகளை எழுதினால் சர்குலேஷன் டவுன் ஆக ஆகியிருக்க வேண்டும் அல்லவா?. ஆனால் இங்கு சர்குலேஷன் எகிறுகிறதே..!//
இதற்க்கு ஒரு நீண்ட விளக்கம் இருக்கிறது
நீங்கள் கூறுவது மறுக்க முடியாத உண்மை. ரஜினி பற்றிய செய்திகள் அது நல்லதாக இருந்தாலும் சரி கெட்டதாக இருந்தாலும் சரி விற்பனை அதிகம். கெட்டது என்றாலும் அதை தெரிந்து கொள்வதில் அனைவரும் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்..அப்படி என்ன தான் இருக்கு என்று. எனவே இதை தவிர்க்கவே முடியாது என்று தான் கருதுகிறேன்.
//ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. ஆனால் ரசிகர்கள் ஒன்றுபடுவது எப்போது? //
ரொம்ப கஷ்டமான கேள்வி
))
//முடிந்தால் இதனையே தலைப்பாக வைத்து ஒரு பதிவு போடுங்கள்.//
ஹா ஹா ஹா நிருபர் நீங்களும் நானும் ரஜினி பெயர் போடுவதால் சர்குலேஷன் அதிகரிப்பது பற்றி பேசி கொண்டு இருக்கிறோம் அல்லவா! இதை பார்த்து என்ன நினைப்பார்கள் அல்லது கிண்டலடிப்பார்கள் தெரியுமா? ஆமா என்னமோ ரஜினி பெயரை போட்டு தான் எல்லோரும் வாழற மாதிரி பேசிட்டு இருக்காங்கன்னு சொல்லுவாங்க ஹா ஹா ஹா. ரஜினி பற்றிய பதிவுகளை போடுவதாலேயே பலர் கடுப்புல இருக்காங்க இதுல ரசிகர்களை பற்றியும் போட்டால் முடிந்தது கதை ஹா ஹா ஹா ரஜினிக்கு பதிவுலகத்துல ஆதரவு மிக குறைவு நிருபர் உங்களுக்கு தெரியாததல்ல, ரஜினிய திட்டுறதுன்னா லைன் கட்டி நிப்பாங்க
))எத்தனை எதிர்ப்பு இருந்தாலும் ரஜினி தான் மாஸ் என்பதை எவராலும் மறுக்கவே முடியாது.
//TEXAS said…
நல்லா எழுதுறீங்க..//
நன்றி டெக்சாஸ்
//சூடான இடுகையை தொட்டு பார்க்கலாமா சார்?//
உங்கள் முதல் வருகைக்கு நன்றி டெக்சாஸ்
என் இந்த கொலை வெறி? நானும் கொஞ்ச நாட்களுக்கு முன்பு ரஜினியின் ரசிகன் தான். இப்போது இல்லை. ஒரு நடிகர் என்ற முறையில் ரஜினியை எனக்கு பிடித்திருக்கிறது அவ்வளவு தான்.
அப்புறம் விரல் நீட்டி குற்றம் சொல்லும் முன்பு நான்கு விரல்களும் உங்களை நோக்கியே இருக்கும்னு சொன்னீங்க… சரி அப்படியே இருக்கட்டும்.
ரஜினிகாந்தின் முழு பேட்டியையும் நீங்கள் சன் தொலைக்காட்சியின் வாயிலாக பார்த்துவிட்டுத்தான் இந்த பதிவை எழுதியிருக்கிறீர்களா என்று தெரியவில்லை.
தெளிவான எந்த ஒரு முடிவையும் எடுக்கும் நிலையில் திரு.ரஜினிகாந்த் இல்லை. நீங்கள் குழப்பவாதியா என்ற ரசிகரின் கேள்விக்கு அவரால் தெளிவான விளக்கத்தை கொடுக்கமுடியவில்லை. ஊடகங்களில் சொல்லப்படும் கருத்துக்களை பிரதிபலிக்கும் வகையிலேயே ரஜினியின் வார்த்தைகள் அமைந்தன.
நீங்கள் சினிமா நிருபருக்கு அளித்த பதிலில் இப்படி சொல்லியிருக்கிறீர்கள்…
“அனைவரும் ரஜினியை விமர்சிக்க அவர் எதுவும் அவர்களை போல வார்த்தைகளை விடாமல் இருப்பதாலேயே அவரின் மதிப்பும் உயர்ந்து கொண்டே போகிறது.”
நான் ஒரு வார்த்தை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். ரஜினி ஒரு நல்ல நடிகர்… ஆனால் சுயமாக… திடமாக… முடிவெடுக்கவோ, செயல்படுத்தவோ முடியாத ஒரு மனிதர் அவ்வளது தான். இவரால் ஒரு அரசியல்கட்சி அல்லது இயக்கம் ஆகியவற்றை நிர்வகிக்க முடியாது.
அப்புறம் ஒரு விஷயம் இதை நான் இணையத்தில் வெளியிடலாம் என்று தான் நினைத்தேன் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் ” சமீபத்தில் திரையுலக உண்ணாவிரத பேச்சு கூட வைரமுத்து எழுதிக்கொடுத்த வார்த்தை தொகுப்பு என்கிறார்கள். இது உண்மையா என்று தெரிவில்லை.
ரஜினி இது போன்று ஒரு நல்ல உதவியாளர் மூலம் தனது கருத்தை பதிவு செய்யலாம். நேரடியான பேச்சுக்கு அர்த்தங்கள் பல உருவாக்கப்படும் என்பது உண்மை.
//tamil cinema said…
வாங்க தமிழ் சினிமா எப்படி இருக்கீங்க? நீண்ட நாட்களுக்கு பிறகு வந்து இருக்கீங்க.
//நானும் கொஞ்ச நாட்களுக்கு முன்பு ரஜினியின் ரசிகன் தான். இப்போது இல்லை//
எல்லோரும் தொடர்ந்து ரஜினி ரசிகனாக தான் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லையே, உங்கள் விருப்பம் உங்கள் சுதந்திரம்.
//தெளிவான எந்த ஒரு முடிவையும் எடுக்கும் நிலையில் திரு.ரஜினிகாந்த் இல்லை//
அவரும் மற்றவர்களை போல சாதாரணமானவர் தான், அவர் செய்யும் பல விஷயங்கள் பூத கண்ணாடி வைத்து பார்க்கபடுகிறது. அதனாலேயே அவர் செய்யும் எதுவும் விவாதிக்கப்படுகிறது. தற்போது கூட கீதையை பற்றி கூறியதாக.. இதே இதை வேறு ஒருவர் கூறி இருந்தால் இந்த பிரச்சனையே வந்து இருக்காது. எவரும் கண்டு கொள்ளமாட்டார்கள், ஆனால் ரஜினி எது செய்தாலும் கூறினாலும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஊடகங்கள் தேவை இல்லாமல் முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தாலே அவரும் மற்றவர்களை போல சாதாரணமாகவே தெரிவார். இதை போல நீங்கள் கேட்கும் கேள்வியே வராது.
//இவரால் ஒரு அரசியல்கட்சி அல்லது இயக்கம் ஆகியவற்றை நிர்வகிக்க முடியாது//
என்பது உங்கள் கருத்து….பார்ப்போம். ரஜினி சினிமாக்கு வந்த போது கூட இவரெல்லாம் நடிக்க வந்து விட்டாரா என்று கிண்டல் செய்தார்கள்.
//சமீபத்தில் திரையுலக உண்ணாவிரத பேச்சு கூட வைரமுத்து எழுதிக்கொடுத்த வார்த்தை தொகுப்பு என்கிறார்கள். இது உண்மையா என்று தெரிவில்லை.//
நீங்களே உண்மையா என்று தெரியவில்லை என்று கூறி விட்டீர்கள். பல விஷயங்கள் இப்படி தான் கிளம்புகின்றன. இன்னும் கொஞ்ச நாள் போனா ரஜினிக்கு லீகல் அட்வைசர் வைரமுத்து னு சொல்லுவாங்க. சொல்றவனுக்கு என்னங்க சொல்லிட்டு போய்டுவாங்க, அதனால் பாதிக்கபடுவர்கள் நிலைமையை நினைத்து பாருங்க.
//ரஜினி இது போன்று ஒரு நல்ல உதவியாளர் மூலம் தனது கருத்தை பதிவு செய்யலாம்//
உங்களுக்கு தெரியாததல்ல, ரஜினி பேசினாலும் பிரச்சனை பேசா விட்டாலும் பிரச்சனை. இதையும் செய்து விட்டால் எப்படி எல்லாம் பேசுவார்கள் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை.
உங்கள் நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி.
கிரி…பொங்கி எழுந்திட்டீங்க… உங்கள் பதிவும் அருமை….நண்பர்கள் பின்னூட்டங்களும் அருமை…அதற்கு நீங்கள் அளிக்கும் பதில்களும் அருமை. மொத்தத்தில் ரொம்ப ஆரோக்கியமானதாக இருக்கு.
இது தான் உண்மையான சர வெடி.
சும்மா வெளு வெளுன்னு வெளுத்துடீங்க
அனைத்தும் அருமை
இதற்கு எல்லாம் முக்கிய காரணம் ஒரு நடிகனை நடிகனாக மட்டும் பார்க்காமல் அவர்கள் நடிக்கும் பாத்திரமாகவே அவர்களும் இருப்பார்கள் என்று, என்னும் அளவுக்கு முக்கிய துவம் தரும் நம்ம ஊரு பொய் பேப்பருக்கு முக்கிய பங்கு இருக்கு .
ஒரு காலத்தில் குடிக்கும் கும்மாளத்திற்கும் பெயர் போன ஒரு மனிதர் இன்று எப்படி இப்படி வளர்ந்தார் .அதற்கு முக்கிய பங்கு இருந்த பத்திரிக்கைகாரர்கள் தான் .அவனுக்கு தொழில் நடக்க வேண்டும் என்பதற்காக பன்றி குட்டிக்கு பிள்ளை பொறந்தது என்பார்கள் இன்று அதையே அடுத்த நாள் ஒரு பிள்ளையின் அம்மா ஒரு பன்றி குட்டி என்பார்கள் இந்த பன்னாடை பத்திரிகை நண்பர்கள்
…
இப்படி வளர்ந்தது தான் இந்த மனிதரின் பேரும் புகழும் .. இந்த விளையாட்டில் வெல்வது என்னமோ இந்த மனிதரும் , அவரை பற்றி எழுதி பிழைப்பு நடத்தும் பத்திரிக்கைகளும் தான் . எது மாற வேண்டும் என்றால் ஒரு நடிகனை நடிகனாக மட்டும் பாருங்கள் நண்பர்களே
ஏன் இந்தக் கொலைவெறி கிரி?
ஆனா…மீடியாவைச் சொன்னது மெத்தச்சரி.
எல்லா வாரப்பத்திரிக்கைகளும் ஒரே குப்பைன்னுதான் வலைப்பக்கம் ஒதுங்கறோம்!
//paarvai said…
உங்கள் பதிவும் அருமை….நண்பர்கள் பின்னூட்டங்களும் அருமை…அதற்கு நீங்கள் அளிக்கும் பதில்களும் அருமை. மொத்தத்தில் ரொம்ப ஆரோக்கியமானதாக இருக்கு//
நன்றி பார்வை. நான் ரஜினி ரசிகன் தான் என்றாலும் எதையும் கண் மூடி தனமாக ஆதரிக்க மாட்டேன். என் மனதிற்கு சரி என்று படுவதை கூறுகிறேன்.
===================================================================
//நசரேயன் said…
இது தான் உண்மையான சர வெடி.
சும்மா வெளு வெளுன்னு வெளுத்துடீங்க
அனைத்தும் அருமை//
நன்றி நசரேயன். உண்மைய சொன்னா நான் இன்னும் அதிகம் எழுதி இருந்தேன், ஒரு சில காரணங்களுக்காக எடிட் செய்து விட்டேன், அப்படி எழுதியே இந்த அளவுக்கு வந்து விட்டது
))
உங்கள் முதல் வருகைக்கு நன்றி
// பிரபாகர் சாமியப்பன் said…
ஒரு காலத்தில் குடிக்கும் கும்மாளத்திற்கும் பெயர் போன ஒரு மனிதர் இன்று எப்படி இப்படி வளர்ந்தார்//
பிரபாகர் ஒருவர் நீங்கள் சொல்வது படி ஒரு சமயத்தில் இருந்தால் அதற்காக அவர் தன் வாழ்நாள் முழுவதும் அப்படியே இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. ஒருவர் அதை போல இருக்கிறார் என்றால் மக்கள் அனைவரும் அவரை விரும்ப மாட்டார்கள். அவர் வெளிப்படையாக இருக்கிறார் மற்றவர்கள் அவ்வாறு இருப்பதில்லை. அவருடைய சமீபத்திய பேட்டியில் கூட வெளிப்படையாக பேசினார். குடும்பத்தை கவனியுங்கள் என்று தான் கூறினார். ரஜினி படத்தில் இருக்கும் கதாபாத்திரம் செய்யும் செயல்களினாலே மட்டும் அனைவரையும் கவர்ந்து விடவில்லை, அவருடைய பொது வாழ்க்கையையும் அவர் நடந்து கொள்வதையும் வைத்துமே இந்த அளவிற்கு மக்களிடையே உயர்ந்து இருக்கிறார்.
பெரும்பாலான நடிகர்கள் நல்லவர்களாகவும் அநீதியை எதிர்ப்பவர்களாகவும் தான் திரைப்படத்தில் நடிக்கிறார்கள் அப்படி பார்த்தால் இவர்கள் அனைவரும் அல்லவா மக்களை கவர்ந்து இருக்க வேண்டும்.
//எது மாற வேண்டும் என்றால் ஒரு நடிகனை நடிகனாக மட்டும் பாருங்கள் நண்பர்களே//
ஒரு சிலர் அவ்வாறு செய்கிறார்கள் என்பதற்காக அனைவரும் அப்படி என்று எண்ண வேண்டாம். எனக்கு ரஜினியை பிடிக்கும் அதற்காக கட் அவுட்டிற்கு பால் ஊத்துவேன், தலைவா! என்று கொடி பிடித்து போவேன் என்று எண்ண வேண்டாம். ரஜினியை பிடிக்காமல் ஒரு சிலர் எப்படி பதிவு போடுகிறார்களோ அதை போல எனக்கு பிடித்ததால் பதிவிடுகிறேன் சொல்ல போனால் அவர்களை விட நாகரீகமாக. ரஜினியை நடிகனாக பார்க்கும், நீங்கள் கூறுவது போல இருப்பவர்கள் அவரை தரக்குறைவாக பேசுவதை நிறுத்தினால் நானும் இதை போல பதிவுகள் போட வேண்டிய அவசியம் இருக்காது. எனக்கும் இந்த மாதிரி பதிவிட வேண்டும் என்று எந்த ஒரு ஆசையும் இல்லை.
உங்கள் முதல் வருகைக்கு நன்றி
//துளசி கோபால் said…
ஏன் இந்தக் கொலைவெறி கிரி?//
//எல்லா வாரப்பத்திரிக்கைகளும் ஒரே குப்பைன்னுதான் வலைப்பக்கம் ஒதுங்கறோம்!//
மேடம் உங்களுக்கு தெரியாததல்ல மிக மிக மூத்த பதிவர் நீங்க, எத்தனையோ பதிவுகளை எழுதி இருக்கீங்க பார்த்து இருக்கீங்க, பல பதிவர்கள் பற்றி நீங்கள் வெளிப்படையாக எதுவும் கூற வில்லை என்றாலும் மனதினுள் அவர்களை பற்றி பல கருத்துக்கள் வைத்து இருப்பீங்க.
நீங்கள் கூறுவது போல அனைத்து பத்திரிகைகளும் குப்பை என்று ஒதுங்க கூடிய அளவிலா நம்ம பதிவுலகம் இருக்கு! அவர்களுக்கு சற்றும் குறையாமல் பதிவு அரசியல், புறக்கணிக்கப்படுதல், தங்கள் கருத்துக்களை குழுக்களாக மற்றவர்கள் மீது திணித்தல் என்று பலர் இருக்கிறார்கள்.முன்பு எப்படி இருந்தது என்று எனக்கு தெரியாது. நான் புதியவன்.
ரஜினி ஒன்றும் விமர்சிக்கப்படக்கூடாதவர் என்று நான் கூறவில்லை, பதிவில் கண்ணியம் காட்டுங்கள் என்று தான் நினைக்கிறேன். அவர் பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக அவர் எது சொன்னாலும் எது செய்தாலும் வரிந்து கட்டி கொண்டு வந்து அதிபுத்திசாலிகளாக பேசினால் கோபம் தான் வருகிறது. சில சமயம் அது இதை போல பதிவுகளாக வருகிறது. மற்றபடி இதை போல பதிவுகள் எழுத வேண்டும் என்று துளி கூட ஆசை இல்லை. எனக்கு இதை போன்ற செயல்களில் விருப்பமும் இல்லை. இத்தனைக்கும் அதிக பட்சம் ரஜினி குறித்து என்னுடைய 160 பதிவில் 5 பதிவுகள் எழுதி இருந்தாலே அதிகம். அதற்கே என்னை ரஜினி ரசிகர் மன்ற தலைவர் ரேஞ்சுக்கு பேசுகிறார்கள்
)
உங்கள் வருகைக்கு நன்றி மேடம்.
Giri!
You just have to be careful in choosing an article you read. There are only two kinds of people in the world.
* One kind is that,
Think and judge like you. You can even live with their criticisms as those will look sensible.
* The other kind is
just trouble-makers! Closed-minded,ill-minded morons! They will get on in your nerve when they open their mouth.
You should TRY to consider the former ones and completely ignore the latter ones!
Do I follow what I preach here? Not that well. But I try
BTW,I am a BIG rajni fan! Keep that as a secret please! LOL
கிரி, ரஜினி அந்த உண்ணாவிரத கூட்டத்தில் பேசியதைப் கேட்டவுடன்/பார்த்தவுடன் சிலர் வழக்கம் போல கேள்விகள் கேட்க ஆரம்பித்து விட்டனர். என்ன செய்ய? அவர் பேசினாலும் தவறு, பெசவிட்டளும் தவறு. நானும் இதை பற்றி ஒரு பதிவு எழுதி வைத்து உள்ளேன். ஆனால் வேலைப்பளு காரணமாக பதிவு செய்ய முடியவில்லை. நீங்கள் cheythu விட்டீர்கள். நீங்கள் சொன்னது போல ஒரு பத்திரிக்கையை முழுவதுமாக புறக்கணிப்பது என்பது நடைமுறையில் நடக்கத்த செயல். அதனால் தான் என்னவோ இப்பத்திரைகள் தங்கள் விருப்பம் போல நடந்துக் கொள்கிறார்களோ என்னவோ. அதுவும் அந்த குமுதம் கார்டூன் தேவையே இல்லாதது. ரஜினி ரசிகர்களை சந்திக்காவிட்டால் ரஜினி ரசிகர்களை ஏமாற்றுகிறார் என்று ஒரு கார்டூன் போட வேண்டியது. சந்தித்து விட்டால் அதற்கும் ஒரு கார்டூன் போட வேண்டியது. தாங்களை இவங்க பண்ணுற ரவுசு.
//நடக்காத சந்திப்பை கவர் ஸ்டோரி, கவர் இல்லாத ஸ்டோரி, சூப்பர் ஸ்டோரி னு போட்டு காசு பார்க்க வேண்டியது (இந்த சந்திப்பையும் எப்படியும் இரண்டு வாரத்திற்காவது ஓட்டுவீங்க) அப்புறம் நீங்களே இந்த மாதிரி கார்ட்டூன் போட்டு நக்கல் அடிக்க வேண்டியது.//
கிரி ,இந்த வியாபாரிகள் பணத்திற்காக அதாவது சர்குலேடின் க்காக என்னா வேண்டுமானாலும் செய்வார்கள் . கூல்!!
hats off
Dear Giri,
Ungal thagavaluku mika nanri……..
Thodaratum ungal sevai………..
கிரி செருப்பால அடிச்சா மாதிரி கேட்டு இருக்கீங்க, ஆனாலும் இந்த கேடு கெட்ட ஜென்மங்களுக்கு உரைக்காது…
உங்களோட இந்த பதிவுக்கு எழுதிய பின்னோட்டம், ரொம்ப பெரிசாவும் கொஞ்சம் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியதாலும் உங்களுக்கு சங்கடம் தரவேண்டாமுனு என்னோட புது வலைப்பதிவுல ஒரு பதிவா போட்டுட்டேன்.
http://mudhalezhuthu.blogspot.com/2008/11/blog-post_07.html இங்க வந்து பார்த்துட்டு உங்க கருத்தை சொல்லுங்க…
- சக்தி
அவருக்கு போட்ட அதே பின்னூட்டம் இங்கேயும்…
நோ கமெண்ட்ஸ்…
//அகில் said…
You should TRY to consider the former ones and completely ignore the latter ones//
என் மனதிற்கு சரி என்று படுவதை தான் தற்போது செய்து கொண்டு இருக்கிறேன், வரம்பு மீறாமல்.
உங்கள் வருகைக்கு நன்றி அகில்
===================================================================
//மோகன் said…
கிரி, ரஜினி அந்த உண்ணாவிரத கூட்டத்தில் பேசியதைப் கேட்டவுடன்/பார்த்தவுடன் சிலர் வழக்கம் போல கேள்விகள் கேட்க ஆரம்பித்து விட்டனர்//
எதுவும் கூறாமல் இருந்தால் தான் ஆச்சர்யம்
//ரஜினி ரசிகர்களை சந்திக்காவிட்டால் ரஜினி ரசிகர்களை ஏமாற்றுகிறார் என்று ஒரு கார்டூன் போட வேண்டியது. சந்தித்து விட்டால் அதற்கும் ஒரு கார்டூன் போட வேண்டியது. //
//அருப்புக்கோட்டை பாஸ்கர் said…
கிரி ,இந்த வியாபாரிகள் பணத்திற்காக அதாவது சர்குலேடின் க்காக என்னா வேண்டுமானாலும் செய்வார்கள் . கூல்!!//
அது நீங்கள் நான் உட்பட அனைவருக்கும் தெரியும், சில சமயம் இவர்கள் செய்வது ரொம்ப ஓவராக போவதால் இந்த மாதிரி ஆகி விடுகிறது.
===================================================================
//Karthik said…
hats off//
நன்றி கார்த்திக் உங்கள் முதல் வருகைக்கும் சேர்த்து
===================================================================
//raja the boss said…
Dear Giri,
Ungal thagavaluku mika nanri……..
Thodaratum ungal sevai………..//
வருகைக்கு நன்றி ராஜா
//Basaki said…
//உங்களோட இந்த பதிவுக்கு எழுதிய பின்னோட்டம், ரொம்ப பெரிசாவும் கொஞ்சம் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியதாலும் உங்களுக்கு சங்கடம் தரவேண்டாமுனு என்னோட புது வலைப்பதிவுல ஒரு பதிவா போட்டுட்டேன்//
நன்றி சக்தி
இங்க வந்து பார்த்துட்டு உங்க கருத்தை சொல்லுங்க…//
உங்கள் பதிவில் பின்னூட்டம் இட்டுள்ளேன். உங்கள் முதல் வருகைக்கு நன்றி
===================================================================
//VIKNESHWARAN said…
அவருக்கு போட்ட அதே பின்னூட்டம் இங்கேயும்…
நோ கமெண்ட்ஸ்…
வாங்க விக்னேஸ்வரன். உண்மையில் அந்த பதிவிற்கும் என் பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, சொல்ல போனால் அவர் பதிவிடும் முன்பே நான் பதிவிட்டு விட்டேன். இரண்டும் ஒரே சமயத்தில் வந்ததால் co Incidence ஆகி விட்டது. தவறாக நினைக்க வேண்டாம், நான் பொதுவாக தான் கூறினேன், யாரையும் குறிப்பிட்டு கூறவில்லை. தனிமனித தாக்குதலில் எனக்கு உடன்பாடு இல்லை.
//உங்கள் முதல் வருகைக்கு நன்றி //
முதல் வருகைல்லாம் இல்லைங்க, நான் தான் சக்தி. ஒருவேளை ‘கிரி அவர்களே’-னு சொன்னா நியாபகம் வருமா
//Basaki said…
//
முதல் வருகைல்லாம் இல்லைங்க, நான் தான் சக்தி. ஒருவேளை ‘கிரி அவர்களே’-னு சொன்னா நியாபகம் வருமா
சக்தி என்ன பேரை மாத்திட்டீங்க ! அப்பவே நினைத்தேன் என்னடா இது உங்க கமெண்ட் எதையும் காணோமே என்று..சரி உங்களுக்கு பதிலா வேற சக்தி வந்துட்டாரு போலன்னு நினைத்துட்டேன்
//சக்தி என்ன பேரை மாத்திட்டீங்க!//
பேரு மாத்தினா யோகம் கன்னா பின்னானு அடிக்கும்னு (குறிப்பு: யோகம் என்னோட மனைவியில்லை, எனக்கு இன்னும் கல்யாணமும் ஆகலை), ஞோதிட சிகாமணி இடம்புரி இசக்கிராசா சொன்னாரு, அதான்… ஹி ஹீ…
{அது என்னங்க நான் மட்டும் காமடியா எழுதலாம்னு நினைச்சா அது மொக்கையாவே போய் முடியுது}
//சரி உங்களுக்கு பதிலா வேற சக்தி வந்துட்டாரு போலன்னு நினைத்துட்டேன்
//
அப்படியெல்லாம் விட்ருவோமா
Giri your comment is wery deasent and nice-fact