கடந்த முறை இந்தியா சென்று வந்த போதே இதை கூற வேண்டும் என்று இருந்தேன் மறந்து விட்டேன். கடந்த முறை சிங்கப்பூர் ல் இருந்து கோவை க்கு விமானத்தில் சென்ற போது என்னுடைய இமிக்ரேசன் மற்றும் பரிசோதனைகள் முடிந்து வெளியே வந்து என்னுடைய பெட்டிகளை எடுத்துக்கொண்டு வெளியே வரும் போது அங்கே இருந்த விமான நிலைய ஊழியர் என்னுடைய பெட்டிகளை என்னுடைய பயண சீட்டுடன் கொடுக்கப்படும் பெட்டிகளின் எண்ணிக்கை மற்றும் அடையாள சீட்டை சரி பார்த்து பின்னரே வெளியே செல்ல அனுமதித்தார்.
சென்னை சிங்கப்பூர் விமான நிலையத்தில் கூட இதை போல நான் பார்க்கவில்லை. கோவையிலும் நான் இதற்க்கு முந்தய முறை வந்த போது சரி பார்க்கவில்லை. இந்த முறை தான் இதை போல சோதனையை பார்த்தேன்.
சரி விசயத்துக்கு வருகிறேன், பொதுவாக இவ்வாறு பெட்டிகளை வெளியே செல்லும் போது யாரும் பரிசோதிப்பதில்லை, யார் வேண்டும் என்றாலும் பெட்டியை மாற்றி எடுத்து செல்லலாம், அவ்வாறு தொலைந்தால் அதற்க்கு ஓரளவு இழப்பீடு பெறலாம் ஆனால் அதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இதை ஏன் கோவை விமான நிலையம் போல (தற்போதும் தொடர்கிறார்களா என்று தெரியவில்லை) அனைவரும் பின்பற்ற கூடாது? நான் ஒவ்வொரு முறையும் வெளியே வரும் போதும் நம் பெட்டி சரியாக இருக்குமா என்று ஒரு யோசனையோடு தான் வருவேன்.
சென்னை மற்றும் மற்ற விமான நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகம் அதனால் இதை போல செயல்படுத்துவது நடைமுறையில் சாத்தியம் இல்லையா?
எத்தனையோ வெட்டி செலவுகள் செய்கிறார்கள் இதற்க்கு ஊழியர்களை அமர்த்தி செய்ய முடியாதா?
இல்லை நான் தவறாக புரிந்து கொண்டு உள்ளேனா?
பெட்டி வரும் முன்பே உள்ளேயே பொருட்களை திருடி விடுகிறார்களே அதற்க்கு என்ன செய்வது என்றெலாம் கேட்கப்படாது
அது தனி விஷயம்.
No related posts.



{ 22 comments… read them below or add one }
மீ த பர்ஸ்ட்டு
மிக நல்ல யோசனை…
இனி மேல் கோவை வழியாக வந்துவிடுங்களென்.
லக்கேஜ் பயமிருக்காது…எனக்கு சென்னை ஏர்போர்டில் இரண்டில் 1பெட்டி மட்டுமே வந்தது…அதற்க்குள் அடுத்த பிளைட் வந்து அந்த லக்கேஜ்கள் வர ஆரம்பித்துவிட்டன.
நான் வெலவெலத்துவிட்டேன்….வேண்டாத தெய்வம் இல்லை…. பிறகு 2 மணி நேரம் கழித்து வந்தது…
நல்ல ஐடியா!!! எனக்கும், நம்ம லக்கேஜ்ஜ வேற யாராவது தூக்கிட்டு போயிடுவாங்களோன்ற பயம் ரொம்ப நாளா உண்டு….
கிரி, திருச்சி விமான நிலையத்துலயும், வெளியில் வரும் போது ஒரு ஊழியர் சரிபார்த்துதான் அனுப்புகின்றார். இதை சென்னையிலும் செய்யலாம்.
சென்னையில் நாம் விமானத்தில் ஏற செல்லும் போது நமது கடவு சீட்டு, பயணச்சீட்டு போன்றவற்றை சோதித்துவிட்டுத்தானே நம்மை உள்ளே விடுகின்றார்கள் , அது போல் வெளியே வரும் போது உடைமைகளை சோதித்து அனுப்புவது நல்லது.
கிரி,
நமக்கு இன்னும் இந்த சங்கதி எல்லாம் தெரியலிங்க…
ஒரு பதிவு போட்டுள்ளேன்… வந்து கோபி, சிங்கப்பூர் ஸ்பெஷல் உணவு, உணவகங்கள் பற்றி கூறுங்கள்…
//கூடுதுறை said…
மிக நல்ல யோசனை…
இனி மேல் கோவை வழியாக வந்துவிடுங்களென்.//
கோவை வழியாக தான் பெரும்பாலும் வருவேன், நண்பர்களை பார்க்க வேண்டும் என்றால் சென்னை வந்து வருவேன். சில நேரங்களில் கோவைக்கு பயண கட்டணம் அதிகமாக இருக்கும் அதனாலும் சென்னை வந்து பின் ரயிலில் வருவேன்.
//வெலவெலத்துவிட்டேன்….வேண்டாத தெய்வம் இல்லை…. பிறகு 2 மணி நேரம் கழித்து வந்தது…//
உண்மை தாங்க கூடுதுறை, எனக்கு வயிற்றை கலக்கிடும் கொஞ்ச நேரம் தாமதமானால்..எவனாவது எடுத்துட்டு போய்ட்டானானு பீதி ஆகிடும்.
உங்கள் வருகைக்கு நன்றி
//விஜய் ஆனந்த் said…
நல்ல ஐடியா!!! எனக்கும், நம்ம லக்கேஜ்ஜ வேற யாராவது தூக்கிட்டு போயிடுவாங்களோன்ற பயம் ரொம்ப நாளா உண்டு….//
விஜய் ஆனந்த் நான் தான் அப்படினா ..எனக்கு துணைக்கு நிறைய பேர் இருக்கீங்க ஹி ஹி
இதற்க்கு யாராவது நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்
என்னென்னவோ பேசிட்டிருக்கிங்க. ஒண்ணும் வெளங்கல. முன்ன பின்ன போனாத்தான தெரியும்.
//ஜோசப் பால்ராஜ் said…
கிரி, திருச்சி விமான நிலையத்துலயும், வெளியில் வரும் போது ஒரு ஊழியர் சரிபார்த்துதான் அனுப்புகின்றார். இதை சென்னையிலும் செய்யலாம். //
சென்னையில் தான் இதை முக்கியமாக செய்ய வேண்டும் ஏன் என்றால், நம்ம ஊர் பக்கம் கூட்டம் குறைவாக இருப்பதால் இதை போல திருட நினைப்பவர்கள் மிக குறைவு.
//வெளியே வரும் போது உடைமைகளை சோதித்து அனுப்புவது நல்லது.//
இவ்வாறு செய்வது பலருக்கு நிம்மதி கொடுக்கும். இல்லை என்றால் ஒரு பயத்துடனே வர வேண்டி உள்ளது..அதுவும் சில சமயம் இமிக்ரேசன் ல் தாமதமாகி விட்டால் (ஒரே சமயத்தில் பல விமான பயணிகள் வருவதால்) பெரும் பிரச்சனை.
உங்கள் வருகைக்கு நன்றி ஜோசப் பால்ராஜ்.
//சரவணகுமரன் said…
கிரி,
நமக்கு இன்னும் இந்த சங்கதி எல்லாம் தெரியலிங்க…//
நானும் தப்பி தவறி தெரிந்து கொள்ள வேண்டியதாக போய் விட்டது.
//ஒரு பதிவு போட்டுள்ளேன்… வந்து கோபி, சிங்கப்பூர் ஸ்பெஷல் உணவு, உணவகங்கள் பற்றி கூறுங்கள்…//
அப்படியா! வந்துடுறோம்
பெட்டிகள் மாறினாலோ தொலைந்தாலோ படபடப்பும் பதைபதைப்பும். போன மாதம் என் தங்கை இங்கிருந்து US திரும்பிச் சென்ற போது ஒரு பெட்டி இப்படித் தொலைந்து 3 நாட்கள் கழித்துக் கிடைத்தது.
//வெயிலான் said…
என்னென்னவோ பேசிட்டிருக்கிங்க. ஒண்ணும் வெளங்கல. முன்ன பின்ன போனாத்தான தெரியும்//
அப்பாடா! வெயிலான் ஒரு வழியா வந்துட்டாரு …:-)
அட! ஏங்க நீங்க வேற இது ஒரு விசயமே இல்லைங்க ..நானும் இப்படி தான் சொல்லிட்டு இருந்தேன் என்னடா எல்லோரும் போறானுகளே நம்மை எங்கேயும் அனுப்பவில்லையே என்று..சரி பார்த்தேன் நானே என் நண்பனுடன் சென்னை to பெங்களூர் ஒரு வாட்டி போயிட்டு வந்தேன்..ஹி ஹி ஹி
என் முதல் விமான பயணம் என்று ஒரு பதிவு எழுதி இருப்பேன் படித்து பாருங்க செம காமெடியா இருக்கும் ஹா ஹா ஹா ஹா
//ராமலக்ஷ்மி said…
பெட்டிகள் மாறினாலோ தொலைந்தாலோ படபடப்பும் பதைபதைப்பும்//
அது ரொம்ப கொடுமைங்க ஒவ்வொரு முறையும் பயத்துடனே வெளியே வருவேன்.
//போன மாதம் என் தங்கை இங்கிருந்து US திரும்பிச் சென்ற போது ஒரு பெட்டி இப்படித் தொலைந்து 3 நாட்கள் கழித்துக் கிடைத்தது.//
பெட்டி கிடைத்ததே ..சரி அதன் உள்ளே உங்கள் பொருட்கள் இருந்தனவா
) சரியான திருட்டு பசங்க உள்ளே இருக்கும் ஆட்கள்.
கிரி வணக்கம்!
நான் இந்த தவறுகளை தடுப்பதற்காக எனது பெட்டிகளை ஆந்திர (கொல்டி) வண்ணமான 1. ரோஸ் 2. கிளி பச்சை, 3. ஊதா, 4.கண்ணை கூசும் மஞ்சள் போன்ற கலர் பெட்டி வைத்துள்ளேன் இது மற்றவர்களிடம் இருந்து மாறுபடுவதல்
பிறர் எடுக்க வழி இல்லை. மேலும் திருட நினைப்பவர்களும் பெட்டி கலரை பார்த்து கதி கலங்கி போவர்கள்.
புதுவை சிவா.
//பெட்டி கிடைத்ததே ..சரி அதன் உள்ளே உங்கள் பொருட்கள் இருந்தனவா
) //
இங்கிருந்து போகையில் என பொருட்கள் எப்படி இருக்கும்:))?
பார்த்து பார்த்து ஷாப்பிங் பண்ணி அவள் சேர்த்த பொருட்கள்தான்:)!
//Puduvai Siva
said…
கிரி வணக்கம்!
நான் இந்த தவறுகளை தடுப்பதற்காக எனது பெட்டிகளை ஆந்திர (கொல்டி) வண்ணமான 1. ரோஸ் 2. கிளி பச்சை, 3. ஊதா, 4.கண்ணை கூசும் மஞ்சள் போன்ற கலர் பெட்டி வைத்துள்ளேன் இது மற்றவர்களிடம் இருந்து மாறுபடுவதல்
பிறர் எடுக்க வழி இல்லை.//
இது நல்ல யோசனை தான் ..நானும் பெட்டி வித்யாசமாக தெரிய ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்ததுண்டு ஆனால் கிளம்பும் அவசரத்தில் மறந்து விடுவேன்.
//மேலும் திருட நினைப்பவர்களும் பெட்டி கலரை பார்த்து கதி கலங்கி போவர்கள்.//
ஹா ஹா ஹா ஹா டாப்பு….. ஆனால் இதற்கும் அசரமா எடுத்துட்டு போகிற கில்லாடிகளும் இருக்க தான் செய்கிறார்கள்.
உங்கள் வருகைக்கு நன்றி சிவா
//ராமலக்ஷ்மி said…
இங்கிருந்து போகையில் என பொருட்கள் எப்படி இருக்கும்:))?
பார்த்து பார்த்து ஷாப்பிங் பண்ணி அவள் சேர்த்த பொருட்கள்தான்:)!//
ராமலக்ஷ்மி, சரியான திருட்டு பசங்க ஒன்றையும் விடமாட்டாங்க போகும் போதும் லக்கேஜ் ஏற்றுகிற போது திருடி விடுவார்கள். உங்கள் பொருட்களாக கூறவில்லை பொதுவாக கூறினேன்.
கிரி சிலமுறை சென்னையில் இவ்வாறு சரி பார்ப்பதை நான் கவனித்து இருக்கிறேன்.
என் மாமனார் அவரும் சிங்கையில் தான் இருக்காரு. அவருடைய பெட்டி ஓரு முறை இப்படித் தொலைந்து போய் கிடைக்கவே இல்லை.
கிரி,
கோவையில் அடிக்கடி சோதனை செய்வதில்லை. எப்பொழுதாவதுதான் செய்கிறார்கள்.
ஒருமுறை மும்பையில் இரவு 12 மணிக்கு, ஒரு சர்தர்ஜியுடன் வாகுவாதமாகிவிட்ட்து. இருவர் பெட்டியும் அரிஸ்டொகிராட், கருப்பு வண்ணம். மொழிப்பிரச்சினை வேறு, அவருக்குப் புரியவைத்த பின் கடைசியாகக் கேட்டார் பாருங்கள் இன்றும் நினைத்துச் சிரிப்பேன். “ ஏன் என் பெட்டி போலவே நீயும் வைத்திருக்கிறாய் அதனால்தான் இவ்வளவு குழப்பம்.”
//புதுகை.எம்.எம்.அப்துல்லா said…
கிரி சிலமுறை சென்னையில் இவ்வாறு சரி பார்ப்பதை நான் கவனித்து இருக்கிறேன்.//
அப்படியா! தொடர்ந்தால் நன்றாக இருக்கும்.
//என் மாமனார் அவரும் சிங்கையில் தான் இருக்காரு. அவருடைய பெட்டி ஓரு முறை இப்படித் தொலைந்து போய் கிடைக்கவே இல்லை//
சிங்கையிலா? சென்னையிலா? இழப்பீடு பெற்றாரா?
=====================================================================
//வடகரை வேலன் said…
கிரி,
கோவையில் அடிக்கடி சோதனை செய்வதில்லை. எப்பொழுதாவதுதான் செய்கிறார்கள்.//
ம்ம் அதனாலேயே இப்போது தொடர்கிறார்களா என்று தெரியவில்லை என்று குறிப்பிட்டு இருந்தேன். நம்ம ஆளுங்க தான் திடீர்னு ஏதாவது செய்வாங்க அப்புறம் அதை அதை பற்றி கண்டுக்கவே மாட்டாங்க.
// ஏன் என் பெட்டி போலவே நீயும் வைத்திருக்கிறாய் அதனால்தான் இவ்வளவு குழப்பம்.”//
நல்ல வேளை நீ ஏன் பெட்டி கொண்டு வந்தாய் என்று கேட்காமல் விட்டாரே ஹா ஹா ஹா
ஹய்யோ கிரி, இதெல்லாம் ஒன்னுமே இல்ல. என் ராசிப்படி ஒவ்வொரு முறையும் எனது ”பொட்டி” படுக்கை ஒன்று வேறு நாட்டுக்கு போய்விடும் (அ) வேறு ஆள் எடுத்து போய்விடுவார்கள். இது இந்தியாவில் மட்டும் இல்லை. ஸ்பெயின்/ இங்கிலாந்திலும் கூடத்தான்.
//Vijay said…
என் ராசிப்படி ஒவ்வொரு முறையும் எனது ”பொட்டி” படுக்கை ஒன்று வேறு நாட்டுக்கு போய்விடும் (அ) வேறு ஆள் எடுத்து போய்விடுவார்கள். இது இந்தியாவில் மட்டும் இல்லை. ஸ்பெயின்/ இங்கிலாந்திலும் கூடத்தான்.//
நல்லா கிளப்புறாங்கய்யா பீதிய! சரி வேற இடத்துக்கு போனது இருக்கட்டும் மறுபடியும் பெட்டி திரும்ப கிடைத்ததா இல்லையா!
ஒவ்வொரு முறையும் ஒரு பெட்டி போனா அடுத்த முறை சங்கு தான் எடுத்துட்டு போகணும்…வரும் போது இருந்தா ஊதிட்டு வருவதற்கு
)))))))))