உலகம் அழிந்து கொண்டு வருகிறது

by கிரி on August 8, 2008

உலகம் முழுவதும் சுற்றுப்புற சீர்கேட்டால் வெப்பத்தின் அளவு அதிகரித்து கொண்டு வருகிறது. இதனால் பருவ நிலை மாற்றங்கள் ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு பஞ்சம் பனி உருகுதல் கடல் நீரின் அளவு மிக வேகமாக அதிகரித்தல், பல புதிய நோய்கள், என்று அனைவரையும் பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது.

வெப்பமே பார்த்திராத நாடுகள் கூட தற்போது வெப்பத்தை பார்த்து பயந்து போய் உள்ளன. மின்சிறி என்ற ஒன்றை பயன்படுத்தி இருக்காத நாடுகள் எல்லாம் அதை பயன்படுத்த வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டன.

இந்நிலைக்கு காரணம் காடுகள் அழிப்பு, எந்த காலத்திலும் மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு, தொழிற்சாலைகள் வெளியிடும் சுத்திகரிக்காத கழிவுகள், குண்டு பல்புகள், இவை தவிர பல காரணங்கள், இவை நம் அன்றாட வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டவை.

நம்மால் முடிந்த அளவு இதற்க்கு துணை போகாமல் இருக்கலாம், முக்கியமாக பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைக்கலாம், குண்டு பல்பு அதிக வெப்பத்தை உண்டு பண்ணுகிறது அதை பயன்படுத்துவதை தவிர்க்கலாம், தங்களது வீடுகளில் முடிந்தவர்கள் மரம் வளர்க்கலாம், மின்சார பயன்பாடு இல்லாத போது அதை எரிய விட்டு கொண்டு இருப்பதை நிறுத்தலாம். இவை எல்லாம் நம்மால் முடிய கூடிய எளிதான உதவிகளே.

இன்று இரவு (8-8-08) 8 மணிக்கு இதை மக்களிடைய இதன் தாக்கத்தை உணர செய்ய ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த எக்ஸ்னோரா அமைப்பு அனைவரையும் 8 நிமிடம் அனைத்து மின்சார விளக்குகளையும் அனைத்து இதற்க்கு உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. (இதை பயன்படுத்தி எவனும் திருடிட்டு போகாம இருந்தா சரி)

நம் தமிழக அரசு பாதி நேரம் மின்சாரமே தருவதில்லை, இவர்கள் உலக மக்கள் மீது ரொம்ப அன்பு வைத்து ரொம்ப தீவிரமா கடை பிடிக்கறாங்க போல, சரி அதை விடுங்க. அது தான் அவர்களே பாதி நேரம் மின்சாரத்தை நிறுத்தி விடுகிறார்களே நாம் 8 நிமிடம் நிறுத்தி புதுசா என்ன செய்ய போகிறோம் என்று கேட்க வேண்டாம், இதனால் நாம் பெரிய உதவி செய்துவிட போவதில்லை, இது முக்கியமாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவே இவ்வாறு செய்ய சொல்கிறார்கள், மற்றபடி வேறு எந்த விசயமும் இல்லை. எனென்றால் பாதி பேருக்கு வருஷா வருஷம் வெய்யில் அதிகமாகிட்டே வருகிறதே அப்படிங்கற அளவுல தான் தெரியும் ஆனால் அது எதனால் அதிகம் ஆகிறது என்று தெரியாது. அதனால் விதண்டா வாதம் பேசாமல் உலக சுற்றுப்புற சூழலில் பங்கெடுத்து கொள்ளுங்கள்.

நேற்று பல பதிவர்களின் பதிவுகளில் சென்று இது பற்றி பின்னூட்டம் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்த கோவை விஜய்க்கு என் வாழ்த்துக்கள்.

sea உலகம் அழிந்து கொண்டு வருகிறது
shark உலகம் அழிந்து கொண்டு வருகிறது

newyork உலகம் அழிந்து கொண்டு வருகிறது
pollution உலகம் அழிந்து கொண்டு வருகிறது
proof உலகம் அழிந்து கொண்டு வருகிறது
protect உலகம் அழிந்து கொண்டு வருகிறது
risks உலகம் அழிந்து கொண்டு வருகிறது

global உலகம் அழிந்து கொண்டு வருகிறது
global warming உலகம் அழிந்து கொண்டு வருகிறது
global warming உலகம் அழிந்து கொண்டு வருகிறது

No related posts.

{ 52 comments… read them below or add one }

விஜய் ஆனந்த் August 8, 2008 at 9:07 AM

மீ த பஷ்ட்ட்டூ!!!

Reply

விஜய் ஆனந்த் August 8, 2008 at 9:10 AM

நமக்கடுத்த சந்ததிகள் எப்படி திட்டப்போறாங்கன்னு நெனச்சா, ரொம்ப கேவலமா இருக்கு…global warming பத்தின self-responsibility ஒவ்வொரு தனி மனுஷனுக்கும் வரணும்…ஹ்ம்ம்ம்ம்…

Reply

கூடுதுறை August 8, 2008 at 9:19 AM

தற்போது உலகத்திற்கு மிகவும் தேவையான பதிவு….

படங்கள் சூப்பர்…

சிங்கையில் இன்று இரவு 8மணிக்கு விளக்குகளை அணைப்பார்களா?

Reply

கிரி August 8, 2008 at 9:26 AM

//விஜய் ஆனந்த் said…
நமக்கடுத்த சந்ததிகள் எப்படி திட்டப்போறாங்கன்னு நெனச்சா, ரொம்ப கேவலமா இருக்கு…global warming பத்தின self-responsibility ஒவ்வொரு தனி மனுஷனுக்கும் வரணும்…ஹ்ம்ம்ம்ம்…//

உண்மை தான் விஜய் ஆனந்த். உங்கள் வருகைக்கு நன்றி.

Reply

கிரி August 8, 2008 at 9:27 AM

//கூடுதுறை said…
சிங்கையில் இன்று இரவு 8மணிக்கு விளக்குகளை அணைப்பார்களா?//

இது தமிழ் நாட்டில் உள்ள எக்ஸ்னோரா அமைப்பு கூறியது அங்கே மட்டுமே பொருந்தும்.

உங்கள் வருகைக்கு நன்றி.

Reply

Sam August 8, 2008 at 9:35 AM

கிரி , உங்களது சேவையை பாராட்டுகிறேன் ! ரஜினி ரசிகனாகவே பார்க்கப்பட்ட தங்களிடமிருந்து இந்த பதிவை எதிர்பார்க்கவில்லை … “சைக்கிள் கேப்பில் சத்யராஜ் லாரி ஓட்டுனா தப்பா?” என்ற ஜே.பி யின் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புது பதிவு போடுவீர்கள் என நினைத்தேன் :)

Reply

கிரி August 8, 2008 at 9:49 AM

//Sambath said…
கிரி , உங்களது சேவையை பாராட்டுகிறேன்//

நான் ஒண்ணுமே இல்லைங்க நீங்க பாராட்டுறதுன்னா விஜய் அவர்களை தான் பாராட்ட வேண்டும். நான் இது போல ஒரு பதிவு தான் போட்டு இருக்கேன், அவர் ஏகப்பட்ட பதிவுகள் போட்டு இருக்காரு.

//ரஜினி ரசிகனாகவே பார்க்கப்பட்ட தங்களிடமிருந்து இந்த பதிவை எதிர்பார்க்கவில்லை //

அய்யயோ என்னங்க இப்படி சொல்லிட்டீங்க..ரஜினி ரசிகனா இருந்தா இந்த மாதிரி பதிவு போடக்கூடாதா? நல்ல பதிவு நிறைய எழுதி இருக்கேங்க..இது சும்மா குசேலன் சீசன் :-) )))

//ஜே.பி யின் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புது பதிவு போடுவீர்கள் என நினைத்தேன் :) //

எனக்கு சத்யாரஜை தாங்க பிடிக்கல ஜோசப் பால்ராஜை அல்ல. அவர் எனக்கு நல்ல நண்பர் தான். நான் சத்யராஜ் மாதிரி ஏதாவது பேசனும்னு பேசுற ஆளு இல்ல ஹி ஹி ஹி ஹி நாட்டுல எத்தனையோ பிரச்சனை இருக்கு நான் அந்த ஒரு பதிவு போட்டதே அதிகம் :-)

சரி …பல சண்டைய எதிர்ப்பார்க்கறீங்க போல ஹா ஹா ஹா

Reply

பிரேம்ஜி August 8, 2008 at 9:56 AM

மிக அருமையான பதிவு.

Reply

ஜோசப் பால்ராஜ் August 8, 2008 at 10:07 AM

கிரி, நான் எழுத நினைச்சத நீங்க எழுதிட்டீங்க. வாழ்த்துக்கள்.

இது குறித்து இன்னும் சில தகவல்களை திரட்டிக்கொண்டு இருக்கிறேன். கட்டாயம் அதை விரைவில் வெளியிடுவேன்.

உலக வெப்பமயத்தால் கடல்நீர் மட்டம் உயர்ந்தால் சிங்கையும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயமுள்ளது. இங்கும் நாம் எக்ஸ்னோரா சொன்னதை கடைபிடிக்கலாம். நான் செய்யலாம் என முடிவெடுத்துள்ளேன்.

Reply

ஜோசப் பால்ராஜ் August 8, 2008 at 10:11 AM

//எனக்கு சத்யாரஜை தாங்க பிடிக்கல ஜோசப் பால்ராஜை அல்ல. அவர் எனக்கு நல்ல நண்பர் தான்.//

கருத்து மோதல்களுக்கும், நம் நட்ப்புக்கும் எந்த தொடர்புமில்லை என்பதை தெளிவுற பிறருக்கு அறிவித்துள்ளீர்கள். என் நிலைப்பாடும் அதுதான்.

உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும் அதை நீங்கள் வெளிப்படுத்தும் உங்கள் உரிமைக்கு ஏதாவது பங்கம் வந்தால் உங்களுக்காக போராடும் முதல் நபர் நானகத்தான் இருக்கும்.

Reply

கிரி August 8, 2008 at 10:11 AM

//பிரேம்ஜி said…
மிக அருமையான பதிவு.//

நன்றி பிரேம்ஜி.

Reply

ராமலக்ஷ்மி August 8, 2008 at 10:12 AM

//அது தான் அவர்களே பாதி நேரம் மின்சாரத்தை நிறுத்தி விடுகிறார்களே நாம் 8 நிமிடம் நிறுத்தி புதுசா என்ன செய்ய போகிறோம் என்று கேட்க வேண்டாம், இதனால் நாம் பெரிய உதவி செய்துவிட போவதில்லை, இது முக்கியமாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவே இவ்வாறு செய்ய சொல்கிறார்கள், மற்றபடி வேறு எந்த விசயமும் இல்லை.//

சில பேர் கேட்பாங்கதான், சரியா மக்கள் மனதை நாடி பிடித்துப் பார்த்தாற்போல சொல்லி பதிலும் கொடுத்திருப்பது அருமை. ஒரு நாள் இப்படிச் செய்கையில் தானாகவே தேவையில்லாத இடங்களில் மின்சாரத்தை நிறுத்தத் தோன்றும்.

//குண்டு பல்பு அதிக வெப்பத்தை உண்டு பண்ணுகிறது அதை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்//

நான் எல்லா லைட் ஃபிட்டிங்குகளிலும் குண்டுகளை எடுத்து விட்டு சிஃப்ல் போட்டு பல காலமாச்சு.

நல்ல விழிப்புணர்வு பதிவு படங்களுடன். கோவை விஜயின் பெருமுயற்சியும் பாராட்டத் தக்கது. எனது பதிவிலும் வந்து சொல்லியிருந்தார். உங்கள் இருவருக்கும் எனது பாராட்டுக்கள்.

ஸோ, நண்பர்களே எல்லோரும் இன்றிரவு எட்டு மணிக்கு…எட்டு நிமிடங்கள்…ஞாபகம் இருக்கிறதில்லையா?

Reply

கிரி August 8, 2008 at 10:14 AM

//ஜோசப் பால்ராஜ் said…
கிரி, நான் எழுத நினைச்சத நீங்க எழுதிட்டீங்க. வாழ்த்துக்கள். //

சூட்டோட சூடா எழுதிடுங்க :-) ))))))))))))))))

//உலக வெப்பமயத்தால் கடல்நீர் மட்டம் உயர்ந்தால் சிங்கையும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயமுள்ளது//

உண்மை தான்

//இங்கும் நாம் எக்ஸ்னோரா சொன்னதை கடைபிடிக்கலாம். நான் செய்யலாம் என முடிவெடுத்துள்ளேன்//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய் எல்லோரும் ஒத்துழைங்கப்பா …

உங்கள் வருகைக்கு நன்றி.

Reply

ஜீவன் August 8, 2008 at 10:33 AM

பதிவு நன்று..
இப்படி உலக வெப்பமயமாதல், சினிமா, நகைச்சுவை என சகல தலைப்புகளிலும் போட்டுத் தாக்கும் உங்களுக்கு பொருத்தமான பட்டம் தர என் உள்ளம் துடிக்கிறது.

Reply

கிரி August 8, 2008 at 10:44 AM

//ஜோசப் பால்ராஜ் said…
கருத்து மோதல்களுக்கும், நம் நட்ப்புக்கும் எந்த தொடர்புமில்லை என்பதை தெளிவுற பிறருக்கு அறிவித்துள்ளீர்கள்//

அதற்க்கு வாய்ப்பு ஏற்படுத்து கொடுத்த சம்பத் அவர்களுக்கு என் நன்றி.

//உங்கள் உரிமைக்கு ஏதாவது பங்கம் வந்தால் உங்களுக்காக போராடும் முதல் நபர் நானகத்தான் இருக்கும்.//

அய்யயோ அதெல்லாம் ஒண்ணும் இல்லைங்க ஜாலியா இருங்க லெஸ் டென்ஷன் மோர் கமெண்ட் ஹி ஹி ஹி ஹி நான் எதையும் சீரியஸ் ஆக எடுத்துக்க மாட்டேன்.. மனசு சுத்தமாக இருந்தா யாரை பற்றியும் கவலை பட தேவை இல்லைங்க,

Reply

கிரி August 8, 2008 at 10:46 AM

//ராமலக்ஷ்மி said…
சில பேர் கேட்பாங்கதான், சரியா மக்கள் மனதை நாடி பிடித்துப் பார்த்தாற்போல சொல்லி பதிலும் கொடுத்திருப்பது அருமை.//

நம்ம மக்களை பற்றி தெரியுங்க அதனால தான்..என்ன சொன்ன என்ன கேள்வி கேட்பாங்கன்னு தெரியும்..இல்லேன்னா இவங்க கூட எல்லாம் சளைக்காம சண்ட போட முடியுமா ஹா ஹா ஹா

//ஒரு நாள் இப்படிச் செய்கையில் தானாகவே தேவையில்லாத இடங்களில் மின்சாரத்தை நிறுத்தத் தோன்றும்//

சரியா சொன்னீங்க

//நான் எல்லா லைட் ஃபிட்டிங்குகளிலும் குண்டுகளை எடுத்து விட்டு சிஃப்ல் போட்டு பல காலமாச்சு//

வாழ்த்துக்கள்.

//உங்கள் இருவருக்கும் எனது பாராட்டுக்கள்//

நன்றி ராமலக்ஷ்மி உங்கள் தொடர் வருகைக்கும் உற்ச்சாகப்படுத்தும் பின்னூட்டங்களுக்கும்.

Reply

கிரி August 8, 2008 at 10:49 AM

//ஜீவன் said…
பதிவு நன்று..//

நன்றி ஜீவன்.

//இப்படி உலக வெப்பமயமாதல், சினிமா, நகைச்சுவை என சகல தலைப்புகளிலும் போட்டுத் தாக்கும் உங்களுக்கு பொருத்தமான பட்டம் தர என் உள்ளம் துடிக்கிறது//

அய்யயோ இப்படி கூறி பீதிய கிளப்புறீங்களே..

நான் எந்த ஒரு வட்டத்திலும் சிக்க விரும்ப வில்லை(ரஜினி ரசிகன் என்பதை தவிர) கலந்து கட்டி அடுப்பது தான் எனக்கு பிடிக்கும். அதே போல அனைத்து விசயங்களிலும் பதிவு எழுத வேண்டும் என்பதே என் விருப்பமும்.

சரி நீங்க எங்க இருக்கீங்க.. பதிவர் சந்திப்புக்குக்கு வராமையே எல்லோருக்கும் ஹல்வா கொடுத்துட்டீங்க :-) )) உங்களை எல்லோரும் எதிர்ப்பார்த்தோம்.

Reply

Vidhya August 8, 2008 at 11:49 AM

அருமையான படங்கள், நல்ல பதிவு, இன்று அனைவரும் இதை கடைபிடித்தால் நன்றாக இருக்கும்… மிகவும் முக்கியமான விவாதம்… முடிந்தால் “Inconvenient Truth” என்ற படத்தை பாருங்கள்… மிக தெளிவாக “Global Warming” பற்றி விளக்கும் படம்… அனேகமாக “HBO” வில் அடிக்கடி போடுகிறார்கள்…

அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம், அதற்கு ஏற்ற போல் நம்மால் என்ன செய்ய முடியும் என்று நிருபிக்க வேண்டிய விஷயம்…

Reply

அறிவகம் August 8, 2008 at 12:33 PM

மகிழ்ச்சியாக இருக்கிறது. சினிமா பொழுதுபோக்கை தாண்டி வலைபதிவுமூலம் சமுதாய விழிப்புணர்வையும் பொருப்புணர்ச்சியையும் ஏற்படுத்து முடியும் என்ற தங்களை போன்றவர்களின் முயற்சிக்கு எனது மனமார்ந்த பாரட்டுக்களும் நன்றிகளும். பொழுதுபோக்கோடு பொருப்புணர்ச்சியையும் உலகுக்கு கற்றுக்கொடுக்கும் தலையாய பணி நம்மீது உள்ளது. தொடர்ந்து பணியாற்றுவோம். இந்த உயரிய பணியில் பின்னூட்டமாக இணையும் ஒவ்வொருவருக்கும் HANDS OF SALUTE.

Reply

கிரி August 8, 2008 at 2:00 PM

// Vidhya said…
அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம், அதற்கு ஏற்ற போல் நம்மால் என்ன செய்ய முடியும் என்று நிருபிக்க வேண்டிய விஷயம்…//

முயன்றால் முடியாதது இல்லை. அதற்க்கு அனைவரின் ஒத்துழைப்பு தேவை.

Reply

கிரி August 8, 2008 at 2:03 PM

//அறிவகம் said…
தங்களை போன்றவர்களின் முயற்சிக்கு எனது மனமார்ந்த பாரட்டுக்களும் நன்றிகளும்//

நன்றி அறிவகம் அதை பாராட்டி ஊக்குவிக்கும் உங்களுக்கும் என் பாராட்டுக்கள்.

//பொழுதுபோக்கோடு பொருப்புணர்ச்சியையும் உலகுக்கு கற்றுக்கொடுக்கும் தலையாய பணி நம்மீது உள்ளது//

கண்டிப்பாக அதில் எந்த சந்தேகமும் இல்லை. வலைப்பதிவு எனபது பொழுது போக்கு மட்டுமே அல்ல.

//இந்த உயரிய பணியில் பின்னூட்டமாக இணையும் ஒவ்வொருவருக்கும் HANDS OF SALUTE//

உங்கள் முதல் வருகைக்கு நன்றி அறிவகம்.

Reply

Ganeshkanth August 8, 2008 at 3:16 PM

உணமையிலேயே சிந்திக்க வேண்டிய விஷயம் தான் கிரி. ஒவ்வொருவரும் உலக அல்வவுல சிந்திக்கரத விட அவங்கவங்க வீடலவிலும் சுற்றுப்புற அளவிலும் யோசிச்சு செயல் பட்டாலே போதும். உலகம் ஆபத்திலிருந்து பிழைத்த விடும்

Reply

இளவேனில் August 8, 2008 at 3:27 PM

கிரி என்னோட சிறு தொண்டாக நான் நூறு பேருக்கு பார்வர்ட் பண்ணிட்டேன்

Reply

கிரி August 8, 2008 at 4:37 PM

//Ganeshkanth said…
உணமையிலேயே சிந்திக்க வேண்டிய விஷயம் தான் கிரி. ஒவ்வொருவரும் உலக அல்வவுல சிந்திக்கரத விட அவங்கவங்க வீடலவிலும் சுற்றுப்புற அளவிலும் யோசிச்சு செயல் பட்டாலே போதும். உலகம் ஆபத்திலிருந்து பிழைத்த விடும்//

வாடா! நல்லவனே. ரொம்ப நாள் கழித்து வந்து ஒரு பின்னூட்டம் போட்டு இருக்கே..எழுதியது மூன்று வரி இதுல முப்பது தப்பு..உன்னை எல்லாம்..

இதை படித்தே டென்ஷன் ஆகி உடம்பு சூடாகி விடும் போல இருக்கு.

Reply

கிரி August 8, 2008 at 4:39 PM

//இளவேனில் said…
கிரி என்னோட சிறு தொண்டாக நான் நூறு பேருக்கு பார்வர்ட் பண்ணிட்டேன்//

நன்றி சக்தி.

Reply

புதுகை.அப்துல்லா August 8, 2008 at 5:41 PM

கிரி அண்ணே நான் ஆஜர் after a short gap.

//
கருத்து மோதல்களுக்கும், நம் நட்ப்புக்கும் எந்த தொடர்புமில்லை என்பதை தெளிவுற பிறருக்கு அறிவித்துள்ளீர்கள். என் நிலைப்பாடும் அதுதான்.
//
ஜோசப் அன்ணே1 நாம ரெண்டு பேரும் மிக நெருங்கிய நண்பர்கள் ஆனது நம் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தீவிர கருத்து மோதலின் போதுதான்.ஞாபகம் இருக்கா?
//

உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும் அதை நீங்கள் வெளிப்படுத்தும் உங்கள் உரிமைக்கு ஏதாவது பங்கம் வந்தால் உங்களுக்காக போராடும் முதல் நபர் நானகத்தான் இருக்கும். //

அது!!!!!

Reply

King... August 8, 2008 at 5:48 PM

எப்படி இருக்கிறீர்கள் கிரி…

Reply

King... August 8, 2008 at 5:49 PM

பதிவும் படங்களும் நல்லாருக்கு …

Reply

கிரி August 8, 2008 at 6:31 PM

//புதுகை.எம்.எம்.அப்துல்லா said…
கிரி அண்ணே நான் ஆஜர் after a short gap.//

அப்துல்லா வந்துட்டீங்களா! நல்லா இருக்கீங்களா! :-)

உங்களின் அன்பான பின்னூட்டத்திற்கு நன்றி. தொலைபேசியில் அழைக்கிறேன் :-)

Reply

கிரி August 8, 2008 at 6:37 PM

//King… said…
எப்படி இருக்கிறீர்கள் கிரி//

கிங் எப்படி இருக்கீங்க நான் நலமாக இருக்கிறேன். ஹி ஹி பதிவுகளை பார்த்தாலே தெரியும்.

என்னங்க ரொம்ப நாளா ஆளையே காணோம். இல்ல நான் கவனிக்கலையா :-(

//பதிவும் படங்களும் நல்லாருக்கு …//

நன்றி கிங். நேரம் கிடைக்கும் போது அப்பப்ப எட்டி பாருங்க.

Reply

கோவை விஜய் August 8, 2008 at 7:10 PM

//நேற்று பல பதிவர்களின் பதிவுகளில் சென்று இது பற்றி பின்னூட்டம் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்த கோவை விஜய்க்கு என் வாழ்த்துக்கள்.//

கிரி அண்ணாவுக்கு நெஞ்சுநிறை நன்றிகள்…புகைப்பேழைக்கு சுட்டி கொடுத்த அன்புக்கு நெஞ்சுநிறை நன்றிகள்..

கோவை விஜய்
http://www.pugaippezhai.blogspot.com

Reply

நல்லதந்தி August 8, 2008 at 8:03 PM

கிரி வாழ்த்துக்கள்,உங்களுக்கும் உங்களுடன் சேர்த்து தம்பி கோவை விஜயிற்க்கும்.நம்ம ஏரியாக் காரபசங்க நொம்ப விஷயக்காரனுங்கதான். :)

அட என்னால ஏன் இப்படியெல்லாம் எழுத முடியறதில்லே!.ம்ஹூம்…அறிவு கொஞ்சமாவது வேணுமே! :)

Reply

கிரி August 8, 2008 at 8:53 PM

விஜய் உங்கள் வருகைக்கு நன்றி

———————————–

நல்லதந்தி உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி.

Reply

தமிழ் பொறுக்கி August 8, 2008 at 11:50 PM

வெள்ளமே சூழ்ந்தாலும் மாடியில மடியில படுத்து கடலை போடும் படத்தில் அந்த இருவருக்கும் பதில் நம்ம ஆளுகள போட்டா இன்னும் சூப்பரா பதிவு வரும்னு நினைக்கிறேன்..

Reply

பரிசல்காரன் August 9, 2008 at 5:53 AM

கிரி..

//அது தான் அவர்களே பாதி நேரம் மின்சாரத்தை நிறுத்தி விடுகிறார்களே நாம் 8 நிமிடம் நிறுத்தி புதுசா என்ன செய்ய போகிறோம் என்று கேட்க வேண்டாம்,//

கிரேட்யா.. எப்படி இப்படி?

நேத்து ஒரு மொபைல் ஷாப்ல நின்னுட்டிருந்தப்ப ரெண்டு தெல்லவாரிங்க இந்தமாதிரியேதான் பேசிட்டிருந்தாங்க! வழக்கம்போல மூக்கை நுழைச்சு அவனுங்களுக்கு வெளக்கினேன். “டேய், போலீஸ் 24 மணிநேரம் ரோந்து சுத்தினாலும், வீட்டைப் பூட்டிட்டுதானே படுக்கற? அதான் போலீஸ் இருக்குல்லன்னு தொறந்து போட்டுட்டு படுக்கறியா? அரசாங்கத்தை ஏன் நீ பாக்கற? உன்னால என்னத்த ***க முடியுமோ, ***கு” ன்னுட்டு வந்தேன். (இவ்ளோ கோவமா இல்ல.. பக்க்குவமா…)

எப்படி கணித்திருக்கிறீர்கள்!

அப்புறம்,

நட்பு பற்றிய உங்கள் புரிந்துணர்வுக்கு என் வாழ்த்துக்கள்!

Reply

கிரி August 9, 2008 at 9:26 AM

//தமிழ் பொறுக்கி said…
அந்த இருவருக்கும் பதில் நம்ம ஆளுகள போட்டா இன்னும் சூப்பரா பதிவு வரும்னு நினைக்கிறேன்//

உங்கள் முதல் வருகைக்கு நன்றி தமிழ் **

Reply

கிரி August 9, 2008 at 9:34 AM

//பரிசல்காரன் said…
நேத்து ஒரு மொபைல் ஷாப்ல நின்னுட்டிருந்தப்ப ரெண்டு தெல்லவாரிங்க இந்தமாதிரியேதான் பேசிட்டிருந்தாங்க!//

ஹா ஹா ஹா இந்த மாதிரி பேச்சை கேட்டு எவ்வளோ நாள் ஆகிறது.

//வழக்கம்போல மூக்கை நுழைச்சு அவனுங்களுக்கு வெளக்கினேன்//

என்ன விளக்கினாலும் நம்மை தான் கேனையன்னு சொல்லுவானுக :-)

//இவ்ளோ கோவமா இல்ல.. பக்க்குவமா…//

ஹா ஹா ஹா

//எப்படி கணித்திருக்கிறீர்கள்!//

பலரிடம் சண்டை போட்ட அனுபவம் தான் :-) ))))))))))

//நட்பு பற்றிய உங்கள் புரிந்துணர்வுக்கு என் வாழ்த்துக்கள்//

நன்றி கே கே. இது இல்லை என்றால் உலகில் அனைவரும் எதிரியாகவே தெரிவார்கள். நண்பர்களே கிடைக்க மாட்டார்கள்.

Reply

தமிழன்-கறுப்பி... August 10, 2008 at 7:27 PM

வாழ்த்துக்கள்…

Reply

தமிழன்-கறுப்பி... August 10, 2008 at 7:27 PM

நல்ல பதிவு கிரி…

Reply

கிரி August 10, 2008 at 8:54 PM

வாங்க தமிழன் நீண்ட நாட்களுக்கு பிறகு வந்து இருக்கீங்க, உருப்படியான பதிவுகள் எதுவும் இல்லை என்பதாலா! :-) )

அதென்னங்க நல்ல பதிவு, வாழ்த்துக்கள் னு தனித்தனியா பின்னூட்டம் போடுறீங்க :-) )

உங்கள் வருகைக்கு நன்றி.

Reply

Rengarajan August 11, 2008 at 5:18 AM

Hi,

I don’t know how to write in tamil fonts. This comment’s unrelated to the content of this blog. I would like to know whether there’s any blogs related to working/settling in Singapore/malaysia. If there’s none to your knowledge, as you are working in Singapore you can write one blog. It’d be helpful for people like me. Thanks.

Reply

கிரி August 11, 2008 at 7:07 AM

//Rengarajan said…
Hi,
I don’t know how to write in tamil fonts//

நீங்கள் தமிழ் 99 E-Kalappai அல்லது http://www.google.com/transliterate/indic/Tamil போன்றவற்றை பயன்படுத்தலாம்.

// would like to know whether there’s any blogs related to working/settling in Singapore/malaysia. //

அது பற்றி எனக்கு தெரியாது. உங்கள் மின்னஞ்சலை விருப்பம் இருந்தால் கொடுத்து செல்லுங்கள் எனக்கு தகவல் தெரிந்தால் நான் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.

Reply

manikandan August 11, 2008 at 7:21 PM

படம் எல்லாம் நச் !

Reply

manikandan August 11, 2008 at 7:23 PM

****உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும் அதை நீங்கள் வெளிப்படுத்தும் உங்கள் உரிமைக்கு ஏதாவது பங்கம் வந்தால் உங்களுக்காக போராடும் முதல் நபர் நானகத்தான் இருக்கும். *****

இது எல்லாம் சொல்லி புரிய வைக்க வேண்டியதா போச்சு. கொடுமைடா சாமி.

Reply

கிரி August 11, 2008 at 8:30 PM

//படம் எல்லாம் நச் !//

உங்கள் பாராட்டுக்கும் முதல் வருகைக்கும் நன்றி அவனும் அவளும்

Reply

வெங்கட்ராமன் August 11, 2008 at 8:51 PM

நல்ல பதிவு.

படங்கள் உலக வெப்பமடைவதை நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் சொல்கின்றன.

Reply

கிரி August 11, 2008 at 10:42 PM

//வெங்கட்ராமன் said…
படங்கள் உலக வெப்பமடைவதை நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் சொல்கின்றன//

படங்களும் நிஜங்களும் நமக்கு உண்மையை உணர்த்துகின்றன, ஆனால் அதை உணரத்தான் யாரும் இல்லை என்னையும் சேர்த்து. பதிவிட்டதோடு என் கடமையும் பதிவை படித்ததோடு படித்தவர்களின் கடமையும் முடிந்து மறந்து விடுகிறோம்.

உங்கள் வருகைக்கு நன்றி வெங்கட்ராமன்.

Reply

Vidhya August 13, 2008 at 4:07 PM

சரி ஆகஸ்ட் 8 நீங்கள் கடைபிடித்தீர்களா …

Reply

கிரி August 13, 2008 at 4:15 PM

//Vidhya said…
சரி ஆகஸ்ட் 8 நீங்கள் கடைபிடித்தீர்களா …//

கடை பிடித்தேன் ஆனால் தாமதமாக :-) தூங்கும் போதான்னு கேட்டு விடாதே ஹி ஹி ஹி

Reply

Vidhya August 13, 2008 at 4:19 PM

8 மணிக்கு இல்லைனாலும் ஏதோ கடை பிடித்தீர்களே அதே மேல்… பாராட்ட வேண்டிய விஷயம்

Reply

கிரி August 13, 2008 at 4:25 PM

கடை பிடிப்பதெல்லாம் சும்மா மேட்டர். ஒவ்வொருத்தரும் உண்மையா நினைக்கணும் சும்மா இதெல்லாம் ஒரு விழிப்புணர்ச்சிக்கு தான்..நம்முடைய பொறுப்புணர்ச்சி இந்த எட்டு நிமிடம் மட்டும் இருந்தால் போதுமா! அதுக்காக இருட்டிலேயே இருக்க சொல்றீங்களான்னு கேட்கப்படாது :-) ) நம்மளும் நம்மோட பொறுப்பை உணர்ந்து செயல் படனும் என்று கூறினேன்..ஸ்ஸ்ஸு யாராவது சோடா கொடுங்கப்பா….

Reply

guna June 6, 2010 at 2:15 PM

hai

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed