அமெரிக்காவை கலக்க போகும் "ரஜினி மிட்டாய்"

by கிரி on July 25, 2008

rajini+chocalate அமெரிக்காவை கலக்க போகும் "ரஜினி மிட்டாய்"
us அமெரிக்காவை கலக்க போகும் "ரஜினி மிட்டாய்"

us2 அமெரிக்காவை கலக்க போகும் "ரஜினி மிட்டாய்"

குசேலன் படத்தை பிரபலப்படுத்தும் நோக்கோடு ரஜினியின் படத்தை அங்கே வெளியிடும் விநியோகிப்பாளர் ஜெயவேல் முருகன் ரஜினி படத்தை அச்சடித்த மிட்டாயை விநியோகிக்க போகிறார் இதற்காக நம்ம ஊர் “ஜெம்ஸ்” மிட்டாய் நிறுவனம் போல் அங்கே பிரபலமாக இருக்கும் M&M நிறுவனம் தயாரிக்கும் “கேண்டீஸ்” என்ற மிட்டாயில் ரஜினி படத்தை பொறிக்க ஒப்பந்தம் செய்து உள்ளார்கள். குசேலன் படம் வெளியிடும் ஒவ்வொரு நகரத்திற்கும் 20 பவுண்ட் மிட்டாய்கள் வழங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இது அமெரிக்கா வரலாற்றிலேயே ஒரு இந்திய படத்திற்கு இவ்வாறு வித்யாசமாக விளம்பரம் செய்வது முதல் முறை என்று கூறி இருக்கிறார்கள். ரஜினிக்கு குழந்தை ரசிகர்கள் அதிகம் என்பதாலும் இம்முறை அனைத்து தரப்பு மக்களையும் கவரும் என்பதாலும் இதற்க்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்.
ஏற்கனவே ரஜினி வினையல் கட் அவுட் (அங்கேயும் ஆரம்பித்துட்டாங்களா) க்கு பெரும் வரவேற்ப்பு ரசிகர்களிடையே இருப்பதால், இந்த முயற்சியும் ரசிகர்களிடையேயும் பொது மக்கள் இடையேயும் பெரும் வரவேற்ப்பு பெரும் என்று என்று எதிர் பார்க்கப்படுகிறது.

திரை அரங்கில் “ரஜினி ஸ்பெஷல் தோசை” கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, எனவே குசேலன் வெளியீடு திருவிழா போல இருப்பதாக கூறி உள்ளார்கள். இத்தகைய திரைப்பட வெளியீட்டை ரஜினி பட வெளியீட்டில் மட்டுமே எதிர் பார்க்க முடியும் என்று கூறி உள்ளார்கள். தசாவதாரம் பாதிப்பு ரொம்பவே இருக்கு போல இருக்கு icon smile அமெரிக்காவை கலக்க போகும் "ரஜினி மிட்டாய்" )) தலை படம் பட்டய கிளப்ப மனமார்ந்த வாழ்த்துக்கள்.

No related posts.

{ 43 comments… read them below or add one }

மருதநாயகம் July 25, 2008 at 11:07 PM

என்ன கிரி நேரத்துக்கு தூங்குறது இல்லையா?

Reply

கிரி July 25, 2008 at 11:17 PM

//மருதநாயகம் said…
என்ன கிரி நேரத்துக்கு தூங்குறது இல்லையா?//

இன்னைக்கு ஆன்லைன் சப்போர்ட் அதனால தூங்க முடியாது :-( வேலை இல்ல ஆனா வேலை இருக்கு :-)

உங்க வருகைக்கு நன்றி மருதநாயகம்.

Reply

aravind July 25, 2008 at 11:22 PM

நண்பர் கிரி.நெஞ்சை தொட்டு சொல்லுங்கள்.தமிழ் நாடு தாண்ட தகுதியுள்ள படம் தானா இது?

Reply

கிரி July 25, 2008 at 11:29 PM

//aravind said…
நண்பர் கிரி.நெஞ்சை தொட்டு சொல்லுங்கள்.தமிழ் நாடு தாண்ட தகுதியுள்ள படம் தானா இது?//

ஹா ஹா ஹா

படம் வந்தால் தானே தெரியும். அதுவுமில்லாம அமெரிக்கா செல்ல வேண்டும் என்றால் ஏதாவது தகுதி உள்ளதா? அட! தலை படத்த எல்லாம் ரொம்ப ஆராய்ச்சி பண்ணாதீங்க அர்விந்த். சும்மா பார்த்தமோ சிரிச்சமா ன்னு வந்துடனும்.

ரஜினியும் உலகை திருத்தும் கருத்தை எலாம் தன் படத்தில் வைப்பதில்லை.

அதுனால நோ ஆராய்ச்சி ஒன்லி என்சாய் :-)

Reply

சினிமா நிருபர் July 25, 2008 at 11:49 PM

சுவையான சாக்லேட் செய்தி.

Reply

முரளிகண்ணன் July 26, 2008 at 12:08 AM

உலக நாயகன் பட்டம் ரஜினிக்குத்தான் பொருந்தும் போல இருக்கே

Reply

கிரி July 26, 2008 at 5:30 AM

//சினிமா நிருபர் said…
சுவையான சாக்லேட் செய்தி.//

நிருபர் இன்று உங்கள் வேலையை நான் செய்து விட்டேன் :-) )

Reply

கிரி July 26, 2008 at 5:32 AM

//முரளிகண்ணன் said…
உலக நாயகன் பட்டம் ரஜினிக்குத்தான் பொருந்தும் போல இருக்கே//

:-) )) வாங்க முரளிகண்ணன் தலைவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டமே போதும். அப்புறம் நடிக்கிற நடிப்புக்கு உலக நாயகன் வேறயான்னு கேட்டு இதுக்கு வேற சண்டைக்கு வருவாங்க.

Reply

மோகன் கந்தசாமி July 26, 2008 at 8:01 AM

கிரி,
மேல இருக்க கமண்ட்டு நான் போடல, யாரோ வெறி புடிச்ச கமல் ரசிகன் என் ID -ஐ ஹேக் பண்ணி போட்டுருக்கான். குசேலன் வெற்றி பெற வாழ்த்துக்கள், தசாவதாரத்துக்கு சற்று குறைவாக. :-) )

Reply

மோகன் கந்தசாமி July 26, 2008 at 8:01 AM

சிவாஜிக்கு மீடியா பண்ண விளம்பர அலும்ப பாத்துட்டு ஒரு ABCD கம்முனாட்டி (america born ethinic Indian) என் மூணு மணிநேரத்த வேஸ்ட்டு பண்ணான். (பின்ன அந்த கொடுமையான படத்த வரிக்கு வரி ரன்னிங் டைம் டிரான்சலேட் பண்றதுன்னா எவ்ளோ பொறுமை வேணும்). இப்ப குசேலனுக்கு இவங்க பண்ற அலும்ப பாத்தா ஒரே பயமால்ல இருக்கு எனக்கு. எந்த அர லூசு டிரான்சலேட் பண்ண சொல்லி சாவடிக்கப்போவுதோ தெரியல. இந்த படத்துக்காவது சப் டைட்டில் போட்டு அனுப்புங்கப்பா, வீனா என் தாக்க அறுக்காதீங்க.

Reply

கிரி July 26, 2008 at 8:22 AM

//மோகன் கந்தசாமி said…
சிவாஜிக்கு மீடியா பண்ண விளம்பர அலும்ப பாத்துட்டு ஒரு ABCD கம்முனாட்டி (america born ethinic Indian) என் மூணு மணிநேரத்த வேஸ்ட்டு பண்ணான்.//

மூணு மணி நேரம் தானே ..தசாவதாரம் பார்த்து மூனரை மணி நேரம் காலி ஆச்சே அதை பற்றி மறந்துட்டீங்களே. அந்த கொடுமையை விடவா மோசம் :-)

//பின்ன அந்த கொடுமையான படத்த வரிக்கு வரி ரன்னிங் டைம் டிரான்சலேட் பண்றதுன்னா எவ்ளோ பொறுமை வேணும்//

தசாவதாரத்தொட சப் டைட்டில் கொடுமைய விடவா!!! மோசம். படம் பார்க்குறதே பெரிசு இதுல அந்த கமெண்டரிய படித்து வேற பல நாட்டு காரங்களும் டென்ஷன் ஆகி புது அவதாரமாக மாறியது தனிக்கதை (அந்த அவதாரத்திற்கும் நம்ம கீழ் பாக்கத்துக்கும் சம்பந்தம் இல்ல ;-) )

//இப்ப குசேலனுக்கு இவங்க பண்ற அலும்ப பாத்தா ஒரே பயமால்ல இருக்கு எனக்கு//

நம்ம ஆஸ்கார் தசாவதாரத்துக்கு அங்கே சூப்பர் “ஓட்டம்” இங்கே “பிச்சுட்டு போகுது” ன்னு சொன்னதை விடவா மோசம் :-) ))

//எந்த அர லூசு டிரான்சலேட் பண்ண சொல்லி சாவடிக்கப்போவுதோ தெரியல//

என்கிட்டே லூசே தனமா தசாவதாரத்தை பற்றி சொல்லி என்னை டென்ஷன் பண்ணிய அந்த ஆளை வேணா உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் :-) ))) உங்களுக்கு சரியாக இருக்கும் :-)

//இந்த படத்துக்காவது சப் டைட்டில் போட்டு அனுப்புங்கப்பா, வீனா என் தாக்க அறுக்காதீங்க.//

தசாவாதாரம் பார்த்து (சப் டைட்டில் உடன்) பல வெளிநாட்டு காரங்க விமானத்தில் இருந்து எட்டி குதித்து வருவதாக வந்த தகவலை அடுத்து (ஒரு சிலருக்கு வலிப்பு வந்து விட்டதாம் :-) )))))))))) உலக நாயகன் படத்திற்கே அப்படின்னா!!! அதனால குசேலனில் அதை சேர்க்கலாமா வேண்டாமா என்று இன்னும் முடிவு செய்யலை. நல்லதே நடக்கும் கவலை படாதீர்கள்.

Reply

KC July 26, 2008 at 8:24 AM

ABCD = American Born Confused Desi

Reply

கிரி July 26, 2008 at 8:25 AM

//மோகன் கந்தசாமி said…
கிரி,
மேல இருக்க கமண்ட்டு நான் போடல, யாரோ வெறி புடிச்ச கமல் ரசிகன் என் ID -ஐ ஹேக் பண்ணி போட்டுருக்கான்//

மோகன் மேல இருக்கிற கமெண்ட் நான் போடல, யாரோ வெறி பிடித்த ரஜினி ரசிகன் என் ID -ஐ ஹேக் பண்ணி போட்டுருக்கான் :-) ))

//குசேலன் வெற்றி பெற வாழ்த்துக்கள், தசாவதாரத்துக்கு சற்று குறைவாக. :-) )//

மர்மயோகி வெற்றி பெற வாழ்த்துக்கள் குசேலனை விட சற்று குறைவாக :-) ))))))

குறிப்பு: சும்மா நக்கல் கமெண்ட் தான் உங்களை போல.. டென்ஷன் ஆகிடாதீங்க.

Reply

கிரி July 26, 2008 at 8:31 AM

//KC said…
ABCD = American Born Confused Desi//

ஹா ஹா இது கண்டிப்பா யாரோ ஹேக் பண்ணி தான் செய்து இருப்பாங்க போல மோகன் ஐ டிய. அதானே பார்த்தேன் மோகன் எப்போதும் தெளிவா பேசுவாரே! :-) ))))))))))))))

KC உங்கள் முதல் வருகைக்கு நன்றி. முதல் பின்னூட்டமே விளக்கத்தோடு வந்துட்டீங்க.

Reply

புதுகை.அப்துல்லா July 26, 2008 at 8:51 AM

kiri ekappai is not working. i never like to comment in english. i will come later.

Reply

பரிசல்காரன் July 26, 2008 at 1:26 PM

லீவுல வந்ததுக்கும் சேர்த்து பதிவு போடறதுன்னு முடிவு பண்ணீட்டீங்க போல!

Reply

ithayasaral July 26, 2008 at 2:45 PM

இப்ேபாது தான் முதல் முதலாக உங்கள் பிளாக்ைக பார்க்கிேறன். பிரமாதமாக இருக்கிறது.
ples visit my blog http://manam-anandrey.blogspot.com/

Reply

கிரி July 26, 2008 at 2:50 PM

// புதுகை.எம்.எம்.அப்துல்லா said…
kiri ekappai is not working. i never like to comment in english. i will come later.//

பொறுமையா வாங்க. அப்துல்லா நான் giri ..kiri அல்ல :-) )))

———————————————————

//பரிசல்காரன் said…
லீவுல வந்ததுக்கும் சேர்த்து பதிவு போடறதுன்னு முடிவு பண்ணீட்டீங்க போல!//

ஹா ஹா ஹா சும்மா போட வேண்டிய பதிவுகளா வந்தது. மற்றபடி வேறு எந்த காரணமும் இல்லை.கே கே. உங்கள் வருகைக்கு நன்றி.

Reply

கிரி July 26, 2008 at 3:08 PM

//ithayasaral said…
இப்ேபாது தான் முதல் முதலாக உங்கள் பிளாக்ைக பார்க்கிேறன். பிரமாதமாக இருக்கிறது.
ples visit my blog http://manam-anandrey.blogspot.com///

நன்றி இதயசாரல். உங்கள் வலைப்பதிவிற்கு வந்து பார்க்கிறேன். உங்கள் முதல் வருகைக்கு நன்றி.

Reply

புதுகை.அப்துல்லா July 26, 2008 at 4:25 PM

அண்ணே வந்துட்டேன்

Reply

புதுகை.அப்துல்லா July 26, 2008 at 4:31 PM

வாங்க. அப்துல்லா நான் giri ..kiri அல்ல /

அண்ணே நம்பல்லாம் கொஞ்சம் படிக்காத பய புள்ளைக. கொஞ்சம் அட்ஜஸ் பன்ணிக்கங்கண்ணே.

Reply

அருப்புக்கோட்டை பாஸ்கர் July 26, 2008 at 4:34 PM

//என்ன கிரி நேரத்துக்கு தூங்குறது இல்லையா?//
கிரி ,
இதில் ஏதோ உள்குத்து இருப்பது போல் தெரிகிறதே !

Reply

ராமலக்ஷ்மி July 26, 2008 at 4:54 PM

கட் அவுட் மட்டுமின்றி மிட்டாயி, தோசைன்னு நம்ம விட ஃபாஸ்டா போறாங்களே:))!

Reply

இளவேனில் July 26, 2008 at 5:34 PM

எவ்வளவோ பண்றோம் … இதெல்லாம் தலைவருக்கு சும்மா தூசு …
அப்புறம் கிரி எனக்கு ஒரு சந்தேகம்
முரளிகண்ணன் கூறியது போல
உண்மையிலே உலக நாயகன் யாரு ?

Reply

கோவை விஜய் July 26, 2008 at 7:11 PM

புகைப்படப் பேழைக்கு தங்களின் வருகைக்கு நன்றி.

ரஜினியின் குசேலன் ஒரு வரலாற்று சாதனை படைக்கும் என கட்டியம் கூறுகிறது உங்களின் பதிவு.

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com/

Reply

கிரி July 26, 2008 at 7:15 PM

//புதுகை.எம்.எம்.அப்துல்லா said…
அண்ணே வந்துட்டேன்//

வாங்கோ வாங்கோ

//அண்ணே நம்பல்லாம் கொஞ்சம் படிக்காத பய புள்ளைக. கொஞ்சம் அட்ஜஸ் பன்ணிக்கங்கண்ணே.//

அது சரி :-) ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப பணிவா இருக்கீங்களே !!!

Reply

கிரி July 26, 2008 at 7:17 PM

//ARUVAI BASKAR said…
இதில் ஏதோ உள்குத்து இருப்பது போல் தெரிகிறதே !//

ஹா ஹா ஹா ஹா

ஒரு குத்தும் இல்லைங்க பாஸ்கர். இந்த பதிவு எழுதும் போது இரவு 1.30 சிங்கையில், மருதநாயகம் சிங்கையில் இருந்தவர் என்பதால் இதை கேட்டு இருக்கிறார். அவ்வளவே :-)

Reply

கிரி July 26, 2008 at 7:19 PM

//ராமலக்ஷ்மி said…
கட் அவுட் மட்டுமின்றி மிட்டாயி, தோசைன்னு நம்ம விட ஃபாஸ்டா போறாங்களே:))!//

அமெரிக்காவையும் காலி பண்ணாம விட மாட்டாங்க போல..:-)) ஹி ஹி ஹி

Reply

கிரி July 26, 2008 at 7:25 PM

//இளவேனில் said…
எவ்வளவோ பண்றோம் … இதெல்லாம் தலைவருக்கு சும்மா தூசு …//

சக்தி தலைவர் செய்தி போட்டா தான் வருவேன்னு அடம் பிடிக்கறீங்க :-) எப்போ பதிவு தொடங்க போறீங்க? சீக்கிரம் கோதால இறங்குங்க :-)

//அப்புறம் கிரி எனக்கு ஒரு சந்தேகம்
முரளிகண்ணன் கூறியது போல
உண்மையிலே உலக நாயகன் யாரு ?//

கமல் தாங்க.

நம்ம தலைக்கு சூப்பர் ஸ்டார் பட்டமே போதுங்க அது தான் டாப்பு. அப்புறம் முரளிகண்ணன் தீவிர கமல் ரசிகர் ஆனால் நியாயமா சொல்லுவாரு, நீங்க அவரை ரஜினி ரசிகர் னு நினைத்து ஏதாவது சொல்ல அப்புறம் டென்ஷன் ஆகிட போறாரு :-)

Reply

கிரி July 26, 2008 at 8:08 PM

// விஜய் said…
ரஜினியின் குசேலன் ஒரு வரலாற்று சாதனை படைக்கும் என கட்டியம் கூறுகிறது உங்களின் பதிவு.//

விஜய் நீங்க மிகை படுத்தி கூறி விட்டீர்கள். உங்கள் அன்புக்கு நன்றி.

Reply

ராஜ நடராஜன் July 26, 2008 at 8:45 PM

மிட்டாய்களையெல்லாம் எங்கேயிருந்து புடிக்கிறீங்க:)

இனிமேல் போடற படங்களுக்கு கூகிள் ஏதாவது லிங்க் கொடுக்கிறாரானா பார்க்கிறேன்.

வெளிய போகலாமுன்னு கதவுக்குப் பக்கம் போகும்போது ஒருத்தர் உலகநாயகன் பட்டத்த இவருக்கும் பங்கு போடணுமாம்.ஆசை தோசை அப்பள குசேலன் வடை:)

Reply

கிரி July 26, 2008 at 8:54 PM

//ராஜ நடராஜன் said…
மிட்டாய்களையெல்லாம் எங்கேயிருந்து புடிக்கிறீங்க:)
இனிமேல் போடற படங்களுக்கு கூகிள் ஏதாவது லிங்க் கொடுக்கிறாரானா பார்க்கிறேன்.//

காந்தி மிட்டாயையும் சேர்த்து சொல்றீங்களா? :-) ))

//வெளிய போகலாமுன்னு கதவுக்குப் பக்கம் போகும்போது ஒருத்தர் உலகநாயகன் பட்டத்த இவருக்கும் பங்கு போடணுமாம்.ஆசை தோசை அப்பள குசேலன் வடை:)//

ஹா ஹா ஹா ஹா எங்களுக்கு வேணாங்க நீங்களே “உலக” வடையை சாப்பிடுங்க

Reply

தமிழன்-கறுப்பி... July 26, 2008 at 9:43 PM

எனக்கென்னமோ ரஜனிக்கு இந்தப்படம் ஹிட்டாகாதுன்னு தோணுது…

Reply

தமிழன்-கறுப்பி... July 26, 2008 at 9:52 PM

ஆனா தலயோட படத்துக்கு எப்பவும் எதிர்பார்ப்புகள் இருக்கறது சகஜம்தானே…

Reply

கிரி July 26, 2008 at 10:07 PM

வாங்க தமிழன், படம் வெளிவரட்டும் பார்ப்போம். சின்ன பட்ஜெட் படம் தானே பெரிய நஷ்டம் ஒன்றும் இருக்காது. அதுவுமில்லாமல் ரஜினி, படம் முழுவதும் இல்லையே.

ரஜினி படம் பிளாப் என்றால் அது ஒரு சில நடிகர்களுடைய வெற்றி க்கு சமம். வெற்றி என்றால்…..:-)

// தமிழன்… said…
ஆனா தலயோட படத்துக்கு எப்பவும் எதிர்பார்ப்புகள் இருக்கறது சகஜம்தானே//

உண்மை தான் அதுவும் தாறு மாறா. எந்த கதையும் பெரிதா இல்லாமல் எல்லோரையும் எதிர்பார்ப்பில் இருக்க வைப்பதும் பெரிய விஷயம் தானே.

Reply

Madurai citizen July 27, 2008 at 6:29 AM

குசேலனுக்கு இவங்க பண்ற அலும்ப பாத்தா ஒரே பயமால்ல இருக்கு எனக்கு. தமிழ் நாடு தாண்ட தகுதியுள்ள படம் தானா இது?
சும்மா நக்கல் கமெண்ட் தான் உங்களை போல.. டென்ஷன் ஆகிடாதீங்க.

Reply

கிரி July 27, 2008 at 10:48 AM

//Madurai citizen said… சும்மா நக்கல் கமெண்ட் தான் உங்களை போல.. டென்ஷன் ஆகிடாதீங்க.//

அட! மதுரை சிடிசன் இதுக்கெல்லாம் டென்ஷன் ஆனா என்ன ஆகுறது, பதிவுலகம் முழுவதும் ரஜினிய ஓட்டிட்டு தான் இருக்கு, நாங்க எந்த பந்து போட்டாலும் சளைக்காம அடிப்போம் :-) சிங்கம் சிங்கிளா தான் இருக்கும் :-) )))

Reply

இவன் July 28, 2008 at 11:27 AM

தலைவர் கலக்குறாரு

Reply

கிரி July 28, 2008 at 12:41 PM

//இவன் said…
தலைவர் கலக்குறாரு//

வருகைக்கு நன்றி இவன்.

Reply

ஜெகதீசன் July 28, 2008 at 12:44 PM

இப்போது தான் முதல் முதலாக உங்கள் பிளாக்கை பார்க்கிறேன். பிரமாதமாக இருக்கிறது.

Reply

கிரி July 28, 2008 at 2:38 PM

//ஜெகதீசன் said…
இப்போது தான் முதல் முதலாக உங்கள் பிளாக்கை பார்க்கிறேன். பிரமாதமாக இருக்கிறது.//

அய்யயோ இத்தனை நாளா பின்னூட்டம் போட்டுட்டு இருந்தது யாரு? ஜெகதீசன் உங்க ஐ டிய யாரோ ஹேக் பண்ணிட்டாங்க ..உஷார்! உஷார்!! உஷார்!!!

Reply

goma July 28, 2008 at 10:29 PM

நல்ல வேளை குசேலன் ,எல்லோருக்கும் அவல் தராமல் மிட்டாய் தருகிறாரே …சோ சோ ஸ்வீட்……
=):)…

Reply

கிரி July 29, 2008 at 1:10 AM

//goma said…
நல்ல வேளை குசேலன் ,எல்லோருக்கும் அவல் தராமல் மிட்டாய் தருகிறாரே …சோ சோ ஸ்வீட்……
=):)…//

ஹல்வா கொடுக்காம இருந்த சரி :-) ))

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed