வடகரை வேலனின் – காத்திருந்த காதலி – 1
பரிசல்காரனின் – காத்திருந்த காதலி – 2
வெய்யிலானின் – காத்திருந்த காதலி – 3
வெயிலான் வந்து ஒரு பின்னூட்டம் போட்டாரு ..கிரி வந்து பாருங்க உங்களுக்கு அழைப்பு (ஆப்பு) இருக்குன்னு ..நானும் நம்ம்ம்ம்பி அவர் பதிவுக்கு போனா …மூணு பேரும்மா ..சும்மா மாத்தி மாத்தி குழப்பி வைத்து இருந்தாங்க….சரி நானும் எவ்வளவு தான் சீரியஸ் ஆக இருக்கிற மாதிரியே நடிக்கிறது அவங்கள மாதிரியே …. மூணு பேரும் பல நிபந்தனை போட்டு இருக்காங்க ஆனா யாரும் சீரியஸ் ஆக தான் எழுதனும்னு சொல்லல அதனால…. அதனால…….. ஹி ஹி ஹி ஹி
முன் குறிப்பு:
இதை படித்து விட்டு யாரும் திட்டக்கூடாது, உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக மாதிரி கிரி வாழ்க்கையில் முதல் முறையா ஒரு கதை!!! எழுதி இருக்கேன்..அதனால படித்து விட்டு… படித்து விட்டுடுடு… படித்து விட்டுடுடுடுடு ..
யோவ்! சொல்லி தொலையா ..
திட்டப்படாதுன்னு சொல்ல வந்தேன் சரியா….
ஸ்டார்ட் மியூசிக்
“Irudhayaraj calling…….
செல்ஃபோன் பொத்தானை அழுத்தி பேச,
ஹலோ! கேட்டரிங்கா?
இல்…. ஆமாங்க! சொல்லுங்க!
என்றாள் கெளரி தடுமாற்றத்துடன்!
ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே சாப்பாடு வந்திட்டிருக்குனு சொன்னாங்க, இன்னும் வந்து சேரலை? ஒறமொற எல்லாம் பசியோட காத்திட்டிருக்காங்க. உங்க ஓனர்ட்ட போனை குடு கண்ணு! நான் பேசிக்கறேன்!”
இனி நான்
இல்லைங்க! சாப்பாடு அனுப்பி அரை மணி நேரம் தான் ஆகுது, இன்னொரு பத்து நிமிசத்துல வந்துடுவாங்க தாமதத்திற்கு மன்னித்து விடுங்க
பரவயில்லமா அதுனால என்ன! சரி நான் அப்புறம் அப்பா கிட்ட பேசிக்கிறேன்.
கௌரி நிம்மதி அடைந்தவளாய் இருக்கையில் அமர்ந்தாள்.
சங்கர், இப்ப தான் நல்லா வந்தான் இந்த நேரம் பார்த்து இப்படி ஆகிடுச்சே
சங்கரை பற்றியே நினைத்துக்கொண்டு அப்படியே பழைய நினைவுகளில் மூழ்கினாள்.
———————————
கார்த்திக் வீடு பூட்டி இருப்பதை கண்டதும், அவனுடைய அறை சகா எங்கே போய் இருப்பான் என்று யோசித்து விட்டு வீட்டு கதவின் மேல் தடவி பார்த்து சாவி இருப்பதை கண்டு நிம்மதி அடைந்தவனாய் கதவை திறந்து உள்ளே சென்றான்.
அம்மா வேறு சும்மாவே பயப்படுவாங்க……நாம உடனடியா கோபி கிளம்புனும் என்று முடிவு செய்தவனாய் அவரசரமாக புறப்பட்டு சென்ட்ரல் நிலையம் செல்ல ஆட்டோ பிடித்தான்
சரி அப்படியே விஷயத்தை கௌரி கிட்ட சொல்லிடுவோம்.. என்று உதித்த யோசனையை நிராகரித்து விட்டு நாளைக்கு சொல்லிடுவோம் என்று முடிவு செய்தான்
சார்! பெட்ரோல் விலை எல்லாம் ஏறிபோச்சு இரண்டு நாளா பெட்ரோலே கெடைக்கல மேல ஒரு 10 ரூபா போட்டு கொடு சார் … அவரிடம் பேரம் செய்யும் மனநிலையில் இல்லாததால் கேட்ட பணத்தை கொடுத்து விட்டு கிளம்பினான்..ஆட்டோ ஓட்டுனர் ஒரு பெரிய சல்யுட் போட்டு சந்தோசமாக கிளம்பினார்.
மக்கள் அனைவரும் வழக்கம் போல எதையோ துரத்தி கொண்டு அவசரகதியில் போய் கொண்டு இருந்தார்கள்..அங்கே கோன் ஐஸ் சாப்பிட்டு கொண்டு இருந்த அழகான ஒரு பெண்ணை பார்த்தும் மனம் அங்கே செல்லாமல் அப்பாவின் நிலையை நினைத்து கவலை பட்டது
முன்பதிவு நேரமும் முடிந்து விட்டதால் கடைசி ரயிலான ஏற்காடு விரைவு வண்டிக்கு ஒரு பயணச்சீட்டு வாங்கி அருகில் இருந்த ரயில்வே ஹோட்டலில் காய்ந்து போன பிரியாணியை வேறு வழி இல்லாமல் மென்று உள்ளே தள்ளி விட்டு இடம் பிடிக்க சென்றால் கதவோரமாய் இடம் கிடைத்தது, வேறு வழி இல்லாமல் அங்கே உட்கார்ந்தான். எதிரில் உட்கார்ந்து இருந்த குழந்தை தனக்கு மிட்டாய் தரவில்லை அழுது கொண்டு இருந்தது…. அருகில் இருந்த கழிவறை நாற்றமும் பெனாயில் நாற்றமும் சகிக்காமல் எப்படி காலைல வரைக்கும் உட்கார்ந்து கொண்டு இருப்பமோ என்று நினைத்து கொண்டு அப்படியே தூங்கினான்……..
ஏற்காடு எப்போதும் போல முக்கி முக்கி போய் வழக்கமான தாமதத்துடன் ஈரோடு வந்தடைந்தது ..
அங்கே இருந்து பஸ் பிடித்து வீடு போய் சேருவதற்கு மணி 8 ஆகி இருந்தது..
அம்மா யாரிடமோ பேசி கொண்டு இருந்தார்கள், நான் வருவதை கண்டு பரபரப்பாவது தெரிந்தது
டேய் கார்த்திக் என்னடா இப்படி ஒரு போன் கூட பண்ணாம வந்துட்டே..நான் வேற உனக்கு டென்ஷன் ல come home immly னு அடிக்கிறதுக்கு go home immly னு அடித்துட்டேன்…
பரவயில்லமா.. ஏற்கனவே மனசு சரி இல்ல..சரி நீ வேற ஒருத்தி தான், அப்பா கூட இருப்பே துணைக்கு ஒரு 4 நாள் இருக்கலாம்னு வந்துட்டேன்..அப்பா எப்படி இருக்காரு?
அப்பாவுக்கு ஒண்ணும் இல்லன்னு சொல்லிட்டாங்க கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுக்கணுமாம் .. எங்கேயும் சுத்த கூடாதுன்னு நம்ம டாக்டர் ஸ்ட்ரிக்ட் ஆக சொல்லிட்டாரு..
அப்படியா! பரவாயில்ல நான் கூட பயந்தே போயிட்டேன் நிம்மதியடைந்து ஒரு பெருமூச்சொன்றை விட்டான்..
சரி.. சரி.. போ! போய் பல்லு விளக்கிட்டு வா நான் காபி போட்டு வைக்கிறேன்..
சரிம்மா ..இன்னைக்கு என்ன டிபன்? ..நல்லா சாப்பிட்டே ரொம்ப நாள் ஆச்சு ..என்னோட கேடரிங் சாப்பாட்டை என்னாலேயே சாப்பிட முடியலை
தோசையும் தக்காளி தொக்கும் பண்ணி வைக்கிறேன் வந்து சாப்பிடு
அவசரவசரமாக சென்று எல்லா “கடன்களையும்” முடித்தது விட்டு அம்மா சோர்வாகும் வரை தோசை சாப்பிட்டு விட்டு, அம்மாவை பார்க்க பாவமாக இருக்க
அம்மா இந்த வாலுக இரண்டு பேரும் எங்கே!
சகோதரிகளை தான் அப்படி குறிப்பிட்டான்..
அவங்க இரண்டு பேரும் காலேஜ் ல இடம் வாங்க உன் அப்பா நண்பர் கிட்ட ரெகமண்டேசன் கடிதம் வாங்க போய் இருக்காங்க..சாயங்காலம் தான் வருவாங்க
ஓ!! அப்படியா!
சரிம்மா போதும்
டேய் இந்த ஒண்ணையும் சாப்பிட்டு விட்டு போ!
எத்தனை சாப்பிட்டாலும், போதும் என்று கூறினால் இந்த ஒண்ணையும் வைத்துக்கோன்னு கேட்கும் பாசமான அம்மாவை நினைத்து ஒரு நிமிடம் பெருமிதப்பட்டான்
இல்லமா போதும் ..
என்று கூறிவிட்டு அம்மாவின் பதிலை எதிர்பார்க்காமல் எழுந்து கை கழுவி விட்டு முன் பக்க திண்ணையில் உட்கார்ந்தான்..அப்பாவை தொந்தரவு செய்யாமல் அப்புறமா பேசிக்கலாம் என்று முடிவு செய்தவனாய் ..
சரி போனை போட்டு கௌரி க்கு இங்கு வந்த விஷயத்தை சொல்லிடுவோம் ..
ஹலோ கௌரி
சொல்லு கார்த்திக்
நான் என் அப்பாவை பார்க்க கோபி வந்துட்டேன் ..அதான் உன்கிட்ட சொல்லிடலாம்னு போன் பண்ணினேன்..
அப்படியா! அப்பா எப்படி இருக்காரு?
அப்பா நல்லா இருக்காரு, நான் தான் தொந்தரவு பண்ண வேண்டாம்னு இன்னும் எதுவும் பேசல..
சரி சரி அவரை நல்லா பார்த்துக்கோ..இங்கே சங்கரை இரண்டு நாள் கழித்து தான் பார்க்க முடியும்னு சொல்லிட்டாங்க..அதனால நான் வீட்டுக்கு வந்துட்டேன்..
சரி கௌரி ஏதாவது விசயம்னா என்னோட செல்லுக்கு கூப்பிடு
சரி கார்த்திக்… பாய்
பாய் கௌரி
—-
அம்மா! அம்மாமாமாமாமா!
டேய்! ஏன்டா இப்படி கத்துற!
நான் வயல் வரைக்கும் போயிட்டு வரேன் ..
இருடா இப்ப வெய்யிலா இருக்கு மத்யானம் சாப்பிட்டு விட்டு கொஞ்சம் தூங்கிட்டு போ ..
வெளியே பார்த்தான் வெய்யில் தன் வேலையை சற்று முன்னதாகவே ஆர்வமாக தொடங்கி இருந்தது
சரி! அம்மா சொல்வதை இன்றாவது கேட்போம் என்று முடிவு செய்தவனாய்
சரிம்மா! நான் டிவி பார்த்துட்டு இருக்கேன் கூப்பிடு என்னை..
டிவி யை ஆன் செய்தான்..
அது நேராக சன் செய்திக்கு சென்றது ..
கடைசியா அப்பா டிவி பார்த்து இருப்பாங்க போல என்று நினைத்தவனாய் பார்வையை ஓட விட்டான்
சன் டிவி யில் என்றும் இல்லா அதிசயமாக பெட்ரோல் தட்டுப்பாட்டை சிறப்பு செய்தி போட்டு கூறி கொண்டு இருந்தார்கள்..
நேற்று கலைஞர் தி மு க வுக்கும் தினகரனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொன்னது நினைவுக்கு வர…அட அதுக்குள்ளே இப்படி மக்கள் மேல அக்கறை ஆகிட்டாங்களே ..நல்லது நடந்தா சரி..
பெட்ரோல் செய்தியாகவே இருக்க
சரி பாட்டாவது கேட்போம்.. இரண்டு முறை அழுத்திய பிறகு தான் சன் மியூசிக் வந்தது..ரொம்ப கேட்டு இருப்பாங்க போல என்று நினைத்தவனாய் தொடர்ந்தான்
ஹலோ! சமையல் குறிப்பு நேரமா!
ஆமாங்க! நீங்க யாரு?
நான் கொட்டாம் பட்டில இருந்து கோகிலா பேசுறேங்க
தேவகோட்டை கல்யாணி மாதிரி நீங்க கொட்டாம்பட்டி கோகிலாவா உங்க வாய்ஸ் ஸ்வீட்டா இருக்கு….நீங்க ஏற்கனவே ஒருமுறை என்கூட பேசி இருக்கீங்க தானே..
இல்லைங்க இப்ப தான் மொத வாட்டி பண்ணுறேன்
………………………..அப்படியா!
உங்களுக்கு வயசு ஒரு 20 இருக்குமா?
ஹி ஹி ஹி (வெட்கத்துடன்) இல்லைங்க எனக்கு 34 வயசாகுது..
ஹய்யோ!!! உங்க வாய்ஸ் கேட்டா எனக்கு சின்ன பொண்ணு! குரல் மாதிரியே இருக்கு ..
அந்த பொண்ணு!!! வெட்கப்படுவது போனில் தெரிந்தது
உங்க டிவி சத்தத்தை அப்படியே குறைத்துக்குங்க.. சரி சரி உங்க சமையல் குறிப்ப சொல்லுங்க..
நான் சூடா தண்ணீர் வைக்கிறது எப்படின்னு சொல்லப்போறேங்க…
முதல்ல ஒரு பாத்திரத்துல தண்ணீர் …
டொக்
லைன் கட் ஆகி விட்டதால்!!! கொட்டாம்பட்டி கோகிலாவிற்க்காக அதிரடி நாயகன் ரித்தீஷ் நடித்த நாயகன் படத்தில் இருந்து ஒரு சூப்பர் பாடல் வருகிறது ..
என்னடா இது! ..இவங்க இம்சை தாங்கலையே …ம்ம்ம் சரி இன்னும் ஒரு பாட்டை கேட்டு பார்ப்போம்..
ஹலோலோலோ…..
நான் விழுப்புரத்துல இருந்து மயில் சாமி பேசுறேங்க..
மயில் சாமி இது பெண்களுக்கான நிகழ்ச்சி நீங்கெல்லாம் பேச கூடாது…அப்புறம் கொஞ்சம் மெதுவா பேசுங்க.. நீங்க போன் இல்லாம சாதாரணமா பேசினாலே இங்க எனக்கு கேட்கும் போல இருக்கு…
இல்லைங்க உங்க வாய்ஸ் சூப்பரா இருக்கு உங்க எல்லா ப்ரோக்ராம் ம் ஒண்ணு விடாமா பார்ப்பேன் உங்க கிட்ட பேசலாம்னு பார்த்தா லைன் கிடைக்கவே மாட்டேங்குது .. உங்களுக்கு டயல் பண்ணி பண்ணி என் விரல்ல நக சுத்தியே வந்து விட்டதுங்க …. அதான்ன்ன்ன்…..
மயில்சாமி அதெல்லாம் முடியாது நீங்க வேற நிகழ்ச்சில முயற்சி பண்ணுங்க..சரியா..
ஹலோ ஹலோ ஹ……
டொக்
மயில்சாமிக்காக வீராச்சாமி படத்…..
கடுப்பாகி டிவி யை அணைத்த கார்த்திக்..
அம்மாமாமாமாமா
ஏன்டா! இப்படி கத்துறே
நான் வயலுக்கே போறேம்மா! போர் அடிக்குது..
சரி டா! சீக்கிரம் வந்துடு ..நீ.. சொன்னா எங்க கேட்க போறே ..அம்மா முனகுவது கேட்டது
சரிமா.. சீக்கிரம் வந்துடறேன்..அப்பா வண்டிய எடுத்துட்டு போறேன்
பார்த்து போ அதுல பிரேக் சரி இல்ல ..ஒழுங்கா ஸ்டார்ட் வேற ஆகாது …
அப்பா வண்டி டி வி எஸ் 50 யை எடுக்க அது கடகடன்னு சத்ததோட முனகி கொண்டே நாலாவது உதையில் ஒரு அலறல் சத்தத்துடன் ஸ்டார்ட் ஆகியது
சுற்றும் பார்த்துவிட்டு தன்னை யாரும் கவனிக்கவில்லை என்று நிம்மதி அடைந்தவனாக வேகமாக வண்டியை முறுக்கினான்
புகையை கக்கி விட்டு சத்தத்தோடு கிளம்பியது
வயலுக்கு வந்தால் வானம் மேக மூட்டமாக இருந்ததால் இடம் ரம்மியமாக இருக்க அப்படி ரசித்து கொண்டு இருந்தான்..ச்சே! முன்னாடியே வந்து இருக்கலாம் என்று தன்னை தானே நொந்து கொண்டான் .. நேரம் போனதே தெரியவில்லை
“பேரின்ப பேச்சுக்காரன் யாரு யாரு கூறப்பா” என்று அவனுடைய குசேலன் ரிங் டோன் அவன் கவனத்தை தன் பக்கம் திருப்பியது
பார்த்தான் “Amma calling”
சிக்னல் வேறு, ஒரு பாயிண்ட் மட்டுமே இருந்தது..
டேய் கா…கார்த்திக்க் ..அம்மாவின் குரல் குழறியது..
கார்த்திக்கிற்கு கலவரமாகியது..அதற்குள் கற்பனை எங்கெங்கோ ஓட..
அப்ப்ப்…பாவுக்கு ….அதற்குள் லைன் கட் ஆகியது..
இப்போது சுத்தமாக சிக்னல் இல்லை…பதட்டத்தோடு வீடு நோக்கி வண்டியை விரட்டினான்..
###########################
அப்பாடா! ஒரு வழியா என் வேலையை!! முடித்து விட்டேன்..
வெயிலான் SMS அனுப்பியது யார் என்று கூறவில்லையாதலால், மற்றும் புதிய கதாபாத்திரங்களை அதிக படுத்த கூடாது என்று கூறிவிட்டதால் அதை நான் கார்த்திக் அம்மா அனுப்பியதாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து இருக்கிறேன்.
இதன் தொடர்ச்சியை ராமலக்ஷ்மி அவர்களுக்கு கொடுக்கலாம் என்று இருந்ததை அவர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் அவர்களை விட்டுவிட்டு …..சும்மா இல்லாமல் சங்கலி தொடர் ஒன்று ஆரம்பித்து லொள்ளு பண்ணிக்கொண்டு சந்தோசமாக இருக்கும் ஜெகதீசன் அவர்கள் இதை தொடரும் படி கேட்டுக்கொள்கிறேன்
அவரை பாவமாக கருதி மேலும் நிபந்தனை எதுவும் போடாமல் இருக்கிறேன். ஏற்கனவே உள்ளவை தொடரும்.
வெயிலான் இப்ப சந்தோசமா! ம்ஹீம் என்ன ஒரு வில்லத்தனம்
யப்பா! இனி நிம்மதியா ஊருக்கு போகலாம்….எஸ்கேப் ஆகுடா கிரி….
பின் குறிப்பு
இதை படித்து விட்டு உங்களுக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல, முழு பொறுப்பு வெயிலான் அவர்களே!
No related posts.
{ 46 comments… read them below or add one }
கிரி… நிஜமாவே நன்றாக எழுதுறீங்க கிரி… தொடர் கதை படித்த திருப்தி… கண்டிப்பாக யாரும் உங்களை திட்ட மாட்டார்கள்… நல்ல கற்பனை திறன் உள்ளது உங்களுக்கு … வாழ்த்துக்கள்
அட என்ன ஒரு வில்லத்தனம் இவ்வளவு பெரிய கதையைபோட்டுட்டு கதயே எழுதத்தெரியாது என்னு சொல்லிக்கிட்டு இருந்திருக்கீங்க… கலக்கலா இருக்கு கிரி. இனி நீங்க தைரியமா கதை கூட எழுதலாம்
கிரி அண்ணா!
சொதப்பல் மன்னா!
இப்படி காதலிய கந்தர் கோலம் பண்ணி வச்சிட்டிங்களே! சரி! இங்க தான வரணும்.
//Vidhya said…
கிரி… நிஜமாவே நன்றாக எழுதுறீங்க கிரி… தொடர் கதை படித்த திருப்தி… //
நன்றி வித்யா….அப்படின்னு சந்தொசப்படுறதுகுள்ள வெயிலான் திட்டிட்டாரு
))
// இவன் said…
இனி நீங்க தைரியமா கதை கூட எழுதலாம்//
நன்றி இவன்
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் ஆக்குறாங்கப்பா
Kalakkurunga Gilladee
// வெயிலான் said…
கிரி அண்ணா!
சொதப்பல் மன்னா!//
ஹா ஹா ஹா
//இப்படி காதலிய கந்தர் கோலம் பண்ணி வச்சிட்டிங்களே! சரி! இங்க தான வரணும்.//
ஆமா ஆளாளுக்கு நிபந்தனையா போட்டு வைத்துட்டீங்க…உங்களுக்கென்ன சொல்ல மாட்டீங்க..
ஏங்க! உடனே காதலி ஓகே ஆனா அப்புறம் அடுத்து வந்து கதைய தொடருகிறவங்க நிலைமைய நினைத்து பார்த்தீங்களா?
எனக்கு மொதல்ல கதையே எழுத தெரியாது..இந்த அளவுக்கு மொக்கை போட்டதே பெரிய விஷயம்….அதனால இதை எல்லாம் கண்டுக்கப்படாது
)))
கேப்டன் விஜயகுமார்
)
ரொம்ப நாளைக்கு(மாசத்திற்கு) பிறகு வந்து இருக்கீங்க போல…
உங்கள் வருகைக்கு நன்றி
லியோனி ஒரு ஜோக் சொல்லுவாரு..
ஒரு பேச்சாளர் மேடைல அறுத்துத்திருந்தாராம்.. கூட்டத்துல ஒருத்தன் சொன்னானாம் “உன்னை சொல்லி குத்தமில்ல.. உன்னை கூட்டிட்டு வந்தான்ல, அவனை வெச்சுக்கறேன்”ன்னு..
வெயிலான் மட்டும் என் கைல சிக்கினாருன்னு வைங்க.. இருக்குது அவருக்கு..
(கிரி.. எப்ப இந்தியா வர்றீங்க? 13-th கோவை வர்றீங்கதானே?) ( ஏய்.. நம்மாளுகெல்லாம் தயாரா இருங்கடா..}
// வெயிலான் மட்டும் என் கைல சிக்கினாருன்னு வைங்க.. இருக்குது அவருக்கு…//
அவ்வ்வ்வ்வ்……………
// பரிசல்காரன் said…
வெயிலான் மட்டும் என் கைல சிக்கினாருன்னு வைங்க.. இருக்குது அவருக்கு..//
ஹா ஹா ஹா
ஆமா! எல்லோரும் நிபந்தனையா போடுங்க… ஊர்ல இருக்கிறவங்க எல்லோரையும் ஹாஸ்பிடலுக்கு அனுப்பிடுங்க ..அப்புறம் நாங்க என்ன தான் பண்ணுறதாம் ..
இப்படி எல்லாம் பயமுறுத்துனா..பதிவர் சந்திப்புக்கு வராம எஸ்கேப் ஆகிட வேண்டியது தான்..
))
என்ன கொடுமை இது????
(
//ஜெகதீசன் said…
(
என்ன கொடுமை இது????
//
ஜெகதீசன்..
என் கொடுமை தாங்காம இப்படி இரண்டு பெரும் புலம்பிட்டு இருக்காங்க..அடுத்தது நீங்க …..
என்ன ஆகப்போறாங்களோ ஹி ஹி ஹி ஹி
கேள்வி அனுப்பிட்டு ரொம்ப சந்தோசமா இருந்தீங்கள்ள
))))
மாட்டுனீங்களா…எதோ நம்மால முடிந்தது
))..
கொஞ்சம் இடிக்குதே…:P
வெயிலான் :
//
ஐசியுவிலிருந்து வெளியே வந்த நர்ஸ்,
சங்கர்ன்ற பேஷண்ட் கூட வந்தது யாருங்க?
அருகே சென்ற கெளரியிடம்,
உள்ளே எல்லாம் இத வச்சுக்கக்கூடாதுனு சொன்னாக்கூட வச்சு பேசிட்டே இருக்காருங்க. சீஃப் பார்த்தா என்னையும் சேத்து திட்டுவாருங்க.
அப்புறம் நான் வாங்கும் போது, அவசரமா ஒரு மெசேஜ் அனுப்பணும்னு சொன்னதால, நானே அவர் சொன்னா மாதிரி மெசேஜ் அனுப்பிட்டேன்ங்க.
இந்தாங்க!
//
இப்படி சொல்லீருக்காரு…
நீங்க இப்படி சொல்றீங்க…
////
வெயிலான் SMS அனுப்பியது யார் என்று கூறவில்லையாதலால், மற்றும் புதிய கதாபாத்திரங்களை அதிக படுத்த கூடாது என்று கூறிவிட்டதால் அதை நான் கார்த்திக் அம்மா அனுப்பியதாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து இருக்கிறேன்.
////
பு.த.செ.வி…. SMS அனுப்பியது யாரு?
ஜெகதீசனுக்கு ஆப்பா ?
மகிழ்ச்சியாக இருக்கிறது !!!
ஜெகதீசன்
அந்த SMS நான் தான் மாற்றி எழுதி விட்டேன் மன்னிக்கவும்.. வெயிலான் தான் திரும்ப எனக்கு விளக்கி கூறினார். கஷ்டப்பட்டு எழுதிய கதையை மாற்ற விருப்பம் இல்லை அப்படியே தொடர்ந்து விடுங்கள். சரியா?
// கோவி.கண்ணன் said…
ஜெகதீசனுக்கு ஆப்பா ?
மகிழ்ச்சியாக இருக்கிறது !!!//
கிரி,
பதிவுல கொசுவத்தி சுத்தற மாதிரியே கதையிலயும் சுத்தீட்டிங்க. பத்தாததுக்கு ஒரு உள் குத்தா சன் டிவி ய வாரீட்டிங்க.
சந்தோஷமா இருக்கு.
முதல்ல வெயிலான் மாட்டேன்னாரு. நல்லா எழுதுனாரு.
அப்புறம் நீங்களும் ரெம்ப பிகு பண்ணீட்டு நல்லா எழுதியிருக்கீங்க.
வெயிலான் கேட்ட மாதிரி கதை ஹாஸ்பிடல்ல இருந்து வெளியேத்தி மண்வாசனையா எழுதிட்டீங்க.
ஜெகதீசன் பத்தி அதிகம் அறிமுகம் இல்லை. எப்படி கொண்டு செலுத்துவாருன்னு பாப்போம்.
ஜூலை 13 வர்ராப்லயா?
கிரி கதையை நல்லா கொண்டு போயிருக்கீங்க!
இதுபோல தொடர்ந்து சிறுகதைகள் நிறைய எழுதுங்க!
(எனக்கு எதிரிகள் நிறைய பேர் இருக்க்காங்க! அவங்களுக்கெல்லாம் லிங்க் அனுப்பி வைக்கிறேன்)
//
ஜெகதீசன்
அந்த SMS நான் தான் மாற்றி எழுதி விட்டேன் மன்னிக்கவும்.. வெயிலான் தான் திரும்ப எனக்கு விளக்கி கூறினார். கஷ்டப்பட்டு எழுதிய கதையை மாற்ற விருப்பம் இல்லை அப்படியே தொடர்ந்து விடுங்கள். சரியா?
//
சரி….ஆனால் இதை மட்டும் மாற்ற முடியுமா?
//
எனக்கு கலவரமாகியது..அதற்குள் கற்பனை எங்கெங்கோ ஓட..
//
எனக்கு என்பதை “கார்த்திக்குக்கு” என மாற்ற முடியுமா??
யோவ்! என்னவோன்னு வந்தா உண்மையிலேயே நல்லா இருக்குயா. கதை எழுத தெரியாதுன்னு இனிமே கதை விடாதப்பு!
//வடகரை வேலன் said…
கிரி,
முதல்ல வெயிலான் மாட்டேன்னாரு. நல்லா எழுதுனாரு.
அப்புறம் நீங்களும் ரெம்ப பிகு பண்ணீட்டு நல்லா எழுதியிருக்கீங்க.//
சத்யமா பிகு பண்ணலைங்க ..உண்மையிலேயே எனக்கு எழுத தெரியாது. நானே அந்த SMS மேட்டரை சொதப்பி விட்டதால் வெயிலானும் பரிசல் காரரும் செம காண்டுல இருக்காங்க ..
//ஜூலை 13 வர்ராப்லயா?//
அடிப்பதற்கு தயாரா இருக்கீங்களா?
))) வருவேன்னு நினைக்கிறேன்…உங்கள் தொலை பேசி எண்ணை எனக்கு அனுப்பி வைங்க
———————————————————
//நாமக்கல் சிபி said…
(எனக்கு எதிரிகள் நிறைய பேர் இருக்க்காங்க! அவங்களுக்கெல்லாம் லிங்க் அனுப்பி வைக்கிறேன்)//
ஹி ஹி ஹி போதும்போதும் ரொம்ப திட்டாதீங்க…அடுத்த முறை வாய்ப்பு !!! கிடைத்தால் நல்லா எழுத முயற்சிக்கிறேன்
ஜெகதீசன் said…
//
சரி….ஆனால் இதை மட்டும் மாற்ற முடியுமா?//
ஜெகதீசன் நீங்க இவ்வளோ நல்லவரா?
)) ரொம்ப நன்றி
//எனக்கு என்பதை “கார்த்திக்குக்கு” என மாற்ற முடியுமா??//
மாற்றி விட்டேன்….சிரமத்திற்கு மன்னிக்கவும்
—————————————-
//புதுகை.எம்.எம்.அப்துல்லா said…
யோவ்! என்னவோன்னு வந்தா உண்மையிலேயே நல்லா இருக்குயா. கதை எழுத தெரியாதுன்னு இனிமே கதை விடாதப்பு!//
இல்லைங்க முன்னாடி கதைகள்ல வந்த ஒரு SMS விஷயத்தை சொதப்பி விட்டேன்… நீங்க என் கதை மட்டும் பார்த்து கூறி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்..(நீங்க இன்னைக்கு தான் விடுமுறையில் இருந்து வந்ததாக கூறி இருந்தீர்கள், எனவே அதை படித்து இருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்)
எதுவாகினும் உங்கள் பாராட்டுக்கு நன்றி.
கதைய நல்லாவே நகர்த்திக்கொண்டு போயிருக்கீங்க..வாழ்த்துக்கள்
ஐயோ! இப்படி போட்டு தாக்குறாங்களே..
ஒரே உள் குத்தா இருக்கே (அப்படின்னு தான் நினைக்கிறேன்)
ரம்யா ரமணி முதல் முறையா என் பதிவுக்கு வந்து இப்படி வாருறீங்க..அவ்வ்வ்வ்வ்
ஒழுங்க தான் முந்தய கதைய படித்தேன்..எப்படியோ தப்பு பண்ணிட்டேன்..:-((( ஒருவேளை முதல் கதை என்பதால் பயத்துல அப்படி ஆகி விட்டதோ….ம்ம்ம் என்னமோ போங்க..
உங்கள் வருகைக்கு நன்றி
//
ஜெகதீசன் பத்தி அதிகம் அறிமுகம் இல்லை. எப்படி கொண்டு செலுத்துவாருன்னு பாப்போம்.
(((
//
முழுசா நாலு வரியே என்னால நல்லா எழுத முடியாது…. இதுல கதை வேறயா…
உங்கள் அளவுக்கெல்லாம் என்னால் எழுத முடியாது… ஏதோ சொதப்பப் போறேன்….
ஆஹா நல்லதுக்கே காலம் இல்லியோ..கிரி அவர்களே உண்மையாகவே கதை நல்லா இருக்கு…இதுல உள்குத்து எதுவும் இல்லீங்கோ
//ஜெகதீசன் said…
வடகரை வேலன் said…
//
ஜெகதீசன் பத்தி அதிகம் அறிமுகம் இல்லை. எப்படி கொண்டு செலுத்துவாருன்னு பாப்போம்//
உங்கள் அளவுக்கெல்லாம் என்னால் எழுத முடியாது… ஏதோ சொதப்பப் போறேன்….
ஜெகதீசன் அதை நினைத்து கவலையே படாதீங்க.. என்னை விடவா சொதப்பி விட போறீங்க.. நான் மொத்த குத்தகைக்கு சொதப்பலை எடுத்து விட்டேன்..அதனால பட்டய கிளப்புங்க.
என்ன! நான் கதைல சொதப்பாம கதையையே சொதப்பி விட்டேன் ஹி ஹி ஹி
// Ramya Ramani said…
ஆஹா நல்லதுக்கே காலம் இல்லியோ..கிரி அவர்களே உண்மையாகவே கதை நல்லா இருக்கு…இதுல உள்குத்து எதுவும் இல்லீங்கோ//
ரொம்ப நன்றிங்க ரம்யா ரமணி. கதை எல்லாம் சுமாரா தான் எழுதி இருக்கேன்..ஆனா தொடர்ந்ததுல தான் சொதப்பிட்டேன்..
சரி! அனுபவமா எடுத்துக்கிறேன்..அடுத்த முறை !{வெயிலான் தலை தெறிக்க ஓடுவது தெரிகிறது
))) } சரியா எழுத முயற்ச்சிக்கிறேன்
5 வது பாகம் இங்கே..
http://jegadeesangurusamy.blogspot.com/2008/07/5.html
எனக்கு கதை எழுதத் தெரியாது.. அதனால் சொதப்பி வைத்திருக்கிறேன்..
கதயை எனக்கு அடுத்து எடுத்துச் செல்வோர் என் சொதப்பல்களைச் சரிசெய்து சுவாரஸ்யமாகக் கொண்டு செல்வார்கள் என நம்புகிறேன்..
அதுக்குள்ளயாயாயாயாயா!!!!!!!!!!
என்ன கொடுமை சார் இது….சரி நான் நாளைக்கு ஊருக்கு எஸ்கேப் ஆகுறேன் …அதனால திட்டுறவங்க எல்லாம் என்னை இன்னைக்கே திட்டிக்கோங்க
)))
//நன்றி இவன்
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் ஆக்குறாங்கப்பா
//
இப்படி உசுப்பேத்தினாத்தான் நல்ல ஒரு கமெடி கிடைக்கும் அதுதான் இந்த கொலைவெறி
//கிரி கதையை நல்லா கொண்டு போயிருக்கீங்க!
இதுபோல தொடர்ந்து சிறுகதைகள் நிறைய எழுதுங்க!
(எனக்கு எதிரிகள் நிறைய பேர் இருக்க்காங்க! அவங்களுக்கெல்லாம் லிங்க் அனுப்பி வைக்கிறேன்)//
எனக்கும் கொஞ்ச எதிரிகள் இருக்காங்க அவங்களுக்க்கும் அனுப்பனும்
தாராளமா….அதுக்கெல்லாம் அசரமாட்டோம்..
எத்தனையோ பார்த்துட்டோம்….இதை பார்க்க மாட்டோமா …
)
//ஆஹா நல்லதுக்கே காலம் இல்லியோ..கிரி அவர்களே உண்மையாகவே கதை நல்லா இருக்கு…இதுல உள்குத்து எதுவும் இல்லீங்கோ//
நான் நம்புகிறேன்!
ஹிஹி இதுலயும் உள்குத்து இல்லை!
\\நாமக்கல் சிபி said…
//ஆஹா நல்லதுக்கே காலம் இல்லியோ..கிரி அவர்களே உண்மையாகவே கதை நல்லா இருக்கு…இதுல உள்குத்து எதுவும் இல்லீங்கோ//
நான் நம்புகிறேன்!
ஹிஹி இதுலயும் உள்குத்து இல்லை!
\\
அப்பா நீங்களாவது நம்பரீங்களே நன்றி சிபி அண்ணே
சரி சரி நம்புனது போதும் ரொம்ப நம்பிட்டீங்க
)
நான் தொடர்ந்த கதை சரி இல்லை ஒத்துகிறேன், ஆனா எழுதிய கதையும் சரி இல்லை என்று அனைவரும் சொல்வது தான் எனக்கு புரியவில்லை. என்னமோ போங்க!
//அப்பா நீங்களாவது நம்பரீங்களே நன்றி சிபி அண்ணே//
ஏன்! கிரியைத் தவிர மற்ற எல்லோருமே நம்பினார்களே!
கதையின் தலைப்பை மறந்து கதையை திசைதிருப்பி கிராமத்துக்கு கொண்டுசென்றதையும், எஸ் எம் எஸ்ஸில் சொதப்பியத்தையும் தவிர கிரியின் கதை நடை சிறப்பானதே.! அடுத்த பகுதி ஜெகதீசனுக்கா? நல்லா வேண்டும் அவருக்கு.! கேள்வித்தொடரா ஆரம்பிக்கிறீங்க.. அனுபவியுங்க.!
முழுவதும் படிக்க வச்சுட்டீங்க
// Thamira said…
கதையின் தலைப்பை மறந்து கதையை திசைதிருப்பி கிராமத்துக்கு கொண்டுசென்றதையும், எஸ் எம் எஸ்ஸில் சொதப்பியத்தையும் தவிர கிரியின் கதை நடை சிறப்பானதே.! //
நீங்களாவது புரிஞ்சுட்டு சொன்னீங்களே!
ரொம்ப நன்றிங்க தமிரா.
// முரளிகண்ணன் said…
முழுவதும் படிக்க வச்சுட்டீங்க//
வாங்க முரளிக்கண்ணன் மிக்க நன்றி..ரொம்ப நாளைக்கு பிறகு பார்க்கிறேன்..வேலை அதிகமா?
கதையின் ஒட்டம் மிக நன்றாக இருக்கிறது .பாரட்டுக்கள்.அடுத்த கதை எப்போ கிரி சார்.
தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com
//நன்றி இவன்
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் ஆக்குறாங்கப்பா
//
என்ன செய்ய கிரி இந்த உலகம் இன்னமும் உங்கள நம்புது….
லேட்டா சொன்னாலும் லேட்டஸ்ட்டா ஒரு கருத்து சொல்றேன் கிரி…!
இந்த கதையை படிக்கும்போது காத்திருந்த காதலி என்ற தலைப்பில் எழுத வேண்டும் என்று என் மனதுள் சிறு ஆசை பிறந்திருக்கிறது. நன்றாக… கோர்வையாக எழுதியிருக்கிறீர்கள்.
விஜய் இவன் மற்றும் சினிமா நிருபரின் வருகைக்கு நன்றி