கமலுக்கு என் பாராட்டுகள்

by கிரி on June 28, 2008

kamal+fans கமலுக்கு என் பாராட்டுகள்

நீண்ட நாட்களாக பார்க்க வேண்டும் இருந்து, சரியான நேரம் அமையாமல் இன்று தான் தசாவதாரம் படம் பார்த்தேன்.

இந்த படத்தை பற்றி விரிவாக விமர்சனம் எழுதலாம் என்று படம் வெளி வரும் முன்பே நினைத்து இருந்தேன், காரணம் அதன் மேல் இருந்த எதிர்பார்ப்பு மற்றும் ஆர்வம். இரண்டு வருடமாக படம் எடுத்தார்கள், ஜாக்கி சான் பாடல் வெளியீடு என்று ஏகத்திற்கும் எதிர்ப்பார்ப்பை எகிற வைத்து இருந்தது.

ஆனால் படம் வெளிவந்த பிறகு அதற்க்கு வந்த விமர்சனங்களின் அளவு நான் எதிர்பாராதது, வெளி வந்த விமர்சனங்கள் எதையும் படிக்க வில்லை, ஆனால் கடைசி வரிகளை மற்றும் கதை அல்லாத பகுதிகளை மட்டும் படிப்பேன், படித்தால் படம் பார்க்கும் போது படத்தின் மீது இருக்கும் சுவாராசியம் அல்லது சஸ்பென்ஸ் குறைந்து விடும் என்று.

அனைவரும் படத்தை பிரித்து மேய்ந்து விட்டார்கள், இனி நாம் புதிதாக என்னத்தை விமர்சனம் செய்வது என்று விமர்சனம் எழுதவில்லை. விமர்சனம் தான் எழுதவில்லையே தவிர ஒருவர் இரண்டு வருடம் கஷ்டப்பட்டு, உடலை (முகத்தை) வருத்தி, படம் வெளிவர பல பிரச்சனைகளை சந்தித்து நடித்து வெளி வந்து இருக்கும் படத்தில் கமல் மற்றும் அதில் பணிபுரிந்த அனைவரையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அதில் கஷ்டப்பட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

படத்தை பற்றி பல்வேறு கருத்துக்கள் பார்ப்பனியம், ஒப்பனை, நுண் அரசியல், உலகத்தரம், யாரும் செய்யாத முயற்சி, நாத்தீகம், தலித் இழிவு என்று.

இது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட கருத்து, இதில் எது சரி எது தவறு என்று யாரும் கூற முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணங்கள், சிந்தனைகள் , கோட்பாடுகள், பார்வைகள். எனவே நான் சொல்வது தான் சரி நீ சொல்வது தவறு என்று யாரும் கூறமுடியாது. அவரவர் எண்ணங்களை தெரிவிக்கிறார்கள். பிரச்சனை அவர்கள் தெரிவிக்கும் முறையில் தான் உள்ளது.

எனவே நான் படத்தை பற்றி கூறுவதென்றால் படம் போர் அடிக்காம போகிறது. வேறு எதுவும் புதிதாக நான் கூற என்னிடம் எதுவும் இல்லை, ஏற்கனவே போதுமான அளவிற்கு விவாதித்தாகி விட்டது.

குறைகள் இல்லாத படங்கள் இல்லை, நிறைகள் மட்டுமே உள்ள மனிதர்கள் கிடையாது. குறை கூறும் வேளையிலே அதில் உள்ள நிறைகளையும் பாராட்டுவதே ஒரு சிறந்த விமர்சனமாக நான் கருதுகிறேன்.

கமல் தொடர்ந்து நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்பதே என் போன்ற கடைநிலை ரசிகனின் விருப்பம்.

No related posts.

{ 38 comments… read them below or add one }

மனதின் ஓசை June 28, 2008 at 3:57 PM

//குறைகள் இல்லாத படங்கள் இல்லை, நிறைகள் மட்டுமே உள்ள மனிதர்கள் கிடையாது. குறை கூறும் வேளையிலே அதில் உள்ள நிறைகளையும் பாராட்டுவதே ஒரு சிறந்த விமர்சனமாக நான் கருதுகிறேன். //

சரியாச் சொன்னீங்க..

Reply

மாயா June 28, 2008 at 4:11 PM

// குறைகள் இல்லாத படங்கள் இல்லை, நிறைகள் மட்டுமே உள்ள மனிதர்கள் கிடையாது. குறை கூறும் வேளையிலே அதில் உள்ள நிறைகளையும் பாராட்டுவதே ஒரு சிறந்த விமர்சனமாக நான் கருதுகிறேன் //

நிச்சயமாக .

Reply

லக்கிலுக் June 28, 2008 at 4:21 PM

நல்ல பதிவு, நன்றி!

படம் முதல் முறை பார்க்கும்போது தான் மேக்கப் உறுத்தல் எல்லாம் இருக்கிறது. நான் நாளைக்கு நான்காவது முறையாக பார்க்கலாம் என்றிருக்கிறேன்.

Reply

கிரி June 28, 2008 at 5:24 PM

வாங்க மனதின் ஓசை மாயா லக்கிலுக்.

உங்கள் கருத்திற்கும் வருகைக்கும் நன்றி.

Reply

ஜெகதீசன் June 28, 2008 at 5:30 PM

நான் இன்னும் பார்க்கவில்லை… :(

Reply

கிரி June 28, 2008 at 5:41 PM

போய் பாருங்க யிஷுன் ல கூட்டம் இல்ல…

Reply

Thekkikattan|தெகா June 28, 2008 at 5:48 PM

கிரி,

படம் பார்த்தாச்சா… நல்லது, ரசிச்சிப் பார்த்தீங்களா அதனைவிட மிக்க நலம். இத விட என்ன வேணும் :-) .

Reply

கிரி June 28, 2008 at 7:54 PM

வாங்க தெகா ரொம்ப நாளா ஆள காணோம் :-)

Reply

ராமலக்ஷ்மி June 28, 2008 at 8:05 PM

//எனவே நான் படத்தை பற்றி கூறுவதென்றால் படம் போர் அடிக்காம போகிறது.//

நல்ல உத்திரவாதம்.

//குறைகள் இல்லாத படங்கள் இல்லை, நிறைகள் மட்டுமே உள்ள மனிதர்கள் கிடையாது.//

நல்ல பாயின்ட்.

// குறை கூறும் வேளையிலே அதில் உள்ள நிறைகளையும் பாராட்டுவதே ஒரு சிறந்த விமர்சனமாக நான் கருதுகிறேன்.//

மிகச் சரி.

Reply

கிரி June 28, 2008 at 8:54 PM

வாங்க ராம லக்ஷ்மி உங்களுடைய தொடர்ச்சியான பின்னூட்டத்திற்கு என் நன்றி.

Reply

♠புதுவை சிவா♠ June 28, 2008 at 9:04 PM

Hi Kirie
How are you and your Village??

“ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணங்கள், சிந்தனைகள் , கோட்பாடுகள், பார்வைகள். எனவே நான் சொல்வது தான் சரி நீ சொல்வது தவறு என்று யாரும் கூறமுடியாது. அவரவர் எண்ணங்களை தெரிவிக்கிறார்கள். பிரச்சனை அவர்கள் தெரிவிக்கும் முறையில் தான் உள்ளது.”

சரியாச் சொன்னீங்க..

puduvai siva

Reply

சினிமா நிருபர் June 28, 2008 at 9:05 PM

//ஒருவர் இரண்டு வருடம் கஷ்டப்பட்டு, உடலை (முகத்தை) வருத்தி, படம் வெளிவர பல பிரச்சனைகளை சந்தித்து நடித்து வெளி வந்து இருக்கும் படத்தில் கமல் மற்றும் அதில் பணிபுரிந்த அனைவரையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அதில் கஷ்டப்பட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.//

என்னை கவர்ந்த வரிகள்…!

Reply

கிரி June 28, 2008 at 10:55 PM

//siva said…
Hi Kirie
How are you and your Village??//

எங்க ஊரெல்லாம் இருக்கட்டும் ..என் பேரை ஏங்க இப்படி கொலை பண்ணுறீங்க? என்னை கிரி னு சொல்லுங்க இல்லேன்னா Giri னு சொல்லுங்க அடுத்த முறை கீரி னு போட்டுடாதீங்க :-) )))

நான் நல்லா இருக்கேன், உங்களை தான் ஆள காணோம்..

Reply

கிரி June 28, 2008 at 11:02 PM

// சினிமா நிருபர் said…
//ஒருவர் இரண்டு வருடம் கஷ்டப்பட்டு, உடலை (முகத்தை) வருத்தி, படம் வெளிவர பல பிரச்சனைகளை சந்தித்து நடித்து வெளி வந்து இருக்கும் படத்தில் கமல் மற்றும் அதில் பணிபுரிந்த அனைவரையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அதில் கஷ்டப்பட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.//

என்னை கவர்ந்த வரிகள்…!//

வாங்க சினிமா நிருபர். இன்னைக்கு உங்க புது பதிவு எதையும் காணோம்….இப்படி எல்லாம் பண்ணினா எப்படி..உங்க வலை பதிவு ரசிகர்கள் பல பேர் வந்து தினமும் பார்த்துட்டு இருக்கோம் :-)

Reply

தமிழன்-கறுப்பி... June 28, 2008 at 11:28 PM

//குறைகள் இல்லாத படங்கள் இல்லை, நிறைகள் மட்டுமே உள்ள மனிதர்கள் கிடையாது. குறை கூறும் வேளையிலே அதில் உள்ள நிறைகளையும் பாராட்டுவதே ஒரு சிறந்த விமர்சனமாக நான் கருதுகிறேன். //

கண்டிப்பாங்க…

Reply

தமிழன்-கறுப்பி... June 28, 2008 at 11:30 PM

கட்டாயமாக பாராட்டி ஆகவேண்டும் அவர்களுடைய உழைப்பை நீங்க சொன்னது சரிதான்…

Reply

தமிழன்-கறுப்பி... June 28, 2008 at 11:30 PM

நல்ல பதிவு கிரி அண்ணன்…

Reply

தமிழன்-கறுப்பி... June 28, 2008 at 11:33 PM

வலையுலக சுனாமி
லக்கிலுக் சொன்னது…

///நல்ல பதிவு, நன்றி!

படம் முதல் முறை பார்க்கும்போது தான் மேக்கப் உறுத்தல் எல்லாம் இருக்கிறது. நான் நாளைக்கு நான்காவது முறையாக பார்க்கலாம் என்றிருக்கிறேன்.///

அட பாவி மனுசா!
அட மறந்துட்டேன் நீங்க கமலுக்கு தீவிர விசிறியில்ல…:)

Reply

ஜாக்கி சேகர் June 29, 2008 at 12:18 AM

//இது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட கருத்து, இதில் எது சரி எது தவறு என்று யாரும் கூற முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணங்கள், சிந்தனைகள் , கோட்பாடுகள், பார்வைகள். எனவே நான் சொல்வது தான் சரி நீ சொல்வது தவறு என்று யாரும் கூறமுடியாது. அவரவர் எண்ணங்களை தெரிவிக்கிறார்கள். பிரச்சனை அவர்கள் தெரிவிக்கும் முறையில் தான் உள்ளது.// இதுதாங்க நிதர்சனமான உண்மை. சிவாஜி படத்தில் இல்லாத லாஜிக் ஓட்டைகளா???

Reply

Photon June 29, 2008 at 12:23 AM

13 -ஆம் ஆழ்வார் கமல் வாழ்க ! ..

64 – ஆம் நாயன்மார் கலைஞர் வாழ்க !…

Reply

கிரி June 29, 2008 at 12:42 AM

வாங்க தமிழன். தனித்தனியே கூறி இருக்கீங்க :-)

உங்க வருகைக்கு நன்றி

———————————–

//jackiesekar said…
//இது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட கருத்து, இதில் எது சரி எது தவறு என்று யாரும் கூற முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணங்கள், சிந்தனைகள் , கோட்பாடுகள், பார்வைகள். எனவே நான் சொல்வது தான் சரி நீ சொல்வது தவறு என்று யாரும் கூறமுடியாது. அவரவர் எண்ணங்களை தெரிவிக்கிறார்கள். பிரச்சனை அவர்கள் தெரிவிக்கும் முறையில் தான் உள்ளது.//

இதுதாங்க நிதர்சனமான உண்மை. சிவாஜி படத்தில் இல்லாத லாஜிக் ஓட்டைகளா???//

வாங்க ஜாக்கீ சேகர். நீங்கள் ரஜினி படத்தை இதோடு ஒப்பிட முடியாது. ரஜினி பொழுது போக்கான படங்களை கொடுப்பவர், எனவே அவர் தன்னுடைய படங்களில் லாஜிக் எல்லாம் வைத்து பார்ப்பதில்லை, வருபவர்கள் வந்தால் கவலை மறந்து சந்தோசமாக செல்ல வேண்டும் என்ற எண்ணத்திலே படம் செய்பவர்.

ஆனால் கமல் பல படங்கள் அப்படி அல்ல. அதனால் வருபவர்கள் அதெல்லாம் எதிர்பார்க்க தானே செய்வார்கள். எனவே குறைகள் உண்டு அதை பூதக்கண்ணாடி வைத்து பார்த்தால் எதுவும் செய்ய முடியாது. அதையே நான் கூறியது.

உங்கள் வருகைக்கு நன்றி

———————————–

போடன் நீங்க என்ன நினைத்து கூறினீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. உங்கள் வருகைக்கு நன்றி.

Reply

மோகன் கந்தசாமி June 29, 2008 at 1:07 AM

நல்ல படம். ஆனால் உலகத்தரம் அல்ல. ஒருவேளை, மர்மயோகி அவ்வாறு இருக்கலாம்.

விமர்சனம் நன்று.

Reply

கிரி June 29, 2008 at 8:23 AM

//மோகன் கந்தசாமி said…
நல்ல படம். ஆனால் உலகத்தரம் அல்ல//

வாங்க மோகன் கந்தசாமி.

உலகத்தரமா இல்லையா என்று ஏற்கனவே போட்டு நொங்கு எடுத்து விட்டார்கள், அதனால் நான் புதிதாக சொல்ல எதுவும் இல்லாததால் அதை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

//ஒருவேளை, மர்மயோகி அவ்வாறு இருக்கலாம்.//

உலகத்தரத்தை கொண்டு வர பட்ஜெட் ம் மிக முக்கிய காரணம், நம்முடைய தமிழ் படங்களுக்கு தற்போது தான் உலக பார்வையாளர்களின் எண்ணிக்கை சிறிது அதிகரித்துள்ளது, இது இன்னும் விரிவடையும் போது தான், தயாரிப்பாளர்களும் துணிந்து முதலீடு செய்வார்கள். எனவே அதற்க்கு இன்னும் சிறிது காலம் பிடிக்கும் என்பதே என் கருத்து.

Reply

ராஜ நடராஜன் June 29, 2008 at 12:00 PM

ஒரு வழியா படம் பார்த்திட்டீங்க போல இருக்குது.கமல் காய்ச்சல் இன்னும் தீர கொஞ்சம் நாட்கள் பிடிக்கும் போல.

Reply

கிரி June 29, 2008 at 12:13 PM

//ராஜ நடராஜன் said…
ஒரு வழியா படம் பார்த்திட்டீங்க போல இருக்குது.//

ஆமாங்க பார்த்துட்டேன் :-) ) பார்க்கலைனா என்னை செவ்வாய் கிரகத்துல இருந்து வந்தவன் மாதிரி பார்க்குறாங்க!

//கமல் காய்ச்சல் இன்னும் தீர கொஞ்சம் நாட்கள் பிடிக்கும் போல//

கொஞ்ச நாள் இல்லைங்க. இன்னும் இரண்டு நாள்ல குசேலன் பாடல் வெளியாக போகுது…அதற்க்கு பிறகு கொஞ்சம் குசேலன் செய்திகள் ஆக்ரமித்து கொள்ளும். படம் வெளியானால் அதன் பிறகு எல்லோரும் குசேலனை வறுக்க ஆரம்பித்து (ஏற்கனவே ஆரம்பித்து விட்டார்கள் :-D ) விடுவார்கள் :-) )))

ஜூலை மாதம் கடைசியில் வெளியாவதால் ஆகஸ்ட் மாதம் முழுவதும் தமிழ்மணத்தில் “குசேலன் வறுவல் ஸ்பெஷல்” தான் :-) ))))

உங்களின் தொடர்ச்சியான வருகைக்கு நன்றி

Reply

பரிசல்காரன் June 29, 2008 at 11:39 PM

//நான் படத்தை பற்றி கூறுவதென்றால் படம் போர் அடிக்காம போகிறது. வேறு எதுவும் புதிதாக நான் கூற என்னிடம் எதுவும் இல்லை//

எல்லோரும் பத்தி பத்தியாய் சொன்னதை ஒரே வரியில் சொல்லி விட்டீர்கள்! (தசாவதர விமர்சனம் எழுதாமல் நரகத்துக்கு போகவிருந்த சாபத்தையும் விலக்கிக் கொண்டீர்கள்!)

Reply

புதுகை.அப்துல்லா June 30, 2008 at 1:15 AM

கிரி நீங்க ஒருத்தர் தான் பாக்கி.இப்போ அந்தக் குறையும் நீங்கிருச்சு.
:) )

Reply

King... June 30, 2008 at 2:06 AM

//குறைகள் இல்லாத படங்கள் இல்லை, நிறைகள் மட்டுமே உள்ள மனிதர்கள் கிடையாது. குறை கூறும் வேளையிலே அதில் உள்ள நிறைகளையும் பாராட்டுவதே ஒரு சிறந்த விமர்சனமாக நான் கருதுகிறேன். //

உண்மை…

Reply

King... June 30, 2008 at 2:07 AM

நேரத்துக்கு தகுந்த மாதிரியான நல்ல பதிவு…

Reply

Vidhya June 30, 2008 at 9:09 AM

கிரி நீங்க நல்லவரா கெட்டவரா :-)

Reply

கிரி June 30, 2008 at 9:53 AM

//பரிசல்காரன் said…
எல்லோரும் பத்தி பத்தியாய் சொன்னதை ஒரே வரியில் சொல்லி விட்டீர்கள்! (தசாவதர விமர்சனம் எழுதாமல் நரகத்துக்கு போகவிருந்த சாபத்தையும் விலக்கிக் கொண்டீர்கள்!)//

ஹா ஹா ஹா இனிமேலும் விமர்சனம் செய்ய அதில் என்ன இருக்கிறது, இனியும் செய்தால் படிக்கிறவங்களுக்கு எரிச்சல் தான் வரும். அந்த கொலை வெறிக்கு ஆளாக வேண்டாம் என்று தான் எழுதவில்லை. உங்கள் வருகைக்கு நன்றி பரிசல்காரன்.

———————————–

//புதுகை.எம்.எம்.அப்துல்லா said…
கிரி நீங்க ஒருத்தர் தான் பாக்கி.இப்போ அந்தக் குறையும் நீங்கிருச்சு.
:) )//

ஹா ஹா ஒரு மார்க்கமா தான் இருக்கீங்க, அடுத்ததா குசேலனுக்கு தயாராகுங்க. தலைவர் வறுபட போவதை காண ஆர்வமாக இருக்கிறேன். :-) )))

சரி நீங்க புது பதிவு எதுவும் எழுதவில்லையா? எதையும் காணோம்.

Reply

கிரி June 30, 2008 at 9:58 AM

// King… said…
நேரத்துக்கு தகுந்த மாதிரியான நல்ல பதிவு…//

இனியும் விமர்சனம் என்றால் நாட்டு வெடிகுண்டை என் மேல வீசிடுவாங்க :-) ))

கிங் உங்களின் அனைத்து பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி

———————————–

// Vidhya said…
கிரி நீங்க நல்லவரா கெட்டவரா :-) //

தெரியலையேம்மா :-) ) நாலு பேருக்கு நல்லது செய்யனும்னா தப்பில்ல எதுவும் தப்பில்ல :D

Reply

புதுகை.அப்துல்லா July 7, 2008 at 7:43 PM

சரி நீங்க புது பதிவு எதுவும் எழுதவில்லையா? எதையும் காணோம்.//

எங்க கிரி…கடந்த 17 நாட்களாக நாட்டிலேயே இல்லை.(இடையில் ஒரே ஒரு நாள் தவிர).இன்று காலை தான் வந்தேன். இந்தோ ஆரமிச்சுரேன்.

Reply

கிரி July 7, 2008 at 9:06 PM

//புதுகை.எம்.எம்.அப்துல்லா said…
எங்க கிரி…கடந்த 17 நாட்களாக நாட்டிலேயே இல்லை.(இடையில் ஒரே ஒரு நாள் தவிர).இன்று காலை தான் வந்தேன். இந்தோ ஆரமிச்சுரேன்.//

நீங்க வந்துட்டீங்க….ஹி ஹி ஹி நான் கிளம்புறேன்..நான் புதன் இரவு இந்தியா கிளம்புகிறேன்.. பதிவுகளா போட்டு கலக்குங்க.

வந்து பார்க்கிறேன்… :-)

Reply

மருதநாயகம் July 7, 2008 at 10:32 PM

//போய் பாருங்க யிஷுன் ல கூட்டம் இல்ல…//

இதானே வேண்டங்கிறது சந்தடி சாக்கில் படத்தை கவுக்குறீங்களே

Reply

கிரி July 8, 2008 at 6:40 AM

//மருதநாயகம் said…
இதானே வேண்டங்கிறது சந்தடி சாக்கில் படத்தை கவுக்குறீங்களே//

ஏங்க! நீங்க சிங்கையில வேற இருந்து இருக்கீங்கன்னு சொல்லி இருக்கீங்க..எந்த படங்க இரண்டு வாரத்துக்கு மேல கூட்டம் இருக்கு….வாரநாட்களில் திரை அரங்கில் யாருமே இருக்க மாட்டாங்க ..இறுதி நாட்களில் முதல் இரண்டு வாரம் மட்டுமே கூட்டம் இருக்கும். நான் போனது 3 வாரம் கழித்து..நானும் கூட்டம் இருக்கும் என்று எண்ணி தான் முதல் நாளே சென்று முன்பதிவு செய்து வந்தேன்..ஆனால் திரை அரங்கில் நடுவில் இருக்கும் வரிசை மட்டுமே ஓரளவிற்கு கூட்டம். மற்ற இரு புறங்களிலும் யாருமே இல்ல..ஒருவேளை நான் காலை 10.30 காட்சி சென்றதால் கூட இருக்கலாம்..

உள் குத்தெல்லாம் இல்லை..உணமையாகவே தான்…நீங்க யாரை வேண்டும் என்றாலும் கேட்டு பாருங்க.

Reply

மருதநாயகம் July 8, 2008 at 8:12 PM

இருங்க இருங்க குசேலன் வரட்டும் அதோட டாப்ப கழற்றி தொங்க விடலைன்னா பாருங்க

Reply

கிரி July 8, 2008 at 8:45 PM

ஹா ஹா ஹா

நீங்க என்ன கழட்டி போட்டாலும் ..படம் நல்லா போவதை தடுக்க முடியாது….பதிவுல எல்லோரும் சொல்வதை வைத்தெல்லாம் எந்த ஒரு முடிவுக்கும் வராதீங்க..

அதுவுமில்லாம தலைவர் படத்துல என்ன கதை இருக்க போகுது..அதை நீங்க விமர்சிக்க..:-)))) நோ லாஜிக் ஒன்லி தலைவர் மேஜிக்.

படம் பார்த்தோமா ஒரு இரண்டரை மணி நேரம் சந்தோசமா இருந்து வந்தோமா அவ்வளோ தான் எங்க மேட்டரு ..

பாருங்க நாங்க பொடி பய்யன் பிரகாஷ் இசை வைத்தே இந்த வருட சாதனை அனைத்தும் முறியடித்து விட்டோம் :-) )

நான் ரஜினி ரசிகன் தான் அதற்காக கமலை தரக்குறைவாக எல்லாம் பேசமாட்டேன்..என்னுடைய பதிவை பார்த்தாலே உங்களுக்கு புரிந்து இருக்கும் :-)

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed